Advertisement

தென்றல் 17

        அஷ்மியும் பிரசாத்தும் வந்துவிட விஷால்அவர்களிடம் சொல்லிக்கொண்டு அகிலாவை பார்த்து,

வாங்க அத்தை கிளம்பலாம்…” என்றான். இவர்கள்இருவரிடமும் தலையசைத்துவிட்டு விஷாலுடன்நடந்தார் அகிலா.

அவர்கள் தலை மறையும் வரை அவர்களையேபார்த்துக்கொண்டிருந்த அஷ்மி பிரசாத்தைகூட்டிக்கொண்டு காரிடருக்கும் ராஜாங்கம் இருந்தஅறைக்கும் நடுவில் இருந்த அறைக்கதவைதிறந்துகொண்டு உள்ளே சென்று அமர்ந்தாள்.

அங்கிருந்து பார்த்தால் ராஜாங்கத்தின் அறையில் உள்ள கண்ணாடி கதவின் வழியாக அவர் உறங்கிக்கொண்டிருப்பது நன்றாக தெரியும்.

பெஞ்சும் இல்லாமல் கட்டிலும் அல்லாத ஒரு நீண்டஇருக்கை ஒருவர் நன்றாக படுக்கும் அளவிற்கு இருந்தது.

உட்காருங்க…” என பிரசாத்தை அமர சொல்லி தானும் அமர்ந்துகொண்டவள் துவாரகாவிற்கு அழைத்தாள்.

அகிலா விஷாலுடன் வருவதை பற்றி சொல்ல ஏற்கனவேஸ்வேதாவிடம் ரத்தினசாமி வீட்டில் நடந்ததை தெரிந்துகொண்ட துவாரகா அஷ்மியிடம் கேட்க அதிரூபன் வந்து பார்த்துக்கொள்வான் என சொல்லிகுழந்தையை பற்றியும் கேட்டுவிட்டு வைத்துவிட்டாள்.

அவள் பேசுவதை பார்த்துக்கொண்டிருந்த பிரசாத்தைார்த்து என்னவென புருவம் உயர்த்த இல்லை என்று அவன் தலையசைக்க,

அதான் வாய்வரை வந்திருச்சுல, கேட்டுடுங்க ஹஸ்...”அஷ்மி சொல்லவும்,

அதி அப்பா பேரு ரத்தினசாமி தானே? நீ ஏன் மயிலுன்னு கூப்பிடற?…” என்றதும் பக்கென சிரித்துவிட்டாள்அஷ்மி.

கேட்க சொன்ன, கேட்டேன். இதுல சிரிக்க என்ன இருக்கு?…” பிரசாத் முறைக்க,

நீங்க தெரிஞ்சிக்க இங்க எவ்வளவோ இருக்கு. இதைகேட்கவும் நிஜமா சிரிப்பு வந்துடுச்சு.கோச்சுக்கிட்டீங்களா? பரவாயில்லை கோச்சுக்கங்க.கோச்சுக்கங்க...” என இன்னும் சீண்ட,

உன்னால எப்படி எல்லாத்தையுமே பாஸிட்டிவா எடுத்த முடியுது? கண்ணுுன்னாடி அப்பா இப்படி இருக்காங்க. இதுவே மத்த பொண்ணுங்களா இருந்தா பெரிய ஆர்ப்பாட்டம் ஆகியிருக்கும்...”

எனக்கு என்ன அழுகை வராதா? அழுதேன் தானே?ஆனா எனக்கும் கஷ்டம் இல்லைன்னு இல்லை. வலிஇல்லைன்னு இல்லை. எல்லாமே இருக்கு. அப்பாவந்திடுவார். அது ஒண்ணே என் கண்ணீருக்கு அணை போட்டுடுச்சு...” என்றவள் கண்கள் ராஜாங்கத்தை பார்வையில் நிரப்ப எதுவோ மனதில் அழுத்தியது.அதிலிருந்து வெளியே வர நினைத்தாள்.

அதை விடுங்க அத்தை என்ன சொன்னாங்க?பேசினீங்கள?…” என பேச்சை மாற்ற அவளைபுரிந்துகொண்டவன்,

ஹ்ம்ம், வரனும்னு சொன்னாங்க. நான் தான் வேண்டாம்னு சொல்லியிருக்கேன். மாமா வீட்டுக்குவந்ததும் நானே வந்து கூப்பிட்டுக்கறதா சொல்லிட்டேன்...”

