கற்பூர முல்லை Episode 26

Advertisement

Jeevitha Ram prabhu

Active Member
மலர் 26
இதற்கிடையில் தமிழ் கோயம்புத்தூருக்கு போக வேண்டிய நாளும் வந்தது. நிர்வாக பொறுப்புகளை எல்லாம் ஹரியிடம் ஒப்படைத்து விட்டாள்.. புதிய பிரான்ச் தொடங்குவதற்கான வேலைகளையும் ஓரளவு முடித்து விட்டாள். இனி கோயம்புத்தூருக்கு சென்று அங்கே புதிய பிரான்ச் தொடங்கி இந்த இரு பிரான்சிகளையும் ஒரே நாளில் தொடங்க செய்ய வேண்டும் என்பதே சுந்தரின் விருப்பம்...

ஹரி இடம் எல்லா விவரங்களையும் சொல்லிவிட்டு தான் கையெழுத்து இட வேண்டிய முக்கியமான கோப்புகளில் கையெழுத்து போட்டு விட்டு கிளம்பினாள்.

ஈவினிங் அகிலனே வந்து டிராப் செய்வதாக கூறியிருந்தான். சமையலம்மாவிடமும் வீட்டை பார்த்துக்க சொல்லிவிட்டு இரவு உணவையும் முடித்துவிட்டு தமிழ் கிளம்பினாள்.

அகிலன் அவளுக்காக வாசலில் நின்று இருந்தான். அவள் வந்ததும் இருவரும் ரயில்வே ஸ்டேஷன் கிளம்பினர்.

அங்கே சென்றதும் வண்டியை பார்க் செய்து விட்டு இருவரும் பிளாட்பாரத்தில் காத்திருந்தனர்.

அகிலன் அமைதியாகவே இருந்தான். தமிழ் தான் பேச்சை ஆரம்பித்தாள். என்ன அமைதியாகவே இருக்கிறீர்கள்.... என்று கேட்டாள்.
அதற்கு அவன் 'சீக்கிரம் வந்துவிடு ' தமிழ் என்று கூறினான்.

அவன் கூறிய ஒற்றை பதில் அவன் மனநிலையை அறிந்து கொண்டாள் தமிழ்.

அவன் கையை பிடித்தவாறு, இங்க பாருங்க நான் அங்கு வேலையாக தான் போகிறேன் கண்டிப்பாக வேலை முடிந்ததும் சீக்கிரம் வந்து விடுவேன் என்று ஆறுதல் கூறினான்.

நீ வேலையாகத்தான் போகிறாய் ஆனால் என்ன பண்ணுவது? மனம் அதை ஏற்க மறுக்கிறது? நீ இல்லாமல் எப்படி இருப்பேன்...? என்று கூறினான்.

சரி சீக்கிரம் வந்து விடுகிறேன் என்று கூறியவாறு அவனை சமாதானப் படுத்தினாள்.

இந்த தடவையாவது மேடம் போயிட்டு போன் பண்ணுங்க... மறந்துராதீங்க இங்கே ஒரு ஜீவன் உங்கள் போனுக்காக காத்துக் கொண்டிருக்கும் என்று கூறினான்.

ஆமாம்..... ஆமாம்..... போன முறை நான் இங்கு வந்து சென்றதற்கும் இந்த முறை நான் இங்கு வந்து செல்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்று கூறினாள் அவள்.

சரி ஏதோ.... என்னை மறக்காமல் இருந்தால் சரி என்றான் அவன்.

அடி வாங்க போறீங்க என்றாள் அவள்.

ம்ம்ம்ம்ம்.... இந்த பொன் கையால் எது கொடுத்தாலும் சரிதான் என்றான் அவன்.

அதே சமயம் ட்ரெயினும் வந்தது..
சரி பார்த்து போ... தமிழ் என்று பத்து தடவை சொன்னான்.

சரி என்றவாறு அவள் இருக்கையை தேடி பிடித்து அவள் அமர டிரெயின் கிளம்பும் வரை இருந்து வழி அனுப்பி வைத்து விட்டு வந்தான்.
*************

ரயில் கோவை வந்தடைந்ததும் காயத்ரி வந்து அவளை பிக்கப் செய்து கொண்டாள். மறக்காமல் அகிலன் சுக்கு கால் செய்து கூறினாள்.
நீ உன் வீட்டிற்கு எல்லாம் செல்ல வேண்டாம் அப்பாவும் பிசினஸ் விஷயமாக வெளியே சென்று இருக்கிறார். வருவதற்கு கொஞ்ச நாட்கள் ஆகும் நானும் தனியாகத்தான் இருக்கிறேன் பேசாமல் நீயும் என்னுடன் வந்து இருந்து கொள் என்று கூறினாள்.

