என்னருகில் நீ இருந்தால். 13

Advertisement

Ratheespriya

Well-Known Member
ஓம் நமச்சிவாய.


ஹாய் ப்ரண்ட்ஸ் அத்தியாயம் பன்னிரண்டிற்கு கருத்து மற்றும் விருப்பம் தெரிவித்த அனைத்து அன்பு நெஞ்சங்களிற்க்கும் எனது நன்றி. அதே போன்று இந்த அத்தியாயத்திற்கும் உங்களது கருத்தை தெரிவித்து என்னை ஊக்கப்படுத்துங்கள். அன்பர்களே..





என்னருகில் நீ இருந்தால். 13


:):):):)
 
Last edited by a moderator:

mila

Writers Team
Tamil Novel Writer
:love::love:என்ன டா ஹனிமூன் போனவங்க ஊருக்கு நடு ஜாமத்துல வந்திருக்காங்களேன்னு நானும் பயந்துட்டேன். கலெக்டர் சார் புது மாப்பிள்ளை கலக்குறீங்க. புகழ் மது மனசுல நீ வந்துட்டான்னு தெரியாம இப்படி போன கட் பண்ணிட்டியே! யாருப்பா இந்த வில்லி?:unsure:
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஓம் நமச்சிவாய.


ஹாய் ப்ரண்ட்ஸ் அத்தியாயம் பன்னிரண்டிற்கு கருத்து மற்றும் விருப்பம் தெரிவித்த அனைத்து அன்பு நெஞ்சங்களிற்க்கும் எனது நன்றி. அதே போன்று இந்த அத்தியாயத்திற்கும் உங்களது கருத்தை தெரிவித்து என்னை ஊக்கப்படுத்துங்கள். அன்பர்களே..





என்னருகில் நீ இருந்தால்.


அத்தியாயம் 13.


மதுரையில் வடிவின் இல்லம்..


நடுசாமத்தில் வீட்டின் கதவு தட்டப்பட வாணி கண்விழித்து அதிர்ந்துவிட்டார். "யார் இந்த நேரத்துல கதவை தட்டுறது. என்னங்க எழும்புங்க யாரோ கதவை தட்டுறாங்க. போய் பாருங்க யாருக்கு என்ன அவசரமோ"


" சரி வாணி இதோ போறேன்." என்று ராஜதுரை வீட்டின் தலைவாசல் கதவை திறந்தார். பார்த்தவர் பார்த்தபடி அப்படியே நின்று விட்டார். " யாருங்க இன்னேரம் வந்துயிருக்கா??.. " என்று கணவனிடம் கேட்டவாறு வாணியும் வாசலில் வந்து பார்த்து. திகைத்துவிட்டார்..


திகைப்பின் காரணம் இந்த நடுசாமத்தில் எந்தவித முன்அறிவிப்பும் இன்றி மகள் மருமகனுடன் வந்திருக்கின்றாள். பத்து நாளைக்கு முன்பு புதிதாக திருமணம் முடித்து கணவனோடு சென்ற மகள் மீண்டும் வந்திருப்பது சந்தோசம் தான் இருந்தாலும் வந்த நேரம். தான் தாயின் மனதை பதைபதைக்க வைத்தது..


மகளின் அடாவடி குணம் தெரிந்தபடியால் அத்தாய் மகளின் வருகையை பற்றி சிந்திக்களானார்..


"என்னம்மா அப்புடி திகைத்து போய் நிக்கிற உன்னோட கலெக்டர் மாப்பிள்ளை வந்துருக்காக. ஆசை பொண்ணு வந்துருக்காக. வாங்கன்னு கேளேன்." என்று வடிவு தாயின் அதிர்ந்த எண்ணத்தை திசை திருப்பினாள்.



"அடடே வாங்க மாப்பிள்ளை உள்ள வாங்க தப்பா நினைக்காதிங்க. இந்த சாமத்துல வந்துருக்கவும் என்னவோ ஏதோனு பதட்டம் அம்புட்டுத்தான். வாணி என்ன மசமசன்னு நிக்கிற. உள்ளாற கூப்புடு. புள்ளைகள் எம்புட்டு நேரம் வெளிய நிக்குதுக." என்று மனைவியிடம் கூறியபடியே வடிவின் மகேஷின் கையில் இருந்த பயணப்பைகளை வாங்கினார் ராஜதுரை.


"போய் குளிச்சிட்டு சாப்புட கூட்டிட்டு வா வடிவு மாப்பிள்ளையை." என்று வாணி வடிவிடம் சொல்ல அவளோ தாயை பாசமாக பார்த்து நின்றாள்.


