Advertisement

உன் நினைவு – 20

உன் கை கோர்க்க

ஒரு ஜென்மம் தவமிருந்தேன்….

உன் தோல் சாய

மனம் தவித்திருந்தேன்…

உன் கண்களில் என்னை 

துளைத்து – உன் இதயத்தில்

ஒளிந்து கொண்டேன்….

தண்டனை தருகிறேன் என்று

கூறி – இதயத்தை பூட்டி

வைத்தாய் – நான் எப்படி

வெளி வருவதாம் ????

வசுமதியின் சேலை நிறம் என்னவோ அதே நிறத்தில் சட்டை அணிந்து அழகான வெள்ளை வேட்டி கட்டி அந்தஸ்தாக ,கலையாக கம்பீரமாக நின்று இருந்தான்..

“ ஹே !! போதும் டி சைட் அடிக்காத “ என்று கூறி அவளை இடித்தபடி வசுமதியின் அறை உள்ளே வந்தான்.. “ ஹா ஹா சைட்டா நானா ??? உங்களையா ??? கனவு எதும் கண்டீங்களா அத்தான் ??? அது சரி இங்க என்ன பண்ணுறீங்க “ என்று பேச்சை மாற்றினாள்..

அவளையே பார்வையால் அளந்தவாறு “ அது ஒண்ணுமில்லை என் அத்தை மகள் ஒருத்தி இங்கு இருக்கிறதாய்  தகவல் வந்தது பார்க்க தேவதை மாதிரி இருப்பாளாம்  அதான் அப்படி யார் இங்க இருக்கா ?? அதுவும் எனக்கு தெரியாமல் ” என்று  சுற்றும் முற்றும் தேடுவது போல பார்த்து அவளை வம்பிழுக்க ஆரம்பித்தான்…                                              

தன் இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தபடி நின்றாள் வசுமதி… “ என்ன அத்தான் குசும்பு கூடி போனத அப்ப நான் அழகா இல்லையா ??? ”

“ ஹேய் !!! மதி குட்டி…. நான் சும்மா சொன்னேன் டி.. நீ அழகில்லாமல் வேறு யார் அழகு?? அப்படியே வானத்தில் இருந்து வந்த தேவதை மாதிரி இருக்க…” என்று கூறியபடி அவளை நெருங்கினான்..

“ இங்க பாருங்க அத்தான் இது கொஞ்சம் கூட சரி இல்லை.. முதலில் தள்ளி நில்லுங்க நான் இப்பதான் ரெடி ஆகியிருக்கேன்.  தள்ளுங்க கீழ போகணும்.. பசிக்கிது “ என்றபடி அவனை கடந்து சென்றாள்.  அவள் கதவை எட்டுவதற்குள் அவளுக்கும் கதவிற்கும் இடையில் வந்து நின்றுவிட்டான் கதிரவன்.. அவளை பார்த்து மெல்ல நகைத்தபடி கதவில் சாய்ந்து நின்று கொண்டான்…

அவளோ சிணுங்கியபடி “ ஏன் அத்தான் இப்படி அடம் பிடிக்குறீங்க ??? கொஞ்சம் கூட சரியே இல்லை நீங்க.. வர வர உங்களுக்கு பயமே இல்லை.. வீட்டில் இருக்குறவங்க பார்த்தால் என்ன நினைப்பாங்க அத்தான் ???  ”

அவளது கைகளை பிடித்து தடவியபடி “ ஹேய் !!! மதி செல்லம் இப்படி எல்லாம் சினுங்காதடி.. அப்புறோ வீட்டில் இருக்குறவங்களுக்கு இன்னுமா தெரியாது என்று  நினைக்கிற லூசு மதி “ என்று அவள் தலையில் முட்டினான்..

“ என்ன… என்ன அத்தான் சொல்றீங்க ??? அப்ப எல்லாருக்கும் தெரியுமா ?? அது எப்படி அத்தான் உங்களுக்கு தெரியும்… அத்தை மாமா ஏதாவது உங்களிடம்  கேட்டார்களா ?? ” என்று பட படபடத்தாள்..

“பொறு பொறு மதி … ஏன் இப்படி டென்ஷன்??? எல்லாம் உறுதியா தெரியவில்லை  நான் ஒரு யூகத்தில் தான் சொன்னேன்…  எல்லாரும் பேசுவதை வைத்து தான் சொல்கிறேன் மதி..இது உன் வீட்டில் கூட தெரிந்து இருக்கலாம் “ என்றான் கூலாக..

 “ என்ன??? என்ன அத்தான் இது ??? ஆனால்  அம்மா என்னிடம் எதுவும் கேட்கவில்லையே ?? ”

“ மதி மதி …. நான் சொல்வதை கொஞ்சம் பொறுமையாய் கேளு டி.. எல்லாம் என் அனுமானம் தான்.. எதுவும் உறுதி இல்லை புரிகிறதா ??? செல்லம் நீ ஏன் டி  டென்சன் ஆகுற? அப்படியே தெரிஞ்சாலும் வீட்டில் எல்லாம் சந்தோஷம் தான் படுவாங்க…  இன்னும் இரண்டு மாசம் மாட்டும் நம்ம அமைதியா இருக்கலாம்.. பில்டிங் ப்ராஜெக்ட் முடியட்டும்….  நாமலே வீட்டில் சொல்லிடலாம் என்ன டி ?? ஒரு வேலை நாமலே சொல்லவேண்டும் என்று  எல்லாம் எதிர்பார்கிறார்கள்  போல மதி “

“ ஹ்ம்ம் சரி அத்தான்.. இப்படியா வந்து என்னையே டென்ஷன் ஏற்றுவது?? கொஞ்ச நேரம் பயந்துவிட்டேன்.. ”

“ அப்படியா அப்ப சரி நானே உன்னை  ரிலாக்ஸ் பண்ணுகிறேன் ” என்று மீண்டும் அவள் அருகில் வந்தான் கதிரவன்… அவன் கதவை விட்டு விலகவுமே வசுமதி அவனை ஒரு தள்ளு தள்ளி விட்டு வேகமாக கீழே ஓடிவிட்டாள்..

“ யப்பா என்ன ஒரு இடி இடுச்சிட்டா ?? என்று தன் கைகளை தேய்த்தபடி “ கதிரவனும் கீழே வந்தான்..

ஒரு வழியாக அழகேசனை கிளப்பி கொண்டு அனைவரும் கிளம்பினர்.. அங்கு இருக்கும் அம்மன்  கோவில் மண்டபத்தில் தான் நிச்சயதார்த்தம்…

அழகேசனோ கார் விட்டு இறங்கியதும் யாரையும் பார்க்காது நேரே மண்டபத்தில் இருக்கும் அறைக்கு சென்று விட்டான்.. ஒரு வேலை அனைவரையும் பார்த்து இருந்தால் கூட அவனது சந்தேகம் தீர்ந்து இருக்கும்.. ஆனால் அவன் எண்ணம் அனைத்துமே எப்படி இந்த நிச்சயத்தை நிறுத்துவது என்று தான் இருந்தது… சிவாவும் ராமும் கையில் கேமராவை வைத்து கொண்டு தங்கள் வேலையை ஆரம்பித்து விட்டனர்.. போட்டோ எடுக்கிறேன் என்று அழகேசனை ஒரு வழி படுத்தி விட்டனர்.. அழகேசனுக்கு திடீரென்று மீனாட்சி குரல் கேட்பது போல இருந்தது…

பக்கத்து அறை தான் மணப்பெண் அறை.. “ அம்மா இந்த பூ ரொம்ப இருக்குமா.. தலையை இழுக்குது மா “ என்று மீனாட்சி தான் தன் அம்மாவிடம் குறை பாடி கொண்டு இருந்தாள்..

“ என்ன இது இது மீனு குரல் மாதிரி இருக்கே ??? அவள் என்ன செய்கிறாள் இங்க ?? “ என்று திடுக்கிட்டவன்.. “ ச்சே.. எல்லாம் அவன் நினைப்பாக இருப்பதினால்  வந்தது.. யார் பேசினாலும் அவள் பேசுவது மாதிரி இருக்கு.. இந்த பொண்ணு ரூம் பக்கத்தில்  தான் இருக்கு போல..  எப்படியாவது அந்த பொண்ணுகிட்ட நம்ம மனதில்  இருக்கிறதை சொல்லிட்டா போதும்… பின் அவளே இதை எல்லாம் நிறுத்திடுவா “ என்று யோசனை செய்து அதை செயல் படுத்த காத்து இருந்தான்…      

காமாட்சி  வசுமதியை அழைத்து மீனாட்சி மற்றும் அவள் குடும்பத்தார்க்கு அறிமுகம் செய்து வைத்தார்.. முதல் பார்வையிலேயே அனைவருக்கும் அவளை பிடித்து விட்டது.. மீனாட்சியை தான் அலங்கரித்து கூட்டி வருவதாக கூறவும் அனைவரும் வேறு வேலை பார்க்க சென்று விட்டனர். அனைவரும் சென்ற பின் மீனாட்சி வசுமதி கைகளை பிடித்து “ மிகவும் தேங்க்ஸ் வசுமதி “ என்றாள் கலங்கிய கண்களோடு…

ஆனால் வசுமதியோ சிரித்தபடி “ அண்ணி நமக்குள்ள அதெல்லாம் வேண்டாம் அழகு அண்ணன் எனக்கு அண்ணனா நீங்க எனக்கு அண்ணி தான.. அப்ப நாம எல்லாம் ஒரே குடும்பம் தான ?? ” என்றாள்..

