உன் நிழல் நான் தாெட final (1)

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
#1
உன் நிழல் நான் தாெட
--செசிலி வியாகப்பன்


அத்தியாயம் 23

சினங்கொள்வார் தமைத்தாமே தீயாற் சுட்டுச்
செத்திடுவா ரொப்பாவார்; சினங்கொள் வார்தாம்
மனங்கொண்டு தங்கழுத்தைத் தாமே வெய்ய
வாள்கொண்டு கிழித்திடுவார் மானு வாராம்.


தினங்கொடி முறைமனிதர் சினத்தில் வீழ்வார்
சினம்பிறர்மேற் றாங்கொண்டு கவலையாகச்
செய்ததெணித் துயர்க்கடலில் வீழ்ந்து சாவார்
மாகாளி பராசக்தி துணையே வேண்டும்;


வையகத்தில் எதற்கும்இனிக் கவலை வேண்டா;
சாகாம லிருப்பதுநம் சதுரா லன்று;
சக்தியரு ளாலன்றோ பிறந்தோம் பார்மேல்?
பாகான தமிழினிலே பொருளைச் சொல்வேன்;
பாரீர்நீர் கேளீரோ,படைத்தோன் காப்பான்;


வேகாத மனங்கொண்டு களித்து வாழ்வீர்
மேதினியிலேதுவந்தால் எமக்கென் னென்றே.

ஆறு வருடங்களுக்குப் பின்பு

இன்றைய சமுதாயத்தில் தனக்கு பிடிக்காத கணவர் மீது தண்டிக்க பெண்கள் தவறான புகார் அளிக்க பிரிவு 498 ஏ மற்றும் வரதட்சணை சட்டத்தை ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்.

அதையே தான் எனது கட்சிக்காரர் சேகர் மனைவி மீனாட்சியும் பயன்படுத்தியிருக்கிறார்.

ஆண் என்பவன் பெண்ணை கொடுமை படுத்துவதாகவும், அடக்கி ஆள்வதும் சித்திரிக்கப்படுவதே இத்தகைய குற்றச்சாட்டுகளை பெருகி வருவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

இன்று தாங்கள் வழங்கப்போகின்ற தீர்ப்பு எனது கட்சிக்காரர் சேகருக்கு மட்டுமல்லாமல் தவரான குற்றச்சாட்டால் பாதிக்கப்பட்ட அனைத்து ஆண்களுக்கு ஆதரவான தீர்ப்பாக இருக்கும் என்று நம்புகிறேன் தட்ஸ் ஆல் யுவர் ஆனர்." என தனது நீண்ட உரையை முடித்து விட்டு ஒரு பெருமூச்சுடன் தன் இருக்கையில் அமர்ந்தாள் ரத்னா.

சாட்சியங்களையும் ஆதாரங்களையும் வைத்துப் பார்க்கும் பொழுது குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் சேகர் தன் மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்த வில்லை என்பதும், கொலை முயற்சி செய்யவில்லை என்பதும் தெளிவாகின்றது. எனவே அவரை குற்றவாளி அல்ல என தீர்ப்பளித்து இந்த நீதிமன்றம் விடுதலை செய்கின்றது.

மேலும் கசேகர் மீது பொய்க் குற்றம் சுமத்திய அவரது மனைவி மீனாட்சியையும், அவரது தாயார் சௌந்தரவல்லியையும் இந்த நீதிமன்றம் வன்மையாக கண்டிக்கின்றது.

இந்த வழக்கை திறமையாக வாதாடி உண்மையை அனைவரும் முன் நிரூபித்த வழக்கறிஞர் ரத்னாவதியை இந்த நீதிமன்றம் மனதார பாராட்டுகிறது.

வரதட்சணை தடுப்புச் சட்டம் என்பது பெண்களை வன்காெடுமையிலிருந்து காப்பாற்றுவதற்காக தானே தவிர, ஆண்களை பிரச்சனையில் சிக்க வைப்பதற்காக அல்ல. ஆனால் இன்றைய காலகட்டத்தில் சில பெண்கள் இந்த வரதட்சணை தடுப்புச் சட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

ஆண்களுக்கு எதிரான தவறான புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது, இது அடிப்படை மனிதனின் உரிமைகளை மீறுவதால் இது ஒரு தீவிரமான பிரச்சினை.

