Advertisement

உன் நினைவு – 28

நீ கூறும் வார்த்தை

என்னை கூறு போடுமோ ??

உன் ஒற்றை பார்வை

என் உயிர் வங்குமோ ??

கதிரவன் இருகியா முகத்துடன் இறங்கி வருவதை கண்டதும் அனைவருக்கும் என்ன நடந்து இருக்கும் என்பது நன்றாக தெரிந்து இருக்கும்…

“ மதி யோசிக்க டைம் கேட்டு இருக்கா “ என்று மட்டும் கூறி விட்டு  அமைதியாக அமர்ந்து விட்டான்.. அவனிடம் யாரும் அதுவும் கேட்கவில்லை.. அவனது முகமே அனைவரையும் அமைதி காக்க வைத்தது..

கதிரவன் மனதில் எண்ணினான். .” எப்படியும் வந்து ஆஸ்திரேலியா போகிறேன் என்று தான் சொல்வாள் “ என்று தீர்மானம் செய்துகொண்டான்.                                                                            

கதிரவன் வந்து பேசி சென்ற பிறகு ஏனோ தன்னை அறியாமல் தன் மனம் நிம்மதி அடைவதை உணர்ந்தாள்… இப்படி எல்லாம் கதிரவன் செய்ததற்கு அவள் மனம் கோவத்தில் கொந்தளிக்க வேண்டும் ஆனால் அவளோ கண்ணாடி முன் நின்று தன்னை அழகு பார்த்து கொண்டு நிற்கிறாள்..

அவளது கைகள் தன்னை அறியாமலே கதிரவன் கட்டிய தாலியை பிடித்து இருந்தது.. ஆனால் வசுமதியால் ஒன்றை மாட்டும் கூற முடியும் இன்று இந்த நொடி இந்த நிமிடம் அவள் மனதில் எந்த கோவமோ வருத்தமோ இல்லை..

காதல் கொண்ட மனம் அல்லவா.. இந்த திடீர் நிகழ்வு அதிர்ச்சி தந்தாலும் அவளது ஆழ் மனதில், கதிரவன் மீது தீராத காதல் கொண்ட மனதின் அடியில் ஒரு இதம், ஒரு சுகம், ஒரு நிம்மதி பரவுவதை அவள் உணர்ந்தே இருந்தாள்..

முன்னை விட இப்பொழுது மிகவும் அழகாக தெரிவது போல உணர்ந்தாள்.. இத்தனைக்கும் கழுத்தில் அவன் கட்டிய தாலி மட்டும் தான் இன்று புதிது.. அந்த ஒரு மஞ்சள் கயிறு ஒரு பெண்ணிற்கு இத்தனை அழகை கூட்டி தரும் என்று அவள் இன்று வரை அறிந்தது இல்லை..

கண்களை மூடி ஏதோ யோசித்தாள். மூடிய கண்களுக்குள் மீண்டும் மீண்டும் கதிரவன் “ மதி திரும்பு “ என்று கூறி அவளது கழுத்தில் மூன்று முடிச்சு போட்டு வசுமதியை தன்னவளாக்கி கொண்டதே நினைவு வந்தது… ஒரு நிமிடம்…

கண் இமைக்கும் ஒரு நொடியில தாலி கட்டிவிட்டான்.. “ என்ன தைரியம் இவனுக்கு…  யப்பா… அட கடவுளே.. இனி நான் என்ன பண்ணுவது.. யோசிக்க சொல்லிட்டு இவன் என்ன பண்ணுகிறானோ ??? “ எதுவுமே அவளுக்கு தோன்றவில்லை.. அவள் ஆசை பட்டது எல்லாம் இது தான்.. கதிரவன் கையால் தாலி கட்டிக்கொள்ள வேண்டும்.. அவன் காதல் மனைவியாக அவனது சரி பாதியாக ஈருடல் ஓருயிராக வாழ வேண்டும் என்று தானே நினைத்தாள்.. இன்றும் அதெல்லாம் சாத்தியம் தான்.. ஆனால் நேராக நடக்க வேண்டிய விஷயம் தலையை சுற்றி மூக்கை தொடுவது போல நடந்து உள்ளது.. 

ஒரு நிமிடத்தில் தான் என்ன எண்ணுகிறோம் என்பதை அவள் புரிந்து கொண்டாள்.. “ கடவுளே இத்தனை நடந்தும் இன்னும் இவனை இப்படி காதலிக்கும் அளவிற்கு  என்னை இப்படி மயக்கி இருக்கான் “ என்று இல்லாத கோவத்தை அவன் மீது ஏற்றினாள்…

சிறிது நேரம் யோசித்தவள் முகத்தில் திடீரென்று முகத்தில் ஒரு தெளிவு தோன்றியது.. அதை செயல் படுத்த ஆரம்பித்தாள்.. வசுமதி கீழே இறங்கி வரும் அரவம் கேட்டு அனைவரும் திரும்பி பார்த்தனர்.. மாடியில் இருந்து இறங்கி வரும் பொழுதே ஒரு நிமிர்வு, முகத்தில் ஒரு தெளிவு.. முகம் கழுவி நன்றாக சேலை கட்டி தலையை படிந்த வாறி ஒரு சிறு ஒப்பனை செய்து கீழிறங்கி வந்தவளை அனைவரும் அதிர்சியோடு பார்த்தனர்..

சிவா மெல்ல கதிரவன் காதருகில் “ அத்தான் என்ன சொக்கு பொடி போட்டிங்க ??  அக்கா இளித்துகொண்டு வருகிறாள்??? ” என்றவனுக்கு எந்த பதிலும் கிடைக்க வில்லை.. கதிரவனுக்கே இது ஆச்சரியம் தான்.. “ என்ன இது நாம பேசினதில் நிஜமாவே மனசு மாறிவிட்டாலோ ??? ” என்று யோசித்தான்..

நேராக சென்று அன்னபூரணியிடம் “ என்ன அம்மாச்சி நானும் உன் பக்கத்தில் உட்காரலாமா இல்லை என் அத்தானுக்கு மட்டும் தான் அந்த உரிமையா ?? ” என்றால் என் அத்தானில் சற்று அழுத்தம் குடுத்து..

யாராலும் இவள் நடந்து கொள்வதை நம்ப முடியவில்லை.. புரிந்து கொள்ள முடியவில்லை… கதிரவனோ திகைத்தே விட்டான்..

ராம் தான் அழகேசன் காதில் கூறினான் “ கதிரவன் வசுமதிக்கு தாலி தான கட்டினார்  அவள் இப்ப கட்டம் கட்டி ஸ்கெட்ச் போட்டு தூக்க போகிறா ” என்று.. அழகேசனும் ராமை அப்படியா என்று அதிர்ந்து பார்த்தான்.. அவனும் ஆமாம் என்று கண்களில் பதில் கூறினான்…

அன்னபூரணி சிரித்தபடி “ அடி என் கண்ணம்மா உனக்கு இல்லாத உரிமையா”  என்று இழுத்து அருகில் அமர்த்தி கொண்டார்..

“ என்ன எல்லாரும் என்னை புதிதாய் பார்ப்பது மாதிரி இருக்கு?? ” என்றாள் சாதரணமாக.. “என்ன டா தம்பி நீ கூட ஏன் இப்படி பே ன்னு பார்த்துகிட்டு இருக்க ?? ” என்று சிவாவையும் சீண்டினாள்..

புரிந்து விட்டது அவனுக்கு.. “ ஆகா !!! நம்ம அக்கா ஏதோ பக்கா பிளான் போட்டு தான் இறங்கி வந்து இருக்கா.. அவள் மலை இறங்கிவிட்டாள் என்று எல்லாரும் நினைத்து தப்போ“ என்று சுற்றி அனைவரயும் பார்த்தவன் இறுதியில் கதிரவனிடம் தன் பார்வையை நிறுத்தி “ அத்தான் இனி உங்களை யாராலையும் காப்பாற்ற முடியாது “ என்று மனதில் எண்ணி  கொண்டான்..

வசந்தி தான் தன் மகளிடம் “ இல்லை வசும்மா.. உனக்கு… நீ… நீ என்ன முடிவு எடுத்து இருக்க ?? ” என்றார் குழப்பமாக…

ஆனால் அவர் கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல் அன்னபூரணியிடம் திரும்பி “ அம்மாச்சி.. நீ தான இந்த வீட்டுக்கு பெரிய மருமகள்..??? “ என்றாள்

அன்னபூரணி “ எதற்கு இப்ப இப்படி ஒரு கேள்வி கேட்கிறா ” என்று  யோசித்தவாறே “ ஆமா கண்ணம்மா!! ஆனால் ஏன் டா இப்ப இப்படி ஒரு கேள்வி ??? “

“ம்ம் !!! நீ பெரிய மருமகள்… காமாட்சி அத்தை உனக்கு அடுத்து மருமகளாய்  வந்தவங்க சரி தானே ?? ” என்று கூறி அனைவரயும் ஒரு பார்வை பார்த்தாள்.. இவள் என்ன கூற போகிறாளோ என்று அனைவரின் மனதிலும் பீதி கிளம்பியது..

எதற்கும் அசறாத அன்னபூரனியோ “ என்ன வசுகுட்டி என்ன சொல்ல வர ?? “ என்றார் குழப்பமாக..

