என்னருகில் நீ இருந்தால். 15

Advertisement

Ratheespriya

Well-Known Member
ஓம் நமச்சிவாய.


அத்தியாயம் பதின்நான்கிற்கு கருத்து மற்றும் விருப்பம் தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களிற்கும் நன்றி டியர்ஸ் அதே போன்று இந்த அத்தியாயதிற்கும் கருத்து தெரிவித்து என்னை ஊக்கப்படுத்துங்கள். அன்பர்களே..




என்னருகில் நீ இருந்தால். 15



:):):):)
 
Last edited by a moderator:

banumathi jayaraman

Well-Known Member
ஓம் நமச்சிவாய.


அத்தியாயம் பதின்நான்கிற்கு கருத்து மற்றும் விருப்பம் தெரிவித்த அனைத்து அன்பு உள்ளங்களிற்கும் நன்றி டியர்ஸ் அதே போன்று இந்த அத்தியாயதிற்கும் கருத்து தெரிவித்து என்னை ஊக்கப்படுத்துங்கள். அன்பர்களே..




என்னருகில் நீ இருந்தால்.


அத்தியாயம் 15


சென்னையில் ஷிட்டி ஹாஸ்பிடல்.



வடிவழகியை ஹாஸ்பிடலில் சேர்த்துவிட்டு மகேஷ் ராஜேஷ் இருவரும் வெளியில் காத்திருந்தனர்.


மண்டபத்தில் அவளை தேடி அலைந்து ஒருவழியாக அவர்களுகென்று ஒதுக்கியிருந்த அறையில் கட்டிலின் கீழ் தலையில் அடிபட்டு விழுந்து கிடந்தாள் வடிவு அவளை தேடி வந்த மகேஷ் அவளது நிலையை பார்த்து பதைபதைத்து விட்டான்.


உடனடியாக ராஜேஷிற்கு கைபேசியில் அழைத்து விபரத்தை சொல்லி அறைக்கு வரச்சொன்னான் மகேஷ்.


ராஜேஷ் வந்து பார்த்தவன் காயம் சற்று ஆழமாக இருந்ததால் ரெத்தம் சிறு துளியாக வந்தபடியே இருந்தது. உடனடியாக மண்டபத்தின் சமையல்அறைக்கு சென்று காப்பி பொடி எடுத்து வந்து காயத்தில் வைத்து கட்டுபோட்டு வந்த ரெத்தத்தை நிறுத்திவிட்டான்." டேய் மச்சான் இப்புடி காப்பி பொடி வச்சு கட்டினா பிளட் வராம நின்றுவிடும். நாங்க ஆசிரமத்துல இப்புடிதான் செய்வோம் வா சிஸ்டர தூக்கு ஹாஸ்பிடல் கொண்டுபோவோம்." என்று மகேஷை துரிதப்படுத்தி இதோ வடிவை ஹாஸ்ப்பிடலில் சேர்த்துவிட்டு டாக்டரின் பதிலுக்காக காத்திருக்கின்றனர்..



இரண்டு மாததிற்கு முன்.



நடுசாமத்தில் வீட்டின் கதவை தட்டி மாமனார் மாமியார் பிபி யை எகிரவைத்து. பின்பு வடிவுடன் ஒரு கலாட்டா போட்டு பின்பு வடிவை அணைத்து உறங்கிவிட்டான். கலெக்டர்.


காலை வெகு நேரமாகியும் இருவரும் எழுந்து வெளியே வரவில்லை. மகேஷின் வரவை தெரிந்து பெரியாத்தா இவர்களை பார்க்கவந்துவிட்டார். அனால் இவர்கள் இருவரும் இன்னும் எழுந்தபாடில்லை. வாணி பெரியாத்தாவை கவனித்துவிட்டு அவருடன் அமர்ந்து வடிவின் அறையில் ஒரு கண்ணும்.அவருடன் பேசிக்கொண்டும் தான் எவ்வாறு அவர்களது அறையை தட்டி எழுப்புவது என்று தவிப்புடன் இரருந்தார் வாணி.