பெண்கள் தங்கள் கணவர்களுக்கு எதிரான சட்டவிரோத கோரிக்கைகளை நிறைவேற்ற சட்டத்தின் விதிகளை இவ்வாறு தவறாக பயன்படுத்துகிறார்கள். எனவே மேலும் இது போன்ற வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்வதற்கு முன்பு தீரவிசாரித்து அதன்பின் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறது.

வழக்கு முடிந்து வெளியே வந்த ரத்னாவை சூழ்ந்துகொண்ட மீடியா இடைவெளி இல்லாது பல்வேறு கேள்விகளால் ரத்னாவை துளைத்து எடுக்க சற்று பொறுமையாகவே அனைவருக்கும் பதிலளித்தாள்.

"மேடம் எப்படி பெண்ணா இருக்கிற நீங்க ஒரு ஆணுக்கு ஆதரவாக இந்த வழக்கில் வாதாட ஒத்துகாெ ண்டீற்கள்."

"நான் என்னைக்கும் ஆண்களை என்னுடைய எதிரியாக நினைத்தது இல்லை. அதனால தான் என்னால இந்த வழக்கில் ஒரு ஆணுக்கு சாதகமா வாதாட முடிஞ்சிடுச்சு.
அதுமட்டுமில்லாமல் நான் சட்டம் படித்தது நீதியை காப்பாற்ற, அப்படி இருக்கும் பொழுது அது ஆண் பெண் யாராக இருந்தாலும் எனக்கு அது ஒன்னு தான்."

"இந்த வழக்கு மூலமா மக்களுக்கு நீங்க சொல்லக் கூடியது ஏதாவது இருக்கா."

"நிச்சயமா ஆண்கள் எல்லோரும் பெண்களுக்கு எதிரானவர்கள் இல்லை எதிரியும் இல்லை. இன்று பெண்கள் வெற்றி பெறுவதற்கு பல சமயத்தில் ஆண்கள்தான் உறுதுணையாக இருந்துகிட்டு வராங்க அப்படி இருக்கும் பொழுது பெண்களுக்கு சாதகமான ஒரு சட்டத்தை ஆண்களுக்கு எதிராக பயன்படுத்தக்கூடாது."

பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தகுந்த பதிலை கூறிவிட்டு தாமதமாக வீட்டிற்கு வந்த ரத்னாவை எதிர்கொண்டு வரவேற்றது புன்னகை முகத்தோடு இருக்கும் ரத்னாவின் மாமியார் மைதிலி

"இன்னைக்கு கோர்ட்ல கேஸ் நல்லபடியா முடிஞ்சுதா." என மைதிலி ரத்னாவிடம் விசாரித்துக் கொண்டிருக்க அங்கு வந்த கிருஷ்ணன்

"மைதிலி மருமக வீட்டுக்குள்ள வந்ததும் உன்னுடைய விசாரணையை ஆரம்பிக்கனுமா. இப்பதானே வீட்டுக்குள்ள வந்து இருக்கா சாப்பிட ஏதாவது கொடு, அதுக்கு அப்புறம் பொறுமையா நீ கேட்கலாம்."

"இருக்கட்டும் மாமா அத்தை ஆர்வமா என்கிட்ட கேட்கும்பொழுது பதில் சொல்லாம வேற எதையும் என்னால செய்ய முடியாது." எனக்கு சந்திரனிடம் கூறிவிட்டு தனது அத்தையிடம் திரும்பி

"வழக்கம்போல இந்த கேஸ்லயும் நான் ஜெயிச்சிட்டேன். இப்போ உங்களுக்கு சந்தோஷமா." சந்தோஷத்தில் துள்ளி குதித்த தன் மருமகளை கட்டிப்பிடித்துக்கொண்டு என்

"செல்ல மருமகன் ஜெயிச்சா எனக்கு சந்தோஷம் இல்லாமல் இருக்குமா! நீ போய் ட்ரஸ் மாத்திட்டு கீழ வா அதுக்குள்ளேயும் உனக்கு புடிச்ச ஸ்வீட் ரெடி பண்ணி வைக்கிறேன்." எனக்கூற

