என்னருகில் நீ இருந்தால். 14.

Advertisement

Ratheespriya

Well-Known Member
ஓம் நமச்சிவாய.


அத்தியாயம் பதின்மூன்றிற்கு கருத்து மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி ப்ரெண்ட்ஸ். இதே போன்று அத்தியாயம் பதின்நான்க்கிற்கும் உங்களது கருத்தை தெரிவித்து என்னை ஊக்கப்படுத்துங்கள். அன்பர்களே..



என்னருகில் நீ இருந்தால்.14


:):):):)
 
Last edited by a moderator:

banumathi jayaraman

Well-Known Member
ஓம் நமச்சிவாய.


அத்தியாயம் பதின்மூன்றிற்கு கருத்து மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி ப்ரெண்ட்ஸ். இதே போன்று அத்தியாயம் பதின்நான்க்கிற்கும் உங்களது கருத்தை தெரிவித்து என்னை ஊக்கப்படுத்துங்கள். அன்பர்களே..



என்னருகில் நீ இருந்தால்.


அத்தியாயம் 14


சென்னையில் நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் திருமணத்திற்கு பிடிக்கும் திருமண மண்டபம்.



மூகூர்த்ததிற்க்கு இன்னும் சற்று நேரமே இருக்க. ஏசிபி புகழின் முகத்தில் திருமணத்திற்க்கான மகிழ்ச்சி சற்றும் இல்லை.ஆனால் மனம் மிகவும் அசுவாசமாக அமைதியாக இருந்தது.


அவனின் அருகில் அழகுச்சிலை போன்று அவனது கையால் பொன்தாலியை பெற்றுக்கொள்வதற்க்கு பொறுமையாக காத்திருந்தாள் பதுமை.


மண்டபமே பரபரபுடன் காணப்பட்டது. ஏன் என்றால். தமது வடிவழகியை தேடி அழைகின்றான் மகேஷ் வர்மா அவள்தான் நாத்தனார் முடிச்சு போடவேண்டும் என்பது புகழின் விருப்பம். அதை அவளும் மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டாள். அதற்க்கு தாலி கட்டும் நேரம் நெருங்கிய படியால். அவளை மேடைக்கு அழைத்து செல்வதற்கு மகேஷ் தேடுகின்றான்

அவள் இன்னும் கிடைத்தபாடில்லை


ஐயர் தாலியை ஆசிர்வாதம் வாங்குவதற்கு கொடுத்தனுப்பினார்..மதி சிரத்தையுடன் மந்திரத்தை உச்சரித்துக்கொண்டிருந்தாள். ஆனால் புகழோ ஆள் இங்கிருந்தாலும் சிந்தனை அனைத்தும். மகேஷின் ஹனிமூன் போட்டோவில் பார்த்தவனது முகத்தை அவனது மூளையில் தான் அவனை எங்கே பார்த்தோம் என்று தேடியபடியே இருந்தது.


அதனால் ஐயர் மந்திரம் சொல்லியதை புகழ் சரியாக கவனிக்கவில்லை. இதை பார்த்த கார்த்திக் தனது அண்ணணிடம் சென்று." என்ன அண்ணா உன்னோட கவனம் இங்க இல்ல ஐயர் மந்திரம் சொல்லுறார் அதை நீ திரும்ப சொல்லனும். புரிஞ்சுதா?.. அம்மா உன்ன இப்புடி பார்த்தா கவலை படுவாங்க அவசரப்பட்டுடமோன்னு. நீ சிரிச்சமுகமா இருண்ணா" என்று தனது அண்ணண் புகழிற்க்கு அறிவுறுத்தி விட்டு சென்றான் தம்பியானவன்.


அதை கேட்ட மதியும் "போலீஸ் சார் நீங்க இப்புடி சோகமா போட்டோக்கு போஸ் குடுத்தா நாளைக்கு நம்ம புள்ளைங்க. என்னமா நீ அப்பாவ கடத்திட்டுவந்து கல்யாணம் பண்ணுணியானு கேப்பாங்க சிரிச்சமுகமா இருங்க. " என்று அவனை கலாய்த்து சிரித்தாள் அவனது மௌனராகம்.


அதை கேட்டவனது முகமோ புன்னகை பூசியது அவள் தன்னை கடத்தி செல்வதா??.. ஆம் சில வருடங்கள் முன்பே அவனது மனதை கடத்திவிட்டாள் தானே என்று மனதில் நினைத்ததும் அவனது சிரிப்பு முகத்தில் தங்கிவிட்டது..


