என்னுள் சங்கீதமாய் நீ 18

Advertisement

Nithi Kanna

Well-Known Member
என்னுள் சங்கீதமாய் நீ 18



என்ன சீனியர் இப்படி சொல்றீங்க..? முடியாதுன்னு மட்டும் சொல்லாதீங்க.. ஓகே சொல்லுங்க.. ப்ளீஸ் சீனியர்.. ஆமாடா ஓகே சொல்லுடா.. என்று அனைவரும் மாற்றி மாற்றி கேட்கவும்,

டேய் பசங்களா.. புரியாம பேசாதீங்கடா.. என்று ஜூனியர்ஸை அதட்டிய ஜெய், ஏன்டா..? உங்களுக்குமாடா காலேஜ் ரூல்ஸ் தெரியாது.. கப்பில் டான்ஸ் அல்லோவ் கிடையாது தெரியுமில்ல.. கண்டிப்பா இதுக்கு ஒதுக்கமாட்டாங்க..

அதனால தான் நீங்க முதல்ல கேட்டப்பவே, நான் பாக்கலாம்ன்னு சொன்னேன்.. என்று ஜெய் மறுப்பாக சொல்லவும்,

டேய்.. நாம போய் கேட்டா ஓகே சொல்ல சான்ஸ் இருக்கு.. ஆமா மச்சி கேட்டு தான் பாக்கலாமே.. என்று குமாரும், செல்வமும் சொல்ல,

மற்றவர்களும் ஆமா சீனியர்.. நீங்களும், ஹர்ஷினியும் பேரா ஆடினா நல்லா இருக்கும்ன்னு தானே எல்லாரும் ஆசைப்பட்டு கேட்கிறோம்.. நீங்க பைனல் இயர் வேற.. இது தான் கடைசி வாய்ப்பு.. என்று ஜூனியர்ஸும் விடாமல் சொன்னனர்.

எல்லாம் சரிடா.. போய் கேட்கலாம்தான்.. ஆனா நீங்க தா கேட்கிறீங்க.. அந்த “மேடம்க்கு ஓகேவா..?ன்னு எனக்கு எப்படி தெரியும்..?” என்று மனதுக்குள் சிரித்துகொன்டே வெளியில் சாதரணமாக கேட்டான் ஜெய்.

“ஹர்ஷினிக்கும்.. ஓகே தான் சீனியர்..” என்று ரோஹன் சொல்லவும்,

அதெப்படி உங்ககிட்ட சொன்னா ஆச்சா..? என்கூட டான்ஸ் ஆட என்கிட்டே தானே சொல்லணும்.. உங்க பேச்சை நம்பி நான் பெர்மிஷின் கேட்டுட்டு அப்பறம் அவ முடியாதுன்னு சொல்லிட்டா..?

ஆமா மச்சி.. நீ சொல்றதும் கரெக்ட்.. அந்த அம்மிணியே வந்து நேரா சொல்லட்டும்.. அப்பறம் கேட்கலாம் என்று செல்வமும் சொல்ல,

சரி சீனியர்.. ஹர்ஷினியே வந்து உங்களக்கு நேர்ல ஓகே சொல்லுவா.. நாங்க போய் அவளை கூட்டிட்டு வரோம்.. என்று ஜோதியும், ரோஹனும் சென்றவர்கள் கையோடு ஹர்ஷினியையும் அழைத்து வந்தனர்.

“என்ன எதுக்கு இங்க கூட்டிட்டு வரீங்க ..?” என்று ஹர்ஷினி, ஜோதியிடமும், ரோஹனிடமும் கேட்டு கொன்டே வந்தவள், ஜெய் இருக்குமிடம் வந்ததும்,

ஜோதி.. ஹர்ஷி நீ ஜெய் சீனியர்ட்ட நேராவே ஓகே சொல்லிடு.. எனவும், அதிர்ந்தவள், எதுக்கு ஓகே சொல்லணும்..? என்று குறும்பு சிரிப்புடன் தன்னை பார்த்து கொண்டிருக்கும் ஜெயயை சந்தேகத்துடன் பார்த்த படி கேட்கவும்,