"சரி அத்தை நான் டென் மினிட்ஸ்ல ரெடியாகி கீழே வரேன்." என கூற நடப்பதை பார்த்துக் கொண்டே மகளை தூக்கிக்காெண்டு கீழே வந்த அஜீத்

"அம்மா இது எல்லாம் ரொம்ப ஓவர் நான் என்னைக்காவது ஆசையாய் பால் பாயாசம் வைத்து தங்கனும்னு சொன்ன முடியாதுன்னு சொல்றீங்க, சரி அது கூட பரவாயில்லை இதோ என் செல்ல குட்டி ஒரு லட்டு கேட்டா பூச்சி வரும், பல் சொத்தையாகி விழுந்துடும் சொல்லிக்கொடுக்க மாட்டேங்கறீங்க.

இதுவே உங்க மருமக நான் மட்டும் அதைக் கேட்ட எல்லாத்தையும் செஞ்சு உடனே கொடுக்குறீங்க. ரொம்ப ஓரவஞ்சனை பண்றிங்க மா." என அழுத்துக்கொள்ள அஜீத்தின் கையிலிருந்த மூன்று வயது ஆராதனா

"ப்பா ப்பாச்சி கேத்த ததாது நீ ம்மாச்சி கேத்த நிய்ய ததுவாங்க. ப்பாச்சி விட துப்பரா செஞ்சு ததுவாங்க. நீ இவங்ட தூ பாெடு பா. நீ ஆரு பாப்பா, ஆது ண்ணா அல்லாரும் ம்மாச்சி பாக்க பாேலாம்." என ஆராதனா தன்பிள்ளை மொழியில் கூற அதைக்கேட்டு தன் மனதுக்குள் சிரித்துக் கொண்டாலும் ரத்னா,

"நீ சொன்னா உங்க அப்பா உடனே கேட்பாங்களா? எங்க உங்க அப்பாவ கூட்டிக்கிட்டு உங்க அம்மாச்சி வீட்டுக்கு போ பார்க்கலாம்." தாயின் கையை பிடித்துக்காெண்ட ஐந்து வயது அர்ஜூன்

"அம்மா யூ டாேண்ட் வாெரி, நான் உன் கூட தான் இருப்பேன்." என கூற,

"ப்பா ப்பா நாம்ம போகலாம் "எனக் கேட்க ரத்னாவும் அஜீத்தை பார்த்து

'என்ன விட்டுட்டு நீ போயிடுவியா' என்பது போல் தனது புருவத்தை உயர்த்திக் காட்ட தன் மனைவியின் விழி மொழியில் வழக்கம்போல தன்னைத் தொலைத்த அஜீத், தன் கையில் இருக்கும் மகளை பார்த்து மகளை பார்த்து

"ஆரு மா அம்மா பாவம் இல்லையா நீ இல்லாட்டி யாரு அம்மாவ நல்லா பார்த்துக்குவாங்க. நீ இல்லாம அம்மா தனியா தூங்கு பயப்படுவாங்க தானே." என சத்தமாக கூறிவிட்டு மகளின் காதுக்குள்

"நாம போயிட்ட உங்க அம்மா தனியாவே இருக்கிற எல்லா ஐஸ்க்ரீமையும் சாப்பிட்டு காலி ஆகிடுவா. அதுமட்டுமில்லாம உங்க அம்மாவும் எங்க அம்மாவும் சேர்ந்து ரொம்ப சேட்டை பண்ணுவாங்க. அவங்கள கண்டிக்க யாராவது இங்க இருக்கனும் தானே. சாே நாம இங்கேயே இருப்போம்." என கூற

அஜீத் என்ன தன் மகளிடம் கூறி இருப்பான் என்பதை ரத்னா அவன் உதட்டசைவிலே அறிந்துகொண்ட ரத்னா அஜீத்தை முறைத்து பார்க்க அதை கவனித்த ஆராதனா