“ சரி சரி சொல்கிறேன்… அப்ப காமாட்சி அத்தைக்கு அடுத்து இந்த வீட்டிற்கு  மருமகளாய் வரப்போகும்  நான் உனக்கு பேத்தியா ?? இல்லை சின்ன மருமகளா ?? ” என்றாள் எதுவோ சந்தேகம் கேட்பது போல..முதலில் யாருக்கும் புரியவில்லை இவள் என்ன கேட்கிறாள் என்று.. குழப்பமாக அனைவரும் அவளையே ஒரு நிமிடம் பார்த்தனர்..

வசுமதியோ சிவபாண்டியன் காமாட்சி அருகில் வந்து “ என்ன அத்தை என்ன மாமா இன்னும் நான் கேட்டது புரியவில்லையா ?? ” என்றால் குறும்பாக பார்த்தபடி..

அவர்கள் இல்லை என்று தலை ஆட்டவும்.. ” சரி நானே சொல்கிறேன்.. என்னை உங்க மருமகளா, உங்க பையன் கதிரவனுக்கு பொண்டாட்டியா இந்த வீட்டுக்கு கூட்டி வர சம்மதமா ?? ” என்றால் ஒரு ஒரு வார்த்தைக்கும் அழுத்தம் குடுத்து..

கதிரவனோ தான் கேட்டது எல்லாம் நிஜமா என்று தன் காதுகளையே நம்ப முடியாதவனாய் நின்று இருந்தான் அவளது முகத்தையே கூர்ந்து பார்த்து..

இவள் இப்படி கூறியதை கேட்டதும் காமாட்சி “ வசு.. வசும்மா.. நீ .. நீ … நீ சொல்வது நிஜமாடா ?? உனக்கு இதில் முழு சம்மதமா ?? ” என்றார் இன்னும் நம்ப முடியாமல்..

 வசுமதியோ கலகலவென்று சிரித்தபடி “ என்ன அத்தை இப்படி கேக்குறீங்க ??? இதில் போய் யாராவது விளையாடுவார்களா ?? நான் நல்லா யோசித்து தான் இந்த முடிவு எடுத்து இருக்கேன்.. அத்தான் கூட எனக்கு முழு உரிமை குடுத்தார் நான் என்ன சொன்னாலும் சரியென்று அத்தான் எவ்வளோ என்னை லவ் பண்ணா இப்படி செய்து இருப்பாங்க.. நானே அவர் உணர்வுக்கு மதிப்பு கொடுக்க வில்லை என்றால் எப்படி அத்தை ?? ” என்றாள்.

வசந்தியோ தன் மகளிடம் வந்து “ டி சுமதி.. நல்லா யோசித்து தான இந்த முடிவு எடுத்து இருக்க ??? பின்ன அது இது என்று எதுவும் மாற்றி பேச கூடாது.. இது விளையாட்டு விசயமில்லை டி “ என்றார்

“ அம்மா என்ன மா நீயும் இப்படி என்னை சொன்னால் எப்படி?? ச்சே ஒரு நல்ல செய்தி சொல்ல போகிறோமே எல்லாரும் சந்தோஷ படுவார்கலேன்னு நினைத்தால் இப்படி எல்லாரும் கேட்ட கேள்வியவே வேறு வேறு மாதிரி கேட்டால் நான் செய்வது ?? போங்க நான் மேலே போகிறேன்”

சிவபாண்டியனும் சண்முகநாதனும் “ இல்லை இல்லை வசும்மா.. நீ இப்படி வந்து இப்படி எல்லாம் பேசவும் எங்களுக்கு கொஞ்சம் குழப்பமாய் ஆகிவிட்டது ??? அவ்வளோ தான் டா நீ எதுவும் வருத்தபடாத “ என்று கூறி அவளை நிறுத்தி வைத்தனர்..

காமாட்சி மீண்டும் கேட்டார் “ வசும்மா நீ நிஜமாய் சொல்லு டா.. இங்க யாரும் உன்னை எதுவும் தப்பாய் நினைக்க மாட்டோம்.. கதிரவன் இப்படி செய்துவிட்டான் என்று  நீ கல்யாணத்திற்கு சரி சொல்கிறாயா ?? “ என்றார்

“அட என்ன அத்தை இன்னும் எத்தனை தடவை தான் நான் சொல்லட்டும்.. அத்தான் இங்க வாங்க “ என்று அவனை கை பிடித்து அழைத்து

 “ நீங்களாவது அத்தை கிட்ட சொல்லுங்கத்தான்..  நான் சொல்வது எல்லாம் உண்மை என்று, நான் முழு மனதோடு தான் இந்த கல்யாணத்திற்கு சரி சொல்கிறேன் என்று  சொல்லுங்க அத்தான் “ என்றாள் அவனிடம்.. அவனோ நடப்பது எல்லாம் கனவா நிஜமா என்று உணரமுடியாத நிலையில் இருந்தான்..

அவன் அமைதியாக இருக்கவும் அவன் புறம் திரும்பி “ அத்தான் நான் கேட்பதற்கு  பதில் சொல்லுங்க.. வீட்டில் இப்படி எல்லாரு முன்னாடியும் தாலி கட்டுனிங்க.. ஆனால்  நான் ஆசை படுவது எல்லாம் நீங்க எனக்கு ஊரறிய நம்ம சொந்தம் பந்தம் எல்லாரு முன்னாடியும் சாஸ்திர சம்பிரதாயங்கள் எல்லாம் செய்து முறை படி என் ககழுத்தில்  நீங்க மூணு முடிச்சு போடவேண்டும் அத்தான்.. போடுவிங்களா ??? ” என்று கேட்டாள் அவனது கண்களையே உற்று பார்த்தபடி..

அவனை அறியாமல் அவன் தலை சரி என்று கூறுவது போல மேலும் கீழும் ஆடியது….. அவனது தலையசவை பார்த்தபின், மெல்ல நகைத்தபடி “ இதோ என் அத்தானே சரி சொல்லிவிட்டாங்க… நானும் முழு மனதோடுதான் சம்மதிக்கிறேன்..  இப்ப எல்லாருக்கும் சம்மதமா ?? ” என்றாள்.. அனைவரின் முகத்திலும் ஒரு நிம்மதியான புன்னகை அரும்பியது..

வசுமதி முகத்திலும் ஒரு திருப்தியுடன் கூடிய முறுவல் பூத்தது.. எதையோ வென்று விட்டது போன்ற உணர்வு அவள் முகத்தில் இருந்தது.. ஆனால் கதிரவானால் இன்னும் இதை என்ன என்று புரிந்து கொள்ள முடிய வில்லை.. அவனது நிலையை சரியாய் உணர்ந்தவள் போல அவனை பார்த்து மர்மமாக சிரித்தாள் வசுமதி…

 “ மாங்கள்யம் தந்துனானேனா மமஜீவன ஹேதுனா..

 கண்டே பத்மனாமி சுபகே சஞ்சீவ சரதசதம்….”   

 “ கெட்டிமேளம்…கெட்டிமேளம்….“ என்று அய்யர் கூறவும் மங்கள வாத்தியங்கள் முழங்க, சுற்றமும் நட்பும் புடை சூழ , அனைவரும் அட்சதை தூவும் சுப நேரத்தில் கதிரவன் வசுமதியின் சங்கு கழுத்தில் பொன் மஞ்சள் தாலியினை கட்டினான்…

முப்பது முக்கோடி தேவர்களை அழைத்து, அக்னி சாட்சியாக, அம்மி மிதித்து அருந்ததி பார்த்து சகல வித சம்பிரதாயங்கள் உடன் பெரியவர்கள் ஆசிர்வாதத்துடன் நட்புகளின் வாழ்த்துகளுடன் கதிரவன் வசுமதியை தன் சரி பாதியாக ஏற்றுகொண்டன்.. மாப்பிள்ளை தோழனாக அழகேசணும், மணப்பெண் தோழியாக மீனாட்சியும் தான் நின்றிருந்தனர்..

அவனது கைகள் என்னவோ வசுமதியின் கழுத்தில் இருந்தாலும் கண்கள் தன் மதியின் விழிகளில் லயித்து இருந்தது. வசுமதியும் கதிரவனின் முகத்தையே பார்த்தபடி இருந்தாள்… இருவரின் பார்வையும் ஒருவரை ஒருவர் தழுவி சென்றது.. அவள் விழியின் ஓரத்தில் ஒரு சிறு நீர் துளி எட்டி பார்த்தது… மீனாட்சி தான் நாத்துனார் முடிச்சு போட்டாள்…

அதன் பின் அய்யர் குடுத்த குங்குமத்தை கதிரவன் வசுமதியின் வகிடிலும் நெற்றியிலும் இட்டான்.. கண்கள் மூடி அந்த தருணத்தை அனுபவித்தாள் வசுமதி.. சுற்றி நின்று இருந்த அனைவரின் முகத்திலும் ஒரு மகிழ்ச்சி நிம்மதி பெருமிதம் என்று கலவையான உணர்வுகள் இருந்தன..

அடர் மஞ்சள் நிற பட்டு உடுத்தி, தலை நிறைய பூச்சூடி, கைகளில் வளையல் குலுங்க, அழகான ஒப்பனையில் தேவதை போல காட்சி தரும் தன்னவளை கண் இமைக்காது பார்த்தான் கதிரவன்..