அவரது தவிப்பை பார்த்து பெரியாத்தா தனது கைபேசியில் மகேஷின் நம்பர் போட்டு அழைத்தார்.


இரண்டாவது அழைப்பு சத்ததில் தான் முதலில் வடிவு கண்முழித்தாள்.. முழித்ததும் நேரம் பார்த்து அதிர்ந்துவிட்டாள். தற்போது நேரம் காலை பதின்ஒன்று." ஐயோ இம்புட்டு நேரமாவா தூங்கினோம். அம்மா வையப்போதே." என்று அடித்துபிடித்து எழுந்து குளியல்அறை சென்று குளித்து வந்து மகேஷை எழுப்பினாள்.


மருமகனது வசதி மற்றும் பதவியை கொண்டு அவர் வசதியாக வளர்ந்தவர் என்று திருமணம் முடிந்து அவர்கள் சென்றதும் உடனடியாக அவர்களது வீட்டின் மேல் தளத்தில் சகல வாசதிகளுடன் பெரிய அறை ஒன்றை அவர்களது தனிப்பட்ட பாவனைக்கு கட்டி அதற்குறிய பொருட்கள் என அனைத்தையும் வாங்கி வைத்துவிட்டார் ராஜதுரை..


அந்த புதிய அறையில்தான் தற்போது படுத்து வடிவுடன் வம்புசெய்து கொண்டிருக்கின்றான்.


" நீ சரியான கள்ளிடி அம்மு நீ எழும்பினதும் என்ன எழுப்பாம தெளிவா பிளான் பண்ணி நீ எழுந்து குளிச்சிட்டுவந்து என்னை எழுப்புற?? ம் இருக்கு இப்ப நேரம் ஆகிட்டுனு விடுறேன் இதுக்கெல்லாம் சேர்த்து இரவைக்கு இருக்கு கச்சேரி உனக்கு அப்போ எப்புடி தப்பிக்கிறனு நானும் பார்க்குறேன்டி. " என்று வடிவை கதிகலங்க வைத்துவிட்டு மகேஷ் குளிக்கச்சென்றான்.


அதன்பின்பு இருவரும் சேர்ந்து ஒருவழியாக கீழே வந்தனர். மருமகன் வருவதை பார்த வாணி உடனடியாக எழுந்து காப்பி கழந்துவந்து மகளின் கையில் கொடுத்தார்" இந்தாம்மா வடிவு காப்பி மாப்பிள்ளைகு குடு குடிக்கட்டும் குடுத்துட்டு இப்ப என்ன சாப்புடுவாறுனு கேளு" என்று வாணி சொல்லவும் தாய் தன்னை தாமதமாக எழும்பியதற்கு திட்டாமல் பாசமாக நடத்தவும் அந்த குசியில் வடிவு குதுகலமாக இருந்தாள்.


" அத்த நேரடியா நீங்க என்னிடமே உரிமையா எதுனாலும் கேளுங்க பேசுங்க மருமகனு நினைத்து ஒதுங்காம முத்த மகனா பாருங்க அப்போ தள்ளிநிக்கமாட்டிங்க." என்று மாமியாரை அம்மாவாக தான் நினைப்பதை சொல்லிவிட்டு அவனது பாட்டிமாவிடம் பேச சென்று விட்டான் மகேஷ்.



வடிவு வந்திருபதை தெரிந்ததும் பார்பதற்கு பொன்னி வந்துவிட்டாள். அதன்பின்பு நண்பிகள் இருவரும் நீண்ட வருடப்பிரிவை சரிபண்ணுவது போன்ற பில்டப்கொடுத்து இந்த பத்துநாளில் நடந்தவற்றை கூறிக்கொண்டுருந்தாள் வடிவு


மருமகன் தன்னிடம் இவ்வாறு கூறியதும் வாணி சந்தோசமாக மாப்பிள்ளைக்கு மதிய விருந்தை தயார் செய்தார்.



