Advertisement

 பந்தம் – 2

“வாவ்… பேபி…. மை லவ்…. பைனலி என்னை தேடி வந்தாச்சு…” என்று கைகளை கட்டிக்கொண்டு ட்ரிம் செய்த மீசையோடும், கிளீன் சேவ் முகத்தோடும், இருக்கிறதா இல்லையா என்றே தெரியாத கண் கண்ணாடியோடும், மஸ்லின் ஜிப்பாவில் நின்றிருந்தவனை கண்டு இன்னும் கூட அதிர்ச்சி விலகவில்லை உமாவிற்கு.

இன்ப அதிர்ச்சியாகவும் இருந்தது.

‘இவனா… இவன் எங்கே இங்கே.. கேரளாவில் தானே இருந்தான் பின்னெப்படி சென்னையில்.. ஐயோ உமா இருந்திருந்து இவனிடம் தானா நீ வர வேண்டும்..’ என்று அவள் மனம் மட்டும் சிந்தனை ஓட்டத்தில் இருக்க, உடலோ மரத்து போய் அப்படியே நின்றிருந்தது.

“ஹலோ… உம்ஸ்…” என்று அவள் முகத்தின் நேரே கைகளை ஆட்ட, அப்பொழுதும் தெளியவில்லை அவள்.

“உம்ஸ்…” என்று லேசாய் அவள் தோள் தொட,

“ஹா..!!” என்று சுய உணர்விற்கு வந்தவளுக்கு இன்னுமே கூட தன் கண் முன்னே நிற்பது அவன்தானா என்ற ஆச்சரியம்.

“அடடா.. என்ன டியர் நீ இப்படி பார்த்துட்டே இருக்க, நான் தான்.. நானே தான்.. போடா நீயும் உன் லவ்வும்னு நீ சொன்ன அதே கோடீஸ்வரன் தான்.. ” என்று தனது ட்ரேட் மார்க் புன்னகையோடு சொல்லியவனை வெறித்து பார்த்தாள்.

பின்னே இன்னும் எதையுமே மறக்காமல் அப்படியே சொல்கிறானே.. எதிர்பார்க்காமல் அவனை கண்டத்தில் அதிர்ச்சி தான் என்றாலும், உமாவின் மனதின் அடி ஆழத்தில் ‘ஹப்பாடி ஒருவழியாய் உன்னை கண்டேனே…’ என்ற நிம்மதியும் இருந்தது.  

அவளின் அதிரச்சி எல்லாம் ஒருசில நொடிகள் தான். தன்னை தானே சுதாரித்துக் கொண்டாள். ‘ஆமா இவன் அப்படியே தினம் தினம் என்னை நினைத்து உருகிட்டான்.. அப்படியே தேடி பின்னாடியே வந்துட்டான்…’ என்று தோன்ற,  

“ஆமாமா.. நான் வேண்டாம் சொன்னதும் அப்படியே சார் வருத்தப்பட்டு, வேதனைப்பட்டு, துக்கப்பட்டு, துன்பப்பட்டு சோகமா ஆகிட்டீங்க… இதோ அடுத்த பொண்ணு பார்க்க ரெடியாகிட்டீங்க தானே…” என்று சீறியவளை,

இப்பொழுதும் புன்னகை மாறா முகத்துடன் தான் பார்த்தான் கோடீஸ்வரன். ஆம் அவனது பெயரே அதுதான்.

அவனது சிரிப்பு இன்னும் அவளுக்கு கோவத்தை மூட்ட, முகம் இன்னும் சிவக்கத் தொடங்க, அதெல்லாம் அவனுக்கு இன்னும் இன்னும் உவகையை அளித்தது.

