அத்தியாயம் - 9

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
வம்பு நாட்டான்

அத்தியாயம் - 9

நடனதேவர் வீட்டில் எங்குக் கானிலும் தலைகள் சாதி சனம் ஒவ்வொருவராக வந்து நல்லம்மாளை பார்த்து விட்டுச் சென்றனர்.

இத்தனை வருட குமுறல்களைப் பேத்திகளிடம் சொல்லியவர் தளர்ந்து அந்தக் கனத்தைத் தாங்க முடியாமல் மயக்கத்துக்குச் செல்ல பெண்கள் இருவரும் பயந்து தான் போனார்கள்.

செய்தி அறிந்து நடனதேவர் விரைய அவர் பின்னில் வந்த ஆண்கள் அனைவரும் துரிதமாக செயல் பட்டு காரிலும் வண்டியிலும் நல்லம்மாளை அழைத்துக் கொண்டு மாட்டு தாவணி மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர்.

பெரியவரை சோதித்த மருத்துவர் ஒன்றுமில்லை உடல் தளர்ச்சி களைப்பு என்று சத்து ஊசி போட்டு ஓய்வெடுக்கச் சொல்லி அனுப்பி வைக்க மீண்டும் கம்பீரமாக எழுந்து அமர்ந்தார் நல்லம்மாள்.

****

“அண்ணே என்ன வம்பு பண்ணுற அம்மாயி வேற முடியாம இருக்காம் வூட்டுக்குக் கிளம்புண்ணே” இரண்டு நாட்களாக வீட்டுக்குச் செல்லாமல் போக்கு காட்டும் சடையனிடம் கெஞ்சி கொண்டு இருந்தான் கருப்பன்.

“அதெல்லாம் வைரம் பாஞ்ச கட்ட டா ஒன்னும் ஆகாது என் புள்ளைங்க கண்ணாலம் வரைக்கும் தாங்கும்.... செய்தி வந்துச்சு நல்ல இருக்காம்”

“சரி போயி பார்க்க வேணாமா அம்புட்டு பேரும் அங்கனதேன் இருக்காக நீ இல்லனா கேள்வி வரும் கிளம்பு”

“அதெல்லாம் போவ முடியாது என்னங்குற இப்போ நீ” கையை மடக்கி எகிறி கொண்டு வந்தவனை தடுத்த கருப்பன்

“எதுக்கு இப்ப பாஞ்சுகிட்டு வர நீ சரில்லை ஆமா”

“நீக எல்லாரும் மட்டும் சரியோ? எம்புட்டு மூளையா யோசுச்சுக் குட்டைய குழப்பி வச்சேன் இப்ப என்னடானா என்ன கண்டுக்கிடமா அம்புட்டு சேர்ந்துக்கிட்டு என்னா ஆட்டம்,

அதுவும் மா!..மா!.... அவருதேன் புது மாப்புள்ள சொக்கா இருக்காரு சாமி என்ன பவுசு தெரியுமா?” ஆதங்கமாக குமுறி விட்டான் சடையப்பன்.

“அது போகட்டும் விடுண்ணே அத்தை இல்லாம புள்ளைங்க இல்லாம எம்புட்டு நாள் தவிச்சு இருக்கும்”

“அது சரிடா செய்தி கேளு அந்த மனுஷன் இன்னும் புள்ளைங்க பக்கம் போகலை........ எங்க அக்காளும் தானே தவிச்சு போச்சு!.... அது என்ன மினிக்கிட்டா திரியுது ஆனா இந்த ஆளு பார்த்தியா மைனர் செய்னு அதுவும் எட்டு பவுனு அது போக டாலர் புலி பல்லு அது ஒரு அரைக்கா பவுனு”

“நீ எப்படினே துல்லியமா பவுனு கணக்குச் சொல்லுற” சிரித்துக் கொண்டே கேட்டான் கருப்பன் அவனுக்குச் சிரிப்பாக வந்தது மாமனும் (சோமதேவனும்) மச்சுனனும் தற்போது மருமகனுமாகிய சடையும் பண்ணும் அலும்பு தாங்க முடியவில்லை.

