Advertisement

   மாயவனோ!! தூயவனோ !! – 8

 “ஏய் மித்து….. மித்ரா.. டி.. கதவை திற டி.. உள்ள இவ்வளோ நேரமா என்ன பண்ணிக்கிட்டு இருக்க?? நான் முக்கியமான மீட்டிங்கு வேற போகணும்..” என்று குளியல் அறையின் வெளியே நின்று கத்தி கொண்டு இருந்தான் மனோகரன்..

(உன் நிலைமை இப்படியா மனோ அகனும் ??)

அவனது ஆருயிர் மனைவி மித்ரவோ தன் காதுகள் இரண்டும் கேட்காது என்பது போல உள்ளே கதவை சாத்தி கொண்டு நின்று இருந்தாள்..

“ டி மித்து இப்ப நீ மட்டும் கதவை திறக்கல.. நான் உடைச்சுக்கிட்டு உள்ள வந்திடுவேன்.. எவ்வளோ நேரம்.. எனக்கு தெரியும் நீ வேணும்னே தான் இப்படி பண்ணுறன்னு”

“ ஹே !!! மனு !! ஏன் இப்படி கத்துற.. பாத் ரூம்ல கூட என்னைய நிம்மதியா இருக்க விட மாட்டியா ?? “

(அதானே )

“ அடியே உள்ள என்ன தவமா பண்ணுற ?? எவ்வளோ நேரம் சீக்கிரம் வா.. எனக்கு நேரமாகுது..”

“ ஹா !!!! ஆமா தவம் தான் பண்ணிட்டு இருக்கேன்.. இவ்வளோ பெரிய வீட்டுல வேற பாத் ரூம் இல்லையா ??”

“ இங்க பாரு மித்து என் பொறுமைய ரொம்ப சோதிக்கிற நீ.. ஒழுங்கா கதவை திறந்து வெளிய வா..” என்று கூறி டமடமவென்று தட்டினான்..

“ ஆமாமா இவ்விடம் உங்கள் பொறுமை சோதிக்க படும்னு போர்ட் போட்டு லேப் வச்சு இருக்கேன் பாரு.. ச்சேய்.. வீடா இது “ என்று கூறிக்கொண்டே கதவை திறந்து வந்தாள்..

அவளை பார்த்து முறைத்தபடி நின்றான் மனோகரன்.. “ என்ன ?? என்ன லுக் விடுற?? வீடே அதிருற மாதிரி கதவு தட்டுன இப்ப என்ன நிக்கிற?? போ போயி குளி..” என்றால் அசால்டாக..

( நீ போயி சோப்பு துண்டு எல்லாம் எடுத்து குடுக்கிறது )

“ கொஞ்சம் கூட புருசன்னு உனக்கு மரியாதையே இல்லை.. “ என்று பற்களை கடித்தான்..

“ பாத்து பாத்து பல்லு எல்லாம் நொறுங்கிட போது.. அப்புறம் இந்த வயசுலேயே நீ பேசுனா வெறும் காத்து தான் வரும்…” என்று அவள் கிண்டல் செய்யவும் “ அடியே உனக்கு வாய் கூடி போச்சு “ என்று கூறியபடி அவள் எதிர் பார்க்காத நேரத்தில் அவளது கையை பற்றி இழுத்தான்..

இவன் இப்படி இழுப்பான் என்று அவள் என்ன கனவு கண்டாளா என்ன?? அலமலந்து அவன் மீதே சரிந்தாள் படுக்கையின் மீது.. இருவரின் பார்வையும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டு கொண்டு இன்னொருவரின் மனதை ஆராய தொடங்கியது.. இறுதியில் இருவரின் இதய துடிப்பின் ஓசை மட்டுமே அங்கே கேட்டது..

மனோவின் இருதய துடிப்பு மித்ராவின் துடிப்புடன் கலந்ததோ இல்லையே இருவரின் பார்வையும் கலந்து நின்றது.. எத்தனை நேரம் இப்படி இருந்தனரோ தெரியவில்லை.. முதலில் சுதாரித்தவள் மித்ரா தான்..

“ அட கடவுளே என்ன காரியம் பண்ணோம் “ என்று தன்னை தானே கடிந்து கொண்டு “ ஏய் !! ச்சி விடு.. என்ன இது குளிக்காம கூட இப்படி பண்ற ?? ” என்று திட்டியபடி அவனிடம் இருந்து திமிரி விலகினாள்.. ஆனால் மனோகரனா  விடுவான்..

மீண்டும் அவளை தன் புறம் இழுத்து “ அப்போ குளிச்சுட்டு வந்து  உன்னைய கட்டி பிடிச்சா உனக்கு ஓக்கேவா மித்து ??“ என்று குறும்பாக..

(நியாயமான கேள்வி மனோ )

“ உன்கிட்ட எத்தனை தடவ சொல்லி இருக்கேன் இப்படி எல்லாம் என்கிட்டே பேசாதன்னு.. எனக்கு நிறைய வேலை இருக்கு “ என்று அவள் கூறும் பொழுதே அவர்கள் அறையின் கதவு தட்டும் ஓசை கேட்டது..

மித்ரா கதவை நோக்கிய நேரம் அவளது கன்னத்தில் அழுந்த முத்தமிட்ட மனோகரன் அவள் திரும்பி பார்க்கும் முன்னே கதவிடம் சென்றுவிட்டான்..

(மனோ நீ கலக்குற )

“டேய் மனு !!!” என்று அவனை முறைத்து கொண்டே யாரென்று பார்த்தால் திவா தான் வெளியே நின்று இருந்தான்..

“அண்ணா ரீனா வீட்டுல இருந்து போன் வந்தது.. ரீனாவும் நிர்மலா ஆன்ட்டியும் கொஞ்ச நேரத்துல இங்க வராங்களாம் “ என்று கூறவுமே மனோகரனின் முகம் மாறியது..

( யாரது இன்னும் புதுசா ??)

“என்ன திவா சொல்லுற?? இப்பயா ?? நான் வேற மீட்டிங் போகணுமே.. “ என்றான்..

