அத்தியாயம் - 6

Advertisement

dhanuja senthilkumar

Well-Known Member
களவு கொண்டானடி தில்லையிலே

அத்தியாயம் – 6

சிவநேசனிடம் சொல்லி பூஜை ஏற்பாடை பார்க்கச் சொன்ன அம்பலத்தான், முதல் வேலையாக நெருங்கிய உறவினர்களும் மூப்பனும் ஆன, சுப்பு செட்டியை தனது அறையில் மட்டுமே உள்ள தொலைபேசியில் அழைத்தார்.

எதிர்முனையில் தங்க மீனாள், அதாவது சுப்பு செட்டியின் மனைவி எடுக்க, ஓர் இரு வார்த்தை பேசி அலைபேசி கைமாறியதும்,

“சொல்லு அம்பலம்! நல்லா இருக்கீகளா! அக்கா நல்ல இருக்காகளா? நம்ப பொண்ணு, பொறவு எல்லா எப்படி இருக்குதுக ராசா”

“நடராஜன் புண்ணியத்துல எல்லாரும் நல்லா இருக்காக அப்புச்சி! ஒரு முக்கியமான சோலி, மறுக்காம நாளைக்கு வரணும்.”

“என்ன ராசா என்ன ஆச்சு?” என்று திடீரென அம்பலம் அழைக்கவும், யோசனை தறி கேட்டு ஓட, பதறி விட்டார் பெரியவர்.

“ஒன்னுமில்ல அப்புச்சி! பொஞ்சாதி வீடு வந்துருக்கு.” அம்பலத்தான் குரல் தளர்ந்து ஒலிக்க, ஓர் இரு நிமிடம் மௌனம் கொண்டார், அப்பெரியவர்.

பின்பு தன்னைச் சமாளித்துக் கொண்டவர்.

“இறுக்கிப் பிடிச்சுக்கோ! விட்டுறாத அம்பலம். என்ன சோலி இருந்தாலும், அங்காளி பங்காளி மாமன் மச்சானோட அறுபது தலை கட்டும், மக்கா நாள வீட்டுல இருக்கும்! அக்கா கிட்ட சொல்லிப்புடுக, என்ன?”

“சரி அப்புச்சி.” உற்சாகம் குறைந்து ஒலித்த அம்பலத்தைக் கண்டு கொண்டவர்,

“நீ நல்லா இருப்ப சாமி, வெசனப் படாத!”

“சரிங்க அப்புச்சி” அவனது மனதை மாற்ற எண்ணி,

“பூசை ஆச்சா”

“இனி தான். எடுத்து வைக்கிறாக, மருமவள பார்த்ததும் உங்க அக்காளுக்குத் தலையும் புரியல, காலும் புரியல!”

“ஹா! ஹா! ஹா! அது பெத்த மக்கள் அம்புட்டும் இருக்கும் பொதும், உன் பொஞ்சாதி என் அக்கா முந்தாணையைப் புடிச்சுகிட்டு சுத்தும். அதேன் உங்கள விட அக்கா தான் தவிச்சுப் போயிட்டாக” என்றவர் நியாயமான மனிதனாக,

“நம்ப மேலேயும் தவறு தான் சாமி! நீங்க உங்க பிடில நின்னாலும், நாங்க அந்தப் புள்ள பக்கம் நின்று இருக்கனும். சரி விடுக. இனி ஆகப் போறது, சுபமே”

“ஆகட்டும் அப்புச்சி. நான் வைக்குறேன். பத்திரமா கூட்டிவாக”

“நீங்க கவலைய விடுக நான் பார்த்துக்கிடுவேன். நாளை மதியம் அம்புட்டு பேருக்கும் விருந்து மட்டும் சொல்லிடுக”

“கண்டிப்பா அப்புச்சி ஏற்பாடு பண்ணிடுறேன். நான் வைக்கிறேன் அப்புச்சி. உடம்ப பார்த்துக்கிடுக. பார்த்து சூதனாமா வாங்க.” என்றவர் மனநிறைவோடு பூஜைக்குச் சென்றார்.

“சரிய்யா, சரி பாரு” என்றவர் தொலைபேசியை அணைத்த மறுகணம், தனது மனைவியை அழைத்து விஷயத்தைச் சொல்லி, பெரியவர்கள் அனைவருக்கும் தகவல் சொல்லச் சொல்லி, வெளியூரில் இருப்பவர்களுக்கு அவரே செய்தியை கடத்தினார்.

