என்னுள் சங்கீதமாய் நீ 17

Advertisement

Nithi Kanna

Well-Known Member
என்னுள் சங்கீதமாய் நீ 17


ஜெயின் கோவமும், அவனின் உணர்வுகளும் ஹர்ஷினிக்கு புரியாமல் இல்லை.. ஏன் ஹர்ஷினிக்குமே ஜெய் ராஜீவின் கையை உடைத்ததை பற்றி கேள்விப்பட்டவுடன் முதலில் தோன்றியது பெருமையும், கர்வமே..

ஒரு விதத்தில் அவன் செய்தது சரியும் கூட.. அதை மறுப்பதற்கே இல்ல என்றாலும்… அவளின் எண்ணமெல்லாம் ஜெய் இதிலிருந்து தள்ளியே இருக்க வேண்டும் என்பதே.. ராஜீவ் பிரச்னையில் ஜெய் தலையிட்டு, அவனுக்கு தேவையில்லாத கஷ்டங்கள் வருவானேன்.?

ஏனெனில்.., “என்குயரி நடந்த அன்றே ராஜீவின் அப்பாவும், ராஜீவும் அவன் தவறை மறைக்கத்தான் பார்த்தனார். கடைசி வரை அவர்கள்.. அவனின் தவறை உணரவும் இல்லை.. ஏற்று கொள்ளவும் இல்ல..”

தாத்தா தன் “பவரை..” உபயோகப்படுத்தி, எல்லா வழியையும் அடைத்து விட்டதால், வேறு வழி இல்லாமல் தான் அவர்கள் பனிஷ்மெண்ட்டை ஏற்று வெளியேறினர்..

அவ்வளவு ஏன்..? என்குயரி முடிந்து வெளியே செல்லும் போதும்.. ராஜீவ் அடங்காமல் என்னை குரூரமாக முறைத்து விட்டு தான் சென்றான்.

நான் அவனை அடித்ததை அவன் கண்டிப்பாக விட போவதில்லை, மறக்கவும் போவதில்லை.. இதில் இவர் வேறு அவனை விடாமல் தேடி பிடித்து அவன் கையை உடைத்து விட்டு வந்திருக்கிறார்..

அன்று அவனின் கோவமே எனக்கும்.. ஜெயிக்கும்.. என்ன..? என்பதே.. இப்பொழுது இவர் வேறு அவன் கையை உடைத்து, அவனிடம் எங்கள் காதலை உறுதி படுத்தி விட்டு வந்திருக்கிறார்..

அவனுக்கு தெரிவதால் எனக்கு எந்த விதமான பிரச்னையும் இல்ல தான் என்றாலும்.. இப்பொழுது அவளின் கவலை எல்லாம் “ஜெய்க்கு அவர்களால் எதாவது தொந்தரவு வருமோ..?” என்பதே..

அதனாலே.. ஆதங்கப்பட்டு ஜெய்யிடம் கேட்டு விட்டவள், அவன் கோவத்தில் கத்தவும், இவர் புரிஞ்சுக்காம கோவப்பட்டு கத்துனா என்ன செய்ய நான்..? என்ற ஆற்றாமையில் மூக்கு விடைக்க நின்று இருந்தாள்..

இங்கு ஜெய்க்கோ மிகவும் ஏமாற்றமான மனநிலை.. மனதே ஆறவில்லை.. இந்த நாளுக்காக தானே அவன் இத்தனை மாசம் தவிப்புடன் காத்திருந்தது..

பார்த்த முதல் நாளிலிருந்தே ஹர்ஷினியை காதலிக்க ஆரம்பித்து விட்ட ஜெய், எப்பொழுது அவளும் தன்னை காதலிப்பாள் என்ற இத்தனை மாத தவிப்போடு இருந்தவனுக்கு,

அன்று கேன்டீனில் ஹர்ஷினி கண்ணில் தனக்கான காதலை பாத்த பொழுது... அவனின் இதயம் ஒரு நிமிடம் நின்றே துடித்தது

அன்று அவன் கொண்ட சந்தோஷத்தை சொல்ல.. இந்த உலகத்துல வார்த்தைகளே இல்ல எனலாம்.. அவன்.. அவனாகவே இல்ல.. அப்படியே மிதக்கும் உணர்வு தான்..

