Advertisement

 

உன் நினைவு 2

உறவுகள் சங்கமிக்கும் நேரம்…

உணர்வுகள் பேசிக்கொள்ளும்..

உரையாடல் தேவை இல்லை…  

அன்னபூரணியின் அறை கிட்டத்தட்ட அந்த வீட்டு வரவேற்பறையின் முக்கால்வாசி இருந்தது. தேக்கு மரத்தால் ஆன  கட்டில், அலமாரி, சாய்வு நாற்காலி என்று அனைத்துமே அக்காலத்தின் கலை வேலைப்பாடுடன் இருந்தது. மிக தூய்மையாக,  அழகாக, வெளிச்சமாகவும் காற்றோட்டமாகவும் இருந்தது. அன்னபூரணி கண் மூடி சாய்வு நாற்காலியில் அமர்ந்து இருந்தார்.

இத்தனை ஆண்டுகள் கழித்து தன் மகளையும், அவளின் குடும்பத்தையும் பார்க்கபோகிறோம் என்ற எண்ணமே அவரை சற்று சந்தோசத்துடன் கூடிய பதற்றத்தை தந்தது.. அறையில் நுழைந்தவுடன் அனைவரும் அமைதியாக நின்றனர்..

கதிரவன் தான் வசந்தியிடம் வந்து “ அத்தை நீங்க அப்பத்தாவிடம் முதலில் பேசுங்கள் ”  என்று சைகை செய்தான்..

வசந்தி தன் அம்மாவிடம் மெல்ல சென்று அவரின் காலடியில் அமர்ந்தார்.அரவம் கேட்கவும் மெல்ல கண் திறந்த அன்னபூரணி அம்மாள் தன் மகளை காணவும் எதுவும் பேசவில்லை இருவரின் கண்களில் கண்ணீர் மட்டும் வடிந்தது.. பிரிந்தவர்கள் கூடினால் பேசவும் வேண்டுமோ.??

தன் தாயின் மடியில் தலை வைத்து “அம்மா என்னை மன்னித்து விடுங்கள் அம்மா..”  என்று அழுதார் வசந்தி. அன்னபூரணியோ இத்தனை ஆண்டுகள் பிறகு தன் மகளின் ஸ்பரிசத்தில் மெய்சிலிர்தவர்,

“வேண்டாம் வசந்தி…  நீ இத்தனை வருசமாக மனதில் புழுங்கியது எல்லாம் போதும்..” என்று கூறி மகளின் தலையை தடவிக்கொடுத்தார். சண்முகநாதனை பார்த்த அன்னபூரணி தன் அருகில் வருமாறு கை அசைத்தார்..

 “ மாப்பிள்ளை நடந்ததை மாற்றமுடியாது, ஆனால் மறந்துவிட்டு இனி வரும் காலங்களில் நம்ம இரண்டு குடும்பமும் சந்தோசமாக இருக்க வேண்டும். என் மகளை இத்தனை சந்தோசமாய் வாழ வைத்ததற்கு மிகவும் நன்றி மாப்பிள்ளை ” என்று கூறினார் ..

“ அத்தை எனக்கு நன்றி எல்லாம் வேண்டாம். வசந்தி என் வாழ்கையில் கிடைத்த மிக பெரிய வரம்.. எங்கள் மனதில் எந்த கோவமோ, வருத்தமோ இல்லை. அத்தை நீங்கள்  வீணாய் மனதையும் உடலையும் போட்டு அலட்டவேண்டாம்..” என்று அமைதியாக கூறினார். பின்பு வசந்தி தன் பிள்ளைகளை தன் அம்மாவின் அருகில் வரும்படி அழைத்தார்.

அன்னபூரணி தன் பேத்தி, பேரனின் கைககளை பிடித்துக் கொண்டார்.. ஒரு பெருமூச்சு விட்டு “நான் மன்னிப்பு உங்கள் இரண்டு பேரிடமும் தான் கேட்க வேண்டும்..”  என்றார். இருவரும் குழப்பமாக பார்த்தனர்.

“ ஆமாம், என் செல்ல பேத்தி, சின்ன பேரன் உடன்  நான் கழிக்கவேண்டிய நல்ல நல்ல நிகழ்வுகளையும், நினைத்து நினைத்து சந்தோசப்பட வேண்டிய அருமையான தருணங்களை எல்லாம் நான் இழந்ததுமில்லாமல், உங்களுக்கும் அந்த சந்தர்ப்பங்களை குடுக்காமல்  இருந்துவிட்டேன். அதுக்காக இந்த கிழவியை மன்னிக்கணும்??” என்று கேட்டார்.

உடனே வசுமதி “அப்.. அப்படியெல்லாம் நினைக்காதிங்க அம்மாச்சி.. அம்மா உங்களை பற்றி, அத்தை மாமாவை பற்றி நிறைய சொல்வாங்க. நாங்கள் நினைப்போம் இவ்வளோ பாசம் இருந்தும், ஏன் நம்மை யாரும் வந்து பார்க்கவில்லை.. நாமும்  எங்கும்  போகவில்லை என்று. ஆனால் எதற்கும் ஒரு காலம் நேரம் வரவேண்டும்  தானே அம்மாச்சி ..”

“ நடந்தது என்னவென்று எங்களுக்கு தெரியாது, ஆனால் இப்போ  அம்மா முகத்தில் முழு மகிழ்ச்சி தெரிகிறது,  அப்பா முகத்தில் நிம்மதி தெரிகிறது. உங்களுக்கும் மன வேதனை குறையும். வேறு எதைப்பத்தியும் சிந்தனை செய்யாமல் இப்போ இருக்கும் இந்த சந்தோசத்தை மட்டும் அனுபவிங்க ..” என்று கூறினாள்..

தன் பேத்தியின் பேச்சில் ஆச்சர்யபட்டவர், ”நீ எப்பொழுதும் சந்தோசமாக இதே தெளிவோடு நன்றாய் இருக்கவேண்டும் கண்ணம்மா”  என்று தன் மகளின் மகளை உச்சி முகர்ந்தார் ..

கதிரவனை கண்ட அவர் “ கண்ணப்பா ஏன் நீ அங்கு நின்று கொண்டு இருக்கிறாய்  ??  வா நீயும்”  என்று தன் தலை பேரனை அழைத்தார். அவனும் அருகில் சென்று அமர்ந்துக்கொண்டான்.

உடனே சிவா “அம்மாச்சி உங்களுக்கு அத்தான் கண்ணப்பா, அக்கா கண்ணம்மா, நான் மட்டும் உங்களுக்கு யாராம்??” என்று கேட்கவும் அனைவரும் அங்கு இருந்த இறுக்கமான சூழ்நிலை மறந்து சிரித்துவிட்டனர் ..

“ எனக்கு நீ செல்லப்பா ”என்று கூறி சிரித்தார் அவர்களின் பாட்டி..

 “ ஆனால்  உன் அக்காவையும் , உன்னையும் செல்ல பெயர் வைத்து கூப்பிட வேண்டும் என்றால் ஒரு கண்டிஷன்”  என்று கூறவும்

 “ என்ன அம்மாச்சி என்ன கண்டிஷன்”  என்று வசுமதி தான் கேட்டாள்.

“ என்னை  நீங்க,  வாங்க,  போங்க என்று கூறாமல் உங்கள் அத்தானை போல நீ வா என்று சொல்ல வேண்டும். இப்படி சொன்னால்  தான் ஒட்டுதல் இருக்கும் மரியாதை குடுக்கிறே என்று என்னிடம் இருந்து விலகி நிற்கவேண்டாம்..”  என்று கூறவும்

சண்முகநாதன் “அத்தை உங்களுக்கு இன்னும் இந்த இரண்டு வாண்டுகளை பற்றி  தெரியவில்லை . சண்டை போடுவது மாதிரி இருக்கும் ஆனால்  நம்மை முட்டாளாக்கி போயிவிடுவார்கள் ” என்று தன் மக்களை பற்றி கூறினார் ..

அன்னபூரணி “எல்லாரும் ஒன்றாய் இத்தனை ஆண்டுகளுக்கு பின்னே  சேர்ந்திருக்கோம். ஒன்றாய் அமர்ந்து உண்ணலாம்” என்று கூறினார்.
கலகலப்பாக இருந்தது அந்த இடமே.. அந்த வீட்டில் வெகு நாட்களுக்கு பிறகு காலை உணவு வேலை மகிழ்ச்சியுடன் நகர்ந்தது …

சிவா இயல்பாக இந்த சூழ்நிலையில் தன்னை அமர்த்திக்கொண்டான். ஆனால் வசுமதி மனதிற்கு சந்தோசமாக இருந்தாலும் ஏன் இத்தனை ஆண்டுகள் பிரிவு என்ன காரணம் என்ன நேர்ந்தது என்று அவளின் மனதில் கேள்வி ஓடிக்கொண்டே இருந்தது…

அதை ஒரே பார்வையில் அவளின் அம்மாச்சி அறிந்துவிட்டார். சண்முகநாதனும் தன் மகளின் எண்ணத்தை நன்கு அறிவார் ஆனால் இப்பொழுது தான் உறவுகள் ஒன்றாக இணைந்துள்ளன தற்சமயம் கடந்த கதையை பற்றி பேசி பிள்ளைகளை குழப்பதில் ஆழ்த்த வேண்டாம் என்று எண்ணினார் ..