அனைவரும் மதிய விருந்தை முடித்து ஓய்வு எடுத்து மாலைநேரம் பெரியாத்தா வீட்டிற்கு சென்றனர். அங்கும் சந்தோசமாக இருந்துவிட்டு. மிகுதி இருந்த இரண்டு நாளும் வடிவுடன் வம்பிலுத்து அவளை மடக்கி கூடலுடன் கூடிய இரவாக கழித்து. பின்பு பொன்னி வடிவின் தங்கைகள் ராசுகுட்டி என அனைவரையும் அலைத்து மதுரையில் பேமசான இடங்களை அவர்களுக்கு சுத்திக்காட்டி அவர்களை மகிழ்வித்து. தனது ஹனிமூன் விடுமுறையை சிறப்பாக முடித்துக்கொண்டு அடுத்தநாள் மாலை வடிவின் விருப்பப்படி காரில் சென்னை அழைத்துவந்தான் அவளது பனைமரம்..


சென்னை வந்ததும் மகேஷ் ஆபிஸ் வீடு புகழுடன் கேஸ் விஷயமாக அழைந்து என அவனது நாட்கள் நகர்ந்தது.


வடிவு புதிதாக கட்டிய சமையல் அறையில் தனது கைவரிசையை காட்டி விதம்விதமாக சமையல் செய்து வீட்டை அலங்காரம் செய்து என்று மகேஷின் மனதில் அனைத்து விதத்திலும் ஆழமாக நங்கூரம் இட்டு அமர்ந்துவிட்டாள். அவனது பஞ்சுமிட்டாய்..


அன்று ஒரு நாள் வீட்டின் வாட்ச்மேன் அவரது கைபேசியில் இருந்து வடிவிற்கு அழைத்தார் " அலோ சொல்லுங்க ராமு அண்ணே என்ன??" என்று வடிவு கேட்கவும். "அவரோ வீட்டு ஆட்கள் தரவு எடுக்க வந்துருக்காங்கலாம் வடிவுமா உள்ள அனுப்பவா?? "


"இருங்க நான் அங்க வாறேன்" என்று அவளே கேட்டிற்கு வந்தாள் வடிவு.


"யாரு நீங்க?. என்ன பதிவு எடுக்கனும்" என்று வடிவு கேட்கவும்.


"சிஸ்டர் நாங்க ஆட்பதிவு ஆபிஸ்ல இருந்து வாரோம் நீங்க சென்னைக்கு புதிதா வந்துருக்குறீங்க தானே அதுதான் உங்கள பற்றிய விபரம் எடுத்து அது உண்மையானது என்று நீங்க கையெழுத்து போட்டு தரனும் இந்த பார்ம்ல" என்று ஒருவன் கேட்கவும்.


"ஓ அப்புடியா இருங்க இதோ வாறேன்." என்று வீட்டின் உள்ளே சென்றவள் கையில் அவளது கை பேசியை எடுத்துவந்தாள்.



எடுத்துவந்தவள் அவளது பனைமரத்தை அழைத்தாள். மகேஷ் வேலை விசயமாக பிஸியாக இருந்தான். அழைப்பை எடுக்கவில்லை. மீண்டும் ஒரு முறை அழைத்தாள். இம்முறை அழைப்பை எடுத்தவன்." ஹலோ சொல்லு அம்மு கொஞ்சம் வேலையா இருக்குறேன் என்னனு சொல்லுடா என்று மகேஷ் கேட்கவும்.


அலோ கலெக்டர் சாருங்கலா??நீங்க நான் வடிவழகி பேசுறேன். அது எப்புடி உங்க ஆபிசர்க்கு நான் வேற ஊர்ல இருந்து வந்துருக்கேன்னு தெரியும் புதுசா யாராவது உங்க மெட்ராஸ்க்கு வந்தா இப்புடிதானா பதிவு எடுக்க வருவாங்க??.. ஏன் வீட்டுகாரரும் கலெக்டர் தான் அப்போ என்னோட ஆதார்காட் பதிவு எல்லாம் கலெக்டர் ஆபிஸ்ல இருக்கும்தானே இனிமே இந்த பதிவு எடுக்க படம் எடுக்கனு யாரும் வீட்டுபக்கம் வரக்கூடாது கலெக்டர் சார் வேண்டியத நீங்களே வந்து எடுத்துகோங்க என்ன புரிஞ்சுதா?? சரி சரி என் புருசனுக்கு நான் சமைச்சு சாப்பாடு அனுப்பனும் நீங்க வைங்க கலெக்டர் சார் வெட்டியா பேசாம. என்று வடிவு மகேஷை காச்சி எடுத்துவிட்டாள்.