அப்படி இருந்தும்.. இந்த காலேஜ் மீட் முடியும் வரை அவளை எந்த விதத்திலும் தொந்தரவு செய்ய கூடாதென்று.. அன்றிலிருந்து.. இன்று வரை பேச கூட செய்யாமல் முயன்று தன்னை கட்டுப்படுத்தி கொண்டு இருந்தவன்..

இன்று ஹர்ஷினியிடம் தன் காதலை சொல்ல எண்ணற்ற கனவுடனும், எதிர்ப்பார்ப்போடும் வந்தவனிடம்.. அவள் ராஜீவை பற்றி பேசவும், அதுவும் அவன் கையை ஏன் உடைஞ்சீங்க..? என்று கேட்கவும் கோவம், ஏமாற்றமே அவனுக்கு..

நான் காதலை சொல்ல வரும் போது தான்.. இவ அந்த ராஜீவை பத்தி பேசணுமா..? என்ற ஏமாற்றத்துடன் ஜெயும்,

நான் அவரருக்காக தானே யோசிக்கிறேன்.. அதை புரிஞ்சிக்காம கோவப்படுறாரே என்ற ஆற்றாமையுடன் ஹர்ஷினியும்,
எதுவும் பேச தோன்றாமல் அமைதியாக நிற்கும் பொழுது,

“அம்மிணி..” என்று ஹர்ஷினியின் டிரைவர் கொஞ்சம் தூரத்தில் இருந்து கூப்பிடவும், திரும்பி பார்த்த ஹர்ஷினி "5 நிமிஷம் அங்கிள்.." என்றாள்.

இல்லை அம்மிணி.. இன்னும் ஏன் வரலன்னு "பெரியவர்.." போன் பண்ணிட்டார்.. என்று தயக்கமாக இழுக்கவும்,

ஓஹ்.. சரி நான் வந்துறேன், நீங்க போய் கார் ஸ்டார்ட் பண்ணுங்க என்றவள், அவர் செல்லவும், திரும்பி ஜெயயை பார்த்து, நான் கிளம்புறேன் எனவும், இப்பொழுது இருக்கும் மனநிலையில் எதுவும் பேசமுடியாது என்ற புரிந்து கொண்ட ஜெய், ஓகே நீ கிளம்பு என்று விட்டான்.

திரும்பி நடக்க ஆரம்பித்து விட்ட ஹர்ஷினிக்கு, அப்பொழுதுதான் உறைத்தது ஜெய் முதலில் மிகவும் உற்சாகமாக ஏதோ சொல்லிக்கொன்டே வந்தான் என்று, உடனே திரும்பி ஜெயிடமே வந்தவள்,

கொஞ்சம் தயங்கி கொன்டே என்கிட்ட எதாவது சொல்லனுமா..? என்று கேட்கவும், என்னவென்று சொல்ல முடியா ஒரு முகபாவத்துடன் நின்ற ஜெய் எதுவும் இல்லை.. என்பது போல் தலையாட்ட செய்தான்.

இல்லை நான்.. நீங்க.. ஏதோ.. என்னவென்று எப்படி கேட்க..? என்று தடதடக்கும் இதயத்துடன் ஒரு ஊகத்துடனும், கொஞ்சம் எதிர்பார்ப்போடும் நின்ற ஹர்ஷினியை புரிந்து கொண்ட ஜெய்,

ம்ம்.. நான் சொல்ல வந்தேன்னு தான்.. ஆனா..? என்று முடிக்காமல் நிறுத்தியவன், இப்போ வேண்டாம்.. எனவும்,

ஏன்..? என்ற கேள்வியுடன் அவனை பார்த்த ஹர்ஷினிக்கு, அவனின் ஷர்ட் பாக்கட்டில் துருத்தி கொண்டு நின்ற கிப்ட் ரேப்பை பார்த்து விட்டு, அவனை கேள்வியாக பார்க்கவும்,

அதுவரை இருந்த முக இறுக்கம் மறைந்து மெலிதாக சிரித்த ஜெய், தன் பாக்கட்டை தட்டி கொன்டே, "இந்த கிப்ட் உனக்கு தான் வாங்கினேன்.. அதுவும் ரொம்ப தேடி பிடிச்சு வாங்கினேன்.." என்று சொல்லி நிறுத்தவும்,

என்னவாக இருக்கும்..? என்ற எதிர்பார்ப்போடு கிப்டை பார்த்தவள், தருவாரா..? என்று அவனை பார்க்கவும்,

அவளின் எதிர்பார்ப்பை கண்ட ஜெய்க்கு, ஒரு புறம் சந்தோஷம் உண்டானாலும், கொடுக்க தோன்றவில்லை.. அந்த கிப்டை எப்படி எல்லாம் கொடுக்க வேண்டும் என்ற கனவுடனே வாங்கியவனுக்கு, அதை செய்ய முடியாத ஏமாற்றம் உண்டாக, அடங்கியிருந்த கோவம் மறுபடியும் வந்தது.