வசுமதிக்கும் சிவாவிற்க்கும் உணவின் ருசி அதிலும் போடிநாயக்கனூரின் தண்ணிர் ருசி மிக பிடித்துவிட்டது.. சிவா தான் முதலில் கூறினான் “ அத்தை இதே மாதிரி தான் அங்கு அம்மாவும் சமையல் செய்வாங்க. ஆனால்  இவ்வளோ டேஸ்ட்  இல்லை” 

வசுமதி தன் அத்தையிடம் “ தண்ணீர் தான் அத்தை மிகவும் நன்றாய் இருக்கிறது. ஒரு வேலை நாங்கள் அங்கே கேன் தண்ணி குடிப்பதினால் இங்கு வித்தியாசமாய்  படுகிறதோ ??” என்று கேள்வி வேறு கேட்டாள். காமாட்சி என்ன பதில் கூறுவது என்று வாய் திறக்கும் முன்னரே கதிரவன் பதில் கூறினான் ..

“இங்கு சப்ளை ஆகும் தண்ணீர் மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து வருவது.   கொட்டகுடி ஆற்றில் கலந்து பின்பு சுத்திகரிக்கப்பட்டு சப்ளை செய்வதினால் பலவிதமான மூலிகைகள்,  மலர்கள் அனைத்தையும் கடந்து வருவாதலும்  தண்ணிருக்கு இயற்கையான சுவை வந்துவிடும்”  என்று வசுமதியை பார்த்து சிறு முறுவலுடன் கூறினான்…   

அவளுக்கு புரிந்து விட்டது இவன் சமாதானக்கொடியை உயர்துக்கிறான். அவளும் அவனுக்கு சளைத்தவள் அல்லவே… மெல்லிய புன்னகை ஒன்றை புரிந்துக்கொண்டே “ஓ … அப்படியா??” என்று அவனை பார்த்து கூறினாள் ..

இவர்கள் இருவரின் முகமாற்றம்,, அவர்களின் பேச்சுவார்த்தையை இருவர் மிகுந்த ஆச்சர்யத்துடன் கவனித்தனர் ஒன்று அன்னபூரணி , இன்னொருவர் காமாட்சி.

இருவரின் திகைப்பிற்கு காரணம் கதிரவன் தான்.. அவன் சாதரனமாக புதிதாக சந்திக்கும் ஒருவரிடம் தானாக பேசமாட்டான்.  அதிலும் வயது பெண்கள் என்றால் சற்று ஒதுங்கியே இருப்பான் ஆனால் இன்று வசுமதி அவளின் அத்தையிடம் கேட்ட கேள்விக்கு இவன் பதில் கூறுகிறான்..

காமாட்சியின் சிந்தனை தன் மகன் தானாக வசுமதயிடம் பேசியதிலேயே நின்றது. ஆனால் அன்னபூரணியோ தன் பேரன் பேத்தயின் முகமாற்றங்களையும் அதை அவர்கள் மறைக்க முயல்வதையும் அறிந்துக்கொண்டார்..

கதிரவனை பற்றி நன்றாக அறிந்தவர் அல்லவா. வசுமதியிடம் எதோ வாயை விட்டு உள்ளான். அதற்கு பதில் கூறி சமாளிக்கின்றான் என்று கண்டு விட்டார். கதிரவன் தன் அப்பத்தா தன்னை ஆராய்சிப்பார்வை பார்ப்பதை உணர்ந்து “ அப்பத்தா அலுப்பாய்  இருந்தால்  போய் ரெஸ்ட் எடு” என்று பேச்சை மாற்றினான்..

அன்னபூரணி ”  ரெஸ்ட் தான் எடுக்கவேண்டும் கண்ணப்பா ஆனால் அதற்கு  முன் வசுமதயிடமும் சிவாவிடமும் எல்லாம் தெளிவாக பேசிவிடனும்”  என்றார்.

வசந்தி தன் அம்மாவிடம் “ அம்மா இப்பொழுதே எதுவும் வேண்டாம். இங்கு இவர்கள்  பழகட்டும் அப்புறம்  பார்க்கலாம்”  என்று கூறினார்.. அதே எண்ணம் தான் சண்முகநாதன் முகத்திலும் இருந்தது..

“ இல்லை வசந்தி இத்தனை வருஷ சம்பவங்களுக்கு இன்றே ஒரு முடிவு வந்துவிடட்டும். பிள்ளைகளுக்கு எதுவும் தெரியாமல் இங்கு சகஜமாக இயல்பாக  இருக்க முடியாது.. மனதில் ஒரு சிந்தனை ஓடிகொண்டே இருக்கும்… அதனால்  இன்றுடன் ஒரு முடிவு வரட்டும்.”  என்று உறுதியாக கூறினார்.

வசுமதி “ அம்மாச்சி உனக்கு கஷ்டமாய்  இருந்தால் எதுவும் பேச வேண்டாம்.  எங்களுக்கும் எதுவும் தெரிய வேண்டாம். இத்தனை வருஷம் ஆனா பிறகு தான் நாம்  ஒன்று சேர விதி இருக்கிறது போல, அதே போல நடந்த சம்பவங்கள் எதுவானாலும் சரி , யார் மேல் சரி தவறு இருந்தாலும் பரவாயில்லை, நாம் எல்லாம் இப்போ  ஒன்றாய் இருக்கிறோம் அதை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். எங்களுக்கு எப்பொழுது கடந்த கால உண்மைகள் தெரிய வேண்டும் என்று அந்த கடவுள் நினைத்து இருக்காரோ அப்போ தெரியட்டும், அதுக்காக நீ அலட்டிக்கொள்ள வேண்டாம் ”  என்று கூறினாள் ..

சிவாவும் “ ஆமாம் கிரேனி உனக்கு கஷ்டமாக இருக்கும் சோ எதுவும் வேண்டாம் ” என்று கூறினான்..

 “ இல்லப்பா இந்த கஷ்டங்களுக்கு இன்றுடன் ஒரு முடிவு வேண்டும். அதான் இந்த பேச்சை ஆரம்பித்தேன். எல்லாம் கேட்ட பிறகு உங்களுக்கு என் மீது கோவம் கூட வரலாம். ஆனால் என்னை வெறுத்துவிட வேண்டாம் ” என்று கவலையாக கூறினார் அன்னபூரணி ..

வசுமதி “ அம்மாச்சி நான் தான் சொன்னேனே நடந்த சம்பவங்கள யாராலும் இனி மாற்ற முடியாது.. நடந்தவைக்காக யாரும் யாரிடமும் கோவித்து ஒன்றும் செய்ய முடியாது.. அதனால் நீ எதை பற்றியும் யோசித்து வருத்தப்பட வேண்டாம் “

கதிரவனுக்கு வசுமதியின் பேச்சு ஆச்சர்யப்பட வைத்தது.  “ இவளால் இப்படி தெளிவாகவும்,  திருத்தமாகவும் , ஆறுதலாகவும் பேச முடியுமா?? ” என்று எண்ணினான்.  

“ இருபற்றி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு,  உங்கள் அம்மா டிகிரி முடித்துவிட்டு இங்கு இருக்கும் தனியார் பள்ளிக்கு வேலைக்கு சென்றாள்.. நான் அதெல்லாம் வேண்டாம் என்று சொன்னேன். ஆனால்  என் பேச்சை கேட்காமல் அவள் அண்ணனிடம்  எப்படியோ சம்மதம் வாங்கிவிட்டு போனாள்  “

“ நானும் சரி படித்துவிட்டு ஏன் வெறுமனே வீட்டில் இருக்க வேண்டும். இன்னொரு வீட்டில் வாழ போகும் பெண், இங்கு இருக்கும் வரை அவள் விருப்பபடி சந்தோசமாய்  இருக்கட்டும் என்று   நினைத்தேன்.”

“அப்போ தான் உங்க அப்பா சண்முகநாதன் இந்த ஊருக்கு பள்ளிக்கூடம் விஸ்தரிப்பு செய்ய கட்டட இன்ஜினியராய் வந்தார். அதே பள்ளிக்கு தான் உன் அம்மாவும் வேலைக்கு சென்று வந்தாள். இரண்டு பேருக்கும் பழக்கம் ஆகிவிட்டது போல. என் மகள்  அழுத்தக்காரி வெளிய எதையும் சொல்லவில்லை. இப்படியே ஆறு மாசம் போனது, வசந்திக்கும் நல்ல நல்ல சம்பந்தம் எல்லாம் வந்தது. சிவபாண்டியன் தான் வசந்தி இன்னும் சிறிது நாள் நம் கூட இருக்கட்டும் என்று சொன்னான் ”

“ நானும் கொஞ்சம் பொருத்து இருந்தேன். ஆனால் யாராவது கல்யாணம் பற்றி  பேசினாலே உன் அம்மா முகம் மாறிவிடும் , நான் முதலில் சாதரணமாவே நினைத்து   விட்டுவிட்டேன். பக்கத்து ஊரில் இருந்து நல்ல வரன் வரவும் சரி முடித்துவிடலாம் என்று  நினைத்து, வசந்தியை வேலையை விடு உனக்கு கல்யாணம் செய்யலாம் என்று  நானும் உன் அண்ணனும் முடிவு எடுத்து இருக்கோம் ”  என்று கூறினார் 

வசந்திக்கு ஒரு பக்கம் பயம் இன்னொரு பக்கம் வீட்டில் என்ன சொல்லி பேச்சை ஆரம்பிப்பது என்று தயக்கம்.. ஆனால் காதல் தான் எப்படிப்பட்ட பயத்தையும் தயக்கத்தையும் உடைத்து விடும் அல்லவா..

