என்னருகில் நீ இருந்தால்..11

Advertisement

Ratheespriya

Well-Known Member
ஓம் நமச்சிவாய..


அத்தியாயம் பத்திற்கு கருத்து மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி ப்ரெண்ட்ஸ். இதோ அடுத்த அத்தியாயம் படித்துவிட்டு உங்களது கருத்தை சொல்லி என்னை ஊக்கப்படுத்துங்கள்.. டியர்ஸ்..



என்னருகில் நீ இருந்தால்..11



:):):):)
 
Last edited by a moderator:

banumathi jayaraman

Well-Known Member
ஓம் நமச்சிவாய..


அத்தியாயம் பத்திற்கு கருத்து மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி ப்ரெண்ட்ஸ். இதோ அடுத்த அத்தியாயம் படித்துவிட்டு உங்களது கருத்தை சொல்லி என்னை ஊக்கப்படுத்துங்கள்.. டியர்ஸ்..



என்னருகில் நீ இருந்தால்..


அத்தியாயம் 11


சென்னை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம்..


மகேஷ் வர்மா I A S என்று அறையின் முன்பு பெயர் பலகை இருந்தது..



"அவ்வறையின் முன்பு கதவை தட்டிவிட்டு ஏசி முகத்தில் பட்டும் முகம் வியர்த்து ஒருவித பதட்ட நிலையில் தயங்கி நின்றுகொண்டு இருந்தான். ஆபிஸ் பாய் வரதன்.."


"அவனின் பதட்டதின் காரணம் என்வென்றால்.?? "


"மகேஷின் நேர்மை தெரிந்தும். அவன் செய்துதரமுடியாது என்று ஒதுக்கிய வேலையை. வரதன் செய்து தருவதாக செல்லி அன்நபரிடம் லஞ்சப்பணம் பெற்றுள்ளான்.. "


"இவனின் இந்த குணம் மகேஷின் காதில் எட்டி இருந்தும் ஆதாரம் எதுவும் இல்லாமல் சாட்சியோடு பிடிப்பதற்கு நேரம் எதிர்பார்த்து இருந்தான்.. "


"மகேஷின் எதிர்பார்ப்பு வீண் போகாமல். வரதனின் இச் செயலே சிரியான ஆதாரத்தோடு ஒரு வாய்ப்பாக அமைந்தது.."


"அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்யும் ஒருவரின் பினாமி ஒருவர். துப்பாக்கி பெறுவதற்கு உரிமம் கோரி விண்ணப்பத்திருந்தார்.."


"அவரின் விண்பத்தை ஆராய்ந்து மகேஷ் ஆரம்பத்தில் நிராகரித்து விட்டான். அது தெரிந்தே வரதன் தான் அதை பெற்றுதருவதாக அந்நபரை ஆபிஸ் பின்புறம் அழைத்து சென்று லஞ்சப்பணம் பெற்றான்.. அதுமட்டும் இன்றி மகேஷ் ஐஏஸ் இன் நேர்மையை பற்றி மிகவும் அவதூறாக பேசியுள்ளான்.. "


"வரதனை கையும் களவுமாக பிடிப்பதற்கு மகேஷை ரோல் மாடலாக கொண்ட விஷ்வாசமான அதிகாரி ஒருவரும் நேரம் பார்த்து காத்திருந்தார்.. "


"இதனை எதுவும் அறியாத வரதன் பினாமியிடம் பணம் வாங்கியதும் மகேஷை திட்டியது அனைத்தயும். செல்போனில் வீடியோ எடுத்து ஆதாரத்தோடும் மகேஷின் நேர்மையை கேலி செய்த கோவத்தில் அந்த அதிகாரியே நேரடியாக லஞ்சஒழிப்பு உயர் அதிகாரிக்கு விடியோவை அனுப்பி வைத்தார்.. "


"அதன் பின்பு இதை மகேஷின் கவனதிற்கு கொண்டு சென்றார். "


"அதன் பின்புதான் மகேஷ் வரதனை அழைத்தான் அதற்க்குபின்புதான் வரதன் மகேஷின் அறையின் முன்பு பதட்டத்தோடு நிற்க்கின்றான்.."