எதிர்பார்க்காதே..! இந்த கிப்டை உனக்கு தரமாட்டேன்.. என்று உறுதியாக சொல்லவும்,

ஏன்..? ஏன் தரமாட்டீங்க..? என்று கொஞ்சம் உரிமையுடன் கேட்கவும்,

அவளின் உரிமை புரிந்தாலும், வீம்பாக நின்ற ஜெய்.. தரமாட்டேன்.. அவ்வளவுதான்.. காரணம் எல்லாம் சொல்ல முடியாது.. இப்போ நீ கிளம்பு.. எனவும்,

போகாமல்.. கண்களை சுருக்கி அவனை பார்த்த படியே நின்ற ஹர்ஷினி, எனக்கு தானே வாங்குனீங்க..? அப்பறம் ஏன் தரமாட்டீங்க..? என்று உர்ரென்று முகத்தை வைத்து கொண்டு கேட்கவும்,

ஏன் தரணும் உனக்கு..? நான் எவ்வளவு கனவோடு உன்கிட்ட சொல்ல வந்தா.. நீ அந்த ராஸ்களை பத்தி பேசி என்னை டென்ஷன் பண்ணிட்டு.. இப்போ ஏன் தரமாட்டேங்கன்னு குதிக்கிற.. என்று கோவத்தில் முறுக்கி கொள்ளவும்,

என்ன சொல்ல வந்தீங்க..? என்று பயம் கலந்த படபடபடக்கும் இதயத்தோடு கேட்டாள் ஹர்ஷினி.

அதெல்லாம் இனிமேல் சொல்ல முடியாது.. மறுபடியும் கேட்டு என்னை கோவப்படுத்தாம கிளம்புடி.. என்று அதட்டவும்,

இப்போ மட்டும் கோவப்படாமலா பேசுறாரு.. என்று மனதுக்குள் முணுமுணுத்த ஹர்ஷினி, போகாமல் நிற்கவும்,

நீ எவ்வளவு நேரம் நின்னாலும் கண்டிப்பா நான் சொல்ல போறதும் இல்ல.. கிப்டை கொடுக்க போறதும் இல்ல.. என்று உறுதியாக சொன்னவன், இப்போ கிளம்பு.. அவர் எவ்வளவு நேரம் வெய்ட் பன்றாரு என்று ட்ரைவரை கை காட்டி கண்டிப்புடன் சொல்லவும்,

நேரம் ஆவதை உணர்ந்து கொண்டு, எதுவும் பேச முடியாமல் மனதுக்குள் அவனை திட்டிக்கொண்டே சென்றாள் ஹர்ஷினி,

என்னை திட்டாம சீக்கிரம் போடி.. என்று அதட்டவும், திரும்பி அவனை பார்த்து உதட்டை சுளித்துவிட்டு கிளம்பிவிட்ட ஹர்ஷினி, அதற்கு பிறகு எப்போது ஜெயயை பார்த்தாலும், ஒரு வித எதிர்பார்ப்போடு பார்ப்பவள்.. அவன் அமைதியில் முறைத்து விட்டு தான் செல்வாள்..

அதனை ஒரு நாள் கவனித்து விட்ட குமார்.. என்னடா மச்சி.. அந்த தில்லானா அம்மிணி உன்னை முறைக்குது.. என்று சந்தேகமாக கேட்கவும், இல்லையே.. நல்லா பாரு மச்சி.. அவ உன்னைத்தான் முறைக்கிறா..? என்று சீரியசான குரலில் சொல்லவும்,

என்னையா முறைக்கிறா..? நான் என்னடா பண்ணேன் என்று கொஞ்சம் பதட்டத்துடன் கேட்டான். அவனின் பதட்டத்தில் மனதுக்குள் சிரித்து கொண்ட ஜெய்,

டேய் மறந்துட்டியா.. நீ அவளை ராக் பண்ணி பிரியாணி வாங்கி கொடுக்க சொல்லி சாப்பிட்டியே என்று சொல்லவும், ஆமாடா.. ஆனா நீங்களும்தானே ராக் பண்ணீங்க.. என்னை மட்டும் ஏன்டா அந்த அம்மிணி முறைக்குது..