அத்தை தனியா இருப்பாங்கள்ள. வரப்போ கூடவே கூட்டிட்டு வந்திருக்கலாம். என்னை தூக்கிட்டு வரனும்னு தெரிஞ்சா மட்டும் போதாது. இதையும் யோசிக்கனும் ஹஸ்...” என அவனிடமே திருப்ப அவளை முறைத்தவன்,

பிரபாக்கு காலைலயே போன்ல சொல்லிட்டேன் பார்த்துக்க சொல்லி. நோ ப்ராப்ளம்...” என்றவன் அதன்பின்னான ஞாபகத்தில்,

ஆமா ஏன் அகிலாம்மா விஷாலோட போக அவ்வளோதயங்கினாங்க?…”

அவனுக்கு எப்படியாவது பேச்சை ஆரம்பிக்கவேண்டும். எதையாவது பேசி பேச்சினூடே தன் காதலையும் சொல்லிவிடவே நினைத்தான். அதற்காக ஆரம்பித்த விஷயம் அவனுக்கெதிரே திரும்பப்போவதை அவன் அறியவில்லை.

உங்களுக்கு எதுவும் தெரியாதா? மீன் அதி பேமிலி,எங்க பேமிலி பத்தி?…”

ம்ஹூம், தெரியாது. தெரிஞ்சுக்கனும்னு தோணலை.பொண்ணு பேசி முடிவு செஞ்ச பின்னால எனக்கு தெரிஞ்ச ரெண்டே விஷயம் பொண்ணு சென்னை, அப்பாபிஸ்னஸ்மேன். அவ்வளவு தான்...” என்றவனை வியப்பாய் பார்க்க,

அம்மா சொல்ல வந்தாங்க தான். நான் தான் சான்ஸ் குடுக்கலை. உன் பேரும், உன் அப்பா பேரும் இன்விடேஷன் பார்த்துதான் தெரிஞ்சுக்கிட்டேன்.அப்போவும் என் மைண்ட்ல நீ ஒரு டாக்டர்ன்னு க்ளிக்ஆகலை...”

இதை கூட தெரியாமலா என்னை தேடுனீங்க? சரியானஆள் ஹஸ் நீங்க...” என சிரிக்க அவளின் கிண்டலில் அசடு வழிந்தான்.

ஓகே ஓகே. லீவ் இட். இன்னைக்கு எல்லாமே தெரிஞ்சுக்கலாம்...” என்றவள் தன் வாட்சில் நேரத்தை பார்த்துவிட்டு,

நான் போய் அப்பாவை ஒரு தடவை செக்கப் பண்ணிட்டு வரேன்...” என எழுந்துகொள்ள,

இரு நான் டாக்டரை போய் கூட்டிட்டு வரேன்...” எனஅவனும் எழ இடுப்பில் கைவைத்து அவனை பார்த்து முறைத்தாள்.

இல்ல, மறந்துட்டேன்...” என்று சொல்லி அவனின் காதையே அவன் பிடித்துக்கொள்ள அந்த பாவனையைஅஷ்மிதாவின் மனது அழகாய் படம்பிடித்து உள்ளுக்குள்சுருட்டிகொண்டது.

உட்காருங்க வரேன்...” என ராஜாங்கம் இருந்த கதவை திறந்துகொண்டு உள்ளே செல்ல சரியாக ட்யூட்டிநர்ஸும் வந்துவிட அஷ்மிதா ராஜாங்கத்தின் உடலைஆராய்ந்தாள்.

அனைத்தும் சரியாக இருக்க நர்ஸிடம் எல்லாம் நார்மல் என்று சொல்லி தான் பார்த்துக்கொள்வதாக கூறி அனுப்பிவிட்டு வந்தாள். நர்ஸ் கிளம்பியதும் பிரசாத்தின்அருகில் வந்து அமர்ந்தவள் வசதியாக கால்கள்இரண்டையும் மடக்கி சம்மணமிட்டு அமர்ந்துகொள்ள பிரசாத் அவள் புறம் திரும்பி அமர்ந்தான்.

கேளுங்க ஹஸ்...”