சண்முகநாதனிடம்  கூறி தன்னை பெண் கேட்டு வருமாறு கூறினார் வசந்தி. சண்முகநாதனும் வசந்தியின் வீட்டிற்கு வந்து சிவபாண்டியன், அன்னபூரணி ஆகியோரிடம் வசந்தியும் தானும் விரும்புவதாகவும் எங்கள் திருமணத்தை நடத்திவைக்குமாறும் கூறினார் .

முதலில் அங்கு இருந்த அனைவருக்கும் பெரிய அதிர்ச்சி.. வசந்தி இப்படி செய்வாள் என்று யாருமே நினைத்து கூட பார்க்கவில்லை. சண்முகநாதனுக்கு அப்பா அம்மா யாரும் இல்லை. ஆசிரமத்தில் தங்கி தான் படித்தார் . படிப்பு ஒழுக்கம் நல்ல நடத்தை காரணமாக நல்ல நிலைமைக்கும் வந்தார். இதை அனைத்தையும் மறைக்காமல் கூறி தான் பெண் கேட்டார்.

ஆனால் அன்னப்பூரணி, சிவபாண்டியன் இருவருக்கும் இந்த காரணங்களே போதுமானதாக இருந்தது அவரை வேண்டாம் என்று கூற. அன்னபூரணி அம்மாள் தன் மகளிடம் எவ்வளவோ பேசி பார்த்தார் கெஞ்சி பார்த்தார் மிஞ்சிப்பார்த்தார், எதற்கும் மசியவில்லை வசந்தி.

அம்மா “ மனதில்  ஒருவரை  நினைத்துவிட்டு வேறு ஒருவருடன் என்னால்  சத்தியமாக வாழ முடியாது. காலம் முழுதும்  தொடரும் பந்தம் அதை மனதிற்கு  பிடித்த ஒருவர் கூடத்தான் வாழ முடியும் . ஒரு வாழ்கையை பொய்யாக  வாழ முடியாது”

“ வருபவர் நல்லவராய் இருந்தால் நான் வேறு ஒருவரை விரும்பி, வீட்டில் இருப்பவர்கள் கட்டாயத்திற்காக அவரை கல்யாணம் செய்தேன் என்ற குற்ற உணர்வே என்னை கொன்று விடும்.  ஒருவேலை வருபவர் மோசமாய் நடந்தால் நான் இழந்த காதலே என் மனதில் ஏக்கம் துக்கம் கொடுத்துவிடும்.  போதும் அம்மா என்னால்  முடியாது” என்று தன் தாயிடம் கூறி கதறினார்.

மகளின் பேச்சைக்கேட்ட அன்னபூரணி சற்று யோசித்து தன் கடைசி ஆயுதத்தை வீசினார். “ சரி வசந்தி நீ சொல்லும் படியே சண்முகநாதனுக்கு உன்னை திருமணம் செய்து தருகிறோம் ஆனால் அதன் பிறகு உனக்கும் இந்த குடும்பத்திற்கும் எந்த உறவும் இருக்க கூடாது”

இவ்வாறு கூறினால் தன் மகள்இல்லை அம்மா நீங்க யாரை கை காட்டினாலும் சரி  நான் ஏற்றுக்கொள்கிறேன் எனக்கு உங்களின் பாசம் தான் பெருசு என்று தன் வழிக்கு வருவாள் என்று எண்ணினார். ஆனால் வசந்தி சற்று நேர திகைப்பிற்கு பிறகு , தன் அம்மா அண்ணன் அண்ணியிடம்,

“ ஒரு பெண்ணுக்கு பாசமா இல்லை அவள் புனிதமா என்று ஒரு சூழ்நிலை வந்தால்  அவள் தன் புனிதத்தை தான் முக்கியமாய்  நினைப்பாள். என்னை பொறுத்தவரை   மனதில் ஒருவரை   நினைத்துவிட்டு  வேறு ஒரு கல்யாணம் செய்வது என்னை நானே கலங்க படுத்துவது போல அம்மா, அதனால் உங்கள் வார்த்தையை நான் ஏற்றுகொள்கிறேன் . கல்யாணம் முடிந்த பிறகு  எனக்கும் இந்த குடும்பத்திற்கும் எந்த விதமான தொடர்பும் இருக்காது . நீங்களாய் கூப்பிடும்  வரை என் நிழல் கூட இங்கு விழாது ” என்று கூறினாள்..

“ எளிமையான முறையில் கல்யாணம் செய்து அன்று போனவள் தான் இன்று  மறுபடியும் நாங்களாய்  அழைக்கவும் வந்திருக்கா. வைராகியக்காரின்னு என் மகள்  காட்டிவிட்டாள் ” என்று கூறி நிகழ் காலத்திற்கு வந்தார் அன்னப்பூரணி. வசந்தியின் கண்களில் கண்ணீர் வழிந்தது .

சிறு ஊசி விழுந்தால் கூட அங்கு சப்தம் கேட்கும் அளவு அமைதியாக இருந்தது. கதிரவன் தான் சூழ்நிலையை சரி செய்யும் பொருட்டு “ அப்பத்தா போதும் சிறிது நேரம் படு”  என்று கூறினான்.

வசுமதி தன் அம்மாச்சியின் கைகளை பிடித்துக்கொண்டு ஆதரவாக தடவியவாறே “எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை, இதில் அம்மாவிடமும்  சரி உங்கள் பக்கமும் சரி தப்பு இருக்கு.  அம்மா இன்னும் கொஞ்ச காலம் பொறுமையாக இருந்து அவர்கள் காதலை உங்களுக்கு புரிய வைத்திருக்கலாம் , இல்லை நீங்களாவது அம்மா பக்கம் இருக்கும் நியாங்களை புரிந்து நடந்து இருக்கலாம். ஆனால்  இரண்டு பேருமே அவசரத்தில் வார்த்தையை விட்டு இத்தனை வருஷம் பிரிவு வந்துவிட்டது. போனது போகட்டும் இனியாவது உங்கள் மனதிற்கும் நிம்மதி கிடைக்கும்” என்று கூறினாள்.

சிவா தான் தன் பாட்டியிடம் “ கிரேனி அம்மாகிட்ட அவ்வளோ பாசமிருக்கும் போது  ஏன் அவர்கள் காதலை மட்டும் ஏற்றுக்கொள்ளவில்லை ?? “என்று கேட்டான் .

 “ செல்லப்பா அது எதிர்ப்பு இல்லை, ஒரு விதமான பயம், ஆசிரமத்தில் வளர்ந்தவர் என் மகளை எப்படி பார்த்துப்பாரோ என்னவோ ஏதோ என்ற பயம். அந்த பயமே என்னை அப்படி பேச வைத்தது. பெண்ணை பெற்ற எல்லா அம்மாவிற்கும் இந்த பயம் இருக்கும். இப்போ உன் அம்மாவிடம் கேள், எப்படி அவள் மகளுக்கு வாழ்வு அமையுமோ, எப்படிப்பட்ட மனுஷன் கிடைப்பாரோ என்று மனதை போட்டு உருட்டி கொண்டு இருப்பாள் ” என்று கூறினார் .

“ ஐயோ அம்மாச்சி  நீ இப்படி சொன்னால் எப்படி ??.  அம்மா அப்படி எல்லாம் நினைக்க மாட்டார்கள்.  யார் வந்து என் மகளிடம்  மாட்ட போகிறானோ. இவள் அவரை என்ன பாடு படுத்தப் போகிறாளோ என்று  தான் பயந்து கொண்டு இருப்பாங்க”   என்று கூறினான். சூழ்நிலை மறந்து சிவாவின் பேச்சை கேட்டு அனைவரும் சிரித்தனர் .

ஆனால் வசுமதி மட்டும் தன் தம்பியை அடிக்க ஓடினாள். ஆனால் அவனோ “ அத்தான் என்னை காப்பாற்றுங்கள் ”  என்று கதிரவன் பின்னால் சென்று ஒளிந்துக்கொண்டான்..

இதை சற்றும் எதிர் பாராத கதிரவன், ஒரு நிமிடம் திகைத்து பின் சிவாவை மறைத்து நின்றான் .

வசுமதி கதிரவன் அருகிலும் செல்ல முடியாமல் அவள் தம்பியை சும்மா விட முடியாமல் திணறினாள்.  பின் கதிரவனிடம் அவனை விட்டு விலகுங்கள் என்று கூறினாள் ஆனால் கதிரவனோ அவள் படும் பாட்டை ரசித்துக்கொண்டே,

 “ ம்ம்ம்  என்னால் முடியாது.  என்னை நம்பி வந்தவனை என்னால் விட முடியாது ” என்று கூறி சிரித்தான். 

“ அவன் பேசியது மட்டும் சரியா??”  என்று கேட்டாள் அவள்.. கண்களில் கோவம் மின்னியது ஆனால் முகத்திலும் வார்த்தையிலும் அதை அவள் காட்டிக்கொள்ளவில்லை.

கதிரவனுக்கு அவளின் முக பாவனைகள் பார்க்க மிகவும் பிடித்து விட்டது . இன்னும் கொஞ்சம் நேரம் அவளை சீண்ட எண்ணி “ சிவா பேசியது சரியா தப்பா என்று எனக்கு எப்படி தெரியும். அவன் உன்னுடன்   இத்தனை வருசமாய் இருக்கிறான்.  நான் இன்று வந்தவன். அவனுக்கு தான் தெரியும் அவன் அக்காவின் அருமை பெருமை எல்லாம் ?? ” என்று கண்ணில் மட்டும் சிரிப்பை வைத்துக்கொண்டு கூறினான் ..

