உன்னில் நான் தோழியே...!!!!

vigneshwari

Writers Team
Tamil Novel Writer
#1
வணக்கம் நட்புக்களே,
நான் புதிதாக கதை எழுத ஆரம்பிக்கும் சிறிய குழந்தை...என்னுடைய கதையில் உள்ள நிறை மற்றும் குறைகளை கூறி என்னை ஊக்கப்படுத்துங்கள் தோழைமைகளே.......
Lovers-Best-Friends-Female-Ladies-Girls-Lesbians-839809-446x297.jpg

அத்தியாயம் -1
வானத்தில் அழகாக காட்சியளித்துக்கொண்டிருந்த நிலாவை பார்த்து கிளம்பு கிளம்பு .....நான் போய்த்தான் அனைவரையும் எழுப்பனும் என்று சூரியன் சொல்லுவதை கேட்ட நிலா, சரிதான் பூமில நிறைய தூங்குமூஞ்சிகள் இருக்கு....அதனால் நீங்கள் போனாதான் அவர்கள் கண்ணை திறப்பார்கள் அதனால நான் என் இடத்தை காலிபண்ணுறேன் என்று சொல்லிக்கொண்டு மறைய சூரியன் தனது வெப்பதையும் ஒளியையும் பூமாதேவிக்கு அள்ளி கொடுக்க கிழக்கில் தனது அரியாசனத்தில் அமர்ந்தது...
கம்பீரமாக இருக்கும் மதுரை மாநகரில் ஒரு இரண்டுமாடிக்கட்டிட வீட்டில்…..மணி 5:3௦ ஆச்சு ஒரு பொம்பள பிள்ளை இன்னும் தூங்குற எழுத்து வாசல் தொளிச்சு கோலம் போடனும் அப்படில இல்ல...என்று பார்வதி கத்த ஐயோ டைம் ஆகிடுச்சா நம்மா கதை வேற படிக்கனும்..அப்புறம் காலேஜ் க்கு வேற கிளம்பனும்..இன்று தூக்கத்தில் கனவு கண்டு கொண்டிருந்த நித்தியாவை, பாப்பா எழுந்திரி உங்க அம்மா திடுற பாரு என்று தட்டி எழுப்பிய ராஜனிடம் அப்பா இன்னும் ஒரு 10 நிமிடம் என்று சொல்லி விட்டு போர்வையை இழுத்து கொண்டு தூங்க ஆரம்பித்தாள்.
சரியாக 10 நிமிடத்தில் எழுந்தவள் அம்மா நான் ப்ரைஸ் ஆகிட்டு வரேன் எனக்கு காபி போட்டு வைங்க என்று சொல்லிவிட்டு அடுத்த ஒரு மணி நேரத்தில குளித்து முட்டித்துவிட்டு வந்து அம்மா காபி கொடுங்க என்று சொன்ன நித்தியாவைப் பார்த்து ஒரு பொண்ணு குளிக்க எவ்வளவு நேரம் இன்னும் தலைய வேறா பின்னல் போட ஒரு அரைமணி நேரம் உனக்கு என்று திட்டிக்கொண்டு காபியையும் கொண்டு வந்த பார்வதியை பார்த்து அம்மா எப்படினாலும் சரியான நேரத்துக்கு கிளம்பிருவா இந்த நித்தியா, அதான் நேற்று பஸ்சை விட்டியா என்ற பார்வதியை பார்த்து அம்மா நான் சரியான நேரத்துக்குத்தான் போனான் ஆனால் அந்த ரைவர் அண்ணா தான் சீக்கிரம் வந்துட்டாங்க அதுமட்டும் இல்லை அம்மா நேத்து எல்லாரும் பஸ்சை விட்டுடாங்க…… என்று சொன்ன நித்தியாவை பார்த்து பஸ் என்ன சும்மாவா போச்சு என்று கேட்டாக இல்ல அம்மா என்று சொன்னவளை பார்த்து சரி அள்ளிபோடாத போ சாமியை கும்பிட்டு வந்து கிளம்புற வழிய பாரு என்று சொல்லிவிட்டு சமையல் அறைக்கு சென்று விட்டார்.
நித்தி சாமி அறைக்கு சென்று தனக்கு மிகவும் பிடித்தமான பிள்ளையாரைப்பார்த்து