ப்பா ம்மா காேவமா பாக்கங்க பாப்பா ப்பாச்சி கிட்ட போதேன்." என அஜீத்தின் கையிலிருந்து நழுவி கீழே மைதிலியிடம் சென்றுவிட ரத்னா

"நான் என்ன சாப்பாடு ராமியா, என்னமோ நான்தான் உங்க சாெத்து எல்லாத்தையும் சாப்பாட்டு காலி பண்ற மாதிரி பேசுறீங்க. பாருங்க அத்தை உங்க பையன் என்ன சொல்றாங்கன்னு. எனக்கு ஒன்னும் நீங்க செய்ற எதுவும் வேண்டாம், அவருக்கே காெடுங்க." என கூறிவிட்டு தன் கையை பிடித்திருந்த அர்ஜுனை அழைத்துக்கொண்டு கோபமாக தங்கள் அறைக்குள் புகுந்து கொள்ள, மைதிலி

"ஏன்டா வந்ததும் வராததுமா அவளை இப்படி கஷ்டப் படுத்துற, என்னமோ வீட்டுக்கு விருந்தாளி வரமாதிரி மாசத்துல ஒரு நாள் ரெண்டு நாள் தான் வர. வரும்போது இப்படித்தான் அவள கிண்டல் பண்ணி அழ வைப்பியா.

உன்னால அவன் நான் செஞ்சது வேண்டாம்னு சொல்லிட்டு போற ஒழுங்கு மரியாதையா இத சாப்பிடவை." என்று தான் செய்திருந்த கேரட் அல்வா மற்றும் வெங்காய பக்கோடா கையில் தர அதை பார்த்த அஜீத்

"அம்மா இது உனக்கே நல்லா இருக்கா, ஒரு ஐஏஎஸ் கலெக்டரை இப்படி எடுபிடி வேலை பாக்க வைக்கிறியே."

"ஊரு உலகத்துக்கு நீ என்னவா வேணாலும் இருந்துட்டு போ, ஆனா இந்த வீட்டில நீ எனக்கு பையன் ரத்னாவுக்கு புருஷன் அதை மட்டும் ஞாபகம் வச்சுக்கிட்டு இரு.

இப்போ இத ரத்னா சாப்பிட மட்டும்தான் உனக்கு நைட் சாப்பாடு இல்ல, நீ பட்டினியா தான் இருப்ப ஞாபகம் வச்சுக்கோ." என விரட்டிவிட்டு தன் பேத்தியை தூக்கிக்கொண்டு சமையலறைக்குள் புகுந்து விட அஜீத் தன் தந்தையைப் பார்த்து

"அப்பா அம்மா என்ன அவ்வளவு வருத்து எடுக்கிறாங்க, நீங்க என்னடான இப்படி வேடிக்கை பார்க்கிறீர்களே ஏம்பா இப்படி."

"இனி எல்லாம் இப்படித்தான் மகனே, உனக்கு தான் நல்லா தெரியுமே உங்க அம்மாவுக்கு யாராவது ரத்னாவுக்கு பற்றி ஏதாவது சொன்னா பிடிக்காது. அதுவும் நீ ரத்னா சாப்பிடுற விஷயத்தை வைத்து கிண்டல் பண்ணா உங்க அம்மா சும்மா இருப்பாளா.
ஒழுங்கு மரியாதையா போயி ரத்னாவை சமாதானப்படுத்தி சாப்பிட வை இல்லன்னா உங்க அம்மா சொன்ன மாதிரி இன்னைக்கு உனக்கு சாேறு கிடையாது." எனக்கூறிவிட்டு அவரது அறைக்குள் சென்று மறைந்தார்

"என்ன வாழ்க்கைடா இது, லீவ்ல சொந்த வீட்டுக்கு வந்துட்டு போனால் நல்ல கவனி பாங்கன்னு நெனச்சா, வந்தவுடனே நம்மள இப்படி தட்டு தூக்க வச்சுட்டாங்களே, எவ்வளவோ பாத்துட்டோம் இத பாக்க மாட்டோமா."

அஜித் தங்கள் அறைக்குள் வரும்பொழுது அர்ஜுன் தன் தாயிடம்

"எதுக்குமா இப்போ இப்படி மூஞ்ச தூக்கி வச்சுக்கிட்டு உட்கார்ந்து இருக்க."