“திரும்பவும் முதல்ல இருந்தா?…” என அவன் சிரிக்க தன் தலையில் தட்டிக்கொண்டு,

மயிலும் அப்பாவும் எனக்கு விபரம் தெரியும் முன்ன இருந்தே ப்ரெண்ட்ஸ். ப்ரெண்ட்ஸ்ன்னு வெளில சொல்லிக்கலாம். ஆனா மயிலு காரியவாதி. அவரோடபொலிட்டிகல் ப்யூச்சர்க்காக அப்பாவோட ப்ரெண்ட்ஷிப்வச்சுக்கிட்டார். இது எனக்கு விபரம் தெரிஞ்சு நானே புரிஞ்சுக்கிட்டது...”

திரும்பவும் மயிலா?…”

ஆமா ஹஸ், நான் அதிட்ட பேசறப்போ அப்படித்தான் சொல்வேன். ஆனா துவா, அதி மேரேஜ்க்கு பின்னால தான் மயிலுட்டையே மயிலுன்னு சொன்னேன். அதுவும்செம்ம காண்டுல. உங்களுக்கு ஒன்னு தெரியுமா? துவாஅதிக்கு மாமா பொண்ணு. வைத்தி அங்கிள் டாட்டர் தான் துவா. மீன் சந்தோஷ்க்கு அக்கா...” என்றதும்புரியாமல் பார்த்தான் பிரசாத்.

பூரணி ஆன்ட்டி தானே சந்தோஷ் அம்மா? துவாஎப்படி?…” குழப்பமாய் அவன் கேட்க,

குறுக்க பேசாம இருந்தா கடகடன்னு சொல்லுவேன்.பர்ஸ்ட்ல இருந்து சொன்னா புரியும்...” என்றதும் வாயில்கைவைப்பதை போல பாவனை செய்ய,

இதெல்லாம் ஓவரா இருக்கே ஹஸ்?…” என அஷ்மிகிண்டல் பேச சிரித்துவிட்டான் பிரசாத்.

நான் சைலன்ட். நீ சொல்லு...” என்று கன்னத்தில் கைவைத்து கதை கேட்க ஆரம்பித்தான்.

                           ( மின்னல் அதனின் மகனோ- கதைசுருக்கம் )

வைத்தி அங்கிள் வொய்ப் தான் அகிலவேணி ஆன்ட்டி.லவ் மேரேஜ். வீட்டுல ஒத்துக்கலை. பூரணி ஆன்ட்டி வைத்தி அங்கிளோட அக்கா பொண்ணு. மேரேஜ்பண்ணினா வைத்தி அங்கிளை தான் பண்ணிப்பேன்னுசூஸைட் அட்டென் பண்ணி எல்லாரையும் பிளாக்மெயில் பண்ணி கல்யாணமும் பண்ணிக்கிட்டாங்க. இப்போவரைஅதே பிடிவாதம்...”

“ஆனா அகிலா ஆன்ட்டி சச் எ வொண்டர்ஃபுல் வுமன்.அய்ர்ன் லேடி. வைத்தி அங்கிள் செஞ்ச காரியத்தால அவங்களை விட்டு விலகி போய்ட்டாங்க. அப்போஅவங்க துவாவை உண்டாகி இருந்தாங்க. நிறைமாசம்.ஆனா இந்த மயிலு அவங்களை நிம்மதியாவே வாழ விடல. கொஞ்ச நஞ்ச அநியாயமா செஞ்சாங்க...”

அகிலா ஆன்ட்டியை பூரணி ஆன்ட்டி வாழ்க்கைக்காக துரத்தினவங்க குடும்பத்துக்குள்ள துவா மருமகளா வந்தா. காரணம் அதி. அவன் துவா மேல வச்ச காதல்.அகிலா ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் ஆனப்போ வைத்திஅங்கிள் கிட்ட ஹெல்ப் கேட்க துவா அவங்க வீட்டுக்கு போனப்போ விஷாலும் அவன் பிரதர்சும் சேர்ந்து கடத்தி மிரட்ட தப்பிச்ச துவா அதியோட கார்ல மயங்கிட்டா...”