“ வாவ்!!  அத்தான் சூப்பர்.. பார் சுமதிக்கா எனக்கு சப்போர்ட் பண்ண ஆள் இருக்கு , இனி உன்னால் என்னை எதுவும் பண்ண முடியாது” என்று கதிரவனிடம் கை குலுக்கினான் .

“ யூ … யூ .. போத் ஆப் யூ “ என்று கோவத்தில் வார்த்தைகளை தேடினாள். கதிரவனுக்கு அவளை பார்க்க பார்க்க வியப்பாகவும் அவளை வம்பிளுக்கும்போது அவனுக்கு உற்சாகமாகவும் இருந்தது ..

சிவாவை மறைத்து தன் ஆறு அடி உயரத்திற்கும் நிமிர்ந்து நின்றான் வசுமதி முன். அவள் சற்று அவனை வியப்பாக பார்த்து கொண்டு நின்றாள்.

“ காலை இவன் என்னிடம் பேசிய விதம் என்ன இப்பொழுது என் தம்பியுடன் சேர்ந்து என்னையே வம்பிழுப்பது என்ன ??” என்று யோசித்தவாறே அவனை சற்று அன்னாந்து அவனின் முகத்தை பார்த்தாள். தன் ஒற்றை புருவத்தை தூக்கி என்ன என்பதுப்போல் அவளை பார்த்து புன்னகைதான் அவன் .

அவ்வளோதான்.. அவன் சிரிப்பில் நொடி பொழுது தடுமாறி அவனது முகத்தையே கண் இமைக்காமல் பார்த்தாள். இவர்கள் இருவரையும் காமாட்சியும் அன்னபூரணியும் ஆச்சர்யமாக பார்த்தனர். கதிரவன் இப்படி யாரிடமும் பேசியது இல்லை, வம்பிளுத்ததும் இல்லை. இன்று என்ன ஆயிற்று அவனுக்கு அன்று நினைத்தார் காமாட்சி.

ஆனால் அன்னபூரனியோ இருவரையும் பார்த்து மனதினுள் வேறு ஒரு கணக்கு போட்டார். சண்முகநாதனுக்கு போன் வரவும் அவர் வெளியே சென்றுவிட்டார்/ காமாட்சி வசந்தி அன்னப்பூரணி சிவபாண்டியன் அனைவரும் தங்கள் பழைய நினைவுகளில் இருந்தனர். சிவாவும், கதிரவனும் எதோ பேசி சிரித்துக்கொண்டிருந்தனர். வசுமதிக்கு திடீர் என்று தன் தனியாக நிற்பது போல் உணர்ந்தாள்.

ஆனால் அவளுக்கு தன் அம்மா தன் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருப்பத்தையும், அன்னப்பூரணி சிவபாண்டியன் முகத்தில் இருந்த நிம்மதியையும் கண்டாள் .

“ ஆண்டவா இந்த நிம்மதி, இந்த சந்தோஷம் இந்த உறவுகள் இதேபோல எப்பொழுதும்  நிலைத்து இருக்க வேண்டும்” என்று மனதினுள் வேண்டினாள். முகத்தில் அவளை அறியாத ஒரு மெல்லிய புன்னகையுடன் அங்கு நடப்பதை பார்த்துக்கொண்டிருந்தாள்..

ஆனால் அவளின் முகப்பாவங்களையும் அவள் ஆண்டவனிடம் வேண்டிவிட்டு பெருமூச்சு விட்டதையும் கதிரவன் கண்டுக்கொண்டிருந்தான். இதை எல்லாம் அவள் கவனிக்கும் நிலையில் இல்லை. அப்பொழுதுதான் அவளுக்கு தன் பிரேஸ்லெட் காணவில்லை என்பது நியாபகம் வந்தது ..

தன் தம்பி சிவாவை பார்த்து மேலே வருமாறு கண் அசைத்துவிட்டு சென்றாள். சிவா அறிவான் ஏதாவது முக்கியமான விஷயம் என்றால் மட்டுமே வசுமதி இவ்வாறு அவனை அழைப்பாள் என்று. இரண்டு நிமிட இடைவெளிக்கு பின்பு இதோ வருகிறேன் அத்தான் என்று கூறி தன் அக்காவை பார்க்க சென்றான்.

இவை அனைத்தையும் கதிரவன் கண்டும் காணாததுபோல் தான் இருந்தான். மேலே சிவா “ என்ன வசுக்கா” என்று கேட்டப்படி வந்தான் ,

“ டேய் தம்பி என் பிரேஸ்லெட்டை காணோம் டா “ என்று தன் கைகளை பிசைந்துக்கொண்டே கூறினாள் .

“ என்னக்கா  எப்பொழுதும் அதை கையில் போட்டு இருப்பாய் தானே பின் எப்படி ??” 

“ தெரியவில்லை டா நான் கிழே இறங்கி வரும் போது என் கையில் தான் இருந்தது. ஆனால் கிழே என் கையில் அத காணவில்லை ”

“ என்ன அக்கா மாடியில் இருந்து கீழ இறங்குவதற்குள் எங்கே போனது  நடுவில்  வேறு எங்கேயும் போனாயா ??” என்று கேட்டான் தமயன், அப்பொழுதுதான் வசுமதிக்கு நினைவு வந்தது அவளும் கதிரவனும் எதிர் எதிரே மோதிக்கொண்டது

“ அது அது வந்தடா… நான் அதை  சொன்னால்  நீ என்னை கிண்டல் செய்ய மாட்டய் என்று சத்தியம் செய். அதிலும் உன் அத்தான் முன்பு எதுவும் பண்ணமாட்டேன் என்று சத்தியம் செய் “

அதை கேட்டதும் சிவாவிற்கு சிரிப்பு வந்தது ” நீ இப்படி சொன்னால் அது நிச்சயமாக எதாவது கிண்டல் செய்வது மாதிரி தான்  இருக்கும்”  என்று கூறி நகைதான்..

“ அது என்ன உன் அத்தான் அவர் உனக்கும் தான் அத்தான் புறிகிறதா?? அவர் எவ்வளோ ஸ்வீட்டா பேசுகிறார் தெரியுமா ?? “ என்று அவன் புகழ் பாட தொடங்கினான்.

“ சிவா ப்ளீஸ்” 

“ சரி சரி நான் எதுவும் கிண்டல் செய்ய மாட்டேன் சொல் என்ன நடந்தது, எப்படி நடந்தது , எங்கே நடந்தது”  என்று கேட்கவும் வசுமதிக்கு கோவம் ஒரு பக்கம் , இவனை விட்டால் உதவிக்கு யாருமில்லை என்ற எண்ணம் ஒரு புறம் என்று பொறுமையை கையில் பிடித்து பல்லை கடித்துக்கொண்டு “ சிவா”  என்று கூறினாள்…

“ சரி சரி ஜோக்ஸ் அபார்ட்”  என்று சிவா கையை உயர்த்தினான். வசுமதி காலையில் நடந்ததை கூறினாள் தன் தம்பியிடம் ..

அதை கேட்ட சிவா உடனே சிரிக்க ஆரம்பித்து விட்டான் “ ஆகா அக்கா உனக்கும் அத்தானுக்கும் வந்த உடனே டிச்சிங் டிச்சிங்… வாவ் வாவ்  அதுதான் நீயும் அத்தானும் ஒரு மாதிரி முறைத்து கொண்டு இருந்தீர்களா?? அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் இல்லை இல்லை அத்தானும் நோக்கினார் அக்காவும் நோக்கினாள்.  ஆமாம் சென்னையில் யாரோ ஒருத்தன் உன்மேல் தெரியாமல்  மோதிவிட்டான் அவனை எப்படி அடி வெளுத்து வாங்கினாய்.  இப்ப என்ன மெய் மறந்து நின்று   அத்தனை சைட் அடிக்கிறாயா??.  அக்கா அவரை பார்த்து ஸ்லிப் ஆகிவிட்டாயா ?? அட கடவுளே இது மட்டும் சென்னையில் உன் பின் சுற்றுபவர்களுக்கு தெரிந்தால் அவ்வளோதான்.. “ என்று தன் வேலையை காட்ட ஆரம்பித்தான்.

“ சிவா போதும் நிறுத்தடா நீ எல்லாம் ஒரு தம்பியா இப்படி பேசுகிறாய் ”

“சரி சரி உனக்கு இப்ப என்ன வேண்டும் ” என்று கேட்டான்.

உடனே வசுமதி “ அது அது வந்து உன் இல்லை இல்லை நம் அத்தானிடம் என் பிரேஸ்லெட் இருக்கா என்று கேட்டு,  ஒரு வேலை இருந்தால் அதை வாங்கி வந்து குடுக்க வேண்டும்  “ என்று கூறினாள் .

அவன் சற்று தன் அக்காவை வித்தியாசமாக பார்த்தான், “ அக்கா நாம் இன்று தான் இங்கு வந்திருக்கிறோம்.  வந்த உடனே அவரிடம் போய்  என் அக்காவின் பிரேஸ்லெட் உங்கள் இடம் இருக்கா என்று எப்படி கேட்க முடியும்??”  என்று கேட்டான், நியாயம் தானே.

 “ ம்ம்ம் ப்ளீஸ்  சிவா அது எவ்வளோ முக்கியம் என்று உனக்கு தெரியும் தானே ” என்றாள்.. சிவா ஒரேதாக தலையை குலுக்கி விட்டான்.

