என் இதய விழி நீயே 28 1

Advertisement

achuma

Well-Known Member
28 2 நாளைக்கு பதிவு செய்கிறேன் , அனைவரின் விருப்பம் மற்றும் கருத்திற்கு மிகவும் நன்றி ..

hi more only three episodes
all please give your support
be safe friends
takecare
wear mask dears:love::)(y)







அங்கு உள்ள அனைவர்க்கும், தினேஷின் திடீர் வருகை அதிர்ச்சியே, அவனின் வருகையை எப்படி எடுத்துக்கொள்ளுவது என்று ஒன்றும் புரியாமல் , அபி திணறி கொண்டிருந்தாள் என்றால் , ஆதி அவன் மீது அப்படி ஒரு ஆத்திரத்தில் இருந்தான் ..


முதலில் தன்னிலை மீண்டு , சிவநேசன் தான் , அவனை வரவேற்று அமர வைத்தார் ..


தினேஷ் அங்கு யாரு இருக்கிறார் என்றெல்லாம் கவனிக்காமல் , அவரின் காலில் விழுந்து, மன்னிப்பு கேட்டான் , லீலாவின் செயலில் ..

அபி வீட்டில் வேலைகள் பார்ப்பாள், அதுவரை மட்டுமே தெரியும் என்றும், லீலா அவரிடம் நடுந்து கொண்டது எதுவும் தனக்கு தெரியாது என்றும்,


ஆதியிடமும் அவன் கைகளை பற்றி கொண்டு மன்னிப்பு வேண்டினான் ..
அனால் எதுவும் கண்டு கொள்ளாமல் இருந்தது, தன தவறு, என்று அதற்கும் வருந்தினான் ..


வீடு தேடி வந்து மன்னிப்பு கேட்பவனிடம், என்னவென்று சொல்லுவது ..
அதிலும், அபி , அவளின் தற்போதைய மனநிலையில், அவள் பிறந்த வீடு சொந்தம் ஒன்று வந்து இருப்பதை எப்படி உணர்கிறாள் என்று அவளிற்கே தெரியாமல் குழப்பத்தில் இருந்தாள் ..


அவளின் பெற்றோரே , இங்கு தினேஷை அனுப்பி வைத்ததாக நினைத்து மகிழ்ந்தாள் ..

அவளின் அழுகையை அங்குள்ளோருக்கு தான் எப்படி எடுத்து கொள்வது என்று புரியாமல் இருந்தனர் ..
சிரிப்பும், அழுகையும் போட்டி போட , அபியின் முகத்தை வைத்து ,ஆதி கண்டுகொண்டான், அபி மிகவும், உணர்ச்சி வச பட்டு இருக்கிறாள் என்று ..
பிறகு, அபியின் முதுகை வருடி, அவளுக்கு தண்ணீர் கொடுத்து ஆதி அமைதி படுத்தினான் ..


"அபி, எனக்கு உன்கிட்ட மன்னிப்பு கேட்க தகுதி இல்லை , நீயே என்ன மன்னிக்க முடிந்தா மன்னிச்சுடு," என்று அவளின் முன் கைய் கூப்பி வேண்டினான் ..
அபியும், "விடுங்க , பழைய விஷயம் பேச வேண்டாம் ," என்று கூறினாள் , ஆனால் அண்ணா என்ற வார்த்தை அவளின் வாயில் இருந்து வர வில்லை என்று கண்டு வருந்தினான் தினேஷ் ..
காலம் கடந்து வருந்தி ஒன்றும் இல்லை ..

"சார் ," என்று சிவநேசனின் முன்பு வந்து , அபிக்கு தாய் வீடு சீர் , இந்த தீபாவளிக்கு, எங்களால் முடிந்தது கொடுக்க வந்து இருக்கேன், ப்ளீஸ் , வாங்கிக்கணும் , என்று கேட்டுக்கொண்டான் ..

"என் மேல இருக்குற கோவத்துல இது வாங்காம இருக்காதீங்க, நானும் என் தங்கையும், எப்பவுமே, தாய் வீடு சொந்தமா, எங்க அபிக்கு இருக்கிறோம்.
மாப்பிள்ளையும், அபியையும் , நீங்க தான் வாங்கிக்க சொல்லணும்" ..

ஆதி அபியின், முகம் பார்த்து நின்றான் அவளின் முடிவிற்கு , அவளும் சம்மதமாக தலை அசைத்தும், இருவரும், ஒன்றாக அவன் கொடுத்த சீர் வாங்கி கொண்டனர் ..