என்னங்கடா.. எதுக்கு ஓகே சொல்லணும்..?ன்னு கேக்குறா உங்க ப்ரண்ட்.. என்று ஜெய் கொஞ்சம் கோவம் போல் ஜூனியர்ஸிடம் கேட்க,

ஹர்ஷி.. என்ன மறந்துட்டியா..? “நீ ஜெய் சீனியர் கூட சேர்ந்து டான்ஸ் ஆட கிளாஸ்ல ஓகே சொன்ன இல்லை.. அதை தான் இப்போ காண்பேர்மேஷனுக்காக ஜெய் சார் முன்னாடியும் நேராவே நீயே ஓகே சொல்லிடு, என்று ஜோதி சொல்லவும்,

ஜெயின் குறும்பை புரிந்து கொண்ட ஹர்ஷினி, பல்லை கடித்தபடி அவனை கண்களால் முறைக்கவும், மற்றவர்கள் கவனிக்கா படி நொடியில் அவளை பார்த்து கண் அடித்து விட்டான். அய்யோ.. எங்க வச்சி என்ன பன்றாரு..?

ஓகே சொல்லு ஹர்ஷினி, சீக்கிரம் என்று மற்றவர்களும் சொல்லவும், வேறு வழி இல்லாமல், “எனக்கு ஓகே..” என்று கடுப்பாக சொல்லவும்,

எதுக்கு..? ஓகே சொல்ற ஹர்ஷினி..? என்ற ஜெய் யாரும் கவனிக்கா வண்ணம் இதுக்கா..? என்பது போல் சட்டென அவளை பார்த்து லேசாக உதட்டை குவித்து உல்லாசமாக காட்டவும்,

அவனின் செயலில் அதிர்ந்தவள், யாராவது பாத்துட்டாங்களா..? என்று மற்றவர்களை அவசரமாக பார்க்கவும், யாரும் கவனிக்கவில்லை என்று கண்டு கொண்ட பிறகே கொஞ்சம் ஆசுவாசமானவள், எல்லோரும் இருக்கும்போது என்ன வேலை பாக்குறாரு.. இவரை.. என்று மனதுக்குள் கடிந்து கொண்டாள்.

“உன்னை இன்று விட்டேனா பார்..” என்று உறுதி கொண்டவன் போல், அமைதியா இருந்தா எப்படி..? எதுக்கு ஓகே சொன்ன ஹர்ஷினி..? என்று மறுபடியும் லேசான சிரிப்புடன் கேட்கவும்,

மற்றவர்களும் அவனின் குறும்பான விளையாட்டை புரிந்து கொண்டு, ஆமா எதுக்கு ஓகே சொன்ன..? என்று சிரிப்பாக கோரஸாக கேட்கவும், மனதுக்குள் நொந்தவள்,

“எனக்கும் உங்க கூட சேர்ந்து டான்ஸ் ஆட சம்மதம்..” என்று சொல்லவும்,

எனக்குமா..? நான் இன்னும் டான்ஸ் ஆட ஓகே சொல்லலையே..? என்னங்கடா நான் ஓகே சொன்னேனா..? என்று ஜெய் கேட்கவும்,

“இதுக்கு மேல முடியாது..” என்று கொதித்தெழுந்த ஹர்ஷினி, ரொம்ப நல்லதா போச்சி.. ஓகேவே சொல்லாதீங்க.. என்று பொரிந்து விட்டு அங்கிருந்து கிளம்பியும் விட்டாள்.

ரொம்பத்தான் பண்றாரு.. என் கூட சேர்ந்து டான்ஸ் ஆட இன்னும் ஓகேன்னு சொல்லலியாமே..? சாருக்கு ஓகே வேற சொல்லனுமா..? ஓவர் சேட்டை.. எல்லாரும் இருக்கும் போதே கண் அடிக்கிரதென்ன..?

அப்பறம்.. என்று அவன் உதட்டை குவித்ததை நினைத்தவுடனே சட்டென காதுவரை சிவந்துவிட்டது ஹர்ஷினிக்கு.. அந்த சிவப்பு ஜெய் மீதுள்ள கோவத்திலா..? வெட்கத்திலா..? என்று அவளுக்கே தெரியவில்லை..

