உறவால் உயிரானவள் P12

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
images (20).jpg

"என்ன நடந்தது ப்ரோ"



ஆதியின் அக்கேள்வியில் அவன் எதை பற்றி கேக்கின்றான் எனப் புரிய நேற்றிரவு ஆருத்ரா அழைத்து பேசியது கார்த்திக்கின் நியாபகத்தில் வரவே! கவியின் பார்வையும் ஆதியை தொட்டது.



"என்ன கார்த்தி முகம் சுவிட்ச் போட்டா மாதிரி பிரகாசமா இருக்கு"



"ஆருவ நினைச்சி சிரிச்சேன் அம்முமா..."



"ம்.. தக்காளி..."



"நா நிறத்தை சொல்லல குணத்தை சொன்னேன். காலைல ஒரு குட் மார்னிங், மாலைல குட் ஈவினிங், நைட் தூங்கும் போது குட் நைட், மத்யானத்துக்கு குட் ஆப்டர் நூன்"



"என்ன டா ஆச்சு உனக்கு? இதைத்தான் சொல்லுவாங்க? புதுசா சொல்லுற மாதிரி சொல்லுற?"



"புதுசா தான் இருக்கு. அவ ஒவ்வொரு தடவையும் கால் பண்ணும் போது டோசேர் னு சொல்லி பல தடவ பேசாம இருந்திருக்கேன். ஆனா ஒவ்வொரு தடவையும் கோபப்படாம "சரி கார்த்திக் நா அப்பொறம் கால் பண்ணுறேன். நீங்க பிசியா இருப்பீங்க" னு எஸ்.எம்.எஸ் பண்ணுவா. அவளுக்கு பொறுமை ரொம்ப ஜாஸ்த்தி னு நினைக்கிறேன். இல்ல நா எப்போ போன் பண்ணாலும், பிசியா இருக்கேன், பிசியா இருக்கேன் னு சொன்னா செம்மயா திட்ட தொனனும் இல்ல. என்ன தான் சொல்லுறா னு போன அட்டென்ட் பண்ணி காதுல வச்சா.. வார்த்தைக்கு வார்த்த கார்த்திக் கார்த்திக் னு என் பேர சொல்லுறா"



கார்த்திக் ஆருத்ராவுக்கு பொறுமை ரொம்ப அதிகம் என்று நினைத்திருக்க, அது கார்த்திக்கிடம் மட்டும் தான் என்று அவனோ! அறியவில்லை. அவனிடமும் அவளின் பொறுமை எல்லை மீறும் போது...
8912da_c724c6f1263b4b119c2a882b469b75c3.jpg



"அப்பொறம்" ஆவலாக கவி



"நா என்ன கதையா சொல்லி கிட்டு இருக்கேன்"



"நல்லாதானே போய் கிட்டு இருக்கு? வை மா?" கார்த்திக்கின் தோளில் தட்டிய கவி மேல சொல்லு எனும் விதமாக செய்கை செய்ய



"பிடிச்சிருக்கு அம்மு.. குழந்தைத்தனமா அவ பேசுற விதம், அவ பேசும் போது சிரிக்கிறது. எல்லாமே பிடிச்சிருக்கு, மனசு புல்லா அப்படியே நெறஞ்சி இருக்கிறா. யாருமில்லா நடு ரோட்டுல போய் கத்தனும் னு போல தோணுது" தனக்குள் தோன்றி இருக்கும் காதலின் அறிகுறிகளை உணராது கார்த்திக் பேசிக் கொண்டே போக



"ஓகே அப்போ அவ கூட வெளில போய் என்ஜோய் பண்ணு" ஏதோ தனக்கு தெரிந்ததை சொன்னாள் கவி.



"நான் கூப்பிட வருவாளா?"



"கூப்பிட்டு பாரேன்.." என்றவள் கார்த்திக்கின் அலைபேசியை எடுக்க அது அடித்தது. திரையில் "ஒன் அண்ட் ஒன்லி பொண்டாட்டி" என்று ஆருவின் புகைப்படம் வரவும்



"என்ன பா.. இது?" கவி



"அன்னைக்கி பொண்ணு பார்க்க போனப்போ என் போன எடுத்து அவளே சேவ் பண்ணா" கார்த்திக் கொஞ்சம் வெட்கப் பட



தான் இது போல் என்றுமே ஆதியிடம் பேசவில்லை என்ற எண்ணம் தோன்ற "நீ கலக்கு மச்சி" என்றவாறே அவர்கள் பேசட்டும் என்று அவ்விடத்தை விட்டு அகன்றாள் கவி.



ஆருவின் கொஞ்சல் மொழிகளை ரசித்த பின் "ஆரு நாளைக்கு நாம ரெண்டு பேரும் வெளில போலாமா?" கார்த்திக்



"என்ன போலீஸ்காரரே! எந்த போதி மரத்துக்கடியில ஞ்னோதயம் பெற்றீங்க?"



"உனக்கு வர முடியாதுன்னா பரவால்ல ஆரு வேற ஒரு நாள்ல போலாம்" அவள் கிண்டல் செய்வதைக் கூட புரியாமல் "தான் ஏதாவது தப்பாக கேட்டு விட்டோமோ" என்று கார்த்திக் பேச



"சரியான மரமண்ட" தன்னவனை செல்லமாக திட்டியவாறே "நான் வர முடியாதுன்னு சொன்னேனா? என்ன நீங்க தான் ஹாஸ்டல் வந்து பிக்கப் பண்ணனும்" அதன் பின் ஆருத்ராவை பேச விட்டு அவளின் பேச்சை ரசிக்க ஆரம்பித்தான் கார்த்திக்.

:love::love::love::love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
என்னாது
போலீஸ்காரனையே மரமண்டைன்னு திட்டுறாளே இந்த ஆரு பேபி
உள்ளே பிடிச்சுப் போட்டு முட்டிக்கு
முட்டி தட்டு, கார்த்திக் போலீஸ்கார்

ஆருவைப் பார்த்து எம்மெல்லே பொண்டாட்டிக்கு இப்போத்தான்
பலுப்பு எரியுதோ, மிலா டியர்
நடக்கட்டும் நடக்கட்டும்
 

mila

Writers Team
Tamil Novel Writer
என்னாது
போலீஸ்காரனையே மரமண்டைன்னு திட்டுறாளே இந்த ஆரு பேபி
உள்ளே பிடிச்சுப் போட்டு முட்டிக்கு
முட்டி தட்டு, கார்த்திக் போலீஸ்கார்

ஆருவைப் பார்த்து எம்மெல்லே பொண்டாட்டிக்கு இப்போத்தான்
பலுப்பு எரியுதோ, மிலா டியர்
நடக்கட்டும் நடக்கட்டும்
இப்போ தான் எரிய ஆரம்பிச்சிருக்கு பிரகாசமா எரியட்டும்.;);)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top