Advertisement

உன் நினைவு – 32

உனக்குள்ளே நான் உருக…

எனக்குள்ளே நீ கறைய…

எதை தேடுகின்றோம் என

தெரியாமல் தேடி கழிக்கிறோம்

உனக்குள்ளே நானும்

எனக்குள்ளே நீயும்

மீண்டும் மீண்டும்

நாம் காதல் நினைவுகளோடு…

மாமர குயில்கள் அழகாக கூவி கொண்டு இருந்தன… ஆதவன் தன் லட்சம் கோடி கரங்களால் இந்த பூமியை தழுவிக்கொள்ள மெல்ல மெல்ல வான் மீது ஏறி வந்து கொண்டு இருந்தான்..  அழகிய மலை கிராமமான முந்தலில் வசுமதி இழைத்து இழைத்து கட்டிய பண்ணை வீட்டின் கதவு உள் பக்கமாக தாளிட்டு இருந்தது.. ஆனாலும் காற்றுக்கு என்ன தடை இருக்க போகிறது உள்ளே செல்ல…. சிலுசிலுக்கும் காற்றும் அதில் அருவியின் ஓசையும் கூட்டி சென்றது….

வசுமதியோ தன் கணவன் கதிரவனின் மார்பில் முகம் புதைத்து, அவனது கை வளைவில் அழக்காக படுத்து இருந்தாள்… கதிரவனோ தன் மனைவி தூங்கும் அழகை பார்த்து ரசித்து கொண்டு இருந்தான் அவளை சீண்டும் எண்ணம் வந்தது… மெல்ல குனிந்து அவள் காதுகளில் ஊதினான்..

”ம்ம் “ என்று ஒரு சிணுங்கள் மாட்டும் தான் வந்தது அவளிடம் இருந்து.. ஆனாலும் உறக்கம் மட்டும் விடுவதாய் இல்லை…

“ மதி “ என்றான் அவள் காதருகே மென்மையாக… அவளிடம் எந்த பதிலும் இல்லை…

சரி தூங்குகிறாள் என்று அவனும் அமைதியாக அவளது முகத்தை பார்த்தபடி  இருந்தான்… சிறிது நேரத்தில் கண் விழித்த மதிக்கு தான் இருக்கும் நிலை உணர்ந்து முகமெல்லாம் செம்மை படர்ந்தது… மேலும் அவன் மார்பிலேயே தன் முகத்தை பதித்து மறைத்துக்கொண்டாள்…

அவளது இந்த செய்கை அவனுக்கு என்ன உணர்த்தியதோ மேலும் அவளை தனக்குள் இருகிக்கொண்டான்…

“ ம்ம்ச் .. விடுங்க அத்தான் “ என்றாள் கிசுகிசுப்பாக..

“ நான் என்ன டி பண்ணேன்..?? ” என்றன் ஒன்றுமே தெரியாதவன் போல…

“ நேரம் ஆச்சு அத்தான்… இன்னும் கொஞ்ச நேரத்தில் வேலைக்கு ஆளுங்க எல்லாம் வந்துவிடுவாங்க… ப்ளீஸ் “ என்றாள்…

அவனோ அவளது இடையில் தன் கரங்களை தவழவிட்டபடி “ நான் எதுவுமே செய்யவில்லை மதி” என்று அவளது முகம் நோக்கி தன் தலை திருப்பவும், வேகமாக அவனை ஒரு தள்ளு தள்ளி விட்டு எழுந்து அமர்ந்தாள்… அவனோ “ ஹே என்ன டி “ என்று மீண்டும் அவளை பற்றி இழுத்தான்..

“ இங்க பாருங்க அத்தான் இது கொஞ்சம் கூட நல்லா இல்லை.. நேற்று மதியம் நாம இங்க வந்தது.. இன்னும் நாம வெளிய தலை காட்டவில்லை என்றால் நல்லா இருக்காது..” என்று படபடவென பொரிந்தவளை வேகமாக தன் கைகளுக்குள் சிறை செய்து அவளது இதழ்களை தன் இதழ்களால் மூடினான் கதிரவன்.. அவனிடம் இருந்து விடுபட எத்தனை முயற்ச்சித்தும் அவளால் முடியவில்லை.. இறுதியில் தொய்ந்து அவன் மார்பிலே மீண்டும் சாய்ந்து கொண்டாள்…

அவனோ கிண்டலாக “ யாரோ இப்ப கொஞ்ச நேரம் முன்னாடி வேகமா எழுந்தாங்க ?? ” என்றான்  “ ஹ்ம்ம் பண்ணுவதை எல்லாம் பண்ணிவிட்டு பேச்சை பாரு “ என்று அவன் மார்பில் குத்தினாள் வசுமதி.. அவனோ உல்லாசமாக சிரித்துகொண்டு “ நான் என்ன டி பண்ணேன்….?? நான் பாட்டுக்கு சிவனே எட்ன்று  படுத்து தான இருக்கிறேன் “ என்றான்..

“ ஆமாமா.. உங்களை பற்றி எனக்கு தான தெரியும்.. வாயில்  வருவது எல்லாம் பொய்.. செய்வது  எல்லாம் களவானி தனம் “ என்று மீண்டும் சிணுங்கினாள்..

“ ஆமா டி மதி.. நான் களவானி தான்.. பொய் பேசுகிறவன் தான்.. பின்ன ஏன் இப்படி ஒய்யாரமாஎன்மேல் சாய்ந்து படுத்து இருக்கியாம் “ என்றான் சிரிப்பை  அடக்கியபடி..

அவளோ வேண்டும் என்றே “ ஓ !! உங்களுக்கு நான் மேல் சாய்ந்து இருக்கிறது கூட பிடிக்கவில்லையோ….?? ஒரே நாளின் நான் உங்களுக்கு சலிச்சு போயிவிட்டேனோ போங்க.. நான் குளிக்க போகிறேன்..” என்று எழுந்தாள்..   

“ ஹே!!! என்ன மதி குட்டி ஒரு வார்த்தை சொல்லவிடமாற்ற.. நான் சும்மா சொன்னேன். வா வா எவ்வளோ நேரம் வேண்டும் என்றாலும் இந்த அத்தான் மேல் சாய்ந்துகொள்”  என்று மீண்டும் அவளை இழுத்து அணைத்தான்..

அவளோ அவனிடம் இருந்து திமிரியபடி ”ம்ம்ச் விடுங்க அத்தான்.. இனிமே தான் நான் சமைக்க வேறு செய்ய வேண்டும் .. வயிறு வேறு பசிக்கிறது… “ என்று கூறவும்..

“ ஹே மதி நம்ம இங்கு எதற்கு வந்து இருக்கோம்??? நல்லா என்ஜாய் பண்ண தானே…?? இங்கு வந்தும் சமையல் கிமையல் என்று ஏன் டி பேசுற ?? ” என்றான் கிறக்கமாக சிரித்தபடி..

 “ அது சரி.. பின்ன புவ்வாக்கு என்ன பண்ணுவதாம்?? இங்கு வேலை செய்ய வரவங்க கிட்ட பிடுங்கி சாப்பிடுவதா இருக்கீங்களா ??? “ என்றாள் நக்கலாக..

“ உனக்கு வர வர வாய் மிகவும் நீளுது”  என்று கூறியபடி  “நான் வேணா அம்மாக்கு போன் பண்ணி குடுத்து விட சொல்கிறேன்.. நீ ஏன் கிட்டவே இரு டி” என்று அவள் கழுத்தில் முகம் புதைத்தான்…

அவனது செய்கையை ரசித்தாலும் அவனை தன்னிடம் இருந்து விலக்கியபடி “ அது சரி… நீங்க சொல்வது நல்லா இருக்கு.. நாம இங்கு வந்தது நேற்று நியாபகம் இருக்கா ??? நேற்று வந்துவிட்டு இப்ப வரைக்கும் எதுவும் சமைத்து சாப்பிடாமல் இருக்கிறதே வெளிய தெரிந்தால் வெக்க கேடு… இதில் வீட்டுக்கு வேறு போன் பண்ணி கொடுத்துவிட சொன்னா அவ்வளோ தான்.. இதை விட மானக்கேடு வேறு எதுவும் இல்லை  “

“ இதில் என்ன டி வெக்க கேட்டிற்கும் மான கேடும் வந்தது இங்க சந்தோசமா இருக்க தானே அனுப்பி வைத்து இருக்காங்க…. “ என்றான் வேகமாக

“ அது சரி… நேற்று வரும் போதே தேவையான எல்லாம் வாங்கிட்டு தான் வந்தேன்.. சோ என் சமையல் தான் இனிமே உங்களுக்கு “ என்று கூறி சிரித்தாள்…  

“ ம்ம்ம் போடி…. நீ பாட்டுக்கு சமையல் ரூமுக்குள்ள போயிட்டா நான் என்ன பண்ணுவது…?? ”  

“ ஆ !!! இது நல்ல கேள்வியா இருக்கே.. நீங்க இத்தனை நாள் என்ன பண்ணுனிங்க ??? இங்கயே டேரா போடலாம் என்று எண்ணம்மா??? “ என்று அவள் பேசி கொண்டு இருக்கும் பொழுதே…

“ என் எண்ணம் எல்லாம் நீ மட்டும் தான் டி “ என கூறி மீண்டும் அணைத்தான்….

“ ச்சி நீங்க மோசம் அத்தான்…” என்று கூறி அவனை தள்ளியபடி விலகினால்..

“ ஏன் டி நேற்று மட்டும் கதிர் கதிர் என்று உருகின இப்ப என்ன மோசமாம் “ என்று சல்லாபமாக சிரித்தான்.. அவன் கூறியதை கேட்ட வசுமதிக்கு வெட்கம் பிடுங்கி தின்றது…  “ ச்சி போடா “ என்று கூறி தன் கையில் குளிப்பதற்கு என்று எடுத்து வைத்த துண்டை அவன் மீது வீசி எறிந்துவிட்டு கண் இமைக்கும் நொடியில் குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டாள்..

அவனும் சந்தோசமாக சிரித்தபடி வந்து ஜன்னல் திறை சீலைகளை விலக்கி விட்டான்.. அவர்கள் காதலுக்கு புது அர்த்தம் கிடைத்தது போல ஆதவனின் புது வெளிச்சம் அந்த அறை முழுவதும் பாய்ந்தது..  ஏனோ கதிரவனுக்கு மனம் தன்னை அறியாமல் மூன்று  நாட்களுக்கு முன் நடந்ததை நினைத்தது…. ஒருவழியாக கீர்த்தி வீட்டில் அனைத்து கணக்குகள் எல்லாம் பார்த்து முடித்து கதிரவன் தன் வீட்டிற்கு வரும்பொழுது விடிகாலை மணி ஐந்து, வந்தவன்  நேரே தன் அறைக்கு சென்றான்…

அங்கே வசுமதியோ காய்ச்சல் வந்து படுத்து கிடந்தாள்.. ஆனால் அது இவனுக்கு தெரியாதே.. அவள் சாதரணமாக படுத்து இருக்கிறாள் என்று எண்ணி கொண்டான்… எங்கே அவள் பக்கத்தில் சென்று படுத்தாள் அவள் தூக்கம் கெட்டுவிடும் என்று எண்ணி அங்கு இருந்த சோபாவில் படுத்து கொண்டான்.. அப்படியே உறங்கியும் போனான்… பொழுது விடியவும் கண் விழித்த வசுமதிக்கு உடல் மிகவும் அசந்து போய் இருப்பது போல இருந்தது.. கண்களை திறக்க முடியவில்லை… ஒரு நிமிடம் தன் அருகில் கதிரவன் இருக்கிறானா என்று பார்த்தாள்…

“ இன்னுமா வீட்டிற்கு  வரவில்லை “ என்று யோசித்து கொண்டே சுற்றி பார்த்தவளுக்கு அங்கே சோபாவில் படுத்து இருக்கும் கதிரவனது உருவம் கண்ணில் பட்டது…

“ என்ன ?? இது இது…. இவன் எப்ப வந்தான்… வந்து ஏன் பெட்டில் படுக்காமல் இப்படி தனியா படுத்து இருக்கான்…” என்று எண்ணியவளுக்கு மனதில் இன்னும் சுமை கூடியது..