என்ன ஹர்ஷி இது..? ஜெய் சீனியர் சும்மா உன்னை டீஸ் பண்ணதுக்கு போய் கோவப்பட்டுட்டு வந்துட்ட.. நல்ல வேளை அவர் எதுவும் நினைச்சுக்கல.. சிரிச்சிட்டு தான் இருந்தாரு.. என்று சிறிது நேரம் கழித்து வந்தவர்களில் செல்வி சொல்லவும்,

ஏன் சிரிக்கமாட்டாரு துரை..? என்று மனதுக்குள் ஜெயயை தாளித்தவாரே கடுகடு முகத்துடன் அமர்ந்திருந்த ஹர்ஷியை கண்ட ஜோதி, சரி விடு செல்வி.. என்றவள், ஹர்ஷினியிடம்,

ஹர்ஷி.. ஜெய் சார் ப்ரின்சிகிட்ட பேசிட்டார்.. முதல்ல ஒத்துக்குவே இல்லை.. அப்பறம் இவங்க எல்லாம் பைனல் இயர் சார்.. கன்சிடர் பண்ணுங்கன்னு ரெக்வஸ்ட் பண்ணவே ஒத்துக்கிட்டார். ஆனா கொஞ்சம் கண்டிஷன்ஸ் இருக்கு,

என்ன கண்டிஷன்ஸ்..? என்று ஹர்ஷினி யோசனையாக கேட்கவும், அது.. நீங்க ரெண்டு பேறும் டான்ஸ் ஆடும் போது குறைஞ்சது 5 அடியாவது கேப் இருக்கணும்.. அப்பறம் பாட்டு நல்ல பாட்டா இருக்கணும்.. டிரஸ்.. இது போல சொல்லிருக்கார்.. ஜெய் சாரே உன்கிட்ட சொல்லுவார்.. என்று ஜோதி முடிக்கவும்,

ரோஹன்.. ஹர்ஷி இதை பத்தி டிஸ்கஸ் பண்ண சீனியர் உன்னை ஈவினிங் ஸ்டேடியத்துக்கிட்ட வர சொல்லிருக்கார் எனவும், ஓகே என்று விட்டவள், உற்சாகமான மனநிலையுடன் “என்ன பாட்டுக்கு ஆடலாம்..?” என்று யோசித்தவள், ஆமா.. நான் யோசிச்சா மட்டும்.. அதெல்லம் இந்நேரத்துக்குள்ள அவரே கண்டிப்பா பாட்டு சூஸ் பண்ணிருப்பார்..

மாலை காலேஜ் முடியவும், ப்ரண்ட்ஸ் எல்லாம் நாங்களும் வரோம்.. என சொல்லவே, அவர்களுடனும் ஸ்டேடியம் சென்ற ஹர்ஷினி, அங்கு ஜெய் தன் நண்பர்கள் புடை சூழ ஏதோ சொல்லி தலையை ஒரு பக்கமாக கோதி கொண்டே சிரித்துக்கொண்டிருந்தவனின் அழகில் தன்னையே மறந்து அவனை ரசித்து பார்த்தவள்,

ஏய் ஹர்ஷி.. என்ன இங்கேயே நின்னுட்ட.. வா போலாம் என்று செல்வி தன் தோள் தொட்டு அழைக்கவும், அச்சோ.. இப்படியா அவரை பாத்துவைப்பேன்.. வர வர எனக்கு முத்திப்போச்சு.. என்று மனதுள் தன்னையே திட்டி கொண்டவள், ஜெய் இருக்குமிடம் நெருங்கவும்,

அவன் ஹர்ஷினியை கண்டு கொண்டதாகவே காட்டி கொள்ளாமல் தன் நண்பர்களிடம் சிரித்து பேசி கொண்டிருந்தான்.. ரோஹன் இரண்டு முறை கூப்பிட்டும், காது கேட்காதவன் போல் இருக்கவும்,

கடுப்பான ஹர்ஷினி, இதோ ஆரம்பிச்சுட்டாரு .. இவர் மட்டும் அடங்கவே மாட்டாரு.. இப்போ நானே கூப்பிடனும் இவரை.. அதானே... என்று பல்லை கடித்தவள்