வசுமதி மீனாட்சியை அண்ணி என்று அழைத்தது மிகவும் பிடித்து விட்டது.. ” சரி சரி நான் தேங்க்ஸ் சொல்லவில்லை.. நீங்க வாங்க போங்க எல்லாம் வேண்டாம் சரியா.. என்னை நீ வா என்று பேசு வசுமதி.. ” என்றாள் சிநேகமாக.. இருவரும் சிறிது நேரத்தில் நல்ல தோழிகள் ஆகிவிட்டனர்.. ஆனாலும் வசுமதி அண்ணி என்ற அழைப்பை மட்டும் விடவில்லை..

“ அண்ணி உன் முகத்தை பார்த்தால் ஏதோ டென்சனில் இருப்பது மாதிரி இருக்கு  எதுவும் பிரச்சனையா ?? ” என்று கேட்டாள் வசுமதி..

 “பிரச்சனை எல்லாம் இல்லை வசு.. எல்லாம் உங்கள் அழகு அண்ணனை நினைத்தால்  தான் பயமா இருக்கு.. அதான் என்ன சொல்வாரோ என்று  தான் தயக்கமாய்  இருக்கு “ என்றாள் கவலையாக..

“எதுவும் நினைக்காதிங்க அண்ணி.. அண்ணனிடம் இன்னும் பெண் யாரென்று கூட சொல்லவில்லை.. அவருக்கு நீ தான் கல்யாண பெண் என்று தெரியாது.. ஆனால்  ஒன்று  மாட்டும் உறுதி அண்ணி அண்ணன் மனம் முழுக்க நீ தான் இருக்க.. இந்த நிச்சயத்தை நிறுத்த எத்தனை பாடு தெரியுமா?? நீ வேணா பாரு இன்னும் கொஞ்ச நேரத்தில் அண்ணன் இங்கு வந்து உன்கிட்ட பேசுவாரு “ என்று கூறி முடிக்கவில்லை  கதவு தட்டும் ஓசை கேட்டது..

வசுமதி அர்த்தமாக சிரித்து பின் உள்ளே மறைந்து நின்று கொண்டாள்.. மீனாட்சி பதட்டத்துடன் கதவு திறந்து திரும்பி நின்றுகொண்டாள்.. வந்தவன் அழகேசன் தான்.. எதிரில் நிற்கும் பெண்ணை நிமிர்ந்து கூட பார்கவில்லை..

 “ இங்க பாருமா  எனக்கு உன் பேரு கூட தெரியாது.. என் நண்பன் கதிரவனின் அப்பா அம்மா தான் இந்த ஏற்பாடு எல்லாம் பண்ணிட்டாங்க.  என் கிட்ட கூட சொல்லலை.. அது அவர்கள் என் மீது இருக்க அக்கறைல தான் பண்ணுனாங்க.. நானும் அவர்கள் வார்த்தைய மீற முடியாம வந்துவிட்டேன்.. ஆனால்  இந்த கல்யாணத்தில் எனக்கு கொஞ்சம் கூட இஷ்டமில்லை..” என்று பேச ஆரம்பித்து அவன் மீனாட்சியை பற்றி கூறி இந்த நிச்சயத்தை நிறுத்த கூறி சென்று விட்டான்..

மீனாட்சி அதிர்ந்து போயி நின்று விட்டாள்.. “ இவனுக்கு இத்தனை காதலா ??? அதுவும் என் மீது…  இப்படி பேசிவிட்டு செல்கிறானே.. “ என்று அப்படியே நின்றுவிட்டாள்..

வசுமதி சிரித்தபடி “ என்ன அண்ணி நான் சொன்னது சரிதானே… பார்த்திங்களா அண்ணன் மனதில் நீங்க தான் இருக்கீங்க.. இப்ப சந்தோசமா ?? ”

“ அது எல்லாம் சரிதான் வசு.. ஆனால்  “ என்று தயங்கினால் மீனாட்சி..

“ இந்த ஆனால் ஆவன்னாலா வேண்டாம் அண்ணி.. நீங்க பேசாமல் இருங்க.. எல்லாம் நல்ல படியா நடக்கும் அண்ணி “ என்று அவளை அழைத்தபடி சென்று விட்டாள்..

அழகேசன் இன்னும் சிறிது நேரத்தில் நிச்சயம் நின்று விடும் என்ற சந்தோஷத்தில் சிரித்தபடி இருந்தான்… ராம் கூட கேட்டான் “ என்ன அழகு இவ்வளோ நேரம் உர்ருன்னு இருந்த இப்ப என்ன ஒரே சிரிப்பா இருக்க ??? ” என்றான் சந்தேகமாக..

 “ அதுவா அதெல்லாம் ஒண்ணுமில்ல டா ராம் சும்மா தான் … “ என்று சமாளித்தான்…

அய்யர் மாப்பிள்ளை பொண்ணை  அழைத்து கொண்டு வாங்க என்று அழைக்கும் குரல் கேட்டது.. அழகு சந்தோஷமாக“ யப்பா இப்ப வந்து அந்த பொண்ணு இஷ்டமில்லைன்னு சொல்லிடும் “ என்ற நம்பிக்கையோடு சென்றான்… நிச்சய பத்திரிக்கை படிக்கும் முன் பெண் மாப்பிள்ளையிடம் சம்மதம் கேட்பார்கள்.. அழகேசன் தன் அருகில் வந்து நின்றவளை திரும்பி கூட பார்கவில்லை.. இரு குடும்பத்து ஆட்களும் இரு புறமும் அமர்ந்து இருந்தனர்.. அதையும் அவன் கவனிக்கவில்லை..

அழகேசன் அருகில் கதிரவனும் மீனாட்சி அருகில் வசுமதியும் நின்று இருந்தனர்.. வசுமதி இப்பொழுதே கனவு காண ஆரம்பித்து விட்டாள்.. நமது நிச்சயமும் இப்படிதான் நடக்கும் என்று கண்களில் பேசினான் கதிரவன்..

இதை கேமராவின் கண் வழியே கண்ட சிவா தன் அத்தானிடம் வந்து “ அத்தான் இது உங்கள் நிச்சயம் இல்லை.. அங்க பாருங்க மாப்பிள்ளை முகத்தை.. கொஞ்சமாவது ஏதாவது உற்சாகம் தெரியுதா?? பின்ன நீங்க மட்டும் என்ன கண்ணுல ஜாடை காட்டுவது.. சிரிக்கிறதுன்னு.. வீடியோல எல்லாம் விழுகும்.. வீட்டில் எல்லாம் பார்ப்பாங்க “ என்று மிரட்டி விட்டு செல்லவும் தான் வசுமதி கதிரவன் அமைதியாக இருந்தனர்..

அய்யர் தான் முதலில் ஆரம்பித்தார்.. “ நிச்சய பத்திரிக்கை வாசிக்க போகிறேன்.. அதற்கு  முன்னாடி பொண்ணு மாப்பிள்ளை இதில் முழு சம்மதம் இருக்கா என்று சொல்லுங்கோ “ என்று ஆரம்பித்து “ என்ன மா கல்யாண பொண்ணு உனக்கு இதில் சம்மதம் தானே ?? ” என்று கேட்டார்..

அழகேசனோ காதுகளை தீட்டி “ எப்படியும் இவள் சரி சொல்ல மாட்டாள் “ என்பதை கேட்க அவளாக நின்று இருந்தான்..

“ முழு சம்மதம் “ என்ற குரல் கேட்டு வேகமாக திரும்பி தன் அருகில் நிற்பவளை பார்த்தான்.. திகைத்துவிட்டான்…

என்ன மாப்பிள்ளை உங்களுக்கு சம்மதம்தானே ?? என்று அழகேசனிடம் கேட்கவும் அவனை அறியாமல் அவன் வாய் சம்மதம் என்று கூறியது.. கதிரவன் அழகேசன் காது அருகில் குனிந்து..

” டேய் வழியாத.. எல்லாம் உன்னை பார்க்கிறாங்க “ என்று பிறகு தான் சுய நினைவிற்க்கு வந்தான்.. தான் காண்பது கனவா இல்லை நினைவா என்றே அவனுக்கு புரியவில்லை..

 “ என் மீனு .. என் மீனாட்சி.. அவள் கூறியது போல உண்மையான காதலை நேசத்தை அந்த கடவுளே சேர்த்து வைத்துவிட்டார்.. எனக்கு இதை இன்னும் நம்ப கூட முடியவில்லையே “ என்று எண்ணி நன்றியுடன் கதிரவனை பார்த்தான்..

அவனோ “ டேய் இங்க என்ன பார்க்கிற ?? அங்க பாரு டா”  என்று கேமரா இருக்கும் பக்கம் திருப்பினான்..

வசுமதி அழகேசன் அருகில் வந்து “ என்ன அழகு அண்ணா இப்ப சொல்லுங்க உங்களுக்கு இதில் இஷ்டமில்லையா??? நிருத்திடலாமா ???? “ தலையை சரித்து சிரித்தபடி… அவளை பார்த்து அசடு வழிந்தான் அழகேசன்..

மீனாட்சிக்கு சந்தோஷம் தாங்கவில்லை அவள் முகமே அவளது உணர்வுகலை பிரதிபளித்தது… அழகேசணும் அவளும் பார்வையால் ஒருவரை ஒருவர் வருடியபடி.. மௌன மொழி பேசியபடி , கண்களில் காதலை பகிர்ந்தபடி நின்று இருந்தனர்…       

இரு வீட்டாரும் தட்டு மாற்றி முடித்து மீனாட்சியை மனையில் அமரவைத்தனர்.. காமாட்சியும் சிவபாண்டியனும் வந்து நிச்சய சேலை தந்து ஆசீர்வாதம் செய்தனர்.. அன்னபூரணி வந்து இருவரையும் ஆசிர்வாதம் செய்தார்.. அதான் பின் மீனட்சியின் பெற்றோர்கள் உறவினர்கள் அனைவரும் வந்து பொட்டு வைத்து ஆசீர்வாதம் செய்தனர்.. கதிரவனும் வசுமதியும் தங்கள் பரிசுகளை தந்தனர்.. அப்போது தான் அழகேசன் வருத்தப்பட்டான் “ ச்சே மீனு தான் பொண்ணுன்னு தெரிந்து இருந்தா அவளுக்கு ஏதாவது வாங்கிட்டு வந்து இருக்கலாம் “ என்று எண்ணினான்..

