நீங்க நல்ல மாமியாரா இருப்பீங்க பானுக்கா. சந்தேகமே வேண்டாம். முகம் தெரியா எங்களுடனேயே எவ்வளவு அன்பா இருக்கீங்க. கண்டிபா உங்க மருமகளும் உங்களுடன் அன்பா இருப்பாங்க. எனக்கும் மூன்று மருமகனும் ஒரேயொரு மருமகளும் வரவேணும் பார்ப்போம் எப்படியென்று.சங்கீதாவைப் போல ஒரு நல்ல அருமையான மாமியாராக இருக்கணுமுன்னு எனக்கும் ஆசை வந்து விட்டதுப்பா
என் மாமியாரிடம் நான் கஷ்டப்பட்டது போல வரப் போகும் என் மருமகள் கஷ்டப்படக் கூடாதுன்னு நானும் நினைக்கிறேன்
பார்ப்போம்
கடவுளின் அருள் எப்படின்னு
எனக்கு ரொம்பவே பிடித்த இன்னுமொரு அருமையான நாவல் இந்த "தள்ளிப் போகாதே நிலவே" நாவல்
அந்த டான்ஸ் டீச்சர், வக்கீல் பொண்ணு, சாதனா etc., போல இந்த ஷ்ரேயாவும் சூப்பர்
மீண்டும் அடுத்தொரு அழகிய நாவலுடன் சீக்கிரமா வாங்க, ரம்யா டியர்