உன் கண்ணில் என் விம்பம் teaser 2

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் கியூட்டிபாய்ஸ் முதல் அத்தியாயத்திலிருந்து ஒரு குட்டி teaser:geek:

வரும் ஆகஸ்ட் மாதம் 4 ம் திகதி ல இருந்து கதையை ஆரம்பிக்கிறேன்.

இந்த தடவ என் ஊர்ப்பக்கம் போய்ட்டேன்:giggle::giggle:

"கடைல காசு வாங்கிட்டு வரேன் நீ போ" கோவில் வாசல்வரை வந்த மங்கம்மா முன்னே நடந்தாள்.

ஊர் கோவில் ரொம்ப பெரியது. மதில் சுவரே அரை கிலோமீட்டருக்கு இருக்க,மனம் படபடக்க உள்ளே சென்ற யாழிசை விளக்கேற்றி கடவுளை வணங்கியவள் வெளியே வர பாதையும் வெறிச்சோடி இருந்தது. ஒரு ஈ, காக்காய் கூட அந்நேரத்தில் இல்லை. கோவிலை தாண்டி வலது புறத்தில் விளையாட்டு மைதானம். மைதானத்துக்கு முன்னால் கோவிலை தாண்டி ஓடும் ஓடை. மைதானம் முடிவுறும் வளைவோடு கடை. கடையிலிருந்து எட்டிப்பார்த்தால் இவள் நிற்பது தெரியும். மழை வருவது போல் இருக்க மைதானத்தை விளையாடும் சிறுவர்களை காணவில்லை. இல்லையெனில் பள்ளிவாசலில் அதான் ஒலிக்கும் நேரம் தான் வீடு செல்வார்கள். கடைக்கு சென்ற மங்கம்மாவை இன்னும் காணவில்லை. யாருடன் கதையடித்துக் கொண்டு இருக்கிறாளோ! ஒருவேளை காசை எடுத்துக் கொண்டு வீடு சென்றாளோ! யாழிசையின் எண்ணம் இவ்வாறு இருக்க, அவளின் இடது புறத்தில் பத்தடி தள்ளி கருப்புற நிற ஜீப் வண்டியிலி அமர்ந்து இவளின் முகபாவங்களை ரசித்துக் கொண்டிருந்தான் ரிஷி என்கிற ரிஷி வரதன்.

இரண்டு வருடங்களில் எவ்வளவு மாற்றம். அன்று கொஞ்சம் முகத்தில் குழந்தை தனமாய் இருந்தவள், இன்று குமரியாய். பச்சை நிற தாவணி, பூக்கள் கொண்ட பாவாடை, ரவிக்கை சிவப்பு நிறத்தில். சின்னதா கருப்பு வட்டப் பொட்டு. கையில் சிவப்புநிற பிளாஸ்டிக் வளையல்கள். காதில் சின்னதா தங்கத்தோடு. கழுத்தில் எந்த அணிகலனும் இல்லை. அன்று போலவே கனகாம்பரம் தான் சூடியிருந்தாள். அதுவே அவளை தேவதையாக காட்ட, ரிஷியின் பார்வையோ அவளின் செழுமைகளிலேயே இருந்தது.

அன்னை எங்கே! என்று திருவிழாவில் காணாமல் போன குழந்தைபோல் முழித்துக் கொண்டிருந்தவளின் கண்களும் லேசாக கலங்க அவள் அருகில் சைக்களில் வந்து நின்றான் ஜகத்.

images (39).jpg

ஜகத் ஒரு பௌத்தன். பக்கத்து வீடு. யாழின் அத்தான் சிடுமூஞ்சி இளவேந்தனின் நண்பன். ஏன் கமரின் அண்ணன் ராஷீதின் நண்பனும் கூட. அறிந்தவன் என்பதால் யாழ் சினேகமாக புன்னகைக்க ரிஷியின் கண்கள் சிவந்தது.

"ஆ.. நங்கி கோவிலட ஆவாத? {தங்கச்சி கோவிலுக்கு வந்தீயா?}

"இல்லடா கடைக்கு வந்தேன்" மனதில் குமுறினாலும் "ஆமாம்" எனும் விதமாக தலையசைக்க

"நங்கி பொடி உதவ்வக் கரணவாத?" "ஒரு சின்ன உதவி செய்ரியா?"

"என்னடா இது வம்பா போச்சு. தெரிஞ்சவன்னு சிரிச்சது ஒரு குத்தமா? என்ன கேக்க போறானோ" என்று நினைத்தவள் கலவரமாக முகபாவத்தோடு சுற்றும் முற்றும் பார்க்கலானாள். ஏனெனில் யாராவது பார்த்து விட்டு "அன்னையிடம் சொன்னால்? ஐயோ கடைக்கு போய் இருக்கும் அன்னை வந்தால்? எதனால் அடிப்பாளோ!" என்ற எண்ணமே மனதில் ஓட ஜகத் நீட்டிக்க கொண்டிருந்த காகிதத்தை கவனிக்கவில்லை.