"சீனியர்..?" என்று கூப்பிட்டும் , அவன் திரும்பாமல் இருக்கவும், "ஜெய் சீனியர்..?" என்று கொஞ்சம் சத்தமாக கூப்பிட்டாள். முதல் முறையாக தன் பெயரை அவள் சொல்ல கேட்கவும் உச்சி முதல் பாதம் வரை சில்லென இருந்தது ஜெய்க்கு,

தன் சில்லிப்பை வெளிக்காட்டாமல் அவள் புறம் திரும்பியவன், என்ன ஹர்ஷினி கூப்பிட்டிங்களா..? என்ன விஷயம்..? என்று கேட்கவும், இவர் ஒரு முடிவோடுதான் இருக்கார்.. இந்த டான்ஸ் பிராக்டிஸ் முடியறதுக்குள்ள என்னை ஒருவழியாக்க போறார்..! என்று புரிந்து விட்டது ஹர்ஷினிக்கு,

அதனாலே அவன் கேட்ட கேள்விக்கு பதில் எதுவும் சொல்லாமல் கோவத்தில் எங்கோ பார்த்தபடி நிற்கவும், அவளின் கோவத்தை புரிந்து கொண்ட ஜெய், இதுக்கு அப்பறம் கடுப்பேத்தினா.. அவ்வளவுதான்.. என்று உஷாரானவன்,

ஓஹ்.. நான் தான் டான்ஸ் பத்தி டிஸ்கஸ் பண்ண வரச்சொன்னேன்.. இதுல ஒரு 5 பாட்டு இருக்கு.. உங்களுக்கு எது ஓகேவா இருக்கும்ன்னு சொல்லுங்க.. என்று ஒரு லிஸ்டை கொடுக்கவும்,

வாங்கி பார்த்தவளுக்கு முதலில் அதிர்ச்சியே.. என்ன இது.. இது எல்லாமே பியூஷன் சாங்ஸ் மாதிரி இருக்கு..? இதுக்கு எப்படி..?

ஆமா.. பியூஷன் சாங்ஸ் தான்.. பட் இதுக்கு நீ பரதநாட்டியம் ஆடணும்..,

ஆனா நீங்க.. உங்களுக்கு.. என்று தயக்கமாக இழுக்கவும், புரிந்து கொண்டவன்.. எனக்கு பரதநாட்டியம் தெரியாது.. என்று சிரித்தபடி சொல்லவும்.

அப்பறம் எப்படி..? என்று புரியாமல் கேட்கவும், மற்றவர்களும் என்ன சொல்லவருகிறான்..? என்று குழப்பமாக பார்த்தனர்.

இதுல நீ செலெக்ட் பண்ற பாட்டுக்கு ஒரு பக்கம் நீ பரதநாட்டியம் ஆடு.. அதே பாட்டுக்கு இன்னொரு பக்கம் நான் வெஸ்டர்ன் ஆடுறேன்..

என்னது..? எப்படி..? இது கரெக்ட்டா வருமா..? என்று யோசனையாக ஹர்ஷினி கேட்கவும், ஆமாடா மச்சி.. இது நல்லா இருக்குமா..? ரெண்டு பெரும் வேற வேற ஸ்டைல் ஆப் டான்ஸ்.. சரியா வருமா..? என்று குமாரும் கேட்டான்.

கண்டிப்பா இது நல்லா இருக்கும்.. என் மேல நம்பிக்கை வைங்க.. என்றவன், நீ உனக்கு ஓகேவான பாட்டு சொல்லு என்று ஹர்ஷினியிடம் கேட்கவும், சிறிது யோசித்தவள் அதில் இருக்கும் ஐஸ்வர்யா ராய், அனில் கபூர் நடித்த “தாளம்..” படத்தில் உள்ள “எங்கே என் புன்னைகை..” இந்தி வெர்ஷன் பாடலை சொல்லவும்,

மெச்சியவன், எனக்கும் அதுதான் ஓகேவா இருந்துச்சு.. என்ன பண்ற நீ.. இன்னைக்கு நைட்டே உன்னால முடிஞ்ச வரை இந்த பாட்டுக்கு ஸ்டெப்ஸ் யோசிச்சிட்டு வா, நாளையிலிருந்து பிராக்டிஸ் ஆரம்பிச்சுரலாம்.. என்று முடித்துவிடவும், எல்லாரும் இது சரிவருமா..? என்ற மனநிலையிலே சென்றனர்.. ஹர்ஷினி உட்பட..