"இல்ல அத்தை நாங்க வரும் போது சாப்புட்டுத்தான் வந்தோம். நீங்க போங்க போய் தூங்குங்க."


"பாலாவது குடிங்க மாப்பிள்ளை வடிவு வா பால் தாறேன் குடிச்சிட்டு தூங்குவிங்க." என்று வாணி சொல்லவும் வடிவு தாயோடு சென்றாள்.


அதன் பின்பு வடிவு பால் எடுத்து அறைக்கு செல்லவும் மகேஷ்வர்மா ப்ரஸ் ஆகி ஜாலியாக காதல் பாடலை கண்ணை முடி ரசித்துக்கொண்டிருந்தான்.

" சேலையில வீடு கட்டவா சேர்ந்துவசிக்க ஜன்னல் வச்ச ஜாக்கெட் போடவா??.." என்று பாடலை கேட்டு அவனும் பாடிக்கொண்டிருந்தான். அறைக்குள் பாலுடன் வடிவும் உள்ளே வற அவனும் இந்த பாடலை பாட வந்தவள் இவனது இடக்கான பாடலைக்கேட்டு "ஏங்க நான் தெரியாமதான் கேக்கிறேன் யாரு உங்களை போய் கலெக்டர் வேலைக்கு எடுத்தது??.. "என்று வடிவு கேட்ட கேள்வியில் கலெக்டர் திறுதிறுவென முழித்தான்.


"என்னடி பொசுக்குனு இப்புடி கேட்டுட்ட இது இந்தா வாங்கிக்கோனு யாரும் சும்மா தரமாட்டாங்க. செல்லம் இதுக்காக மாமன் எவ்வளவு காட்வெர்க் பண்ணுனேன் தெரியுமா??. உனக்கு. சரியானா சாப்பாடு தூக்கம் எதுவும் இல்ல.. வாலிப வயசுல சைட்க்கூட அடிச்சது இல்ல எத்தின பொண்ணுங்க காதல்னு ஏன் பின்னாடி சுத்தினாங்க ம்ஹுகும் நான் திரும்பிக்கூட பார்கலையே. அம்புட்டு நல்லவன் உன் மாமன். கலெக்டர் படிப்பே உயிர் மூச்சின்னு படிச்சி கலெக்டர் ஆன என்னபோய் நீ இப்புடி ஒரு கேள்வி கேக்கலாமா?? மாமன் மனசு தாங்குமாடி?.. "என்று மகேஷ் சோகமாக ராகமிலுக்க அதை உண்மை என்று நம்பிய வடிவு அவனது முக வாட்டம் பொறுக்காமல் அவனது அருகில் போய் "ஏங்க நான் எதுவும் தப்பா கேக்கலங்க சும்மா ஒரு உல்லுலாய்க்கு கேட்டேன் அதுக்கு போய் யாரும் முகத்த இப்புடி வச்சிருப்பாங்கலா?? நல்லாவா இருக்கு?. எங்க சிரிங்க பார்ப்போம்" என்று கிச்சி கிச்சு மூட்டினாள் பேதை.


அவனது எண்ணத்தை அறியாத வடிவு தானாகவே போய் அவன் விரித்த வலையில் சிக்கிக்கொண்டாள்.. அதற்காகவே காத்திருந்தவன் அவனது பஞ்சிமிட்டாயை விடுவானோ??.. ஒரு கை பார்த்து ரசித்து ருசித்த பின்பே விட்டான். கைக்கு கிடைத்த அவனது லுங்கியை எடுத்து கட்டிக்கொண்டு பாத்ருமிற்குள் ஓடிவிட்டாள். மீண்டும் ஒரு முறை குளித்து வந்தவள். "உங்களை என்ன பண்ணலாம் என்னை ஏமாத்திட்டிங்க மடச்சி நானும் நீங்க நடிக்கிறீங்கனு தெரியாம முக வாட்டத்தை உண்மைன்னு நம்பிட்டேன். கெட்ட பையன் ஆளும் மோசம் பாட்டு பழக்கம் எல்லாமே மோசம். போங்க நான் கோபமா ஆப்பிள் சாப்பிட்டு தூங்குறேன். " என்று வடிவு முகத்தை திருப்பிக் கொண்டாள்.