“ ஏன் அத்தான் உங்களுக்கு என்னிடம் வர கூட பிடிக்கவில்லையா?? அவ்வளோ வெறுத்து போயிட்டிங்களா என்னை ?? ” என்று மனதில் அவனோடு பேசினாள்… ஆனால் இதற்கு யார் வந்து அவளுக்கு பதில் கூறுவார்… கதிரவன் தன்னை விட்டு விலகுகிறான் என்ற எண்ணமே அவளுக்கு மிகவும் வேதனை குடுத்தது…  மனதோடு சேர்த்து உடலையும் பலவீன படுத்தியது…

“ அத்தான் ப்ளீஸ்.. என்னிடம்  பழைய மாதிரி பேசுங்கள்.. எனக்கு உங்க மேல் கோவம் எல்லாம் போய்விட்டது அத்தான்..  நான் ஒரு முட்டாள்.. மடச்சி அன்னிக்கே மனம்  விட்டு பேசி இருக்க வேண்டும.. உங்களுக்கு புரிய வைக்கிறேன் சொரிய வைக்கிறே என்று நான் தான் நம் சந்தோசத்தை கெடுத்துவிட்டேன்…” என்று மனதில் புழுங்கி தவித்தாள்.. கண்கள் கண்ணீரை வடித்தன… எழ வேண்டும் எழுந்து அவனிடம் சென்று பேசவேண்டும் என்று எண்ணினாலும் அதற்கு அவள் உடல் ஒத்துழைப்பு தரவில்லை…

அவளுக்கு அவள் மீதே எருச்சலாக் வந்தது…. “ இந்த இரண்டு நாளில் நான் மிகவும் தவித்து போயிவிட்டேன் கதிர்.. ஆனால்  கல்யாணம் ஆகி இந்த மூன்று மாதமும் நீங்க எப்படி தவித்து இருப்பிங்க ?? “ என்று எண்ணினாள்.

இப்படியே தனக்குள்ளே பேசிக்கொண்டு இருந்தவள் காய்ச்சல் தந்த அசதியிலும், மன சோர்விலும் மீண்டும் உறங்கி விட்டாள்..   

கதிரவனுக்கு காய்கறி மண்டியில் இருந்து போன் வரவும் தூக்கத்தை பாதியில் விட்டு மீண்டும் தன் பணிகளை கவனிக்க கிளம்பி சென்று விட்டான்.. ஆனால் இது எதுவும் வசுமதிக்கு தெரியாதே..  இத்தனை நேரமாகியும் வசுமதி கீழே இறங்கி வரவில்லை என்றதும் காமாட்சி மேலே சென்று பார்த்தார்… அவளின் உடல் கொதித்ததோ இல்லை உள்ளம் துடித்தோ தெரியவில்லை அசைவில்லாமல் படுத்து கிடந்தாள் வசுமதி..

காமாட்சி இரண்டு முறை அழைத்தும் பதில் இல்லாததால் அருகில் வந்து தொட்டு பார்த்தார்..

“ அட கடவுளே.. என்ன இப்படி கொதிக்கிறது.. வசும்மா.. வசும்மா.. கண்ணு முழித்து  பாருடா.. இந்த பையன் கூட எதுவும் சொல்லாமல் போயிவிட்டானே “ என்று பதறினார்..

அவளிடம் எந்த அசைவும் இல்லை… உடல் கொதித்தது… வேகமாக கீழே இறங்கி வந்தவர் “ தங்கம் தங்கம் நீ மேல் போ.. வசுமதி கூட இரு.. அவளுக்கு உடம்பு கொதியா கொதிக்கிறது.. நான் தம்பிக்கு போன் போட்டுவிட்டு வரேன்.. ” என்று தங்கத்தை வசுமதியின் அருகில் இருக்கும் படி பணித்துவிட்டு.. நேராக தன் அத்தையிடம் சென்றும் விசயத்தை கூறி விட்டு கதிரவனுக்கு அழைத்தார்..

“ தம்பி கதிரவா நீ எந்த வேலை பார்த்தாலும் சரி விட்டிட்டு வேகமா ஒரு டாக்டரை  கூட்டிகிட்டு வீட்டுக்கு வா சாமி.. சீக்கிரம்.. ”

….

“ அப்பத்தா நல்லா தான் இருக்கு.. வசுமதிக்கு தான் “ என்று இவர் கூறி முடிக்கும் முன்னே அவன் போனை வைத்து விட்டு டாக்டரை அழைக்க கிளம்பி விட்டான்..

“ என்ன ஆனது இவளுக்கு ??நன்றாய் தான படுத்து இருந்தாள் ?? இப்ப என்ன திடீர் என்று. கடவுளே என் மதிக்கு எதுவும் ஆகா கூடாது..  “ எண்ணியபடியே புல்லட்டில் பறந்தான்… அங்கே வீட்டிலோ அன்னபூரணி காமாட்சி தங்கம் என்று அனைவரும் புடை சூழ படுத்து இருந்தாள் வசுமதி. இத்தனை நேரம் டாக்டர் வருவதற்குள் கை வைத்தியம் செய்தனர் பெண்கள்.. அதனால் சிறிது கண் முழித்து பார்த்தாள். கண் விழித்ததும் அவளது மனமும் விழியும் கதிரவனை தேடியது..

அவள் பார்வையின் அலைப்புருதலை கண்ட காமாட்சி “ தம்பி டாக்டர் கூப்பிட போய்  இருக்கான் வசும்மா “ என்றார்.. “ம்ம் “ என்று கூறி மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள்.. பெண்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.. கதிரவன் வேகமாக டாக்டரை அழைத்து கொண்டு வந்தான்.. மருத்துவர் பரிசோதிக்கும் வரை அங்கே அமைதி நிலவியது..

தன்னவன் வந்து விட்டான் என்று உணர்ந்ததாலோ என்னவோ லேசாக விழிகள் திறந்து பார்த்தாள் மதி.. அவனோ தன் போனை எடுத்து கொண்டு பால்கனிக்கு சென்றான்..

வசுமதிக்கோ இங்கே உள்ளம் துடித்தது..” இப்ப கூட யார்கிட்ட தான் இப்படி பேசுகிறானோ?? நான் இப்படி படுத்துகிடக்கேன்.. கொஞ்சமாவது ஒரு அக்கறை இருக்கா?? ” என்று என்னும் பொழுதே அவள் விழிகள் கண்ணீர் சிந்தின..

கதிரவனுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை பேசிக்கொண்டு இருந்தவன் திடீரென்று திரும்பி பார்த்தான்.. கண்ணீர் விழிகளோடு வசுமதி அவனை தான் பார்த்தபடி படுத்து இருந்தாள்.. மருத்துவர் ஊசி போட்டது கூட அவளுக்கு உறைக்கவில்லை.. அவளது விழிகள் இரண்டும் தன் கணவனிடமே உறைந்து இருந்தது…

காமாட்சி “ டாக்டர் நல்லா தான் இருந்தாள்.. இப்ப ஏன் இப்படி ஆனது தெரியவில்லை.. “ என்று கூறவும்

“ ஒன்றுமில்லை மா.. அசத்தியினால வந்தது தான்.. இரண்டு நாளாய் அவர்கள் சாப்பிடவே இல்லை போல.. அதும் இல்லாமல்  தூக்கம் வேற இல்லை போல.. அதான் எல்லாம் சேர்ந்து இப்படி காய்ச்சல் வந்துவிட்டது நல்லா அவர்களுக்கு பிடித்ததை  சாப்பிடட்டும்… நல்லா தூங்கி எழுந்தா சரியா போகும்.. இந்த மாத்திரை மட்டும் மூணு வேலைக்கும் குடுங்க. சரி ஆகிடும் “ என்று கூறி சென்று விட்டார்..

கதிரவனுக்கு மருத்துவர் கூறுவதை கேட்க கேட்க தன் மீதே கோவமாக வந்தது.. பின் என்ன நினைத்தானோ மெத்தையில் அவள் அருகில் அமர்ந்து கொண்டான்.. “ இரண்டு நாளாய் சாப்பிடாமல் தூங்காமல் இருந்து இருக்கா.. நான் எப்படி கவனிக்காமல்  விட்டேன்..” என்று என்னும் பொழுதே காமாட்சி அவனிடம் இதே கேள்வியை கேட்டார்..

அவன் தன்னிடம் வந்து அமர்ந்ததே வசுமதிக்கு ஒரு புது தெம்பை குடுத்தது.. முகத்தில் ஒரு ஒளி வந்தது…. ஏனோ மனம் மிகவும் நிம்மதியாக உணர்ந்தாள்…   இதை எல்லாம் அன்னபூரணி கவனித்து கொண்டு தான் இருந்தார்..

“ ஏன் கதிரவா வசுமதி இரண்டு நாலா சாப்பிடாம தூங்காம இருக்கா.. நீ அதை என்னான்னு கவனிக்கலையா ?? காலையில போறப்ப கூட எதுவும் சொல்லாம போயிட்ட.. ” என்றார் குற்றம் சாட்டும் குரலில்..

“ இல்லை மா… மதிக்கு உடம்பு முடியலை என்று இப்ப நீங்க போன் செய்த பிறகு தான் மா எனக்கே தெரியும் …” என்றான் கம்மி போன குரலில்..

“ என்ன இப்பதான் தெரியுமா ?? என்ன தம்பி என்ன சொல்ற..?? அவள் தினமும் உனக்காக தான ராத்திரி நாங்க என்ன சொன்னாலும் சாப்பிடாமல்காத்துகிட்டு இருந்தா… அப்ப நீ அவளை பார்த்துகிற லட்சணம் இது தானா ?? ”

அவனுக்கோ மனம் மிகவும் வலித்தது.. ஒரு ஒரு முறையும் அவள் போன் செய்யும் பொழுது எல்லாம் ஓரிரு வார்த்தை மட்டுமே பேசி வைத்தது எல்லாம் நினைவு வந்தது… தனக்காக உண்ணாமல் உறங்காமல் கூட இருந்தாளாமே என்று நினைத்தான்.. மெல்ல அவன் தலையை வருடி கொடுத்தான்…

“ இல்லை மா.. உங்களுக்கே தெரியும் எவ்வளோ வேலை இருக்கு என்று.. நான் வீட்டுக்கு இந்த ஒரு வாரமாவே லேட்டா தான் வருகிரேன்.. நான் வரும் போது படுத்து இருப்பாள்.. சரி தூங்குகிறாள் என்று தான் நானும் எதுவும் கேட்கவில்லை மா “ என்றான் வருத்தமாக.. 

அவன் அருகில் வந்து அமர்ந்ததுக்கே வசுமதி அகமகிழ்ந்தாள்.. அவன் தலையை வேறு வருடவும் கேட்க வேண்டுமா.. அவனிடம் நன்றாக ஒட்டிக்கொண்டு படுத்துக்கொண்டாள்… அவனுக்கோ அவளது செய்கையே உணர்த்தியது தன்னை மிகவும் தேடினாள் என்று..   

“ என்ன கேட்கவில்லையா ?? அது சரி நீ ராத்திரி எல்லாம் எங்க சாப்பிட்ட ?? ” என்று வினவினார்..

கதிரவன் பதில் கூறும் முன் அன்னபூரணி “ அடடா.. இதென்ன என் பேத்திய இப்படி படுக்க வைத்துகொண்டு அம்மாவும் பையனும் இப்படி பேசிட்டே இருக்கீங்க.. தங்கம் போ நீ வசுமதிக்கு பிடிச்சதா ஏதா சமையல் செய்து எடுத்துகிட்டு வா “ என்று கூறி அனுப்பி வைக்கவும் அங்கே ஒரு அமைதி நிலவியது..

கண்கள் மூடி இருந்தாலும் நடப்பதை எல்லாம் கவனித்து கொண்டு தான் இருந்தாள்… ஆனாலும் ஏனோ அவள் விழிகள் திறக்க வில்லை.. இமைகள் மூடி கதிரவனின் அருகாமையை ரசித்து கொண்டு இருந்தாள்.. “ எது எப்படி இருந்தாலும் சரி அத்தான் கிட்ட பேசியே ஆக வேண்டும் “ என்று எண்ணினாள்..

