உயிரே உன் உயிரென நான் இருப்பேன் teaser 10

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் கியூட்டிபாய்ஸ் நாளைக்கு Sunday UD போடலாம்னு இறங்கி வேலைப்பாத்தா இந்த பிங்கியோட அட்டகாசம் தாங்க முடியல so ஓடி வந்துட்டேன்.:love:

Screenshot_20190329-234039_Instagram.jpg

உள்ளே நுழைந்தவனை கண்டு "புருஷா" என்றவாறே ஓடி வந்தவள் அவனை அணைத்து கன்னத்தில் முத்தமிட எரிச்சலடைந்தான் தீரமுகுந்தன். அவனுக்கு அச்செயல் அநாகரீகமாகவே தோன்றியது.



"இங்க என்ன பண்ணுற? முதல்ல வீட்டுக்கு போ" அவளை அதட்டியவாறே அங்கே உள்ளவர்களை நோட்டமிட



"உங்கள நாங்க கவனிக்கல பா, நாங்க இங்க இல்ல, ஏன் இந்த உலகத்திலேயே இல்ல" என்றவாறு அவர்கள் வேலையில் மூழ்கி இருக்க அவர்களின் முதுகு குலுங்குவது தீரனுக்கு தெளிவாகவே தெரிந்தது.



"வாங்க மாமா சாப்பிடலாம்"




"மாமாவா? என்ன புதுசா கூப்டுறா?" அவளை முறைக்க அவள் பார்வையோ விஷ்வதீரனின் மேல் இருந்தது.



"புருஷன் நா இங்க இருக்கேன். அவன மாமான்னு கூப்டு செல்லம் கொஞ்சுறா" கடுப்பாகவே முணுமுணுத்தவன் தன் மனதை அறியாமல் இருப்பது ஏனோ?

images (9).jpg

"நீயும் வா சாப்பிட" பிங்கி தீரமுகுந்தனிடம் சொல்லியவாறே விஷ்வதீரனின் கையை பிடித்துக் கொண்டு உள்ளே செல்ல தீரமுகுந்தனின் கண்களில் அனல் கக்கியது.



தீரமுகுந்தனின் அறையில் உள்ள குட்டி சாப்பாட்டு மேசையில் இருவரும் வந்து அமரவும் பிங்கி விஷ்வதீரனுக்கு பார்த்து பார்த்து பரிமாறியவள், "நீ சாப்பிடல" தீரமுகுந்தனிடம் வெகுளியாக கேக்க, இவர்களின் நாடகத்தை பார்த்த விஷ்வதீரன் அமைதியாக சாப்பிடலானான்.



"அண்ணி வரல" அண்ணனுக்கு சாப்பாடு போட அண்ணி வராம இவ எதுக்கு வந்தா? எனக்கு சாப்பாடு போடாம அவன கவனிக்க தான் இவ கழுத்துல நான் தாலி கட்டினேனா? என்பதை ஒரே வார்த்தையில் கேக்க



"நா எது கேட்டாலும் நீ வேறேதாவது சொல்லு" என்றவள் அவனை முறைத்தவாறே அவனுக்கு தட்டை வைக்க



"சலீம் பாய் வரல? எதுக்கு நீ வந்த?" பார்வையை அகற்றாது “பதில் சொல்லுடி” என்றவாறே நிற்க



"அவரு வரேன்னு தான் சொன்னாரு, நான் தான் என் ஆளுக்கு நானே சாப்பாடு கொண்டு போறேன்னு சொல்லி எடுத்துட்டு வந்தேன்" என்றவள் அவனை கண்டுக்காது விஷ்வதீரனை கவனிக்க,



"எனக்கு யார் சாப்பாடு போடுவா?"




“டெயிலி நானா போட்டேன் நீயே போட்டு சாப்பிடு"



"ஆள பாக்க வந்தணு சொன்ன? அப்போ நீதான் சாப்பாடு போடணும்" என்று முறைக்க



"என் ஆள தான் பாக்க வந்தேன், நா இல்லனு சொல்லலையே! ஆனா அது நீ இல்ல, இதோ இவரு" என்று விஷ்வதீரனை கை காட்ட விஷ்வதீரனுக்கு புரையேறியது.



"பாத்து மாமா தண்ணி குடிங்க" என்றவள் தண்ணீரை புகட்டி முதுகையும் நீவிவிட தீரமுகுந்தனின் காதில் புகை புசு புசுவென வெளியேறியது.



"அம்மா தாயே! என் பொண்டாட்டி முன்னாடி இப்படியெல்லாம் பேசி, என் குடும்பத்துல கும்மி அடிச்சிடாத" என்றவன் தம்பியை பார்க்க அவனின் முகமோ இரத்த நிறத்தில் இருக்க



"என்னடா கோபம் வருதா? என் பொண்டாட்டி கைய புடிச்சிகிட்டு இனி பேசுவியா நீ?"



"அவங்க எனக்கு அண்ணி. அம்மா மாதிரி" பாவமாய் முத்தை வைத்துக் கொண்டு சொல்ல



"இது வேறயா?" இப்பொழுது பிங்கியின் காதில் புகை வெளியேறியது.



"இருந்தாலும் எரியுதுடா" விஷ்வதீரன் கண்கள் சிவக்க சொல்ல



"அட இந்த ரெட்டைக்குள்ள பொஸசிவ்னஸ் இருக்கோ?" உதட்டை சுளித்த பிங்கி "மாமா நா உங்க பொண்ணு மாதிரினு தயவு செஞ்சி சொல்லிடாதீங்க” இமைகளை வண்ணாத்தி போல படபடவென தட்டி காதல் பார்வை பார்த்தவாறே கொஞ்சும் மொழியில் “நீங்க என் க்ரஷ்" என்று வெக்கப்பட்டு சிரித்தாள்.



"க்ரஷ்ஷா" அண்ணன், தம்பி இருவரும் ஒன்றாக திகைக்க


"ஆமாம் மாமா எப்போ ஊர்ல இருக்கும் போது உங்கள மொத மொத பாத்தேனோ அப்போவே நீங்க தான் என் ஹீரோ நா அப்படியே மயங்கி தல சுத்தி.. டோடல் பிளாட்டு மாமா. இன்னைக்கும் நீங்கதான் என் க்ரஷ் எனக்கு உங்க கிட்ட பிடிச்சதே அந்த மீசை தான் மாமா. போலீஸ்னாவே மீசை வச்சாத்தான் கெத்து இல்ல” என்றவள் பேசியவாறே தீரமுகுந்தனுக்கு பரிமாற எதுவும் சொல்லாது அவன் சாப்பிட ஆரம்பித்தான். அவனின் முகமும், சாப்பிடும் விதமே அவனின் கோபத்தில் அளவை காட்டியது.


images (8).jpg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top