"மகேஷ்--- கம் இன் வரதன்."


"வரதன் அறையின் உள் வந்து நின்றான்.."


"மகேஷ்--- நான் ஏன் அந்தாளுக்கு துப்பாக்கி உரிமம் குடுக்கலனு தெரியுமா???... உங்களுக்கு. "


"இல்ல சார். "



"இந்த ஆள் பினாமிதான்.. இவரை வைத்து உரிமம் பெற இருந்தவன் ஒரு அயோகியன்.. "


"அதிக வீதம்% கந்துவட்டிக்கு பணம் குடுத்து வட்டி கட்ட முடியாதவர்கள் வீட்டிற்கு சென்று பணத்தை அறவிடுவதற்க்கு பதிலாக வீட்டு பெண்களை படுக்கைக்கு அழைத்தானாம். வர மறுப்பவர்களை துப்பாக்கி காட்டி மிறட்டினானாம்.".


"அந்த அவமானம் தாங்கமுடியாம ஒரு குடும்பம் தற்கொலை செய்துட்டாங்க இதை ஏசிபி புகழேந்தி விசாரித்து அந்தாளை கைது பண்ணி தூப்பாக்கி உரிமையை ரத்து பண்ணிட்டார். "


"இப்போது அந்தாளோட பினாமிக்குதான். நீங்க உரிமம் தருவதாக செல்லி கை நீட்டி பணம் வாங்கிருக்கீங்க. வரதன்."



ஒரு பழமொழி தெரியுமா??


"பூனை கண்ண மூடி பால் குடிக்குமாம். அப்பாடா உலகம் இருட்டாகிட்டு. நம்மல யாரும் பார்கலனு நினைக்குமாம். ஆனா பாருங்க. வீட்டுகாரன். தடியோட பூனையை அடிப்பதற்கு எதிர்லயே நிப்பானாம்.."


"அப்புடிதானே நாம பணம் வாங்குறது யாருக்கு தெரியப்போகுதுன்ற நினைப்பு தானே உன்னோடது.."



"வேணும்ன்னா ஒண்ணு பண்ணலாம் என்ன விட உங்களுக்கு அதிகம் தெரியுது அதனால நான் வீட்டுக்கு போறேன் நீங்க இந்த பதவியில் இந்த இடத்தில் இருக்குறீங்கலா???."


"அது எப்புடி முடியும் என்னோட கையெழுத்து வாங்க உங்களுக்கு ஏதோ பிளான் இல்லாமலா பணம் வாங்கிருபீங்க.???... "


"டெல் மீ வரதன். அமைதியா நின்னா எப்புடி இதே வாயாலதானே என்னை அப்புடி திட்டுனீங்க??.. "



"நான் குடிகரன் இல்ல.

பொண்ணுக்கு மயங்குறவனும் இல்ல. அப்புறம் நான் அசந்தநேரம் எல்லா பைல்லோடையும் வச்சிகுடுத்துடலாம். இவன் முட்டாள் பார்க்காமல் சைன் பண்ணிடுவான்னு பகல் கனவு கண்டிரோ???...

இது எதுவும் இல்லன்னா என்னோட கையெழுத்தை நீ போடுவியோ???..."


"சிங்கத்தின் கர்ஜனையுடன் கடும் கோபத்துடன் கேட்டான்."