அவன் தான் பெங்களூர்ல நான் வேலை பார்த்த ஹாஸ்பிட்டல்ல வந்து அட்மிட் பண்ணினான்.அப்போதான் எனக்கும்திக்கும் மேரேஜ் பண்ணிவைக்கனும்னு வீட்ல முடிவு செஞ்சு டேட் பிக்ஸ் பண்ணியிருந்தாங்க. அதுவே ஒரு ட்ராமான்னு அதிபேமிலிக்கு தெரியாது. எனக்கு அதி லவ் தெரியும்.அப்பாவுக்கும். அதனால ரெண்டு பேரையும் சேர்த்துவைக்க ப்ளான் பண்ணினோம். சேர்த்தும் வச்சாச்சு.…”

குழந்தை வரவும் அதிக்காக மயிலு மனசு மாறினாலும் இன்னமும் அகிலா ஆன்ட்டியை பார்த்தா பிடிக்கறதில்லை. ஆனா அதி குழந்தைக்காக துவாவைஏத்துக்கிட்டார். பட் அகிலா ஆன்ட்டியும், துவாவும் இன்னமும் மயிலுட்டையும், பூரணின்ட்டிக்கிட்டையும் டிஸ்டன்ஸ் மெய்ண்டன் பண்ண தான் செய்யறாங்க. ஏழுஜென்மம் முழுக்க அனுபவிக்கவேண்டிய கஷ்டங்களைமொத்தமா அனுபவிச்சவங்க...”

அதி, துவா இருவரின் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை அனைத்தையும் ஒன்றுவிடாமல்சொல்லியவள் விஷால் செய்த காரியம், அதற்குதன்னுடைய எதிர்வினை என அனைத்தையும்சொல்லிமுடித்தாள்.

பிரசாத் பதில் பேச முடியாது வாயடைத்து போனான்.அகிலாவை என்றுமே மரியாதையுடன் தான் பார்ப்பான்.ஆனால் இன்று அதற்கும் மேல் ஒரு படி தன் மனதில் அவரை ஏற்றி வைத்தான்.

அதி துவாவை சந்தித்தது, அகிலாவின் பிடித்தமின்மை,வீட்டிற்கு தெரியாமல் துவாரகாவுடனான அதிரூபனின்காதல், அதன் பின்னான திருமணம், திருமணவாழ்க்கையில் துவாவின் மாற்றங்கள் எனஒவ்வொன்றையும் உணர்வுப்பூர்வமாய் சொன்னாள்அஷ்மிதா.

கேட்ட பிரசாத்திற்கு ற்ற அனைவரையும் விடஅதிரூபன், அகிலா, துவாரகா அப்படியே மனதில் நின்றுவிட்டனர். அதிலும் அதிரூபனை நினைக்கும் பொழுது பிரமிப்பாக இருந்தது.

இப்படியும் ஒருவன் இருப்பானா? என நினைத்து மகிழ்ந்துபோனான். தியின் மீதான மதிப்பு இன்னமும் கூடியது. அதிலும் அஷ்மி,தியின் நட்பு,தியின்மீதான ராஜாங்கத்தின் அன்பு என ஒவ்வொன்றும்அவனை சிலிர்க்கவைத்தது.

இவை அனைத்தையும் கடந்து பிரசாத்தினுள்வண்டொன்று குடைய ஆரம்பித்தது. அது விஷால் அர்னவ் துவாவை கடத்தி கஷ்டப்படுத்திய நிகழ்வு.மனக்கண்ணில் தான் நந்தினியை துன்புறுத்தியதுநினைவிலாட இதயத்துடிப்பே நின்றுவிடும் போல ஆனது.

அதிலும் விஷால் பற்றிய தன்னுடைய அபிமானமும்,திருமணம் செய்ய நினைத்து பின் வேண்டாம் என்று மறுத்து இன்றுவரை அவன் மீது இருக்கும் அந்த கோபம் குறையாமல் இருப்பதும் பெரும்வலியை கொடுத்தது.

ஹஸ், சொல்லிட்டேன் பாருங்க. இன்னமும் ஆன்னுபார்த்துட்டு இருக்கீங்க?…” என அவனின் கையை கிள்ள,

இல்லை, ஒண்ணுமில்லை. வந்து விஷால்…

“விஷாலுக்கென்ன?…”

அவன் சின்ன பையன். பெரியப்பாவுக்காக தானேஅப்படி? தெரிஞ்சு பண்ணலையே? இன்னமும் ஏன் அவன் மேல கோபமா?…” என பேச ஏதேதோ வார்த்தைகளை தேட,

என்ன கோபம்? அப்படி என்ன புத்தியை மழுங்கடிக்கிறகோபம்? இப்பவுமே நான் அதிக்காக தான் அமைதியா இருந்தேன். இல்லைன்னா அவன் பண்ணினதுக்கு எப்பவோ கம்பி எண்ண வச்சிருப்பேன். ராஸ்கல்...”