தாலி கட்டி முடித்ததும்  அனைத்து பெரியவர்களிடமும் ஆசிர்வாதம் வாங்கினர்.   அழகேசன் கதிரவனிடம் “ டேய் மாப்பிள்ள எப்படியோ கலக்கிட்ட “ என்று கூறி கைகுலுக்கினான்.. கதிரவனோ மனதிற்குள்

“ கலக்கிட்டேனா??? கலங்கி போய் நிற்பது எனக்கு தான் டா தெரியும் “ என்று எண்ணியவாறே “ ஹி ஹி “ என்று இளித்து வைத்தான்..

மீனாட்சி, பொன் மலர் மறுபுறம் வசுமதிக்கு வாழ்த்து கூறினார்..அவளும் அதை முழு மனதோடு ஏற்று கொண்டாள்.. 

ராம் வந்து இருவரையும் வாழ்த்தி தன் கல்யாண பரிசை வழங்கினான்.. சிவா வந்து  தன் அக்காவை சிறிது கிண்டல் செய்து விட்டு கதிரவனை பார்த்து “ உங்களுக்கு நான் என்ன சொல்லி வாழ்த்தட்டும் அத்தான்.. ஒரு வார்த்தை வரலியே “ என்று நடிகர் திலகம் ரேஞ்சுக்கு நடித்தான்…

கதிரவனின் பார்வையோ நொடிக்கு ஒரு தரம் அவனது மதியை தீண்டி சென்றது.. அவளுமே அதை உணர்ந்து தான் இருந்தாள்..  இருவருக்குள்ளும் என்ன நடந்து இருந்தாலும், ஆயிரம் மன பிணக்குகள் இருந்தாலும், இன்று.. இந்த நொடியை… இந்த பந்தத்தை நிஜமாக, முழு மனதுடன், தங்கள் ஆழமான காதலின் சாட்சியாக அனுபவித்தனர்.. வசுமதியின் முகத்தில் ஒரு தனி பொழிவு தோன்றி இருந்தது..

அது புது மண பெண்ணுக்கே  உரிய நாணமா ?? இல்லை காதலித்தவனையே கரம் பிடித்ததால் வந்த பெருமிதமா ?? இல்லை கதிரவனின் பார்வை தந்த வெட்கமா தெரியவில்லை..

இப்படி ஒரு நிகழ்வு நடக்க வேண்டும் என்று தானே அனைவரும் ஆசை பட்டனர்.. உறவினர்களின் வாழ்த்துக்கும் நன்றி கூறி கொண்டு, நண்பர்களின் கேலி கிண்டலுக்கும் பதில் கூறி கொண்டு தன்னவளை ரசித்து கொண்டும் கதிரவன் ஒரே நேரத்தில் பல வேலைகளை பார்த்தான்.. போட்டோ எடுக்கும் நபர் கூட இரு முறை அவனை அழைத்து கேமரா பக்கம் திரும்பும்படி கூறி விட்டார்..

 “ பின்ன வசுமதி.. இப்பயே உனக்கு அண்ணன தவிர  யாரும் கண்ணுக்கு தெரியவில்லை  ஹ்ம்ம் இன்னும் கொஞ்ச நாள் கழித்து நாங்க எல்லாம் உங்கள் வீட்டிற்கு வந்தால் நீங்க எல்லாம் யாரு என்று  கேட்ப போல “ என்று தன் பங்கிற்கு வாரினாள் மீனாட்சி…

வசுமதியோ எதற்கும் பதில் கூறாமல் அனைத்திற்கும் தன் சிரிப்பு ஒன்றை மட்டுமே பதிலாக தந்தாள்.. அவள் ஒவ்வொரு முறை சிரிக்கும் போதும் கதிரவன் அவளையே திரும்பி திரும்பி பார்த்தான்.. இல்லை அவன் பார்க்க வேண்டும் என்பதற்காக இவள் சிரித்தாளா தெரியவில்லை…

சிவாவோ “ ஏன் அழகேசன் அண்ணா… சாப்டுவிட்டு கல்யாணம் பண்ண கூடாதா ?? அதென்ன தாலி கட்டிவிட்டு தான் சாப்பிடவேண்டுமா ??? ஒரு லாஜிக் இல்லை.. கல்யாணம் இவங்களுக்கு நம்மளும் சேர்ந்து பட்டினி இருக்கணுமா ???  ” என்று மிக முக்கியமான கேள்வியை கேட்டான்…

அழகேசனோ சிரித்தபடி “அதுகென்னடா சிவா… உன் கல்யாணத்திற்கு நாங்கள் எல்லாம் முன்னாடியே  சாப்டுவிட்டு தெம்பா வந்துவிடுறோம்… நீ பதறாம தாலி கட்டிட்டு கூட சாப்பிடு “ என்றான் கூலாக..

“ உங்களிடம் கேட்டேன் பாருங்க என்னை சொல்ல வேண்டும் … ராம் அண்ணா “ என்று அழைத்தவாறே அங்கு ராமிடம் சென்று விட்டான்..  அனைவரும் வசுமதியையும் கதிரவனையும் கேளிம் கிண்டலும் செய்தபடி உண்டனர்.. வீட்டில் அனைவருக்கும் மகிழ்ச்சி மட்டுமே இருந்தது…      

அனைவரும்  வீட்டிற்கு சென்றனர்… காமாட்சியும் மீனாட்சியும் மணமக்களுக்கு ஆரத்தி எடுத்தனர்.. “ வலது கால் எடுத்து வைத்து உள்ள வா மா “ என்று கூறி தன் மருமகளை வரவேற்றார் காமாட்சி.. வசுமதிக்கோ மனதில் ஒரு இனம் புரியாத எண்ணம்..

இது மூன்றாவது முறை அவள் இங்கே பிரவேசிப்பது.. அவளை கேட்காமலே எல்லா பழைய எண்ணங்களும் அவளுக்கு நினைவு வந்தது… வீட்டிற்குள் வந்த கதிரவனையும் வசுமதியையும் முதலில் பூஜை அறைக்கு அழைத்து சென்று விளக்கு ஏற்ற கூறினார்.. அதன் பின் வந்து வசந்தி மற்றும் சிவபாண்டியன் அவர்களின் அப்பா படத்திற்க்கு முன் விழுந்து வணங்கினர்..

ஒரு வழியாக அனைத்து வேலைகளும் முடிந்ததால் அனைவரும் கொஞ்சம் ரிலாக்ஸ்டாக ஹாலில் அமர்ந்து இருந்தனர்.. தன் நண்பன் முகத்தில் தெரிந்த ஒரு வித யோசனையை அழகேசன் கண்டு விட்டான்..

அவர்கள் இருவரும் அழகேசன் முன்பு பயன் படுத்தி வந்த  அறையில் இருந்தனர்.. வீட்டின் பெரியவர்கள் அனைவரும் வந்து இருக்கும் விருந்தினரை கவனிக்கவும் இரவு சாந்தி முகூர்த்தத்திற்கு ஏற்பாடு செய்யவும் ஆயத்தமாகினர்..

“ என்ன மாப்பிள்ள ஏதோ யோசனையாகவே இருக்க ??? ” என்று கேட்டான் அழகேசன் கதிரவனிடம்…

“ ஹா !!! ஒன்றுமில்லை டா மாப்பிள்ள இரண்டு நாளாய் சரியான தூக்கம் இல்லை அதான் எப்படியோ இருக்கு “ என்று கூறி சமாளித்தான்..

“ டேய் டேய் நிறுத்துடா.. உன்னை பற்றி எனக்கு தெரியாதா ??? உண்மையை  சொல் என்ன யோசனை ஓடுகிறது உன் மண்டைகுள்ள.. இல்லை இன்னும் எதாவது திருகுதாளம் பண்ணி வைக்க திட்டமா ?? ” என்றான் கடுப்பாக அழகு..

அவனது கேள்வியில் சிறிது கடுப்பேரிய கதிரவன் “ டேய் ஏன் டா நீ வேற… நானே டென்ஷன்ல இருக்கேன்.. நீ என்னடானா நேரம் காலம் தெரியாமல் என்னை கேள்வி கேட்டுகிட்டு இருக்க ?? ”

“ டென்ஷனா ???? ஓ !!! ஓஹோ !!!! அந்த டென்ஷன்னா…… ஹா ஹா.. ஏன் டா மாப்பிள்ள ராத்திரி வர போற சாந்தி முகூர்த்ததுக்கு ஏன் டா இப்ப இருந்து டென்ஷனா இருக்க?? “ என்று மீண்டும் தன் கிண்டலை தொடர்ந்தான்..

“ இவன் கிட்ட பதில் சொன்னால் அதை வைத்து இன்னும் கிண்டல் அடிப்பான் “ என்று எண்ணிய கதிரவன்

“ ஹி ஹி ஹி ….” என்று இளித்து வைத்தான்.. அழகேசனோ அவனை விடுவதாய் இல்லை

“ டேய் … யப்ப்பா… கதிரவா.. இதே மாதிரி என் தங்கச்சி கிட்ட சிரிக்காதே அவ்வளோ  தான் அந்த புள்ளைக்கு பேய் ஓட்ட வேண்டும்  “ என்று கூறி மீண்டும் நகைத்தான்..

“ எல்லாம் என் நேரம் டா.. நீ  எல்லாம் என்னை கிண்டல் பண்ற ?? ” என்று நொந்து கொண்டு அங்கு இருந்த மெத்தையில் சாய்ந்து கண்களை மூடினான் கதிரவன்..