"பதில் சொல்லு. எனக்கு இப்வே நான் எதுல வீக்னு நீ கண்டுபிடித்தனு தெரிஞ்சே ஆகணும். சொல்லுடா ராஸ்கல் என்னோட நேர்மையை நீ கேலி செய்து அவதூறாக பேசுவியா????. என்ன துணிவு உனக்கு.. "


"அதிகாரி--- சார் விடுங்க சார் இவனை பிடிப்பதற்கு லஞ்சஒழிப்பு உயர் அதிகாரி வந்துருகின்றார் உங்களை சந்திக்க வெளியே காத்திருக்கின்றார்.. சார்."


"எனக்கே இவனை கொல்லும் வெறி உள்ளது சார் உங்களை இப்புடி பேசின வாயை உடைக்கனும்னு தான் தோணுது அப்புறம் இவனுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்.."



"மகேஷ்--- போ போய் மாமியார் வீட்ல [ போலீஸ் ஸ்டேஷன்] நல்லா களி திண்ணு. கிடைத்த வேலையை ஒழுங்கா செய்யமுடியல சொத்து சேக்குறீங்களோ சொத்து. "


"லஞ்சஒழிப்பு அதிகாரி--- இனி நாங்க நடவடிக்கை எடுத்து போலீஸ்ல ஒப்படைக்குறோம் கலெக்டர் சார் ரியலி சாரி.."


"மகேஷ்-- இட்ஸ் ஒகே சார். நோ பிராப்ளம். "


"நாதன் எனக்கு ஒரு காபி வாங்கிட்டு வாறிங்கலா??.. "


"நாதன் -- சரிங்க சார்."


"எம்புட்டு பெரிய அதிகாரி வாங்கிட்டு வாங்கனு அதிகாரமா சொல்லாம வாங்கிட்டு வாறிங்கலானு கேக்குறாரு. இவரமாதிரி ஆளுங்க இன்னும் இருக்க தான் செய்றாங்க.."


"சார் இந்தாங்க.."


"நன்றி நாதன் நேரம் மூன்று மணி ஆகுது யாரும் இன்னும் சாப்புடாமல் இருக்காங்கலானு பார்த்து அனுப்பங்க நீங்க சாப்புட்டாசா??, நாதன். "


"ஆமா சார். "


" என்னை கொஞ்சம் யாரும் இதுக்கு மேல டிஸ்டப் பண்ணவேணாம். ஒகே இப்ப நீங்க போங்க நாதன்.."



"முன்பெல்லாம். மகேஷ் வேலை நேரம். முடிந்தால். பார்க் பீச் எல்லாம் சுத்தி திரிந்து இரவு உணவையும். வெளியே முடித்துவிட்டுத்தான். தூங்குவதற்கு வீட்டிற்கு செல்வான்.."


"ஆனால் திருமணத்திற்கு பின்பு அவனது அழகியை பார்பதற்காகவே சரியாக ஆறு மணிக்கு வீட்டிற்கு போய்விடுவான்…"


"மடிக்கணனியில் வடிவழகி அவனை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தால்"


"இவளை பார்த்தாலே மனசு லேசாகுது.. "


"வாங்கப்பா மகேஷ் பிளாஸ்பேக் போகபோறான். வாங்க நாமலும் போவோம்…"


"மகேஷ் வர்மா வடிவழகியின் திருமண நாள்.."


"அன்று அதிகாலை ஒருவழிகாக கலாட்டாவெல்லாம் முடிந்து. "


"சிற்ப சிலை போன்று தயாராகி கருப்புசாமி கோவிலிற்க்கு வந்தாள்.. வடிவழகி.. அனைவரின் ஆசியுடனும் கருப்பரின் முன்நிலையில் தங்களது பரம்பரை பொன் தாலியை வடிவின் சங்குகழுத்தில் அணிவித்தான்."