என்னவோ அந்த நிகழ்வு இன்று நடந்ததை போல அஷ்மியின் கண்கள் கோபத்தில் சிவக்க பிரசாத்தின்நாக்குகள் வறண்டுவிட்டன. நடுக்கத்துடன் ஒருமாதிரிஉள்ளுக்குள் ஒடுங்கிபோனான்.

தப்பு எப்ப பண்ணினாலும் தப்புதாங்க. அதி எவ்வளவு வேதனை பட்டான்னு தெரியுமா? இன்னைக்கு எல்லாரும் அமைதியா இருக்கலாம். பார்க்கலாம். பேசலாம். ஆனாஉள்ளுக்குள்ள முள்ளு மாதிரி அது என்னைக்குமே உறுத்தலாவே தான இருக்கும். அதை மாத்தவோ மறைக்கவோ முடியுமா?…”

அஷ்மி விடு...”

“எவ்வளவு ஈசியா சொல்லிட்டீங்க? அவன் பண்ணின தப்பை உணர்ந்ததால நல்லவனா மாறிட்டானா? ப்ச்,உங்ககிட்ட இதை எதிர்பார்க்கலை. நான் சொல்லவும் உங்களுக்கு விஷால், மயிலு மேல கோபமில்ல வந்திருக்கனும். வரலையே? துவாவை அன்னிக்கு தங்கச்சின்னு சொன்னீங்க?…”

அஷ்மி இது நடந்து முடிஞ்சு இப்போ எல்லாருமேநார்மல் லைப்க்கு வந்துட்டாங்க. இப்போ எதுக்கு இந்த ஆர்க்யூமென்ட்?…”

அஷ்மியை அமைதிப்படுத்துவதாக நினைத்து பிரசாத்திரும்பவும் தவறாக பேசினான். அஷ்மியின் மனநிலையை அவன் புரிந்துகொள்ளவில்லை. புரியவில்லைஎன்பதைவிட தன் தவறு தெரியவந்தால் வரும் விளைவுஎன்னவாக இருக்கும் என்பதை எண்ணி பயத்தில் பேச்சை விட சொன்னான்.

ஆனால் துவே அஷ்மியின் கோபத்தை தூண்டியது.விஷால் செய்த காரியத்தை அப்படியே விட சொல்லி எப்படி பிரசாத் சொல்லலாம் என நினைத்தவள்,

இதுக்கு பேர் ஆர்க்யூமேன்ட்டா? இல்லை நான் தெரியாமத்தான் கேட்கறேன்?…” என ஆரம்பிக்கும் முன்னால்,

அஷ்மி ப்ளீஸ், நைட் நேரம். இப்ப அவங்க ப்ராப்ளம் நமக்கு எதுக்கு? லீவ் இட். பாரு நர்ஸ் கூட திரும்ப செக்பண்ண வந்துட்டாங்க. போய் மானிட்டரை பாரு...” எனஅவளை திசைதிருப்ப அமைதியாக சென்றாள் அஷ்மி அதுவும் அவனை முறைத்துக்கொண்டே.

அவள் அவ்விடம் விட்டு நகர்ந்ததும் தான் பிரசாத்தால்இயல்பாகவே இருக்க முடிந்தது. முகம், உடல் என வியர்வை பெருக வாட்டர் பாட்டிலை எடுத்து தண்ணீரை மடமடவென குடித்தான்.

தாளமாட்டாமல் எழுந்து ரெஸ்ட்ரூம் சென்றவன் முகத்தில் தண்ணீரை வாரி இறைத்தான். எத்தனை தான்முகத்தில் தண்ணீரை கொட்டியும் அவனின் மனதின் வெம்மை தணிந்தபாடில்லை.

விஷால் செய்த செயலை ஏற்கமுடியாமல் இன்றுவரை அவனை மன்னிக்காமல் அதே கோபத்துடன் இருக்குமவளிடம் தன்னுடைய விஷயத்தை சொன்னால்?நினைத்துப்பார்க்கவே அஞ்சினான்.

கூடாது, அஷ்மிக்கு பழைய விஷயங்கள் எதுவும் தெரியவே கூடாது. என் உயிரே போனாலும் நானும்சொல்லமாட்டேன். எந்த சூழ்நிலையிலும் தெரியக்கூடாது...” என மனதினுள் இதையே உருப்போட்டுகொண்டவன் மெதுவாய் வெளியே வந்தான்.