மீண்டும் அன்னபூரணி தான் பேச ஆரம்பித்தார்..” காமாட்சி நீ நினைக்கிற மாதிரி வசுமதிக்கு ஒன்றும் பெரிய காய்ச்சல் எல்லாம் இல்லை.. அவளுக்கு காய்ச்சல் வந்த காரணமே எனக்கு இப்பத்தான் புரிகிறது ” என்று கூறி சிரித்தார்..

“ என்ன அத்தை என்ன சொல்றிங்க ?? எனக்கு ஒன்றும் புரியல “ என்றார் காமாட்சி குழப்பமாக… கதிரிவன்னும் தன் அப்பத்தாவை அப்படி தான் பார்த்தான்..

வசுமதியோ அத்தனை நேரம் இமைகள் மூடி படுத்து கிடந்தவள் தன் அம்மாச்சி என்ன கூறுகிறது என்று அறிய விழிகள் திறந்து அவரை பார்த்தார்.. அவளை கண்ட அன்னபூரனியோ “ என்ன கண்ணம்மா நான் சொல்வது சரி தான.. உலகத்துலேயே தன் புருசன் என்னிடம்  பேச  வில்லை பார்கவில்லை என்று காய்ச்சல் வந்து படுத்தவள்  நீயா தான் இருப்பாய் “ என்று கூறி மீண்டும் நகைத்தார்..

காமாட்சிக்கு அப்பொழுதுதான் புரிந்தது… தன் அம்மாச்சி இப்படி கூறவும் தன் ரகசியம் வெளி பட்டுவிட்டதே என்று “ ம்ம் போ அம்மாச்சி “ என்று கூறி மீண்டும் கண்கள் மூடி கொண்டாள்.. அத்தனை காய்ச்சலிலும் வசுமதியின் முகத்தில் இப்பொழுது ஒரு தனி பொலிவு தெரிந்தது… கதிரவனோ அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துகொண்டு இருந்தான்…

அவள் செய்கை, அவளது முக மாற்றம், அவளது வெட்கம் இதெல்லாம் அவனுக்கு என்ன உணர்த்தியதோ தெரியவில்லை… ஆனாலும் ஒரு மகிழ்ச்சி ஒரு உற்சாகம் தொற்றி கொண்டது.. தன்னவளையே விழி விரித்து பார்த்து கொண்டு இருந்தான்.. அவனது பார்வையை வசுமதியும் உணர்ந்து தான் இருந்தாள்..

“ ச்சே.. கொஞ்சம் கூட இந்த அத்தானுக்கு வெட்கமே இல்ல.. பக்கத்தில் அம்மா பாட்டி எல்லாம் வவைத்துகொண்டு தானா இப்படி பார்ப்பது “ என்று மனதிற்குள் செல்லமாக கடிந்து கொண்டாள்..

கதிரவனின் பார்வை தங்களிடம் இல்லை எனவும் அன்னபூரணி “ காமாட்சி வா நம்ம கீழ போயி நம்ம வேலையை  பார்க்கலாம்.. இதுக்கு மேல் நாம ஏன் இங்க கரடி மாதிரி “ என்று கூறி தன் மருகளை கீழே அழைத்து கொண்டு போனார்..

காமாட்சியும் “ நீங்க சொல்வதும் சரி தான் அத்தை..” என்று இருவரும் சிரித்தபடியே வெளியே சென்றனர்..

ஆனால் கரடி என்று கூறியதும் அழகேசனுக்கு மூக்கு வியர்த்து விட்டது போல.. சரியாக கதிரவனுக்கு போன் செய்தான்… கதிரவனும் இதை தான் நினைத்து இருப்பான் போல.. லேசாக சிரித்து கொண்டான்..

“ சொல் டா மாப்பிள்ள…”

…..

“ ம்ம்ம் சாதா காய்ச்சல் தான் டா.. ஒரு ஊசி போட்டு இருக்கு… ம்ம் படுத்து இருக்கா …”

….

“ அப்படியா நீயும் மீனாட்சியும் வரிங்களா ?? சரி வா.. கீர்த்தி இங்கு வரவேண்டும் சொன்னாப்ல டா வரும் போது அப்படியே அங்க போயி பைல் வாங்கிட்டு இங்கு கூட்டி வந்துடறியா?? ”

….

“ ஆமா டா மாப்பிள்ள எல்லாம் முடிந்தது”

“ சரி டா… நான் வீட்டில் தான் இருப்பேன்…. ” என்று கூறி போனை வைத்தான்..

கீர்த்தி என்ற பெயரை கேட்டதும் வசுமதி விழித்துக்கொண்டாள்.. “ நான் இப்படி படுத்து கிடக்கேன்.. இந்த நிலைமையில கூட  அந்த கீர்த்திய பாக்கமா இருக்க முடியலையோ… வரட்டும் அவ.. இன்னிக்கு தெரியும் இந்த வசுமதி யாருன்னு ” என்று கருவியவள் “ நாம வேறு இப்படி கன்றாவியா படுத்து இருக்கோமே..”என்று எண்ணியவள் சட்டென்று எழுந்து அமர்ந்தாள்..

வசுமதி இப்படி வேகமாக எழுந்து அமரவும் கதிரவன் ஒரு நொடி பதரிவிட்டான் “ என்ன மதி.. என்ன வேணும் “ என்று பதற்றாமாக கேட்டான்..

அவளோ நிதானமாக அவன் முகம் பார்த்து “ ம்ம்… நான் குளிக்க வேண்டும் “ என்றாள்..

“ என்ன குளிக்கவேண்டுமா? என்ன விளையாடுகிறையா ?? இப்ப தான் ஊசி போட்டு இருக்கு.. இப்ப குளித்துவிட்டு நீ எங்க உலக அழகி போட்டிக்கா போக போகிற?? அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் சும்மா படுத்து இரு…  “ என்று அவனுக்கு புரியவில்லை கதிரவனை கண்டதும் வசுமதிக்கு உடலில் பழைய தெம்பு திடம் வந்து விட்டது என்று.. தூக்கம் இல்லாமையால் மட்டும் தான் முகம் சற்று சோர்வாக இருக்கிறது..

“ ம்ம்ச் அழகி போட்டிக்கு போறவங்க மட்டும் தான் குளிப்பாங்களா ?? ” என்றாள் நக்கலாக..

“ஆகா காய்ச்சல் வந்தாலும் இவள் கரைச்சல் குறையவில்லை டா சாமி ” என்று எண்ணிக்கொண்டு “ அது இல்லை வசும்மா உடம்பு மிகவும் வீக்கா இருக்கு அதான்”  என்று அவன் கூறி கூட முடிக்கவில்லை

“ என்ன உடம்பு வீக்கா இருக்கு என்று நீங்க டெஸ்ட் பண்ணி பார்த்திங்களா???எல்லாம் எனக்கு தெரியும் வழியை விடுங்க “ என்று கூறி வேகமாக பாத்ரூமிற்குள் சென்றாள்.. அவனோ அவளை விட வேகமாக மின்னல் போல பாய்ந்து பாத்ரூமில் நின்று கொண்டான்.. “ இது என்ன இப்படி “ என்பது போலா பார்த்தாள் வசுமதி..

“ நீ முகம் மட்டும் கழுவு போதும் “ என்றான் கறாராக…

அவனை ஒரு முறை முறைத்துவிட்டு ஆனாலும் முகம் மட்டுமே கழுவி விட்டு வந்தாள்… வந்தவள் சென்று படுக்காமல் நேரே கண்ணாடி அருகில் சென்று தன் உடையை திருத்திக்கொண்டு தலை வாரினாள்..

“ இப்ப எதற்கு இதெல்லாம் செய்யுற… ஏன் டி முடியலை என்றால் படுத்து இருக்க வேண்டியது தான “ என்று கதிரவன் அக்கறையாக தான் கேட்டான்.. அவளோ

“ ஏன் பொண்டாடிக்கு முடியலை என்று  இப்பதான் கண்ணு தெரியுதா ??? வீட்டுக்கு கெஸ்ட் வர சொல்லும் போது தெரியவில்லையோ “ என்றாள் குத்தலாக..

ஓ !!! இது தான் விஷயமா ??? ஹ்ம்ம் அதுக்குதான் இப்படி கண்ணாடி முன்னால வந்து நிற்கிறாளா ??” என்று எண்ணியவனுக்கு மனதில் மீண்டும் குறும்பு கூத்தாடியது… “ ஏன் மதி கெஸ்ட் வருவாங்க என்று தான் இப்படி யா ?? ” என்று அவளை மேலும் கீழும் சுட்டி காட்டினான்..

“ ஆகா கண்டு பிடிச்சுட்டானே ” என்று ஒரு நிமிடம் முழித்தவள் “ சரி சரி வெளிய போங்க நான் டிரஸ் மாத்தனும் “ என்றாள் மிடுக்காக..

அவனோ அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு “ ஹ்ம்ம் மாத்து.. நான் என்ன பண்ண போகிறேன்… “ என்று கைகளை காட்டி கொண்டு அங்கேயே அமர்ந்து விட்டான்..” அய்யோ இவன் வேறு படுத்துறானே “ என்று எண்ணியவள்

“ ம்ம்ச் இப்ப வெளிய போக போறிங்களா இல்லையா “ என்று கூறி அவனது கைகளை பற்றி இழுத்தாள்..

“ஏன் டி உன்னை பார்த்தா கொஞ்ச நேரம் முன்னாடி இங்கு படுத்து கிடந்தவள் மாதிரியா இருக்க.. கொஞ்சமாவது அடக்க சடக்கமா இருக்கியா ?? எப்ப பாரு ஒன்று  வீட்டில் அரட்டை அடிக்க வேண்டியது இல்லை இப்படி என்னை பிடித்து  படுத்தவேண்டியது..” என்று அவன் சாதரணமாக தான் கூறினான்..

ஆனால் வசுமதிக்கு தான் மனம் வலித்தது..” நான் நிஜமாவே உங்களை மிகவும் படுத்திவிட்டேன் அத்தான் “ என்றாள் கவலை நிறைந்த குரலில்… அவன் பதில் கூறுமுன்னே கீழே இருந்து காமாட்சி அழைக்கும் குரல் கேட்டது..

“ கதிரவா தம்பி….கீழ வா.. யார் வந்து இருக்கா பாரு “ என்று உற்சாகமாக அழைத்தார்..

வசுமதியை ஒரு பார்வை பார்த்துவிட்டு கீழே சென்று விட்டான்.. வசுமதிக்கு ஏனோ மனம் பதறியது.. கதிரவன் வெளியே செல்லவும் தன் உடைகளை மாற்றி கொண்டு தன்னை நன்றாக திருத்தி கொண்டு கீழே இறங்கி வந்தாள்.. அவளது பார்வை கீழே ஹாலை ஒரு அலசு அலசியது… புதிதாக வேறு எந்த ஒரு பெண்ணும் அங்கு இல்லை.. ஒரே ஒருவன் அவன் யாரோ புதிதாக அமர்ந்து இருந்தான்..

அவனோடு தான் அனைவரும் பேசி கொண்டு இருந்தனர்.. இவள் இறங்கி வருவதை கண்ட மீனாட்சி “ ஹே வசு .. என்ன உனக்கு காய்ச்சல்.. முழிக்கவே இல்லை.. டாக்டர் வந்து ஊசி போட்டாங்க அப்படி என்று எல்லாம் சொன்னங்க.. இப்ப என்ன பளிச்சென்று  இறங்கி வர “ என்று கூறி கைகளை பிடித்து கொண்டாள்..

இதற்கு வசுமதி பதில் கூறும்முன் அன்னபூரணி “ அடி மீனாட்சி என்னிடம் கேளு அவளுக்கு எதற்கு காய்ச்சல் வந்தது என்று  நான் சொல்கிறேன் “ என்று கூறி சிரித்தார்..

“ இந்த அம்மாச்சி வேற நேரம் காலம் தெரியாமல் என்னை இப்படி பேசி வைக்கும் “ என்று எண்ணியவள் தன் கணவனை கேள்வியாக பார்த்தாள்..