"நீ வேற டா மகனே உங்க அப்பா கிட்ட கோவமா பேசிட்டு, அப்பாச்சி செஞ்ச கேரட் அல்வா வெங்காய பக்கோடா சாப்பிடாம மேல வந்துட்டேன். அத நினைச்சாத்தான் கவலையா இருக்கு."

"அம்மா நீ வேணா பாரு அப்பாச்சி அப்பாவை நல்லா திட்டி, உனக்கு எல்லாத்தையும் மேல கொடுத்து விடுவாங்க பாரு."

"அப்படியே சொல்ற."

"எஸ்மா போன தடவை நீ கோவமா இருக்கும்பொழுது அப்படித்தான் பண்ணாங்க. எனக்கு தெரியும்."

"ஓகே இருந்தாலும் நீ கீழ போயி அம்மாவுக்கு கொஞ்சம் எடுத்து தனியா வை, அப்பா கொண்டு வரலன்னா அப்புறமா நான் கீழே வந்து சாப்பிடுகிறேன்."

"ஒருவேளை அப்பா கொண்டு வந்தாலும் பரவாயில்லை நீ கொஞ்சம் நான் கொஞ்சம் சாப்பிடலாம்." என ரத்னா கூற, அர்ஜுன் தன் கட்டை விரலை தூக்கி காட்டி

"ஓகே டன் அம்மா நான் கீழ போறேன்." எனக்கூறிவிட்டு சென்றுவிட இவையனைத்தையும் மறைந்திருந்து கேட்டாலும் மனதுக்குள் புன்னகைத்துக் கொண்டு தங்கள் அறைக்குள் நுழைந்தான்.

"செல்லக்குட்டி இப்படி உங்க அத்தான் மேல கோபப்படலாமா."

"என்ன செல்லம் கொஞ்ச வேண்டாம் உங்களுக்கு எப்பவுமே உங்க பொண்ணு தானே பிடிக்கும், அவ இல்லாட்டி மட்டும் என்னமோ உங்களுக்கு என்ன பிடிக்கிற மாதிரி நடிக்காதீங்க."

"ஏய் இதெல்லாம் ரொம்ப அநியாயம் மா, உன்ன புடிச்சு நான் கொஞ்சாமலா நம்ம ஆரு அச்சு வந்தாங்க."

ரத்னா அஜீத்தின் கேள்விக்கு பதில் சொல்லாமல் வெக்கப்பட்டு தலையை குனிந்து மௌனமாக இருக்க அவள் அருகில் வந்த அஜீத்

"ஒருவேளை மூணு வருஷம் கேப் விட்டதனால் உனக்கு மறந்து போயிருக்கும்னு நினைக்கிறேன், இட்ஸ் ஓகே மறந்ததை சீக்கிரமா ஞாபகப்படுத்தி விடலாம்."

தன்னிடம் நெருங்கி வந்த அஜீத்திடம் விலகி கட்டிலில் தள்ளிவிட்டு ரத்னா பாத்ரூமில் சென்று புகுந்துகொண்டு

"எங்கிட்டயே வா நீங்க எப்போ எப்படி பேசுவீங்கன்னு எனக்கு தெரியாதா." என நாக்கை துருத்தி காட்டிவிட்டு கதவை அடைத்துக் கொள்ள, வெளியில் இருந்த

"அஜீத் நீ எவ்வளவு நேரம் உள்ள இருப்பேன்னு நானும் பாக்குறேன். எப்படியும் இத சாப்பிட வருவதான."

அன்று குமாரின் இறந்த சடலத்தை பார்த்தபின்பு ரூபா மனநிலை பாதிக்கப்பட்ட நிலையிலேயே இருந்தாள். இவ்வளவு நடந்த பின்பும் ஹர்ஷத் ரூபாவை நல்ல முறையிலேயே கவனித்துக் கொண்டான். அதற்கு அவனது பதில்

"சில சமயத்துல காதல் முட்டாள்தனமாகும் மூர்க்கத்தனமாகவும் நிறைந்ததா இருக்கும். இந்த குமார் மேல வச்சிருந்த காதல் அவள மூர்க்கத்தனமாக மாற்றிவிட்டது. நான் ரூபா மேல வைத்திருந்த காதல் என்ன முட்டாளாகவே மாத்திட்டு. இப்போ கூட என்னால ரூபாவை விட்டுக்கொடுக்க முடியாது."