இங்கே மலர்ந்த முகமும் நிறைந்த நெஞ்சமுமாக வந்த அம்பலத்தான், பூஜை அறையில் கூடி இருந்த தனது சகோதரிகளை ஒரு முறை பார்த்தவர், அவர்களுள் மூத்த சகோதரியான மீனம்மாளிடம் திரும்பி,

“ஏன் ஆத்தா, மாப்பிள்ளைங்க குழந்தைங்க எப்போ வருவாக?”

“இரவைக்குக் கூட்டியாரேனு சொல்லி இருக்காக. குழந்தைங்களை விட்டுட்டு சாப்புட்டு ஊரப் பார்க்க போராக! ஏண்ணே?”

“சங்கரி,உலகு,அன்பு,எல்லாரும் மாப்பிள்ளைங்க கிட்ட சொல்லிடுக. இரண்டு நாள் இங்னத்தேன்.”

அம்பலத்தான் சொல்லுக்கு, சகோதரிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே தலை ஆட்டிச் சம்மதித்தனர்.

பின்பு தனது தாயிடம் திரும்பியவர் “அம்மா நாளைக்கி நூறு பேர் சாப்பிடுற மாதிரி கறி விருந்து ஏற்பாடு பண்ணச் சொல்லுக. முத்து கிட்ட அப்புச்சி வாறாக. அவுககூட அங்காளி பங்காளி பெரிய வூட்டு ஐயத்த வாறாக.”

மகன் சொன்னதைக் கேட்டவர் முகம் யோசனையாக இருக்க,

ஆறு வருடங்களுக்கு முன் இதே போல் உறவினர்கள் கூடி அடித்த கும்மி ஞாபகம் வர, பதறிப் போனாள் சிவகாமி, கோபம் கண்ணை மறைக்க…

“இப்போ எதுக்கு அவா வரா. முன்ன மாதிரியே செய்யப் போறேளா!” வேக மூச்சுகள் எடுக்க அம்பலத்தானை நெருங்கி நின்று கேட்க,

தனது நெஞ்சு வரை இருந்து கொண்டு கேள்வி கேட்கும் மனைவியைக் குறு குறுவெனப் பார்த்துக் கொண்டு இருந்தார், அம்பலத்தான்

“சொல்லுங்கோ! என்ன பேசாம நிக்கிறேள் பதில் சொல்ல முடியாதோ?”

மீண்டும் அவர் அவ்வாறே பார்த்து நிற்க, “உங்களண்டை தான் பேசுறேன்.”

ம்ஹூம்.... அசைத்தார் மனிதன், இல்லையே! மீண்டும் அதே பார்வை.

பொறுமை காற்றில் பறக்க “நான் இங்க பேசிண்டு இருக்கேன். நீங்க என்ன உத்து உத்து பார்க்கிறேள்” என்றவளது முகம் நோக்கிக் குனிய,

அவரது செய்கையை எதிர்பாராத சிவகாமி, ஒர் அடி பின்னே செல்ல, மீண்டும் நெருங்கியவர் காதோரம் குனிந்து, அவளுக்கு மட்டுமே கேட்கும் குரலில் ஏதோ பேசி வைக்க, நமது சிவகாம சுந்தரி கப் சிப்!

கண்ணை உருட்டி உருட்டி முழித்து நிற்கும் மனைவியைப் பார்த்து, சத்தமாகச் சிரித்தவாறு தனது அம்மையிடம் பூஜையை ஆரம்பிக்குமாறு கை அசைக்க, மகனது புன்னகையில் நிறைந்தவர், பூஜையைத் தொடங்கினார். வீட்டுப் பெண்களுக்கும் அத்தனை நிறைவு.ஆனாலும் என்ன சொல்லி இருப்பார் என்ற எண்ணம் இருக்க தான் செய்தது.

திருவாதிரை நோம்பின் முதன்மையான உளுந்தங் களி மற்றும் பட்சணங்கள் செய்து, நடராஜனை வெகு வருடங்கள் சென்று நிம்மதியாகப் பிராத்தனை செய்தனர், பெரிய நாச்சியின் குடும்பம்.