“ரெங்க செட்டியார் கிட்ட இருந்து காத்து வாக்குல செய்திடே”

“ஹ்க்கும் நல்ல வந்துச்சு செய்தி உனக்கு”

“அது போகட்டும் வுடு நல்ல மாமனா இருந்தா என்ன பண்ணி இருக்கனும்” ஒரு மாதிரி குரல் வைத்து கொண்டு சடை பேச

கருப்பனும் அதே டோனில் “என்ன பண்ணி இருக்கனும்”

“அவுக பொண்ண பொத்துனாப்புடி எனக்குக் கொடுத்து விட்டுருக்கணும்” இரு கைகளையும் ஒன்று மேல் ஒன்று குவித்து வைத்து கொண்டு சொல்ல.

“அது சரி ஆருக்கும் தெரியாம கண்ணாலம் பண்ணுவ அதை அவுக என்ன? எதுன்னு? கேட்காம செய்தி தெரிஞ்ச உடனே உங்க கையில பொத்துனாப்புடி சடையனை போலவே கையை குவித்து கொடுத்து புடனும் அதானே”

“அதேதேன்” மிதப்பாக சடையன்

“நல்ல நியாயந்தேன்”

“நியாயம் பார்த்தா பொண்ணு கிடைக்காது சாமி சொல்லிப்புட்டேன் பார்த்துகிடு உங்க பெரியம்மா சித்தி காரி அம்புட்டும் மலரை கட்டவிடாதுங்க இவிங்களும் செல்வம் இல்லனா அழகுக்குக் கொடுத்து புடுவாய்ங்க அப்புறம் மப்பாகி மல்லாந்து கிடக்காத” வலுவாக கொளுத்தி போட அது சரியாக எரிந்தது.

உள்ளுக்குள் பயந்தாலும் வெளியில் கருப்பன் அதனை காட்டாது “எனக்கு நல்லம்மா இருக்கு அது பார்த்துக்கிடும்”

“ஓ!... நல்லா பார்க்குமே உங்க குடும்பம் மேல கொலை வெறில இருக்கு” சடை சொல்லுவதும் சரிதான் நல்லம்மாள் நாத்திகள் மீதும்,

அவர்களை சேர்ந்த உறவின் மீதும் கசப்போடு தான் இருக்கிறார் இத்தனை உறவுகள் இருந்தும் தனது மகனுக்கு நியாயம் செய்யவில்லை என்ற வருத்தும் கடளவு உண்டு அவர்களை ஒதுக்கியே விட்டார் பேச்சு வார்த்தைகள் இல்லை இதில் கருப்பன் மட்டுமே உறவு.

அதாவது ஆடு பகை குட்டி உறவு என்பது போல் இவன் மட்டுமே சுற்றி சுற்றி வருவான் வீடு தேடி வந்த குட்டியை பாசமாக அரவணைத்துக் கொண்டார் நல்லம்மாள்.

அதற்காகத் தனது பேத்தியை தாரவார்பர் என்பது எத்தகைய சாத்தியம் என்று தெரியவில்லை இப்போது தான் கருப்பனுக்கு முழு பயம் வந்தது.

“அண்ணே அவ இல்லண்டா அம்புட்டுதேன் நான் என்ன பண்ணுவேன்னு தெரியாது சொல்லிப்புட்டேன்”

“வருதா... வருதா.... ரோஷமும் கோவமும் வருதா.. எனக்கும் அப்படித்தேன் மூணு வருஷம் காத்து கிடந்தேன் இந்நேரம் இரண்டு புள்ள குட்டி இருந்து இருக்கும்,

ஒன்னு ஒன்னாப்பு படிச்சு கிட்டு இருக்கும் இன்னொன்னு வவுத்துக்குள்ள இருக்கும் இப்போ பார் காட்டாந்தரையுல படுத்துகிட்டு கண்டவன் கூடப் புலம்பிகிட்டு நிக்கேன்”

சடை கடைசியாகப் பேசியதை கேட்ட கருப்பன் அவனை முறைத்து பார்த்து “இன்னும் என்னடா சேட்டைய கொடுக்கலைனு பார்த்தேன் இதோ ஆரம்புச்சு புட்ட உனக்கு நான் கண்டவனா?” என்றவன் சடையன் சட்டையைப் பிடிக்க இரண்டும் கட்டி உருண்டது.