அன்று நடந்த சம்பவம் அங்கு இருந்த இவர்களை தவிர வேறு யாருக்கும் தெரியாமல் போனது. போலீசாரை பொருத்தவரையில் குடும்பப் பகையின் காரணமாகவே குமார் ரத்னாவை கடத்தியதாகவும், ரத்னாவை காக்கச் சென்ற இடத்தில் ரூபா குமாரை கொலை செய்ததாகவும், அப்பொழுது ஏற்பட்ட காயத்தால் ரூபா மனநிலை பாதிக்கப்பட்டதாகவும் வழக்கு பதிவானது.

அந்த சம்பவம் நடந்து சில ஒரு வருடத்திலே ரூபா தற்காெலை செய்து காெள்ள, இறுதிச்சடங்கில் ஒருவித இறுக்கமான மனநிலையுடனே அனைவரும் கலந்து கொண்டனர். என்னதான் ரூபாவின் சுயரூபத்தை அறிந்து வைத்திருந்தாலும் அவள் மரணத்தை ரத்னா தங்கவேலு மற்றும் ஹர்ஷத்தால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

நாட்கள் அதன் போக்கில் சென்று அனைவரும் ஓரளவு தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். மறந்தும் நடந்த பிரச்சனை பற்றி தங்களுக்குள் பேசிக்காெள்ளவில்லை.

இப்பொழுதெல்லாம் ஆர்த்தி அனைவருக்கும் பிடித்தமான மாறிப் போனாள். அதற்காக தன் குணத்தை மாற்றிக் கொண்டாள் என்று இல்லை. தன் அடிப்படை குணத்தை மாற்றாமல் அனைவரையும் ஏற்று ஈர்த்தாள் என்பதே உண்மை.

கிருஷ்ண சந்திரன் அர்ச்சனாவிற்கு திருமண விஷயத்தில் முழு சுதந்திரம் தர, அர்ச்சனாவாே தன் தந்தை கூறும் நபரை திருமணம் செய்து கொள்வேன் என்று முடிவாக கூறிவிட்டாள்.

அர்ச்சனாவிற்கு மூன்று வருடங்களுக்கு முன்புதான் திருமணம் டாக்டர் ராம் பிரசாத் சிறப்பாக நடந்து முடிந்தது. இப்பொழுது அர்ச்சனாவிற்கு ஒன்றரை வயதில் ஒரு மகன் சூர்ய பிரகாஷ் இருக்கின்றான்.குளியலறையை விட்டு வெளியே வந்த ரத்னாவை பால்கனிக்கு அழைத்து வந்த அஜீத்

"ரத்னா நான் உன்கிட்ட ஒன்னு சொல்லுவேன் நீ கோபப்படக் கூடாது சரியா." அஜீத் கொடுத்த பில்ட் அப்பில் அவன் கூறப் போகின்ற விஷயம் தனக்கு கோபத்தை தரக்கூடியது என்பதை புரிந்துகொண்ட ரத்னா

"மொத நீங்க விஷயத்தை சொல்லுங்க அதுக்கு அப்புறம் நான் கோவப்படனுமா வேண்டாமா என்று முடிவு பண்றேன்."

"அது வந்து எனக்கு மறுபடியும் டிரான்ஸ்பர் கிடைச்சு இருக்கு, இந்த தடவை நாகர்கோவில்." என அஜீத் கூறி முடிப்பதற்கு முன்பு பொறுமை இழந்த ரத்னா

"உன்னால ஒரு ஊருல உருப்படியா இருக்க முடியாதா நானும் பார்த்துடே இருக்கிறேன் இந்த நாலு வருஷத்துல ஆறு ஊருக்கு மாறி இருக்க. நானும் நீ இருக்கிற இடத்துக்கு மாறி வர முயற்ச்சி பண்றதுக்கு முன்னாடி நீ கையில டிரான்ஸ்பர் லெட்டர் கூட வந்து நிக்கிற.
இப்போ அர்ஜூன், இன்னும் மூணு மாசத்துல பாப்பா ஸ்கூல்ல சேர்க்கனும், அப்போ நீ போற இடத்துக்கு எல்லாம் பாப்பா ஸ்கூல் பேக்க தூக்கிட்டு வரணுமா."