அதே நேரம் அங்கு வந்த கிருபாவும் பிரபாவும் “ அண்ணா சுனாமியும் சூறாவளியும் வருதாம்.. நாங்க மேட்ச் விளையாட போறோம்.. அவங்க போனதுக்கு அப்புறம் நாங்க வரோம்.. அண்ணி உங்களுக்கு இன்னைக்கு தலை வலின்னு சொன்னிங்க தானே “ என்றான் கிருபா..

“ என்ன டா நடக்குது இங்க ?? யாரு வரா ?? மனு ஏன் இப்படி ஷாக் ஆகி நிக்கிறான்.. இந்த அறைபடியும் கால்படியும் எங்கயோ எஸ் ஆக பாக்குது.. நமக்கு வேற ஏதோ சிக்னல் குடுக்குறானே” என்று பார்த்து கொண்டு இருந்தவள் ஒன்றும் புரியாமல் மனோவை பார்த்தாள்..

மனோகரனோ அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு “ யாரும் எங்கயும் போக வேண்டாம்.. இன்னைக்கு லீவ் தானே எல்லாம் வீட்டுல இருங்க.. மீடிங்க நாளைக்கு கூட அரேஞ் பண்ணிக்கிறேன் “ என்றான் சற்றே கட்டளையான குரலில்..

மித்ராவிற்கு முதலில் யார் வருகிறார்கள் என்றே புரியவில்லை.. ஆனால் ஒன்று மட்டும் நன்றாக புரிந்தது.. வருபவர்களை இங்கு இருக்கும் யாருக்கும் பிடிக்கவில்லை மனோகரனை தவிர..

“ அது மித்து வக்கீல் அங்கிள் சொன்னேன்ல அவரோட மனைவியும் பொன்னும் தான் வராங்க.. “ என்றான் சமாளிக்கும் குரலில்.. “ அவங்க வரதுக்கு இவனுங்க ஏன் ஓடுறானுங்க.. ?? ” என்று கேட்டே விட்டாள் மித்ரா..

மனோகரன் பதில் பேசும் முன்னே பிரபா “ அண்ணி உங்களுக்கு அவங்க ரெண்டு பேரையும் பத்தி தெரியாது.. அங்கிள் எவ்வளோ நல்லவரோ இவங்க என்று பெரும் அதுக்கு நேர் எதிர்.. அதுவும் அந்த ரீனா.. “ என்று கூறும் பொழுதே மனோ

“பிரபா என்ன பழக்கம் இது அடுத்தவங்கள பத்தி தப்பா மத்தவங்க கிட்ட பேசுறது..  “ என்று கடிந்தான்.. மித்ராவிற்கு  மனோகரன் தன்னை “ மத்தவங்க “ என்று கூறியது ஒரு புறம் கடுப்பை தந்தாலும் அந்த ரீனாவிற்கு ஏற்றுக்கொண்டு தன் தம்பியையே கடிந்தது இன்னும் எரிச்சலாக இருந்தது..

(ஆகா இப்பயே புகைய ஆரம்பிச்சிடுச்சு )

“அவ்வளோ முக்கயமா அவ..?? பாவம் பிரபா முகமே வாடி போச்சு “ என்று எண்ணியவள் “ டேய் பிரபா நீ எதுவும் கவலை படதா.. உங்க அண்ணனை கல்யாணம் செஞ்சு இருக்கும் போதே உனக்கு என்னைய பத்தி தெரிய வேண்டாமா?? ஹ்ம்ம் நான் எல்லாம் டிராகுலாக்கே ஹலோ ஹாய் சொல்றவ.. இந்த சுனாமியும் சூறாவளியும் நம்மளை ஒன்னும் பண்ணாது.. நீ கவலை படமா இரு “ என்றாள் தன் கணவனை ஒரு பார்வை பார்த்தபடி..

“இவ வேற.. நான் சொல்லுறது புரியாம அப்ப அப்ப இப்படி ஒரு பார்வை பார்த்துக்கிட்டு.. இதுல பஞ்ச் டையலாக் வேற “ என்று எண்ணி தலையில் அடித்து கொண்டான்..

(இன்னும் ரெண்டு அடி நல்லா போட்டுக்கோ மனோ )

தங்கள் அண்ணி இருக்கிறாள் என்ற தைரியமே திவா, கிருபா, பிரபா மூவரையும் வீட்டில் தங்க வைத்தது.. ஆனால் மனோகரனோ ஒவ்வொரு நிமிடமும் சிந்தனையில் ஆழ்ந்தான்.. மித்ராவிற்கு எந்த உணர்வும் இல்லை.. வருபவர்களை இது வரை பார்த்தது கூட இல்லை..

ஆனால் ஒன்றை மட்டும் முடிவு செய்து வைத்து இருந்தாள். மனோவின் தம்பிகளை அவர்கள் ஏதாவது கூறினால் பதிலுக்கு தானும் பேசி விடவேண்டும் என்று.. மனோவின் முகம் சரியில்லை என்று மட்டும் அவளுக்கு தோன்றியது..

“என்ன ஆச்சு இவனுக்கு.. ஏன் எதையோ தின்ன எதுவோ போல இருக்கான்.. என்னைய அவ்வளோ அவசர படுத்தினான் இப்ப இப்படி நின்னு இருக்கான்.. “ என்று எண்ணியவள் “ மனு ஏன் இப்படி இருக்க ??” என்று கேட்டே விட்டாள்..

அவளது முகத்தை ஒரு நொடி பார்த்தவன் “ இல்ல மித்து நம்ம கல்யாணம்  பத்தி இன்னும் நிர்மலா ஆன்ட்டிக்கு, ரீனாக்கு எல்லாம் தெரியாது. இப்ப திடீர்னு உன்னைய என் மனைவின்னு சொன்னா என்ன சொல்வாங்களோ என்னவோன்னு தான் தயக்கமா இருக்கு “ என்றான்..

( எப்ப தயங்குறது ??)

