அவள் 2

Advertisement

11std A1 அந்த வகுப்பறை கதவுக்கு மேலே எழுதப்பட்டிருந்தது.

இன்றுடன் இவள் பள்ளியில் சேர்ந்து ஒரு மாதம் ஆகிறது. யாரிடமும் அவ்வளவு ஒட்டுதல் இல்லை.சுபா, ராஜேஷ் தவிர யாரிடமும் அதிகம் பேசியதில்லை. அதுவும் ஆசிரியர்களிடம் அளவோடு தான்.மற்றவர்கள் பார்வைக்கு அவள் திமிர் பிடித்த பெண்.அதுபோக அவளிடம் ஒரு விசித்திரத்தை உணர்ந்தார்கள்.

ச்ச என்ன பேட் ஸ்மெல் இது? இப்படி குடலை பெரட்டுது. வர வர க்ளாஸ் வரவே பிடிக்கலை. ப்ரீத்தி இப்படித்தான் எப்பவும் ஏதேனும் கத்தி கொண்டே இருப்பாள்.
அடுத்தவரை மட்டம் தட்டுவதென்றால் அத்தனை ஆசை.

இவளுக்கு வேற வேலையில்லை என்றபடி சுபா மித்ராவிடம் பேசிக் கொண்டிருந்தாள்.


.ஒரு வாரமாக ராஜேஷ் பள்ளி வரவில்லை. அவர்களின் உரையாடல் அதைப் பற்றிதான்.

ராஜேஷ் அதே வகுப்பில் படிப்பவன் தான்.படு சுட்டி. துறு துறு வென்று இருப்பான். ஜாலியான டைப். அவன் இருக்குமிடத்தை சுற்றி சிரிப்பு சத்தம் கேட்டபடி இருக்கும். ஆண் பெண் பேதமின்றி நட்பு பாராட்டுபவன்.

மித்ரா பள்ளி வந்த முதல் நாள் தானாக அவளிடம் முன் வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.கூடவே சுபாவும் நின்றிருந்தாள்.

ஹை ஐ யாம் ராஜேஷ். யுவர் குட் நேம்.?

மித்ரா

ஓ நியூ ஜாயினி போல.. இதுக்கு முன்னாடி ஸ்கூல்ல உன்னை பாத்ததேயில்லையே.
இதுக்கு முன்னாடி எங்க படிச்ச.

பதிலில்லை

ஏன் பேசமாட்ற?

அதற்குள் ஆசிரியர் வர தன் இடத்தில் சென்று அமர்ந்தான்.

உணவு வேளையில் எல்லோரும் சிறு சிறுக் குழுக்களாக அமர்ந்து அரட்டையடித்தபடி உண்ண தனியாக அமர்ந்து சாப்பிட்டாள் மித்ரா.

மித்ரா எங்க கூட ஜாயின் பண்ணிக்கோ. சேர் பண்ணி சாப்பிடலாம். வா............ சுபா

நோ தேங்க்ஸ்

நீ வரலனா என்ன நாங்க வரோம்... வா சுபா...

ராஜேஷ் சுபாவும் அவளிருக்குமிடம் வந்து அமர்ந்து உண்டனர்.

மித்ரா சாப்பிடும் முன் லன்ச்பாக்ஸ் மூடியில் எடுத்துவைத்திருந்த உணவை சாப்பிட்டுவிட்டு உங்கம்மா சமையல் சூப்பர் மித்ரா. நீ ரொம்ப லக்கி என்றான்.

உடனே அம்மா நியாபகம். அன்று மட்டும் நான் கொஞ்சம் கவனமாக இருந்ததிருந்தால் இந்த பிரிவு நேர்ந்திருக்காதே.கண்ணில் துளிர்த்த நீரை யாருமறியாமல் தட்டி விட்டாள்.

திரும்ப வகுப்பில் நுழைகையில் ப்ரீத்தி அழைத்தாள். ஏஏஏ இங்க வா...
உனக்கென்ன இன்னைக்கு ப்ரீயட்ஸா நீ போகும் போது இரத்தவாடை வருது.உணவுண்டு விட்டு நிறைய பேர் அப்போதுதான் வகுப்பில் நுழைந்திருந்தனர். அத்தனை பேரின் முன்பு
இப்படி கேட்பது அவளுக்கு அசிங்கமாக இல்லை போலும்.