”இல்லைக்கா இடித்து கொண்டது  நீங்கள் இரண்டு பேரும். என்னை கேட்டா இடித்து கொண்டீர்கள்?? ஆனால் தூது போக மட்டும் நானா?? சுமதி வேண்டும் என்றால்   உன்னை அத்தான் ரூம்க்கு கூட்டிக்கொண்டு போகிறேன் நீயே அவரிடம் கேள் ” என்றான்.

“ ஏன்டா என் உயிரை வாங்குகிறாய் இவ்வளோ நேரம் அத்தானும் நீதானே சட்டை பொத்தானும் நீதானே என்று பாசம் பொலிந்து கொண்டு இருந்தாய், இப்போ என்ன ?? ” என்று கேட்டாள்.

“ சுமதிக்கா தான் போகும் காரியத்திற்கு தன் தம்பி போனால் மட்டு என்று ஒரு பழமொழி இருக்கிறது தெரியுமா உனக்கு, இது நீயும் அவரும் பேசி கொள்ள வேண்டியது நடுவில் என்னை இழுக்காதே ”  என்று கூறி அவளின் முகத்தை பார்த்து நின்று விட்டான்…

இவர்கள் பேசிய அத்தனை சம்பாசனைகளும் கதிரவனுக்கு அவனின் அறையில் நன்றாக கேட்டது.. அவள் அத்தானும் நீதானே சட்டை பொத்தானும் நீதானே என்று கூறக்கேட்டு பயங்கரமாக சிரித்துக்கொண்டிருந்தான்..

“ எப்படி பேசுகிறாள், சென்னையில் இவள் பின்னால் நிறைய பேர் சுற்றுகிரார்கலாமே , இருக்கும் இருக்கும் நல்ல அழகி தான்.. என்ன அடாவடிதனம் தான் கொஞ்சம் கூடுதலாய் இருக்கு  “ என்று நினைத்து கொண்டான். பின் எந்த நேரத்திலும் அவள் இங்கு வரலாம் என்று எண்ணி எதோ பிசியாக இருப்பதுப்போல் அறையில் உருட்டி கொண்டிருந்தான்.

ஆனால் மனதினுள் “எப்படி எல்லாம் பேசுகிறாள் மதி” என்று அவளின் சிந்தனையே ஓடியது அவன் மனம் அவனிடமே ஒரு கேள்விகேட்டது அதற்குள் மதி என்று அவளின் பெயரி சுருக்கி செல்லமாக அழைக்கும் அளவுக்கு வந்துவிட்டாயா ??  என்ன இது வந்த அன்றே என்னை இப்படி நினைக்க வைக்கிறாள். அவளிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக தான் இருக்க வேண்டும்  என்று எண்ணினான்…

ஆனால் அவனின் எண்ணமே அவனிற்கு சிரிப்பை தந்தது , அவளைப்பார்த்து முழுதாக ஒரு நாள் முடியவில்லை ஆனால் இப்படி எல்லாம் என்னை எண்ண வைத்துவிட்டாள் என்று நினைத்து அதற்கும் புன்னகைபூத்தான்..

“ எக்ஸ்கியுஸ் மீ”  என்று ஒரு குரல் கேட்டது.. உடனே தன் முகத்தை சற்று சாதாரணமாக மாற்றிக்கொண்டு எஸ் என்று கூறி திரும்பினான், அவள் தான் கையை பிசைந்து கொண்டு நின்றிருந்தாள்..

“ உள்ள வா ம .. வசுமதி “ என்று அழைத்தான்.  அவனை சற்று வித்தியாசமாக பார்த்து பின் ,

“இல்லை பரவாயில்லை , நான் உங்களிடம் ஒன்று கேட்கவே வந்தேன்”  என்றாள் ..

என்னவென்பது போல பார்த்தான் கதிரவன். “ என்ன இவன் இப்படி பார்த்து தொலைக்கிறான்”  என்று எண்ணியவள்,

“ அது.. அது..  வந்து”  என்று மேலே என்ன எப்படி கேட்கவேண்டும் என்று யோசியாமல் “ சிவா சொல்லவும் நாம் இங்கு வந்தது தப்போ” என்று எண்ணிக்கொண்டு நின்றுவிட்டாள்

“ அது தான் வந்துவிட்டாயே  என்னவென்று சொல் ”  என்று கேட்டு அவளின் முன் கையை கட்டிக்கொண்டு நின்றான்…

“ அது வந்து கதி….. அத்தா”  என்று கூறவரும் முன் ,

“ பரவாயில்லை, கதிரவன், கதிர் இப்படி எது உனக்கு வசதியோ அப்படியே கூப்பிடு, அங்கு சென்னையில் எல்லாரையும் பெயர் சொல்லி கூப்பிடுவது தானே பழக்கம். உனக்கு இங்கு கொஞ்சம் பழக்கம் ஆன பிறகு உனக்கு விருப்பமிருந்தால் அத்தான் என்று  சொல் “

“ இல்லை அப்படி இல்லை இதுவரை யாரையும் அப்படி கூப்பிட்டது இல்லை அதுதான்”  என்று இழுத்தாள். 

“ நான் தான் சொன்னேனே  உன் இஷ்டபடி  கூப்பிடு என்று“ என்று அவன் கூறினான்..

“ தேங்க்ஸ் கதிர்” என்றாள், அவன் மெதுவாக நகைத்துக்கொண்டே

“ கதிர்.. ஹ்ம்ம்  யாரும் என்னை இப்படி கதிர் என்று அழைத்தது இல்லை. அதனால்  ஒன்றும் இல்லை”  என்றான். அவளின் முகம் சற்று இயல்பாக மாறியது,

 “ அதேபோல் நானும் உன்னை மதி என்று கூப்பிடலாமா ??” என கேட்டான். 

அதற்கு அவள் மெதுவாக நகைத்துக்கொண்டே “ யாரும் என்னை இப்படி மதி என்று   அழைத்தது இல்லை. அதனால் ஒன்றும் இல்லை “ என்று அவன் வார்த்தைகளையே பதிலாக கூறவும் அவனுக்கு மேலும் அவளை பார்த்து புருவம் உயர்த்தினான்.. அவள் என்ன கேட்க வந்தாளோ அதையே மறந்து நின்றிருந்தாள்..

பின் அவன் தான் எதுவோ கேட்க வந்த மாதிரி இருந்தது என்று கேட்டான்.  “ அட லூசு இப்படியா வந்த விஷயத்தை மறந்து பட்டிக்காட்டான் மிட்டாய் கடை பார்த்தது போல நிற்பாய்” என்று தன் மனதினுள் தன்னையே திட்டிக்கொண்டு

 “ அது வந்து கதிர் அது”  என்று மீண்டும் இழுத்தாள் ..

“ அதான் வாந்தாகிவிட்டதே இன்னுமென்ன”  என்று கேட்கவும் ,

 “ இல்லை என் பிரேஸ்லெட் உங்க கிட்ட இருக்கா என்று கேட்க வந்தேன்” என்று ஒரு மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு கேட்டாள்..

“ என்ன பிரேஸ்லெட்?? உன் பிரேஸ்லெட்டா ?? காணவில்லையா ?? காணவில்லை என்றால் தேடிப்பார். அதைவிட்டு என்னிடம்  வந்து கேட்டால்??, கையில்  இருக்கும்   உன் பிரேஸ்லெட்டிற்கு  கால் முளைத்து என்னிடம்  வருமா???? “ என்று வேண்டும் என்றே அவளை வம்பிழுத்தான்..

இதை கேட்கவும் மீண்டும் வசுமதி பழையபடி கோவத்தை தன் ஆபரணமாக அணிந்துக்கொண்டு இருந்தால் “ இருந்தால் இருக்கிறது என்று  சொல்லுங்கல்  இல்லை என்றால்  இல்லை என்று  சொல்லுங்கல்,   இப்படி நக்கல் பேசவேண்டாம் ” 

அவன் சற்று நேரம் அவளை பார்த்துவிட்டு “ மதி உனக்கு ஒன்று  தெரியுமா யாரும் என்னிடம் இப்படி பேசினது இல்லை.  காலையில்  நீயும் கோவமாய் பேசினாய்  நானும் எதோ ஒரு டென்ஷனில் அப்படி பேசிவிட்டேன். ஆனால் இப்போ உன்னை  சகஜமாக்கதான்  வம்பிழுத்தேன் ” என்று கூறினான்..

“ ஓ !! சரி கதிர்.. அது வந்து பிரேஸ்லெட்டை காணவில்லை.  காலையில்  நான் இறங்கி வரும்போது  இருந்தது, பின்  அது நாம் நாம் இடித்து.. பிறகு தான் காணவில்லை, அதான்”  அவள் முகம் தானாக சிவந்து விட்டது இதை அவனிடம் கூறும்முன்..

“ ஈஸி ஈஸி மதி கிழே எங்காவது விழுந்திருக்கும் நன்றாய் தேடிப்பார்” 

“ ஐயோ அது உங்களிடமும் இல்லையா, அட ஆண்டவா நான் தேடிப்பார்த்தேன் இல்லை. சரி உங்களிடம் ஒருவேலை இருக்கும் என்று  மனதில் ஒரு தைரியம் இருந்தது ஆனால் இப்போ நீங்களும் இல்லை என்று சொன்னால் அது எங்கே போயிருக்கும். அது எனக்கு மிகவும் முக்கியம்“ என்று கூறும் பொது அவளின் கண்களில் நீர் கட்டி விட்டது..