 “ சரி சரி நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு டா.. நான் சமையல்காரனுக்கு கணக்கு முடிக்கவேண்டும்  “ என்று கூறி அழகேசன் வெளியே சென்று விட்டான்..

கதிரவனுக்கு சிறிது நேரம் யாரும் தன்னை தொல்லை செய்யாமல் இருந்தால் நல்லது என்று தோன்றியது.. அவனது மனமோ அவனை அறியாமல் இரண்டு நாட்களுக்கு முன் நடந்ததை நினைத்தது…

வசுமதி கல்யாணத்திற்கு சம்மதம் கூறிய அடுத்த சில மணி நேரத்திலே வீட்டிற்கு ஜோசியரை அழைத்து வந்து முகூர்த்த நாள் குறித்து விட்டனர்.. இன்னும் பத்து  நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் ஆளுக்கு ஒரு வேலையை இழுத்து போட்டு செய்ய ஆரம்பித்தனர்..

கதிரவனோ வசுமதியுடன் தனிமையில் பேச துடியாய் துடித்து கொண்டு இருந்தான்.. ஆனால் அவனுக்கோ வேலை நெட்டி முறித்து.. வீட்டிற்கு வந்தால் அவள் அவன் கண்களிலேயே பட வில்லை..  கண்ணில் பட்டாலோ உடன் யாராவது இருப்பார்கள்.. அவளோ தன் பக்கம் இருந்து சிறு முயற்சி கூட செய்ய வில்லை அவனிடம் பேச..

 “ என் முடிவை கேட்டாய் நான் சொல்லி விட்டேன்.. இதற்கு மேல் பேச எதுவும் இல்லை “ என்பது போல அவள் இருந்தாள்..

ஒரு பக்கம் துணி எடுக்க, நகை வாங்க, கோவிலுக்கு சென்று பூஜை செய்ய, அழகு நிலையம் செல்ல, தன் நண்பர்களுக்கு தகவல் சொல்ல என்று அவளுக்கும் வேலை சரியாக இருந்தது.. சரியாக இருப்பது போல் காட்டிகொண்டாள்…

கதிரவனுக்கோ அனைத்து வேலைகளையும் இன்னும் ஐந்து நாட்களில் முடித்தால் தான் அவன் ஒரு இரண்டு நாட்களாவது சிறிது ஒய்வு எடுக்க முடியும்..

இதற்கு இடையில் சரியாக கல்யாணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்னால் அவனுக்கு வசுமதிக்கும் தனிமையில் பேச வாய்ப்பு கிடைத்தது… தலைக்கு குளித்து மாடி வெயிலில் தன் நீல முடியை உளற வைத்து கொண்டு இருந்தாள் கதிரவனின் மதி….

கதிரவன் எதற்காகவோ மேலே வந்தவன் தன்னவளை கண்டதும் ஒரு நிமிடம் மெய் மறந்தான்… அப்பொழுதான் குளித்துவிட்டு எந்த ஒப்பனையும் இல்லாமல் முகத்தில் சிறு சிந்தனையோடும் , கண்களில் ஒரு சிறு மயக்கத்தோடும் நின்று இருந்தவளை பார்த்து ரசித்தான்..

யாரோ தன்னை பார்ப்பது போல இருக்கவும் திரும்பிய வசுமதி நிற்பது கதிரவன் என்று அறியவும் மீண்டும் பழைய படி திரும்பி கொண்டாள்.. அவளது உதாசீனம் அவனுக்கு மனதில் வலியை தந்தது..

“இவளிடம்  பேசியே ஆகவேண்டும்“ என்று எண்ணியவன் வேகமாக அவளிடம் சென்றான்..

“ மதி…..”

அவளிடம் பதில் இல்லை…. மீண்டும் “ மதி “ என்று அழைத்தான்… வசுமதியோ அவன் பக்கம் திரும்பாமல் “ காது கேட்கிறது “ என்றாள் நக்கலாக..

“ குட்டச்சி.. உனக்கு எல்லாம் கூடி போச்சு “ என்று எண்ணியபடி “ உன்கிட்ட கொஞ்சம் பேசவேண்டும்  “ என்றான் உறுதியாக..

“ ம்ம் “

“ நீ உன்.. உனக்கு.. நிஜமவே இந்த கல்யாணத்திற்கு சம்மதமா ?? ” என்று கேட்டே விட்டான்.. அவளோ அவனை திரும்பி புரியாத பார்வை ஒன்றை  பார்த்தாள்..

“ இல்லை நீ… நீ நல்லா யோசித்து தான இந்த முடிவு எடுத்திருக்காயா மதி.. நான் ஏன் கேட்கிறேன் என்றால்  இது .. இதில் நீ “ என்று வார்த்தைகள் வராமல் தடுமாறினான்..

ஆனால் வசுமதியோ ஏதோ நகைச்சுவை கேட்டது போல சிரித்தாள்.. “ அட அட… பலே பலே எப்படி உங்களால் இப்படி எல்லாம் யோசிக்க முடிகிறது?? ” என்றாள் அவனை பார்த்து.. இப்பொழுது புரியாத பார்வை பார்ப்பது அவனது முறை ஆனது..

அவளோ தன் இரு கைகளையும் வீசியபடி “ இல்ல.. கல்யாணத்திற்கு இன்னும் இரண்டு நாள் தான் இருக்கு.. ஆனால் இதில் உனக்கு முழு சம்மதமா என்று  இப்பதான் கேட்க தோணுகிறதோ ??? ” என்றாள் அவனை பார்த்து தன் ஒற்றை புருவம் உயர்த்தி.. ஒரு கணம் அவளது கண் அசைவில் மனம் மயங்கினாலும் பின் சுதாரித்து கொண்ட கதிரவன்

 “ நான் இத்தனை நாளாய் பேச முயற்சி பண்ணிக்கிட்டு கிட்டு தான் இருந்தேன்.. ஆனால்  சந்தர்ப்பம் இல்லை  “

“ஓ !!! சந்தர்ப்பம்.. ம்ம் என்ன செய்வது நீங்க வட துருவத்திலும்  நான் தென் துருவத்திலும் இருக்கேன்.. பேச வாய்ப்பு இல்லாமல் போக “ என்று மீண்டும் நக்கலாக குத்தினாள்..

“ மதி ப்ளீஸ் டி…” என்றான் ஒரு மாதிரி வலி நிறைத்த குரலில்… அவனது குரல் அவளுக்கு என்ன உணர்த்தியதோ தெரியவில்லை..

“ ம்ம் சொல்லுங்க என்ன பேசவேண்டும்  “

“ இல்லை மதி நீ சொல்லு உனக்கு நிஜமாவே இந்த கல்யாணத்தில் முழு சம்மதமா ??? எனக்கு தெரிந்தாகவேண்டும் ஏன்னா அன்று நீ மாடியில் என்னிடம் பேசுனது வேற ஆனால் கீழ வந்து நீ நடந்துகிட்டது வேற.” என்று அவன் பேசி முடிக்கும் முன்னே

“ சந்தேகப்படுறீங்களா??? ” என்று  ஒற்றை வார்த்தையில் அவனது பேச்சை நிறுத்தினாள்..

“ச்சே என்ன மதி இப்படி சொல்லிட்ட.. நான் எப்படி உன்னை சந்தேகப்படுவேன்.. இனிமேல் இப்படி எல்லாம் பேசாத ப்ளீஸ் டி..” என்றான் அவளது கைகளை பிடித்து..

அவளோ ஒரு கணம் அமைதியாக இருந்து பின் “ எனக்கு இந்த கல்யாணத்தில் முழு சம்மதம் “ என்று ஒரு ஒரு வார்த்தைக்கும்  அழுத்தம் குடுத்து கூறி விட்டு சென்று விட்டாள்..

ஆனாலும் கதிரவன் மனது என்னவோ இருக்கிறது என்று கூறி கொண்டே இருந்தது .. என்ன தான் வசுமதி திருமணத்திற்கு சரி என்று கூறியது அவளுக்கு மகிழ்ச்சியை தந்தாலும் அவனால் இன்னும் அவள் கூறுவதை முழுவதுமாக ஏற்றுகொள்ள முடியவில்லை…

“ கதிரவா கதிரவா “ என்று கதவு தட்டும் சத்தம் கேட்டு விழித்தவன் மணி பார்த்தான்.. மாலை எழு மணி என்று காட்டியது. .” ச்சே இவ்வளோ நேரமாவா இப்படி யோசனை செய்து  இருக்கோம் “ என்று எண்ணியவன் மீண்டும் கதவு தட்டும் ஓசை கேட்டு கதவு திறந்தான்..

வேறு யார் இருப்பார்கள் முதல் கரடியும் இரண்டாவது கரடியும் தான்… அழகேசனும் சிவாவும் நின்று இருந்தனர்..

“ என்ன அத்தான் ஒரே ட்ரீம்ஸ் போல “ என்று கிண்டல் செய்து கொண்டே “ இந்தாங்க அத்தான் உங்களுக்கு புது டிரஸ் அம்மாச்சி குடுக்க சொன்னாங்க  குளித்துவிட்டு இதை போட்டுக்கிட்டு வாங்க “ என்று கூறி சென்று விட்டான் சிவா..