“ ஓ!!! துறைக்கு என்னைய மட்டும் தான் அரட்டி உருட்டி மிரட்ட எல்லாம் தெரியுமா ?? ஏன் அவங்க கிட்ட சொல் வேண்டியது தானே ஆறு மாசமா என் பின்னால எனக்கே தெரியாம சுத்துன கதைய எல்லாம்.. வேணும்னா நான் சொல்லவா நம்ம கல்யாண கதைய” என்றாள் நக்கலாக..

“ ம்ம்ச்.. மித்ரா.. அவங்க கிட்ட பார்த்து பேசு.. அவங்க வக்கீல் அங்கிள் ஓட மனைவியும் பொண்ணும்… அவரு இருந்த வரைக்கும் எங்களுக்கு எவ்வளோ உதவியா” என்று அவன் கூறும் பொழுதே போதும் என்பது போல கைகளை உயர்த்தி

“ இங்க பாரு உன் நன்றி நவில்தல் எல்லாம் உன்னோட வச்சிக்கோ.. முறையா என்னைய இன்ட்ரோ பண்ணுறதா இருந்தா சொல்லு நான் வெளிய வரேன்.. இல்ல நான் கண்டுக்கவே மாட்டேன்.. அவங்க யாரா வேணா இருக்கட்டும்.. அதுக்காக ரூம் குள்ள சைலென்ட்டா இருப்பேன்னு மட்டும் நினைக்காத.. “ என்றாள்

அவள் கூறியதை கேட்ட  மனோவிற்கு மண்டை குடைந்தது.. ஏற்கனவே வருபவர்களிடம் என்ன கூறுவது என்று ஒரு பக்கம் இதில் இவளை அடக்குவது இன்னொரு பக்கம்.. “ ஆஆ !!!! ராட்சஸி படுத்துறாளே ” என்று தனக்குள்ளே கூறி கொண்டு.. “ ரெடியா இரு “ என்று மட்டும் கூறிவிட்டு சென்று விட்டான்..

அவன் மனதில் எண்ணியது மித்ரவிற்கும் தெரிந்தே இருந்தது போல “ ஹா ஹா !! மனு இதுக்கே உனக்கு இப்படி இருக்கே.. இன்னும் வாழ்கையில இந்த மித்ரா கிட்ட எவ்வளவோ பாக்க வேண்டியது இருக்கே..” என்று உல்லாசமாக கூறி கொண்டாள்..

( இன்னும் என்ன பண்ண மா காத்து இருக்க ??)

மனோவும் திவாவும் பேசி கொண்டு இருக்க கிருபாவும் பிரபாவும் மித்ராவிடம் ஏதோ ரகசியம் பேசி கொண்டு இருந்தனர்.. அவ்வப்பொழுது மனோகரன் திரும்பி திரும்பி பார்த்து கொண்டு தான் இருந்தான்.. “ உன் பார்வை எல்லாம் எங்களை ஒன்றும் செய்யாது “ என்று அவர்களும் பதிலுக்கு பார்த்து கொண்டு தான் இருந்தனர்..

திவாவிடம் “ டேய் சும்மாவே உங்க அண்ணிக்கு ஆட தெரியாது.. இதுல பாரு இவனுங்க ரெண்டு பெரும் வேற ஏத்தி விடுறானுங்க.. “ என்றான் மனோ..

திவா “ அண்ணா நிர்மலா ஆன்ட்டி, ரீனா ரெண்டு பெற பத்தியும் நமக்கும் தெரியுமே.. இப்ப வரேன்னு சொல்லிட்டு ஆடி அசஞ்சு வருவாங்க..ஆனா நம்ம மட்டும் அவளுக்காக வெயிட் பண்ணனும்.. அண்ணிக்கு இதெல்லாம் புதுசு தானே விடுங்க அண்ணா பாத்துக்கலாம். “ என்று கூறவும் இதற்கு மேல் மனோவால் பதில் பேச முடியவில்லை..

( நல்லா அடிக்கிறிங்க டா ஜால்ரா )

சிறிது நேரத்தில் ஒரு அடர் சிவப்பு நிற கார் வேகமாக வந்து நின்றது.. அந்த நேரம் பார்த்து மனோகரன் தன் அலுவலக அறையில் இருந்தான்.. திவா தன் அறையில் எதோ வேலை செய்து கொண்டு இருந்தான்.. மற்ற இருவரையும் ஆளை காணவில்லை.. மித்ரா தான் முன் பக்கம் இருந்த தோட்டத்தில் வேலை நடப்பதை பார்த்து கொண்டு இருந்தாள்..

காரில் இருந்து ஒரு ஐம்பது வயது நிரம்பிய பெண்மணியும் ஒரு இருபத்தி ஐந்து வயது நிரம்பிய ஒரு பெண்ணும் இறங்கினர்..

அவர்களை கண்ட மித்ரா “ ஓ !! இவங்க ரெண்டு பேரும் தான் கிருபா சொன்ன சுனாமியும், சூரவளியுமா “ என்று பார்க்கும் பொழுதே அவர்கள் இருவரும் இவளை தான் பார்த்தனர்..

“ யாரு ரீனா இது புதுசா இருக்கா ?? இது வரைக்கும் இவளை நான் இங்க பார்த்தது இல்லையே..” என்று தாய் வினவ.. “ புதுசா சேர்ந்து இருக்க வேலைக்காரியா இருக்கும் மா “ என்றாள் மிகவும் பந்தாவாக தன் கூலிங் கிளாசை கலட்டியபடி…

இது அனைத்தும் மித்ராவின் காதுகளிலும் விழுந்தது.. ஆனால் எதுவும் கூறவில்லை.. ஏனோ அவளுக்கு முதல் பார்வையிலேயே இவர்கள் இருவரின் மீதும் அத்தனை பெரிய நல்ல எண்ணம் ஒன்றும் தோன்றவில்லை.. ஒரு வேலை கிருபா, பிரபா இருவரும் ஓதியதால் கூட இருக்கலாம்..

மித்ராவை ஒரு வெட்டும் பார்வை பார்த்துவிட்டு “ மன்னோ… மன்னோ… “ என்று கொஞ்சியபடியே உள்ளே சென்றாள் ரீனா.. அவளை தொடர்ந்து அவள் தாயும்..