நாழியாகுறது. மங்களநாண் தட்டை எடுத்துட்டுவாங்கோ என்று ஐயர் கூறியதும். புகழின் தந்தை வழி சொந்தகார பெண் தட்டை ஆசிவாங்கி ஐயரிடம் கொடுத்தாள்.


புகழ் கார்த்தியை அழைத்து" எங்க தம்பி மகேஷ் வடிவு ராஜேஷ் யாரையும் காணோம்." என்று கேட்கவும் " மகேஷ் அண்ணா வடிவு அண்ணியை தேடி போனாங்க அண்ணா இன்னும் வரல போல. "என்று தம்பியவன் பதில் சொல்ல. "வடிவுதான் நாத்தனார் முடிச்சுபோடனும்னு சொல்லிருந்தேன் எங்க போனாங்க மூணு பேரும்" என்று கவலை தொனித்த குரலில் புகழ் கேட்க்க. " சரின்னா நான் தேடிபார்க்குறேன்..என்று கூறி கார்த்தி சென்றுவிட்டான்.



நேரம் யாருக்கும் காத்திருக்கவில்லை நேரம் நெருங்கவும். இன்னும் வடிவு வரவில்லை இறுதியில் வடிவு இல்லாமலே புகழே மூன்று முடிச்சிட்டு மங்களநாணை அவனது மௌனராகத்தின் சங்கு கழுத்தில் கட்டினான். தாலி கட்டி அவளை தனது மனையாளாக ஏற்றுக்கொண்டும் அவனது நெஞ்சதிற்கு சற்றும் மகிழ்ச்சி இல்லை அவன் நினைத்தது எதுவும் நடக்கவில்லை. ஏன் இறுதியாக வடிவு நாத்தனார் முடிச்சு போடவேண்டும். என்று அவன் ஆசை பட்டதும் நடக்கவில்லை என்று மனம் சுணங்கினான்.


அதன்பின்பு சடங்குகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக நடந்தது. அதில் மதி மிகவும் மகிழ்ச்சியாக கலந்துகொண்டாள். புகழோ கடமைக்கு புன்னகைத்தபடி இருந்தான்.



இரண்டு மாதத்திற்கு முன்பு..


புகழின் நடவடிக்கைகள் அனைத்தையும் கவனித்த அவனது தாய் சீத்தாவதி தனது கணவன் கண்ணனுடன் சேர்ந்து மகனை இனிமேலும் தனிமையில் விடுவது சரி இல்லை என்று உணர்ந்து. அவனது தந்தை கண்ணனின் பேச்சை புகழ் என்றும் தட்டியது இல்லை ஆனால் அதை தெரிந்த கண்ணன் என்றுமே புகழை ஒரு செயல் செய்வதற்கு நிர்ப்பந்தம் செய்யவில்லை.



ஆனால் இன்று அவனது செயலே அவரை அவ்வாறு செய்ய வைத்தது. ஒரு உயிர்ப்பு எதிலும் பற்று இன்றி வேலையே முக்கியம் என்பது போன்று இருந்த புகழை இனி இது போன்ற நிலை அவனிற்கு வேண்டாம் என்று இருவரும் அவனிடம் பேசினர்.


புகழ் வடிவு வீட்டிற்கு சென்று வந்த அடுத்தநாள். இரவு அவனை அழைத்த சீத்தா. " புகழ் வாப்பா சாப்பிடலாம்." என்று அவனை அழைத்து. அவன் சாப்பிட்டதும். " புகழ் அப்பா உன்னோட பேசனுப்பா."


