Advertisement

மாயவனோ!! தூயவனோ – 13

 “ மீரா.. மீரா கண்ணு, இந்த கஞ்சிய சூட குடி.. காய்ச்சல் எல்லாம் பறந்து ஓடிடும் “ என்று காய்ச்சல் வந்து படுத்து கிடந்த மீராவின் முன் நின்று அவளை எழுப்பி கொண்டு இருந்தார் தனம்.

“ வேண்டாம் கா.. எனக்கு கஞ்சி குடிக்க பிடிக்கவே இல்ல.. “

“ இங்க பாரு மீரா கண்ணு.. ஒழுங்கா நல்ல புள்ளையா எழுந்து இந்த கஞ்சிய குடி, அப்படி இல்லைனா உன் புருசனுக்கு போன் போட்டு சொல்லிடுவேன் “ என்று கெஞ்சலில் இருந்து மிஞ்சலுக்கு பாய்ந்தார் தனம்..

தன் மீது இருக்கும் அக்கறையினால் தான் இப்படி கண்டிப்புடன் பேசுகிறார் என்று புரிந்து கொண்ட மீராவுக்கு மனதில் மகிழ்ச்சியாக இருந்தாலும் ஏனோ வெறுமையாகவும் இருந்தது.. மெல்ல எழுந்து அமர்ந்தவள்

“ என்ன கா நீங்க.. என்னால குடிக்க முடியல.. ஒரே காரமா இருக்கு.. நேத்தே நான் வேணாம்னு தானே சொன்னேன் “ என்று புலம்பியபடி அவரிடம் இருந்த டம்ப்ளரை வாங்கி அதில் இருந்த மிளகு கஞ்சியை கஷ்டப்பட்டு விழுங்கினாள்.

“ யப்பா ஒரே காரம்… போங்க கா “ என்று முகத்தை சுருக்கி சிறு பிள்ளை போல அடம் பிடித்து குடிப்பவளை தன்னை மறந்து பார்த்துகொண்டு இருந்தார் தனம்.. அவர் பார்வை தன் மீது இருப்பதை உணர்ந்த மீரா அவரை தொட்டு உலுக்கி

“ என்ன கா என்னையவே பாக்குறிங்க ??” என்று மெல்ல சிரித்தபடி வினவினாள்..

“ இல்ல கண்ணு ஒண்ணுமில்ல “ என்று கூறி தனம் மழுப்பவும், “ இப்ப நீங்க என்னானு சொல்லாட்டி நான் கஞ்சி குடிக்கமாட்டேன் “ என்று பதிலுக்கு செல்லமாக மிரட்டினால் மீரா..

“ அது ஒண்ணுமில்ல கண்ணு காய்ச்ச வந்து படுத்து கிடக்கும் போது கூட இந்த புள்ள அழகா, கலையா இருக்கே, இதை காணாம அந்த தம்பிக்கு அங்க எப்படி தான் இருக்க முடியுதோன்னு யோசிச்சேன் “ என்று கூறி அவளது மன குமுறல்களை அவர் அறியாமலே கீறி விட்டார்..

தனம் இப்படி கூறவும் ஒரு புன்சிரிப்பை தவிர வேறு எந்த பதிலும் மீராவிடம் இருந்து வரவில்லை.. ஆனால் அதன் பிறகு அவள் எதுவும் பேசவும் இல்லை.. அமைதியாக தனம் குடுத்த கஞ்சியை விழுங்கியபடி இருந்தாள்..

“ என்னா கண்ணு மீரா, நான் எதா தப்பா சொல்லிட்டேனா ??” என்றார் தயக்கமாய் அவள் முகம் பார்த்து..

“ அதெல்லாம் இல்ல கா.. ஹ்ம்ம் எங்க சூழ்நிலை இப்படி தனி தனியா இருக்க வேண்டி இருக்கு.. அவருக்கு என்மேல ரொம்ப இஷ்டம் கா.. ஆனா நான் தான் சில.. சில நேரம் அவரை புரிஞ்சுக்காம நடந்து இருக்கேன். அவர் மனசை ரொம்ப நோகடிச்சு இருக்கேன்.. ஆனா அது எதையுமே அவர் பெருசா எடுக்கல.. இப்ப நினைச்சா அதெல்லாம் எனக்கு கஷ்டமா இருக்கு கா” என்றாள் தன் மனதில் இருக்கும் வேதனையின் சுமையை தாள முடியாமல்..