அவனது எண்ணத்தை அறிந்த வசுமதி கதிரவனிடம் கண் காட்டினாள் அவனும் அதை புரிந்து கொண்டு அழகேசனிடம் ஒரு சிறு டப்பாவை குடுத்தான்.. உள்ளே அழகான மோதிரம் இருந்தது.. இரு இதயங்களை சேர்த்து நடுவில் ஒரு வெள்ளை கல் வைக்கப்பட்டு இருந்து.. பார்க்க மிகவும் அழகாக இருந்து… அதை மீனாட்சிக்கு போட்டு விடும்படி அழகு காதில் முனுமுனுத்தான்.. மீனாட்சியின் கைகளிலும் வசுமதி ஒரு மோதிரம் தந்தாள்.. இருவரும் சந்தோசமாக மோதிரம் மாற்றி கொண்டனர்..

சிரிப்பும் சந்தோசமுமாக நிறைவாக அழகேசன் மீனாட்சி நிச்சயதார்த்தம் முடிந்தது… சிவாவும் ராமும் அனைவரையும் வளைத்து வளைத்து போட்டோ எடுத்தனர்..  சிவா யாரும்  அறியாமல் ஒரு காரியம் செய்தான்.. அனைவரும் சந்தோசமாக உற்சாகமாக அறுசுவை உணவு உண்டு விட்டு அமர்ந்து இருந்தனர். வந்திருந்த அனைவரும் சென்று விட்டனர்.. இரு வீட்டார் மட்டும் அமர்ந்து கல்யாணம் எப்பொழுது என்ன என்பது பற்றி பேசி கொண்டு இருந்தனர்.. 

அப்பொழுது அழகேசன் கதிரவனின் காதில் “ டேய் கதிரவா கல்யாணத்தை இன்னும் மூணு மாசம் கழித்து வைக்க சொல்டா “ என்றான் வேகமாக.. ஏன் என்பது போல் பார்த்தான் கதிரவன்..

 “ என்ன டா சீக்கிரம் போய் சொல்.. நீ மட்டும் என் தங்கச்சிய லவ் பண்ணி கல்யாணம் பண்ணுவ.. வசுமதியை வீட்டில் தங்க வைத்து நீ என்ன என்ன அலம்பல் செய்ற??  நான் மட்டும் இப்ப உடனே கல்யாணம் செய்யனுமா ?? நானும் மீனுவும் கொஞ்சம் லவ் பண்றோம் டா ப்ளீஸ் “ என்று பெரியவர்கள் பபக்கம் கதிரவனை தள்ளி விட்டான் அழகேசன்..

கதிரவனும் தன் அப்பத்தாவிடம் சென்று எதுவோ கூறிவிட்டு வந்தான்.. பின் அனைவரும் பேசி  நடுவில் ஆடி மாதம் வருவதாலும் மூன்று மாதம் கழித்து திருமணம் என்று ஒரு மனதாக பேசி முடித்தனர்… அங்கே வசுமதி தான் மீனாட்சியை பயங்கரமாக கிண்டல் செய்து கொண்டு இருந்தாள்.. சிறிது நேரம் பொருத்து இருந்த மீனாட்சி கதிரவனை வைத்து வசுமதியை கேளி பேசினாள்..

“ அண்ணி இது எப்படி உனக்கு தெரியும் ?? ” என்று திகைத்தபடி கேட்டாள் வசுமதி..

“ அது தான் அண்ணன் பார்வை உன்னயே சுத்தி வருவதும் நீ அவரை பார்ப்பதும்… இது கூடாவ கண்டு பிடிக்க முடியாது??” என்று கூறி சிரித்தாள் மீனாட்சி.. இருவருக்குள்ளும் நல்ல புரிதல் வந்தது.. வசுமதிக்கு தான் மிகுந்த சந்தோஷம்.. இந்த ஊரில் நமக்கு மனம் விட்டு பேச ஒரு நல்ல தோழி கிடைத்து விட்டாள் என்று..

அழகேசனின் பார்வை மீண்டும் மீண்டும் மீனாட்சியின் பக்கமே சென்றது.. இதை கவனித்துவிட்ட காமாட்சி “ பெண்ணையும் மாப்பிள்ளயையும் கொஞ்சம் தனியா விடுங்கப்பா பேசிக்கட்டும் “ என்று அனைவரயும் இழுத்து வந்தார்..

சிவா அவர் அருகில் வந்து “ அத்தை எப்படி அத்தை நீங்க மட்டும் இப்படி இருக்கீங்க ??? உங்களை மாதிரி ஒரே ஒருத்தர் ஒரு வீட்டில் இருந்தால் போதும் எல்லா காதலும் ஒன்று சேர்ந்திடும் “ என்று கூறி கிண்டல் பேசினான்..

“ போடா படவா உனக்கு எப்ப பாரு என்னை பார்த்தால் கிண்டல் தான் “ என்று அவன் முதுகில் நாலு போடு போட்டார்..

மண்டபத்தின் மாடியில் அழகேசணும் மீனாட்சியும் நின்று இருந்தனர்.. சிவப்பு வண்ண பட்டு உடுத்தி, தலை நிறைய மல்லிப்பூ சூடி, கை நிறைய கண்ணாடி வளையல் அணிந்து, மிதமான ஒப்பனையில் தன் முன் நிற்பவளை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அழகேசனுக்கு.. அவனது பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலை குனிந்து நின்று இருந்தாள் மீனட்சி..    

அவளும் தன்னை பார்ப்பாள், தன்னிடம் பேசுவாள் என்று காத்திருந்தான் அழகேசன்.. ஆனால் அவளோ அவனை சிறிதும் நிமிர்ந்து பார்கவில்லை.. நேரம் ஆக ஆக அழகேசனுக்கு பொறுமை குறைந்தது…

 “ நான் இரண்டு நாட்களாக இவளை எண்ணி எண்ணி தவித்தது என்ன ?? இவள் அனைத்தும் தெரிந்தும் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லாம இன்னிக்கு அலங்காரம் பண்ணிக்கிட்டு வந்து நிக்கிறது என்ன ??? ராட்சஸி.. ஒரு வார்த்தை பேசுராளா ?? குத்துகல்லு மாதிரி எப்படி நிக்கிறா “ என்று எண்ணினான்.. அவனது பழைய கோவம் தலைதூக்கியது.. 

“ ஏய் என்ன திமிரா ?? இப்படி அமைதியாய் இருக்க??  ஒரு வார்த்தை பேசமாட்டியோ ??? அதுசரி பெரிய இவன் மாதிரி பேசிவிட்டு போனானே, இப்ப வந்து இப்படி நிற்கிறானே என்று இளக்காரமா நினைக்கிறயா ?? ” என்று உறுமினான்.. இதை அவள் சற்றும் எதிர்பார்கவில்லை..

அவனை திகைத்து விழித்தாள்… “ என்னங்க இப்படி பேசுறீங்க.. எனக்கு சந்தோசத்துல பேச்சு வரலை அதான்.. மத்தபடி வேற ஒண்ணுமில்லை நீங்க சொல்வது மாதிரி எல்லாம் “ என்றாள் வருத்தமாக..

“ ஓ !!! சந்தோசமோ இருக்காதா ??? நீ நினைத்ததை நடத்தி காட்டிட்ட இல்லை.. அதான் உனக்கு சந்தோசமாய் இருக்கும்.. இத்தனை நாள் நான் பட்டபாடு எனக்குதான் டி தெரியும். “

“ ப்ளீஸ் மாமா இப்படி எல்லாம் பேசாதிங்க எனக்கு மிகவும் கஷ்டமா இருக்கு.. இந்த நாளுக்காக தான நாம இரண்டு பேருமே காத்து இருந்தோம்.. ஏன் மாமா உங்களுக்கு பிடிக்கவில்லையா.. நிஜமாவே என்னை பிடிக்கவில்லையா மாமா ??  “ என்றாள் அழும் குரலில்.. அவளது மாமா என்ற அழைப்பு அவனை எதோ கிறங்க செய்தது.. அவளது கண்ணீர் அவனை இலக வைத்தது.. அவனது முகமும் மாறியது..

“ சரி சரி அழாத… நான் எதோ கோவத்தில்  பேசிவிட்டேன்… ” என்று சமாதானம் செய்தான் அழகேசன்.. அவள் முகத்தில் உடனே ஒரு புன்னகை வந்து தோற்றி கொண்டது.. “ ஏன் டி ஒரு நிமிஷம் முன்னாடி தான அழுத.. இப்ப அடுத்த நிமிஷமே சிரிக்கிற ??? ” என்று கேளி செய்தான்….                                                

“ போங்க மாமா… இப்படி சிரிச்சுக்கிட்டே பேசினால் என்னவாம் ?? எப்ப பாரு கோவமா அய்யனாரு மாதிரி முகத்தை வைத்துகொண்டு கதிரு அண்ணன் எல்லாம்  வசுமதிகிட்ட எப்படி பேசுறாங்க ??? ” என்றாள் சலுகையாக..