“ஹ்ம்ம் பட்டு சேலை.. தலை நிறைய பூ.. நகை வேற… இதே போலத்தான் அன்னிக்கும் என் முன்னாடி வந்து நின்ன… இன்னிக்கும் இதே போலத்தான் வந்து நிற்கிற.. ஒருவேளை எனக்கு பொண்ணு பார்க்கிறாங்கன்னு தெரிஞ்சு பொண்ணு கெட்டப்லயே வந்துட்டியா உம்ஸ்.. ” என்று அவனும் நக்கல் அடிக்க,

“ச்சே… இன்னும் நீங்க திருந்தவே இல்லையா.. இது உங்க வீடு, நீங்க தான் அந்த மாப்பிள்ளைன்னு தெரிஞ்சு இருந்தா வந்திருக்கவே மாட்டேன்…” என்று கத்தியவள், வந்த வேலையை மறந்து கிளம்ப எத்தனித்தாள்.

அதற்குள் அவனோ வேகமாய் சென்று கதவை அடைத்து இருந்தான்.

“ஹேய்..!! என்ன பண்றீங்க??”

“டிஸ்டர்பன்ஸ் இருக்க கூடாதுல உம்ஸ் அதான்.. ஓகே ஸ்டார்ட்…” என்று அவள் முன்னே மீண்டும் கை கட்டி நிற்க,

“என்ன ???” என்று குழப்பமாய் அவனையே காண,

“நீ தான் எதோ மாப்பிள்ளை பார்க்க வந்தேன்னு சொன்ன. உனக்கான மாப்பிள்ளை நான் தான் அதுல எந்த மாற்றமும் இல்லை. பட் நீ வந்த விசயம் என்னவோ? அது தெரியாதே.. அதான் சொல்லுன்னு சொன்னேன்…” என்றபடி அவளது கரங்களை பிடித்து இழுத்து சென்று அமரவைத்தான்.

அவளருகே அமர்ந்திட மனம் ஆசைகொன்டாலும், எங்கே அமர்ந்தால் மீண்டும் ஏதாவது பேசுவாள் என்றெண்ணி எதிரே இருந்த இருக்கையில் சென்றமர்ந்தான். கோடீஸ்வரன் அப்படி செய்தது ஒருப்பக்கம் நிம்மதியாகவும் மறுபக்கம் சிறு ஏமாற்றமாகவும் இருந்தது உமாவிற்கு.

‘வந்த விஷயம்…’ என்று அவன் சொன்ன பிறகே தான் வந்ததற்கான காரணம் நினைவில் வர, ‘ஐயோ ஒருநிமிஷம் சுசிய மறந்துட்டோமே..’ என்று தோன்றியது.

உமாவின் முகத்தில் தெரிந்த மாற்றங்களை தான் பார்த்துக் கொண்டிருந்தான் கோடீஸ்வரன்.

‘இவ சும்மா யோசிச்சாலே ஏட்டிக்கு போட்டியா பேசுவா.. இதுல சீரியஸா வேற யோசிக்கிறாளே..’ என்று எண்ணியவன்,

‘விடக்கூடாதே..’ என்று முடிவெடுத்து,

“அப்புறம் உம்ஸ்.. வந்த விஷயம் என்ன?? சொல்லிட்டு கிளம்புனா கொஞ்சம் நல்லாருக்கும். எனக்கும் வேலை இருக்கு. அதுவுமில்லாம இப்படி யாருமில்லாத வீட்ல ஒரு பொண்ணு எனக்கூட தனியா.. நோ நோ.. எனக்கே ஒருமாதிரி இருக்கு…” என்று முகத்தை சுளித்து உடலை குலுக்க,

அவனது பாவனையில் சிரிப்பு வந்தாலும் அதை கட்டுப்படுத்திக்கொண்டாள்.

உமாவின் மனமோ ‘நீயா டா அடுத்தவங்க நினைக்கிறதுக்கு எல்லாம் முக்கியத்துவம் குடுப்ப.. இன்னும் இவன் மாறவேயில்லை.. அப்படியேத்தான் இருக்கிறான். பிறகெப்படி இந்த பெண் பார்க்கும் படலம்…’ என்ற யோசனை ஓட, வேகமாய் தன் மனதை ஒருமுக படுத்தி வந்த வேலையை தொடங்கினாள்.