அதன்பின்பு "இங்க பாருங்க கிராமத்துகாரின்னா மக்கு மடச்சி கிடையாது நீங்க வந்து கேட்டதும் நான் கையெழுத்து போட்டு தர புரிஞ்சுதா?? இந்த பெரிய வீட்டை என்ன நம்பிதான் என் புருசன் விட்டுட்டு போயிருக்காங்க என்ன ஏதுனு தெரியாம நீங்க வந்து கேட்டதும் கையெழுத்து வச்சி தந்துருவமா என்ன கலெக்டர் பொண்டாட்டி பத்தின விபரமெல்லாம் அவரே எடுத்துப்பாரு கலெக்டர் வீட்டுலயே கொள்ளையடிக்க வாறிங்களோ??. நீங்க ஒரு புல்லையும் புடுங்க வேணாம் அடுத்து புகழ் அண்ணாக்கு கால் போடுறதுக்கு முதல் நீங்களே போயிருங்க. அம்புட்டுதான் சொல்லுவேன். நான்" என்று வந்தவனையும் எச்சரித்துவிட்டு. வீட்டின் உள்ளே சென்று விட்டாள் வடிவு.



இவளுக்கு குசும்பு ஓவாராதான் போயிடுச்சு எனக்கே கால் போட்டு நீ என்ன பெரிய கலெக்டரான்ற ரேஞ்சுக்கு திட்டுறாளே இவளை என்னதான் பண்ணுறது என்று மகேஷ் தனக்குள் புலம்பிய படியே. உடனே அவனது மூளை விழித்துகொள்ள உடனடியாக தரவு தெரிவு பிரிவிற்கு அழைத்து யார் இன்றைக்கு தனது வீட்டிற்கு போனது என்று கேட்கவும் அவர்களோ" சார் நீங்க கலெக்டர் நாங்க எப்புடி சார் உங்க அனுமதி இல்லாமல் உங்க வீட்டிற்கு போவோம். நாங்க யாரும் உங்க வீட்டுக்கு போகலசார்." என்று சொல்லவும். மகேஷ் உடனடியாக புகழிற்கு அழைத்து விஷயத்தை சொல்லி என்னவென்று பார்கசொன்னான்.


அதனபின்பு புகழ் அவனை தேடி வந்தபோது அவன் அங்கு இல்லை அந்த தெரு சிசிடிவி கேமராவில் அவனது முகத்தை காப்பி பண்ணி எடுத்துவைத்துக்கொண்டான்..



அதன்பின்பு ஒருவழியாக புகழின் கல்யாணவேலையில் ஈடுபட்டனர். ஒரு அரச விடுமுறை நாளில் மகேஷ் வடிவு . புகழ் குடும்பம் அனைவரும் பவானி சாகர் சென்றனர்.


புகழிற்கு பெண் பார்க்கும் படலம் நடைபெற்றது. அதில் வடிவு புகழின் குடும்பத்தில் பெண்பிள்ளை இல்லாத குறையை தீர்த்துவைத்தாள் என்றே சொல்லவேண்டும். ஏனெனில் அவளது கலாட்டாவினால் அனைவரது மனதையும் கொள்ளை கொண்டுவிட்டாள் வடிவழகி.


அன்றே பூவைத்து உறுதி செய்து திருமணத்திற்கு முதல் நாள் இரவு வறவேற்ப்பும் நிச்சயமும் நடத்துவதாகவும் அடுத்தநாள் காலை 9.30ற்கு முகூர்த்தம் என்று முடிவெடுக்கப்பட்டது.




