Advertisement

Precap – 20

மனது சலிப்பாய் உணர்ந்தது…. அதற்ககு குறையாது சலிப்பு சுந்தரியிடமும்.

‘எல்லாம் முடிந்தது என நினைத்தது… மீண்டும் சரியாகி… மீண்டும் சரியாகவில்லை’ என்று தோன்ற குழம்பிப் போனாள்

வாழ்க்கையில் தனியாய் நின்ற போது கூட எல்லாம் பக்குவமாய் கையாண்ட சுந்தரிக்கு கண்ணனிடம் சரியாய் நடந்து கொள்ள தெரிய வேண்டும். என்று குழம்பிப் போனாள்

—————————————————————————- 

“இவ பண்றதை ராசா கூட பொழைக்க மாட்டா போலயே , இங்க வந்து ஒரு பத்து நாள் தான் ஆகுது… ஆனா பொழுதுக்கும் சண்டை… சரியா பேசறதில்லை… ராசா சொல்றதை செய்யறதில்லை… ராசாவை கவனிக்கறதில்லை.

வயசாகிப் போனாலும், ஒத்தை புள்ளை பெதிருந்தாலும் பிள்ளையை நான் தானே பெத்தேன், புருஷன் பொஞ்சாதி ஆசாபாசமா இருக்குறது எனக்கு தெரியாதா?

ஆளுக்கு ஒரு பக்கம் நிக்குதுங்க, இன்னைக்கு இவ நாத்தானார் வீட்ல விஷேஷம்… இவ போகலை. இப்படி பண்ணினா எப்படி? திரும்ப ராசா போயிடுமோ போயிடுமோன்னு எனக்கு மனசுக்கு பயமா இருக்கு”

—————————————————————————— 

“என் புருஷனோட எனக்கு பொழைக்கனும்னு விதி இருந்தா பொழைக்கரேன்… இல்லைன்னா இல்லை! சும்மா சாவு கீவு ன்னு பொழைக்கற இடத்துல அச்சானியமா பேசிட்டு இருந்த தொலைச்சு போடுவேன்! ஏற்கனவே யாரும் நமக்கு கிடையாது இது சும்மா சாவு சாவு ன்னு பேசிகிட்டு…  பொறந்தவங்க எல்லாம் ஒரு நாள் சாகத் தான் போறேன் இனி பேசின…”

—————————————————————————–

அதுவரையிலும் அமைதியாக இருந்த சிந்தா, “என்ன பிரச்சனை?” எனவும்

“என்னவோ பிரச்சனை… நான் யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்”

“இவளை விட்டுட்டு போயடுவீங்கலா?” என்று கேட்க

நீ”ங்க என்ன வேணா கேளுங்க… ஆனா நான் பதில் சொல்ல மாட்டேன்” என்று சொல்ல

“நல்ல சேர்ந்தீங்க புருஷனும் பொஞ்சாதியும்… ஒரே மாதிரி!!”

—————————————————————————— 

பொறுமையாகவே, “என்ன சுந்தரி, இப்படி பண்ற? என்ன உனக்கு பிரச்சனை? நான் பண்றது எதுவும் உனக்கு பிடிக்கலையா? நான் உன்னை குறைச்சு மதிப்பிடலை… யாரும் உன்னை குறைவா நினைச்சிடக் கூடாதுன்னு தான் சொன்னேன்”என்ற கண்ணனின் கேள்வி க்கு சுந்தரி பதிலே சொல்லவில்லை

“பதில் சொல்லுடி…” என

சுந்தரி எதுவும் பேசவில்லை  

கண்ணனுக்கும் இதற்கு மேல் என்ன செய்யவென்று தெரியவில்லை, ‘நீ எப்படியோ போ !’ என்று விட்டு விட்டான்..

——————————————————————————- 

அவனுக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்பது சுந்தரிக்கு தெரியாது, அவளும் கேட்கவில்லை, அவள் எப்போதும் சமைக்கும் பதார்த்தங்கள் அவனுக்கு பிடிக்காதவையாய் போய்விட… அவனின் உடல் உழைப்புக்கு ஏற்ற உணவு இல்லாமல் போக ஒரே மாதத்தில் ஆள் பொலிவிழந்து விட்டான்

சுந்தரி எப்போதும் போல தான்… அவளுடையது எப்போதும் மங்கிய தோற்றம் தானே !!

Advertisement