இதுக்குத்தான் ப்ரீத்தி உன்ன குளிச்சிட்டு வர சொல்றது. இப்போ பாரு உன் ஸ்மெல்ல உன்னாலயே தாங்க முடியல.ராஜேஷ் சீண்டினான்.உடனே சுபா

என்னடா இப்படி சொல்லிட்ட அதெல்லாம் அவ ஆறு மாசம் முன்னாடியே குளிச்சிட்டா

ஆறு மாசமா குளிக்கலைனா அனிமல்ஸ் கூட கிட்ட வராது சுந்தர் சி பானியில் ராஜேஷ் சொல்ல..

அங்கிருந்தோர் எல்லோரும் சிரித்து வைத்தனர். மித்ராவின் முகத்தில் கூட சிறு புன்னகை.அவமானத்தில் முகம் கறுத்த
ப்ரீத்தி ராஜேஷ் மேல் டஸ்டரை தூக்கி வீசிவிட்டு சென்றாள். கேட்ச் என்றபடி அதை பிடித்துக் கீழே போட்டான்.

அதன் பிறகு கொஞ்சம் சுபாவிடமும் ராஜேஷிடம் மட்டும் நட்பாக இருந்தாள்.

என்ன ஆயிற்று இவனுக்கு என்று சிந்தித்தாள். உடல் நல குறைவு போலும். என நினைத்தாள்
இறுதி வகுப்பு முடிந்து வகுப்பிலிருந்து
வெளிவந்தவள் மீது 12 ஆம் வகுப்பு பையன் ஒருவன் வேண்டுமென்றே மோதினான்.

அவனை முறைத்தபடி நடந்து சென்றாள்.
அடுத்த கணம் எங்கிருந்தோ வந்த கல் அவன் மண்டையை பதம் பார்த்தது. ஆஆஆ
பொறுக்க முடியாமல் வலியில் கத்தினான்.

சுபா சற்று தூரத்திலிருந்து இந்த காட்சியை பார்த்துக் கொண்டிருந்தாள். கல் வந்த திசையில் யாருமே இல்லை. என்னவோ உறுத்தியது.

தோளைக் குலுக்கிவிட்டு மித்ரா என்று கத்திக்கொண்டே ஓடி அவளுடன் இணைந்துநடந்தாள்.

வீட்டுக்கு வந்த மித்ராவை வெறுமை சூழ்ந்துகொண்டது. முதியவளிடம் சென்று எனக்கு அம்மா நெனப்பாவே இருக்கு. அம்மாவைப் பாக்கணும் போல இருக்கு
நான் போறேன்.

ஊஞ்சலில் அமர்ந்து கண்ணாடி மாட்டிக் கொண்டு புத்தகம் படித்துக் கொண்டிருந்தவள் சற்று தலையுயர்த்தி அவேள கூடிய சீக்கிரம் இங்கதான் வரப் போறா. என்றவள் மீண்டும் புத்தகத்தில் கவனம் செலுத்தினாள்.

வெறுப்புடன் அங்கிருந்து நகர்ந்தாள் மித்ரா. மனம் மட்டும் என்னவோ படபடப்புடன் இருந்தது. யாருக்கோ எதுவோ நடக்கபோகிறது என்று உள்ளுணர்வு சொல்லியது. அன்றைக்கும் அப்படித்தானே இருந்தது.

அதே நேரம்
நித்யா அங்கே இரத்தவெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தாள். ஆம் தற்கொலைக்கு முயற்சித்திருந்தாள்.

வெகு நேரமாகியும் அறையிலிருந்து வெளிவரவில்லையே என்று அந்த வீட்டின் வேலைக்காரி கதவை தட்டப் போகையில் கதவு தானே திறந்து கொண்டது. அங்கு அவள் கண்ட காட்சியில் அதிர்ந்து போனாள்.

மணிக்கட்டில் கத்தியால் அறிந்து வைத்திருந்தாள். தரையெங்கும் இரத்தம் படிந்து மயங்கிய நிலையில் இருந்தாள்.


அடுத்த 15நிமிடத்தில் நித்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தாள்.
தன் வேலைக்காக வெளியூர் சென்ற பிரகாஷக்கு செய்தி மொபைல் வழியே சென்றடைந்தது.

அலறியடித்துக் கொண்டு விமானம் ஏறினான். இனியொரு இழப்பை அவனால் தாங்க முடியுமா?
 

Attachments

  • received_417057819140682.jpeg
    received_417057819140682.jpeg
    5 KB · Views: 2

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top