ஒரு வேளை அவளுக்கு உன் முகம் மட்டும் தான் ஞாபகம் இருக்கும் போல.. என்று குறுஞ்சிரிப்புடன் சொன்ன ஜெய், ஆனா சூப்பர் கெத்து மச்சி நீ.. அவளுக்கே கான்டீன்ல அக்கவுண்ட் ஓபன் பண்ண வச்ச பாரு.. அங்க நிக்கிற மச்சி நீ என்று நக்கலாக சொல்லவும்,

ஆமாமில்லை.. என்று கெத்தாக ஷர்ட் காலரை தூக்கும் போது, மச்சி அவசப்பட்டு காலரை தூக்கிடாத.. என்று அவசரமாக ஜெய் சொல்லவும்,

ஏன் மச்சி..?

அதுவா எனக்கு என்ன பயமென்னா.. அவளை ராக் பண்ணதை பத்தி அவ எப்போ உன்னை ப்ரின்சிகிட்ட போட்டு கொடுப்பான்னு தான்..

டேய் டேய் மெதுவா பேசுடா.. அந்த அம்மிணி காதுல விழுந்துற போது.. என்று அலறிய குமார்.. ஆனா அந்த அம்மிணி அப்படி பண்ணனும்ன்னு எனக்கு தோணலைடா.. நாமும் இத்தனை மாசமா பாக்குறோம்.. நல்ல பொண்ணு தாண்டா.. எனவும்,

ஜெயின் மனதுக்குள் பனிமழை தான்.. இருந்தாலும் நீ எதுக்கும் உஷாரா இருந்துக்கோ மச்சி என்று குமாரை கலவர படுத்தவும், அவன் எப்பொழுது ஹர்ஷினியை பார்த்தாலும் பார்க்காதது போல் விலகி ஓடவே செய்தான் எனலாம்.

இந்த மாசம் நம்ம டிபார்ட்மெண்ட் பங்க்ஷன் வருது.. ஹர்ஷினி இந்த டைமாவது நீ நம்ம சீனியர் ஜெய் சாரோட சேர்ந்து டான்ஸ் ஆடணும் என்று ஜோதி சொல்லவும்,

ஆமா ஹர்ஷினி, அவர் பைனல் இயர் வேற.. இந்த மாசம் செமஸ்டர் எக்ஸாம் முடியவும், ப்ராஜெக்ட் அப்பறம் பைனல் எக்ஸாம் தான்.. அதானல இப்போ தான் அவர் கூட சேர்ந்து ஆடினாதான் ஆடுன மாதிரி.. என்று ரோஹனும் சொன்னான்.

ஆமாப்பா.. இன்டெர் காலேஜ் மீட்டிலே நீங்க ஆடுவீங்கன்னு நம்ம டிபார்ட்மெண்ட்ல எல்லாரும் எதிர்பார்த்தோம்.. சீனியர்ஸ் கூட ஜெய் சார்கிட்ட பேசினங்காலம்.. ஆனா அவர்தான் இன்னொரு டைம் பாத்துக்கலாம்ன்னு சொல்லிட்டார் போல..

இப்போ கேட்டா கண்டிப்பா ஒத்துப்பார்.. நீ என்ன சொல்ற ஹர்ஷி.. உனக்கு ஓகே தானே.. எனவும், சிறிது நேரம் யோசித்த ஹர்ஷினி, எனக்கு ஓகே தான்.. ஆனா அவர்.. என்று கேள்வியாக இழுக்கவும், அதை நாங்க பாத்துக்குறோம் என்றவர்கள் அன்றே மற்ற சீனியர்ஸ் மூலம் ஜெயிடமும் பேச சென்றுவிட்டனர் .

.........................................................................

ஹாய் ப்ரண்ட்ஸ்,

அடுத்த போஸ்ட் போட்டுட்டேன்.. படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க மக்களே.. thank you
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top