"என்னன்னு சொல்லுக்கப்பா ஏன்கிட்ட கேட்டுகிட்டு இருக்குறீங்களே." என்று புகழ் கேட்டதும் சீத்தா கண்னை காட்டினார். கணவனிடம் அவரும் அதை புரிந்து கொண்டு. "அப்பா ஒரு முடிவு எடுத்துருக்கேன் புகழ் அது என்னன்னா உனக்கு வயசு 29 முடியப்போகுது. நாங்க போதியளவு காலம் உனக்கு தந்துட்டோம் நீ இப்பதான் புடிச்ச பொண்ணையே எங்ககிட்ட காட்டிருக்க அந்த பொண்ணு நீ கட்டிக்கிறது எங்களுக்கு சம்மதம். ஆனா நீ இன்னும் கல்யாணம் பண்ணிக்காம நாள் இழுத்துகிட்டு இருக்க. ஆளுக்கு ஒரு இடத்துல இருந்து உன்னோட வேலைக்கு இடையில எப்புடி நீ அந்த பொண்ணுக்கு உன்னயும் உன்னோட காதலையும் புரியவைப்ப அதனால நீ கல்யாணம் செய்த்துகிட்டு புரியவைப்பா புகழ் அப்பா இதுவரையில் உன்கிட்ட எதுவும் செய்னு கட்டாயம் பண்ணினது இல்ல ஆனா இப்ப எனக்கு வேற வழி இல்ல நாங்க பொண்ணுவீட்டுல பேசுறோம் நீ உன்னை உன்னோட வேலைக்கு இடையில நேரம் எடுத்து மாப்பிள்ளையாக வந்தா போதும் மத்த எல்லாத்தையும் நாங்க செய்துப்போம். சரியா ?? பேசட்டுமாப்பா புகழ்?? "என்று அவனது தந்தை புகழிடம் கேட்க.


"சரிப்பா உங்க விருப்பம் ஆனா வதனியோட இந்த நிலையிலும் என்னை புடிச்சிருந்தா மட்டும் மேற்க்கொண்டு ஆகா வேண்டியதை பாருங்க. எனக்கு சம்மதம். அப்பா" என்று கூறி எழுந்து சென்று விட்டான். புகழ்


அதன்பின்பு அவர்கள் துரிதமாக செயல்பட்டனர். மதியின் வீட்டிற்கு கைபேசி மூலம் ஆழைத்து அவர்களது விருப்பத்தை கூறவும் புனிதாவும் வீட்டில் பேசிவிட்டு சொல்வதாக சொன்னார்.



உடனடியாக அவரது மகன் முகிலனிடம் பேசி விபரம் சொல்லவும் அவனிற்கு மிகையில்லா சந்தோசம். ஏன்னென்றால் முகிலனும் புகழ் மகேஷ் படித்த காலேஜில் தான் இரண்டு வருடம் ஜூனியராக படித்தான். அப்போது புகழ் தான் அவனது ஹீரோ ரோல் மொடல் அனைத்தும். ஆனால் அவரே தற்போது ஏசிபி யாகவும் தனக்கு மச்சானாகவும் வரஇருப்பது பெருமை என்று நினைத்தான்.முதல் திருமணம் அவனது விருப்பஇன்மையினால் நடந்தது. அது போன்று இல்லாமல் ஆறுதலாக மாப்பிள்ளை யை பற்றி விசாரித்து. முகிலனின் சம்மதம் கிடைத்த பின்பே புகழ் வீட்டினருக்கு பதில் சொல்வாதாக இருந்தார் புனிதா.


முகிலனோ " அம்மா புகழ் சார் பற்றி விசாரிப்பது என்னை பற்றி நானே விசாரிப்பது போலம்மா எனக்கு அவரபத்தி நல்லாவே தெரியும். நீங்க தாராளமாக சம்மதம் சொல்லுங்க. இதுதான் நம்ம மதிக்கும் முதல் கல்யாணம்னு நினைச்சிக்கோங்க அவளும் மறந்த மாதிரி நீங்களும் பழைய குப்பை எல்லாம் மறந்துட்டு நான் காசு அனுப்புறேன் செய்ய வேண்டிய முறைப்படி செய்ங்க. அப்போதுதான் மதிக்குட்டியும் நிம்மதியாக இருக்கும் போற இடத்துல "என்று சொல்லி வைத்துவிட்டான் முகிலன்.


அதன் பின் மதியை அழைத்து. " மதிம்மா இங்க வா டா "


"என்னம்மா "


"இப்புடி உக்காருமா அம்மா உன்கிட்ட பேசணும். "என்று சொல்லவும். "


"சரிமா சொல்லுங்க என்னன்னு??.." என்று தாயின் அருகில் கதை கேட்க்கும் பாணியில் அமர்ந்திருந்தாள்.. அதன்பின் அவளிடம் புகழை திருமணம் செய்ய விருப்பமானு கேட்டு அவளது வெட்கச்சிரிப்பில். அதுவே அவளது சம்மதமாக எடுத்து மிகவும் மகிழ்ந்து போனார் அத்தாய் புனிதா.