அன்றே மதியை வடிவு அக்காவாக தத்தெடுத்துக்கொண்டாள் மதியக்கா என்று அடிக்கொரு தரம் மதியை அழைத்து கதை பேசி அவளது திருமணம் நடைபெற்றது ஊரில் அவள் சுற்றும் இடம் என்று அனைத்தையும் சொல்லி தனிமையில் இருந்த மதியை தனது கலகலப்பான வட்டத்திற்குள் கொண்டுவந்தாள். வடிவு



மதியை பற்றி அனைத்தையும் புகழ் வடிவிடம் கூறி இருந்தான். அதனால் அதிகமாக மதியை அனைத்திலும் முன்நிறுத்தி மதியை அனைத்திலும் பங்கெடுக்கவைத்தாள் வடிவு.



மதியை கண் விலகாமல் பார்த்திருந்தான் புகழ் அவனது ஆராச்சியின் முடிவு முன்பு இருந்ததை விட சற்று உடல் பூசியது போன்றும் பளிச்சென்றும் ஓவியபாவை போன்று இருந்தாள். மதி.


கடைக்கண்ணால் புகழை பார்த்து மனதில் அவனது ஆளுமையான தோற்றத்தை ஆழமாக பதித்துக்கொண்டாள். மதி


அப்போது பூவைத்தவுடன். புகழ் அண்ணா நீங்க மதி அண்ணியோட தனியாக பேசுவதுன்னா போய் பேசுங்க என்று வடிவு சொல்லவும் அதை ஆமோதித்தார். புகழின் அப்பா கண்ணன்.


பின்பு மதியின் அறையில் மதி இருக்கும் போது உள்ளே சென்றான் புகழ். சென்றவன் மதியின் கையை பற்றி உள்ளங்கையில் அவனது முதலாவது முத்த அச்சாரம் இட்டான் உரிமையுடன் அதை பெற்ற பெண்ணவள் கூசி சிலிர்த்தாள் அவனது மௌனராகம்.


"நீ என்னை நம்பி திருமணத்திற்கு சம்மதம் சொல்லிவிட்டாய் வதனி அந்த நம்பிக்கையை நான் காப்பாத்தனும் நான் நினைத்தது எதுவோ இப்போது நடப்பது அதற்கு நேர் எதிர் எனது குடும்ப வாழ்வில் நான் செய்யும் வேலை இடையூறாக இருக்க கூடாதுனு நினைத்தேன். ஆனால் அது இயலவில்லை திருமணம் முடித்ததும் நீ காத்திருக்க வேண்டும் வதனி நான் எடுத்துருக்கும் கேஸ் எனக்கு மிகவும் சவ்வாலானது. அதை நீ புரிந்துகொள்ளவேணும் வதனி."


"வேறு நினைவை நினைத்து மனதை வருத்தாமல் என்னை தாங்கிக்கொள்ளும் சக்தியை பெறுவதற்கு இன்னும் அதிகமான சத்தான உணவை சாப்புட்டு திருமண கனவில் நாட்களை கடத்து வதனி நான் போய்டு வாறேன்." என்று புகழ் கூறிக்கொண்டே அவளை அணைத்து நெற்றி முத்தம் வைத்து அறையின் வெளியே சென்றுவிட்டான் ஏசிபி புகழேந்தி.


அதன்பின்பு நாட்கள் அதன்போக்கில் சென்றது அவர்கள் நினைத்தது போன்றே அனைத்தும் நடந்து இதோ இன்று திருமணமும் இனிதாக முடிவடைந்துவிட்டது.


ஷிட்டி ஹாஸ்பிடல்


டாக்டர் ஹேமா வணக்கம் கலெக்டர் சார். போய் உங்க மனைவியை பார்த்துவிட்டு வாங்க என்று என்று டாக்டர் சொல்லிவிட்டு அவரது அறைக்கு சென்றுவிட்டார்.


அறையினுள் சென்ற மகேஷ் வாடிய ஒரே நாளில் கொடிபோன்று கிடந்த மனையாளைத்தான் அங்கு அவன் ஒரு மாவாட்ட கலெக்டர் என்பதை மறந்து ஒரு சிறுவன் முதலாவதாகா அவனிற்கு கிடைத்த பரிசை யாரோ பறித்த நிலையில் தவித்து நின்றான் கையின் ஊடாக றிப்ஸ் ஏறும் மனைவியை பார்த்துக்கொண்டு அவளது முகத்தை தடவியபடி நின்றான் மகேஷ் வர்மா.