யார் மேல் உள்ள வெறி என்று தெரியவில்லை புழுதி பறக்க இரண்டும் சண்டை வலிக்காமல் அடித்துக் கொண்டு கிடந்தனர்.

இவர்களைத் துளைவில் இருந்து பார்த்துக்கொண்டே வந்த சிங்கமுத்துவும் ராசியப்பனும் “என்னடே இது!... வண்டிய நிறுத்து... நிறுத்து” ராசியப்பன் கத்த.

முத்துவும் இவர்களைப் பார்த்த பதட்டத்தில் வண்டியை சரியாக நிறுத்தாமல் அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்து இருவரையும் ஆளுக்கு ஒருவராக பிடித்து நின்றனர்.

“என்னடா இது கட்டிக்கிட்டுச் சண்டை போடுறீக”

“வுடுனே ஆரு சண்டை போட்டா” என்று கலைந்த தலையை நிதானமாகக் கோதியவாறு சடை சொல்ல ஆ! வென்று நின்றது என்னவோ முத்து தான்

“அதானே ஆரு சண்டை போட்டா” கருப்பனும் தனது சட்டையைச் சரி செய்தவரே கேட்க ஏக கடுப்பில் ராசியப்பன்

“ஏலேய்! என்ன லந்தா கட்டிக்கிட்டு மண்ணுல உருளுறனுகளே என்னவோ எதனோ பதறி வந்தா நக்கல் பண்ணிக்கிட்டு இருக்கீக ரொம்பத்தேன் ஏத்தம்”

“ச்சா.. ச்சா... சண்டை இல்லண்ணே நாங்க சகலைங்க இல்லையா அதேன் சும்மா விளையாடி கிட்டு இருந்தோம் இல்ல டா” சடை கருப்பனிடம் கேட்க அவனும் தலையை உருட்டினான்

“வம்பு புடுச்சவீங்க னு தெரிஞ்சும் வந்தோம் பாரு எங்களைச் சொல்லனும்”

“கோச்சுக்கிடாத ண்ணே சும்மா” சடை முத்துவை தாஜா செய்ய இவர்களது சேட்டையை எண்ணி சிரிப்பு தான் வந்தது ராசியப்பனுக்குப் பிறகு நியாபகம் வந்தவராக “அது என்னடா சகலை அதுவும் நீயும் அவனும்”

“மலரை கட்டிக்கிட்டா?” கெத்தாகக் கருப்பன் சொல்லி நிறுத்த பதறி விட்டார் ராசியப்பன்

“டேய் நீயும் அந்தப் புள்ளைய கண்ணாலம் முடிச்சுபுட்டியா டா” இதயம் பதற கேட்டவரை பார்த்து சிரிப்பு பொத்து கொண்டு வந்தது சடையனுக்கு

“இல்லனே நீ வேற நான் என் விருப்பத்தை இன்னும் சொல்லல வூட்டுல இம்புட்டு பொம்பள பிள்ளையை வச்சுக்கிட்டு இந்த வேலை செய்வேனா” என்று படு நல்லவனாக கருப்பன் சொல்ல நிம்மதியாக நெஞ்சை நீவி கொண்டவர்.

“சின்னவனே பார்த்துக்கிடு எம்புட்டு பக்குவமா பேசுதான் நீர் என்ன செய்தீர்” ராசியப்பன் சடையப்பனை பார்த்து கேட்டு வைக்க.

“அப்போ இவன் நல்லவன்னு சொல்லுத”

“ஆமா உன்ன விட எங்க தாய் மாமனை விட இவன் தேவாலந்தேன் முத்துவும் சொல்ல

ஹ்க்கும் இதோ இப்போ தெருஞ்சுபுடும் இவன் எம்புட்டு நல்லவன்னு மனதுக்குள் சொல்லி கொண்ட சடை “கருப்பு நீ சொல்லுறதும் சரித்தேன் நான் கேக்கேன் இப்போ மலரை மாமாவும் எங்க அப்பாரும் கொடுக்கலைனு வை........”

“என்னது!”