இதோ இப்போது பெண்பார்த்து. நிச்சயம் செய்து. அனைத்தும் சிறப்பாக முடித்து இதோ திருமணமும் இனிதாக நிறைவுற்றது.


"ஹலோ.. டேய் மச்சான் எங்கடா போய்டிங்க?? என்று மகேஷிடம் புகழ் கேட்க. வடிவ தேடி வந்தேன்டா எல்லா இடமும் தேடினேன் காணோம் இப்பதான் ரூம் போய் பார்க்கபோறேன். மச்சான். என்று மகேஷ் சொல்லவும். நான் இதோ வாறேன் தேடி பார்க்க நீ ஒருதனே ஏன் அலைந்துதிரியுற. "என்று புகழ் அக்கறையாக கேட்கவும்.


"டேய் நல்லவனே இன்னைக்கு உனக்குதான் கல்யாணம் உன்னோட ஏசிபி கடமையை விட்டு கல்யாண மாப்பிள்ளையாக மதியோட சந்தோசமாக இரு நான் கலெக்டர்தானே நானும் பார்த்துபேன். சரியா??" என்று அவனது நண்பனை கடிந்து விட்டு அவளை தேடி அறைக்கு சென்றான். அவளது பனைமரம்..



அதனைத்தொடர்ந்து ஆனைத்து பெரியவர்களிடமும் ஆசி பெற்று புகழின் வீட்டிற்க்கு சென்றனர்..


அங்கு சென்றதும் ஆலம் சுற்றி வலது கால் முன்வைத்து திருமணஜோடி. வீட்டிற்குள் சென்றனர். சாமியறையில் மதி விளக்கேற்றி பின்பு பால் பழம் உண்டதும். அனைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது..


மதியவிருந்தும் முடித்துவிட்டு மதியின் இல்லம் இங்கு இல்லாமல் தூரமாக இருப்பதால் மகேஷின் வீட்டில்தான். மதியின் மறுவீட்டு சடங்குகள் அனைத்தும் செய்வதாக முடிவெடுக்கப்பட்டது. அதனால் அங்கு செல்வதற்க்கான ஏற்பாடுகளும் நடைபெற்றது. ஆனால் இன்னும் மகேஷ் வடிவு புகழின் வீட்டிற்கு வரவில்லை.


புகழின் மனபாரம் இன்னும் அதிகமாகியது இந்த திருமணம் ஏன் எனக்கு இப்படியான ஒரு சூழ்நிலையில் அமையவேண்டும். அவனது மௌனராகத்திடம் அவனது விருப்பத்தை இப்போதும் சொல்லவில்லை ஆனால் இந்த முறை அவள் அவனது அருகில் மனையாளாக இருக்கின்றாள்..


அவன் நினைத்தது போன்று இந்த சிக்கலான கேஸ் இன்னும் ஒரு முடிவிற்கு வரவில்லை. மதியை இன்நிலைக்கு ஆளாக்கியவர்க்கு தண்டனை பெற்றுக்கொடுத்து. அதன்பின்பு அவன் முன்பு தவறவிட்ட காதலை இம்முறை பெறவேண்டும். என்றும் அதன் பின் திருமணம் செய்து வாழ்வை அனுபவித்து வாழவேண்டும் என்று நினைத்தது எதுவும் நடக்கவில்லை.



மதிவதனி அருகில் இருந்தும் அவனது காதலை சொல்லி அவளை நெருங்கமுடியாத அவனது தற்போதைய நிலையை அறவே வெறுத்தான் தற்போது ஏசிபி யாக யோசித்த புகழ். எப்போது அவன் இந்த கேஸ் முடிவிற்கு கொண்டுவருது. அதுவரை எப்படி அவளை பக்கத்தில் வைத்து காதலை தெரிவிக்காமல் பார்த்துமட்டும் இருப்பது என்று மண்டை காய்ந்தான்..புகழ்.


********


சென்னை. நீலாங்கரை



கங்காதேவி அவரது வலது கை ரெங்கனை கைபேசியில் அழைத்தார்.