அவனோ மெல்ல நகைத்துகொண்டு “ மதி.. இவன் தான் என் பிரின்ட் கீர்த்தி வாசன்.. C.A படிச்சுருக்கான்.. மிகவும் நாள் கழிச்சு ஊருக்கு வந்தவனை நாங்கள் கோழிய அமுக்குன மாதிரி அமுக்கி மிகவும் வேலை வாங்கிட்டோம்.. கீர்த்தி இவ வசுமதி.. என் வைப் “ என்று கூறி இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தான்..

வசுமதிக்கு மனதிற்குள் மிகுந்த அதிர்ச்சி.. “ கீர்த்தி தான் இந்த கீர்த்தி வாசனா ?? நான் பெண் என்று நினியாதேனே   இந்த அத்தானும் அப்படி தான சொன்னாங்க. இதுக்கா நம்ம டென்ஷன் ஆகி காய்ச்சல் வந்து ஊசி எல்லாம் போட்டுகிட்டோம்… இருக்கட்டும்” என்று தன் கணவனை ஒரு முறை முறைத்துவிட்டு “ ஹலோ “ என்று கூறி கீர்த்தி வாசனை பார்த்து சிரித்தாள்..

வசுமதியின் ஒற்றை பார்வையில் கதிரவன் புரிந்து கொண்டான் “ ஆகா சாமியாட ரெடி ஆகிட்டா போலையே.. ஹ்ம்ம் கதிரவா பி ரெடி டு பேஸ் ஹெர் “ என்று தனக்கு தானே தைரியம் கூறி கொண்டான்..

சிறிது நேரம் சிவபாண்டியனும் அங்கு வரவே அனைவரும் பேசியபடி சிரித்தபடி காலை உணவை உண்டு முடித்தனர்.. இன்னும் சிறிது நேரம் இருந்துவிட்டு கீர்த்திவாசன் என்னும் கீர்த்தி கிளம்பி சென்று விட்டான்..

சிவபாண்டியனோ “ என்ன வசுகுட்டி உனக்கு காய்ச்சல் என்று அத்தை போன் பண்ணி சொன்னா ல் பார்த்தால்  அப்படி தெரியவில்லையே “ என்றார்..

இவர் இப்படி கேட்டதும் அங்கே வசுமதியை தவிர மீதம் இருந்த பெண்கள் மூவரும் நகைத்து விட்டனர்.. இதை கண்ட வசுமதி ” ம்ம் பாருங்க மாமா எல்லாரும் என்னை கிண்டல் பண்ணுறாங்க “ என்றாள் சலுகையாக..

அவரோ “ அட ஏன் எல்லாரும் வசுகுட்டிய கிண்டல் பண்ணுரிங்க ?என்னவென்று சொன்னால் நானும் சேர்ந்து சேந்தது கிண்டல் பண்ணுவேன் “ என்று தன் பங்கிற்கு பேசினார்..

“ எல்லாரும் மோசம் போங்க.. நான் என் ரூமுக்கு போகிறேன்.. அலுப்பா இருக்கு “ என்று கூறி மாடி ஏறினாள்..

“ யப்பாடி.. மாடி ஏறிவிட்டா…” என்று கதிரவன் கொஞ்சம் ரிலாக்ஸ்டாக நின்றான்.. ஆனால் அவன் மனதில் நினைத்தது அவள் மனதிற்கு கேட்டதோ என்னவோ திரும்பி நின்று “ அத்தான் கொஞ்சம் மேல வரிங்களா ??? “ என்றாள் அவனையே பார்த்து..

 

                              உன் நினைவு – 33

உன் முகம் பார்த்தே

நாட்கள் நகர்த்துவேன்..

உன் விழி பார்த்தே

விழிகள் மூடுவேன்.. 

 

வசுமதி கதிரவனை அழைத்ததும் மீண்டும் அங்கே ஒரு சிரிப்பலை பரவியது.. அழகேசன் கதிரவனை பார்த்து “ டேய் மாப்பிள்ள.. நீ எதோ திருகுதாளம் பண்ணி இருக்க போலையே ?? ” என்று கூறி சிரித்தான்..

அவனை முறைத்த கதிரவன் மீனாட்சியிடம் “ என்ன தங்கச்சி நீ சரியகவே சமைக்கிறது இல்ல என்று  அழகு சொல்றான் “ என்று அழகேசனுக்கு ஒரு வெடியை பற்ற வைத்துவிட்டு போனான்.. மீனாட்சி அழகேசனை முறைத்தபடி நின்றாள்..     

தங்கள் அறையின் உள்ளே நுழைந்தான் கதிரவன்.. அங்கே வசுமதி அமைதியாக கட்டிலில் அமர்ந்து இருந்தாள்.. ” ஹி ஹி என்ன மதிம்மா கூப்பிட்ட?? ” என்று சிரித்தபடி அருகில் வந்தான்..

அவன் அருகே வரவும் வேகமாக அங்கே வசுமதிக்கு சாறு பிழிய என்று வைத்து இருந்த ஆரஞ்சு பழங்கள் எல்லாம் கதிரவன் மீது பாய்ந்தன.. “ பிராடு… 420… லையர்” என்று கூறி பழங்களையும் அவன் மீது வீசி எறிந்தாள்.. முதலில் இந்த தாக்குதலை எதிர்பார்க்காதவன்

“ ஹே மதி .. என்ன டி இது …”

“ ஹே உனக்கு இப்பதான் ஊசி போட்டு இருக்கு டி…”

“ இங்கு பாரு எதுனாலும் பேசி தீர்த்துக்கலாம்.. நோ “

“ ஹேய் மெதுவா வீசு டி “ என்றெல்லாம் கூறி அவள் வீசிய எல்லா பழங்களையும் லாவகமாக கையில் பிடித்து விட்டான்.. அவளுக்கோ மூச்சு இறைத்து.. கோவம் ஒரு புறம் வேறு..    சிரித்தபடி வசுமதியின் அருகில் வந்து பழங்களை வைத்துவிட்டு அவள் அருகில் அமர்ந்தான் கதிரவன்.. அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள் வசுமதி..

“ என்ன மதி … எதற்கு கூப்பிட்ட?? என்ன விசயம் டா “ என்றான் அமைதியாக..

“ என்னிடம்  பேசாத.. போடா “ என்றாள் வசுமதி படக்கென்று.. இது தான் முதல் முறை அவள் அவனை டா என்று அழைப்பது…

“ என்.. என்ன டி இப்படி சட்டுன்னு டா போட்டு பேசுற..” என்றான் கதிரவன் அதிர்ந்து..

“ ஏன் சொல்ல கூடாதா ?? என் புருஷன்… அதுவும் எனக்கு இரண்டு தடவ தாலி கட்டுன புருஷன்.. நான் அப்படி தான் சொல்லுவேன்.. உங்களுக்கென்ன ?? ” என்றாள் வசுமதி..

அவளது முக பாவனையும்.. பேச்சும் கதிரவனுக்கு அவளது உள்ள மாற்றத்தை உணர்தியது.. இருந்தாலும் தானாக அவளே கூறட்டும் என்று கண்டும் காணாதது போல இருந்தான்..

“ ம்ம் சரி சொல் “ என்றான் மொட்டையாக..

“ ஏன் என்னிடம் பொய் சொன்னிங்க ?? ”

அவனோ ஒரு புரியாத பார்வை பார்த்து “ பொய்யா?? நானா ?? அதுவும் உன்கிட்டயா ?? ” என்று விளம்பரத்தில் கத்திரிக்காயா ??? பிட்சாலையா ?? என்பது போல கேட்டான்..

வசுமதிக்கு இவன் விளையாட்டு இன்னும் கோவத்தை தான் தந்தது..” ம்ம்ச்… கீர்த்தி ஏன் ஒரு பெண் என்று சொன்னிங்க ?? ” என்று கேட்டாள் பற்களை கடித்தபடி.

“ ஹே மதி “ என்று அருகில் வந்தவன் “ இங்கு பாரு கொஞ்சம் யோசித்து பாரு நானா சொன்னேனா ??? நீயாதான அவள் யாரு என்று கேட்ட ?? சரி பொண்டாட்டி ஆசை பட்டு கேட்கிறாளே நாம பாட்டுக்கு அது பொண்ணு இல்லை பையன் என்று சொன்னா அவள் மனசு கஷ்டப்படுமே என்று தான்” என்று கூறி கொண்டு இருக்கும் பொழுதே அவனை சராமாரியாக அடிக்க ஆரம்பித்து விட்டாள்..

“பிராடு… போடா.. நான் எப்படி துடிச்சு போயிட்டேன் தெரியுமா ?? ” என்று அவனை கடிந்து கொண்டாள்.. அவனோ அவளது அடிகளை எல்லாம் காதல் பரிசாக வாங்கிகொண்டு “ ஏன் டி  துடிச்சு போன ?? ” என்றான் குறும்பாக..

இத்தனை நேரம் கோவமாக இருந்த வசுமதிக்கு திடிரென்று வெக்கம் குடிகொண்டது.. அமைதியாக தலை குனிந்து அமர்ந்து இருந்தாள்.. அவனுக்கும் அவள் உணர்வு புரிந்தது.. ஆனால் அதை அவள் அல்லவா சொல்லவேண்டும்..

“ ஹ்ம்ம் சரி மதி உனக்கு அலுப்பாய் இருக்கு சொன்னல.. சரி நீ படுத்து ரெஸ்ட் எடு.. நான் வயலுக்கு போகிறேன் “ என்று கிளம்பினான்..

அவளுக்கோ சப்பென்று ஆகிவிட்டது..” என்ன இது எப்ப பாரு வேலை வேலை என்று . இவன் எதற்கு என்னை கல்யாணம் பண்ணான்..?? சாமியாரா போயிருக்க வேண்டியது தான ?? ” என்று மனதிற்குள் புளுங்கியவள்

“ நாம நாளைக்கு அங்கு  பண்ணை வீட்டுக்கு போகலாம்..” என்றாள் மிடுக்காக..

“அங்க  எதற்கு ?? ” என்றான் பதிலுக்கு அவனும் தோரணையாக..

“ எதற்கு என்று இவனுக்கு எதுவும் தெரியாது பாரு “ என்று மனதிற்குள் எண்ணியவாறே ” ஏன் எதுக்குன்னு சொன்னா தான் வருவிங்களா ?? ”

“ இல்லை மதி.. கல்யாணம் ஆகியும் ஒரு கன்னி பையன், பொண்டாட்டி கூடனாலும்  இப்படி தனியா ஒரு இடத்துக்கு எப்படி வரது?? ” என்று வேண்டும் என்றே பதில் அளித்தான்..

அவளுக்கோ “ ச்சி பேச்சை பாரு.. வெட்கமே இல்லை இவனுக்கு “ என்று மனதில் திட்டியவள்..” ம்ம்ச் அங்க  போகிறோம் நாளைக்கே. ஒரு வாரம் அங்க தான்.. ” என்றாள் பிடிவாதமாக..

கதிரவனோ “போகலாம் நாளைக்கு இல்லை அதற்கு அடுத்த நாள் போகலாம் “ என்றான்..

“ஏன் நாளைக்கு என்ன ?? ”

“ அடி மதி.. அங்கு வீடு பூட்டி கிடக்கு.. ஆள் விட்டு எல்லாம் கிளீன் பண்ண சொல்லவேண்டும் .. அதும் இல்லாமல் ஒரு வரம் அங்கு  தங்கணும்னா அதற்கு  ஏத்த மாதிரி திங்க்ஸ் எல்லாம் செட் பண்ணவேண்டும் .. அதான்.. ”

“ ம் சரி.. வீட்டில் எல்லாரு கிட்டயும் சொல்லிவிடுங்க அத்தான் ” என்றாள் கட்டிலில் சாய்ந்தவாறே..