ஜீப்பில் இருந்த ரிஷிக்கோ அவன் இவளிடம் காதல் கடிதம் நீட்டுவது போலவே! தெரிந்தது. அவன் பேசும் பாஷையும் புரியவில்லை. என்னதான் நடக்குது வாங்குவாளா? அவ மட்டும் வாங்கட்டும் அவனை கொன்னுடுறேன்" கைமுஷ்டி இறுக யாழிசையை தான் பாத்திருந்தான்.

அவளை பார்த்து இரண்டு வருடங்கள் இருக்குமா? இன்றுவரை மறக்க முடியாத முகம். இனிமேல் பொறுக்க முடியாது என்றுதான் கிளம்பி வந்திருந்தான். அவளை முதலில் சந்தித்த இடத்துக்கே வந்து அவள் வருவாளா? மாட்டாளா என்று தவமிருக்க, எவன் கூடயோ!" அதற்க்கு மேல் அவனால் யோசிக்க முடியவில்லை.

"நங்கி ப்ளீஸ் மேக நிஷா நங்கிட தெண்ட" {இதை நிஷாக்கு கொடு} என்றவன் பலவந்தமாக கையில் திணித்து விட்டு சைக்கிளில் பறந்து விட்டான். அவன் செய்த இச்செயலால் யாழிசை காலம் முழுவது ரிஷியிடம் பேச்சு கேக்க வேண்டியிருக்கும் என்று அவன் அறிந்திருப்பானா?

ஒருநொடியில் கையை பிடித்து காகிதத்தை திணித்து விட்டு ஜகத் சென்று விட யாழிசை அதிர்ச்சியில் உறைந்தாள். அவன் நிஷா என்று சொன்னது கமரை என்றது புத்தியில் உரைக்கவே!

"நண்பன்னு வீட்டுக்குள்ள விட்டா என்ன வேல பாக்குறான்? அடேய் அவ அண்ணன் கிட்ட கொடுக்க வேண்டியது தானே! உன்ன உரிச்சு உப்பு கண்டம் போட்டுடுவான்" ராஷீதின் "உர்ர்" முகம் நியாபத்தில் வரவே, முகத்தில் புன்னகை மலர அதை கண்டு ரிஷியின் இரத்தம் சூடாகியது.

"நீ எனக்கு மட்டும் தாண்டி சொந்தம். உன் மனசுல நா மட்டும் தான் இருக்கணும்" யாழிசையை பார்த்தவாறே கருவியவன் கதவை திறந்துக் கொண்டு இறங்கி சோம்பல் முறிக்க

images (53).jpg

திடீரென கேட்ட சத்தத்தில் ஜீப்பில் இருந்து வாட்ட சாட்டமாக ஒருவன் இறங்குவதை கண்டவள் அவனை பார்க்க, தாடி வைத்த முகம். கண்ணில் கூலரோடு

"புள்ள புடிக்கிறவன் மாதிரி இருக்கான்" என்று கண்கள் ஆராய மனமோ

"ஐயோ யாரிவன் எல்லாத்தையும் பாத்துட்டானோ! சோம்பல் முறிக்கிறத பாத்தா? தூங்கி கிட்டு இருந்திருப்பான் போல" தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு யாழிசை மீண்டும் அன்னை வருகிறாளா என்று பார்க்க அவள் வரும் அறிகுறியில்லை. சூரியனும் மங்கிக் கொண்டு வர இதற்க்கு மேல் இங்கிருப்பது நல்லதல்ல என்ற எண்ணம் மேலோங்க மெதுவாக வீடு நோக்கி நடக்கலானாள்.

ரிஷியை கடக்கும் போது யாழிசையின் ஜடையை பிடித்து இழுத்திருந்தான் அவன். அவன் இழுத்த வேகத்தில் அவன் மேலே அவள் சாய அவளை பின்னாள் அணைத்தவன் அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து "யார் டி அவன்" என்று கேட்டவாறே அவள் கையிலிருந்த கடிதத்தை பிடுங்கி இருந்தான்.

அவனின் தடித்த உதடுகள் நச்சென்று கழுத்து வளைவில் முத்தம் பதிக்க, ஒரு ஆணின் முதல் ஸ்பரிசம். மேனி சிலிர்க்க, இதயம் படபடக்க, உடல் பயத்தால் உதற, அதிர்ச்சியில் உறைந்தாள் யாழிசை.
 
Sharmiseetha

Well-Known Member

View attachment 4048

View attachment 4047

Ennappa ennum paththu naal akuma ud varathukku very bad dear i miss you darling and very nice teaser
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top