ஆனால் மறுநாள் அந்த பாடலுக்கு ஹர்ஷினி ஒரு புறம் பரதநாட்டியம் ஆடினாள்.. என்றால் மறுபுறம் ஜெய் அதே பாடலுக்கு வெஸ்டர்ன் ஆடவும், எல்லாரும் மெய்மறந்து நின்றுவிட்டனர். பாடல் முடியவும் கைதட்டலால் ஸ்டேடியமே அதிர்ந்தது..

மச்சி சான்ஸே இல்ல.. நீ சொன்னப்ப நாங்க யாருமே நம்பல.. பட் நீ தான் கரெக்ட் மச்சி.. இந்த ஐடியா சேன்ஸல்ஸ்.. ப்ரின்சி சொன்ன கண்டிஷன்ஸும் இதுல அடங்கிருச்சி.. சூப்பர் சீனியர்.. ஹர்ஷி நீயும் கலக்கிட்ட.. என்று அனைவரும் சொல்லவும்,

சிரிப்புடன் ஏற்றுக்கொண்டவன், என்ன இவ ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறா..? என்று ஹர்ஷினியை பார்த்தால், அவள் ஓகே நான் கிளம்புறேன்.. நாளைக்கு பார்க்கலாம்.. என்று ஒன்றும் சொல்லமால், கிளம்பி சென்றுவிட்டாள்.

இரவு 10 மணி.. ஹர்ஷினியின் மொபைல் ஒலிக்கவும், யாரு என்று பார்த்தவள், ஜெயின் நம்பர் வரவும், ஆச்சரியமே.. இருவர் நம்பரும் இருவருக்குமே தெரியும் என்றாலும் இதுவரை இருவருமே போனில் பேசிக்கொண்டதில்ல.. அதோடு காலேஜிலும் மொபைல் அல்லோவ் கிடையாது..

என்ன.. இந்த நேரத்துக்கு கால் பன்றாரு..? அதிசயமா இருக்கு.. என்னவா இருக்கும்..? என்று கொஞ்சம் இனிமை கலந்த படபடப்புடன் அட்டென்ட் செய்தவள்,

ஹா.. ஹலோ.. எனவும், ஏன் என் நம்பர் தெரியாதா உனக்கு..? என்று சுள்ளென பேசினான் ஜெய்.. ஏன் இப்படி பேசுறாரு..?

தெரியும்.. சொல்லுங்க..

ஏன் எதுவும் சொல்லாம கிளம்பிட்ட..?

என்ன சொல்லணும்..? புரியாமல் கேட்கவும்,

வேண்டாம் ஹர்ஷினி.. என்னை இன்னும் கோவப்படுத்தாதா..?

என்ன ஆச்சு..? ஏன் கோவப்படுறீங்க..? என்று குழப்பமாக கேட்க,

என்ன ஆச்சா..? ஏய்.. என்னடி தெரியாத மாதிரியே கேக்குற.. நேர்ல வந்தேன் தொலைஞ்சே பாத்துக்கோ..

ஏன் இவ்வளவு கோவப்படுறாரு..? என்ன கேக்குறாருன்னு வேற புரியலையே..? ப்ளீஸ்.. கோவப்படமா நீங்களே சொல்லுங்க..?

டான்ஸ் பிராக்டிஸ் பத்தி கேக்குறேன்.. எப்படி இருந்துச்சு..? என்று பொறியவும்,

ஸ்ஸ் சாரி.. சாரி சூப்பரா இருந்துச்சி.. நான் ஆடும்போதும் உங்களை பாத்தேன்.. செமயா ஆடுனீங்க.. இந்த ஐடியா ஒர்கவுட் ஆகும், என்று சந்தோஷமாக சொன்னாள்..

லைனிலே கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தவன், சாரி.. அதிகமா கோவப்பட்டுட்டேன்.. என் ஐடியாவை பத்தி நீ ஒன்னும் சொல்லாம போகவும் உனக்கு பிடிக்கலையோன்னு டென்ஸனாயிட்டேன்.. என்றவன்,

என்ன பிரச்சனை ஹர்ஷ்..? என்று கொஞ்சம் அமைதியான குரலில் கேட்கவும், அதிர்ந்தவள்.. அது ஒன்னும்.. ஒன்னும் இல்லை... என்று திணறவும்,

என்கிட்ட சொல்ல கூடாததா..? என்று ஆறுதலாகாவே கேட்டான்.

