Saththamindri Muththamidu 10

Advertisement

Suvitha

Well-Known Member
ஹாய் மல்லி,

அறியாத காதலொன்று
அரும்பான வேளையிலே...
புரியாத காதல் மகள்
பூவாய் மலர்ந்து நிற்க.....
பூக்க வைத்த காதல் மகன்
கனிவான வார்த்தையிலே
கலங்கி நிற்கும் துணைவியவள்
துவண்டு நிற்கும் அழகென்ன...?

காதல் மொழி பேசாமல்
மௌன மொழி பேசியவன்
வாய் மொழியை கேட்டு நின்றால்
நீதி சொன்ன மன்னவனும்
பேச்சினிலே தோற்றிடுவான்...
காதலாய் உணராமல்
தன்னவளாய் உணர்ந்தவளை
தன்மானம் விட்டு வந்தால்
தகுமானம் செய்திடுவான் - அது
வெகுமானம் ஆகுமன்றோ..?

வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
அருமை....சகோதரி.
 

umaradha

Well-Known Member
அழகான மிக மிக அழகான பதிவு மல்லி. ..கடலளவு ஆழமா உணர்வு பூர்வமாக மனைவி யை உணர்ந்து இருக்கான் திரு...இதை விட வேறென்ன வேண்டும். ...

ஆயிரம் கதை மேல் படித்து இருக்கேன். ..
ஆனாலும்
உலக வரலாற்றில் முதல் முறையாக இதுவரை கதைக்கு வராத சீன்...புருஷன் பொண்டாட்டிய உணர்ந்து கருத்தரிந்ததை சொல்வது...
எல்லாம் கதைகளிலும் ஹீரோயின் தான் ஹீரோ கிட்ட சொல்வாங்க ...
சூப்பர் மல்லி நீங்க. .யாருமே யோசிக்காதது செய்வது தான் மல்லி ஸ்டைல்
Yes!!
 

Suvitha

Well-Known Member
ஹலோ ....Mr.திருநீர்வண்ணன், நீ உன் மனைவியிடம் தனியாக பேச வேண்டும்...வா என்ற உடன் அவள் ஒன்றும் மகிழ்ச்சியாக துள்ளிக் குதித்து ஓடிவரவில்லை.மாறாக ஏன் வீட்டைவிட்டு போனாய் ?எனக்கேட்டு அடித்து விடுவாயோ?என பயந்து கொண்டே தான்வந்தாள். இந்த அழகில் தான் நீ உன்னை அவளிடம் உணர வைத்திருக்கின்றாய். என்ன செய்ய???
சரி...போனது போகட்டும்.இனிமேலாவது உன்னை,உனது அன்பை சரியான முறையில் துளசியை உணர்ந்து கொள்ள செய்.உனது முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.....
 

Manga

Well-Known Member
Saththamindri Muththamidu 10 1
Saththamindri Muththamidu 10 2

site issues are there friends , please bear with us,
its better than previous one,
will set right soon.
அப்பாவை தண்டிக்க மனைவியை தள்ளி நிறுத்துவதா சரியில்லையே திரு சார். ஆனாலும் பத்து வருஷத்துக்கு மேல் பொண்டாட்டிக்கு தெரியாமலேயே சைட் அடிச்சிருக்கீங்கன்னா நீங்க சொன்ன மாதிரி மூன்றாவது குழந்தை உங்க பேத்திக்கு போட்டியாதான் வரும்.
 

Sundaramuma

Well-Known Member
அருமை ...அருமை .....
அப்பா ஒரு வழியா இந்த ஊமை கோட்டான் திரு வாய் திறந்துட்டான்......ஆனா துளசி போல நானும் ......அவனை நம்புறதா வேணாமான்னு..... உணர்தல் உன்னதம் தான் .....ஆனா பதிமூணு வருஷமா துளசி என்ன பாடு பட்டு இருப்பா.....இப்படியா இல்லை அப்படியானு ....ஒரு நிலை இல்லாத ஒரு நிலை......அவனோட காரணங்கள் என்ன ...அவன் அப்பா முன்னால ஏன் காட்ட முடியாது ......இன்னும் நிறைய வரணும் போல இருக்கே ..... அவளை பார்த்துட்டு இருந்தா தொட்டுட்டே இருக்கணும் போல இருக்குமாம் ...... OMG .... silly reason...silly person....
Awesome episode......

Thank you very much.Mallika:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top