"அதன்பின்பு சடங்குகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக நடந்து முடிந்தது.. "


"பின்பு மணமக்களுடன். அனைவரும். பெரியாத்தாவின் இல்லம் நோக்கி பயணப்பட்டனர்.. "


"காலை முகூர்த்தம் என்பதால் யாரும் டிபன் உண்ணவில்லை. இப்போது மகேஷின் வீட்டில். அனைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது.. வடிவு வீட்டில் விளக்கேற்றி பால் பழம் உண்டு அதனை தொடர்ந்து காலை உணவை உண்டபின்புதான் வடிவின் முகம் தெளிவாகியது.."


"பின்பு மதிய விருந்தும் அமர்களமாக முடிந்தபின். "


"மணமக்களை அவர்களது வழக்கப்படி பெண் வீட்டில். சடங்கிற்கு ஏற்பாடு செய்வதனால் சாயந்தரம் வடிவின் வீட்டிற்கு அழைத்து சென்றனர்…"


"ஆழம் சுற்றி வீட்டின் உள்ளே அழைத்து சென்றார். வாணி.. "


"வாங்க மாப்பிள்ளை வடிவு இந்தா காபியை மாப்பிள்ளைகு குடும்மா… "


"அதன் பின்பு வடிவு தாயின் சேலையை பிடித்து வாணியின் பின்னால் சுற்றித்திரிந்தாள். அதனை பார்த்த மகேஷிற்கு முகத்தில். வாடாத புன்னகை. குடி கொண்டது.."


"அப்போது வடிவின் அத்தை கனகா அவனது தலையில் மின்னாமல் முழங்கால் இடியை இறக்கினார்…"


"கனகா---- ஏன்டியம்மா வடிவு.. நல்ல புளியம்கொம்பா ஒசத்தியான கலெக்டர் மாப்பிள்ளையை பிடிச்சிட்டியே!.. "


"நீ படிச்ச படிப்புக்கு ஒரு தினக்கூலி தான் ஒனக்கு மாப்பிள்ளையா வருவானு பார்த்தா??.. ஏழாம்வகுப்பு படிச்ச ஒனக்கு ஜில்லா கலெக்டர்ல புருசனா வந்துருக்கான்.. இது எந்த ஊர் நியாயமோ தெரியல.. "


"இது எப்புடி இருக்கு தெரியுமா??.. பத்துநாள் பசியில இருந்தவனுக்கு பழைய சோறு கிடைத்தா நல்லா இருக்கும்ன்னு நினைத்தவனுக்கு லெக்பீஸ் வச்ச பிரியாணி கிடைச்சுதாம். அப்புடி இருக்கு.உன்னோட கதை…"


"வடிவு--- ஏன் அத்த நான் தெரியாமதான். கேக்குறேன்."


"கல்யாணம் கட்டி புள்ளகுட்டி பெத்து வளர்த்து புருசன் புள்ளைக்கு வாய்க்கு ருசியா ஆக்கி போட்டு. வீட்டையும் அவங்களையும் கவனிச்சிக்குறதுக்கு நீ எந்த பள்ளிக்கூடத்தில படிச்சுட்டு வந்தியாம்???... அத்த.. "


"அதுக்கு நான் படிச்ச ஏழாம்வகுப்பே அதிகம்தான். பள்ளி பாடத்தை விட வாழ்க்கை பாடம் ரொம்ப பெரிசு. தெரிஞ்சுக்க. அத இந்த 19 வயதுலயே நான் படிக்க ரெடியாகிட்டேன்.. "


"நான் உன்னை மாதிரி ஒரு காலமும் இருக்கமாட்டேன் அத்த புகுந்த வீட்டு பணத்தை கண்டதும் பிறந்த வீட்டை சுமையாக நினைத்து ஒதுங்கி இருக்க மாட்டேன். "


"நான் மெட்ராஸ் போனாலும் அவருக்கு தோதுபடும்போது. இங்கவந்து எல்லாரயும் பார்த்து. ஒரு பொண்ணா. அக்காவா மருமகளா நான். செய்ய வேண்டிய கடமையை என் புருசனோட சேர்ந்தே செய்வேன்.."