கதிரவன் “ இந்த வேலைக்கு நான் வரமாட்டேன்.. நீ தான என்னிடம் சொன்ன.. அது மாதிரி வீட்டுலயும் எல்லாரு கிட்டயும் சொல்லிவிடு.. “

இதை அவல எவ்வாறு கூறுவாள்.. ” நானும் என் புருசனும் கொஞ்சம் தனியா இருக்கணும்னு நினைக்கிறோம் “ என்று அவளால் எப்படி வீட்டில் கூற முடியும்.. சும்மாவே அன்னபூரணியும் காமாட்சியும் வசுமதியை கேலி பேசுகிறார்கள்.. இன்னும் இதை வேறு சொன்னால் அவ்வளோதான்..

“ அதெல்லா முடியாது.. நீங்க தான் அத்தான் சொல்லவேண்டும்..” என்று அடம் பிடித்து வீட்டில் கூறவும் வைத்து விட்டாள்..

“குட்டச்சி இங்கு இத்தனை பேரு இருக்கும் பொழுதே இப்படி படுத்துகிறாள்.. இதில் ஒரு வாரம் அவள் கூட தனியா ?? டேய் கதிரவா.. எதுனாலும் நீ முந்திக்க  ” என்று தனக்கு தானே அறிவுரை கூறிகொண்டான்..

காமாட்சி தான் “ இரண்டு நாலா அவன் உன்கிட்ட பேசவில்லை என்று இப்படி உடும்பு பிடி பிடிக்கிறே வசும்மா “ என்று கூறி சிரித்தார்..

கதிரவன் “ ஆமாமா நான் இரண்டு நாள் அவள் கூட பேசாதது மட்டும் தான் எல்லாருக்கும் தெரியுது.. கல்யாணம் ஆகி மூணு மாசம் அவள் என்னை சுத்தல்ல விட்டது எல்லாம் இங்கு யார் கேட்பா ?? ” என்று புலம்பினான்..

ஒருவழியாக கதிரவனும் வசுமதியும் பண்ணை வீட்டிற்கு கிளம்பினர்.. அழகேசன் தான் கதிரவனை கிண்டல் செய்து ஒரு வழி செய்து விட்டான்..

வசுமதிக்கு அந்த பழ தோட்டமும், அந்த பண்ணை வீடும் ஆயிரம் ஆயிரம் நினைவுகளை நினைவு படுத்தின… உள்ளே நுழையும் பொழுதே கதிரவன் கைகளை இறுக்கமாக பற்றி கொண்டாள்.. கதிரவனும் அவள் மாற்றங்களை எல்லாம் உணர்ந்து தான் இருந்தான்.. இருந்தாலும் அமைதியாக அவளை ரசித்து கொண்டு இருந்தான்… ஆனாலும் அவனுக்கு அவள் தானாக மனம் திறந்து பேசுவாள் என்று தோணவில்லை..

“ சரி மதி நீ இந்த ரூமில இருந்துக்க.. நான் இதோ இந்த ரூம்ல தங்கிக்கிறேன் “ என்றான் பார்வையை வேறு எங்கோ பதித்தபடி..

வசுமதி அதிர்ந்து விட்டாள்… “ இவனுக்கு நம்ம மாற்றம் எதுவுமே தெரியவில்லையா ?? இல்லை ஒருவேளை நிஜமாகவே வெறுத்துவிட்டானா ??” என்று என்னும் பொழுதே கண்ணீர் எட்டி பார்த்தது.. “ இன்னும் நீ என்னை புரிந்து கொள்ளவில்லையா?? “ என்பது போல பார்த்தாள்..

“ என்ன மதி இப்படி பார்க்கிற ?? அப்படி நான் என்ன தப்பா சொல்லிவிட்டேன்?? அங்க  வீட்டில் தான் எல்லாரும் எதாவது சொல்லுவங்க என்று  ஒரே ரூமில தங்கினோம்.. இப்ப இங்கு தான் யாரும் இல்லையே பின்ன என்ன ?? ”  அவனது வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவளை ஈட்டியை குத்தியது.. ஆனாலும் இது எல்லாம் அவள் ஆரம்பித்தது தானே.. அவள் தானே முடித்து வைக்க வேண்டும்..

“ இல்லை அத்தான்…” என்று அவள் எதுவோ கூற வந்தாள்.. ஆனால் அதற்குள் கதிரவன்

“ இல்லை மதி.. நீ எனக்காக யோசிக்காத. ” என்று அவனும் அவனுக்கு வாய்க்கு வந்தபடி பேசி கொண்டு இருந்தான்… வசுமதிக்கு தான் ஒரு அளவுக்கு மீறி போனாள் பொறுமை என்ன விலை என்று கேட்பாளே.. பொருத்து பொருத்து பார்த்து கத்தியே விட்டாள் “ போதும் நிறுத்துரிங்களா ??? ” என்று

அவனும் தன் கைகளை கட்டிகொண்டு அமைதியாக அமர்ந்து விட்டான் அங்கு இருந்த சோபாவில்.. ஒரு நிமிடம் அவனையே பார்த்தவள் அவளும் அவன் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்..

“ நான் உங்க கிட்ட பேசவேண்டும் அத்தான் ” என்றாள் விசும்பி கொண்டே.. அவளது கவலை படிந்த முகம் அவனை என்ன செய்ததோ தெரியவில்லை.. “  ம்ம் பேசலாம்.. ஆனால்  நீ அழுகாமல்  இருந்தால்  ” என்று கூறினான்..

அவளும் சிறு பிள்ளை போல தலையை ஆட்டி தன் கண்கள் இரண்டையும் துடைத்தபடி “ நான் ஒன்றும் அழுகவில்லை  “ என்றாள்..

“ ம்ம் சொல்லு என்ன பேசவேண்டும்?? ”

“ உங்களுக்கு இன்னும் என் மேல் கோவமா அத்தான் ?? ”

“ கோவமா எனக்கா ?? உன் மேலயா ??? என்ன மதி சொல்லுற.. நீ தான் என் மேல் வெறுப்பா இருக்க.. நான் எங்க உன் மேல் கோவப்பட்டேன்..”

“ இல்லை உங்களுக்கு என் மேல் உள்ளுக்குள்ள கோவம் இருக்கு அத்தான்.. அதான் நீங்க என்னிடம் இருந்து விலகி போறீங்க “ என்று புதிய குற்றபத்திரிக்கை வாசித்தாள்..

“ அட மதி நீ என்ன சொல்றா ?? ”

“ ஆமா அதான் நீங்க என்னைய இரண்டு நாலா மதி என்று கூப்பிடவே இல்லை “ என்றாள்.. “ என்ன மதி என்று  கூப்பிடவில்லையா ?? என்ன சொல்ற..?? ” என்றான் புரியாத ஒரு பார்வை பார்த்து..

“ ஆமா எப்பொழுதும் நான் வேலை பார்த்துட்டு இருக்கும் பொது நீங்க எப்ப பாரு மதி மதி என்று கூப்பிடுவிங்களே.. ஆனால் இரண்டு நாளா என்னய கண்டுக்கவே இல்லை “

“ அட என் மதி செல்லம்.. எனக்கு இரண்டு நாளா நிஜமாகவே வேலை அதான்.. அது மட்டுமில்ல நான் என்னவோ அப்படி விளையாட்டுக்கு உன்னை கூப்பிட்டேன்.. நீ அதை இவ்வளோ சீரியஸாய் எடுப்பாய் என்று எனக்கு தெரியாதே.. உனக்கும் அது பிடிக்கவில்லை அதான் நானும் கூப்பிவிடவில்லை “ என்றான் அமைதியாக..

“ பிடிக்கவில்லை என்று  நான் சொன்னேனா அத்தான்?? “

“ ஏன் மதி நீ இன்னும் என்ன சொல்ல வேண்டும்.. அன்னிக்கு நம்ம கல்யாண நாள் அப்ப சொன்னதை விடவா ?? ” என்றான் நிஜமான வருத்தத்தோடு..

அவனது முகத்திலும் குரலிலும் அந்த ஏக்கம், அந்த வலி, எல்லாம் அப்பட்டமாக தெரிந்தது.. அவளும் அதையே உணர்ந்து இருப்பால் போல.. ” என்னை மன்னிக்கவே மாட்டிங்களா அத்தான் ?? ” என்றாள்.

“மன்னிப்பா?? சொல்ல போனால் நீ தான் மதி என்னை மன்னிக்க வேண்டும் .. உன் வாழ்கையவே தலைகீழா மாத்தி வைத்து இருக்கேனே அதுக்காக.. பொறு பொறு மதி நானும் பேசிக்கிறேன் “ என்று கூறி பேச்சை தொடர்ந்தான்..

“அங்கு சென்னையில தான் மதி நான் புரிந்துகொண்டேன் நீ எவ்வளோ செல்லமா வளர்ந்தவள் என்று.  ஆனால் இங்கு அதை எல்லாம் கொஞ்சம் கூட காட்டாமல்  எல்லாத்தையும் அனுசரித்து, என் பேச்சு எல்லாம் பொறுத்துகிட்டு நீ எப்படி தான் இங்க இருந்தியோ மதி.. ஆனால் அதெல்லாம் புரியாமல் தான் நான் உன்னை அப்படி பேசிவிட்டேன்.. அது எனக்கு எவ்வளோ கஷ்டமா இருக்கு என்று  எனக்கு மட்டும் தான் தெரியும் மதி.. உன்னை ஆஸ்திரேலியா போக விட்டு இருக்க வேண்டும் மதி “ என்றான் வலியோடு..

“ நான் ஒன்றும் உங்களுக்காக ஆஸ்திரேலியா போகவில்லை  “ என்றாள் வசுமதி..

கதிரவனோ திகைத்து “ என்ன டி சொல்லுற ?? ” என்றான்..

“ ஆமா.. நான் ஒன்றும் உங்க மேல் இருக்க கோவத்தில் போக கிளம்பவில்லை.. எல்லாம் என் அம்மானால தான்..”

 “ என்ன அத்தையா ?? அவர்கள் என்ன பண்ணாங்க?? ”

“ ஹ்ம்ம் ஒன்று கதிரவனை கல்யாணம் பண்ணு இல்லை நாங்க பார்க்கிற மாப்பிள்ளைக்கு கழுத்து நீட்டு என்று சொன்னங்க அதான் “ என்று அவள் கூறி முடிக்க வில்லை அவளை இழுத்து இறுக அணைத்து கொண்டான்..

“ மதி… நான் எவ்வளோ துடித்து போனேன் தெரியுமா ?? எங்க என்னை வெறுத்து தான் நீ அங்க போக கிளம்புனையோ என்று நான் துடித்து போயிவிட்டேன் டி “ என்று கூறி மாற்றி மாற்றி அவளது கன்னங்களில் முத்தங்கள் பத்திதான்..

அவளும் சந்தோசமாக சிரித்தபடி அவனுக்கு இசைந்து குடுத்தாள்.. திடீரென்று அவனுக்கு என்ன தோன்றியதோ “ ஆனால்  ஏன் மதி அன்னிக்கு அப்படி பேசின ?? ” ஏக்கமாக

“ அத்தான் உங்களுக்கு தெரியுமா ?? நான் இங்கு முதல் தடவ வரும்போது வாழ்ந்தா  இப்படி பட்ட ஒரு ஊரில் தான் வாழவேண்டும் என்று எனக்கு தோணியது . அது ஏன் எதுக்கு என்றெல்லாம் எனக்கு தெரியாது.. சொல்ல போனால் அப்ப இப்படி ஒரு மாமா பையன் எனக்கு இருக்கிறதே எனக்கு தெரியாது.. ” என்று கூறி அவன் முகம் பார்த்தாள்…   

கதிரவனோ அவள் கூறியதை கேட்டு வசுமதியை தன் மேல் சாய்த்து அவளை இறுக்கிக் கொண்டு “ இப்ப சொல் மிச்ச கதையை “ என்றான்..

அவளும் அவன் மீது வாகாக சாய்ந்து கொண்டு “ இப்படி இருக்கிட்டா நான் எப்படி பேசுகிறதாம் “ என்றாள் சந்தோசமாக.. இதை கேட்டதும் கதிரவன் அவனது பிடியை லேசாக தளர்த்தி

“ சரி இப்ப சொல்லு “ என்றான் நகைத்தபடி…

வசுமதியும் தன் கணவன் தோள்களில் சாய்ந்து கொண்டு “ ம்ம்.. நான் இங்கு வந்து உங்களை லவ் பண்ணுவேன் என்றெல்லாம் கொஞ்சம் கூட நினைத்து பார்க்கவே இல்லை அத்தான்.. ஆனால்  எனக்கு உங்களை அவ்வளோ பிடிக்கும்.. “ என்றாள் தன் இரு கைகளையும் விரித்து..