“ யார் அவன் சிரிச்சுகிட்டே பேசுகி றானா ?? நான் அய்யனார் மாதிரி இருக்கேனா ??? எல்லாம் என் நேரம் நீ வசுமதி கிட்ட கேட்டு பாரு இதையே மாற்றி சொல்லும் “ என்று கூறி நகைதான்.. அவளும் அவனை காதலாக பார்த்து சிரித்தாள்..

“ முன்னைவிட இப்ப மிகவும் அழகா இருக்க டி “ என்று கூறி அவளிடம் நெருங்கும் வேலையில்… யார் எங்களை அழைத்தது என்றபடி வந்தனர் கதிரவனும் வசுமதியும்.. அழகேசணும் மீனாட்சியும் இவர்களை எதிர்பார்கவில்லை…

கதிரவன் அழகேசனிடம் “ எத்தனை தடவை நீ கரடி வேலை பார்த்து இருப்ப எனக்கு இப்ப அனுபவி  “ என்று கூறி சிரித்தான்.. அவனை பார்த்து முறைதான் அழகேசன்..

 வசுமதி மீண்டும் ஆரம்பித்தாள் “ என்ன அத்தான் யாரோ இந்த நிச்சயம் வேண்டாம் கல்யாணம் வேண்டாம் அப்படி என்று  குளிக்காமல் கூட நம்ம வீட்டில் சுற்றிக்கொண்டு இருந்தாங்களே நீங்க பாத்திங்களா ??? ” என்றாள் சிரித்தபடி… மீனாட்சியும் இந்த கலாட்டாவில் சேர்ந்து கொண்டாள்..

“ என்ன வசு சொல்றா ??? குளிக்காமல்  இருந்தாங்களா ??? யார் வசு அது அவ்வளோ பெரிய மனுஷன் ?? ”

“ அண்ணி அந்த பெரிய மனுஷன் வேற யாரும் இல்லை.. இதோ உங்கள் பக்கத்தில் வந்து நிற்கிறாரே திருவாளர் அழகேசன் தான் “ என்று கூறி நகைத்தாள்.. அழகேசனுக்கு இப்படியா இவர்களிடம் மாட்டிகொள்வது என்று தோன்றியது… இந்த கூட்டத்தில் ராம் சிவாவும் வந்து கலந்து கொண்டனர்.

இனி சிரிப்பிற்கும் உற்சாகத்திற்கும் கேட்கவா வேண்டும்.. ஒருவர் மாற்றி ஒருவர் கிண்டல் செய்து கேளி செய்துகொண்டு கும்மாளம் போட்டனர்… அன்னபூரணிக்கு இதை எல்லாம் காணும் பொழுது மனம் மிகவும் நிறைவாக இருந்தது… வசுமதி மற்றும் கதிரவனுக்கும் விரைவில் இதுபோல செய்ய வேண்டும் என்று நினைத்து கொண்டார்.. விதி அவரை பார்த்து நகைத்தது… 

அனைவரும் கிளம்பும் தருவாயில் மீனாட்சியின் பெற்றோர்கள் வந்து அழகேசனிடம் மன்னிப்பு கேட்டனர்..

“ ஐயோ என்ன மாமா இது… அத்தை என்ன இது… நீங்க என்னிடம்  மன்னிப்பு எல்லாமா கேட்டுகிட்டு.. விடுங்க நான் அதை எல்லாம் பெரிதாய் நினைக்கவில்லை” என்றான் பெருந்தன்மையாக.. இப்படி பட்ட ஒருவன் தங்கள் மகளுக்கு கணவனாக வர தாங்கள் தான் புண்ணியம் செய்து இருக்க வேண்டும் என்று எண்ணி இறைவனுக்கு நன்றி கூறினார்….

அழகேசனுக்கு இன்னும் சிறிது நேரம் மீனாட்சியோடு நேரம் கழிக்க எண்ணினான்… ஆனால் முடியவில்லை.. ஏக்கமாக அவளை பார்த்து விடை பெற்றான்.. அவனது ஏக்கம் கலந்த பார்வை அவளுக்கு வருத்தம் தந்தது.. அதை கண்ட வசுமதி

 “ ஹலோ அண்ணி என்ன இப்படி ஒரே பீலிங்க்ஸ் விடுறீங்க… வீட்டுக்கு போய்  இன்னும் கொஞ்ச நேரத்தில் அண்ணன் உங்களுக்கு போன் செய்வார், மூணு மாசம் ஜாலியாக லவ் பண்ண போறீங்க.. பின்ன  என்ன சிரிச்சுகிட்டே டா டா சொல்லுங்க “ என்றாள் கிண்டல் செய்து சென்றாள்…

சிவா தான் அழகேசனை அதிகமாக ஓட்டினான்.. ”அழகு அண்ணா இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியலை வீட்டில் இருந்து மீனாட்சி அக்கா வீடு ஒரு பத்து நிமிஷம் தான்.. எப்படியும் இனிமே டெய்லி போன் பேச போறீங்க, பின்ன என்ன ஒரே லுக்கு விடுறீங்க பாவமா.. காலையில மண்டபம் வரமாட்டிங்கன்னு அடம் பிடித்தது என்ன ?? இப்ப வீட்டுக்கு நகர மாட்டேன்னு நிற்பது என்ன ?? வாங்க வாங்க நேரம் ஆகுது இனி ஊருக்கு வேற நாங்க கிளம்பனும்.. “  என்று இழுத்து சென்றான்..

 “ போதும் போதும் யாரும் இனி என் அண்ணனை ஒன்றும் சொல்ல கூடாது “ என்று வசுமதி கூறவும் அங்கே அவளை அனைவரும் திகைத்து பார்த்தனர்.. அழகேசன் நன்றியுடன் பார்த்தான்.. அனைவரயும் ஒரு பார்வை பார்த்துவிட்டு 

“ யாரும் எதுவும் சொல்ல கூடாது.. நான் தான் அண்ணனை கிண்டல் பண்ணுவேன் “ என்று கூறவும் அழகேசன் தலையில் அடித்து கொண்டான்.. அனைவரும் சிரித்தனர்…

இப்படியே சிரிப்பும் கும்மாளமுமாக வீடு வந்து சேர்ந்தனர்.. அழகேசன் காமாட்சிக்கும் சிவபாண்டியனுக்கும் நன்றி கூறினான்… அதை கேட்ட இருவரும் “ அட அழகேசா எங்கள் கடமையைத்தான் நாங்கள் செய்தோம் நீ மீனாட்சியை நல்ல படியா வைத்து  குடுப்பம் நடத்தினால் அதுவே போதும் “ என்று கூறி சென்றனர்..

சிறிது நேரம் இருந்து விட்டு ராமும் சிவாவும் ஊருக்கு கிளம்பினர்… வசுமதி அவர்களுக்கு சிரித்தபடி சந்தோசமாக வழியனுப்பினாள்… சிவாவிற்கு தன் அக்காவை இத்தனை மகிழ்ச்சியாக பார்க்கவும் மனம் மிக உற்சாகமாக இருந்தது.. பாவம் அவனுக்கு தெரியவில்லை அடுத்த முறை வசுமதியை காணும்பொழுது அவள் உற்சாகம் மகிழ்ச்சி அனைத்தையும் தொலைத்துவிட்டு வெறும் ஜடமாக நிற்பாள் என்று….

வசுமதிக்கு நேரம் சரியாக இருந்தது… காமாட்சி இனி வீட்டு பொறுப்பை முன் போல தான் பார்த்து கொள்வதாக கூறி விட்டார்.. அவள் முழு மூச்சாக பண்ணை வீடு கட்டுவதற்கு பிளான் தயார் செய்ய ஆரம்பித்தாள்… மூன்று பிளான் தயார் செய்து அனைவரிடமும் காட்டினாள்.. அவளுக்கு மனதிற்கு  மூன்றுமே திருப்தி அளித்தாலும் மனதிற்கு இரண்டாவதாக இருந்த வரைபடம் தான் மிகவும் பிடித்து இருந்தது…

அவளது ஒற்றை பார்வையில் கதிரவன் புரிந்து கொண்டான்… அனைவரும் மிக அழகாக இருக்கிறது என்று பாராட்டினர் வசுமதியை..

“ மிக அழகாக இருக்கிறது வசும்மா ” என்று சிவபாண்டியன் காமாட்சி கூறினார்.. அன்னபூரனியோ “ என் கண்ணம்மா எது செய்தாலும்  அது அழகு தான் “ என்று கூறி அவளுக்கு தன் கையில் இருக்கும் மோதிரத்தை கழட்டி பரிசாக தந்தார்… அழகேசணும் வந்து பாராட்டினான்…

வசுமதி சந்தோஷ வானில் சிறகடித்து பறந்தாள்…. இது அனைத்திற்கு கதிரவன் தான் காரணம் என்று எண்ணி எண்ணி மகிழ்ந்தாள்.. தனிமையில் “ அத்தான் மிகவும் மிகவும் தேங்க்ஸ் அத்தான்.. “ என்றாள் நிறைவான குரலில்.. அவளது மனம் அறிந்து அவளை தன் தோள்களில் சாய்த்து கொண்டான்..

 

                           உன் நினைவு – 21

அஞ்சன விழியாளே

என் ஐம்புலன் துடிக்குதடி

ஆருயிர் காதலியே

என் மனம் தவிக்குதடி

எட்டி எட்டி நீ போக

என்னவளே நான் என் செய்வேன் ???? 