இந்த ஒரு காரணமே போதாதா மித்ராவிற்கு ரீனாவை முற்றிலும் பிடிக்காமல் போக.. “ என்னது மன்னோவா… ஏன் இப்படி குழையுறா ?? அவளும் அவ ட்ரெஸ்ஸும்.. மூஞ்சியும்.. பசங்க இருக்கிற வீட்டுல எப்படி வரணும்னு தெரியாது.. சச்சே.. சொரண்டி எடுத்தா ஒரு வீடே கட்டலாம் போல அவ்வளோ மேக் அப்” என்று ரீனாவை கருவி கொண்டே உள்ளே சென்றாள்..

அங்கே பார்த்தால் அந்த நிர்மலா என்னவோ அவர்தான் வீட்டின் பெரிய மனுசி என்பது போல கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருந்தார்.. அவள் அந்த ரீனா மனோகரனின் அருகில் மிக உரிமையாக அவனது கைகளை பற்றியபடி அமர்ந்து இருந்தாள்..

மனோவின் தம்பிகள் மூவரும் பொறியில் மாட்டிய எலிகள் போல முழித்தபடி நின்று இருந்தனர்.. இதை எல்லாம் பார்த்த மித்ராவின் உணர்வுகளை கூறவும் வேண்டுமா??

“ என்ன தைரியம் இந்த ரீனாக்கு.. நானே மனு பக்கத்துல இவ்வளோ உரிமையா உக்கார்ந்தது இல்ல.. அதுலையும் அவன் கைய பிடிச்சிட்டு வேற என்ன கொழுப்பு.. இவனுக்கு எங்க போச்சு புத்தி “ என்று கோவமாக பேச போனவள் ஒரு நொடி நிதானித்து

“ வாங்க வாங்க… மனு.. வீட்டுக்கு கெஸ்ட் வராங்கன்னு சொல்லவே இல்ல.. ஆமா  நீங்க மூணு பெரும் ஏன் இப்படி நிக்கிறிங்க ?? உட்கார நம்ம வீட்டுல இடமா இல்லை?? ” என்றாள் மனுவிலும், நம்ம வீட்டிலும் ஒரு அழுத்தம் குடுத்து.. அடுத்த நொடி மூவரும் இருக்கையில் இருந்தனர்..

( நீ கலக்கு மித்ரா )

இதை கேட்டதும் நிர்மலவிற்கும் ரீனாவிற்கும் தூக்கி வாரி போட்டது..  யாரடா இவள்..?? வேலைக்காரி என்று நினைத்தால் அதிகாரம் தூள் பறக்கிறது என்பது போல பார்த்தனர்..

அவர்கள் பார்வயை புரிந்து கொண்ட மித்ராவும் மனதிற்குள்ளே சிரித்தபடி “ பேசிட்டு இருங்க குடிக்க ஜூஸ் கொண்டு வரேன் “ என்று மிகவும் பவ்வியமாக கூறி உள்ளே சென்றாள்.

மனோ “ அட ராமா !! ஆரம்பிசுட்டாளே.. இனி என்ன என்ன செய்ய காத்திருக்களோ.. இந்த ரீனா வேற பெவிகால் போட்டது மாதிரி ஓட்டிக்கிட்டு இருக்கா.. ஜூஸ்ல எதை கலக்கி கொண்டு வர போறாளோ  “ என்று நினைத்து கொண்டு இருக்கும் பொழுதே கையில் ஒரு ஜூஸ் தட்டுடன் வந்தாள் மித்ரா..

நிர்மலா “ யாரிவள் ?? என்ற கேள்வியோடு மனோகரனை பார்த்தார்.. ஆனால் ரீனாவோ “ மன்னோ.. யார் இது  புதுசா இருக்கா ?? புது வேலைக்காரியா ?? ஆமா இந்த பொன்னி எங்க ?? வேலைக்காரிக்கு இவ்வளோ இடமெல்லாம் குடுக்க கூடாது மன்னோ “ என்றால் செல்லம் கொஞ்சி.. விட்டால் அவனது மடியிலேயே ஏறி அமர்ந்து விடுவாள் போல.. அத்தனை நெருக்கம்..

( உனக்கு ஏழரை ஆரம்பிச்சிடுச்சு மனோ )

“ இவளுக்கு தான் அறிவில்ல.. அவ அம்மாக்கு எங்க போச்சு மூளை ?? அதைவிட இந்த மனு அவ தான் ஒட்டி உரசுறான்னா இவன் ஏன் பிடிச்சு வச்ச மாதிரி இருக்கான்..” என்று கருவிக்கொண்டே

“ என்ன மனு இன்னும் இவங்களுக்கு நான் யாருன்னு சொல்லலையா ?? ” என்று கேட்டபடி வந்து அமர்ந்தாள் மனோவின் அருகில்… முதல் முறையாக தானாக வந்து அருகில் அமருகிறாள் என்று எண்ணினான் மனோகரன்.. அதன் பிறகு அவன் மனதில் ஒரு மின்னல் அடித்தது..

“ என்ன கிருபா ?? இன்னைக்கு மௌன விரதாம ?? எப்பயும் கல கலன்னு பேசிகிட்டே இருப்ப?? சொல்ல வேண்டியது தானே நான் யாருன்னு “ என்று கேட்டபடி மனோவை முறைத்தாள் யாரும் பார்க்காத படி..

நிர்மலாவும் ரீனாவும் மித்ரா வந்து மனோகரனின் அருகில் அமரவுமே “ ஒரு வேலைக்காரிக்கு இத்தனை உரிமையா ??” என்று நினைத்தனர்.. ஆனால் அதை நிர்மலா கேட்டே விட்டார்..

இதை கேட்டதும் ஒரு நொடி மனோவின் முகம் அதிர்ந்து கருத்தது. பின் “ ஆன்ட்டி  கொஞ்சம் நிதானமா வார்த்தைய விடுங்க, இவ..”