வேண்டாம் என்றாலும் விடவா போகிறாய்? சரி வா போகலாம்...என்று கூறி இருவரும் காரில் கிளம்பினர்.

காயத்ரி வீட்டிற்கு சென்று பிரஷ் ஆகி கொண்டு காயத்ரி அவள் அலுவலகம் செல்ல, தமிழோ கிளம்பி சுந்தரின் அலுவலகத்திற்கு வந்தாள்.

ஆபிஸிற்கு வந்தவளை அனைவரும் நலம் விசாரித்தனர்.
கைலாசஷின் கேபினுக்கு சென்றாள் . அங்கே அவன் மும்முரமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். இவள் வருவது அவனுக்கு சற்றும் தெரியாது.
யாரோ வந்தது போல் தெரியவும், ஏதேச்சையாக பார்த்தான்.

இவளை பார்த்ததும் முகம் மலர்ந்தான். வாங்க மேடம்.... இப்பொழுதாவது எங்கள் ஞாபகம் வந்ததே..... என்று கூறினான்.
இல்லை.... எம்டி ஆபீஸ் விஷயமாக வர சொன்னார் அதுதான் வந்தேன் என்று கூறினாள். ஓ..... அப்பவும் நீங்கள் எங்களை பார்க்க வரவில்லை ஆபீஸ் வழியாகத்தான் வந்திருக்கிறீர்கள் என்று கேலியாக கேட்டான்.

சரி சரி போங்க.... மேடமும் உள்ளதா இருக்காங்க போய் பேசிட்டு வாங்க ....எங்களையெல்லாம் கடைசியா தானே பார்ப்பீங்க என்று கூறினான்.
சரி இதை பார்த்து விட்டு வருகிறேன் என்று கூறி சுந்தரின் அறைக்குள் நுழைந்தாள்.

உள்ளே நுழைந்ததும் சுந்தரும் அவன் மனைவி உமாவும் இருந்தனர். இருவரும் இவளிடம் நலம் விசாரித்து விட்டு பிறகு சார் நலமா... என்று கேட்டார்கள் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.
பின்னர் தான் தெரிந்தது அவர்கள் அகிலனை விசாரிக்கிறார்கள் என்று சிரித்து விட்டு அவரும் நலம் என்றாள்.

பின்னர் சுந்தர் கம்பெனி விஷயமாக எல்லாவற்றையும் கேட்டறிந்தான். பின் அவளுக்கு புதிய பிரான்ச் தொடர்பாக இங்கே செய்ய வேண்டிய வேலைகளையும் விவரித்தான்.
எல்லாவற்றையும் சொல்லி முடித்த பிறகு சரி கிளம்பலாமா....? என்றான் அவள் எங்கே என்று கேட்க....? இவ்வளவு நேரம் பேசியது ஆபீஸ் விஷயம் இனி பேசப்போவது பெர்சனல் விஷயம் அதன் காரணமாக வீட்டிற்கு சென்று தான் இதை பேச வேண்டும் என்று கூறினான்..
தமிழுக்கு சுத்தமாக ஒன்றுமே புரியவில்லை இவன் எதை கூறுகிறான் என்றே தெரியவில்லை உமாவும் சிரித்துக் கொண்டே இருந்தாள்.

சரி என்றவாறு மூவரும் கிளம்பினர். போகும்போது கைலாசிடம் சொல்லலாம் என்று திரும்பியவர் சுந்தர் மறித்தான்.அதற்கு அவசியமே இல்லை ஏனென்றால் கைலாஷும் தான் வரப்போகிறான் என்று கூறினார். கைலாசுக்குமே சுத்தமாக ஒன்றுமே புரியவில்லை இருந்தாலும் வேறு வழியில்லாமல் அவர்களுடன் கிளம்பினான். நால்வரும் கிளம்பி சுந்தரின் காரில் ஏறி அவன் வீட்டிற்கு சென்றனர்.

மலரும்......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top