“இருவே ஒரு பேச்சுக்குதேன் கொடுக்கலனு வை என்ன சாமி பண்ணுவ ஒதுங்கிப்புடுவி......... “சடை சொல்லி முடிப்பதற்குள் பதில் அழைத்தான் அந்த நல்லவன்

“தூக்கிடுவேன் ஆரு கிட்ட அவ என் பொஞ்சாதி” என்றவனைப் பார்த்து அதிர்ந்து நின்றனர் அண்ணனும் தம்பியும் சில நொடிகள் இருவரும் எதுவும் பேசாமல் நின்று இவர்கள் இருவரையும் முறைத்து க் கொண்டு இருந்தனர்

“என்ன அப்படி பார்க்க” சடை முத்துவிடம் கேட்க

“நாங்களும் தாண்டா இரத்த சூட்டுல துள்ளி கிட்டுத் திரிஞ்சோம் ஆனா இம்புட்டு வம்பு இழுத்து வைக்கலை சரியான வம்பு நாட்டானுங்க,

இதுல இளந்தாரி பைய மாதிரி மாமனும் கூட்டு முடியலட சாமி வாடே இதுங்க கூடப் பேசி நேரம் விரையம்” என்ற ராசியப்பன் இருவரையும் முறைத்துக் கொண்டே செல்ல

“போனே!.. போனே!....நான் என்ன உன்ன மாதிரியா மல்லிகா புள்ள மேல ஆசை பட்டு சுந்தரி அண்ணிய கட்டிக்கிட்டு என்ன போ.... நாங்கெல்லாம் ஒரே பொண்ணுத்தேன் ஆசை பட்டோம் அதே தான் கண்ணாலமும் கட்டிப்போம்” என்றவனை ஓடி வந்து வாயை அடைத்த ராசியப்பன்

“அட பாவி பையலே பேச்சுக்கு கூட இப்படி பேசி வைக்காதா டா ஆசை பட்டது குத்தம்மா அவளே பேரன் பேத்தி எடுத்து புட்டா அவ புருஷன் காதுலையும் என் பொஞ்சாதி காதுலையும் செய்தி விழுந்தா என்னத்துக்கு ஆகும்”

“என் புள்ளைங்க கண்ணாலத்துக்கு நிக்குது என் பொஞ்சாதி என்ன வுட்டுப் போனா காரி துப்பும் சாதி சனம் உன் சங்காத்தமே வேணாம் சாமி எனக்கு” என்றவர் வேக எட்டுகள் வைத்து சென்றவர் பின்பு யோசனையாக மீண்டும் திரும்பி

அடேய்! நல்லவனே ஆரூடா உங்களுக்கு இந்தச் செய்தி சொன்னது” என்றதும் இருவரும் பல்லை பலமாகக் காட்டி நிற்க புரிந்தது இது சோம்தேவன் வேலை என்பது

“அவனை” என்றவர் வேகமாகச் சென்றார் தாய் மாமனாக இருந்தாலும் வயதில் சிறியவர் அதுவும் ஓர் இரு வயது மட்டுமே இப்போது சடையப்பன் போல் அப்போது சோமதேவன்.

***

வண்டியில் எரிச்சலின் உச்சத்தில் வந்து கொண்டு இருந்த ராசியப்பனை அழைத்த முத்து “அண்ணே உண்மையா மல்லிகாவை...” என்று பேச வந்தவனை அவசரமாகத் தடுத்தவர்

“அடேய் அடயென்டா நீ வேற அவனுக பேச்ச கேட்டுகிட்டு வயசுல பாக்குற பொண்ணுங்க எல்லாம் கட்ட முடியுமா அது கூட ஒரு வார்த்தை பேசுனது கூட இல்லடா”

“அது சரி”

“படுபாவி பையலுக பாவம் பார்த்ததுக்கு வம்புல மாட்ட பார்த்தானுங்க பாரு”

“சின்னவன் சேட்டை ண்ணே” முத்து சொல்ல

“அதைவிட அந்தக் கருவா சேட்டை டா” ராசியப்பன் சொல்ல

“இதுங்களைவிட மாமே!” இருவரும் கோரஸாகச் சொல்லி தலையில் அடித்துக் கொண்டனர்.

நான் சொல்லல இவனுக வம்பு நாட்டானுக
 
Nirmala senthilkumar

Nirmala vandhachu
Surprise :D:D:D
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top