“ ஐம் Mrs. மித்ரா மனோகரன் “ என்று  ஒரு நிமிர்வோடு பதில் கூறி இருந்தாள்  மித்ரா. மனோகரனே ஒரு நிமிடம் தன்னை மறந்து அவளை நோக்கினான்.. திவா கிருபா பிரபா முகத்தில் சந்தோசம், பார்வையில் “ சபாஸ் அண்ணி “ என்று கூறுவது போல இருந்தது..

(ஆமா மித்ரா நாங்களும் சபாஸ் )

ஆனால் இதை கேட்ட மற்ற இரு பெண்களுக்கும் அத்தனை மகிழ்ச்சி இல்லை போல மாறாக அதிர்ச்சி, ஆச்சரியம், இது எப்படி சாத்தியம் என்ற உணர்வுகளே முகத்தில் பிரதிபலித்தது.. மித்ரா கூறிய பதிலே ரீனாவை மனோகரனின் மீது வைத்து இருந்த கையை எடுக்க வைத்தது.. அதிர்ச்சியில் சற்று தள்ளியே அமர்ந்துவிட்டாள்.. அதை கண்ட மித்ராவின் முகத்தில் ஒரு வெற்றி புன்னகை..

நிர்மலா தான் முதலில் சூழ்நிலையை புரிந்து கொண்டு “ என்ன ?? மனோ இது எப்ப எப்படி நடந்தது ?? எங்க கிட்ட ஒருவார்த்தை கூட சொல்லல?? உங்க அங்கிள் இல்லைன்னா நாங்க எல்லாம் உன் மேல அக்கறை இல்லாதவங்களா??  கல்யாணம்ங்கிறது எவ்வளோ பெரிய விஷயம் அதை சொல்லாம பண்ணி இருக்க “ என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார்..

ஏற்கனவே மனோகரன் இவர்களிடம் எப்படி கூறுவது என்று யோசித்து கொண்டு இருந்தான்.. தேவை இல்லாதா கேள்விகள் வருமோ என்ற எண்ணமே அதற்கு காரணம்.. அதனால் சமயம் பார்த்து அவர்களிடம் சொல்லவேண்டும் என்று வார்த்தைகளை தேடி கொண்டு இருந்தான்.. மித்ரா வந்து இப்படி பட்டென்று உடைப்பாள் என அவன் சிறிது கூட நினைக்கவில்லை..

“ இத்தனை கேள்வி கேக்குறாங்களே அப்படியே இடிச்ச புளி மாதிரியே இருக்கான் பாரு “ என்று முனுமுனுத்தவள் “ என்ன மனு ஆன்ட்டி கேக்குறாங்களே பதில் சொல்லுங்க.. இல்லை நான் சொல்லவா நம்ம கல்யாணம் பத்தி “ என்றதும் மீண்டும் அதிர்ந்தான் மனோகரன்..

இருவரும் போடும் நாடகத்தை மற்ற அனைவரும் இமைக்காமல் பார்த்து கொண்டு தான் இருந்தனர்.. ஆனால் சிறியவர்கள் யாரும் எதுவும் பேசவில்லை.. ரீனாவிற்கு மித்ராவை காண காண பொறுக்கவில்லை. தான் இருக்க வேண்டிய இடத்தில் வேறு ஒருத்தியா என்று எண்ணினாள். 

ரீனா “ மன்னோ… நீங்க பண்ணது கொஞ்சம் கூட சரி இல்ல..  டாடி எங்களை நீங்க தானே பொறுப்பா பார்த்துக்கணும்னு சொல்லி இருக்கார்.. அதுமட்டுமில்லாம எனக்கு ஒரு வாழ்கை அமைச்சு குடுக்க வேண்டியது உங்க பொறுப்புன்னு நீங்க தானே சொன்னிங்க??   ” என்றாள்  வராத  கண்ணீரை துடைத்து..

மனோகரனின் தம்பிகள் மூவரும் இதை ஒருவித வெறுப்போடு பார்த்து கொண்டு இருந்தனர். நிர்மலா “ ஹ்ம்ம் விடு ரீனா.. மனோ குடுத்து வைத்தது அவ்வளோ தான்.. என்ன உன் அப்பா இருந்திருந்தா இந்நேரம் எல்லாமே நல்லதா நடந்து இருக்கும்.. ஆனா எல்லாம் கை மீறி போச்சே “ என்று அவரும் கண்ணீர் சிந்தினார்..

மித்ராவிற்கு மனதிற்குள் சொல்ல முடியாத ஒரு உணர்வு.. “ இந்த மனு நிஜமாவே ரீனாக்கு ஏதா வாக்கு குடுத்திருப்பானோ?? ஒருவேளை அவனுக்குமே அவளை பிடிச்சு தான் இருந்ததா ?? அப்புறம் ஏன் என்னைய கல்யாணம் பண்ணான்?? ஐயோ ஏற்கனவே ஆயிரம் கேள்வி பதில் இல்லாம இருக்கு.. இதுல இது வேறையா” என்று நொந்துகொண்டாள்.. ஆனாலும் மனோகரனை ஒரு குற்றவாளியை போல அவர்கள் பேசுவது அவளுக்கு பிடிக்கவில்லை..

“ பதில் பேசு மனோ.. இப்படி நீ சொல்லாம கொல்லாம ஒருத்திய கல்யாணம் பண்ணி வீட்டுல வச்சு இருந்தா இதை நாங்க ஏற்துக்கிடனுமா?? இது தான் நீ உன் அங்கிள்க்கு செய்யுற மரியாதையா ?? இதை நான் கொஞ்சம் கூட உன்கிட்ட எதிர்பார்கல.. இனி எனக்கும் என் பொண்ணுக்கும் என்ன பிடிப்பு இருக்கு சொல்லு “ என்றார் ஏதோ அவன் இவர்களை ஏமாற்றிய குரலில்..