ம் என்று பெறுமூச்சை இழுத்து விட்ட மகேஷ்" நானும் மதுரை ஆப்பிளை திரும்ப ருசி பார்த்தா நல்லாருக்கும்ன்னு நினைக்குறேன். நீ என்ன பொண்டாட்டி நினைக்கிற??.." என்று வடிவை சீண்டியவன் அவளது கையில் இருந்த ஆப்பிளை ஒரு கடி கடித்தவன் " ஆஹா என்ன ருசி தேன் மாதிரியில்ல இனிக்குது." ஏன் அம்மு எனக்கு ஒரு சந்தேகம் நீ கடிச்ச இந்த ஆப்பிளே இம்புட்டு இனிக்குதே அப்போ கடிச்ச அந்த உதடு எம்புட்டு." என்று முடிக்காமல் அதை அவளை இழுத்து ருசித்து அனுபவித்து தெரிந்துகொண்டான். இரவு நேரம் கடந்து சென்றுதான் அவர்களது ரெண்டாவது கூடல் முடிவிற்க்கு வந்தது.


"சரியான காஞ்சான இருப்பீங்க போல நீங்க கெட்டபையன். ஒரு இரவு யாராவது மூணு தரம் குளிப்பாங்கலா?? எல்லாம் உங்களால தான்."


" ஆமான்டி என்னால மட்டும்தான் இந்த மதுரை ஆப்பிளையும், பஞ்சுமிட்டாயையும் ரசிக்கவோ ருசிக்கவோ முடியும். அதுக்கு இப்ப என்னவாம்?. ஒரு நல்ல புருசனுக்கு அழகே பொண்டாட்டியை இந்த விசயத்துல மோசம்ன்னு சொல்ல வைக்குறதுதான். "


"எனாம்? நீ இப்ப குளிக்கபோறியாம்?. காலை காட்சி இல்லயா?. செல்லம் மாமனுக்கு.. " என்று கலெக்டர் சரசமாக பேசவும். அவள் வெட்க்கத்தில் முகம் சிவந்தாள்.


"விவஸ்தை கெட்ட மனுசன் எப்பப்பாரு இதே நினைப்புதானா??.. உங்களுக்கு போங்க எனக்கு தூக்கம் தூக்கமா வருது." என்று வடிவு மறுபக்கம் படுத்துக்கொள்ள மகேஷ் கள்ளபுன்னகை சிந்தி அவளது இடையில் கோலம் போட்டுக்கொண்டே அணைத்து அவளை தனது மார்பில் போட்டு உச்சி முகர்ந்து முத்தம் வைத்து தட்டிக்கொடுத்தான்.. அவளும் வாகாக கை போட்டு அணைத்து தூங்கிப்போனாள்..



**************


கொடைக்கானலில் அடுத்தநாள் எழும்பியதும் வடிவை அழைத்துக்கொண்டு ஏனைய சுற்றுலா இடங்களையும் சுற்றித்திரிந்து. அவளுக்கு பிடித்தமான ஊர் சுற்றுவதையும் செய்துகொண்டு இரவில் அவனது தேடலையும் கூடலில் கூடி அறிந்துகொண்டு. ஒருவழியாக ஹனிமூன். பயணத்தின் இறுதி நாளில் அனைவருக்கும் பர்சஷ் பண்ணி யார் யாருக்கு என்ன தேவை என அறிந்து வாங்கி பெட்டியை அடுக்கி ஆறாவது நாள் சாயங்காலம் மனையாளை அழைத்துக்கொண்டு மாமியார் வீட்டில் மிகுதி மூன்று நாட்களை சந்தோசமாக கழிப்பதற்க்கு அந்த நடு சாமத்தில் மதுரையில் வடிவின் வீட்டில் வந்து இறங்கி மாமியாரை திகைக்க வைத்தான். மகேஷ்வர்மா.


**********

சென்னையில் புகழின் வீட்டில்..


புகழ் சில நாட்களாக சிந்தித்தபடிதான் இருக்கின்றான். அன்று ஒருநாள் மதியை போனில் அழைத்து பேசுவதற்கு விரும்பி அழைப்பு விடுத்தான். அவனது அழைப்பை ஏற்றவள் யார் என்று கேட்டதால் மீண்டும் தான் காதலை அவளிடம் ஏன் சொல்லாமல் விட்டோம் ஏன் அவளிற்கு இந்த நிலை வந்து அவள் அனைத்தையும் மறந்தாள் என்று அவனையே அவன் கேள்விகனைகலாள் துளைத்து எடுத்தான். ஏசிபி புகழேந்தி.