பூஜை முடிய வேகமாக வந்த சிவநேசன், முதல் வேலையாக அம்பலத்தானை ஓரங்கட்டினார். அவருக்கு ஒரே குழப்பம். வெறி கொண்ட பெண் வேங்கையாகச் சண்டையிட்டு கொண்டு இருந்த மனையாளை ஒரே நொடியில் அமர்த்திய சாகசம் என்னவென்று தெரிந்து கொண்டால் தனது வாழ்விலும் நிகழ்த்தலாம் என்று எண்ணினாரோ என்னமோ?

“டேய் மாப்புள்ள! என்னடா செய்தி சொன்ன தங்கச்சி கொதிப்பு அடங்கிப் போச்சு?”

“இது உன் தங்கச்சிக்கு மட்டும். வெளில சொல்லக் கூடாது மாப்புள்ள! கேக்குறவன் ரெத்தம் கக்கிச் சவான்.” என்றவர் சிவநேசன் தோளில் தட்டிச் செல்ல,

ஆவலாக அறிய வந்தவர் அதிர்ந்து நின்றார், அட பாவி மவனே!

அதன் பின் மாலை பொழுது வர, வீட்டின் மாப்பிள்ளையான விநாயகம்- மீனம்மாள்,சொக்கன் -சக்தி,சோமு-சிவசங்கரி,சுப்பிரமணியன் -அன்பு செல்வி,கந்தன் - சரசு,செல்வம் – உலகம்மை.

தலைக்கு இரு பிள்ளைகள் என மூன்று ஆண்கள், எட்டுப் பெண்கள் மொத்தம் பன்னிரெண்டு பேரப் பிள்ளைகள் வருகையில், பெரிய நாச்சி குடும்பம் களை கட்டியது.

வந்த ஆண்கள் அனைவரும் சிவகாம சுந்தரியை பார்த்து ஒரு நொடி திகைத்து நின்று, பின் புன்னகைத்துக் கொண்டனர்.

அனைவரும் மரியாதையின் பொருட்டு வணக்கம் வைத்து வரவேற்க, பண்புடன் தலை தாழ்த்தி ஏற்றுக் கொண்டாள், சுந்தரி.

செல்வமும் கந்தனும் மட்டுமே அன்னியர்கள். ஏனைய ஆண்கள் அனைவருக்கும் சுந்தரியை முன்னயே தெரியும்.

முதல் வேலையாகப் பெண்கள் தத்தமது ஆண்களுடன் தனது அண்ணன் சொன்னதைச் சொன்னவர்கள், இரு தினங்கள் இருக்குமாறு சொல்ல.

பாரிலே பண்பு கொண்டது தனது மச்சானே என்று மார் தட்டும் ஆண்கள் என்பதால், உடனே பச்சைக் கோடி காட்டினர்.

மலை ஏற மச்சான் துணை என்ற கூற்றுக்கு ஏற்றவாறு, என்ன அல்லவை வந்தாலும், கரம் நீட்டி தோள் தாங்கி நின்று நன்மை செய்யும் அம்பலத்தானின் அன்புக்கு அவர்கள் அடிமை.

****

இரவு உணவை பெண்கள் சேர்ந்து செய்ய, தனது மாமியிடம் தஞ்சம் கொண்டாள், சிவகாமி. அவரை விட்டு இம்மியும் அகலவில்லை. அவளது செயலில் சிரித்துக் கொண்டனர் பெண்கள். சக்தி வாய் விட்டே அலுத்து கொண்டாள்.

“மதனி, எங்க அம்மை எங்களைக் கூடக் கக்கத்துல வச்சு காமந்து பண்ணல போங்க.”

“நோக்குப் பொறாமை, போடி”

“ஐயோ! சங்கரி அக்கா பார்த்தீகளா சிவா பேசுது. அவளது போலி ஆச்சரியத்தில் முறைத்த சிவகாமியைப் பார்த்து அனைவரும் நகைத்தனர்.

“என்ன முறைக்கிற? வந்ததுல இருந்து எங்களை யாருனே தெரியாத மாதிரி இருந்த, ஹான்!”

மீனம்மாள் முறுக்கி கொள்ள, கண்ணில் நீர் நிறைந்தது பெண்ணுக்கு. அதற்குள் அம்பலத்தான் அங்கு வர, அனைவரும் கலைந்தனர்.

அண்ணன் மீது பயம் கலந்த பக்தியுண்டு. இது பொறுப்பான ஆணுக்குச் செய்யும் மரியாதை.