அவனுக்கு அப்பொழுது தான் நியாபகம் வந்தது இரவு எட்டு மணிக்கு எல்லாம் நல்ல நேரம் என்று.. அழகேசனோ “ டேய் என்னடா முழிக்கிற.. போ சீக்கிரம் குளித்துவிட்டு வா எனக்கு வயிறு வேறு பசிக்கிரது…” என்று கூறி அவனை பாத்ரூமில் தள்ளி விட்டான்..

 

                              உன் நினைவு – 29

என் காதலனே – உன்னை

கரம் பிடித்தேன் – நீ

எனக்கு தாலி கட்டியதால் – அல்ல

நான் – உன்னை

காதலித்ததால்….    

இரவு 8  மணி ……

கதிரவன் அவன் அறையில் இருந்தான்.. இத்தனை வருடமாக அவன் புழங்கும் அறைதான் ஆனால் இன்று முற்றிலும் வேராக இருந்தது… அழகாக அலங்கரிக்க பட்டு இருந்தது.. ஆனால் அவனோ அதை எல்லாம் ரசிக்கும் நிலையில் இல்லை…

“ குட்டச்சி இப்படியா டி என்னை போட்டு குழப்புவாய்?? ” என்று புலம்பிக்கொண்டு அவளது வரவுக்காய் காத்து இருந்தான்… அவனது இதய துடிப்பு அவனது செவிகளில் கேட்டது… மெல்ல மனதில் இனிய உணர்வுகள் எட்டி பார்த்தன..

இந்த நாளுக்காக தானே இருவரும் இத்தனை நாள் காத்திருந்தனர் “ ஹ்ம்ம் இன்னும் என்ன செய்றாள்??? எப்ப பாரு எல்லாரிடமும் பேசிகிட்டு… இ இ என்று  இளித்துகொண்டு  “ என்று அவன் காதலுடன் கடிந்து கொள்ளும் போதே கதவு திறந்து மூடும் சத்தம் கேட்டது… தன்னவள் வந்து விட்டாள் என்று திரும்பி ஆவலாக பார்த்தான்..

இளம் ரோஜா நிற சேலை அணிந்து, மல்லிகை பூச்சூடி , மிதமான  ஒப்பனையில் மெல்ல மெல்ல நடந்து வருபவளை காண காண தெவிட்டவில்லை…

வசுமதியோ மனதிற்குள் “ மதி …. ரிலாக்ஸ்… இனி தான் நீ பண்ண வேண்டியது நிறைய இருக்கு..சோ காதல் கண்ணை மறைத்தாலும் கொஞ்ச நாளைக்கு நீ தெளிவாய்  இருக்க வேண்டும் ” என்று அவளுக்கு அவளே தைரியம் கூறி கொண்டு நடந்து வந்தாள்…

அவனிடம் வந்து அமைதியாக நின்றாள்… நின்றவள் பால் செம்பை அருகில் இருந்த மேஜையில் வைத்து விட்டு திடீரென்று குனியவும் கதிரவன் வேகமாக…

“ மதி என்ன இது எனக்கு நீ காலுக்கு எல்லாம் விழ வேண்டாம் “ என்று கூறி முடிக்க வில்லை அவள் நிமிர்ந்து விட்டாள்.. அவனை பார்த்து நக்கலாக

 “ நான் காலுக்கு விழுகவில்லை என் சேலை கொலுசில்மாட்டி இருந்தது அதை தான் எடுத்தேன் “ என்றாள் அவனை பார்த்து மெல்ல நகைத்தபடி….

அவனோ அசடு வழிந்தான்…. அதன் பின் “ இந்தாங்க பால் “ என்று செம்பை அவனிடம் நீட்டினாள்..

அவனோ அதை வாங்கி பருகும் வேலையில் “ ஒரு நிமிஷம் “ என்று கூறி கை நீட்டினாள்… அவன் என்ன என்பது போல பார்த்தான்…

அவன் கையில் இருந்த செம்பை அவளாக வாங்கியபடி அதில் இருந்த பாலை பாதி அருந்திவிட்டு “ எனக்கு எச்சில்  வைத்து குடித்தால் பிடிக்காது இப்ப நீங்க குடிங்க “ என்று ஒன்றும் தெரியாதது போல குடுத்தாள் அவனிடம்….

“ ஆகா !!! ஒரு முடிவோட தான் வந்து இருக்கா போல “ என்று எண்ணியவன் வேகமாக மீதம் இருந்த பாலை குடித்தான்.. எங்கு இன்னும் கையில் வைத்து இருந்தால் அதையும் அவளே குடித்து விடுவாள் என்று எண்ணினான் போல…

அவன் குடிப்பதையே பார்த்துவிட்டு “ சரி லைட் ஆப் பண்ணுங்க “ என்றாள் வசுமதி.. அவள் குரலே அவனுக்கு வித்தியாசமாக இருந்தது…

“ இல்லை மதி கொஞ்ச நேரம் பேசிவிட்டு .. பின்ன ….” என்று இழுத்தான்…

“ பின்ன??  பின்ன என்ன ??? எனக்கு தூக்கம் வருகிறது  நான் தூங்கவேண்டும் .. நீங்களும் தூங்குங்க..” என்று கூறி மெத்தையில் ஒரு பக்கத்தில் படுத்து கொண்டாள்..

“ அப்பாடி கோவம் எல்லாம் இல்லை போல அதான் பெட்டில் படுத்து இருக்கா “ என்று என்னும் வேலையில் வசுமதி திரும்பி தன் பக்கத்தில் ஒரு தலையனையை வைத்தாள்…

அதாவது கதிரவன் அங்கே படுத்தால் அந்த தலையணை இருவருக்கும் நடுவில் இருக்கும்.. அதை பார்த்த உடன் …

” மதி “ என்று அழைத்தான்..

“ ம்ம்ம் “

“ என்ன இது ??? “ என்றான் தலையணையை காட்டி

“ பார்த்தால்  தெரியவில்லை  பில்லோ… “ என்றாள் நக்கலாக..

“ம்ம்ச் அந்த ஈரவெங்காயம் எல்லாம் எனக்கும் தெரியும்.. இப்ப எதற்கு அத நடுவுவில் வைக்கிறாய் ?? ”

“ ஏன் சொன்னால்  தான் உங்களுக்கு புரியுமா ??? ” என்றால் அவனையே ஆழமாக பார்த்து..

“ மதி “ என்று அதிர்ந்து “ நீ … நீ … மதி  இது இந்த கல்யாணம்… நீ சரி …. சொன்ன?? ”

மதியோ “ அப்படி வாங்க அத்தான் வழிக்கு  “ என்று எண்ணியவள் “ நான் … நான்… மதி தான் …. இது இது கல்யாணம் தான்…. ஆமாம் நான் கல்யாணத்திற்கு  தான் சரி சொன்னேன் “ என்று தான்னில் ஒரு அழுத்தம் குடுத்து கூறினாள்…

அவனோ தன் காதல் மனைவியை திகைத்து ஒரு பார்வை பார்த்தான் அந்த பார்வையில் இதற்கு என்ன அர்த்தம் என்று இருந்தது.. அவளும் அதை புரிந்தவள் போல எழுந்து வந்து அவனது முகத்தை பார்த்து பேச ஆரம்பித்தாள்..

“ நீங்க நினைக்கலாம் என்னடா இவள்  கல்யாணத்திற்கு சந்தோசமா சரி சொல்லிவிட்டு இப்ப இப்படி செய்கிறாளே என்று  ஆனால்  நான் பேச்சு மாறவில்லை.. நான் கல்யாணத்திற்கு மட்டும் தான் சரி என்று சொன்னேன் வேறு எதுக்கும் சரி சொல்லலை புரிகிறதா ?? ”

அவனோ “ ஆனால்  நான் தான் உங்கிட்ட அப்பையே சொன்னேனே மதி உன் முடிவு தான் என்று அப்புறம்.. ஏன்.. உனக்கு பிடிக்கமால்  இதுக்கு சரி சொன்னாய் ??? ” என்றான் காயம் பட்ட குரலில்..

அவனது குரலில் அவள் என்ன உணர்ந்தாலோ ஒரு நிமிடம் இளகிய தன் மனதை சரி செய்து கொண்டு “ பிடிக்கவில்லை என்று  நான் சொன்னேனா ??? எனக்கு பிடிச்சு தான் இருக்கு….” என்று கூறும் பொழுது அவளது முகத்தில் ஒரு நொடி ஒரே ஒரு நொடி பழைய காதல் வந்து போனது போல இருந்தது கதிரவன்…

“ இதற்கு  தான் நான் அசை பட்டேன்.. ஆனால் நீங்க கேட்கலாம் இவ்வளோ ஆசை பட்டு இப்ப எதற்கு இப்ப விலகி போகிற என்று ..” என்று கூறி அவனது கண்களை பார்த்தாள்…

அவனோ அவளையே பேச விட்டு அமைதி காத்தான்…

ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டு “ ஹ்ம்ம்.. என்ன அமைதியாய் இருக்கீங்க பேச்சு வரவில்லையா ??? அது எப்படி வரும்.. எப்படி எப்படி நீங்க காதலிப்பிங்கலாம்  பின்ன வேணான்னு விரட்டுவீங்கலாம், பின்ன அது இதுன்னு சொல்லி வீட்டுக்கு வர வைப்பீங்கலாம், திடீர்னு வந்து தாலி கட்டுவீங்களாம்.. ஆனால்  நான் … நான் … எதுவுமே சொல்லாம … உங்கள் கூட குடும்பம் நடத்த வேண்டுமோ ?? அதுக்கெல்லாம் வேறு “ என்று பேசிக்கொண்டே போனவள் அவனது முகம் குறும்பாக மாறவும் பேச்சை நிறுத்தினாள்….