அவனை அழைத்த ராஜேஷ் டாக்டர் ஹேமாவின் அறைக்கு அழைத்து சென்றான்.


அவரோ மகேஷின் வாடிய முகத்தை பார்த்து "என்ன கலெக்டர் சார் நான் ஒரு சந்தோசமான செய்தி சொல்லலாம்னு வரச்சொன்னா நீங்க கவலையாக வந்துருக்கீங்களே." என்று கூறி அவனை இயல்பு நிலைக்கு திருப்பினாள். நான் சொல்லுறத கேளுங்க உங்க மனைவி ஹன்ஷீவா இருக்குறாங்க அதிகமாக அலைந்து உடம்பை சோர்வடைய செய்துருக்காங்க அதனாலதான் இந்த மயக்கநிலை இது ஒருவகை ஆழ்ந்த நித்திரைதான் பயப்புடும் படி எதுவும் இல்ல இன்னும் வன்ஹவர்கல கண்முழிச்சிடுவாங்க. ஓகே எல்லாருக்கும் ஸ்வீட் கொடுத்து கொண்டாடுங்க அவங்க முழிச்சதும் இங்க அழைத்துவாங்க அவங்களிடாம் சில விசயங்கள் சொல்லனும் சத்து மாத்திரைகள் எடுக்கும் முறையை பற்றி சொல்லிகொடுக்கனும் " என்று கூறியதும் அறையை விட்டு வெளியே வந்த மகேஷ் தனது பாட்டிமாவிடமும் மாமனாரிடமும் விஷயத்தைகூறி அவர்களையும் மகிழ்வித்தான்.


உடனடியாக தனது மாமியாரை சென்னை அழைத்து வரும்படி மாமனாரிடம் பிளைட் டிக்கட் புக் பண்ணி அனுபுவதாக கூறிவிட்டு அந்த வேலையை ராஜேஷிடம் ஒப்படைத்தான்.


அப்போது அழுகை குரல் பலமாக ஒலித்தது. என்னவென்று எழுந்து சென்று பார்த்தவன் ஒரு பெண்ணின் உடலை கட்டி அவளது தாய் அழுதுகொண்டிருந்தாள்.


அவனும் அருகில் சென்று பார்த்தவன் அதிர்ந்து விழித்தான் கலெக்டர் மகேஷ் வர்மா..



தொடரும்...
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ப்ரியா ரதீஸ் டியர்

யக்கா வடிவழகி யக்கா நீங்க சூப்பர்க்கா
பரவாயில்லையே
ஏழாப்பு வரைதான் படிச்சிருந்தாலும் பார்ட்டி உஷார் பார்ட்டிதான்

யாரும்மா அது கலெக்டரே அதிரும் அளவுக்கு?
ஒருவேளை கலெக்டரின் தங்கச்சியோ?
சிவசங்கர் சொன்னபடி செஞ்சுட்டானா?
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
பின்ன உன்ன எழுப்பிட்டு குளிக்க போனா அவ குளிச்சா மாதிரிதான் கலெக்டர் சார். ஹாஹாஹா யார் கிட்ட வடிவா? கொக்கா? கையெழுத்தாடா கேக்குறீங்க? கையெழுத்து.
 
Last edited:

Gomathianand

Well-Known Member
அருமையான பதிவு டியர்
கதை நல்லா போகுது ,கலெக்டர் பொண்டாட்டியவே ஏமாற்றப் பார்த்தா விடுவாளா வடிவு:cool:
என்னப்பா எல்லாரும் இப்படி டிவிஸ்ட் வைக்க ஆரம்பித்தால் எங்கள் நிலைo_O
 

Srd. Rathi

Well-Known Member
வடிவு நல்ல விவரம் தான்.....
சூப்பரா பேசி கலெக்டர் பொண்டாட்டினு நிரூபிச்சிட்டா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top