ஒரு நல்ல நாள் பார்த்து பண்ணை வீடு கட்டுவதற்கு பூமி பூஜை போட்டனர்.. வசுமதி கதிரவன் இருவருமே ஜோடியாக பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினர்…  அன்று இருந்து வேலை ஆரம்பித்தது…

வசுமதி காலில் சக்கரம் கட்டி கொண்டு பறந்தாள்.. வீட்டில் இருக்கும் சமயம் காமாட்சி தங்கம் இருவருக்கும் உதவியாக இருப்பாள்.. கதிரவனோடு தோட்டம் சென்று விடுவாள்.. காட்டுமான பணிகளை மேற்பார்வை பார்ப்பாள்.. கதிரவன் அவளுக்கு அனைத்து விதத்திலும் உதவியாக இருந்தான்.. அவர்களது காதல் மென்மேலும் வளர்ந்தது…

வசுமதி அந்த பண்ணை வீட்டை பார்த்து பார்த்து இழைத்து இழைத்து கட்டினாள்… இருக்காதா பின்னே அவளது முதல் முயற்சி அல்லவா??? அது மட்டும் காரணம் இல்லை.. கதிரவன் கூறிவிட்டான் கல்யாணம் முடிந்து அவர்கள் இருவரும் முதலில் வந்து தங்க போவது இங்கே இந்த பண்ணை வீட்டில் தானாம்.. அவர்கள் தேனிலவு இங்கே தான் என்பதால் வசுமதி எல்லையில்லா காதலோடு வேலையில் ஆழ்ந்து விட்டாள்…

அழகேசன் மீனாட்சி இருவரும் போனிலும் நேரிலும் பேசி பேசி தங்கள் காதலை வளர்த்து கொண்டிருந்தனர்… அவ்வப்போது சிறு சிறு ஊடல்கள் வந்தாலும் அதை எல்லாம் தாண்டி தங்கள் இத்தனை நாள் காத்திருப்பிற்கு அர்த்தம் தேடினர் இந்த காதல் ஜோடிகள்.. சில சமயம் அழகேசன் ஏதாவது கோவமாக பேசினாலும் மீனாட்சி அதை சமாளித்து கொள்வாள்,,

பொன்மலர் மல்லிகா இதை எல்லாம் காண பொறுக்காமல் தாங்க வீட்டிற்கு சென்று விட்டனர்.. இருந்தாலும் அவர்கள் முயற்சியில் பின் வாங்குவதாய் இல்லை.. இங்கே வரும் போது எல்லாம் சிறு சிறு பிரச்சனைகளை உண்டு பண்ணி கொண்டு தான் இருந்தனர்.. ஆனால் அதை எல்லாம் கடந்து ஒரு உறுதியான நிலைக்கு வந்து விட்டது கதிரவன் வசுமதியின் காதல்.. அந்த வீட்டு பெரியவரக்ளும் இதை தானே எதிர்பார்த்தனர்…

பண்ணை வீட்டு வேலை முடியவும் வசுமதி கதிரவனுக்கு நிச்சயம் பண்ணி விடலாம் என்று முடிவு எடுத்து இருந்தனர்.. வழக்கம் போல இதையும் அவர்களிடம் கூறவில்லை.. இப்படியே நாட்கள் பறந்து கொண்டு இருந்தது… வசுமதி முழுக்க முழுக்க அந்த வீட்டின் பெண்ணாகவே மாறிவிட்டாள்.. தினமும் தன் அப்பா அம்மாவோடு போனில் பேசுவாள்.. தன் தோழிகள் நண்பர்களோடு பேசுவாள்… வேலை பழுவினால் தன் பிறந்த நாளை கூட மறந்து விட்டாள்..

அவள் மறந்தாள் என்ன நம் கதிரவன் மறந்து விடுவானா…???

அயர்ந்து தன் அறையில் தூங்கி கொண்டு இருந்தாள் வசுமதி.. மெல்ல பூனை நடை போட்டு நடந்து உள்ளே சென்றான் கதிரவன்… குழந்தை போல தலையனையை கட்டி தூங்கும் தன்னவளை கண்டு ரசித்தபடி மெய் மறந்து நின்றான்… சரியாக பான்னிரெண்டு மணி காட்டவும் “ மதி டியர்… விஷ் யூ மெனி மோர் ஹாப்பி ரிடன்ஸ் ஆப் தி டே “ என்று அவளது காதுகாலில் கூறி கன்னத்தில் முத்தமிட்டான்…

கும்பகர்ணனுக்கு நேரடி வாரிசு போல சற்றும் அசையாது தூங்கி கொண்டு இருந்தாள் வசுமதி.. “ அடிப்பாவி ஒருத்தன் தூங்காமல் வந்து வாழ்த்து சொன்னால் நீ காதிலேயே வாங்காமல் மாதிரி தூங்கிட்டு இருக்க??? ” என்று எண்ணி கொண்டு மெல்ல அவளது பாதங்களில் வருடி கூச செய்தான்…

தன் மீது எதுவோ பூச்சி தான் ஊருகிறது போல என்று உணர்ந்தவள் வேகமாக அலறியபடி முழித்து எழுந்தவள் கதிரவனை காணவும் அப்படியே உறைந்து விட்டாள்.. “ இவன் என்ன செய்கிறான் இங்கே ??? இந்நேரத்தில் ??? “ என்று அவள் பார்க்கவும், அவன் சிரித்தபடி மீண்டும் பிறந்த நாள் வாழ்த்து கூறினான்..

அப்பொழுதுதான் அவளுக்கு தான் பிறந்த நாளே நியாபகம் வந்தது.. முகத்தில் தோன்றிய மகிழ்ச்சியோடு “ தேங்க்ஸ் அத்தான் “ என்றாள்..

அவனும் நகைத்தபடி ஒரு சிறு பெட்டியை நீட்டினான் அவளிடம்.. என்ன இது என்பது போல அவனை பார்த்தவாறே வாங்கியவள் அதனை பிரித்து பார்த்து “ வாவ் !!!! கதிர் சூப்பர்.!! எனக்கு தெரியாமல் எப்போஇதை வாங்கினீர்கள் ?? ” என்றாள் இன்னும் ஆச்சரியம் விலகாமல்..

“ எப்பையோ வாங்கினேன் அது எதற்கு உனக்கு??? ” என்று கூறியவாறு அவளை எழுப்பி கொண்டு கண்ணாடி முன் நிற்க வைத்து,  அந்த பெட்டியில் இருந்த தங்க செயினை வசுமதியின் கழுத்தில் தானே போட்டு விட்டான்..                 

சிறு சிறு இதய வடிவில் இருக்கும் தங்கமணிகள் ஒரே சரமாக கோர்க்க பட்டு இருந்தது.. அதில் நடு நடுவே சிறு சிறு வெள்ளை கற்களும் பதித்து இருந்தன.. அவளது கழுத்தில் இந்த சங்கிலியை போடும் பொழுது அவளுக்கு இனம் புரியாத ஒரு உணர்வு தோன்றியது மனதில்…. ஏதோ அவன் அவளுக்கு தாலி கட்டியதை போல உணர்ந்தாள்… கதிரவனுக்கும் இந்த உணர்வு தான் தோன்றியது போலும்…  

ஏற்கனவே இருந்த தூக்க கலகத்திலும், இப்பொழுது இவன் அழித்த பரிசின் சந்தோசத்திலும் வசுமதியின் கண்களில் காதலும் மயக்கமும் கூடியது.. அதை கண்டவன் மனதில் மோகமும் காதலும் பெருகியது..

மெல்ல அவளை பின்னல் இருந்து அணைத்தவாறே “ அத்தானுக்கு தேங்க்ஸ் சொல்ல மாட்டயா செல்லம் “ என்றான் கரகரப்பான குரலில்.. அவனை ஏறெடுத்து பார்த்தவள் அவனை இறுக அனைத்து அவனது கன்னத்தில் முத்தமிட்டாள்… இதை கதிரவன் சற்றும் எதிர்பார்கவில்லை…

பொழுது விடியவும் வசுமதி கீழே இறங்கி வரும் பொழுது வீடே அமைதியாக இருந்தது.. “ என்ன இது யாரையும் காணவில்லை.. எல்லாம் எங்க போனாங்க ?? ” என்று யோசித்தவாறே திரும்பியவள் திகைத்து விட்டாள்..

அங்கே ஹாலில் ஒரு பகுதி அலங்கரிக்கப்பட்டு இருந்தது.. நடுவில் பெரிய கேக் வைக்கப்பட்டு இருந்தது.. அதை சுற்றி அந்த வீட்டின் பெரியவர்கள் அனைவரும் அவளுக்காக காத்து நின்று இருந்தனர்.. உடன் வசந்தியும் சண்முகநாதனும் இருந்தனர்.. அவர்களை பார்த்ததும் தன்னை மறந்து “ அப்பா அம்மா “ என்று கூறியபடி ஓடி வந்து அவர்களை அனைத்து கொண்டாள்..

அனைவரும் பிறந்த நாள் பாடல் பாடி கை தட்டி கரகோஷம் எழுப்பவும் வசுமதி கேக் வெட்டி தன் பிறந்தநாளை கொண்டாடினாள்…. முதல் துண்டை அன்னபூரணிக்கு தான் ஊட்டினாள்.. அவர் அவளுக்கு ஒரு நகை செட்டை பரிசு அழித்தார்.. ” எதற்கு அம்மாச்சி இதெல்லாம் “ என்று கூறி அவர் கட்டாயபடுத்தவும் வாங்கி கொண்டாள்..

வசந்தி சண்முகநாதன் இருவரும் தன் மகளுக்கு அழகிய வைரம் பதித்த காதணிகள் பரிசளித்தனர்.. அழகேசன் வசுமதிக்கு பிடிக்கும் என்று என்றோ கூறியிருத்த சாண்டில்யன் புத்தகங்களை வாங்கி பரிசளித்தான்…  “தேங்க்ஸ் அண்ணா “ என்று கூறி வாங்கி கொண்டாள்..