சுசியின் காதல், கிஷோரின் வேலை, வீட்டு நிலைமை என்று அனைத்தையும் சொல்ல,

“சோ நான் இப்போ என்ன செய்யணும்…” என்றான் அடிக்குரலில்.

“அது.. அது வந்து… பொண்ணு பார்க்க வரும் போது சுசிய பிடிக்கலைன்னு சொல்லணும்..” என்றவளின் கண்கள் மட்டும் நிமிர்ந்து அவனை காண்க,

“வொய்???” என்றான் புருவத்தை மட்டும் உயர்த்தி.

சொன்னதும் புரிந்துகொள்வான் ஆனால் என்ன வேண்டுமென்றே வம்பிழுப்பான் எப்படியாவது பேசி சம்மதிக்க வைத்துவிடலாம் என்று நம்பிக்கை சுசிக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை கோடீஸ்வரன் தான் என்று கண்டபின் உமா மனதில் நிரம்பவே இருந்தது.

ஆனால் அவன் ‘வொய்??’ என்ற ஒற்றை சொல்லில் அந்த நம்பிக்கையை மெல்ல மெல்ல துடைத்தான்.

“வொய்யா?? நான் இவ்வளோ சொல்றேன் பிறகும் வொய்னு கேட்டா எப்படி??” என்று உமா பொரிய,

“சி.. உம்ஸ்.. முதல்ல எனக்கு இந்த பெண் பார்க்கிற விசயமே அத்தனை இஷ்டமில்லை. அப்பா அம்மாக்காக சரின்னு சொன்னேன். பட் நீ இங்க வந்தே இருக்கலைனாலும் நான் அங்க வந்து பொண்ணை பிடிக்கலைன்னு தான் சொல்லிருப்பேன். பட் இப்போ….” என்றவன் ஒரு யோசனையோடு நாடியை தடவியபடி, கிண்டல் பார்வையோடு ஆவலாய் அவள் முகம் பார்க்க,

“என்ன இப்போ???” என்று காட்டமாய் குரல் கொடுத்தாள்.

“இப்போ…” என்று இழுத்தவன் ஹாயாக இருக்கையில் நன்றாய் சாய்ந்து, கால் மேல் கால் போட்டு,

“இப்போ, பழம் நழுவி பாலில் விழுந்து அது நழுவி என் வாயில் விழுந்த கதை தான் உம்ஸ்…” என்று மேலும் சிரிக்க,

“ம்ம்ச் என்னை அப்படி கூப்பிட்டு தொலைக்காதீங்க…” என்று கடுகடுத்தாள்.

அவனோ “சரி சரி.. நீ சொல்றதை செய்தா எனக்கென்ன லாபம்??” என்று அடுத்த டீலிங் பேச,

“என்னது லாபமா ??” என்று அதிர்ந்தாள் உமா.

“எஸ் டியர்.. ஆக்சுவலி உன் சிஸ்டர் சுசிக்கு நோ சொல்ற ஐடியால தான் இருந்தேன். ஆனா பாரு பேபி, சுசி உன் சொந்தம்னு தெரியாதே. அவ லவ்வுக்காக நீ இவ்வளோ தூரம் வருவன்னு தெரியாதே..” என்று நீட்டி முழக்க,

“ம்ம்ச் சொல்ல வர்றதை சீக்கிரம் சொல்ல முடியுமா??” என்று முறைத்தாள்.

“சரி சரி கூல்… நான் நோ சொல்றதால சுசிக்கு அவள் லவ் கிடைக்கும் பட் எனக்கு என்ன கிடைக்கும்?? அவ்வளோ தூரம் வந்திட்டு நான் வெறுங்கையை வீசிட்டு வர முடியுமா??”

“சோ…..”