சரி இன்னும் இவளிடம் விளையாட கூடாது என்று எண்ணி அந்த பிரேஸ்லெட்டை  அவளிடம் கொடுத்தான். அவளுக்கு அதை காணவும் சந்தோஷம் பிடிபடவில்லை.. “ கையில் வைத்துக்கொண்டு தான் இவ்வளவு நேரமாய் என்னை  தவிக்க விட்டீர்களா ??” என்று குறை பாடினாள்..

அவன் சிரிப்பை தவிற வேறு பதில் தரவில்லை..

பின் அவளாகவே “ இது பதினெட்டாவது பர்த்டேக்கு அப்பாவும் அம்மவும் கிப்ட் தந்தது. அன்று இருந்து என் கையில் இருக்கும் அதை காணவில்லை என்றதும் மிகவும் டென்ஷன்  ஆகிவிட்டேன்.. மிகவும் தேங்க்ஸ் அத்தான் ” என்றாள் ..

அத்தான் என்று அவள் கூரியதை அவள் அறியவில்லை. அவள் கவனம் எல்லாம் அவள் கையில் தான் இருந்தது.. ஆனால் அப்படி அழைக்கப்பட்டவன் அறிந்துக்கொண்டான், நகைத்துக்கொண்டான்..

“ சரி நான் போகிறேன் “ என்று கிளம்ப தயாரானாள்.

 “ மதி நான் ஒன்று  உன்னிடம் கேட்கவேண்டும் ??” என்று கூறி அவளை நிறுத்தினான்.. என்ன என்பதுபோல் அவள் அவனை பார்த்தாள் ..

“ இல்லை அப்பத்தா பழைய கதை எல்லாம் சொன்ன பிறகு எப்படி அத்தனை  ஈஸியாக  எடுத்துக்க முடிந்தது உன்னால்??”

“நான் நேற்று இருந்து கொஞ்சம் டென்ஷனாய் இருந்தேன் ,சிட்டியில் வளர்ந்தவர்கள். இங்கு உள்ள சூழ்நிலையே வேறு எப்படி எடுப்பார்களோ என்னவோ என்று மிகவும் பதற்றமாக இருந்தது ”  என கூறினான்.

இவன் இப்படி ஒரு கேள்வி கேட்பான் என்று வசுமதி சிறிதும் எதிர் பார்கவில்லை.. ஒரு பெருமூச்சுடன் பேச ஆரம்பித்தாள்,

“ எனக்கும் சிவாவிற்க்கும் மனதிற்குள்எந்த கவலையும் இல்லை என்று   நினைக்கிறீர்களா ?? நிறைய இருக்கு.. ஆனால்  வெளியே  எதுவும்  காட்ட மாட்டோம்.. நாங்கள் சிறு சுணக்கம் காட்டினால் கூட அம்மாவும் அப்பாவும் வருத்தப்படுவார்கள்   சோ வெளியே எதையும் காட்டிக்கொண்டதில்லை..”

“ சின்ன வயதில் இருந்தே எங்கள் பிரண்ட்ஸ் லீவுக்கு அவர்கள் அவர்கள்  சொந்த பந்தம்  வீட்டிற்கு போவார்கள், இல்லை யாராவது அவர்கள் வீட்டிற்கு வருவார்கள். லீவ் முடிந்து ஸ்கூல் போனால் நிறைய கதை இருக்கும் கேட்க, தாத்தா வாங்கி தந்தது, பாட்டி தந்தது , அத்தை மாமா வந்தாங்க, கசின்ஸ் வந்தாங்க  இது விளையாடினோம் அது விளையாடினோம் அது இது என்று நிறைய கேட்போம்“

“ நாங்களும் அமைதியா கொள்வோம். அப்பா இப்படி எதுவும் எங்களுக்கு ஏக்கம் வந்துவிட கூடாது என்றே  எங்காவது டூர் கூட்டி போவார்.. ஆனால்  மனதிற்குள் ஏன் நம் வீட்டிற்கு யாரும் வரவில்லை, நாமும் எந்த ஊருக்கும் போகவில்லை, சொந்தம் என்று  யாரும் நம்மை தேடி வரவில்லை என்று நிறைய யோசிப்போம், நானும் சிவாவும் நாங்களாக  பேசி எதாவது சமாதனம் ஆகிப்போம் .”

“ சொந்தம் இல்லவே இல்லை என்றால் கூட எதுவும் தெரியாது, சொந்தம் இருக்கிறது  , பூர்விகம் இருக்கிறது என்று தெரிந்தும் பிரிவிற்கான  காரணம் தெரியாமல்  இருப்பது  எவ்வளோ கொடுமை என்று எங்களுக்கு தான் தெரியும் அத்தான் “ என்று கூறும் பொழுதே அவளின் கண்களில் கண்ணீர்.

“ வேண்டாம் மதி உனக்கு கஷ்டமாக இருந்தால் எதுவும் சொல்ல வேண்டாம் ” 

“ கஷ்டம் என்று இல்லை , ஒரு சூழ்நிலையை அட்ஜஸ்ட் செய்வதை விட அதை  அப்படியே அக்செப்ட் செய்வதை என்னை பொறுத்தவரை பெஸ்ட் என்று நினைப்பேன்.. வீட்டில் ஒவ்வொரு நாளும் போன் அடிக்கும்போது எல்லாம் அம்மவின் முகத்தில் ஒரு ஆவல் இருக்கும். அதை நாங்கள் கண்டுபிடிக்க கூடாது என்று அவர்கள் படும் பாடு மிகவும் கஷ்டம்.. “

“ஒரு நாள் சிவா பொருக்க முடியாமல் கேட்டே விட்டான் எதையாவது எங்களிடம்  இருந்து நீயும் அப்பாவும் மறைகின்றீர்களா என்று.  அம்மாஅன்று முழுவதும்   அழுதபடியே இருந்தார்கள், ஆனால் அம்மாவோ அப்பாவோ ஒருதடவை கூட இங்கு இருப்பவர்கள்  பற்றி  தப்பாக பேசியது இல்ல“

“ அம்மாக்கு அவர்கள் குடும்பத்தை பற்றி  பேசும் போது எல்லாம் முகத்தில் அவ்வளோ சந்தோசம் கொப்பளிக்கும்.. இதை எல்லாம் பார்த்து நான் நினைப்பேன் எங்கள் சொந்தங்கள் எங்கே இருந்தாலும் சரி அவர்களுடன்  சேர்த்து வை கடவுளே என்று  .”

“ இங்கு அம்மாட்சி பேசினதுக்கு பிறகு நானோ இல்லை சிவாவோ எங்கள் வருத்தத்தை வெளியே சொல்லி  இருந்தால், நிச்சயமாய் இங்கு எல்லாருக்கும் வருத்தம் வரும். அதை தவிர்க்க இங்கு இந்த சூழ்நிலையை நான் அப்படியே ஏற்றுக்கொண்டு  என்னை இயல்பாக்கிவிட்டேன்” என்று கூறி சிறு முறுவல் பூத்தாள்..

சிரித்து வம்பிலுப்பவள், இவளின் மனதில் ஆழமான காயங்கள் அதை சிறிதும் வெளிக்காட்டி கொல்லாமல் யாரையும் குற்றமும் கூறாமல் எவ்வளவு அழகாக அனைத்தையும் கையால்கிறாள் என்று மனதினுள் மெச்சிக்கொண்டான்..

வசுமதி ஒரு சிறு அமைதின் பின் சரி நான் செல்கிறேன் என்று கூறி கிளம்ப தயாரானாள்..

அப்பொழுது சிவா அங்கே வந்தான்.. “ உங்கள் இருவரையும் கிழே அழைத்தார்கள் ”  என்று கூறி தன் அக்காவின் கையை பார்த்தான் பிரேஸ்லெட் இருக்கவும் ஒரு சிறு புன்னகைக்கு பின் ,

“ அத்தான் உங்களுக்கு அடி, பலத்த காயம் அப்படி எதுவும் படவில்லையே??”  என்று கேட்டான் , கதிரவன் வசுமதியை பார்த்து சிரிக்க தொடங்கினான், வசுமதி சிவாவை பார்த்து முறைக்க தொடங்கினாள்.

 “சிவா ஆனாலும் அநியாயம்டா எப்போ பார்த்தாலும் மதியை சீண்டிக்கொண்டே  இருக்க “ என்று கதிர் கூறவும் சிவா திகைத்து பார்த்தான்..

“   நன்றாய் கேளுங்கள் கதிர் “ என்று தன் தம்பியை பார்த்து பழிப்பு காட்டினாள்..

“ என்ன உனக்கு கதிர் ?? உங்களுக்கு மதியா ..???? சிறிது நேரம் முன்பு  இரண்டு பேரும் சண்டைகோழிகள் போல்  இருந்தது என்ன ??இப்போ என்ன ஆனது  இரண்டு பேருக்கும்??”  என்று கேட்டான் ..

“ அது ஒன்றும்  இல்லை இப்போ சமாதன கோழிகள் ஆகிவிட்டோம் அவ்வளோதான்”  என்று கூறி சிரித்தான் கதிரவன்.