அதில் இருவருக்கும், புது துணி, ஆதிக்கு, மோதிரமும், அபிக்கு, கல் வைத்த குடை ஜிமிக்கியும் தங்கத்தில் இருந்தது ..
அபிக்கு, வீட்டு நிலவரம், அவள் அண்ணனின் வருமானம் தெரியும், இருந்தும், ஒன்றும் சொல்லாமல் பெற்று கொண்டாள் ..


"ஹ்ம்ம் , இது ஒரு நகை இதுக்கு இவ்வளவு சீன் ," பிரேமாவை தவிர வேறு யாரால் இவ்வாறு நினைக்க முடியும், பிறகு, ஸ்ரீ மற்றும், அபி வீட்டின் மருமகள்களாக , அங்கு வந்து உள்ள அனைவருக்கும், இனிப்பு காரம் கொடுத்து, உபசரித்து, இரவு உணவுக்கு ஏற்பாட்டில் இருந்தனர் ..
தினேஷிடம், அவனின் வேலை, மற்றும் ராமமூர்த்தியின் உடல் நிலை பற்றி கேட்டு கொண்டனர் ..

அனுவிற்கு ஏதேனும் வரன் பற்றியும் கேட்டதற்கு , தரகரிடம், கூறியுள்ளதாக தெரிவித்தான் ..

விஜயன், சென்னையில் வசிக்கும் , அவர் நண்பரின் மகனுக்கு, அனுவை பார்க்கலாமா , என்று கூறினார் ..

இவருக்கு, இந்த வேலை தேவையா என்று தான் பிரேமா பார்த்து கொண்டிருந்தாள் ..

"பையன் பேரு, ஸ்ரீகாந்த் , சென்னையில் தான் சாப்ட்வேர் கம்பெனியில் , வேலைல இருக்கான் , இரண்டாவது பையன் , உனக்கு விருப்பம் இருந்தா பாரு பா , என் நண்பன் போன வாரம் தான் என்னையும் நல்ல தெரிந்த இடம் பார்க்க சொன்னான்" .

தினேஷ் என்ன சொல்வது என்றே தெரியவில்லை , வந்த இடத்தில அவன் தங்கைக்கு , ஒரு வரன் அமையும் என்று , வீட்டில் பேசிவிட்டு சொல்லுவதாக கூறினான் ..

பிறகு அனைவர்க்கும், சிறப்பாகவே விருந்து உபச்சாரம் நடைபெற்றது ..
"இவனுக்கு சரிசமமா , நம்ம கூட சாப்பாடு போடணுமா ," என்று தான் பிரேமா நினைத்துக்கொண்டிருந்தாள் ..

பிரேமா மற்றும் லலிதா குடும்பம் விடை பெற்றதும், அண்ணன் தங்கை இருவரும் தோட்டத்தில், ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு, என்ன பேசுவது என்று தெரியாமல் முழித்து கொண்டிருந்தனர் ..

ஸ்ரீயே , "அனு எப்படி இருக்கா , அவளையும் இங்க கூட்டிட்டு வந்து இருக்கலாம்," என்று பேச்சை ஆரம்பித்து வைத்தாள் .

"இல்லை , நாங்க வேலைக்கு இப்போ அனுவை அனுப்புறது இல்லை , அவ தான் அப்பாவ கவனிச்சிக்கிறா , அவளையும் கூட்டிட்டு வந்தா கஷ்டமாகிடும் , அபியை கேட்டதா சொல்ல சொன்னா ."

அபிக்கு, அனுவின் பொறுப்பு நினைத்து சந்தோஷமே ..

"ஆதி என்னை மன்னிச்சிடுங்க , என்ன எவ்வளவு அடி வேணும்னா அடிச்சிக்கோங்க , நீங்க என் மேல கோவமா இருக்கீங்கன்னு , எனக்கு தெரியுது , ஆனா இழந்த எங்க நாட்களை, எப்படி சரி பண்றதுனு எனக்கும் தெரியல ," என்று அதையே மீண்டும், மீண்டும் கேட்டுக்கொண்டான் ..

"விடுங்க , தினேஷ் " ஆதிக்கும், கோவம் இருந்தாலும், தினேஷை நினைத்து , என்ன செய்ய என்று இருந்தான் , அபிக்காக .

இருவருக்கும், தனிமை கொடுத்து, அனைவரும் வீட்டிற்குள் சென்றனர் , அண்ணன் தங்கை இருவர் மட்டும் நின்று, இருந்தனர் தோட்டத்தில் .
"என்ன திடீர்னு," என்று அபியும், வெகு நேரம் இருந்த கேள்வியை கேட்து விட்டாள் தினேஷிடம்.