"அங்க போய் அவரோட அம்மா குடும்பத்தையும் சேர்த்து வைக்க என்னால முடிஞ்சதை செய்வேன் புரிஞ்சதா… "


"நான் படிச்ச படிப்புக்கு நான் குடும்பத்தை பார்த்துக்கிட்டா என் வீட்டுகாரர் மெட்ராஸ் மக்களையும். எங்களோட புள்ளைங்கட படிப்பையையும். பார்த்துக்குவாரு."


"கல்யாணத்துக்கு வந்தமா மொய் வச்சமா கறிவிருந்து சாப்புடமானு போகனும். "



"அதவிட்டு புருசன் பொண்டாட்டிக்கு இடையில இந்த சிண்டு முடிஞ்சு கூத்து பார்க்குற வேலை இனி இந்த வடிவுட்ட வச்சுக்காத அத்த புரிஞ்சு ஒதுங்கிக்கோ.. "


வேணி பொன்னியின். அம்மா ----

"என்ன கலை அப்புடி திகைச்சு போயிட்ட.??.. "


"இல்ல வேணி அத்தாச்சி சின்னபுள்ள கல்யாணம் கட்டி மெட்ராஸ் போய் தனிய எப்புடி சமாளிக்க போறாளோனு நான் பயந்தா அவங்க அத்தைக்கே இந்த போடு போடுறாளே.."


"நம்ம புள்ளைகளை பத்தி நீ என்ன நினைச்சிட்ட கலை. ??.. அம்மாகிட்ட இருக்குறது வரை செல்லமா அடாவடியாதான் இருப்பாங்க. அப்புறம் அவங்களுக்குனு குடும்பம் புருசனு வந்தா தான் அவங்க பொருப்பா மாறிருவாங்க.."


"சரி தாய்ட கண் புள்ளைக்கு சேராது. கலை நேரம் ஆகுது. இரவு சாந்திமுகூர்த்ததுக்கு வடிவ அனுப்பும் போது சுத்திப்போடு."


"இப்ப நான் மத்த புள்ளைகள நம்ம வீட்டுக்கு கூட்டிடு போறேன்.. "


"கலை--- சரி அத்தாச்சி இந்தாங்க லைட்டு கவனமா போங்க நான் நாச்சி அத்தைட்ட உங்க எல்லாருக்கும். சாப்பாடு குடுத்தனுப்புறேன்.."


"மகேஷ் அம்மாடி நானும் கொஞ்சமா படிச்சுருக்கானு சொல்லவும் ஒரு +2 அல்லது டிகிரியாவது முடிச்சுருப்பானுல நினைத்தேன்.. ஏழவதாம். ஆவ். என்று வடிவேல் பாணியில் மனதில் நினைத்துக்கொண்டான்.."


"ஒரு வழிகாக முதலிரவு அறையில் வாழ்க்கை பாடத்தில் முதல் அடி எடுத்து வைப்பதற்கு மகேஷ் குறுக்கும் நெடுக்குமாக நடை பயின்று வடிவின் வரவிற்க்காக காத்திருந்தான்…"


"பேதையவள் பதுங்கி அறை வாயிலில் நின்றால். டி வடிவு உள்ள போ நேரமாகுது நாங்க எல்லாரும் எங்க வீட்டுக்குபோறோம்."


"பொன்னி பயமா இருக்குடி. "


"அம்புட்டு வாய் கிலிய பேசினல்ல இப்பமட்டும் என்னவாம்.?? "


"நீ இப்ப உள்ள போ. நாளைக்கு சந்திகலாம். டி வடிவு."


"வடிவு அன்னநடையிட்டு நடந்து வந்தால். "


"எல்லாரும் பனமரத்துகிட்ட என்ன தனிய கோர்த்துவிட்டு போறாங்களே. ஐயோ என்ன நடக்கப்போகுதோ தெரியல.. "


"கருப்பா நீ தான் எனக்கு தொனையா இருக்கனும்.."