“ ம்ம் விடு கண்ணு.. எல்லாம் கொஞ்ச நாளைக்கு தான.. கூட இருக்கும் போது கண்டுக்காம இருக்கிறதும், தனியா இருந்தா அவங்களையே நினைச்சு நினைச்சு மருகுறதும், இது தான் பொம்பள மனசு.. ஏதோ எனக்கு தெரிஞ்சத சொல்லுறேன் “ என்று தனக்கு தெரிந்த ஆறுதலை கூறினார் தனம்..

“ ம்ம் நீங்க இப்ப சொல்லுறது உண்மை தான் கா.. கூட ஒண்ணா இருக்கும் போது நான் சுத்தமா அவரை கண்டுக்கல.. ஆனா அவரு ஒவ்வொரு விசயத்தையும் பாத்து பாத்து எனக்கு பண்ணாரு..” என்று கூறும் பொழுதே அவளது கண்கள் கரித்தன..

அதை கண்ட தனம் “ அடடா… இப்ப நான் இதை பத்தி பேசியே இருக்க கூடாது போலையே.. இப்ப எதுக்கு அழுகுற ?? அழுதா இன்னும் காய்ச்சல் தான் கூடும் மீரா கண்ணு.. அழாம இரு.. வாழ்கையில நம்மளை விட மோசமான சூழ்நிலையில எத்தனையோ பேர் இருக்காங்க “ என்று பெரிய மனுசியாய் சமாதானம் கூறினார்.

தன் கண்களை  துடைத்தபடி “ ம்ம் சரிங்க கா” என்று அவரை அமைதி செய்யும் பொருட்டு தன் அழுகையை நிறுத்தினாள் மீரா.. ஆனால் தனத்திற்கு தெரியவில்லை.. இரவின் தனிமைகளில் மீரா துடித்து விடுகிறாள் என்று..

இப்படியே காய்ச்சலும், மிளகு கஞ்சியுமாய் இரண்டு நாட்கள் செல்ல மூன்றாவது நாள் மித்ரா முழு ஆரோக்கியம் பெற்றாள். ஆனாலும் தனம் அவளை ஒரு வேலை செய்யவிடவில்லை.. “ இந்தா கண்ணு மீரா இப்பதான் ஒடம்பு தேறி இருக்கு.. உடனே அதை இதை இழுத்து போட்டு எதையும் செய்யாத என்ன ??” என்று அக்கறையாய் அன்பாய் கூறுபவரின் பேச்சை அவளாலும் தட்ட முடியவில்லை..

மீராவை அமரவைத்து கொண்டு எதாவது கதை பேசிக்கொண்டே அணைத்து வேலைகளையும் செய்தார் தனம்.. மீராவிற்கு இதை பார்க்கும் பொழுது ஆச்சரியமாக இருந்தது . “ எப்படி கா இப்படி பேசிக்கிட்டே சரியா எல்லா வேலையும் செய்றிங்க ??” என்று கேட்டாள்..

அதற்கு தனம் சிரித்தபடி “ இதுல என்ன கண்ணு இருக்கு, கண்ணு பாக்குது, கை செய்யுது.. வாய் பேசுது.. மனசு எப்பயும் ஒருநிலையோட இருந்தா ஒரே நேரத்துல பத்து வேலை கூட செய்யலாம் “ என்று கூறுபவரை இன்னும் ஆச்சரியமாக தான் பார்த்தாள்..

அவள் பார்வை தனத்திடம் இருந்தது ஆனால் மனமோ தன் கணவனிடம் சென்றது.. அவன் செய்த கேலியும் கிண்டலும் நினைவு வந்து அவள் கவனத்தை கலைத்தது..