இதை எல்லாம் கேட்கும் பொழுதே மனோகரனுக்கு சுள்ளென்று தான் வந்தது. “ என்ன இது ஏன் இப்படி பேசுறாங்க.. இத்தனை நாள் இவங்களுக்கு என்ன செய்யல நான்.. நான் என் மனசுக்கு பிடிச்சவளை கல்யாணம் பண்ணது இவ்வளோ தப்பா” என்று எண்ணிக்கொண்டு அவர்களுக்கு பதில் சொல்ல ஆரம்பிக்கும் பொழுதே

“ நடுவுல பேசுறேன்னு தப்பா நினைக்க வேண்டாம் ஆன்ட்டி.. எனக்காக தான் மனு இவ்வளோ அவசரமா கல்யாணம் பண்ணாங்க.. சாரி உங்க யாருகிட்டயுமே சொல்ல முடியல. என் அப்பா அம்மா அவசரமா வெளிநாடு போறதா இருந்தது.. அதுக்குள்ள என் கல்யாணம் முடிக்கவேண்டிய நிலைமை. இதுல மனு தப்பு எதுவுமே இல்லை “ என்றாள் மித்ரா மிகவும் நிதானமாக அதே நேரம் அழுத்தமாக..

(அடி ஆத்தி )

மித்ரா பேசியதும் அங்கே சிறு எறும்பு ஊரியிருந்தால் கூட அந்த சத்தம் கேட்டு இருக்கும். அந்த அளவிற்கு அமைதி.. நிர்மலா ரீனா இருவருக்கும் இதற்கு மேல் என்ன கூறுவது என்று தெரியவில்லை…

மனோகரனும் தன்மையாக “ ஆன்ட்டி உங்க எல்லார் கிட்டயும் சொல்லாம கல்யாணம் பண்ணது தப்பு தான்.. ஆனா எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்குமே.. நீங்க வீனா டென்ஷன் ஆகவேண்டாம்.. இத்தனை நாள் எப்படி உங்களை நாங்க பார்த்துகிட்டோமோ அதே மாதிரி தான் இனியும் இருப்போம். அதுல எந்த மாற்றமும் இல்லை.. அப்புறம் இன்னொன்னு ரீனா வாழ்கைய பத்தி கவலை படவேண்டாம். நான் குடுத்த வாக்கு எனக்கு இன்னும் நியாபகம் இருக்கு. அவளுக்கு ஏத்த மாதிரி ஒரு நல்ல வாழ்கை அமைச்சு குடுக்க வேண்டியது என் பொறுப்பு “ என்றான்..

நிர்மலா “ என்னவோ பா நீ சொல்லுற.. ஹ்ம்ம் இனிமே முன்ன மாதிரி இந்த வீட்டுல உரிமையோட வர போக முடியாது.. முதல்ல எல்லாம் ஒரு சின்ன முடிவு எடுக்கணும்னா கூட என்கிட்டே தான் கேட்ப.. இனி என்னோட அவசியம் உனக்கு தேவை படாது.. “ என்று மீண்டும் சோக கீதம் பாடினார்..

“ இப்ப எதுக்கு இந்த அம்மா இவ்வளோ சீன் போடுது. “ என்பது போல பார்த்தாள் மித்ரா.. கிருபா மனதில் “ ஏற்கனவே நன்றி விசுவாசம்ங்கிற பேருல எங்க அண்ணன் கிட்ட இருந்து பிடுங்கிறது எல்லாம் பத்தாதா ?? இன்னும் ஏன் இந்த நாடகம் “ என்று முனுமுனுத்தான்.

அவன் சொன்னது திவாவின் காதுகளிலும் விழுந்து வைத்தது.. கிருபாவை அமைதியாக இருக்குமாறு சைகை செய்தான்.. பிரபா இதை எல்லாம் எதோ வேடிக்கை பார்ப்பது போல பார்த்து கொண்டு இருந்தான்..

நிர்மலா “ சரி எப்ப கல்யாணம் நடந்தது?? ”

மனோ “ ஒரு மாசம் ஆக போது ஆன்ட்டி”

“ ஹ்ம்ம் ஒரு மாசம் ஆச்சு.. ஆனா ஒரு போன் பண்ணி கூட சொல்லல.. கொஞ்சம் கூட எங்க நினைப்பே இல்லாம இருந்திருக்க “ என்றார் அவனையே குற்றம் சாற்றுவது போல..  ஏனோ மித்ராவிற்கு கோவம் வந்தது..” என்ன இவங்க சும்மா சும்மா மனுவ குத்தம் சொல்றாங்க.. நாங்க கல்யாணம் பண்ணது என்ன உலக மகா தப்பா..” என்று அவளே அவளிடம் கேள்வி கேட்டு பின் அதிர்ந்து விட்டாள்.

இப்படி ஒரு கேள்வி அவள் மனதில் தோன்றுகிறது என்றால் அவள் மனமே இந்த திருமணத்தை ஏற்றுகொண்டது என்று தானே அர்த்தம்.. இப்படி யோசிக்கும் பொழுதே “ நோ மித்ரா நோ.. இப்போ இதை பத்தி எதுவும் யோசிக்காத.. நடக்குறதை மட்டும் கவனி “ என்று தன்னை தானே சமன் படுத்தி கொண்டாள்..

ஆனாலும் அவளால் மனோகரன் முகம் வாடுவதை தாங்க முடியவில்லை.. “ நானே மனுகிட்ட இந்த கல்யாணத்தை பத்தி இவ்வளோ கேட்டது இல்லை..” என்று எண்ணியவள் “ ஆன்ட்டிஅது நாங்க இந்த வீட்டுக்கு வந்து ஒரு பத்து பதினஞ்சு நாள் தான் ஆகுது.. அதான் உங்ககிட்ட சொல்ல முடியல” என்றாள் தன் கணவனுக்கு பதிலாக..

நிர்மலாவிற்கும் ரீனாவிற்கும் அங்கு இருக்க முடியவில்லை.. மனோகரனிடம் கேள்வி கேட்டால் புதிதாய் வந்த பதில் பேசுகிறாள். அவனுடைய தம்பிகளோ அண்ணியின் பேச்சையே வேதவாக்காக கேட்கின்றனர்.. இதை எல்லாம் காண காண தாயுக்கும் மகளுக்கும் மனம் அங்கு இருக்க இடம் தரவில்லை..