மீனாட்சி போனில் வாழ்த்து கூறினாள்… சிவா பரீட்சை காரணமாக வரமுடியவில்லை… அவனது   பரிசாக அவளது அம்மா எதுவோ ஒரு சிடி குடுத்தார்.

” என்ன மா இது ?? ” என்று வாங்கியவளை

 “ என்னவென்று தெரியவில்லை வசுகுட்டி.. நீ இதை தனிமையில் உன் லேப் டாப்பில்  போட்டு பார்க்க வேண்டுமாம் பெரிய மனுசன் சொல்லி அனுப்பினான்… ” என்று கூறி சிரித்தார்…

காமாட்சியும் சிவபாண்டியனும் வசுமதிக்கு அழகிய பட்டு புடவை பரிசளித்தனர்.. இதை எல்லாம் அருகில் நின்று பார்த்து ரசித்து கொண்டு இருந்தான் கதிரவன் .. தான் கழுத்தில் அணிந்து இருந்த சங்கிலியை அத்தான் வாங்கி தந்தது என்று பெருமையாக அனைவரிடமும் காட்டினாள்.. அனைவரும் கதிரவனை அர்த்தமாக பார்கவும் அவனுக்குமே சிறு வெட்கம் தோன்றியது…

வசுமதி வேகமாக சென்று தன் மடி கணினியை ஆன் செய்து தன் தம்பி குடுத்தனுப்பிய சிடியை போட்டு பார்த்தாள்.. எல்லாமே கதிரவன் வசுமதியின் புகைப்படங்கள் தான்.. அழகேசன் நிச்சயதன்று யாரும் அறியாமல் எடுத்து இருந்தான் இவர்களை மட்டும் தனியாக.. ஒருவரை பார்த்தபடி, சிரித்தபடி, கண்களால் பேசியபடி என்று அனைத்துமே அழகாக இருந்தது..

அனைத்தையும் விட இது தான் சிறந்த பரிசு என்று தோன்றியது அவளுக்கு.. கதிரவனிடம் காட்டினாள்…

” உன் தம்பி பயங்கரமான ஆளு  டி “ என்று கூறி சிவாவிற்கு போன் செய்து இருவரும் நன்றி கூறினார்.. இப்படி சந்தோசமும் காதலும் அன்பும் மகிழ்ச்சியும் பெருமையுமாக வசுமதியின் வாழ்கை கழிந்தது..  காலம் யாருக்கும் காத்திராமல் சிறகடித்து பறந்து கொண்டு இருந்தது..

அழகேசன் மீனாட்சி எப்பொழுது தங்கள் கல்யாண நாள் வரும் என்று ஏங்கி கொண்டு இருந்தனர்.. ஒவ்வொரு நாளும் காலேண்டர் தேதி கிழிக்கும் போதெல்லாம் இன்னும் இத்தனை நாள் இருக்கிறது என்று ஏக்க பெருமூச்சு விட்டபடி நாட்களை கழித்தனர்…

வசுமதி கதிரவன் காதல் எந்த வித தொய்வும் இல்லாமல் சீராக வளர்ந்து தேயாத நிலவென ஜொலித்தது.. விதியின் கண் படும் வரை..

பண்ணை வீட்டின் பணிகள் அனைத்தும் முடியும் தருவாயில் இருந்தன.. இன்னும் இரண்டு அல்லது மூன்று நாளில் அனைத்து வேலைகளும் முடிந்து விடும்.. வசுமதி காலில் சக்கரம் கட்டி கொண்டு சுற்றினாள்.. அவளின் முதல் முயற்சி வெற்றிகரமாக முடிய போகிறது அல்லவா.. அந்த சந்தோஷம் அவளது முகத்தில் பிரதிபளித்தது.. ஒரு பொழிவுடனே வளம் வந்தாள்….

ஒரு வழியாக அனைத்து வேலைகளும் முடிந்து, அனைவருக்கும் சம்பள பட்டுவாடா செய்து முடித்தாகி விட்டது..  இனி நல்ல நாள் பார்த்து பால் காய்ச்ச வேண்டும்..

அன்னபூரணி சிவபாண்டியனிடம் ஒரு யோசனை கூறினார்..

” பாண்டியா ஜோசியரை பார்த்து நாள் குறிக்கனும் சாமி.. அப்படியே வசந்திக்கு மாப்பிள்ளைக்கும் போன் போட்டு கேளு பண்ணை வீடு பால் காய்ச்சுகிற அன்றே நம்ம கதிரவனுக்கு வசுமதிக்கும் நிச்சயம் பண்ணிவிடலாமா என்று .. “

“ம் சரி மா நீங்க சொல்கிற மாதிரியே பண்ணிடலாம்.. ஒரு வார்த்தை தம்பிகிட்டையும் வசுகுட்டி கிட்டயும் கேட்டுவிடலாம் மா “ என்றார் சிவபாண்டியன்..

அன்னபூரணி சிரித்தபடி “ அட !! அதுங்க கிட்ட கேட்டா இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும் என்று தான் சொல்லுங்க.. இல்லை இல்லை எங்களுக்கு இப்பயே கல்யாணம் செஞ்சு வையிங்க என்றா சொல்வாங்க.. பெரியவங்க நாம தான் பார்த்து பண்ணனும்.. நீ சென்னைக்கு போன் போட்டு பேசு ”

அந்நேரம் அங்கே வந்த காமாட்சி “ ஏங்க, அத்தை சொல்வதும் சரி தான்.. இனி அடுத்த மாதமெல்லாம் அழகு கல்யாண வேலை வந்திடும்.. வசுமதி பிறந்த நாளுக்கு வந்து போதே வசந்தி , அண்ணி என் பொண்ணை கொஞ்சம் எங்ககிட்டயும் அனுப்பி வையுங்க என்று சொல்லிவிட்டு போனாள்.. நிச்சயம் முடிந்தால் பிள்ளைகளும் நிம்மதியா இருக்கும் ” என்றார்..

“ வீட்டு மகாராணிங்க இரண்டு பேரும் சொன்ன பிறகு அதற்கு எதாவது மறுப்பு இருக்கா ??? சரி சரி நான் வசந்தி வீட்டில் பேசிட்டு ஜோசியர பார்த்துவிட்டு வந்து சொல்கிறேன் “ என்று சிரித்தபடி சென்று விட்டார்..

காமாட்சியோ “ அத்தை எனக்கு இப்பத்தான் நிம்மதியா இருக்கு.. ஒரு வழியா எல்லாம் நல்ல படியா நடக்க போகிறது.. ஆனாலும் பாருங்க அத்தை இந்த இரண்டு பேரும் ஒரு வார்த்தை வெளிய சொல்லுதுங்களா என்று நல்ல அழுத்தம் பிடிச்சதுங்க..” என்று கூறி சிரித்தார்..

“ ஆமா காமாட்சி.. அதிலையும் என் பேரனை பார்க்கவேண்டுமே ஒண்ணுமே தெரியாத மாதிரி தான் நடந்துகிறது.. ஆனால்  அத்தனையும் சேட்டை “ என்று தன் பேரனை செல்லமாக கடிந்தார்…

கதிரவனும் அழகேசணும் வயலில் வேலை இருப்பதால் அதிகாலையில் வெளியே சென்று விட்டனர்.. இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி கேளி பேசி கொண்டும் சிரித்து கொண்டும் அதே நேரம் வேலையில் கவனம் தவறாமலும் நடந்து கொண்டனர்…

ஒரு நாள் இருவரும் வேலை முடிந்து ரைஸ்மில்லில் ரிலாக்ஸ்டாக அமர்ந்து இருந்தனர்… நிறைய நாட்கள் ஆனது போல இருந்தது நண்பர்கள் இப்படி தனியே அமர்ந்து பேசி.. ஒன்று கதிரவன் பண்ணை வீட்டு வேலையில் இறங்கி இருப்பான்.. இல்லை அழகேசன் தோட்ட வேலையாக எங்காவது சென்று இருப்பான்..

அப்படியே இருவரும் ஒரு இடத்தில இருக்கும் நிலை வந்தாலும் வேலை சரியாக இருக்கும்.. இன்று தான் நேரம் கிடைத்தது.. இந்த மாதம் அனுப்ப வேண்டிய லோடுகள் எல்லாம் அனுப்பி முடித்து கணக்கு வழக்கு எல்லாம் பார்த்து முடித்து நிம்மதியாக அப்பாடி என்று இருவரும்  அமர்ந்து இருந்தனர்…

இதை உணர்ந்தார் போல கதிரவன் அழகேசனிடம் கூறினான் “ டேய் அழகு ரொம்ப நாள் ஆச்சு டா மாப்பிள்ள இப்படி நம்ம உட்கார்ந்து  பேசி “ என்றான்

“ ஆமா டா மச்சான்.. ஆனா பாரு டா இரண்டு மாசம் போனதே தெரியவில்லை.. எல்லாம் ஒரு நொடி மாதிரி இருக்கு “ என்றான் அழகேசன் ஒரு பேரு மூச்சை விட்டபடி..

அதை கவனித்த கதிரவன் “ என்ன டா அழகு மெதுவா பெருமூச்சு விடு.. முன்னாடி இருக்க நான் பறந்திட போகிறேன்.. என்னடா ஏன் மூணு மாசம் கழித்து கல்யாணம் வைக்க சொன்னோம் என்று  இருக்கா??? “ என்று கேளி பேசினான்..