"கதவு திறக்கும் சத்ததில் திரும்பி பார்த்தான் மகேஷ். "


"பார்த்ததும் திகைத்து போனான் மகேஷ்.வடிவு மணமகள் அலங்காரத்தில் ஒருவித அழகென்றால். தற்போது வேறு விதமான அழகாக காட்சி தந்தாள் கண்ணாலனுக்கு. பாவையவள். "


"கல் உண்ட வண்டாக ஒரு நொடி பார்வையால் தலை முதல் பாதம் வரை வருடி விட்டான். காளையவன்.."


"மெது மெதுவாக நடந்து வந்தாலும் கட்டிலிற்கு அருகில் வந்துவிட்டால்."


"தாய் சொன்னது போன்று. பாலை மேசையில் வைத்துவிட்டு. அவனது காலில் விழுந்து வணங்கினால்."


"மகேஷ்-- ஐயோ என்னது எழுந்துரு இதெல்லாம். வேணாம். மாமன எப்பவும் மனசுல வச்சிருந்தா போதும். அம்மு. "


"இந்தாங்க பால். பாதி நீங்க குடிச்சதும் நான் குடிக்கனுமாம். எனக்கும் தாங்க. குடிச்சிட்டு சரியா??.."


"இந்தா நீ இப்போ குடிப்பியாம்."


"பாலை வாங்கி பருகிவிட்டு. இப்புடி கட்டில்ல உக்காருங்க. நான் கொஞ்சம் பேசணும். "


"என்ன சொல்லனுமோ சொல்லு நான் கேட்ப்பேன். "


"அவளது குரும்புத்தனம். படிப்பு ஏறாமல் பள்ளிக்கு மட்டம் போட்டது. அவளது நீண்டநாள் ஆசை வெளியூர்கள் சுத்தி பார்க்குறது. அன்னைக்கு இவனோட கார்னு தெரியாமல் வேணும்னே கல்லால அடித்து கண்ணாடியை ஒடைத்ததுனு அவளது அனைத்து அடாவடிகளையும். ஒன்றுவிடாமல் அவனிடம் ஒப்பித்தால். வடிவு"


"நேத்து நீங்க பேசும் போது. அம்மாவா அன்பு காட்டுவியானு கேட்டு. பொசுக்குனு கைய புடிச்சிட்டிங்கலா அதுதான் கூச்சமாகிட்டு யாராவது பார்த்தா அம்மாட்ட சொல்லிப்புடுவாங்க. அதுதான். ஓடி வந்துட்டேன். தப்பா நினைச்சிங்கலா.. நீங்க. "


"இல்ல நீ சொல்லு. என்று அவள் பேசும் போது முகத்தில் வந்து போன அபிநயங்களை பார்த்து ரசித்தான்."


"வேற சொல்லுறதுக்கு ஒண்ணும் இல்ல. ஆன் நான் கை கால் போட்டுத்தான் தூங்குவேன். எனக்கு கீழ படுத்துபழக்கம். இல்ல நீங்களும் கீழ படுக்கவேணாம். இந்த தலையனையை இப்புடி குறுக்கே அடுக்கிடலாம். சரியா??.. "


"உங்கட்ட எனக்கு கேக்குறதுக்கு நிறைய இருக்கு ஆனா பாருங்க இப்ப எனக்கு அசதியில தூக்கம் வருது. நான் தூங்குறேன். நீங்களும் கண்ணை இறுக்கமாக மூடுங்க அப்புடியே தூங்கிடுவீங்க.."