பெரிய நாச்சி கோரைப் பாய் கொடுத்து “அங்கன படுத்துக்க சிவா பாப்பா” என்றவர், மகளை அழைத்துச் சொன்னவர் பேரன் பேத்திகளை தன்னுடன் படுக்க வைத்துக் கொண்டார்.

அழகுப் பதுமையாக மடிசாரில் அன்றைய நாளை அமைதியுடன் தனது மாமியிடம் கழித்தவள், இரவு உறங்கும் நேரம் தனது தோழிகளும் நாத்திகளுமான அவ்வீட்டின் இளவரசிகளிடம் வசமாகச் சிக்கிக் கொண்டாள்.

புதுமையான பதுங்கி வரும் பாவையைப் பதம் பார்க்க பெண்கள் ஆவலுடன் இருந்தனர்.

சிவகாமியின் வருகையை உணர்ந்த உலகு, “வாங்க, வாங்க மதனி! வாங்க! உங்களுக்காகத்தேன் இமை மூடாம காத்துக் கிடக்கோம்.”

“ப்ச்… போடி!”

“என்ன போடி? எம்புட்டுத் தரம் பார்க்க வந்தேன்.கால் கடுக்க ஒரு மணி நேரம் நின்னா, நீ பாட்டுக்கு போறவ.” சக்தி கோபிக்க.

அதுவரை அமைதியாகத் தலையைக் குனிந்து இருந்த சிவகாமி மெல்ல தலை உயர்த்தி அனைவரையும் பார்த்து,

“முதல் என்னை மன்னு ச்சுக்கோங்க மன்னி’ஸ்” சிறு புன்னகையுடன் சொன்னவள்,

கண்ணில் நீர் பெறுக,“அன்னைக்கு பேசாம தானே இருந்தேள். உங்களுக்கு எல்லாம் தெரியும் இருந்தும் என்னாண்ட மறச்சேள் தானே! என்னை உங்க ஆத்துப் பொண்ணா எண்ணி இருந்தேள்னா சபையில் விட்டுக் கொடுத்து இருப்பேளா!” என்றவள் அழுதே விட்டாள்.

அவளது அழுகையில் கலங்கிய தோழிகள் அனைவரும் அவளை அணைத்துக் கொண்டனர். தவறு என்றாலும் அத்தனை தெளிவை கொடுக்காத பருவம் அல்லவே.

உலகு, “ஏய் சிவா, எனக்கு அம்புட்டு விவரம் தெரியாதுடி! நானே உன் கூட நொண்டி விளையாடிக் கிட்டு இருந்தேன். என்னைக் கூட்டு சேர்க்காத. அவுங்கள கோபி” என்று தனது தமைக்கையான சக்தியை கை காட்டினாள்.

சக்தியோ அதற்கு மேல் “சிவா அன்னைக்கு ஜுரம்னு சொல்லி நான் மச்சில படுத்துத் தூங்கிட்டேன்டி, வூட்டுல சத்தம் கேட்டு தான் வந்தேன். நீ சரசு கிட்ட கேளு!”

“அடி சண்டாளி! என்ன எதுக்குடி மாட்டிக் கொடுக்குற? சிவா, சத்தியமா எனக்கும் தெரியாது. கந்தன் மாமா யாருக்கும் தெரியாம என்னை இழுத்துக்கிட்டுப் போய்ட்டாக. அவுக சொல்லி தான் செய்தி தெரியும்.”

“ஆத்தி, கல்யாணத்துக்கு முன்னாடி நீ சந்துல சிந்து பாடியிருக்க.” என்று மற்ற பெண்கள் சரசுவை பிடித்துக் கொண்டனர்.நீ நான் நீ நான் எனச் சண்டை வலுத்து ஒருவருக்கொருவர் கச்சை கட்ட, அழுகை மறந்து நாத்திகளின் சிறு பிள்ளைத் தனத்தில், தன்னை மறந்து சிரித்த சிவகாமி..

“போதும் போதும் விடுங்கோ! இனி யார் கட்சி? அதை சொல்லுங்கோ!” என்று சிவகாமி கையை நீட்ட, ஆறு பெண்களும் அவள் கை மீது கை வைக்கிறேன் என்று அவள் மேல் விழுந்து, தங்களது ஆதரவை தெரிவிக்க.

“அடிப்பாவிங்களா மூச்சு முட்டறது. எழுந்துக்கோங்க” என்று கத்த, வீடே அதிரும் படி சிரித்து சேட்டை செய்தனர், மகளிர் குழு

இவர்களது சத்தம் ஆண்களை எட்ட, அவர்களுக்கும் சிறு புன்னகை.