அப்படி எல்லாம் இல்ல..? என்று சிறிது நேரம் அமைதியாக இருந்தவள், அத்தை.. கொஞ்சம் பிரச்சனை.. என்று கலங்கிய குரலில் சொன்னவளின் துயரத்தை புரிந்து கொண்டவன்..

ஹர்ஷ்.. வருத்தப்படாதே.. எந்த பிரச்சனையா இருந்தாலும்.. எல்லாம் சரியாகிரும்.. கவலை படாதே..

ம்ம் எனக்கும் அந்த வேண்டுதல் தான்.. எல்லாம் நல்லபடியா நடக்கணும்.. அத்தை.. இதுவரை நிறைய கஷ்டப்பட்டுட்டாங்க.. இனியாவது அவங்க சந்தோஷமா இருக்கணும்..

கண்டிப்பா.. சந்தோஷமா இருப்பாங்க.. நீ வருத்தப்படாதே.. சரியா..?

ம்ம் சரி.. என்று வைத்து விட்டவளின் கவலை முழுவதும் சுபத்ராவை பற்றியதே..

நேற்று இரவு சென்னையில் இருந்து திடீரென டென்ஷனாக வந்த சுபத்ரா.. நேராக ஆச்சார்யாவிடம் சென்று அவரின் ரூமில் தனியாக பேசினார்.. சிறிது நேரத்திலே இருவரும் வாக்குவாதம் செய்யும் சத்தம் கேட்டது..

பின்னர் அமைதியாக நீண்ட நேரம் உள்ளே பேசிவிட்டு, வெளியே வந்த இருவரின் முகங்களும் சொல்லும் படி இல்லை.. ஏதோ பிரச்சனை என்ற வரை தெரிந்தது..ஆனால் என்ன..? என்பது தெரியாமலே வீட்டில் உள்ள அனைவரும் கவலையோடு இருந்தனர்.. யாரிடமிமும் எதுவும் சொல்லாமல் சுபத்ராவும் மறுநாளே சென்னை கிளம்பிவிட்டார்..

ஒரு வாரமாகியும் என்ன பிரச்சனை..? என்றே யாருக்கும் தெரியவில்லை, இந்திரன், சந்திரன் உட்பட.. ஆச்சார்யா மிகவும் அமைதியாகவே.. எந்நேரமும் ஏதோ யோசனையுடனே இருந்தார்.

ஹர்ஷினிக்கும் கவலை இருந்தாலும், டான்ஸ் பிராக்டிஸில் எந்த தடங்கலும் இல்லாமல் பார்த்து கொண்டாள். ஜெயும் அவளின் நிலை புரிந்து எதுவும் சீண்டவில்லை.. உடை முதல் அனைத்தையும் அவனே பார்த்துக்கொண்டான்..

தாத்தா.. இன்னிக்கு தான் பங்க்ஷன்.. நான் டான்ஸ் ஆடுறேன்னு சொன்னேனே.. பாக்க நீங்களும் வரீங்களா..? ப்ளீஸ்.. அவரின் மனநிலைக்கு கொஞ்சம் மாறுதலாக இருக்கட்டும் என்று ஹர்ஷினி கெஞ்சலாக அழைக்கவும், ஆச்சார்யாவும் அவரின் செல்ல பேத்தி விருப்பத்தை ஏற்று பங்க்ஷணக்கு சென்றார்..

ஆனால் அவர்களுக்கு தெரியவில்லை.. அந்த ஒரு நாள் தான் அவர்களின் வாழ்க்கையிலே என்றும் மறக்கமுடியா கருப்பு நாள், எல்லோரின் வாழ்க்கையும் திசை மாறப்போகும் நாள்..! என்று, இனி என்ன..?


..........................................................................

ஹாய் மக்களே

அடுத்த பதிவோடு வந்துட்டேன்.. படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க ப்ரண்டஸ்.. thank you
 

vijayasanthi

New Member
போச்சா.....கொஞ்சம் ஹேப்பியா போய்டே இருக்கும்போது எதாது வந்திடும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top