"ஹலோ சொல்லுங்க மேடம். பிஸ்னஷ் எப்புடி போகுது.?" என்று ரெங்கன் கேட்க "அது போகுது ரெங்கன். என்னடா மாசம் ரெண்டா போச்சி இன்னும் ஏசிபி புகழ் அந்த மாலதி தற்கொலை சம்மந்தமா மோப்பம் பிடிக்கலையேனு பார்த்தா இன்னைக்கு ஏசிபி கு கல்யாணமாம். அவரு புது மாப்பிள்ளை குசில இருந்துருக்காரு இனிமே ஹனிமூன் புது பொண்டாட்டி சுகம்னு அதுல இருந்து வெளியவர கொஞ்சம் நாளாகும். நீ என்ன செய்ற நம்ம சரக்குகளை வாடிக்கையா குடுக்குற இடத்துக்கு குடுத்துரு என்ன புரிஞ்சுதா??.. எலிக்கு பயந்து வீட்டக்கொழுத்த முடியாது. இவன மாதிரி எத்தினை ஏசிபி யை பார்த்து கடந்து வந்து தொழில் செய்றோம்."


"கந்தனையும் வெளிய வரச்சொல்லு காளை தாஸ் எல்லாரையும் கூப்பிட்டுகோ. சரக்க சப்லே பண்ணிரு. சொன்னது எல்லாத்தையும் மனசில வச்சு செய்துடு. புரிஞ்சுதா??.. "என்று கங்காதேவி கேட்க.


"சரிங்க மேடம் உங்க அடிமை அப்புடியே செய்றேன்." என்று கூரியதோடு உடனடியாக அதற்கான வேலையில் இறங்கிவிட்டான். ரெங்கன்.


********


" டேய் இன்னும் என்னதான்டா மச்சான் நடக்குது உங்களை காணோமேடா எங்கதான் இருக்குறிங்க." புகழ் ஆதங்கமாக மகேஷிடம் கேட்க்கவும்.


"வடிவு ரூம்லதான்டா மச்சான் மயங்கி விழுந்து இருக்கா கட்டில்ல தலை அடிபட்டு ரெத்தம் வருது நானும் ராஜேஷும் இப்ப ஹிட்டி ஹாஸ்பிட்டல் கொண்டுபோறோம். அங்க போய் என்னனு பார்த்துட்டு சொல்லுறேன். "


"இன்னைக்கு உனக்கு கல்யாணம் முடிஞ்சிருக்கு. அதனால நீ உன்னோட பொண்டாட்டிய பார்த்துக்க ஒரே ஓயாம ஏசிபி னு முறுக்கிகிட்டு இருக்காம புது மாப்பிள்ளையா லெட்சனமா இந்த நாளை சந்தோசமா என்ஜோய் பண்ணு அதவிட்டு நண்பன் ஏசிபி அண்ணன் என்று பாசமா பயிர் வளர்த்து தேவையில்லாத வேலையில மூக்க நுழைக்காம உன்னை நம்பி வந்த மதியை நீ பார்த்துக்கோ அதுதான் உன்னோட வேலை. "


"என்னோட அழகி பொண்டாட்டிய பார்த்துக்க நான் இருக்குறேன். புருசனா கலெக்டரா. நீங்க மறுவீடு வார நேரம் நாங்க எங்க வீட்ல இருப்போம் என்ன நான் சொன்னது எல்லாத்தையும் மண்டையில ஏத்திட்டியா?? அனுபவி புது மாப்பிள்ளை சந்தோசத்த அனுபவி"


"அதவிட்டு சும்மா தங்கச்சி பாசம் ரொம்ப ஒவரா போகுது. வடிவு எழும்பினதும் நீ உம்ன்னு மூஞ்சதூக்கிட்டுதான் மணமேடையில இருந்தன்னு சொன்னேன்னு வை மச்சான். மொதல்ல இருந்து திரும்ப கல்யாணம் பண்ணி வச்சுருவா அந்த அடாவடி தெரியும் தானே வடிவை பத்தி நான் உனக்கு சொல்லனும்னு இல்ல நீயை இந்த இரண்டரை மாசத்தில் புரிஞ்சுருப்ப. என்ன சொல்லவா??.. "என்று மகேஷ் புகழை மிரட்டல் விட்டான்



"உங்க காட்டுல மழைதான்டா மச்சான் ஒரு ஏசிபி னு கொஞ்சமும் பயமில்லாம அப்பா தங்கச்சினு எல்லாரும் மிரட்டுறிங்க. நடத்துங்க. வடிவுட்ட என்ன கோர்த்துவிட்டுறாதடா மச்சான். நான் இனி அமைதியோ அமைதி நீயே நாங்க வீட்ட வந்துட்டோம் மறுவீடு வாங்கனு சொல்லுற வரைக்கும் நான் உனக்கு கூப்புடவேமாட்டேன்."