தாங்கள் அமர்ந்திருந்த இடத்தில் அஷ்மி மட்டும் அமர்ந்திருக்க நர்ஸ் கிளம்பி இருந்தாள். அஷ்மியாககேட்கும் முன்னால்,

ரெஸ்ட் ரூம் போய்ருந்தேன் அஷ்மி...” என விளக்கம் சொல்ல,

நினைச்சேன். அதெல்லாம் சரி, ஏன் உங்க டிஷர்ட்இப்படி நனைஞ்சிருக்கு?…”

தூக்கம் வரது போல இருந்தது. அதான் பேஸ் வாஷ் பண்ணினேன்...” என கூறி அமர,

வேணும்னா போய் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வாங்களேன்?…” என்றவளை அழுத்தமாய் பார்த்தவன்,

இல்லை, உன்னை தனியா விட்டுட்டு எங்கயும் நான் போகமாட்டேன்...” அவன் சொல்லியதன் உள்ளர்த்தம் புரியாமல் சிரித்தவள்,

அதுசரி, ஹஸ் இது நான் ஏற்கனவே வொர்க் பண்ணின ஹாஸ்பிட்டல். இங்க எனக்கே பாதுகாப்பா?…”என்றுகேட்க,

நீ என்ன வேணும்னாலும் நினைச்சுக்க. உன்னை விட்டு போகமாட்டேன்...” அவளின் கையை எடுத்து தன் கைகளுக்குள் இறுக்கமாக பற்றிகொண்டான் பிரசாத்.

அப்ப ஓகே, நான் தூங்கறேன். அப்பா நல்லாதூங்கறாங்க. ஒரு டூ ஹவர்ஸ் நானும் தூங்கறேன்...என்று சொல்லவும்,

ஹ்ம்ம் படுத்துக்கோ...” என்றவன் அந்த இருக்கையை விட்டு எழும் முன்னால் அவனின் மடியில் தலைசாய்ந்துவிட்டிருந்தாள் அஷ்மி.

சற்றும் இதை எதிர்பார்க்காதவன் திகைத்துபோனான்.ஏனோ அவளின் நெருக்கமும் அணுகுமுறையும் இத்தனை நாள் இருந்த குற்றவுணர்ச்சியை இன்னமும் அதிகமாக்கியது.

அமரமுடியாமல் நெளிந்தவன் எப்படி அஷ்மியை எழுந்துகொள்ள சொல்ல சென்ற யோசனையில் இருக்க,

டான்ஸ் ஆடாம நேரா உட்காருங்க ஹஸ். ப்ளீஸ்...”என சொல்லி அவனின் ஒரு காலை கட்டிக்கொள்ள உடைந்துபோனான் பிரசாத்.

ஒரு குழந்தை தன் தாயிடம் அரவணைப்பை தேடும் விதமாய் இருந்தது அஷ்மியின் செயல்.

“இதற்கு நான் தகுதியில்லாமல் போய்விட்டேன் அஷ்மி.என்னும் கதறல் அடிமனதில் ஒலிக்க உதட்டைகடித்துக்கொண்டு உணர்வுகளை அடக்கினான்.

தட்டி குடுங்க ஹஸ். அப்பா மடியில, அதி மடியில தூங்கினா எனக்கு தட்டி குடுப்பாங்க...” அரைஉறக்கத்தில் அவள் சொல்லவும் கண்கள்கலங்கிப்போனது.

இல்லைடா, நான் அவங்களை மாதிரி இல்லை.அவளிடம் சொல்லவேண்டும் என நினைத்தலும் வார்த்தைகள் வரவில்லை.

உண்மை தெரிந்துவிட்டால் என்ன நடக்குமோ என நினைத்தவன் அஷ்மியின் தலையை தன் மார்போடு அணைத்துக்கொள்ள வாகாய் பொருந்திபோனாள்அஷ்மி அவனின் டிஷர்ட்டில் முகத்தை மறைத்து. அந்தஉடுப்பின் ஈரம் ஒருவித குளுமையை தந்து அவளின் சுகமான உறக்கத்திற்கு வழிவகுத்தது.