இம்மாததில் காதலர் தினம் நெருங்குகின்றது. இடையில் அவளுக்கு தனது காதலை சொல்லி தன்னை புரியவைக்கவேண்டும். அடுத்ததாக மிகவும் சவாலான இரண்டு கேஷ் குழு கிடைப்பேனா என்று அவனை மிகவும் சோதனை செய்கின்றது.


எங்கு படிக்கவேண்டும் குடும்ப கஷ்டத்தை போக்கவேண்டும் கனவு வேலையை அடையவேண்டும் என்று ஒருதரம் காதலை அடையமுடியாமல் போனது போன்று மீண்டும் யாருக்கும் இலகுவில் கிடைக்காத வாய்ப்பாக அவனிற்க்கு கிடைத்தும் வேலையை தக்க வைப்பதற்க்காக ஓடி அழைவதால் அவளிடம் முறையாக சொல்வதற்கு தாமதமாகி மீண்டும் ஏதேனும் தவறாக நடந்து விடுமோ என்று பலவற்றை சிந்தித்து மிகவும் மனதளவில் சோர்ந்து போனான். புகழ்


மகனையை அனுதினமும் நினைக்கும் தாய்க்கு மகனது மாற்றம் சோர்விற்க்கான காரணம் தெரியாமல் இருக்குமா என்ன. புகழ் தனது கல்யாணவிசயத்தில் தற்போது பொண்ணை கை காட்டிவிட்டு மீண்டும் இன்னும் காலதாமதம் செய்துகொண்டு அவனையும் வருத்திக்கொண்டு இருப்பதை எந்த தாயால் கண்கொண்டு காணஇயலும். அதனால் ஒரு தாயாக என்ன செய்யவேண்டுமோ அதை சிறப்பாக தனது கணவன் கண்ணனுடன் சேர்ந்து செய்து முடித்தார் சீத்தாவதி..



************


பவானி சாகர் மதிவதனி வீட்டில்.


அன்று அவள் ஷிட்டி ஹாஸ்ப்பிடலில் இருக்கும் போது அறைக்குள் நெடு நெடுவென வளர்ந்த ஒருவன் திடீரென்று உள் நுழைந்து. "ஹாய் வதனி இப்போது நலமாக உள்ளதா??.. " என்று கேட்டதும்.


மதி என்னவென்று உணரும் முன் அவனே மீண்டும் "கெல்த்தை பார்த்துக்கொள்ளுங்கள் அதிகம் ஸ்ரெஷ் ஆகாதிர்கள். " என்று கூறிக்கொண்டு அவளது பதிலை எதிர்பாராமல் கதவின் அருகில் சென்றுவிட்டான். " ஏங்க ஒரு நிமிசம் யாருங்க நீங்க நீங்கபாட்டுக்கு வந்திங்க விசாரிச்சிங்க பதில கூட எதிர்பார்க்காம போறீங்களே??.. உங்கள யாருனு எனக்கு தெரியலங்க தப்பா நினைச்சிக்காதிங்க நீங்க யாருனு நான் தெரிஞ்சுக்கலாமா??.. " என்று மதி புகழிடம் கேட்க்கவும் அவனும் சலைக்ககாமல் "நான் ஏசிபி புகழேந்திங்க நான் தான் உங்கள இங்க கொண்டுவந்து சேர்த்துவிட்டேன் அதுதான் எப்புடி இருக்குறிங்கனு பார்த்துட்டு போகலாம்னு வந்தேன். " என்று சொல்லிவிட்டு நிற்க்காமல் நடந்து சென்றுவிட்டான்..


அதன்பின்பு அவளது அன்னை பாட்டி இருவரும் புகழின் வீட்டில் தான் தங்கியிருந்து அவளை ஹாஸ்ப்பிட்டல் வந்து கவனித்துக்கொண்டனர். மதியின் தாய் புனிதா பாட்டி நாச்சியார் இருவரும் மதியை பார்க்க வரும் நேரம் எல்லாம் புகழையும் அவனது குடும்பத்தையும் ஆஹா ஓஹோ வென அவர்களது கவனிப்பு அப்படி இப்படி என்று மதியிடம் புகழ்ந்து பேசுவார்கள்.


அவர்களது பேச்சு சரி என்று சொல்லும்படிதான் புகழின் குடும்பம் மொத்தமும் மதியை தாங்கி கவனித்து அவள் நன்றாக உடலளவிலும் மனரீதியாகவும் கவுன்சிலிங்க எடுத்து பெர்பக்டாக குணமானதும் தான் அவளை கவனமாக வாடகை கார் பிடித்து பவானிசாகர் அனுப்பி வைத்தனர் புகழின் குடும்பம்..