“ ஹ்ம்ம் இப்படி நீங்களும் அவள் பக்கம் சாய்ந்துவிட்டீர்களே அத்தான். அங்கு  சென்னையில் இவளுக்கு என்று ஒரு பட்டாளமே இருக்கிறது.  அதிலும் ராம் அண்ணா இருக்கிறாரே,  இவள் காலால் செய்ய சொல்வதை அவர் தலையால் செய்வார் ”  என்றான்…

ராம் என்ற பெயரை கேட்டது கதிரவன் முகம் சற்று இருகியதோ, இல்லை கறுத்து சிறுத்ததோ என்று எண்ணினாள் வசுமதி. கண நேரத்தில் தன் முகத்தை மாற்றிக்கொண்டு இயல்பாக வைத்துக்கொண்டான்..

“ சிவா இப்படி அறையும் குறையுமாய் பேசாதே  என்று எத்தனை தடவை உனக்கு சொல்வது. அது கதிர், அங்கு  அப்பாவின் பார்ட்னர் மகன் தான் ராம், அவனும் சிவில் தான் என் சீனியர் வேறு ஆகையால் நல்ல பழக்கம் ..” 

“ நாங்கள் இருவரும் அப்பா ஆபிசில் தான் ட்ரைனிங் எடுக்கிறோம்”  என்று எதோ அவன் தவறாக நினைத்து விடுவானோ என்ற அவசரத்தில் இவள் விளக்கம் கூற தொடங்கினாள்.

கதிரவன் “ ஓ”  என்று ஒற்றை வார்த்தையுடன் பதில் முடித்துவிட்டான்..

சிவா இருவரையும் சற்று வித்யாசமாக பார்த்தான் அதிலும் வசுமதியின் பதற்றம் , வேகமாக விளக்கம் கூறியது எல்லாமே அவனுக்கு வித்யாசமாக இருந்தது.  கதிரவன் முன்னே செல்ல , இருவரும் அவனை தொடர்ந்து சென்றனர்..

“ உன்னை யாரடா ராம் பற்றி எல்லாம் பேச சொன்னது ??” என்று தன் தம்பியை கடிந்து கொண்டே இறங்கி வந்தாள். அதே நேரம் பார்த்து சண்முகநாதன்

“ சுமதிமா ராம் போன் செய்தான். உனக்கும் செய்தானாமே நீ எடுக்கவில்லை என்று   சொன்னான் உன்னிடம்  எதோ ஒரு பைல் குடுத்தானாம் அது எங்கே என்று   கேட்டான்??”

“ அந்த பைலை அவன் ஷெல்பில் வைத்துட்டேன்பா, நானே அவனுக்கு பிறகு போன் செய்துகொள்கிறேன் ” என்றவாறே திரும்பினாள் கதிரவன் அவளை பார்த்துக்கொண்டு நின்றான். அவன் முகத்தில் எந்த உணர்வுகளையும் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் அவனின் அந்த பார்வை அவள் மனதில் எதோ ஒரு பயத்தை உண்டு பண்ணியது.

கதிரவனின் அந்த மாற்றத்தையும் வசுமதியின் பதற்றத்தையும் சிவாவும் அன்னபூரணியும் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள்..

“ வந்த ஒரே நாளில்  அப்படி என்ன ஆனது இவர்களுக்கு??”  என்று எண்ணினான் சிவா. ஆனால் அன்னபூரனியோ மனதினுள் தன் பேரனையும் பேத்தியையும் எண்ணி சிரித்துக்கொண்டார்.

சிறிது நேரம் கழித்து வசுமதி சிவாவின் அறைக்கு வந்தாள், “சிவா உன் போன் குடு என் போனில் சார்ஜ் இல்லை, ராம்க்கு பைல் எங்கே இருக்கு என்று சொல்ல வேண்டும் ” 

“ வசுக்கா நான் அப்பொழுதே மெசேஜ் பண்ணிவிட்டேன்“ என்றான் சிவா ..

“ ஓ சரி டா, இல்லை  என்றால் அவன் என்னை உண்டு இல்லை என்று  ஆக்கிவிடுவான் ”  என்று கூறும் போதே கதிரவன் அங்கு வந்தான்..

வசுமதிக்கு ஒரு நிமிடம் முச்சு நின்று பின் வந்தது. இவன் நாம் சாதரணமாக பேசியதை தவறாக புரிந்து கொண்டானோ என்று யோசனையில் இருந்தாள்..

“ சிவா நான் தோட்டத்திற்கு செல்கிறேன் உனக்கு அலுப்பாய் இல்லை என்றால்   வருகிறாயா என்று கேட்க வந்தேன் “ என்று கதிரவன் சிவாவை பார்த்து மட்டுமே பேசினான்.. அவள் அங்கு இருப்பதே கண்டு கொள்ளவில்லை..

“ அலுப்பெல்லாம் இல்லை அத்தான் நான் வருகிறேன் “ என்று கூறியவன் ,

“ ஹே சுமதி உனக்கு தான் இந்த தோப்பு தொறவு எல்லாம் பிடிக்குமே நீயும் வா “ என்றான்

வசுமதி ஆவலாக கதிரவனின் முகம் பார்த்தாள். ஆனால் அவனோ “ இல்லை சிவா வீட்டில் லேடீஸ் யாரும் அங்கு வரவில்லை, ஒதுக்கு புறமான இடம். ஒரு நாள் வீட்டில் அனைவரும் போகும் போது வசுமதி வரட்டும் “ என்று கூறினான் ..

வசுமதியின் முகம் சிறுத்து விட்டது “ ஏதோ தப்பாய் நினைத்துவிட்டான்.. சிறிது  நேரம் முன்னாடி வரைக்கும் மதியா இருந்தவள்  இப்போ  வசுமதி ஆகிவிட்டாளா”  என்று எண்ணி மனதில் கலக்கம் கொண்டாள்

மெதுவாக அவளின் அறைக்கு வந்து மெத்தையில்சாய்ந்து அமர்ந்தாள். “ என்ன ஆனது   எனக்கு, நான் ஏன் இப்படி மனதை போட்டு குழம்பி கொள்கிறேன்.. அவன் என்ன நினைத்தால் எனக்கு என்ன வந்தது??  ராம் எனக்கு சின்ன வயதில் இருந்து பிரன்ட்,  எங்களுக்குள்  நல்ல நட்பு மட்டுமே.  அதை நான் யாருக்கும் நிரூபணம் செய்ய தேவை இல்லை”  என்று எண்ணினாள் ..

தன் சிந்தைனையில் ஆழ்ந்தவள் அப்படியே உறங்கி விட்டாள்.. காமாட்சி தான் வந்து தன் நாத்தியின் மகளை எழுப்பினார், “ வசும்மா எழுந்திரு கண்ணா மணி மதியம் இரண்டு ஆகிறது சாப்பிட வேண்டாமா ??? எழுந்திரு “

“ என்ன இரண்டா அவ்வளோ நேரம் தூங்கிவிட்டேனா??? அத்தை நீங்க ஏன் படி ஏறி வரவேண்டும்??  எனக்கு ஒரு போன் செய்து கூப்பிட்டு இருக்கலாமே இல்லை சிவாகிட்ட சொல்லி இருக்கலாமே”  என்று கூறினாள்..

“ இல்லை கண்ணம்மா சிவாவும் கதிரவனும் இன்னும் வரவில்லை, அவர்களுக்கு சாப்பாடு தோட்டத்திற்கே குடுத்து விட்டேன்.. உன் போன் ஆபில் இருக்கு போல.  அதான் நானே நேரில் வந்தேன் “

பின் ஏதோ யோசித்தவர் “ கண்ணம்மா கதிரவன் ஒற்றை பிள்ளையாய் வளர்ந்தவன், அவனுமே மனதிற்குள் சகோதர பாசத்திற்கு ஏங்கினவன் தான்.. இங்கு அவன் சொல்லுக்கு மறுப்பு இருக்காது, எல்லாரையும் தட்டிக்கொடுத்து வேலை வாங்குபவன் ஆனால் அவனிடம் யாரும் நெருங்க முடியாத ஒரு வட்டத்தை அவனே போட்டுக்கொண்டான்” 

“காலையில்  உன்னிடமும் சிவாவிடமும் அவன் பழகியது எனக்கும் உன் அம்மாச்சிக்கும் மனத்திற்கு நிம்மதியாய் இருக்கு கண்ணம்மா. அவன்  மிகவும் பாசமானவன் தான் ஆனால் என்ன பாசத்தை கொஞ்சம் முரட்டு தனமாக வெளிப்படுத்துவான்.. பழகிப்பார்த்தால் அவன் மனம்  புரிந்துவிடும் ” 

“ கொஞ்சம் அவனுக்கு பொஸசிவ்நெஸ் ஜாஸ்தி.. உன்னிடம் ஏதாவது கோவமாக  நடந்தால்  அதை எல்லாம் மனசில் வைக்காதே சரியா ??” என்று கூறி தலையை தடவிக்கொடுத்தார். 

“ இல்லை அத்தை நான் அப்படி எல்லாம் ஒன்றும் நினைக்க மாட்டேன் உறவுகளின் அருமை எனக்கும் தெரியும். நீங்கள் எதுவும் கவலை பட வேண்டாம் ”  என்றாள்.

காமாட்சி கூறியதை எண்ணிய படியே அவளும் முகம் கழுவி வேறு உடை  அணிந்து வந்தாள்.. சென்னையில் வீட்டிலிருக்கும் பொழுது எப்பொழுதும் அவள் லெகின்ஸ், குர்தா, ஸ்கர்ட் இப்படி தான் அணிவாள், அதே பழக்கத்திற்கு தான் அவள் இவ்வாறு கிழே வந்தாள் ஆனால் அவளுக்கு தெரியவில்லை இதுவே கதிரவனுக்கும் அவளுக்கும் ஒரு சண்டை வர காரணமாகும் என்று..