எந்த எதிர்பார்ப்பும் இன்றி இயல்பாகவே தன்னை கணவனாய் ஏற்றுகொண்டவள் இவள், எந்தசூழ்நிலையிலும் இவளை இழக்கமாட்டேன்.இழக்கமுடியாது. என நினைத்தவன் மனம் உண்மையைமறைத்ததற்காக அஷ்மியிடம் நூறுமுறை மன்னிப்பை வேண்டியது.

அமர்ந்தவாக்கில் விழிகள் இலக்கின்றி வெறித்தபடிஇருக்க அஷ்மியின் தலையை மென்மையாகவருடிகொண்டிருந்தவன் கைகள் நிற்கவே இல்லை.

அவனின் உள்ளம் மட்டும் சொல்லிவிடாதே சொல்லிவிடாதே என கூவிக்கொண்டே இருந்தது.அதுவே அவனின் குற்றவுணர்ச்சியை மேலும் மேலும் அதிகமாக்க உறக்கத்தில் இருப்பவளின் முகத்தை கூட பார்க்கமுடியாமல் தவித்தான்.

“நான் எதையும் வேணும்னு செய்யலை அஷ்மி. அப்போஉள்ள என்னோட சூழ்நிலை. என்னோட திமிர்,அகம்பாவம்னு கூட சொல்லலாம். தப்பு பண்ணிட்டேன்.சரி பண்ணிட்டேன் தான், னாலும் தப்பு தானே? நீஇதைத்தான் சொல்லுவ...”

என்னவோ அவளிடமே நேருக்குநேராய் பேசுவதை போல அவளின் கையை பிடித்துக்கொண்டு அதைபார்த்தே மனதோடு பேசினான்.

என்னால உன்னை விட்டுகுடுக்க முடியாது. அதை இந்த நிமிஷம் நான் உணர்றேன். நீயே போகனும்னாலும் என்னை மீறி போக முடியாது அஷ்மி. அதுக்காக நான் என்னவேணும்னாலும் செய்வேன். என்னவேணும்னாலும்...” என நினைத்தவன் மனதில் பழைய முரட்டுத்தனம் குடியேற உடலில் தானாகவே ஒரு இறுக்கம் பரவியது.

அந்த இறுக்கம் அவன் பிடித்திருந்த அவள் கைகளிலும் பிரதிபலிக்க லேசான தலையசைப்பில் உறக்கம் கலையுமாக இருக்க பிடித்திருந்த கரத்தை தன்கன்னத்தோடு அழுத்திகொண்டான் மென்மையாக.

“தப்பு பண்ணினாலும் அந்த தப்பை திருத்திக்கிட்டவன்.அது தெரிஞ்சாலும் போகனும்னு முடிவு செஞ்சு இன்னொரு தப்பை செய்ய வச்சிடாதே. என்னை விட்டு விலகனும்னு நீ நினைச்சா அதை முறியடிக்க எத்தனை தவறை வேணும்னாலும் நான் செய்வேன் அஷ்மி. யூ ஆர் மைன்...”

அவன் அதை வாய்விட்டு வேறு சொல்லிக்கொண்டே இருந்தான்.

யூ ஆர் மைன் அஷ்மி...” என்று முணுமுணுப்போடு கண்களை மூடியவன் சுவற்றில் சாய சிறிது நேரத்தில் அவனின் தோளில் யாரோ தொட நிமிர்ந்து பார்த்தான்.

அங்கே புன்னகை முகமாய் நின்றுகொண்டிருந்ததுஅதிபன் அதிரூபன். பார்த்ததும் பிரசாத் என்னபேசுவதென்று விழிக்க,

எஸ் பிரசாத், அஷ்மி உங்களுக்காக மட்டும் தான். ஷிஇஸ் ப்ரீஷியஸ். அவ உங்க அஷ்மி, யார் இல்லைன்னு சொல்லுவா? சொல்லிடுவாங்களா என்ன? நல்ல வேளைஅவ தூக்கத்துல இருக்கும் போது சொன்னீங்க.முழிச்சிருந்தா செம்மையா கலாய்ச்சிருப்பா...” என கிசுகிசுப்பாய் கூறி புன்னகைக்க அதில் நிம்மதியானவன் ஒரு பெருமூச்சை வெளியிட அதை பார்த்துக்கொண்டே அவனின் எதிரில் இருந்த சேரில் சென்று அமர்ந்தான் அதிரூபன்.

Advertisement