இதுவரை அவள் பேசுவதை வலியுடன் கேட்டு கொண்டு இருந்த கதிரவனின் முகம் அவள் கடைசியாக கூற வருவதை புரிந்து லேசான சிரிப்புடன் குறும்படன் பார்த்தான்.. அவளும் அதை புரிந்து கொண்டு….

“ என்ன அதுக்கெல்லாம் வேற ஆளு பார்க்க சொல்வேன் என்று நினைச்சிங்களா ??? அப்படி ஒரு எண்ணம் இருந்தால் ரப்பர் வாங்கி தரேன் இப்பையே அழித்துவிடுங்கள்.. ஏனா உங்களுக்கு இந்த ஜென்மத்தில் நான் தான், நான் மட்டும் தான்.. புரிகிறதா ?? ” என்று தலையை மேலும் கீழும் ஆட்டி பேசினாள்..

அவனோ ஒரு புறம் அவள் பேசுவதை கேட்டு மனம் வருந்தினாலும் அவளது பாவனைகளை கண்டு மறுபுறம் மயங்கினான்….    

” மதி இங்கு பாரு டி.. இப்பயும் நான் சொல்கிறேன் உன் விருப்பம் தான்.. உனக்கு ஆஸ்திரேலியா போகவேண்டும் என்றால் சொல் நானே அனுப்பி வைக்கிறேன்.. எப்ப இங்க வர தோன்றுகிறதோ அப்ப வா.. உனக்கும் நீ ஒரு அவகாசம் கிடைக்கும்.. ” என்றான் அமைதியாக..

வசுமதி ஒரு நிமிடம் திகைதவள் “ என்ன சொல்லறீங்க ??? நான் இப்ப எப்படி போக முடியும்.. என்னால உங்களை விட்டு அப்படி எல்லாம் போக முடியாது.. கல்யாணம் வேற ஆனா பிறகு எனக்கு இனிமே தான் நிறைய பொறுப்பு இருக்கு “ என்று கூறி முடித்தாள்..

 “ என்ன தான் மதி சொல்ல வர பிடித்து இருக்கு என்று சொல்ற காதல் நிஜம் என்று  சொல்ற.. ஏன் டி என்னை இப்படி குழப்பி எடுக்கிற ?? ”     

“ நான் குழப்புகிறேனா ?? தெளிவா சொல்கிறேன் கேட்டுகோங்க.. என் காதல் எனக்கு மட்டும் தான் சொந்தம் என்று  அன்னிக்கே சொன்னேன் இல்லையா.. மனதிற்குள் மட்டும் தான் நான் உங்களை காதலிக்கிறேன் வெளிய மூச்…” என்று உதட்டில் விரல் வைத்து கூறினாள்    

இதற்கு என்ன பதில் கூறுவான் கதிரவன் அவன் புரிந்து கொண்டான். தான் செய்த செயல் மறைமுகமாக அவளை இந்த பந்தத்திற்கு கட்டாய படுத்தி இருக்கிறது என்று.. அவளுக்கு ஒரு சிறு இடைவெளி தேவை பட்டு இருக்கிறது. ஆருயிர் காதலி மனைவியாகவும் ஆகிவிட்டாள் ஆனால் அந்த மகிழ்ச்சியை இருவராலும் அனுபவிக்க முடியவில்லை..  வேதனையில் வாயடைத்து அமைதியாக நின்று விட்டான்..

அவனது கவலை படிந்த முகமும், அமைதியும் என்ன செய்ததோ அவளை மெல்ல பேச ஆரம்பித்தால் மீண்டும் “ ஒன்று  மாட்டும் தெரிந்துகொள்ளுங்கள் நான் உங்களை மனதார விரும்புகிறேன்.. காதலித்தேன் காதலிக்கிறேன்.. இனியும் காதலிப்பேன்… ஆனால் அதுக்காக எல்லாம் உங்க கூட கொஞ்சி குலவ முடியாது.. உங்களை யாருக்காகவும் நான் விட்டு குடுக்கமாட்டேன்.. ஆனால் நீங்க தான் என்னை புரிந்துக்கொள்ளவவில்லை  ஐ லவ் யு.. லவ் யு ஒன்லி… மேட்லி.. இம்மேன்ச்லி… ஆனால்  அதெல்லாம் என் மனதிற்குள் மட்டும் தான்.. ” என்றால் ஆழ்ந்த குரலில்..

” மதி “ என்பதை தவிர வேறு எதுவும் கூறவில்லை..

“ என்ன மதி ?? உங்களுக்கு எல்லாமே மிகவும் ஈஸி தானே. காதல் ஈஸியா கிடைத்தது  கல்யாணம் ஹ்ம்ம் மிகவும் ஈஸியா நடந்தது ஆனால்  நான்… ம்ஹ்ஹும்…. அவ்வளோ ஈஸியாய் கிடைக்கமாட்டேன் ” என்று கூறும் பொழுதே அவளுக்கும் குரலில் வலி தெரிந்தது…

 “ நான் என் காதலை நிரூபிக்க தான் இந்த கல்யாணத்திற்கு சரி சொன்னேன்.. ஏன்னா நான் உங்களை மனசார காதலித்தேன். நீங்க எல்லார் முன்னாலயும் என கழுத்தில் தாலி கட்டுனிங்களே அதற்கு  நான் மரியாதை தர வேண்டாமா ??? என்னை பொறுத்த வரைக்கும் இந்த கல்யாணம் நிஜம்.. என் காதல் நிஜம்…. அவ்வளோ தான் இதற்கு  மேல் என்னிடம் நீங்க வேறு எதையும் எதிர் பாக்க கூடாது..” என்று கூறிவிட்டு மீண்டும் பழைய இடத்தில சென்று படுத்து கொண்டாள்..

இன்னும் அவன் அப்படியே நிற்பதை உணர்ந்த வசுமதி அவன் புறம் திரும்பி “ என்ன இப்படி ஒரு பார்வை ?? இவ்வளோ பேசிவிட்டு இப்படி சொகுசா போயி பெட்ல படுத்து இருக்காளே என்று  தான யோசிக்கிறிங்க.. ஹ்ம்ம் என்ன பண்ணுவது உங்க கூட சண்டை போட்டதுக்காக எல்லாம் நான் கீழ படுக்க முடியாது.. நான் உங்கள் சரி பாதி இல்லையா அதான் பெட்லையும் பாதி… உங்களுக்கு இஷ்டம் இருந்தால் வந்து படுங்க… இஷ்டம் இல்லை என்றால் “ என்று கூறி பேச்சை நிறுத்தி அவனது முகம் பார்த்து

“ இஷ்டம் இல்லை என்றாலும் இங்க வந்து மேல் தான் படுக்க வேண்டும்.. புரிகிறதா ?? ஏன்னா நான் மட்டும் சுகமா பெட்ல படுக்க நீங்க கீழ படுத்தா எனக்கு மனசுக்கு கஷ்டமாய் இருக்கும்.. அதுனால நீங்களும் வந்து சீக்கிரம் படுங்க.. நேரம் ஆகுது..” என்று கூறி கண்கள் மூடி கொண்டாள்…

“ குட்டச்சி என்னா பேச்சு பேசுகிறாள்??? ” என்று எண்ணிய படி வந்து படுத்தவனுக்கு உறக்கம் வரவே இல்லை… அவனுக்கு அவனது அறையில் இருக்கும் வசுமதி முழுதும் புதியவளாக தெரிந்தாள்..

அவள் பக்கம் திரும்பினான்.. வசுமதியோ முதுகு காட்டி படுத்து இருந்தாள்.. அப்பொழுதுதான் அவனுக்கு ஒன்று உரைத்தது இதுவரை அவள் அவனை அத்தான் என்றோ கதிர் என்றோ அழைக்கவில்லை.. காதல் கொண்ட கதிரவனின் மனம் மிகுந்த வேதனையை அனுபவித்தது..

வசுமதியோ “ ஐம் சாரி அத்தான்… ஆனால்  நீங்க என் காதலை உணர்ந்த மாதிரி என் வலியையும் உணர வேண்டும் அத்தான்.. காதல், கல்யாணம், தாலி இதெல்லாம் அவ்வளோ ஈஸி இல்லை என்று  உங்களுக்கு புரிய வேண்டும் அத்தான்.. “ என்று அவள் மனதிற்குள் அவனிடம் பேசி கொண்டு இருந்தாள்..

கதிரவனோ ஒரு விரக்தியான சிரிப்பை சிந்தி “ ஏன் டி மதி அன்னிக்கு அத்தனை பேரையும் மீறி தாலி கட்தின எனக்கு உன்னை என் வழிக்கு கொண்டு வர தெரியாதா ?? ஆனால்  நான் அப்படி செய்ய மாட்டேன் மதிம்மா.. ஏன்னா நானும் உன்னை மிகவும் லவ் பண்றேன்… உன் உணர்வுகளுக்கு மரியாதை குடுக்கிறேன்.. அதான் இப்படி அமைதியாய் இருக்கிறேன் டி “ என்று எண்ணினான்…

“ நீ உன் காதலை நிருபிக்க என்னை கல்யாணம் பண்ண.. நான் உன்னை கல்யாணம் செய்து என் காதலை உனக்கு புரிய வைக்கிறேன்…  ஒரு நாள் உன் மனதிற்குள்  இருக்க காதல் வெளிய வரும் டி மதி “ என்று அவளது முதுகிடம் கூரிகொண்டான் மெதுவாக..   