"எனக்கு மேலதிகாரி கமிஷ்னர். கலெக்டர் மகேஷ்வர்மா எல்லாரையும் சமாளிச்சுருவேன். ஆனா ஏன் தங்கச்சி வடிவ ம்ஹூகும் என்னால முடியாது மச்சான். வேணாம் என்ன கோர்த்து விட்டுறாத வடிவு இப்ப எப்புடி இருக்குனு மட்டும் சொல்லு போதும்." என்று மகேஷிடம் பரிதாபமாக கூறினான். புகழ்.


"ராஜேஷ் என்னடா பண்ணுறான் கல்யாண விருந்து சாப்புடாம எப்புடி மச்சான் உங்களோட இருக்குறான்?." என்று மீண்டும் புகழ் மகேஷிடம் மற்றொரு நண்பன் ராஜேஷை பற்றி கேட்கவும்.


"டேய் மச்சான் புகழ் நானும் உங்க அலம்பலை கேட்டுகிட்டுதான் கார் ஓட்டிக்கிட்டு இருக்கிறேன் வடிவு சிஸ்டர் குணமாகி வந்ததும் அதோட சமையலே டெய்லி கல்யாணவிருந்தைவிட செம்மயா இருக்கும் மச்சான். அதுக்காக இன்றைய விருந்து இல்லாட்டி பரவாயில்ல நீ இப்ப கட் பண்ணு இல்லன்னா மகேஷ் சொல்லாட்டி நான் சொல்லிருவேன் உன்னோட அலப்பறையை சொல்லட்டா வடிவு சிஸ்டர்ட சொல்லவா? வேணாம்ன்னா இப்ப மூடிக்கிட்டு புதுமாப்பிள்ளையா போய் மதி சிஸ்டர சைட் அடி அதவிட்டு சும்மா எங்ககிட்ட விசாரணை வைக்காத".என்று ராஜேஷ் அவனது பங்கிற்கு புகழை கலாய்க்க. புகழ் சோர்ந்து போய்விட்டான்.


"என்னமோ போ மச்சான் என்னோட அழகிக்கு நிகர் அவளேதான்.. ஏன் என்கிட்ட சொல்லாம ரூம்க்கு வந்தாளோ அவள் ஆசையா எதிர்பார்த்த புகழோட கல்யாணத்துல கூட கலந்துக்கமுடியாம இப்புடி மயங்கி கிடக்குறாளே. நீ சீக்கிரம் எழும்புடி பஞ்சிமிட்டாய். உனக்காக உன்னோட மாமன் பனைமரம் காத்திருக்கின்றேன். என்று ராஜேஷிடம் புலம்பிய படியே மகேஷ் வடிவை அழைத்துக்கொண்டு ஷிட்டி ஹாஸ்ப்பிட்டல் செல்கின்றனர்…

தொடரும்..
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ப்ரியா ரதீஸ் டியர்
 
Last edited:

Gomathianand

Well-Known Member
வடிவுக்குத் தானா அடிபட்டுதா இல்லை கையெழுத்து வாங்க வில்லன்கள் செய்த வேலையோ இல்லை ஜுனியரின் வரவோ:unsure:
புகழ் வடிவுக்கு இப்படி பயப்படுறியே:pவடிவோட டிசைன் அப்படி:ROFLMAO::ROFLMAO:
புகழ் நினைப்பது போல சீக்கிரமே வந்து மாட்டப் போறாங்க....
 

Nasreen

Well-Known Member
Acp kalyanam avanga asai padiyae nadathathu
But pugal santhosam missing
Vadivu adi pattu keela vilunthurukka but ava mela kai vaika yarukku thairiyam irukku??
May be vera ethavathu irukalam..
Panai maram panju mittai nalla names
 

mila

Writers Team
Tamil Novel Writer
புகழ் மதி திருமணம் எந்த பிரச்சினையும் இல்லாமல் நடந்தேறியது நிம்மதி. கங்காதேவிதான் வில்லியா? கலெக்டர் சாருக்கு பொண்டாட்டி மேல அவ்வளவு பயம். ராஜேஷுக்கு சோறுதான் முக்கியம். இவனுக்கு கல்யாணம் நடக்குமா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top