"மகேஷ். ஐயோ 29 வருசத்துல இன்னைக்குதான். அதுவும் பொண்டாட்டியா அழகி வந்து என்னோட சேர்ந்து படுக்குறா. இதுல இடஞ்சலா இந்த தலயனை வேறயா. அதை பார்த்து முறைத்தான். இரு இவ தூங்கினதும் உனக்கு இங்க வேலை இல்ல.. என்று மனதில் நினைத்தான்.. "


"அழகான பொண்டாட்டி பக்கத்துல படுத்து.ரொம்ப சோதிக்கிறாளே. இனி தூங்கின மாதிரித்தான் உன்னோடா நிலைமை ரொம்ப மோசம் தான் டா மகேஷ். இனி.. "


"அவள் ஆழ்ந்து உறங்கியதும். தலையனை எல்லாம் எடுத்துவிட்டு. அவளை நெருக்கி இடையில். கை போட்டு, தூங்கினான்.."


"காலை விடிந்ததும். முதலில் எழுந்த வடிவு. அச்சோ எங்க நாம வச்ச அனையை காணலயே. இப்ப இவரு எழும்பினாதானே நாமலும் எழுப்ப முடியும். நேரம் போகுது என்ன பண்ணலாம். அம்மா வையுமே. "


"ஏங்க ஏங்க எழுந்துருங்க நான் வெளியபோகனும். நேரமாகுது அம்மா வையும். "


"அடியே என்னடி காலங்காத்தால ஏங்க ஏங்கனு என்ன இன்னும்

ஏங்க வைக்குற. "


"அழகா மாமானு கூப்புடு அழகி. சரியா. இல்லனா மகேஷ்னு பேரச்சொல்லி கூப்புடு இப்புடி ஏங்கனு ஏலம் போடாதடி.

எங்க மகேஷ்னு கூப்புடுபார்ப்போம்.."


"ஐயோ நீங்க வயசுல படிப்புல எல்லாம் உசந்தவங்க பேரச்சொல்லி கூப்புட்டா கருப்பசாமி கண்ண குத்திப்புடும்.. நான் மாட்டேன்.."


"நான் குளிக்கனுங்க என்ன போகவிடுங்க?. "


"ஐயோ இன்னைக்கு மண்டேயில்ல"




" என்னங்க சொல்லுறீங்க மண்ட வலிக்குதா??.."


"இன்னைக்கு எனக்கு வேலை நாள் திங்கள் கிழமை அம்மு அதிக நாள் லீவ் போடமுடியாது வேலையும் அதிகம் பார்க்க இருக்கு நீ போய் ரெடியாகு ஓடு இப்பவே நேரம் 5.30 ஆகிட்டு இனி சென்னை போய் உன்னை வீட்ல விட்டுடு நான் ஆபிஸ் போகணும். சீக்கிரமா ரெடியாகனும் புரிஞ்சுதா?? "


"எல்லாதுக்கும் தலையை ஆட்டு நல்லாஒ. "


"வடிவு குளித்து விட்டு பயணத்திற்க்கு ஏற்ற மாதிரி சேலை கட்டி அவளது பாணியில் பவுடர் போட்டு பொட்டுவைத்து ரெடியாகி கீழே சென்றால்.. "


"வாணி வாசல் தெளித்து கோலம் போட்டுக்கொண்டு இருந்தார்"


"அம்மா"


"அடடே வடிவா இது என்ன அதிசயம் நான் எழுப்பாம என் பொண்ணு எழும்பி வந்துருக்காலே.."


"போம்மா நீ வேற அவரு இப்பவே மெட்ராஸ் போகனும் புறப்படுனு சொல்லுறாருமா…"


"என்ன வடிவு சொல்லுற??.." இன்னைக்கேவா???..


"நேத்துதானேடி கல்யாணம் ஆச்சி இத கேள்வி பட்டு மனுசமக்க இன்னைக்கும் உங்கள பார்க்க வருவாங்காளே.."