வசுமதி திருமதி. கதிரவன் அக மாறி ஒரு மாதம் ஆகிவிட்டது. ஆனாலும் அவர்களது உறவில் எந்த முன்னேற்றமும் இல்லை.. அன்று அவள் தன் முடிவை கூறிவிட்ட பின் கதிரவன் மிகவும் துடித்து போனான்.. ஆனாலும் அவள் மனம் புரிந்து, அவளது உணர்வுகளுக்கு மதிப்பு குடுத்து அவளது காதலையும் புரிந்து கொண்டு அமைதியாக இருந்தான்..

என்னதான் அமைதியாக இருந்தாலும் அவனது மனம் அவளது அருகாமைக்காக ஏங்க தான் செய்தது… என்ன இருந்தாலும் காதலித்து மணம் புரிந்தவள் ஆயிற்றே.. கண் முன்னே மனைவியாக வளைய வரும் பொழுது சில நேரம் என்ன பல நேரம் அவனது மனம் தடுமாற தான் செய்தது.. இருந்தாலும் பொறுத்து கொண்டான்… திருமணம் முடிந்தபின் மறு வீட்டிற்கு இருவரும் சென்னை சென்று வந்தார்கள்..

தன் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து தன் கணவனை அறிமுகம் செய்து வைத்தாள்.. ஒரு நாள் ராம் வீட்டிற்கு சென்று வந்தார்கள்.. இப்படி அனைத்துமே மகிழ்ச்சியாக தான் பொழுது கழிந்தது.. இருந்தாலும் மனதின் ஓரத்தில் ஒரு வெறுமை.. ஏன் என்றே கூற முடியாத ஒரு தவிப்பு..

வசுமதிக்கும் அதே உணர்வு இருக்க தான் செய்தது.. அவளை அறியாது அவளது பார்வை கதிரவன் இருக்கும் பக்கம் அடிக்கடி பாய்ந்தது.. மனதிற்குள் வெளியே சொல்ல முடியா ஏக்கம் எட்டி பார்த்தது.. ஆனால் இந்த தவிப்புகள் எல்லாம் அவன் மேல் மேலும் கோவத்தை அதிகரிக்க தான் செய்தது…

வசுமதி அங்கேயும் சேலை கட்டி கொண்டு சுற்றுவதை கண்ட அவளது நண்பர்களும் தோழிகளும் அவளை நன்றாக கிண்டல் செய்து விட்டு சென்றனர்…

“ மதி இங்க நீ உனக்கு பிடித்த மாதிரி டிரஸ் போடு… ஏன் இங்கயும் சேலையே கட்டி இருக்க ?? ” என்றான்..

அவளோ “ ஏன் இது நல்லா தான இருக்கு ?? ”

“ அதற்கு இல்லை மதி உன் பிரண்ட்ஸ் எல்லாம் வேற கிண்டல் பண்ணாங்க.. அதான் சொன்னேன்..?? ” என்று  கூறவும் மண்டையை நன்றாக ஆட்டியவள்.

 “ அவங்க  சொன்னால்  நான் மாற்றிக்க வேண்டுமா ?? இங்க அப்படி போட்டிட்டு மறுபடியும் அங்கு போடிக்கு போய் சேலை தான கட்ட வேண்டும்.. பரவாயில்ல எனக்கு ஒன்றும் கஷ்டமில்லை…” என்றாள் வெடுகென்று..

“ஹ்ம்ம் பின்ன எதற்கு மதி நான் சொன்ன ஒடனே சுடிதார்க்கு மாறின???” என்றான் அழமாக அவளது கண்களை பார்த்தபடி.. இவன் இப்படி கேட்பான் என்று அவளுக்கு தெரியவில்லை.. ஒரு நிமிடம் அவனது கேள்வியிலும் அவனது பார்வையிலும் திணறிவிட்டாள்…

 “ ச்சே என்ன இப்படி பார்த்து தொலைக்கிறான்” என்று எண்ணியபடி நின்று இருந்தாள் அவன் முகத்தையே பார்த்தபடி..

அவனோ அவளது மனதை அறிந்தவன் போல சிரித்துகொண்டு “ ஹலோ மதி தேவி என்ன நின்றுகொண்டே ககனவா ?? ” என்று அவள் முன் சுடக்கு போட்டான்..

அவன் மதி தேவி என்று அழைத்தது அவளுக்கு பழைய நியாபகங்களை நினைவு படுத்தியது..  அன்று அழகேசன் கதிரவனிடம் “ உன் மதி தேவி உடன் நகர் வளமா ?? ” என்று கிண்டலாக பேசியது.. அதன் பிறகு இவள் தன் ,மனதை உணர்ந்து கொண்டது என்று அனைத்தும் அவளது கண் முன் காட்சிகளாய் விரிந்தன..

அவள் உணராமலே அவளது முகம் செம்மையுற்றது.. அவனுக்குமே அவளது முகம் மாறியது கண்டு மனம் மகிழ்ந்தது… மெல்ல அவள் அருகில் சென்று அவளது கைகளை பற்றியபடி “ மதி “ என்றான் அவளது காதோரம்..

அவளுக்கோ பழைய நினைவுகளில் அவனிடம் இருந்து விலக வேண்டும் என்று கூட தோன்றவில்லை… மீண்டும் “ மதி” என்று அழைத்தான் கதிரவன் அவளை லேசாக தன் கை வளைவில் கொண்டு வந்து..

“ ம்ம் “

“ நான் கேட்டதற்கு பதிலே சொல்லவில்லை “ என்றான் கதிரவன் மிகவும் மென்மையாக..

“ இவன் என்ன கேட்டான் “ என்று யோசித்தவளுக்கு, தான் இருக்கும் நிலைமையும் அவனது செயலும் புரிந்து வேகமாக அவனிடம் இருந்து விலகி நின்றாள் கண்களில் கோவத்தை காட்டி.. அவனோ ஒரு நிமிடம் திகைத்து விட்டான்.. எதுவோ பேச வாய் திறந்தவனை

“ போதும் நீங்க எதுவும் பேச வேண்டாம். என்னடா திடிர் என்று என் விருப்பத்துக்கெல்லாம் நீங்க மரியாதை குடுக்கறிங்கலேன்னு நினைத்தேன். ஆனால்  அது எதுக்கு என்று இப்ப தான தெரியுது… இங்க பாருங்க நீங்க சேலை கட்டு என்று  சொன்னால் நான் கட்ட வேண்டும் இல்லை வேறு போடு என்று சொன்னால்  போடணுமோ ?? அதெல்லாம் முடியாது.. “ என்று கூறி வேகமாக சென்று விட்டாள்..

அவளுக்கு என்னவோ அவனோடு சண்டை போடுவது, இப்படி எரிந்து விழுவது எல்லாம் பழகி போயி விட்டது.. ஆனால் நாள் ஆக ஆக கதிரவனால் அவளது உதாசீனத்தை தாங்கி கொள்ள முடியவில்லை.. இனிமேல் எதுவும் பேச கூடாது என்று அமைதியாக இருந்துவிட்டான்.. வசுமதி எதாவது பேசினாள் மட்டுமே பதில் பேசுவான்.. எதற்கு தேவை இல்லாமல் அவளை தொல்லை செய்துகொண்டு என்று சற்று அமைதியாக இருந்தான்… ஆனால் அவனது அமைதியே அவளை ஆட்டி படைத்தது..  

வசுமதி என்னவோ பெரியதாக கதிரவனை திட்டிவிட்டு வந்துவிட்டாள் ஆனால் அன்றிலிருந்து மதி சேலைக்கு விடுமுறை குடுத்துவிட்டு தான் எப்பொழுதும் அணியும் உடைகளையே அணிந்தாள்..

அன்றும் அப்படிதான் அடர் நீல நிற குர்தி போட்டு சந்தன நிற லெகின்ஸ் போட்டு அமர்ந்து இருந்தாள்.. கதிரவனோ மதியை இப்படி பட்ட உடைகளில் எல்லாம் பார்த்தது இல்லை.. அங்கே சுடிதார் இல்லை சேலை மட்டும் தான் அணிவாள்..,, ஆனால் இங்கேயோ தினம் தினம் வித விதமாக அணிந்து கொண்டு அவளை அறியாமலேயே அவனை படுத்தி கொண்டு இருந்தாள்..

முதலில் இதை கதிரவன் கவனிக்கவில்லை, அதன் பிறகு தற்செயலாக பார்த்தவன்  “ குட்டச்சி இப்படி அழகா இருந்துகிட்டு என்னை படுத்துகிறாளே ?? ” என்று மனதிற்குள் புலம்பியபடி அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்தான்..