நிர்மலா “ மனோ உன்னைய நான் ஆபீஸ்ல வந்து ஒரு நாள் பாக்குறேன் “ என்று கூறிவிட்டு தன் மகளையும் இழுத்துக்கொண்டு சென்று விட்டார்.. ஏதோ புயல் வந்து போனது போல தான் இருந்தது.. அவர்கள் சென்றதுமே அனைவருமே “ உஸ் “ என்று பெரு மூச்சு விட்டனர் ஒரே நேரத்தில்..

மனோகரனுக்கு இன்னும் ஆச்சரியம் தீரவேயில்லை.. மித்ரா அவனுக்கு சாதகமாக பேசியதை இன்னும் அவனால் நம்ப முடியவில்லை. தன் அண்ணனின் பார்வையை உணர்ந்த திவா கிருபாவையும் பிரபாவையும் அழைத்து கொண்டு வெளியே சென்றுவிட்டான்..

சிறிது நேரம் அமைதியாக இருந்த மித்ரா எழுந்து அவர்கள் அறைக்கு சென்று விட்டாள்.. அதன் பிறகே தான் மட்டுமே தனித்து அமர்ந்து இருப்பது உணர்ந்து மனோகரன் எழுந்து மித்ராவை தேடி சென்றான்..

அவளோ முகத்தை மூடி படுத்து இருந்தாள்.. அவள் உடல் குலுங்குவதிலேயே அவள் அழுகிறாள் என்று புரிந்து கொண்டான்..

“ மித்து.. ஏன் இப்ப அழுகுர ? அதான் அவங்களை நல்ல பேசி அனுப்பிட்டியே “

அவன் குரல் கேட்டு விலுக்கென்று நிமிர்ந்தவள் “ வந்துட்டியா.. வா..  இன்னும் எத்தனை பேர் வருவாங்க.. வந்து இவ யாரு?? உங்க வீட்டு வேலக்காரியானு இன்னும் எத்தனை பேர் கேப்பாங்க சொல்லு “ என்று அவனது சட்டையை பிடித்து உலுக்கினாள்..

அவளது கைகளை பற்றி அவளை தன் மீது சாய்த்து கொண்டான் மனோகரன்.. அவளோ திமிறினாள் ஆனால் விடுபட முடியவில்லை..

(இப்ப இது தேவையா ??)

“ ம்ம்ச்.. உன்கிட்ட எத்தனை தடவ சொல்லி இருக்கேன்  இப்படி எல்லாம் பண்ணாதன்னு..”

“ மித்து.. இப்போ இந்த நிமிஷம் நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் தெரியுமா..”

“ நீ என்ன லூசா ??” என்பது போல பார்த்தாள் அவன் முகத்தை.

“ நிஜம் தான் மித்து மா.. நிர்மலா ஆன்ட்டி வராங்கன்னு சொன்னதுமே எங்க நீ அவங்க முன்னால எதுவும் பிரச்சனை பண்ணிடுவியோன்னு பயந்துகிட்டே இருந்தேன்.. ஆனா நீ ஒவ்வொரு நிமிசமும் எனக்கு சார்ந்து பேசுன.. அதான் ரொம்ப ஹாப்பியா இருக்கு “

“மண்ணாங்கட்டி !!! இப்படி வேற உனக்கு நினைப்பு இருக்கா ?? நான் ஒன்னும் உனக்கு சப்போர்ட் பண்ணி பேசல.. அந்தம்மா என்னைய கேவலமா நினைச்சிட கூடாதுன்னு தான் அப்படி பேசுனேன்.. வந்த உடனே வேலைகாரின்னு பேரு.. இதுல ஒருத்தருக்கும் தெரியாம கல்யாணம் நடந்ததுன்னு சொன்னா இன்னும் மோசம தான் என்னைய நினைப்பாங்க.. அதான் அப்படி பேசுனேன்..” என்றாள் அங்கரமாக..

இதை சிறிது கூட மனோகரன் எதிர்பார்கவில்லை.. “ மித்து “ என்றான் ஒரு மாதிரி குரலில்..

“ ஆமா மித்து தான்.. அதுக்கு என்ன இப்போ.. என்னைய என்ன பண்ண சொல்லுற ?? எனக்கே இந்த கல்யாணம் ஏன் நடந்ததுன்னு தெரியாது. ஆனா என் நிலமைய பாத்தியா நானே அடுத்தவங்களுக்கு விளக்கம் குடுத்துகிட்டு இருக்கேன்.. அன்னிக்கு நீ சொன்னியே உன் மேல இருக்குற நம்பிக்கைல தான் என் அப்பா அம்மா என்னய விட்டு போயி இருக்காங்கனு.. சரி நானும் அதையே நம்புறேன்..”

“ஆனா கொஞ்சம் என்னைய நினைச்சு பார்த்தியா..?? இப்படி தானே எல்லாரும் நம்மல கேவலமா நினைப்பாங்க.. ஒவ்வொருத்தர் கிட்டயும் நீயும் நானும் இன்னும் எத்தனை நாளுக்கு பதில் சொல்லிட்டு இருக்க முடியும்.. பதில் பேசு மனு.. அந்த ரீனா என்னைய எவ்வளோ கேவலமா பார்த்தா தெரியுமா..”

“ இங்க பாரு மனு, நமக்குள்ள நிறைய பிரச்சனைகள் இருக்கு.. ஆனா வெளி உலகத்தை பொருத்தவரைக்கும் அதோட பார்வையே வேற மாதிரி தானே இருக்கும்.. இத்தனை பசங்க இருக்க வீட்டுல யாரு என்னனே தெரியாம ஒரு பொண்ணு வந்து இருக்குறான்னா அவளை எப்படி நினைப்பாங்க ?? ” என்றாள் கண்ணீரோடு..