“அவுக வந்ததும் சத்தம் கூடுதலா இருக்கு.. என் பொஞ்சாதி மான் குட்டியாட்டம் ஒரே ஓட்டம்.” விநாயகம் தனது மனைவியை ரசித்துச் சொல்ல, மற்ற ஆண்களும் அதனை ஆமோதித்தனர்.

“என்ன மச்சான்? உங்க பொஞ்சாதி என்ன சொல்லராக?”

“இன்னும் பேசிக்கல... அப்புச்சி வரட்டும். கல்யாண உறுதி கொடுத்துப்புட்டு தான், அவுக கூடப் பேச்சு. இல்லாட்டி, என்ன நடக்குமுண்டு தெரியாது.”

“ஹா ஹா ஹா அம்புட்டு பயமாப் பார்த்த தெரியலையே! எங்க தங்கச்சி பசு மச்சான்.” செல்வம் சொல்ல

“அட ஏன் மச்சான் நீங்க வேற. கணக்கு டீச்சரை கணக்கு பண்ண முடியாது. அம்புட்டு சூதானம். ஆறு வருசத்துக்கு முன்னாடி சட்டையைப் புடிச்ச சண்டி அவ! கேட்டுப் பாருங்க உங்க சகல பாடீங்க கிட்ட”

“ஆமா மாமா தங்கச்சி வெடி.” விநாயகம் சொல்ல

“ஐயர் வூட்டு பொண்ணு அமைதியான முகம் சும்மா சொல்லாதீக மச்சான்” என்றான் சொக்கன் நம்ப மறுத்து.

“ஐயர் பொண்ணா! அராத்து பொண்ணான்னு நாளைக்குத் தெரியும்! இப்போ வாங்க. காலையில சோலி இருக்கு.” என்றவர் மச்சான்கள் புடை சூழ கிழே வர, சிவகாமி நாத்திகள் சூழ அமர்ந்திருந்தாள்.

ஆண்கள் அனைவரும் தனிமை கிட்ட தங்களது பெண்களுக்கு கண் ஜாடை செய்து, மாமியார் வீட்டில் மந்திரம் போட, பெண்கள் அனைவரும் மயங்கிய நிலை.

அம்பலத்தான் சிவகாமியை பார்த்தவாறே அவரது அறைக்குச் செல்லப் போனவர் திரும்பி, சிவகாமியை அழைக்க,சர்வமும் ஒடுங்கியது பெண்ணுக்கு.

“ஒய்… மாமி! தண்ணி கொண்டு வா.” என்றவர் அவரது அறைக்குச் செல்ல, சிவகாமியின் நிலை கேட்கவா வேண்டும், அரை நொடி வரை செயலற்று அமர்ந்து இருந்தாள்.

“ஏய்!சிவா ஓடு..ஓடு. அண்ணனுக்கு தண்ணி குடு.”

“ப்ச் நான் போகலை மீனா அக்கா. நேக்கு பயமா இருக்கு”

“அண்டப் புளுகி என்ன அரட்டு அரட்டுன? இப்போ பயந்து வருதாக்கும்.”

இவர்கள் வார்த்தையாட அம்பலத்தான் வெளியில் வந்தவர் “சக்தி, தண்ணி கொடுடா.” தங்கையிடம் பணிந்தவர் இவர்களை நோக்கி வர,

சகோதரிகள், இது தான் சமயம் என்று பறந்து சென்றனர்.

‘பாவிங்க! இப்போதான் சத்தியம் பண்ணுச்சுங்க. அதுக்குள்ள ஓடியாச்சு!’ மனதுக்குள் நாத்திகளை வறுத்தெடுத்த சிவகாமியின் புறம் குனிந்த அம்பலத்தான்,

“ஒரு நாள் பொறுத்துக்கிடுக.. நாளை மக்கா நாள் இருக்குடி. உனக்கு இம்புட்டுகாண்டு இருந்துக்கிட்டு, துள்ளி துள்ளி சண்டை கட்டுற. ஹ்ம்ம், கோழி அமுக்கிறா மாதிரி அமுக்கி, சூப்பு வச்சு குடுச்சுப்புடுறேன்! இருடி சிலுக்கு!”

அவனது பேச்சில் பயம் கொண்டாலும், அவளை அழைத்த அப்பெயர் பிடிக்காமல்..

