கற்பூர முல்லை Episode 27

Advertisement

Jeevitha Ram prabhu

Active Member
ஃமலர் 27
நால்வரும் காரில் இருந்து இறங்கி வீட்டிற்கு சென்றதும் சுந்தரின் தாய் கீதா அவர்களை வரவேற்று நன்கு உபசரித்தார்.

இவர்கள் வந்திருந்த செய்தியை கேட்டதும் வரதராஜனும் மேலே இருந்து கீழே வந்தார். அவருக்கும் காயத்ரி மூலமாக எல்லாமே தெரிந்திருந்தது.
அவளைப் பற்றியும் அகிலனை பற்றியும் விசாரித்துவிட்டு பின்பு உன் வாழ்க்கை நல்லபடியாக இருந்தால் எங்களுக்கும் மகிழ்ச்சி தான்மா என்று கூறினார்...
தமிழும் அதற்கு ஒன்றும் பேசாமல் சிரித்து வைத்தாள்.

சரி இனி விஷயத்துக்கு வருவோம் என்று வரதராஜன் கூறினார்... சுந்தர் ஏதாவது சொன்னானாமா என்று கேட்டார் அதற்கு கைலாசும் தமிழும் இல்லை என்று சொல்லவே சரி நானே சொல்கிறேன் என்று கூறி சொல்லலானார்.

சுந்தரின் தங்கை பூஜாவுக்கு படிப்பு முடிந்து விட்டது. அவளுக்கு நல்ல வரன் வந்திருக்கிறது அம்மா அதனால் இந்த மாதத்திலேயே முடித்து விடலாம் என்று இருக்கிறேன் என்று கூறினார்.

ஆமாம்.... மிகவும் நல்ல விஷயம்தான் என்றாள் தமிழ்.

ஆமாம்மா.‌.. அதனால் இது பூஜாவின் கல்யாணம் ஏற்பாடுகளை எல்லாம் நீயே கவனித்துக் கொண்டால் மிகவும் நன்றாக இருக்கும்மா .....அதுதான் சுந்தரின் விருப்பமும் அதுதான் என் விருப்பமும் கூட என்று கூறி முடித்தார் வரதராஜன்.

நாங்கள் இந்த வீடு கட்டும்போது நீ கூறிய
அத்தனை யோசனைகளும் மிகவும் நன்றாக இருந்தது. அதோடு உன்னுடைய விருப்பத்தில் தான் இந்த வீட்டின் இன்டீரியர் ஒர்க் நடந்தது. அது எல்லாத்துக்கும் மிகவும் பிடித்திருக்கிறது அதனால் இந்த இந்தப் பொறுப்பையும் உன்னிடம் ஒப்படைக்கலாம் என்று நினைத்திருக்கிறோம்மா என்று கூறி முடித்தார்.

எல்லா ஏற்பாடுகளையும் நீயே சிறப்பாக முடித்துக் கொடும்மா... அதற்கான பேமென்ட் முழுவதையும் நீ சுந்தரிடம் வாங்கிக்கொள் என்று கூறினார்.

மாமா..... நீங்கள் இவ்வளவு தூரம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை கண்டிப்பாக தமிழ் இது எல்லாத்துக்கும் ஓகே சொல்வார்கள் என்று கூறினாள் சுந்தரின் மனைவி உமா.

அதோடு வரதராஜன் மற்றொன்றையும் கூறினார்.... இதற்கு எல்லாத்துக்கும் உனக்கு துணையாக கைலாசையும் கூட வைத்துக்கொள்ளலாம்மா ...
அவன் மிகவும் உதவியாக இருப்பான் என்றும் கூறினார்...

இவையெல்லாவற்றிற்கும் தமிழும் சரி என்றாள் .

பிறகு உமா வீட்டில் இருக்க மற்றவரும் காரில் ஏறி ஆபிஸ்க்கு வந்தனர்.

இது தொடர்பான விஷயங்களையெல்லாம் அலுவலகம் முடிந்த பிறகு பேசிக் கொள்ளலாம் என்று கைலாஷிடம் கூறினாள் தமிழ். அவனும் சரி என்றான்.
**************

ஆபீசுக்கு வந்து வேலையில் இருந்தவாறே இதைப்பற்றி தமிழும் கைலாசும் விவாதித்துக் கொண்டிருந்தனர்.

அன்று இரவே அகிலனுக்கு கால் செய்து இதைப்பற்றி கூறினார். அவனும் ஓ.... மேடம்க்கு ஏற்கனவே அங்கு நிறைய வேலை இதில் இன்னும் ஒரு வேலை எக்ஸ்ட்ராவா என்று கேலி அடித்தான்.

பிறகு இங்கிருந்தவவாறே கல்யாண வேலைகளையும் கவனித்துக் கொண்டு கோவையில் புதிய பிரான்ச் ஆரம்பிப்பதற்கான வேலைகளையும் கவனித்துக் கொண்டாள்.

கல்யாணத்திற்கான ஏற்பாடுகளில் முக்கால்வாசி வேலை முடிந்து விட்டது. புதிய பிரான்ச் தொடங்குவதற்கான நாளையும் குறித்துக்கொண்டு தமிழ் மறுபடியும் சென்னைக்கு சென்றாள்.

சென்னையில் அங்கு திவ்யாவுக்கும் நல்ல வரன் ஏற்பாடாகி இருந்தது.
நாட்கள் இல்லாததால் உடனடியாக திருமண நாளையும் குறித்து இருந்தனர் அதற்கு இன்னும் ஒரு வாரமே இருந்தது.
அதற்கு முன்னாடியே திருமணம் ஏற்பாடுகள் ஒவ்வொன்றை பற்றியும் அகிலன் தமிழுக்கு விரிவாக கூறியிருந்தான்.

சென்னை சென்றதும் வழக்கம்போல ஆபீஸ் வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தாள் .
அன்று காலை திருமண பத்திரிகையோடு ஆபீசுக்கு வந்தான் அகிலன்.

நீ தனியாக எல்லாம் வர வேண்டாம்...
என்னை தவிர அனைவரும் ஒரு வாரத்துக்கு முன்பாகவே சென்று விடுவார்கள் அதனால் அவர்கள் கூடவே நீயும் சென்று விடு என்று கூறினான். ஆனால் தமிழோ அதை மறுத்தாள்.
அது அகிலனுக்கும் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது.

என்னது வர மாட்டாயா....? என்றான் அகிலன்.

ஆமாம் அகில்...... கல்யாணம் ஆகாமல் உங்கள் வீட்டினருடன் வந்து தங்குவது முறையல்ல என்றும் கூறினாள்... அவனுக்கும் அவள் கூறியது சரி என்று பட்டது.

நீங்கள் எப்போது கிளம்புகிறீர்கள்.... என்று அவள் கேட்டதற்கு , கொஞ்சம் வேலை இருக்கிறது அதனால் கல்யாணத்திற்கு இரண்டு நாள் முன்பாக தான் கிளம்ப வேண்டும் அதுவும் இல்லாமல் லீவும் கிடைக்கவில்லை என்று கூறினான்.

அவளும் சரி என்றாள்....

நாட்கள் வேகமாக சென்றன.... ஒரு பக்கம் திவ்யாவின் கல்யாண வேலை, மறுபக்கம் புதிய ஆபீஸ் தொடங்குவதற்கான வேலையில் முழுவதும் முடித்து இருந்தாள்.

அகிலன் கிளம்புவதற்கான நாளும் வந்தது.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top