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம் பிறை போலும் மெயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே
என்று பாடி முடித்து விட்டு,சாமி எனக்கு எவ்வளவு பிரச்சனை வேண்டும்னாலும் குடுங்க ஆனால் அந்த பிரச்சனையில் இருந்து வெளில வர தைரியத்தை கொடுங்கள், எப்பவும் எல்லாருக்கூடயும் இருக்கனும் நீங்கள்...என்று சொல்லி விட்டு படிக்கட்டுகளை வேகமாக தாவித்தாவி வந்தவளை பார்த்து அவளுடைய தம்பி மித்திரன் பார்த்து வா கட்டிடம் இடிந்து விழுந்துவிட போது என்று சொன்னவனை பார்த்து, ஹாஹா சிரிச்சுட்டேன் நீ சொன்ன ஜோக்க்கு என்று சொல்லிக்கொண்டு தாவியவள் தொப் என்று விழ ஐயோ...! அம்மா என்று கத்த சமையல் அறையில் இருந்து வந்த பார்வதி இன்னும் சின்ன பிள்ளை என்று நினைப்பு நடத்துவரமுடியாது என்று திட்ட பாவமா முகத்தை வைத்து கொண்டு எழுந்தவளை பார்த்து மித்திரன் பழிப்பு கட்டி விட்டு குளியல் அறையில் நுழைய பார்வதி முறைத்துவிட்டு சமயல் அறையில் நுழைய அவளுடைய மனசாட்ச்சி எல்லாரும் போனதுக்கு அப்புறம் வந்து, அட லூசு நித்தி எப்படியா விழுந்து என் மானத்தை வாங்குவ பாவி என்று திட்டிய மனசாட்சியை பார்த்து உனக்கு கூட என்மேல கருணை இல்ல..போ போய் அமைதியா தியானம் பண்ணுற வேளைய பாரு நான் காலேஜ் கிளம்பனும் என்று சொல்லிவிட்டு காலேஜ் கிளம்பி சென்றாள்
ஹாய்...நித்தி...என்று தேன்மொழி பஸ்ல இருந்து இறங்கி தங்களுடைய இடத்திற்க்கு வந்த நித்தியை பார்த்து கூற, இதற்க்கு ஒன்னும் குறைச்சல் இல்லை என்று கூறி விட்டு முறைத்து கொண்டு வந்தாள் நித்தியா ....இதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த தேவி,சுதா,ஸ்ரீ,ரம்யா அனைவரும் உங்களுக்கு வேற வேலையே இல்லை என்று கூறிக்கொண்டு வகுப்பிற்கு சென்றனர்.....அவர்களுக்குள் அப்படி என்ன சண்டை என்று பார்ப்பதற்க்கு முன்னாடி அவங்கள பத்தி ஒரு சின்ன அறிமுகம் ......

ஹாய் நான் நித்தியா...நான் மதுரையில் உள்ள பிரபலமான காலேஜ்யில் இரண்டம் வருடம் பி.டேக் கெமிக்கல் என்ஜினீயரிங்...படிக்கிறேன்....எனக்கு ஒரு தம்பி அவன் பெயர்: மித்திரன், பார்வதி எங்கள் அம்மா,ராஜன் எங்கள் அப்பா....அப்புறம்..... நான் நல்லா பேசுவேன். எந்த கதை புத்தகங்ளை படிச்சாலும் தூங்கமாட்டேன்,... அவ்வளவுதான்.. என்னயை பற்றி கதையில் தெரிச்சுக்கோங்க.........ஏன்னென்றால்... சொல்லுற அளவுக்கு ஏதும் இல்லை....
ஹேய் நான் தேன்மொழி .....நானும் இதே காலேஜ்ல கெமிக்கல் என்ஜினீயரிங் இரண்டம் வருடம் தான் படிக்கிறேன்...எனக்கு ஒரு தங்கச்சி,அவள் பெயர்:சுபா ; ஒரு அண்ணா,அவன் பெயர்: விஸ்வா, அம்மா பெயர்: சுமதி, அப்பா பெயர்:சிவா ........ அப்புறம் இந்த நித்தி ஓட உயிரை வாங்க பிறந்தவள்...அவளும்தான்..... நான் வகுப்பில் தூங்கமாட்டேன் நான் ரொம்ப அமைதியான பொண்ணுகங்க.....!!!!!

இவங்களை பத்தி நான் சொல்லுறேன்....ரெண்டு பேரும் ரொம்ப பாசக்காரங்க ....யாரையும் யாருக்கும் விட்டு தரமாட்டாங்க.....ஆனா ரெண்டும் பெரும் ரொம்ப சண்டை போடுவாங்க.....ரெண்டு பேரும் நல்ல படிப்பாங்க....இவங்கள பாக்குறவங்க இவங்கள ரொம்ப அமைதியான பொண்ணுங்கனுதான் சொல்லுவாங்க....ஆனா பாவம் கூட இருக்குற...ஸ்ரீ,சுதா, தேவி,ரம்யா, புவனா க்கு தான் இவங்கள பத்தி தெரியும்.
அடுத்த எபிசோடுல இருந்து இவங்களோட சண்டை...பாசத்தையும், இவங்களோட வாழ்க்கைல நடக்கும் ஸ்வாரசியமான பிரச்சனைகளையும் பார்ப்போம்.......
 
#5
:D :p :D
My heartiest வெல்கம்,
விக்னேஷ்வரி டியர்
உங்களுடைய "உன்னில்
நான் தோழியே"-ங்கிற
அருமையான, அழகான
புதிய, லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
விக்னேஷ்வரி டியர்
 
Last edited:

vigneshwari

Writers Team
Tamil Novel Writer
#8
:D :p :D
My heartiest வெல்கம்,
விக்னேஸ்வரி செல்லம்
உங்களுடைய "உன்னில்
நான் தோழியே"-ங்கிற
அருமையான, அழகான
புதிய, லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
விக்னேஸ்வரி பாப்பா
tq akka...
 

New Posts

Advertisement

New Episodes