“சோ… சிம்பிள்.. எனக்கு என் லவ் கிடைக்கும்னு சொல்லு நான் சுசி லவ்வுக்கு ஹெல்ப் பண்றேன்…”

இவ்வளவுதான் இதற்குமேல் ஒன்றுமில்லை என்று சொல்லி முடித்துவிட்டான். ஆனால் இவன் இப்படிதான் சொல்வான் என்று உமா இப்பொழுது தான் யோசித்திருந்தாள் போல. அவனை பற்றி அவளுக்கு தெரியாதா என்ன. அவனை விட மிக சாதாரணமாய் அமர்ந்துகொண்டு,

“ஹ்ம்ம் Mr.கோடீஸ்வரன். இதுக்கு நான் நோ சொன்னா..??” என்று லேசாய் புன்னகைக்க,

“நோ பிராப்ளம்.. என்ன செய்யணுமோ அதை நான் செய்வேன்..” என்றவனின் குரலில் அத்தனை உறுதி.

கோடீஸ்வரன் நிச்சயமாய் சுசிக்கு சரியென்று சொல்லமாட்டான் என்ற எண்ணம் இருந்தாலும் இவன் தன்னை முன்னிட்டு வேறெதுவும் பிரச்சனை கிளப்புவானோ என்று எண்ண எழ,

“என்ன செய்வீங்க??” என்றாள் ஒருமாதிரி பதற்றமாய்.

“ஹா… அது சீக்ரெட்.. சொல்லிட்டா சஸ்பென்ஸ் போயிடாது..”

“ம்ம்ச் இங்க பாருங்க.. எது பண்ணாலும் கொஞ்சம் யோசிச்சு பண்ணுங்க.. நம்ம விசயத்துல தேவையில்லாம சுசி பாதிக்கப்பட கூடாது…”

“அடடா.. நான் என்ன அவ்வளோ டெர்ரரா?? என்னோட டார்கெட் நீ இருக்கும் போது தென் வொய் சுசிய பத்தி நினைக்க போறேன். ஆனா…” என்று தன் பேச்சை நிறுத்தியவன்,

அவள் இவனையே கூர்ந்து பார்ப்பதை பார்த்து,

“ஆனா… நான் சுசியை பத்தி நினைக்காம இருக்கிறது உன் கையில் தான் உம்ஸ் இருக்கு…” என்று கூறி முடித்தான்.

“ப்ளாக் மெயிலா???”

“நோ நோ.. முடிவ உன் கையில் விட்டுட்டேன்.. அவ்வளோதான்..” என்றவன்,

“ச்சோ.. பார்த்தியா உம்ஸ்… உன்னை பார்த்த சந்தோசம்ல உன்னை கவனிக்க கூட மறந்துட்டேன். சரி என்ன வேணும்?? காபி ஆர் ஜூஸ்..?? உனக்கு எப்பவுமே பிரெஷ் ஜூஸ் தானே பிடிக்கும்…” என்றவன் பேசியபடியே சென்று பிரிட்ஜை திறக்க,

“எனக்கு ஒன்னும் வேணாம்.. நான் கிளம்பறேன்..” என்று எழுந்தாள்.

“ஹேய் இரு.. பர்ஸ்ட் டைம் வந்திருக்க.. எதா குடி…” என்று நிஜமான அக்கறையோடு சொல்ல, அவளுக்கு இன்னும் அவனை எண்ணி வியப்பாய் தான் இருந்தது.

இன்னும் அப்படியே தான் இருக்கிறான். கொஞ்சம் கூட மாறவில்லை. பழக்கவழக்கம், பேச்சு பார்வை எதுவுமே மாறவில்லை. எப்படி முடிகிறது இவனால், ஒருவேளை அவன் சொல்வது போல் நிஜமாகவே அவன் மனதில் இன்னும் தான் இருக்கிறோமோ?? என்று சிந்தித்தவள் தான் வந்து வெகு நேரம் ஆனதை உணர்ந்து,

“இல்லை இருக்கட்டும்.. நான் சொன்னதை கொஞ்சம் யோசிங்க..” என்றுவிட்டு கிளம்பிவிட்டாள்.