அவளது செய்கை அவனையும் ஈர்த்தது போல “ எனக்கும் உன்ன மிகவும் பிடிக்கும் மதி “ என்றான் அவளது உச்சியில்  முத்தம் இட்டு..

 “ ஹ்ம்ம் கொஞ்சம் என்னை பேச விடுங்க அத்தான் “ என்று சிணுங்கினாள்..

 “ சரி சரி பேசு.. நான் எதுவும் பண்ணவில்லை.. என்னை அவ்வளோ பிடிக்கும் பின்ன ??”  என்றான் நல்ல பிள்ளை போல.

“  எந்த காரணம் கொண்டும் நம்ம இரண்டு பேருக்குள்ளையும் கொஞ்சம் கூட கேப் விழுந்திட கூடாது என்று இருந்தேன் அத்தான்.. அதனால தான் மல்லிகா சித்தி மலரு இவங்க எல்லாம் அத்தனை குழப்பம் செய்யும் போதும் நான் அமைதியா இருந்தேன்.. “ இப்படி அவள் பேசி கொண்டு வரும் பொழுதே அவளது தொண்டை அடைத்தது..

தனக்காக மனதிற்குள் எத்தனை வேதனையை தாங்கி இருக்கிறாள் என்று எண்ணினான் கதிரவன்.. அவளது முதுகை ஆதுரமாக தடவி கொடுத்தான்..    

“ நீங்க கோவப்படும் போது எல்லாம் நான் இதுக்காக தான் அத்தான் பொறுமையா போனேன்.. சரி என் அத்தான் தானே.. என் கதிர் தானேன்னு.. சில நேரம் என் மேல் தப்பே இருக்காது ஆனாலும் நான் உங்கள் கிட்டு வந்து மன்னிப்பு கேப்பேன்.. சிவா கூட என்னை திட்டி இருக்கான்.. ஆனால் என்னை பொறுத்த வரைக்கும் எந்த காரணம் கொண்டும் நமக்குள்ள பிரிவு வந்துவிட கூடாது என்று  உறுதியா இருந்தேன்.. ஆனால்  ஆனா.. ” என்று அவளால் அதற்கு மேல் பேச முடிவில்லை.. கண்கள் கலங்கி வார்த்தை வர துடித்தது..

“ ப்ளீஸ் மதி அழுகாத… நீ அழுவதை என்னால தாங்கவே முடியாது மதிம்மா. ப்ளீஸ் டி.. நான் எவ்வளோ பெரிய முட்டாள் என்று நான் என்னிக்கோ புரிந்துகொண்டேன்  மதி.. உன்னை நான் அப்படி பேசி இருக்கவே கூடாது.. ஆனால் நான் கோவத்துல கொஞ்சம் கூட யோசிக்காமல்  பேசிவிட்டேன்.. மதி.. மதி “ என்று கூறி அவளது முகத்தை தன் இரு கைகளால் ஏந்தினான்..

அவள் விழிகளோடு தன் விழிகளை உறவாட விட்டவனது விழியும் கலங்கியது “ என்னை மன்னிக்கவே மாட்டியா மதி ?? ” என்றான்.. அவனது குரல் அத்தனை வேதனையை வெளிபடுத்தியது..

வசுமதிக்கோ அவன் கலக்கியது பொறுக்கவில்லை போல “ நான் அத எல்லாம் மறந்தே போயிட்டேன் அத்தான் “ என்றாள் லேசாக சிரித்தபடி.. ஆனாலும் அவளது குரலும் நடுங்க தான் செய்தது..

“ ம்ம்ஹு.. நீ பொய் சொல்ற மதி.. உனக்கு என் மேல் கோவம் அப்பிடியே தான் இருக்கு.. நான் உன்னை இந்த கல்யாணத்திற்கு மறைமுகமாய் நிற்பந்த படுத்திவிட்டே என்று  உனக்கு கோவம் தான டா???”

“ அதை கோவம்ன சொல்ல முடியாது அத்தான். நீங்க என் கழுத்தில் அப்படி சொல்லாம கொல்லாம வந்து தாலி கட்டுவிங்க என்று நான் இல்ல, யாருமே கொஞ்சம் கூட எதிர்பாக்கவில்லை.. யப்பா எவ்வளோ தைரியம் ?? ” என்றாள் தன் இரு கைகளையும் முகத்தில் வைத்து ஆச்சரியப்பட்ட படி.. கதிரவன் எதுவும் பதில் பேசாமல் அவளையே தான் பார்த்து கொண்டு இருந்தான்..

“ ஆனால்  நான் முழு மனசோட தான் அத்தான் கல்யாணத்திற்கு ஒத்துகிட்டேன்.. ஈஸியா கிடைக்கிற எதுக்கும் அவ்வளோ முக்கியதுவம் இருக்காது என்று  நினைத்து தான் அத்தான் உங்களுக்கு இதை புரியவைக வேண்டும்  என்று தான் அத்தான் நான் அன்னிக்கு அப்படியெல்லாம் பேசிவிட்டேன்.. ” என்று கூறும் பொழுதே இருவருக்குமே ஒரு நொடி அவர்களது கல்யாண நாள் இரவு கண் முன் வந்து போனது..

ஒரு நிமிடம் கண்கள் மூடி நின்று இருந்த மதி கதிரவனின் முகம் போன போக்கை பார்த்து சிரிப்பை அடக்க முடியாமல் மீண்டும் சிரித்தாள்..

இத்தனை நேரம் வாய் ஓயாமல் பேசி கொண்டு இருந்தவள் இப்போது மௌனி ஆகிவிட்டாள்.. அவனது பார்வை அவளை முற்றிலும் சுற்றி வளைத்தது… “ என்ன அத்தான்..” என்றாள் குரலே எழும்பாமல்..அவளை அணைத்துக்கொண்டு அறைக்குள் சென்றவன்தான், 

இதோ இப்பொழுது தான் இருவருக்கும் பொழுது விடிந்து உள்ளது…  நடந்ததை எண்ணி முகம் முழுவதும் பிரகாசமாக நின்று இருந்தான் வெளியே தோட்டத்தை பார்த்தவண்ணம்.. குளிக்க சென்ற வசுமதி வெளியே வரும் அரவம் கேட்டு திரும்பியவன் அப்படியே மலைத்து நின்று விட்டான்..

அன்றலர்ந்த மலராக , புது பொழிவுடன் தன் நீளமான ஈர கூந்தலை விரித்துவிட்டு எந்த வித ஒப்பனையும் இல்லாமல் பேரழகியாய் காட்சி தரும் தன் சரி பாதியை காண காண அவனுக்கு தேன் குடித்த வண்டின் நிலைமை தான்.. அவளிடம் சென்று இறுக அணைத்துக்கொண்டு முகம் புதைத்தான்..

“ ம்ம்ச் என்ன அத்தான்… விடுங்க.. “

“ நான் இப்பதான் குளித்தேன்  “

“ சொன்னா கேளுங்க அத்தான்..”

 “ கதிர்……………”

“ அத்தான்.. ” இதற்குமேல் அவளை அவன் பேசவிடவில்லை… தங்கள் காதல் நினைவுகளில் மீண்டும் மீண்டும் மூழ்கி திளைத்தனர் கதிரவனும் வசுமதியும்.

“ என்னங்க …. அத்தான்… காது கேட்கிறதா பாரு “ என்று கத்திகொண்டே வந்தது வேறு யாரும் இல்லை வசுமதி தான்…. கதிரவன் அவள் அழைப்பை கவனிக்காமல் எதுவோ செய்து கொண்டு இருந்தான்.

ஒரு வாரம் தங்குவதற்காக பண்ணை வீட்டிற்கு சென்ற இந்த இளம் காதல் ஜோடி ஒரு மாதம் வரை அங்கே அங்கே தங்கி விட்டு இப்பொழுதுதான் தங்கள் வீட்டிற்கு கிளம்பிக்கொண்டு இருக்கிறார்கள்…

“ ச்சே இந்த அத்தானுக்கு என்ன கூப்பிட்டாலும் காதிலே விழுகாது “ என்று புலம்பியபடியே கதிரவன் அருகில் வந்தாள் வசுமதி..

“ அத்தான் உங்களை எத்தன தடவ கூப்பிடுகிறேன்.. அப்படி என்ன வேலை உங்களுக்கு நான் கூப்பிடுவது கூட கேக்காமல்??? ” என்று பொரிந்து கொண்டே தன்னருகே வந்தவளை வேகமாக இழுத்து அணைத்தான் கதிரவன்…

மெல்ல சிரித்தபடி “ இதுக்கு தான் டி மதி குட்டி காது கேட்காதது மாதிரி இருந்தேன்…” என்று கூறி மீண்டும் சிரித்தான்..

 “ம்ம்ச் விடுங்க அத்தான்.. என்ன இது.. நாம கிளம்பனும்… அங்க போயி நிறைய வேலை இருக்கு அத்தான்… ஏன் இப்படி பண்றிங்க ” என்றாள் அவனது பிடியில் இருந்து திமிரியபடி…

“ என்ன டி எப்ப பாரு வேலை வேலை என்று அங்க  போனா இப்படி ப்ரீயா இருக்க முடியாது டி.. சொன்னா புரிஞ்சுக்க மதிம்மா “ என்றான் அவளது கழுத்தில் முகம் புதைத்து..

ஆனால் வசுமதியோ “ நீங்க மிகவும் மோசம் அத்தான்.. கொஞ்சம் கூட சரியே இல்லை.. இங்கு வந்து ஒரு மாசம் ஆச்சு.. ஒரு வாரம் இருந்துட்டு வரோம் என்று சொல்லி தான் இங்க வந்தோம் ஆனால்  இங்கு வந்து ஒரு மாசம் ஆச்சு…  “ என்றாள் அவளது முயற்சியை விடாமல்… ஆனாலும் அவன் அவளது பேச்சை கேட்பது போல் இல்லை..

“ ஹேய் மதி ப்ளீஸ் டி. என்ன பெரிய ஒரு மாசம்.. வெறும் முப்பது நாள் தான் மதி….  ” என்று அவளை கெஞ்சி கொண்டும் கொஞ்சி கொண்டும் இருந்தான்… ஆனால் வசுமதியோ ஒருவழியாக அவனிடம் இருந்து போராடி விடுபட்டு வாசல் கதவு அருகில் சென்று நின்றுகொண்டாள்..

 “ அடி மதி இதெல்லாம் கொஞ்சம் கூட சரியே இல்லை சொல்லிட்டேன் டி… பின்ன நீ தான் வருத்தபடுவ.. அதுசரி நீ தான் நான் பேசாவிட்டால்  கூட காய்ச்சல் வந்து படுக்கிறவள் “ என்று கூறி பதிலுக்கு அவளை கேலி செய்தான்..

இதை சொன்னால் மாட்டும் வசுமதிக்கு கோவமும் ரோஷமும் வந்து விடும்.. “அதென்ன எப்ப பாரு எல்லாம் என்னை இதையே சொல்லி கிண்டல்  பண்றீங்க ??? எனக்கொன்றும் அதுக்காக எல்லாம் காய்ச்சல் வரவில்லை..  எதோ இரண்டு நாளா தூங்காமல்  சரியா சாப்பிடாமல்  இருந்தேன் அவ்வளோ தான் ” என்றாள் அவனுக்கு பழிப்புக்காட்டி…  

இப்படியாக இருவரும் ஒருவரை மாற்றி ஒருவர் வம்பிளுத்தும், கொஞ்சி கொண்டும் ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தனர்…

“ டேய் கதிரவா மாப்பிள்ள.. என்னடா இந்த ஊரு தான நீ.. வசும்மா என்னடா வனவாசம் எல்லாம் எப்படி இருந்தது ??” கிண்டல் செய்தபடி வந்தான் அழகேசன்.. அவனுக்கு பின்னால் மீனாட்சியும் சிரித்தபடி வந்தாள்..