அவளது அருகே செல்ல மனம் துடித்தது.. “ ச்சே நான் இங்க கிடந்து  தவிக்கிறேன்.. இவள் ஒன்றுமே தெரியாத மாதிரி இப்படி இருக்காளே.. நிஜமாகவே இவளுக்கு எதுவுமே தோன்றவில்லையா ?? ” என்று புலம்பி கொண்டு இருந்தான்.. ஆனாலும் அவளிடம் சென்று இதை எல்லாம் அவனால் பேச முடியுமா ??

சிவா கல்லூரி விட்டு வரவும் மாலை வசந்தி வீட்டிலேயே அனைவருக்கும் பஜ்ஜி போட்டு குடுத்தார்.. கதிரவனும் சிவாவும் பேசியபடி சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.. சிவா கல்லூரியில் நடக்கும் கலாட்டாக்களை எல்லாம் கூறி கொண்டு இருந்தான்.. கதிரவனும் தான் படிக்கும் பொழுது நடந்த சுவையான சம்பவங்களை எல்லாம் கூறி கொண்டு இருந்தான்…

இதை கண்ட வசுமதி எண்ணையில் போட்ட பஜ்ஜியாக பொரிந்தாள்  “ என்ன ஒரு திண்ணக்கம்… நல்லா கல்லு மாதிரிஉட்கார்ந்து பஜ்ஜி சாப்பிடுவதை.. சரி இவள் வேற டிரஸ் போட்டு இருக்காளே என் திரு  கொஞ்சமாவது கவனிக்கதோணுகிறதா ?? என் தம்பி கிட்ட மட்டும் இளிச்சு இளிச்சு பேச வேண்டியது.. ஒருத்தி இருக்காளே என்று ஒரு நினைப்பு இருக்கா ?? ” என்று மனதிற்குள் கருவியவாறே சென்று இருவருக்கும் நடுவில் அமர்ந்தாள்…

சிவாவோ அவளது முகத்தை கவனிக்காமல் “ ஏய் பிசாசு.. ஏன் டி இப்படி இடிபாடு மாதிரி இடிச்சுகிட்டு வந்து உட்கார? அங்க  தான் அவளோ இடம் இருக்கே ?? ” என்று திட்டினான்..

கதிரவனுக்கு புரிந்து விட்டது.. “ ஆகா மனதிற்குள் லேசா பொறமை எட்டி பார்க்கிறது  போலையே.. பட்சி தானா வந்து பக்கத்தில் வருகிறது “ என்று எண்ணினான்.. வேண்டும் என்றே அவளை சீண்டும் பொருட்டு,

“ அது ஒன்றும் இல்லடா சிவா நான் உன்கிட்ட உட்கார்ந்து  பேசிட்டு இருக்கேன்    அதான் உன் அக்காவிற்கு பொறுக்க முடியவில்லை… உள்ள அப்படியே வேகுது போல.. ஹ்ம்ம் நீயே அவகூட பேசு டா “ என்று கூறி அறைக்கு சென்று விட்டான்..

ஆனால் இதை எதிர்பார்க்காத வசுமதியோ அவன் போவதையே பார்த்தபடி “ போவதை பார் இவன் எதற்கு என்னை காதலித்தான் ??? எருமை.. இவன் எல்லாம் சாமியாரா ய்போயி இருக்கலாம்.. கொஞ்சமாவது எதாவது இவனுக்கு புரியுதா??? சரி இவ அப்படி பேசிட்டாலே நம்ம அவள் மனதை மாற்றுவதற்கு எதாவது செய்யலாம் என்று இருக்கா?? நல்லா மூக்கு முட்ட திங்க வேண்டியது..” என்று பொருமியபடி இருந்தாள்..

சிவாவிற்கு நிறைய நாள் ஆகிவிட்டது தன் உடன் பிறந்தவளுடன் பேசி. அந்த உற்சாகத்தில் வேண்டும் என்றே அவளோடு சீண்டினான் சண்டை போட்டான் அவளுக்கு இதுவே தோன்றியதோ என்னவோ.. அவளும் பதிலுக்கு பதில் கொடுத்து கொண்டு இருந்தாள்..

சண்டை முத்தி போகவும் வசுமதி “ போடா .. நீ பேசாத “ என்று கூறி அமைதியாக அமர்ந்து கொண்டாள்… ஆனால் சிவாவோ அவளை விடுவதாக இல்லை… மேலும் மேலும் அவளை சீண்டிக்கொண்டும் வம்பிழுத்து கொண்டும் இருந்தான்.. சிறிது நேரம் அமைதியாய் இருந்த வசுமதியும் அவனோடு இயல்பாக பேச ஆரம்பித்து விட்டாள்…

இதை எல்லாம் அமைதியாக கவனித்து கொண்டு இருந்த கதிரவனுக்கு மனதில் ஒரு யோசனை தோன்றியது…

வசுமதிக்கோ பேசாமல் போடிக்கே போய்விடலாமா என்று கூட தோன்றி விட்டது.. எப்பொழுது பார்த்தாலும் வசந்தி சண்முகநாதன் இருவரும் கதிரவனையே மாப்பிள்ளை மாப்பிள்ளை என்று கவனித்து கொண்டு இருந்தனர்.. சிவாவும் கல்லூரி விட்டு வந்தால் அவனது அத்தானுடனே நேரம் கழித்தான்.. வசுமதியை யாரும் கண்டுகொள்ள வில்லை என்று அவளாக நினைத்து கொண்டாள்..

“ச்சே இங்க இருக்கவே பிடிக்கவில்லை.. அங்க என்றால்  அத்தையும் ஆச்சியும் எப்படி என்னை பார்த்துப்பாங்க.. இவன் வந்து எல்லாரையும் மயக்கிவிட்டான் “ என்று எண்ணினாள்..

இது தெரியாத கதிரவனோ “ வந்து இத்தனை நாள் ஆனது . ஊருக்கு வேற போக வேண்டும் இவளிடம் சொன்னால் என்ன சொல்வாளோ ??“  என்று யோசித்து கொண்டு இருந்தவன் வசுமதி வருவதை கண்டு கண் மூடி படுத்துகொண்டான்..

அதை கண்ட அவளோ “ நல்லா தூங்குவதை பாரு.. எப்படி வருது பார்க்க பார்க்க.. “ என்று அவனை திட்டியவாறே சென்று அவன் அருகில் படுத்தாள்.. படுத்தவளுக்கு உறக்கம் தான் ஏனோ வரவில்லை..

“ இவன் மட்டும் நல்லா தூங்குகிறானே ??? ஹ்ம்ம் எழுப்பி விடலாமா ?? ஊருக்கு போக வேண்டும் என்று  சொல்ல வேண்டுமே. இங்கு இருந்தா என்னை யாரும் கவனிக்கவே மாட்டாங்க “ என்று யோசித்தபடி விரல் நிகத்தை சிறிது நேரம் ஆராய்ச்சி செய்தாள்.. பின் புரண்டு படுத்தாள்.. மீண்டும் கதிரவன் புறம் திரும்பி படுத்தாள்.. அவனோ உறங்காமல் இவள் என்ன செய்கிறாள் என்பதை கவனித்து கொண்டு இருந்தான்.

” ஏன் இப்படி உருண்டுகிட்டு இருக்கா ?? ” என்று யோசனை செய்தவன் “ ஹே மதி சும்மா தூங்கமாட்டியா ?? ஏன் இப்படி உருண்டுகிட்டு இருக்க ?? ”

அவளுக்கோ “ யப்பா இவன் தூங்கவில்லை..” என்று எண்ணியவள் வேகமாக எழுந்து அமர்ந்தாள்.. அவளின் செயல்கள் அனைத்தும் இவனுக்கு வித்தியாசமாக பட்டது..

“ தூங்கவில்லையா ?? ” என்றாள் கரிசனமாக..

“ஆகா !!! இம்புட்டு கரிசனமாய் பேசுகிறாலே..இதற்கு பின்னால் என்ன ஆப்பு ரெடி பண்ணி வச்சு இருக்காளோ?? ” என்று எண்ணியவாறே “ ஹ்ம்ம் தூங்கனும்…” என்றான் மொட்டையாக..

“ தூக்கம் வருகிறதா ?? ” என்றாள் மீண்டும் அவனது தலையணை சுரண்டியபடி..

“ இவளுக்கு என்னதான் வேண்டும் “ என்று நினைத்தவன்

“ என்ன விஷயம் சொல்லு ?? ”

“ சொல் மதி என்று  சொன்னால்  இவனுக்கு முத்து உதிர்ந்துவிடுமா ?? ” என்று மனதில் கடிந்தவள்.. ” வேண்டாம் இப்ப கோவத்தை காட்ட கூடாது எதுவானாலும் அங்க  போயி தான் பார்த்துக்க வேண்டும்“ என்று எண்ணிவிட்டு

“ இல்ல.. நம்ம இங்கு வந்து இத்தனை  நாள் ஆச்சு.. அதான்…” என்று இழுத்தாள்..

கதிரவனோ “ஆகா இம்புட்டு குழையுராளே.. எதுனாலும் அவளே சொல்லட்டும்” என்று நினைத்துகொண்டு “ ம்ம் ஆமா..அதுக்கென்ன ??”                  

“ நம்ம நாளைக்கு ஊருக்கு போகலாமா ?? ” என்றாள் வசுமதி

அத்தனை நேரம் வரை கண்கள் மூடியபடியே அவளிடம் படுத்து பேசி கொண்டு இருந்தவன் இப்பொழுது கண் முழித்து அவளை பார்த்தான்..

 

Advertisement