“என்னை அப்படி கூப்பிடாதேள்! நேக்கு பிடிக்காது சொல்லிட்டேன்.”

“அப்படி தான்டி கூப்புடுவேன். சமாதானம் பேச வந்தவனுக்கு, அந்த மாதிரி நின்னு கரண்டு வச்ச உனக்கு, இந்தப் பெயர் தான்! சிலுக்கு சிலுக்கு.”

மீண்டும் இரு முறை அந்தப் பெயரை சொல்லவும்,

கோபம் கொண்ட அவள் அடிப்பதற்குப் பொருள் தேட, மீண்டும் சத்தமாகச் சிரித்துக் கொண்டே தனது அறைக்குச் சென்றார், அம்பலத்தான்.

களவு கொண்டவன்......
 
Last edited:

Nirmala senthilkumar

“முதல் என்னை மச்சுக்கோங்க மன்னி’ஸ்” சிறு புன்னகையுடன் சொன்னவள்,

ஆண்கள் அனைவரும் தனிமை கிட்ட தங்களது பெண்களுக்கு கண் ஜாடை செய்து, மாமியார் வீட்டில் மந்திரம் போடா, பெண்கள் அனைவரும் மயங்கிய நிலை.

அம்பலத்தான் சிவகாமியை பார்த்தவாறே அவரது அறைக்குச் செல்லப் போனவர் திரும்பி, சிவகாமியை அழைக்க,சர்வமும் ஒடுங்கியது பெண்ணுக்கு.

“ஒய்… மாமி! தண்ணி கொண்டு வா.” என்றவர் அவரது அறைக்குச் செல்ல, சிவகாமியின் நிலை கேட்கவா வேண்டும், அரை நொடி வரை செயலற்று அமர்ந்து இருந்தாள்.

“ஏய்!சிவா ஓடு..ஓடு. அண்ணனுக்கு தண்ணி குடு.”

“ப்ச் நான் போகலை மீனா அக்கா. நேக்கு பயமா இருக்கு”

“அண்டப் புளுகி என்ன அரட்டு அரட்டுன? இப்போ பயந்து வருதாக்கும்.”

இவர்கள் வார்த்தையாட அம்பலத்தான் வெளியில் வந்தவர் “சக்தி, தண்ணி கொடுடா.” தங்கையிடம் பணிந்தவர் இவர்களை நோக்கி வர,

சகோதரிகள், இது தான் சமயம் என்று பறந்து சென்றனர்.

‘பாவிங்க! இப்போதான் சத்தியம் பண்ணுச்சுங்க. அதுக்குள்ள ஓடியாச்சு!’ மனதுக்குள் நாத்திகளை வறுத்தெடுத்த சிவகாமியின் புறம் குனிந்த அம்பலத்தான்,

“ஒரு நாள் பொறுத்துக்கிடுக.. நாளை மக்கா நாள் இருக்குடி. உனக்கு இம்புட்டுகாண்டு இருந்துக்கிட்டு, துள்ளி துள்ளி சண்டை கட்டுற. ஹ்ம்ம், கோழி அமுக்கிறா மாதிரி அமுக்கி, சூப்பு வச்சு குடுச்சுப்புடுறேன்! இருடி சிலுக்கு!”

அவனது பேச்சில் பயம் கொண்டாலும், அவளை அழைத்த அப்பெயர் பிடிக்காமல்..

“என்னை அப்படி கூப்பிடாதேள்! நேக்கு பிடிக்காது சொல்லிட்டேன்.”

“அப்படி தான்டி கூப்புடுவேன். சமாதானம் பேச வந்தவனுக்கு, அந்த மாதிரி நின்னு கரண்டு வச்ச உனக்கு, இந்தப் பெயர் தான்! சிலுக்கு சிலுக்கு.”

மீண்டும் இரு முறை அந்தப் பெயரை சொல்லவும்,

கோபம் கொண்ட அவள் அடிப்பதற்குப் பொருள் தேட, மீண்டும் சத்தமாகச் சிரித்துக் கொண்டே தனது அறைக்குச் சென்றார், அம்பலத்தான்.

களவு கொண்டவன்......
Nirmala vandhachu
 
Saroja

Well-Known Member
அச்சோ மாமிக்கு கோபம்
வருதே
அம்பலத்தான் சரியான அடாவடி
சிலுக்காமே
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top