"என்ன நான் என்ன வேணும்னா டிரான்ஸ்பர் கேட்டு வாங்கி இருக்கிறேன். எங்களுடைய திறமையை பார்த்து ஒவ்வொரு மாவட்டத்து ஆட்களும் எங்க இடத்துக்கு வாங்க கூப்பிடுறாங்க.
மக்கள் கோரிக்கையை மறுக்கமுடியாத நம்ம அரசாங்கம் நீங்க கொஞ்ச நாள் அந்த ஊர்ல இருந்து வாங்கன்னு என்ன அனுப்பி வச்சிருக்காங்க. அதுக்கு நான் என்ன பண்ண."

"இப்படி எல்லாம் பாவம் போல மூஞ்ச வச்சிக்கிட்டு சொன்னா நான் விடுவேனா. என்ன பண்ணிங்க எதுக்காக உங்களுக்கு இந்த டிரான்ஸ்பர் பண்ணி இருக்காங்க."

"வழக்கமான அரசியல் தான். இன்னும் கொஞ்ச நாள்ல எலக்சன் வரபாேது. சாே நான் இருந்தா அவங்களுக்கு பிரச்சனை அதான் என்ன மதுரை டிரான்ஸ்பர் பண்ணி இருக்காங்க.
எனக்கு பிரச்சனை எதுவும் இல்ல மதுரை டு கோயம்புத்தூர் ரொம்ப பக்கம் நீ வெள்ளிக்கிழமை கோர்ட்ல இருந்து நேரா கிளம்பின நைட் சீக்கிரமா வந்துடலாம். அப்புறம் திங்கட்கிழமை காலையில கோயம்புத்தூருக்கு கிளம்பினால் போதும்."

"ஐயா என்ன பாக்க வர மாட்டீங்க, நான் தான் உங்கள பாக்க கோயம்புத்தூர் டு மதுரை போயிட்டு போயிட்டு வரணுமா."

"ரத்னா ப்ளீஸ் செல்லம் புரிஞ்சுக்கோ."

"புரியுது இருந்தாலும் எனக்கு உங்க கூடவே இருக்கணும் போல தோணுது. நம்ம காலேஜ் டேஸ்ல மோஸ்ட்லி நீங்க என் கூட தான் இருந்தீங்க ஆனா இப்போ நீங்க ஒரு இடத்தில நான் ஒரு இடத்தில."

"எனக்கு மட்டும் இதுல வருத்தமா இல்லையா. அதனால இந்த தடவை நமக்காக ஒன்னு செஞ்சிட்டுதான் இங்க வந்திருக்கேன்."

"என்ன செஞ்சிருக்கீங்க."

"நீ இந்த தடைவை மதுரைக்கு என்கூட வர. நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து வீடு செட் பண்ணலாம்." ஒரு நிமிடம் மகிழ்ச்சி துள்ளிக்குதித்து ரத்னா அடுத்த நிமிடம்

"அர்ஜுன் படிப்பு.....?"

"அடியே அவன் என்ன ஐஏஎஸ் ஆ படிக்கிறான், அவன் படிக்கிற அரை கிளாஸ இங்க படிச்சா, என்ன மதுரையில படிச்சா என்ன. சரி சரி முறைக்காத அடுத்த வாரம் மதுரையில இருக்கணும். அதுவரைக்கும் கொஞ்சம் என்ன கவனி."

"அத்தான மதுரையில போய் கவனிக்கலாம், நாளைக்கு பிரபு கல்யாணம் நாம இன்னைக்கு நைட் ரிசப்ஷன்கு அங்க போகணும் சீக்கிரம் கிளம்புங்க."
 
Advertisement

Sponsored