"இப்போ தான் புத்தி வந்துனு நினைச்சிக்கோ மா," தினேஷும் பதில் கொடுத்தான் ..

"நீ இங்க வந்து, நான் ரெண்டு மூண்று முறை உனக்கு போன்ல கூப்பிட்டேன், உனக்கு என் மேல வருத்தம் போகல , சரி மாமி கிட்ட , கேட்டு வீட்டு முகவரி வாங்கிட்டு இந்த தீபாவளிக்கு வந்துட்டேன்" ..

"ஏன் இந்த செலவு , இதற்கு காசு எப்படி," தயங்கி தயங்கி தான் கேட்டாள் அபி ..

"அனுக்கு , என்ன எல்லாம் ஒரு அண்ணனா நான் எல்லாம் செய்யறனோ, உனக்கும் செய்யணும் கமலா ஆர்டர் ," என்று இதஸ் ஒர புன்னகையுடன் வேறு பக்கம் திரும்பி நின்றான் ..

சட்டு என்று அபி அவனை நிமிர்ந்து பார்த்து , அண்ணனின் புன்னகை கலந்த தயக்கமான முகம் பார்த்து, "வாழ்த்துக்கள் ," என்று அபியும் புன்னகை செய்தாள் ..

"காசு பற்றி கவலை படாதா மா , வேற வேலைல சேர்ந்து இருக்கேன், நல்ல சம்பளம் .

அம்மாக்கு அனாவசியமா பணம் கொடுக்கறதில்லை .
நானே வீட்டு செலவு மனேஜ் பண்றேன்" ..

"உனக்கும் அனுக்கும், மாச மாசம் நகை சீட்டு கட்டுறேன்".
"இனி என் கடமைல இருந்து நான் மாற மாட்டேன் , உனக்கு இந்த அண்ணன் , இருக்கானு, நீ நம்புனா போதும்.

"தேவை பட வேண்டிய நேரத்தில் கிடைக்க வேண்டிய அரவணைப்பு, எனக்கு கிடைக்கல , திடீர்னு, எல்லாம் மறந்து சகஜமா உங்க கூட பழக டைம் வேணும்," என்று அபியும் தெளிவாகவே பதில் கூறினாள் .


தினேஷும், அபியை புரிந்துகொள்ள முடிந்தது , அடுத்த மறு நாள் விடியலிலே , ஊருக்கு புறப்பட்டு சென்றான் ..

தீபாவளி அன்று, இளையவர்கள் யாரும் எங்கும் செல்லாமல், அனைவரும் ஒரு ஒரு கிளையில் அன்றைய வேளைகளில் ஈடுபட்டு இருந்தனர் ..

சிவநேசன் மட்டும், ஸ்ரீயின் பெற்றோருடன், கோவிலுக்கு சென்று விட்டார் ..
இம்முறை பிரேமாவிடம் ஏதும் சொல்லாமலே, விஜயன் நிஷாவை பார்க்க சென்று விட்டார் , அவரின் கடமையை சாமந்தி வீட்டிற்கு செய்வதற்கு , பிரேமாவும் பெரிதாக ஏதும் கண்டுகொள்ளாமல் , கம்பெனிக்கு சென்று விட்டாள் ..

புது வண்டி வாங்குவதற்கு என்று அன்று நிறைய வாடிக்கையாளர்கள் வந்து இருந்தனர்..என்றும் இருப்பதை விட அன்று வேலை அதிகமாக இருந்தது ..

அப்பொழுது, சர்வீஸ் துறையில் வேலை செய்யும் பிரேமாவின் ஆட்களில் ஒருவன், அங்குள்ள கூட்டத்தில் இருக்கும் இளம் பெண்களை , சைட் அடிப்பதற்கு என்றே வந்திருந்தான் ..

பிரேமாவும், அவனி.டம் சொல்லி இருந்தாள் , "டேய் , லூசு உன் புத்திய இங்க காட்டாதே , ஒழுங்கா போய்விடு" என்று..


"மேடம் சும்மா அப்படியே சைட் அடிச்சிட்டு போயிட்டே இருப்பேன், நீங்க டென்ஷன் ஆகாதிங்க, "என்று அவளையும் அடக்கி அனுப்பி வைத்தான் ..
அபி அன்று , மேற்பார்வை பார்த்து கொண்டிருந்தாள் அனைத்தும் சரியாக செல்கிறதா என்று, அப்பொழுது "இந்த லூசு இங்க என்ன பன்னுது," என்று

அவன் இருக்கும் திசை பார்த்தாள் , அபிக்கு பேச்சே வரவில்லை ..
அவன் கைகளில் உள்ள ஒரு தொலை பேசியில், எதிரில் அமர்ந்து இருந்த

ஒரு இளம் பெண்ணின் ,ஷால் இல்லாத பகுதியை போட்டோ எடுத்திக்கொண்டிருந்தான்..