“ ஏன் டா பேசமாட்ட… உனக்கென்ன தங்கச்சி வீட்டில் இருக்கு காலையில எழுந்தா கூட ஜாக்கிங் வரதுல இருந்து சாப்பாடு பரிமாறி , இது போதாது என்று  தோட்டத்திற்கும்  உன் கூடவே வந்திடுது.. அதுனால நீ இதுவும் பேசுவ இன்னும் பேசுவ “ என்றான் நக்கலாக..

பதிலுக்கு கதிரவன் “ நீ ஏன் டா பேசமாட்ட.. உனக்கு இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம்.. அந்த மிதப்பில் நீ இருக்க.. எங்க விஷயத்தில் எல்லாம் தெரிந்தும்  வீட்டில் தெரியாத மாதிரி இருகாங்க.. பேரு தான் டா நானும் அவளும் ஒரே வீட்டில் இருக்கோம்.. அவ என்னடான்னா எப்ப பாரு வேலை வேலை என்று  இருக்கா “ என்று தன் பங்கிற்கு ஏக்க பெரு மூச்சு விட்டான் கதிரவன்…

அழகு “ என்னடா வசுமதி அம்மா வசுமதியை ஊருக்கு கூப்பிட்டாங்க போல “ என்று கேட்டான்.. 

“அட ஆமா அழகு..அங்க சென்னையில எல்லாம் இவளை கேட்கிறாங்களாம், பாவம் டா மதியும் வந்து எத்தனை மாசம் ஆச்சு.. அதான் நானே கூட்டிட்டு போய் விட்டிட்டு மாமா அத்தை கிட்ட நேரில் பேசிவிட்டு வரலாம் என்று இருக்கிறேன் டா அழகு… “

“ நேரில் பேச போறியா??? ஏன் டா இத்தனை நாள் நேரா பார்த்து பேசாமல்  கோணலாகவா பார்த்து பேசின “ என்று கிண்டல் அடித்தான் அழகேசன்….

“ டேய் நீ வேற ஏன் டா.. மனுஷன் நிலைமை புரியாமல் எங்கள கல்யாண விஷயமா நானே கேட்கலாம் என்று இருக்கிறேன் டா.. எங்க காதலையும் சொல்லி “ என்றான் ஒரு புன்னகையுடன்..

“ ஓ!!! நீ இப்படி வரையா  ஏன்டா உங்க வீட்டில் பேசினால் அவங்களே வசுமதி அப்பா அம்மா விடம் பேசுவாங்க தானே ???? “

“ டேய் அது அவர்கள் பேசுவாங்க டா.. அத்தை மாமா என்ன நினைப்பாங்க சரி இவன் நம்ம அண்ணன் பையன் பிறந்த வீட்டில் பெண் குடுக்குறோம் என்று தான நினைப்பாங்க.. ஆனால் நான் எதிர்பார்கிறது எல்லாம், நாங்க எவ்வளோ காதலிக்கிறோம் அப்பிடிங்கிறதை அவர்கள் புரியணும் டா.. என் மேல் நம்பிக்கை வைத்து அவர்கள் பெண் குடுக்கணும் “ என்றான் கதிரவன்..

தன் நண்பன் பேச்சை கேட்டு ஒரு நிமிடம் அசந்துவிட்டன் அழகேசன்.. ” டேய் கதிரவா கலக்கிட்ட போ… உன் மனசில இப்படி ஒரு எண்ணம் இருக்கும் என்று எதிர் பார்க்கவே இல்லை டா.. ஆனா நீ சொல்வதும் சரி தான் டா.. அப்ப தான் வசுமதிக்கும் கௌரவமா இருக்கும்.. “

“ ஆமா ஆமா.. சரி டா அழகு நீ தென்னந்தோப்புக்கு போய்விட்டு  வீட்டுக்கு வா டா.. நான் அப்படியே லாரி ஆபீஸ் போய்விட்டு வீட்டுக்கு போகிறேன்.. நேரம் ஆகிறது. ” என்று கூறி நண்பர்கள் இருவரும் தங்கள் வேலைகளை கவனிக்க பிரிந்து சென்றனர்..

அதே நேரம் வீட்டில் வசுமதி பல நாட்கள் பின்பு இன்று தான் நல்ல ஓய்வில் இருந்தாள்.. தலைக்கும் உடம்பிற்கும் எண்ணெய் தேய்த்து குளித்து, குளித்த சுகத்தில் நன்றாக உறங்கி கொண்டு இருந்தாள்..

கீழே வீட்டின் பெண்ணரசிகள் இருவரும் பேசி கொண்டு இருந்தனர்.. சிவபாண்டியன் உள்ளே வந்தார்..

“ அம்மா வசந்தி வீட்டில் பேசிவிட்டேன்.. இரண்டு பேருக்கும்ரொம்ப சந்தோஷம்.. நல்ல நாள் பார்த்துவிட்டு சொல்லுங்கண்ணா நாங்க கிளம்பி வந்துவிடுகிறோம் என்று  சொல்லிட்டாங்க.. ” என்ற சந்தோசமாக..

காமாட்சிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.. அன்னபூரனி “ அப்படியா பாண்டியா  !! நல்லது.. சரி ஜோசியரை  பார்த்தியா ?? ”

“ இல்லைமா அவர் எங்கயோ வெளிய போயிருக்காராம் சாயங்காலமாக தான் வருவாராம்.. வந்ததும் போன் போடுகிறேன் என்று சொல்லி இருக்காரு.. நாமலே நேரா பார்த்துவிட்டு வரலாம் மா..  “     

“ ஹ்ம்ம் நீ சொல்வதும் சரி தான் பாண்டியா சென்றுவிட்டுவந்துவிடலாம்.. நீயும் காமாட்சியும் போய்விட்டு வாங்க “ என்றார் அன்னபூரணி..

“ சரிங்கம்மா.. அதற்கு முன்னாடி நான் மீனாட்சி வீட்டில் அழகு கல்யாண விஷயமா பேசிட்டு வந்துவிடுகிறேன் “ என்று கூறி சென்று விட்டார்.. 

காமாட்சிக்கு சந்தோஷம் தாங்கவில்லை.. பின்னே அவர் தான் எத்தனை விரும்பினர் வசுமதியை தன் மருமகளாக கொண்டு வரவேண்டும் என்று.. சிறு சிறு பிணக்குகள் ஏற்பட்டாலும் இருவருக்கும் எத்தனை புத்திமதி கூறி அனைத்தையும் சரி செய்தவர் அல்லவா….

வசுமதி அப்பொழுதுதான் அலுப்பு தீர தூங்கி எழுந்து முகம் கழுவி கொண்டு வந்தாள்.. “ என்ன வசும்மா நீயே கீழ வர இருந்தியா?? நான் உன்னை எழுப்பி விட வந்தேன் “

“ என்ன அத்தை நீங்க மாடி ஏறி வரிங்க ?? ஒரு போன் போட்டு இருந்தா கீழ வந்து இருப்பேன் “ என்றாள் சலுகையாக தன் அத்தையை கட்டி கொண்டு….

“ உன்னய எழுப்பி அப்படியே கொஞ்ச நேரம் பேசிவிட்டு இருக்கத்தான் வந்தேன் “ என்றார் அவரும் அவளை பாசமாக தடவியபடி..         

“ அதற்கு  என்ன அத்தை பேசலாமே “ என்றாள் சிரித்தபடி.. இருவரும் அங்கு இருந்த மெத்தையில் அமர்ந்து சிறிது நேரம் பேசி கொண்டு இருந்தனர்..

“ வசும்மா சாயங்காலமா நானும் உன் மாமாவும் ஜோசியரை பார்க்க போகிறோம் டா.. “

“ ஓ!! அம்மாச்சி கூட சொல்லிச்சு அத்தை பண்ணை வீடு பால் காய்ச்ச தேதி குறிக்கனும் என்று ..அதற்கா ?? ”

“ அதற்கும் தான் டா.. பின்ன இன்னுமொரு முக்கியமான விசேஷம் வேற அதுக்கும் சேர்த்து தான்  “ என்றார் புன்னகைத்தபடி அவளது முகத்தை கூர்ந்து பார்த்து..

 “ என்ன அத்தை என்ன முக்கியமான விசேஷம் ??? ”

“ அதுவா.. நம்ம கதிரவனுக்கு நல்ல இடத்தில இருந்து சம்பந்தம் வந்து இருக்கு வசும்மா.. அதான் அப்டியே பேசி முடிக்கலாம் என்று இருக்கோம்.. எல்லாருக்கும் பிடித்து வேற இருக்கு..உன் அப்பா அம்மா கிட்ட கூட சொல்லிவிட்டோம் அவங்களும் வராங்களாம் “ என்றார் அவளது முகத்தை கூர்மையாக பார்த்து..

வசுமதிக்கோ பதற்றம் தோற்றி கொண்டது.. “ கதிரவனுக்கு பெண் பார்த்து விட்டார்களா.. நாள் பார்த்து முடிக்க போகிறார்களாமே?? அதுவும் நான் இருக்கையிலேயே.. அட கடவுளே இது என்ன புது பிரச்சனை… அத்தான் அனைவருக்கும் தெரியும்ன்னு சொன்னாங்களே.. ஆனால் இவங்க வேற மாதிரி பேசுறாங்களே ” என்று குழம்பினாள்..

அவளது குழப்பத்தை கண்கொண்டு ரசித்த காமாட்சி மனதிற்குள் “ இரண்டு பேரும் எங்க கிட்ட சொல்லாமல் என்னமா களவானித்தனம் பன்னிட்டு இருக்கீங்க.. இப்ப பாரு என் விளையாட்டை” என்று எண்ணியபடி

“ ஆமா வசும்மா என்ன அமைதியா இருக்க..உன் அத்தானுக்கு கல்யாணம் என்றால்  உனக்கு சந்தோஷம் இல்லையா ?? இப்படி குழப்பமாய் இருக்க “

“ அது…. அது.. இல்லை அத்தை.. இது.. கல்யா … அத்தானுக்கு …” என்று திக்கினால் திணறினாள்..