உமாவிற்கே தான் என்ன மாதிரி உணர்கிறோம் என்று தெரியவில்லை. கோடீஸ்வரனை கண்டதும் மகிழ்ச்சியா இல்லை அதிர்ச்சியா என்றே தெரியவில்லை.

ஆனால் இது எதிர்பாரா சந்திப்பு. சிறிதும் கூட எதிர்பாரா சந்திப்பு.

அடுத்தது என்ன நடக்குமோ என்ற எண்ணம் மனதில் பரவியிருக்க, எப்படி வீடு வந்தாள் என்று தெரியவில்லை. நல்லவேளை வீட்டிற்கு இன்னும் யாரும் வந்து சேரவில்லை.  எப்படியும் மாலை ஆகும்.

அதற்குள் நாம் வந்தது நல்லது இல்லையென்றால் ஆயிரம் கேள்வி வரும் என்று யோசித்தபடி ஒரு குளியலை போட்டுவிட்டு அமர்ந்திருக்க, அவளது அலைபேசி சிணுங்கியது.

சுசி தான்.

“சொல்லு டி…”

“என்னாச்சு மகி…”

“ஒன்னும் ஆகலை..” என்றவளுக்கு கோடீஸ்வரனை பற்றி சொல்ல மனம் வரவில்லை.

“ஏன் டி அப்போ அந்த மாப்பிள்ளை சரின்னு சொல்லலையா?? ஐயோ அப்போ நான் என்ன டி செய்றது??” என்று பதற்றமாய் பேச,

“ஷ்… சுசி… முதல்ல நான் பேசுறதை கேளு டி… எல்லாம் பேசிருக்கேன். யோசிக்கிறேன்னு சொல்லிருக்கார். நீ பயப்படாத பார்த்துப்போம்.. எதுக்கும் கிஷோர்க்கு ஒன்ஸ் பேசிடேன்…” என்று அவளை ஆறுதல் படுத்திவளுக்கு இன்னும் கூட அவள் மனம் சரியாகவில்லை.

‘கடவுளே.. இது என்ன?? இத்தனை நாள் கழிச்சு ஏன் நான் இவனை சந்திக்கணும்.. இது நல்லதுக்கா இல்லை வேறெதுக்குமா?? எதுவா இருந்தாலும் சரி. நடக்குறது நல்லதா நடக்கட்டும்..’ என்று இறைவனை வேண்டியவள் தங்கள் வீட்டினர் வருவதற்காக காத்திருந்தாள்.

ஆனால் அங்கே கோடீஸ்வரனோ தன் மகிழ்வை எப்படி யாரிடம் பகிர்வது என்றுகூட தெரியாமல் திக்குமுக்காடி போயிருந்தான்.

‘ஹப்பாடி… ஒருவழியா என் லவ் ஜெயிச்சிடுச்சு… என் உம்ஸ் என்னை தேடி வந்துட்டா.. வாவ்.. ஓ! காட்.. கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை.. பொண்ணு பார்க்கவே போக கூடாதுன்னு இருந்தேன். பட் நல்லவேளை உம்ஸ் வந்துட்டா….’ என்று சந்தோசமாய் தன் நினைவுகளை அவள் பின்னே ஓடவிட்டவன், எப்போதடா பெண் பார்க்க போவோம் என்று இருந்தது.

எப்படியாவது அந்த சூழலை தனக்கு சாதகமாய் மாற்றிவிடவே எண்ணியது அவனது காதல் கொண்ட மனம்.