“ நீ நினைக்கிறது மாதிரி எல்லாம் எதுவும் இல்லை மித்து.. எல்லாமே இன்னும் கொஞ்ச நாளைக்கு தான்.. என் மேல உனக்கு நம்பிக்கை இருக்கா இல்லையா மித்து “ என்றான் அவளது கரங்களை பிடித்து தன் நெஞ்சில் வைத்து அவளது விழிகளையே பார்த்தபடி..

அவனது குரலில் என்ன இருந்ததோ இல்லை அவனது விழிகளில் தன்னை தொலைத்தாளோ தெரியவில்லை.. அமைதியாக அப்படியே நின்று இருந்தாள்..

“பதில் சொல்லு மித்து ?? இங்க வந்ததுல இருந்து உனக்கு கஷ்டம் குடுக்கிறது போல நான் நடந்து இருக்கேனா சொல்லு.. ஏன் மித்து இதெல்லாம் எனக்கு மட்டும் சந்தோசத்தை குடுக்கும்னு நினைக்கிறியா ?? நானும் மனுஷன் தானே.. எனக்கும் எல்லா உணர்வுகளும் இருக்கும்னு உனக்கு புரியலையா ??”

“ ஏன் இப்போ திகைச்சு போயி நிக்கிற ?? ஒவ்வொரு நிமிசமும் நான் உனக்காக தான் யோசிக்கிறேன் மித்ரா.. அது ஏன் உனக்கு புரியல.. மத்தவங்க நினைக்கிறதா விடு.. எனக்கு இப்ப தெரிஞ்சாகனும் நீ இந்த கல்யாணத்தை பத்தி என்ன நினைக்கிற?? என்னைய பத்தி என்ன நினைக்கிற ?? பதில் சொல்லு “ என்றான் ஆழ்ந்த குரலில்.. அந்த குரலே அவளை ஏதோ செய்தது..

அவனது முகத்தை பாராமல் தலையை குனிந்து கொண்டாள்.. ஆனாலும் அவன் விடவில்லை.. “ இங்க என்னைய பாரு மித்து.. வந்ததுல இருந்து நீ என்னைய குறை மட்டும் தான் சொல்லிட்டு இருக்க.. எனக்கு மட்டும் ஆசையா உன்கிட்ட நான் இப்படி எல்லாம் பேச்சு வாங்கணும்னு.. சூழ்நிலை நல்லா இருந்திருந்தா இந்நேரம் நம்ம வாழுற வாழ்க்கையே வேற மாதிரி இருக்கும்..” என்றான் ஒரு வலியோடும் ஏக்கத்தோடும்.. அதன் பின்னும் அவனே தொடர்ந்தான். 

“ஆனா நானும் உன்கூட சேர்ந்து இந்த வேதனையை அனுபவிச்சுக்கிட்டு தான் இருக்கேன்.. உன் அப்பா அம்மாக்கும் எவ்வளோ கஷ்டமா இருக்கும்னு யோசி.. உன்னைய பத்தியே நினைக்கிறதை விட்டு கொஞ்சம் அடுத்தவங்க நிலைமையும் யோசிச்சு பாரு.. ஏன் இப்படி நடந்துக்கிறாங்க ?? எதுக்காக இப்படி செய்றாங்கன்னு.. முதல்ல மனுசங்க மேல நம்பிக்கை வைக்க பழகு “ என்றான் சிறு குழந்தைக்கு கூறுவது போல..

மனோகரன் பேச பேச மித்ரா தான் இத்தனை நாட்கள் செய்த தவறை உணர ஆரம்பித்தாள்.. ஆனால் வீம்பு கொண்ட மனமோ அதை ஏற்க்க மறுத்தது. “ இவன் சொன்ன உடனே நான் கேட்கனுமா ??” என்று கேள்வி எழுப்பியது.. ஆனாலும் அமைதியாக நின்று இருந்தாள்..

“என்ன அமைதியா நிக்கிற மித்ரா… பதில் சொல்லு .. இவ்வளோ நேரம் தாளம் இல்லாம ஆடுன.. இப்ப பேசு “ என்றான்..

அவன் மித்ரா என்று முழு பெயர் சொல்லி அழைத்தது வேறு அவளுக்கு ஏனோ வலித்தது.. ஆரம்பத்தில் இருந்தே மித்து என்றே அழைத்து அவன் பழகியதால் இப்பொழுது அவன் மித்ரா என்று அழைக்கவும் வித்தியாசமாக இருந்து..

மித்ராவிற்கு தான் எதையும் மனதில் வைத்து பழக்கமே இல்லையே.. “ ம்ம்ச்.. இப்ப ஏன் மித்ரா மித்ரான்னு ஏலம் விடுற.. ஒழுங்கா மித்துன்னு கூப்பிடு.. ஏன் அந்த ரீனாவ பார்த்ததும் என் பேரு கூட மறந்திடுச்சா என்ன ?? ” என்று அவனை பிடித்து பின்னே தள்ளி விட்டு சென்று விட்டாள்..

( ஹலோ மேடம் உங்க பேரு மித்ரா தானே??? )

முதலில் அவள் என்ன கூறுகிறாள் என்றே மனோகரனுக்கு புரியவில்லை.. “ நான் என்ன கேட்டா இவ என்ன சொல்லுறா ??” என்று எண்ணியவன் பின் அவள் கூறியதை மீண்டும் நினைத்து பார்த்தான்..

அப்பொழுது தான் அவனுக்கு அவள் கூறியதன் அர்த்தமும், அதன் பின்னே இருக்கும் காரணமும் புரிந்தது.. “ இவ இதை புரிஞ்சு சொன்னால இல்ல புரியாம சொன்னால?? தெரியலையே “ என்று புன்னகையுடன் எண்ணிக்கொண்டு அவளை தேடியே சென்றான்..

 

உன் வார்த்தைகளின் மொழி

புரியாமல் போனாலும்…

உன் விழிகள் பேசும் பாஷைகள்

நான் அறிவேன் பெண்ணே..    

உன் இதயத்தில் இடம் பிடிக்க

விழிக்கதவுகள் திறந்த – நீ

மன கதவையும் திறப்பாயாக….           

 

                        மாயம் – தொடரும்       

 

                               

   

           

                                                                             

                                                                                                  

Advertisement