“ என்ன டா என்ன ஆச்சு உடம்பு எதுவும் சரியில்லையா ?? ஏன் இப்படி தந்தி அடிக்கறது  ” என்றார் மெல்ல நகைத்தபடி..

“ இல்லை அத்தை.. உடம்பெல்லாம் நன்றாய் தான் இருக்கு.. “ என்று கூறியவள் பின் தன்னை திட படுத்திகொண்டு “ இதை கதிர்… அத்தான் கிட்ட சொல்லிவிட்டீங்களா ?? ” என்றாள் அவரை உற்று பார்த்து..

“ அப்படி வா வழிக்கு “ என்று நகைத்தபடி “ அவன் கிட்ட என்ன சொல்வது.. இது தான் பெண்  கட்டுடா தாலிய என்று  சொன்னால் கட்ட போகிறான்.. என் பையனை பற்றி எனக்கு தெரியாதா “ என்றார் பெருமையாக..

“ இந்த அத்தைக்கு எதுவும் ஆகி போச்சா.. அன்னிக்கு ஒரு மாதிரி பேசுனாங்க.. இப்ப இப்படி பேசுறாங்க “ என்று யோசித்தவாறே

“ இல்லை அத்தை.. இது கல்யாணம்.. வாழ்கை முழுக்க வர போகிற உறவு “ என்று அவள் கூறி முடிக்கும் முன்னே..

“ஆமா டா. வாழ்கை முழுக்க வர போகிற உறவு தான்.. அதில் என்ன சந்தேகம் ?? ”

“ அதான் அத்தை ஒரு வேலை அத்தானுக்கு பிடிக்கவில்லை  என்று இருந்தால் .. அப்ப என்ன பண்றது.. ??? ”

“ அதெல்லாம் என் பையனுக்கு நான் செலக்ட் பண்ணும்  பொண்ணு மிகவும் பிடிக்கும்.. அவன் மனசம் எனக்கு தெரியாதா ??? ” என்றார் எதுவோ நகைசுவை கேட்டு சிரிப்பது போல..

வசுமதியோ மனதிற்குள் கருவினாள் “ இந்த அத்தைக்கு என்ன கிறுக்கா??? இப்படி பேசுறாங்க.. இந்த அம்மாச்சிக்கு எங்க போச்சு புத்தி.. அது ஏன் ஒன்றும் பேசாமல்  இருக்கு “ என்று யோசனையில் இருத்தாள்..

இப்படியே இன்னும் கொஞ்ச நேரம் வசுமதியை நன்றாக கடுப்பேத்தி விட்டு, அவள் தாங்க முடியாமல் தவிக்கும் நேரத்தில் “ வசும்மா பொண்ணு யாருன்னு கேட்கலையே ?? ” என்றார்..

“ எவளா இருந்தா எனக்கென்ன ?? ” என்று எண்ணியபடி “ யார் அத்தை?? “ என்றாள் சுரத்தே இல்லாமல்..

“ அது வேறு யாருமில்லை என் நாத்தியின் மக தான்.. சென்னையில பொறந்து வளர்ந்த  பொண்ணு.. பேறு கூட எதுவோ வசுமதியாம் “ என்றார் அவளை பார்த்து சிரித்து..

இதை கேட்டு முன்னை விட அதிர்ந்து விட்டாள் “ அத்தை “ என்றவளுக்கு அதற்கு மேல் பேச்சு வரவில்லை..

“ என்ன வசும்மா.. இப்ப உன் அத்தானுக்கு இந்த பொண்ணு பிடிக்குமா ?? ” என்றார் அவளை பார்த்து நகைத்தபடி…

இதற்கும் திக்கினாள் திணறினாள்..” அது அத்தை.. அது வந்து.. எப்படி அத்தை ?? ” என்று மென்று விழுங்கினாள்..

அவர் சந்தோசமாக சிரித்தபடி “ கள்ளி “ என்று அவளது கன்னத்தை கில்லி “ இரண்டு போக்கிரியும் சேர்ந்து எங்களுக்கு தெரியாம என்ன பண்ணலும் நாங்கள் கண்டு பிடிக்க மாட்டோமா ?? ”

“ அத்தை “ என்று கூறி அசடு வழிந்தாள்..

“ என்ன வசும்மா எப்படி என் ஷாக் ??? எப்படி இருந்தது ?? ஆனால்  இப்படியா பயந்து நடுங்குவது.. நானும் உங்கள் பையனும் காதலிக்கிறோம் எங்களுக்கு கல்யாணம் செய்து வையுங்கள் நான் இங்கு ஒருத்தி இருக்கும் போது எப்படி நீங்க வேறு பொண்ணு பார்க்கலாம் என்று  சண்டை போடுவாய் என்று  பார்த்தால்  நீ இப்படி திக்கி தினருற ” என்று அவளை கேளி பேசினார்.

வசுமதிக்கு இப்பொழுதுதன் இயல்பாக மூச்சு விட முடிந்தது. .” உப் … அத்தை கொஞ்ச நேரத்தில் மிகவும் டென்ஷன் பண்ணிட்டிங்க.. இதில் நான் உங்ககிட்ட சண்டைக்கு வரவேண்டுமா ?? போங்க அத்தை ” என்றார் சலுகையாக..

அவரும் சிரித்தபடி “ ம்ம் சரி சரி.. உனக்கு கல்யாணத்திற்கு சம்மதமா ?? ” எனவும் எங்கு இருந்து தான் அவளுக்கு அத்தனை வெட்கம் வந்ததோ “ ம்ம் “ என்று தலை தாழ்த்தி தன் சம்மதத்தை கூறினாள்..

அவளை நெட்டி முறித்தவாறே “ கல்யாணம் என்று  சொன்ன உடனே எங்கே இருந்து தான் இந்த பொண்ணுங்களுக்கு வெட்கம் வருதோ??? பாரு எப்படி சிவந்து போனது  உன் முகம் “ என்று சக தோழிகளிடம் பேசுவது போல பேசினார்..

அவளும் ஒருவழியாக தன்னை சமன் செய்து கொண்டு இயல்பாக பேச ஆரம்பித்தாள்.. அவர் மடியில் படுத்தவாறே “ அத்தை உங்க கிட்ட நான் ஒரு விஷயம் கேட்கணும்  “ என்று இழுத்தாள்..

“ நீ என்ன கேட்க போகிறாய் என்று  எனக்கே தெரியும் வசும்மா…” என்று கூறி மீண்டும் அவரே ஆரம்பித்தார்

 “ எப்படி அத்தை என்னை உங்கள் மருமகளா கொண்டு வர இவ்வளோ ஆசை உங்களுக்கு??? இது தான நீ கேட்க வந்த ?? ” அவள் காமாட்சியை ஆச்சரியமாக பார்த்து ஆமாம் என்பது போல தலை அசைத்தாள்.. 

“ நான் கூட முதலில் பயந்தேன் வசும்மா.. பட்டினத்தில் வளர்ந்வள் இங்கு நமக்கு ஒத்து வருமா என்று ஆனால்  நீ இயல்பாய்  இங்க பொருந்திவிட்ட.. அதுவே எனக்கு மிகவும் சந்தோஷம்.. ஆனால் என் இன்னொரு பயம் எல்லாம் என் மகனுக்கு உன்னை  பிடிக்கவேண்டுமே என்று தான். ஆரம்பத்தில் உங்கள் இரண்டு பேரு நடுவிலும் சண்டை வந்தால் எனக்கு தான் மிகவும் கஷ்டமாய் இருக்கும்.. வயதுபிள்ளையை வீட்டில் தாங்க வைத்திருக்கோமே இவன் வேறு இப்படி முகத்தில் முள்ளை கட்டிக்கிட்டு அலைகிறானே என்று  புலம்பி தவிப்பேன்.. மாமாவும் ஆச்சியும் தான் எனக்கு எடுத்து சொன்னாங்க..” என்று கூறி சிறு நேரம் அமைதியாக இருந்தார்..

“ ம்ம் அடுத்து சொல்லுங்க அத்தை “ என்று ஊக்கப்படுத்தினாள்..

“ அடி கழுதை உனக்கு நான் கதையா சொல்கிறேன்.. இப்படி சுகமா படுத்துகிட்டு கேட்டுகிட்டு இருக்க.. ” என்று அவள் முதுகில் செல்லமாக அடித்து

“ பின்ன இயல்பாவே எனக்கு பெண் பிள்ளை என்றால் மிகவும் பிடிக்கும் டா.. நீயும் இங்க எல்லாரு மேலவும் பாசமாய் பொறுப்பாய் இருக்க.. எல்லாத்தையும் இழுத்து போட்டு செய்யுற.. இதை எல்லாம் விட என் மகன் உன் மேல் கிறுக்கா இருக்கான் அதான் “ என்று கூறி மறுபடியும் சிரித்தார்..

தன் காதல் கைகூடி விட்ட மகிழ்ச்சியில் மிதந்தாள் வசுமதி.. எப்படி இதை வீட்டில் கூற போகிறோம் என்று தவித்து இருந்தவளுக்கு பழம் நழுவி பாலில் விழுவதை போல வீட்டில் இருப்பவர்களே நாள் குறிக்க போகவும் மனதில் மிகுந்த உற்சாகம்..

“ என் கதிர் எனக்கு சொந்தமாக போகிறான் “ என்று எண்ணினாள்.. இந்த எண்ணமே அவளை அறியாமல் அவளுக்கு கர்வம் தந்தது..

 

Advertisement