அந்த பெண் ஏதோ கீழே விழுந்த பொருளை எடுப்பதற்கு, குனிந்துள்ள நேரம், அவளின் ஷால் தரையில் விழுந்தது..

அதில் கழுத்து இறக்கமாக அவளின் உள்ளாடை முதற்கொண்டு தெரிந்து ,அதனை , அந்த பொறுக்கி , அவனின் போனில் போட்டோ எடுத்திக்கொண்டிருந்தான் ..

அபிக்கு எங்கு இருந்து தான் அவ்வளவு கோவம் வந்ததோ, சுற்றி அத்தனை ஆட்கள் இருக்கிறார்கள் , அனைவரும் அவரவர்,வேலையில் , கவனமாக இருக்கிறார்கள் , யாரும் இதை பார்க்க வில்லை ..

சரனும் இங்கு இல்லையே , அவரிடம் இதை பற்றி எப்படி சொல்வது,அவனிடம் சென்று,"டேய் ராஸ்கல் போன் குடு டா ," என்று அவனின் முன் நின்று சென்றாள் . முதலில் விஷயம் தெரிந்ததே என்று பயந்தாலும், பிறகு சுதாரித்து, "எதுக்கு, உன்னையும் இதுல இருக்கிற மாதிரி எந்த போஸ்ல எடுக்கணும் செலக்ட் செய்யவா ," என்று அவளை நக்கலாக பார்த்து கேட்டான் ..

அவ்வளவு தான் அபியின் பயம் எல்லாம் எங்கோ சென்றது, பளார் , என்று அவனை ஒரு அரை விட்டாள் ..

"பொறுக்கி நாயே, யார பார்த்த பேசுறே , தொலைச்சிடுவேன், ஜாக்கிரதை ," என்று கர்ஜித்தாள் ..
அபியின் கண்கள் இன்னும் விரிந்து, முகம் ரத்தம் என கோவத்தில் சிவந்து, அவனின் கண்களுக்கு காலியாக தெரிந்தாள் ..ஓர் ஆதி பின்னே சென்றான் கன்னத்தில் கையை வைத்து கொண்டு ..

அந்த பெண்ணின் தந்தை அங்கு வண்டியை பார்த்து கொண்டிருந்தவர், அவளின் அருகில் வந்து என்ன என்று கேட்டார் ,அந்த இடத்தில தான் அவரின் மகளும் இருந்தாள் , இவர்களின் அருகில் நடந்ததால் , முதலில் அவரே அபியிடம் என்னவென்று கேட்டார் .. அபியும், இவங்க யாரு, என்று கேட்டதற்கு , அவரின் மகள் என்ற பதிலில் , இவரிடம் தான் கூற வேண்டும் என்று, "இந்த ராஸ்கல் இவங்க ஷால் கீழே விழுந்ததை , இவன் போன்ல வீடியோ எடுத்து இருக்கான்" ..

அவரும் அவனின் சட்டையை பிடித்து நன்றாக புரட்டி விட்டார் , கூட்டமும் கூடியது, இந்த களேபரத்தில் ..
பிரேமாவும் என்னவவோ என்று அங்கு வந்ததற்கு , விஷயம் கேள்வி பட்டதும், அவருக்கு அபி மீதே ஆத்திரம்..

ஆனால் அமைதியாக, எப்பொழுதும் போல் பூரணியின் பெயரை எடுத்தார் ..
அபி, உங்க அத்தையோட விசுவாசி மா இவன், அவங்க வேலைக்கு வைத்த பையன் ," என்றாள் ..

அபிக்கு, மீண்டும் கோவம் தலைக்கேறியது , நானாவது ஒரு அரையோட விட்டேன் ,என்னோட அத்தை மட்டும் உயிரோட இருந்து இருந்தா, இவனை செருப்பாலேயே அடித்து இருப்பாங்க, என்று கத்தி விட்டாள் ..
 

Nasreen

Well-Known Member
Nice
Thinesh kku Kamala solli thaan seiran
Abi corrects antha rascal pidichu adichita
Ippovum thappu avan mela nnu therinjumae prema pooraniyin viswasi nnu solrathu absthsma irukku
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top