அவர்களது பாசம் அவனது அக்கறை அனைத்தும் பேதை நெஞ்சை நிறைத்து நீண்டகாலமாக கிடைக்காமல் இருந்த மன அமைதியை கிடைக்கப் பெற்றுக்கொண்டாள்.


அதன்பின்பு அவன் அழைபேசியில் அழைத்து ஹலோ எனவும் இவளும் அவனது கணீர் குரல் நெஞ்சில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தமையால் அழைத்தது யார் என்று தெரிந்துகொண்டே அவன் தன்னை எவ்வாறு அறிமுகப்படுத்திக்கொள்வான் என்று அறியும் ஆவலில் " ஹலோ யாருங்க நீங்க " என்று கேட்ட கேள்வியில் அவன் பேசியை துண்டித்துவிட்டான்..


அதன்பின்பு இந்த பத்து நாட்களாக அவனிடம் இருந்து அழைப்போ எதேனும் குறுந்தகவலோ வராதா?. என்று போனை அடிக்கொரு தரம் பார்த்துக்கொண்டிருந்தாள் மதி.


மகள் புதிதாக அனைத்தையும் மறந்திருந்தாலும் மகளின் முகத்தில் ஒருவித வாட்டத்தையும் அவளின் வித்தியாசமான செயலையும் அவளின் தாய் புனிதவதி கவனித்துக்கொண்டுதான் இருக்கின்றார் அதை நேரம் பார்த்து அவசரமில்லாமல் பக்குவமாக கேட்க்க காத்திருக்கின்றார்..


சென்னையில்..


"டேய் என்ன நிலைமை இப்ப அந்த கலெக்டரும் பட்டிக்காடும் என்ன பண்ணுறாங்கனு அவங்க மேல ஒரு கண்ணு வச்சிருக்கியா??.. நீ"


" ஆமாங்க மேடம் இப்ப அவங்க ஊர்ல இல்ல ஷனிமூன் போயிருக்காங்களாம். இப்போதைக்கு மதுரையில இருக்குறாங்களாம் அவங்கள நான் ஆள் போட்டு வாட்ச் பண்ணிக்கிட்டுதான் இருக்குறேன்.. அவங்க என் கண் பார்வையை விட்டு நகரமுடியாது நீங்க கவலைபடாதீங்க."


சரிடா சாமி எனக்கு அந்த கலெக்டரால இனி எனக்கு தொல்லை அதிகமாக இருக்கும். அந்த கிழவன் பண்ணிவச்சிட்டு போன வேலைக்கு இப்ப எனக்கு அந்த பட்டிக்காட்டோட சைன் ரொம்ப முக்கியம்.. அப்புடி மட்டும் ஒரு தேவை எனக்கு இல்லன்னா என்னோட பாதையில இடைஞ்சலா வரப்போற அந்த கலெக்டர் அவன் பொண்டாட்டி ரெண்டு பேரையும் இன்நேரம் போட்டுத்தள்ளி கதையைவே முடிச்சிருப்பேன். சாமி"


"சரி நீ என்ன செய்வியோ தெரியாது எனக்கு எப்புடியாவது அந்த கலெக்டர் பொண்டாட்டிக்கிட்ட சைன் வாங்குற. நான் அப்புறம் வேற ஆள் வச்சி அவங்க கதையை அந்த ஏசிபி புகழுக்கு சந்தேகம் வராத படி ஆக்சிடண்ட் பண்ணி அவங்க ரெண்டு பேரையும் எமலோகம் அனுப்பிடுறேன். என்ன புரிஞ்சதா?.. " என்று அந்த சாமியிடம் இந்த அரக்கி கேட்கவும் இவனுக்கு புரிந்ததோ என்னவோ அனைவரையும் ஆட்டிவைக்கும் சாமிக்கு நன்கு புரிந்தது என்று ஒரு மோகன புன்னகை சிந்தினார்…


தொடரும்...
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ப்ரியா ரதீஸ் டியர்
 

Gomathianand

Well-Known Member
அருமையான பதிவு டியர்
இப்படி நடுசாமத்துல வந்து பயமுறுத்தறியே வடிவு...:ROFLMAO:
கலெக்டர் பஞ்சு மிட்டாய் ரொமான்ஸ் சூப்பர்:love:
மகேஷ் தாத்தா மகேஷ்க்கு வருகிற மனைவியும் கையெழுத்துப் போட்டா ஏதும் சொத்து கிடைக்கிற மாதிரி எழுதிருப்பாரோ....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top