கிழே வந்து உண்டுவிட்டு சற்று நேரம் தன் அம்மா பாட்டி அத்தை இடம் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தாள்.. சிறிது நேரத்தில் கதிரவனும் சிவாவும் வீட்டிற்கு வந்தனர், அவளை பார்த்ததும் சிவா

“ ஹே பாசுமதி தோட்டம்  சூப்பர் தெரியுமா.. உனக்கு மிகவும் பிடிக்கும், இப்போ தான் மா மரத்தில பூ எல்லாம் பூக்க ஆரம்பிக்கிறது. அதன் வாசனையே வாவ் வெரி நைஸ்”  என்று தன் அக்காவிடம் பேசிக்கொண்டு இருந்தான்..

அப்பொழுதுதான் கதிரவன் அவளை கவனித்தான், பார்த்ததும் முகம் கடினமுற்றது, திரும்பி தன் அம்மாவை பார்த்து “ அம்மா ஒரு நிமிஷம் வாங்க”  என்று கூறி பின்புறம் சென்றான் ..

“ அம்மா என்ன அம்மா நீங்கள்  வசுமதிகிட்ட  எதுவும் சொல்லவில்லையா.. இப்படி ஒரு டிரஸ் போட்டு நடு ஹாலில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கா, அவளுக்கு தான் தெரியவில்லை உங்களுக்கு தெரியாதா இங்கு வீட்டிற்கு எப்ப வேண்டும் என்றாலும் பண்ணையில்  இருந்து வெளி ஆட்கள் வருவார்கள் என்று.  இப்படி ஒரு ட்ரெஸ்  போட்டு இருந்தால் எல்லாம் நம்மை பற்றி எல்லாரும் என்ன நினைப்பார்கள்  “ என்று கூறினான் ..

அதற்கு அவன் அம்மா “ இல்லை ராஜா இன்று தான் வந்திருக்கா, அதிலும் பட்டினத்தில் வளர்ந்தவள், டிரஸ் விஷயத்தில் தலையிட்டால்  பிடிக்குமோ பிடிக்காதோ. கொஞ்ச நாள் போகட்டும் கண்ணா அவளே இங்கு இருக்கும் பழக்கத்தை புரிந்து நடந்துப்பா ”  என்று மென்மையாக கூறினார் ..

“ அம்மா அவள் பெண் தானே?? சொன்னால் புரியாமல் இருக்க அவள் என்ன முட்டாளா ?? இது ஒன்றும் சென்னை இல்லை அங்கு  சாதரணமாக மாடர்ன் டிரஸ் போடுவது வழக்கம், ஆனால் இங்கு அப்படி இல்லையே. போய்கூறுங்கள்  இப்படி எல்லாம் காட்சி தர வேண்டாம் என்று ”  என்று கூறி சென்று விட்டான் கோவமாக.. காமாட்சி மனதில் சங்கடமாக இருந்தது ..

இதை அனைத்தையும் சிவாவிற்கு தண்ணீர் எடுக்க சமையல் அறை வந்த வசுமதி கேட்டுவிட்டாள்..,

“ என்ன நினைத்துவிட்டான். காட்சி தருகிறேனா ??? நானா ?? கண்ணை மூடிக்கொண்டு  போக வேண்டியது தானே “ என்று கோவம் வந்தது.. வேகமாக தன் அறைக்கு சென்று உடை மாற்றிக்கொண்டு வசுமதி வெளியே வரவும் , கதிரவன் அவன் அறையிலிருந்து வெளியே வரவும் சரியாக இருந்தது..

இதை இருவருமே சற்றும் எதிர் பார்கவில்லை, கதிரவன் அவளை கண்டதும் ஒரு நிமிடம் திகைத்து பின் கிழே இறங்க போனான் , “ ஒரு நிமிஷம் ”  என்று அவள் குரல் கேட்கவும் நின்றான் ஆனால் திரும்ப வில்லை ..

அவளும் அவன் திரும்பி பேசவேண்டுமென்பதை எதிர் பார்கவில்லை போல “ நான் சிட்டியில் பிறந்து வளர்ந்தவள் தான் ஆனால்  பண்பாடு , நாகரிகம் எல்லாம் எனக்கும் நன்றாகவே தெரியும், எந்த பெண்ணும் தான் ஒரு காட்சி பொருளாய் இருப்பதை   விரும்ப மாட்டாள் ..”

“ எனக்கு இங்கு இருக்கும் பழக்க வழக்கம் எதுவும் தெரியாது, ஆனால் அதையே தன்மையாக நல்லவிதமாக எடுத்து சொன்னால்  புரிந்துக்க தெரியாத முட்டாள் இல்லை. நான் சாதரணமாய் தான் அந்த டிரஸ் போட்டேன், இங்கு யார் யார் வருவார்கள் என்று எனக்கு தெரியாது. அதுமில்லாமல் நாங்கள் ஊரிலிருந்து  அவசரமாக கிளம்பி வந்தோம், இங்கு வீட்டில் போடுவது மாதிரி சாதாரணமாய்  எந்த சுடிதாரும் எடுத்து வரவில்லை.  பிறகு இன்னொரு விஷயம் நான் இருக்கிற இடம் எதுவாக இருந்தாலும் சரி பிறர் கண்ணை உறுத்தாத மாதிரி  தான் நான் ட்ரெஸ் போடுவேன் “ என்று சற்று காரமாக கூறினாள் ..

அவன் திரும்பி சற்று ஏளனமாக அவளை பார்த்து “ ஒட்டுக்கேட்டாய் போல”  என்று நக்கலாக வினவினான்..

அவள் “ இங்கு பாருங்க அத்தான் நான் ஒன்றும் வேண்டும் என்றே  உங்கள் பின்னால்  வந்து எதையும் கேட்கவில்லை, சிவா தண்ணீர் கேட்டான் அதான் நான் கிட்சேன் வந்தேன் அப்போ தான் உங்கள் பேச்சு என் காதில் விழுந்தது ”  என்று கோவமாக கூறினாள்..

“ பின் இன்னொரு விஷயம் என்னை பத்தின விசயங்கலை நீங்கள் என்னிடம் சொல்லலாம். நான் ஒன்றும் தப்பாக நினைக்கமாட்டேன்.. எனக்கு எப்பொழுதும் நேரிடையாக பேசுபவர்களை தான் பிடிக்கும்.. எதையும் சொல்லும் விதம் என்று  ஒன்று  உள்ளது”  என்று அவனிடம் சொல்லி விட்டு வேகமாக கிழே இறங்கி போனாள்..

அவள் முகத்தில் கோவம் அப்பட்டமாக தெரிந்தது, அவளின் பின் கதிரவனும் கீழ் இறங்கி வந்தான்.. அவன் முகத்திலும் கோவம் இருந்தது.. காமாட்சி புரிந்துக்கொண்டார் சரி இருவருக்கும் இடையே காரசாரமாக எதோ விவாதம் நடந்துள்ளது.

வசுமதியின் முகத்தை கலக்கமாக பார்த்தார் , அத்தை என்று அவரிடம் வந்து அவரின் கைகளை பிடித்து கொண்டார் , “ அத்தை நீங்கள் எதுவும் கவலை பட வேண்டாம் நீங்க எதையும் தயங்காமல் என்னிடம் நேரடியாய் பேசுங்கள் சரியா. நான் அதை புரிந்து நடந்துப்பேன் “ என்று ஆதரவாக கூறினாள்..

அவரும் சிரித்து கொண்டே அவளின் முகத்தை வருடி “ ஒரு நிமிஷம்  கலங்கிவிட்டேன் வசும்மா, அவன் சொல்வது எல்லாம் நன்மைக்கு தான் விளையும் ஆனால்  அவன் பேசுகிற விதம் தான் கொஞ்சம் முரடாய் இருக்கும் கண்ணம்மா. ஆனால்  அவனை புரிந்துகொண்டால் எல்லாம்  சரி என்றே   தோன்றும் ”  என்றார் ..

இவள் ஒரு புன்னகை மட்டுமே பதிலாக தந்தாள்.. இவை அனைத்தையும் கதிரவன் பார்த்தும் பார்க்காதது போல் கவனித்து கொண்டே தான் இருதான்.. அவனுக்கே தெரியவில்லை வசுமதயிடம் ஏன் கோவம் என்று,

 “ காலையில்  அவள் என் ரூம்க்கு வந்து பேசும் பொது எல்லாம் நன்றாய் தானே இருந்தது. பிறகு ஏன் அவமேல் இவ்வளோ காட்டம்..”

“ அந்த ராம் அவன் யார் என்றே தெரியவில்லை, மதி வேறு எதோ விளக்கம் சொன்னாள். அதுசரி இவள்  யாருடன்  பழகினால்  எனக்கு என்ன?? என்னை ஏன் இந்த விஷயம் இவ்வளோ பாதிக்கிறது, அம்மாவிடம் வேறு கத்திவிட்டேன்.. ச்சே வந்த ஒரே நாளில் இவள்  என்னை இப்படி படுத்துகிறாலே. சரியான காட்டுப்பூனை… என்னிடம் மட்டும் தான் இவள் முறைப்பு கடுப்பு எல்லாம் அம்மாவிடம் எப்படி குழையுறா “ என்று அவனுக்கு மனதினுள் எரிச்சாலக வந்தது ..

 

Advertisement