ராஜதுரை--- வாணி உனக்கு மாப்பிள்ளை ட வேலையை பற்றி தெரியும் தானே. அப்புடி இருந்தும் புரிஞ்சுக்கலனா எப்புடி அவருக்கு லீவ் இல்லயாம் அவரும் என்ன கல்யாணம்னு தெரிஞ்சா வந்தாரு லீவ் போட்டு வாரதுக்கு வந்த இடத்துல இப்புடி ஆச்சி. நாமதான் புரிஞ்சு நடந்துக்கனும் வாணி.. "


"இனி லீவ் எடுத்து வந்து இருக்கேனு சொல்லுறாரு. போ போய் புள்ளைங்க போறதுக்கு ஏற்பாடு பண்ணுமா.. "


"வடிவின் முகம் வாடிவிட்டது."


"அதன்பின்பு பெரியாத்தாவும் வர வடிவின் பயணம் கேள்விப்பட்டு ஊர் மக்களும் வர ஆரம்பித்து விட்டனர்.. "


வடிவு. பொன்னி அவளது தங்கைகள் இருவர் ராசுகுட்டி என்று அவளது நண்பர்கள் கூட்டத்தை கட்டிக்கொண்டு கண்ணீர்வடித்தாள்..


மகேஷ்--- அத்தை தப்பா எடுத்துகாதீங்க. இப்போ என்னோட சூழ்நிலை அப்புடி திரும்ப லீவ் போட்டு வந்து இருக்கின்றோம்.. "


"முத்து குழலி ரெண்டு பேரும் நல்லா படிக்கனும். சரியா மாமா போயிட்டு வாறேன். பொன்னி சிஸ்டர். ராசுகுட்டி தம்பி நீங்களும் கவனமாக இருக்கனும். திரும்ப வரும்போது உங்க எல்லாரையும் சென்னை கூட்டிடு போறேன். ஓகே. பாய்."


"பாட்டிமா உங்க உடம்ப பாத்துக்கோங்க. அத்தை நேரம் இருக்கும் போது பாட்டிமாவை போய் பார்த்துக்கோங்க. என்னோட நெருங்கின சொந்தம் இவுங்க மட்டும் தான்.. "


"எனக்கு என்ன ராசா நாலாவது தலைமுறை உன்னோட புள்ளையும் நான்தான் வளர்ப்பேன் நீ வேணும்னா பாரு. பத்திரமா போய்டு வாங்க செல்லங்களா… "


"இருவரும் பெரியாத்தா காலிலும் ராஜதுரை கலைவாணி. என அனைவரது காலிலும் விழுந்து ஆசி பெற்று. கிளம்பினர். அப்போது பெரியாத்தா வடிவின் கையில். ஒரு பொருளை கொடுத்தார்.. "


"இதை பத்திரமாக வைத்துக்கொள் வடிவு. என்று சொன்னார். "


"வடிவிற்க்கு அது என்வென்று புரியவில்லை இருந்தாலும் வாங்கி பாதுகாத்து வைத்துக்கொண்டால்…"


"வடிவு சோக முகத்துடன் மகேஷின் அருகில் காரில் ஏறிச்சென்றால்… "


"அவர்கள் போய் நின்ற இடத்தை பார்த்து.. வடிவு மயங்காத குறையாக அதிர்ந்து மகேஷின் கையை இருக்கப்பற்றிய படி சிலையென நின்றுவிட்டாள்…."


தொடரும்….
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ப்ரியா ரதீஸ் டியர்
 
Last edited:

Gomathianand

Well-Known Member
அருமையான பதிவு டியர்
நேர்மையானவர்களை இந்த உலகம் பழி சொல்லத் தான் செய்கிறது...
வடிவு அத்தைக்கு செம பதிலடி....
 

mila

Writers Team
Tamil Novel Writer
வடிவே! அதிர்ச்சியாகும் அளவுக்கு எங்க கூட்டிட்டு பொய் இருக்காரு நம்ம கலெக்டர் சார்? வீட்டுக்கு தானே! வீட்டுல ஒரு ரணகளம் இருக்குமே!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top