உமா மகேஸ்வரி – கிட்டத்தட்ட இந்த ஒரு வருடமாகவே அவன் உறக்கம் கெடுத்தவள். கண்டதும் காதல் என்பார்களே அதுபோல தான். அவளை பார்த்த அடுத்து நொடியே.. இல்லை இல்லை அடுத்த நொடி கூட இல்லை அந்த நொடியே காதல் கடலில் தானாகவே விழுந்து விட்டான் கோடீஸ்வரன். 

அவள் பேர் தெரியாது, ஊர் தெரியாது, என்ன செய்கிறாள் என்று தெரியாது. ஆனாலும் மனம் இவள்தானடா உனக்கானவள் என்று கூப்பாடு போட, இதயமோ வேகமாய் பறந்து சென்று அவளிடம் தஞ்சம் புக, நரம்பு மண்டலம் எல்லாம் காதல் சுவரங்கள் வாசிக்க, கண்கள் அவளை மட்டுமே காணும் வேலையை செவ்வனே செய்தது.

கோடீஸ்வரன், உமாவை முதன்முதலில் சந்தித்தது ஒரு திருமணத்தில் தான். மணமகன் அவனது தோழன். உடன் பணிபுரிவனும் கூட. நண்பர்கள் கூட்டத்தில் பேச்சும் சிரிப்புமாய் அமர்ந்திருந்தவனை,

“மகி… மகி…” என்ற பெயர் வந்து ஓயாமல் தொல்லை செய்தது.

“டேய் எவன் டா அது மகி.. வந்து தொலைடா.. சும்மா நச்சு நச்சுனு… எரிச்சலா..” என்று திரும்பியவனின் கண்களில் வெண்பட்டு கட்டி, மல்லிகை சரம் சூடி, தேவதையென நடந்து வந்தவளை கண்டு இமைக்கத்தான் மறந்தான்.

“அட… மகி அவன் இல்லையா, அப்போ அவளா…” என்று எண்ணியவனின் மனமும் கண்களும் ஒன்றோடு ஒன்று கை குலுக்கிக்கொண்டு உமாவையே சுற்றி வந்தது.

அவனுக்கு தெரிந்தது எல்லாம் அவள் பெயர் மகி என்பது மட்டும் தான், ஆனால் மனமோ காதல் கடலில் பொத்தென்று விழுந்து, கல்யாணம், பிள்ளை குட்டி என்று கற்பனை செய்ய, அதற்கேற்றார் போல தேவதைகள் சுற்றி நின்று வயலின் வாசிக்க, அவனது கண்களோ அவன் தேவதையை மட்டுமே பார்த்தபடி இருந்தது. 

“டேய் கோடி… கோடி…” என்று அவன் நண்பர்கள் கூட்டம் இவனை உலுக்கி,

“என்ன டா அப்படியே பிரீஸ் ஆகி உட்கார்ந்திருக்க??” என்று கேட்க,

“ஹா நத்திங்…” என்று பதில் நண்பர்களிடம் சொன்னாலும்,

பார்வையெல்லாம் உமாவையே சுற்றி வர, அவளோ தன்னை இப்படி ஒருவன் வைத்த கண் வாங்காமல் பார்க்கிறான் என்பதே தெரியாமல் வந்துகொண்டு இருந்தாள்.

உமாவிற்கு சென்னையில் தான் வேலை. அவள் டீம் மேட் ஒருத்திக்கு கேராவில் திருமணம். அதனால் தன் குழுவோடு வந்திருந்தாள்.

சில பயணங்கள் நமக்கு மறக்க முடியாதவையாகிவிடும். சில பயணங்கள் கண்டிப்பாக நாம் மறந்தே ஆகவேண்டிய நிலையில் இருக்கும். ஆனால் ஒரு சில பயணங்கள் நம் வாழ்வை அடியோடு மாற்றிவிடும்.

அப்படித்தான் ஆனது கோடீஸ்வரன் மற்றும் உமாவிற்கு.  கேரளா பயணம் இருவருக்கும் காதல் பயணமாகியது.

 

 

Advertisement