அவர்களை பார்த்ததும்“ ஹேஅழகு அண்ணா, அண்ணி, உங்களுக்கு என்னோட வாழ்த்துக்கள் “ என்று கூறி அவர்களின் கைகளை குலுக்கினாள்  வசுமதி..

“ தேங்க்ஸ் வசும்மா “ என்று அழகேசன் கூறி முடித்துகொண்டான். மீனாட்சியோ “ அதுசரி இப்பதான் உனக்கு வாழ்த்து சொல்ல நேரம் வந்துச்சா வசு.. நான் இங்கு வந்து கூட இருபது நாள் ஆது.. ஆனால்  இப்பதான் நீ வர “ என்று குறை கூறுவது போல கேளி பேசினாள்..

மீனாட்சி கர்ப்பம் என்று தெரியவுமே அன்னபூரணி அழகேசனையும் மீனாட்சியையும் இங்கு தங்கும்படி கூறிவிட்டார்.. வசுமதி எத்தனையோ முறை இங்கு அழைத்துவரும்படி  கூறியும் எங்கே இங்கு வந்தால் வசுமதி இங்கேயே தங்கிவிடுவாள் என்று எண்ணி தன் மனைவியை அழைத்தே வரவில்லை.. போனில் மட்டும் பேசும்படி சொல்லிவிட்டான்.

“ எங்கள் அண்ணி.. நான் எத்தனை தடவ கேட்டேன் தெரியுமா ?? இந்த அத்தான் என்னை கூட்டிட்டே வரல.. இன்னிக்கு கிளம்பி வரத்துக்குள்ள போதும் போதும்ன்னு ஆகிடுச்சு அண்ணி “ என்று கூறி தன் கணவனை முறைத்தாள்..

அழகேசனோ “ இப்பதான் எனக்கு மிகவும் சந்தோசமா இருக்கு மா.. எங்கள் மீனு மாமியார் இல்லாம மிகவும் சேட்டை பண்ணுவாளோன்னு நெனைச்சேன்.. ஆனால்  நல்ல வேல நீங்க அந்த குறைய தீத்து வச்சுடிங்க “ என்று கூறவும் மீனாட்சியிடம் முறைப்பையும் காமாட்சியிடம்

“ படவா உனக்கும் வாய் கூடி போச்சு “ என்று லேசான வசவையும் பெற்றான்..

“ சரி சரி கதிரவா பின்ன என்ன விஷயமா இங்கு வந்து இருக்க?? இல்லை இப்படி ஒரு வீடு இருக்குன்னு உனக்கு நியாபகம்லா இருக்கா ?? ” என்று தன் நண்பனை வாரினான்..

சிவபாண்டியனோ “ அட என்ன அழகு இப்படி கேட்டுட்ட.. இன்னும் இரண்டு நாளின் சென்னை கிளம்பனும் அதான் வந்து இருக்கான்.. இல்லைனா அதுவும் இல்லை “ என்று கூறி சிரித்தார்..

“ ச்சே எல்லாம் இந்த அத்தான் நால வந்தது.. “ என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டாள்.. கதிரவனை பார்த்தபடி முணுமுணுத்தும் கொண்டாள்..

இப்படியே இரண்டு நாட்கள் கலாட்டாவாகவும் சந்தோசமாகவும் நகர்ந்தது.. ஒருவழியாக அனைவரும் சென்னை கிளம்பினர்..  அழகேசன், மீனாட்சி, சிவபாண்டியன், காமாட்சி பெரிய காரிலும், கதிரவன் வசுமதி, அன்னபூரணி இன்னொரு காரிலும் கிளம்பினர்.

அங்கே வசந்தி தான் வீட்டின் வாசலை பார்ப்பதும் உள்ளே வேலை பார்ப்பதும் என்று உள்ளேயும் வெளியேயும் நடந்து கொண்டு இருந்தார்..

“ அம்மா.. அம்மா இங்கு வா  எனக்கு பசிக்கிராது மா.. நீ என்ன அங்கு  வாசலையும் வீட்டையும் அளந்துட்டு இருக்க ?? ” என்று கத்தியது சிவா தான்..

ஆனால் அதற்கெல்லாம் வசந்தியிடம் இருந்து எந்த பதிலும் இல்லை..  சண்முகநாதன் தன் மகனிடம்

“ டேய் மகனே நீ இப்ப எது பேசுனாலும் உங்கள் அம்மா காதுல விழுகாது.. எது கேட்டாலும் பதிலும் வராது.. உனக்கு பசிச்சா போ போயி கிட்சேன்ல போய் நீ யா எடுத்து போட்டு சாப்பிடு.. இப்ப நான் கூட அப்படிதான் பண்ணேன்..” என்று நொந்துகொண்டார்..

ஒருமுறை தன் தந்தையை மேலும் கீழும் பார்த்தவன் “ ம்ம் உங்களுக்கே இப்படினா என் நிலைமை “ என்று தலையில் அடித்து கொண்டு வேகமாக சமையல் அறை நோக்கி சென்றான்..

ஆனால் அவனை ஒரு மனதாக அவனின் அம்மா உண்ணத்தான் விடவில்லை “ டேய் சிவா போன் பண்ணி கேளு டா எங்கள் வராங்க என்று?? ” என்று கூறவும்

“மா உனக்கு எத்தன தடவ சொல்லுறது.. பொறு நான் சப்பிடுக்கிறேன்.. பின்ன எதுனாலும் பேசு.. எனக்கு காது அடைக்கிது” என்று கூறியவனின் தட்டை பிடுங்கி கொண்டார்..

“மா “ என்று முறைதான்..

“ என்னடா அம்மா அம்மான்னு.. நானே எல்லாரும் ஒன்னா முதல் தடவை வராங்கனு கொஞ்சம் டென்ஷன்ல இருக்கிறேன் நீ என்னடானா உக்காந்து நல்ல கொட்டிட்டு இருக்க??” என்று படபடத்தார்..

சிவாவோ தன் அன்னையை வித்தியாசமாக பார்த்து “ ஏன் மா போன மாசம் தானே அக்காவும் அத்தானும் வந்துட்டு போனாங்க.. அதற்கு  முன்னாடி தானே பாட்டி அத்தை மாமா எல்லாம் வந்தாங்க.. இப்ப என்ன புதுசா ?? ” என்று மீண்டும் தன் தட்டை பறித்து உண்ண தொடங்கினான்..

“ நீ ஒன்றும் கேட்க வேண்டாம் நானே பேசிக்கிறேன் “ என்று அவனை ஒரு திட்டு திட்டிவிட்டு தன் கணவரிடம் சென்றார் “ என்னங்க “ என்று ஆரம்பிக்கும் முன்னே சண்முகநாதன்

“ இன்னும் பத்து நிமிசத்தில் வந்துடுவாங்க வசந்தி “ என்று பதில் கூறிவிட்டார்..

தன் உறவுகள் அனைத்தும் ஒரே நேரத்தில் ஒன்றாக வருவதால் தான் இத்தனை ஆர்ப்பாட்டமும் வசந்திக்கு. இருக்காத பின்னே தான் பிறந்த வீட்டிலே சம்பந்தம் செய்து இருக்கிறார் அல்லவா.. அதனால் தான்..

ஒரு வழியாக கார் வந்து நிற்கும் ஓசை கேட்கவும் வாசலுக்கு சென்றவர் “ வாங்க வாங்க.. அம்மா.. அண்ணா அண்ணி… எல்லாரும் வாங்க… கதிரவா, அழகு மீனா எல்லாம் வாங்க வாங்க “ என்று கூறியவர் தன் மகளை அழைக்க தவறிவிட்டார்..

வசுமதியோ ”அத்தான் நான் இப்படியே ராம் வீட்டுக்கு போறேன்.. நீங்க எல்லாம் இங்கயே இருந்துட்டு வாங்க.. என்னை தான் இங்கு யாரும் கண்டுக்கலை என்று தன் தாயை ஜாடையாக சாட்டினாள்”

கதிரவன் இதற்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் தன் அதின் முகம் பார்த்தான். 

“ அட வசுமதி. நீ என் பொண்ணு டா.. உனக்கு இந்த வரவேற்ப்பு எல்லாம் முக்கியமா சொல் ?? இது உன் வீடு தான “ என்று கூறி சமாதனம் செய்து உள்ளே அழைத்து போனார் இல்லை இழுத்து போனார்..   

ராம் திருமணத்திற்கு இன்னும் ஐந்து  நாட்களே இருந்ததால் அனைவருக்குமே வேலை சரியாக இருந்தது.. ஆனால் ஒருவர் மாற்றி ஒருவர் மீனாட்சியை கவனித்து கொண்டும் தான் இருந்தனர்.. அழகேசனுக்கு சொல்ல வேண்டியதே இல்லை.. எப்பொழுது பார்த்தாலும் தன் மனைவியுடன் தான் முன்னே பின்னே சுற்றி கொண்டு இருந்தான்..

கதிரவனுக்கோ இன்னும் தன் மனைவி மேல் இறுக்கம் மயக்கம் தீரவில்லை போல. அவள் என்ன வேலையாக இருந்தாலும் அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவனிடம் இருந்து “ மதி “ என்று அழைப்பு வந்துவிடும்..

“ ச்சே இந்த அத்தானுக்கு கொஞ்சம் கூட விவஸ்தையே இல்லை “ என்று முனங்கினாலும் தன்னவனின் அருகாமையை அவளும் ரசிக்கத்தான் செய்தாள்.. இதை எல்லாம் கண்ட ராம் அழகேசனையும் கதிரவனையும் பிடித்து கொண்டான்

“ என்ன இரண்டு பேரும் இன்னும் புது மாப்ளை மாதிரி அலுங்காம உக்காந்து இருக்கீங்க.. ??? உங்கள் இரண்டு பேரு கல்யாணத்துக்கும் என்னை என்ன பாடு பாடுத்துனிங்க கொஞ்சமாது நியாபகம் இருக்கா ?? ” என்று இடித்து அவர்களை படுத்தி எடுத்து கொண்டு இருந்தான்..

அழகேசனோ தன் திருமணதிற்கும் நிச்சயத்திற்கும் ராம் தன்னை படுத்தியதை எல்லாம் நினைவுகூர்ந்து பதிலுக்கு அவனை போட்டு பாடாய் படுத்தி கொண்டு இருந்தான்..

கதிரவனோ எந்த உலகத்தில் இருக்கிறான் என்றே யாருக்கும் புரியவில்லை.. அவனின் பார்வையும் மனதும் அனைத்தும் வசுமதியை தான் சுற்றி கொண்டு இருந்தன.. நேரம் கிடைக்கும் போதெல்லாம் தன்னவளை கொஞ்சவும், சீண்டவும் தான் அவனுக்கு தோன்றியது.. இதானால் புது மாப்பிள்ளை ராமை விட கதிரவன் தான் அதிக கிண்டலுக்கு ஆளானான்..

ஒரு வழியாக கல்யாண நாலும் வந்தது..      

 “ மணப்பெண்ணை அழைச்சிட்டு வாங்கோ..” என்று அய்யர் கூறவும் வசுமதியும் மீனாட்சியும் தான் மணப்பெண்ணை அழைக்க சென்றனர்..

ஒருவழியாக தன் தோழியர் புடை சூழ மணமேடைக்கு வந்தாள் மணப்பெண் காவ்யா. கதிரவனும் அழகேசணும் தங்கள் இணையை ரசிப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தனர்..

ராமோ தேன் குடித்த வண்டாக மாறி இருந்தான்..” யப்பா எப்படி அமைதியா வரா?? அதும் தலை குனிஞ்சு வேறு நடந்து வரா.. இப்படி அழகா வேறு இருந்து கொள்ளுறாலே “ என்று அவளை நேராக பார்கவும் முடியாமல் அனைவரின் முன் பேசவும் முடியாமல் தவித்து கொண்டு இருந்தான்..

இதை எல்லாம் கேமெரா கண் கொண்டு பார்த்த சிவா தலையில் அடித்து கொண்டான்..

கதிரவனோ ” கல்யாணம் முடிஞ்சு முதல்லா இவள எஸ்டேட்க்கு தள்ளிட்டு போயிடனும்.. யப்பா குட்டச்சி எவ்வளோ அழகா இருக்கா?? கொஞ்சமாது திரும்பி பாக்குறாளா பாரு“ என்று புலம்பியபடி தன்னவளை ரசித்தபடி இருந்தான்..             

அழகேசனோ “ கொஞ்ச நேரம் ஒரு எடத்துல உக்காந்து இருக்காளா ?? வேகமா நடக்காதன்னு சொன்ன கேக்குறதே இல்ல.. போடிக்கு போயி இருக்கு.. ஆனால்  இம்புட்டு அழகா இருக்கா, இவகிட்ட கோவமாவும் பேச முடியல.. அழகான ராட்சஸி ” என்று தன் பங்கிற்கு புலம்பினான்..

“ கெட்டி மேளம் கெட்டி மேளம்” என்று அய்யர் கூறவும் திருமாங்கல்யத்தை ராம் காவ்யாவின் கழுத்தில் மூன்று முடிச்சு இட்டு தன் சரி பாதியாக ஆக்கி கொண்டான்..

ஒருவழியாக அணைத்து கல்யாண கலாட்டாவும் முடிந்து, வந்தவர்களை சிறப்பாக கவனித்து, பந்தியில் ஒரு குறையும் இல்லாமல் பார்த்து, மணமக்களை வாழ்த்தி, கேளி பேசி, உறவினர்களை உபசரித்து என்று அனைத்தும் முடிந்து, மணமக்கள் இருவருக்கும் தனிமையை குடுத்து                   அவர் அவர் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்..

வசந்தியும் சண்முகநாதனும் மிகவும் கட்டாய படுத்தியதால் மேலும் அனைவரும் அங்கே ஒரு வாரம் தங்கினர்.. ஏனோ வசுமதிக்கு அன்று காலை தூங்கி எழும் போதே உடல் மிகவும் அசதியாக இருந்தது.. கண்கள் சொருகி மீண்டும் தூங்க ஆரம்பித்தாள்..

“ ஹே மதி.. என்ன டி இன்னும் தூங்குற.. எல்லாம் எப்பயோ முளித்துவிட்டாங்க  “ என்று தன்னவளின் நெற்றியில் முத்தம் பதித்து எழுப்பினான் கதிரவன்..

“ம்ம் போங்க அத்தான்.. எனக்கு கண்ணே தெறக்க முடியல.. நான் இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறேன் ப்ளீஸ்..” என்றவளை ஒருவழியாக அரட்டி உருட்டி எழ வைத்தான்..

தள்ளாடியபடியே எழுந்து காலை கடன்களை முடித்து விட்டு, குளித்துவிட்டு  வந்து அமர்ந்தாள் வசுமதி.. இத்தனை நாள் இருத்ததை விட இன்று ஏனோ அவள் நடந்து கொள்வது கதிரவனுக்கு வித்தியாசமாக தெரிந்தது..

“ மதி என்ன பண்ணுது ?? ஏன் ஒரு மாதிரி இருக்க ??” என்றான் கரிசனமாக..” ஒண்ணுமில்ல அத்தான் கொஞ்சம் அலுப்பா இருக்கு “ என்று கூறி அவன் மீது சாய்ந்து அமர்ந்து கொண்டாள்..

தன் அன்னை கொண்டு வந்து குடுத்த பாலை குடிக்கவும் அவளுக்கு குமட்டிக்கொண்டு வந்தது.. வேகமாக  பாத்ரூம் நோக்கி ஓடினாள்.. அனைவரும் என்னவோ எதோ என்று பதறினார்.. ஆனால் கதிரவன் தான் மிகவும் பயந்துவிட்டான்..

“ ஹேய் மதி .. என்ன டி.. என்ன பண்ணுது.. டாக்டர் கிட்ட போகலாமா மதிம்மா ??” என்று கேட்டபடி அவளின் கைகளை பிடித்து கொண்டான்.. அவளுக்கு என்ன என்று கூற தெரியவில்லை..  

“ எனக்கே என்னானு தெரியல அத்தான் “ என்று கூறிக்கொண்டு இருக்கும் போதே சிவா” எனக்கு தெரியும் “ என்று கூறியபடி வந்தான்.. இருவரும் அவன் முகத்தை என்னவென்று பார்த்தனர்..

“ அது ஒண்ணுமில்ல கல்யாண வீட்டில் இருந்து குடுத்து விட்ட ஸ்வீட் எல்லாம் நீயா முழுங்கி வச்சேல. அதான் இப்ப இப்படி நடக்குது.. எனக்கு குடுத்து சாப்பிட்டு இருந்தா உனக்கும் செரிச்சு போயிருக்கும் “ என்று பேசும் பொழுதே அவம் முதுகில் இரண்டு அடி விழுந்தது.. ஒன்று காமாட்சி.. இன்னொன்று வசந்தி..

“ என்ன வசும்மா ?? என்னடா பண்ணுது “ என்று இருவரும் கேட்க

வசுமதி பதில் கூறும்முன்  “ என்ன மா கேள்வி கேட்டு இருக்கீங்க?? அவளுக்கு முதல டாக்டர் கிட்ட கூட்டி போகணும் “ என்று துடியாய் துடித்து கொண்டு இருந்தான் கதிரவன்..

அவனுக்கு ஒரு முறைப்பை பதிலாக குடுத்துவிட்டு  காலையில் இருந்து தன் உடல் நிலை எப்படி இருக்கிறது என்பதை கூறினாள்.. இரு பெண்களுக்கும் புரிந்துவிட்டது.. கதிரவனோ அவள் முகம் வாடி இருப்பதை பார்க்கமுடியாமல் வேறு புறம் சென்று விட்டான்.

“ வசும்மா நாள் எதுவும் தள்ளி போயி இருக்கா ?? “ என்று காமாட்சி வினவவும் வசந்தி ஆவலாக தன் மகள் முகம் நோக்கினார்..

ஆனால் அதன் பிறகே வசுமதிக்கு புரிந்தது.. மனதிற்குள்ளேயே நாள் கணக்கிட்டு “ஆமாம் “ என்பது போல தலையாட்டினாள்.. இரு பெண்களுக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.. பின்னே பாட்டி ஆக போகிறார்கள் அல்லவா.. 

அன்னபூரணி தான் கொள்ளு பாட்டி ஆக போகும் உற்சாகத்தில் மிதந்தார்.. சிவாவோ கூறவே வேண்டாம்.. வெளியில் சென்று இருந்த சிவபாண்டியனுக்கும் சண்முகநாதனுக்கும் தகவல் சொல்ல பட்டது..

மகிச்சியோடு வேகமாக வீடு திரும்பினர்.. அழகேசன் மற்றும் மீனாட்சி தங்கள் வாழ்த்தை தெரிவித்தனர்.. அழகேசனோ இது எதுவுமே தெரியாமல் அறையில் இருந்த கதிரவனிடம் சென்று “ டேய் மாப்பிள்ள.. சூப்பர் டா கலக்கிட்ட போ  “ என்று கூறி கை குளுக்கவும் கதிரவனுக்கு எதுவுமே புரியவில்லை..

“ என்ன டா சொல்லுற ?? ஆமா மதி எங்கள் இன்னுமா அவகிட்ட கேள்வி கேட்டிட்டு இருக்காங்க ?? ” என்று பொரிந்தான்..

“ ஹே கதிரவா பதிலே கேட்டாச்சு.. இப்ப என்ன நீ பண்ணுறது எல்லாம் பண்ணிட்டு ஒன்றும் தெரியாத மாதிரி நடிக்கிற “ என்றான் அழகு..

“ டேய் நான் எதுவுமே பன்னல டா ?? அவளுக்கு ஸ்வீட் வேண்டாம் சொல்லும்போது கூட நான் கட்டாய படுத்தல “ என்று கூறியவனை கண்டு தலையில் அடித்துகொண்டான் அழகேசன்..

“ டேய் என்ன டா “ என்று சலிப்புடன் கேட்டவின் காதுகளில் விசயத்தை கூறவும் “ டேய் மாப்ள….” என்று கத்தி

“டேய் நீயும் அப்பா அக போற.. நானும் அப்பா ஆக போறோம்.. நம்ம அப்பா ஆக போறோம் “ என்று அழகேனை கட்டி கொண்டு குதித்தான் கதிரவன்..

“ டேய் மெல்ல மெல்ல.. இப்படி எல்லாம் கத்தாத.. முதலில் என்னை விடு டா.. போ போயி முதலில் தங்கச்சிய பாரு..” என்று கூறி வசுமிதியிடம் அனுப்பி வைத்தான்..

கதிரவனுக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை.. அவளிடம் என்ன பேசுவது என்ன கேட்பது.. எப்படி நடந்து கொள்வது என்று எதுவுமே தெரியவில்லை.. மெல்ல அறையின் உள்ளே நுழைந்தவனை வசுமதியின் வெட்கம் கலந்த புன்னகையே வரவேற்றது..

“ மதி… மதி..” என்று கூறி அவளது கைகளை எடுத்து மிக மென்மையாக முத்தமிட்டான்.. அவளோ சிலிர்த்து பார்த்தாள்..

“ மதி.. தேங்க்ஸ் டி.. தேங்க் யூ சோ மச் ” என்று கூறி அவளது வயிற்றில் தன் இதழ் பதித்தான்.. அவளுக்கு கூச்சம் ஒரு புறம், மகிழ்ச்சி ஒரு புறம், தன் கணவனிடம் என்ன பேசுவது என்று மறுபுறமாக அணைத்து உணர்வுகளும் கலவையாய் வந்தன..

வசுமதியை தன் மார்பில் சாய்த்து கொண்டு “ மதி.. நான் எதிர்பாக்கவே இல்லை டி.. நமக்கு ஒரு குழந்தையா ?? வாவ்.. தேங்க்ஸ் டி “ என்று கொஞ்சினான்..

வசுமதியோ ” தேங்க்ஸ் நான் தான் அத்தான் சொல்லணும்.. எனக்கு எவ்வளோ ஹாப்பியா இருக்கு தெரியுமா ?? ஐ லவ் யு சோ மச் கதிர் ” என்று கூறி அவன் மார்பில் முகம் புதைத்தாள்..

“ அப்படியே உன்னை மாதிரி ஒரு குட்டி மதி.. எனக்கு வேணும் “ என்று கதிரவன் கூறவும்

“ இல்லை இல்லை அப்படியே குட்டி கதிர் தான் வேணும்.. உங்களை சின்ன புள்ளல பார்த்தது இல்லைல.. சோ குட்டி கதிர் தான்.. “ என்று அடம் பிடித்தாள்..

 “ போ டி இதையே நானும் சொல்லலாம்ல.. குட்டி மதி தான் “ என்று அவனும் பதிலுக்கு குரல் உயர்த்தினான்..

“ அதெல்லாம் இல்லை குட்டி கதிர் “

“ ம்ம்ஹு ம்ம்ஹு .. குட்டி மதி ”  

நேரம் ஆக ஆக இவர்கள் சண்டை வளுப்பெற்று வெளியில் இருந்த பெரியவர்கள் அனைவரயும் உள்ளே இழுத்தது.. ஒருவழியாக அனைவரும் கதிரவன் வசுமதிக்கு பஞ்சாயத்து செய்து முடிக்குமுன் போதும் போதும் என்றாகி விட்டது..

சிவா தான் வளைத்து வளைத்து இவர்களை கேளி பேசினான்.. “ என்ன குழந்தையா இருந்தா என்ன நான் தான் அதற்கு  மாமா “ என்று கூறி சிரிக்கவும்..

” டேய் டேய் தம்பி நான் தான் பெரிய மாமா “ என்று கூறியபடி வந்தவன் அழகேசன்..

“ யப்பா போதும் நீங்க இரண்டு பேரும் ஆரம்பிக்காதிங்க “ என்று அவர்களை சமாதானம் செய்தனர் அனைவரும்.. அந்த இடமே சிரிப்பும். சந்தோசமும், உற்சாகமும் நிரம்பி வழிந்தது.. 

 

                        நன்றி !!! வணக்கம்!!

 

 

Advertisement