ஒருநாள் இப்படிதான் மீரா ஏதோ வேலை செய்து கொண்டு இருந்தாள்.. அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பெண் உதவி செய்து கொண்டு இருந்தாள். வேலை செய்யும் பொழுது பேசிக்கொண்டே தான் இருவரும் செய்வர்..

அப்படி பேச்சு சுவாரசியத்தில் மீரா தான் என்ன செய்து கொண்டு இருந்தோம் என்பதை மறந்து வெளி செய்யும் பெண்ணின் வாயை பார்க்க ஆரம்பித்துவிட்டாள்..

இதை பார்த்த அவள் கணவன் “ ஹ்ம்ம் பேச்சு துணைக்கு ஆள் கிடைச்ச என்னையவே கூட மறந்திடுவ போல “ என்று கிண்டல் செய்யவும் தான் அவளுக்கு உரைத்தது..

எதிர் பாரா நேரத்தில் அழையா விருந்தாளியாக வரும் விருந்தினரை போல மீராவின் மனதில் அவள் கணவனும், அவன் குடும்பமும், அவர்களோடு அவள் கழித்த சில மகிழ்ச்சியான பொழுதுகளும் நினைவு வந்து பாடாய் படுத்தின..

என்ன முயற்சி செய்தும் அவளால் இந்த நினைவுகளில் இருந்து வெளி வரவே முடியவில்லை.. அழுகையை அடக்கி அடக்கி தொண்டை எல்லாம் வலிப்பது போல இருந்தது.. இத்தனை நேரம் நன்றாக பேசி கொண்டு இருந்தவள் திடீரென்று அமைதியாய் இருக்கவும் என்னவென்று விசாரித்தார் தனம்..

அவரிடம் என்னவென்று கூறுவாள் மீரா.. “ ஒண்ணுமில்ல கா.. லேசா… லேசா தலை வலிக்கிது.. நான் கொஞ்ச நேரம் படுத்து இருக்கேன் “ என்று கூறிவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டாள்..

“ ஹ்ம்ம் இந்த பொண்ணுக்கு அப்பப்ப என்னதான் ஆகுமோ.. கடவுளே இதுக்கு ஒரு நல்ல வழிய காட்டுப்பா. “ என்று வேண்டுவது தவிர அவரால் வேறென்ன செய்ய முடியும்..

கண்களை மூடி மெத்தையில் சாய்ந்தவலுக்கு நினைவுகள் எல்லாம் காட்சிகளாய் தெரிய ஆரம்பித்தன.. அந்த காட்சிகள் தந்த சுகத்தில் அப்படியே கண்கள் மூடி வெகுநாட்கள் கழித்து நன்றாக உறங்க ஆரம்பித்தாள் மீரா..

           

ஆயிற்று இரண்டு நாட்கள் மனோ மித்ராவோடு பேசி.. பேசி என்ன அவள் முகத்தை கூட பார்ப்பது இல்லை.  வெளியில் பார்க்க சாதரணமாக தெரிந்தாலும், சகஜமாக இருப்பது போல காட்டினாலும் அவளிடம் அவன் ஒருவார்த்தை கூட பேசவில்லை..

மனோ மித்ராவிடம் தன்னையும் தன் காதலையும் உணரவில்லையா , புரிந்துகொள்ளவில்லையா ?? என்று கேட்கவும் மித்ராவினால் எந்த பதிலும் கூற முடியவில்லை..

ஆனாலும் அவன் மார்பில் சாய்ந்து நிற்பது அவளுக்கு இதமாய் இருப்பது போல இருந்தது.. கண்கள் மூடி அந்த இதத்தை அனுபவித்தவள் மனோவிற்கு பதில் கூறாமல் நிற்கிறோம் என்பதையே மறந்து போனாள்..

ஆனால் இது அவனுக்கு தெரியுமா ?? தான் வாய்விட்டு கேட்டும் தன் மனைவி எதுவும் கூறாமல் அமைதியாய் நிற்பது அவனுக்கு மிகவும் வேதனையை குடுத்தது.. எங்கே இன்னும் சில நொடிகள் இப்படியே நின்று இருந்தால் ஏதாவது அவள் மனம் நோகும்படி பேசிவிடுவோம் என்றெண்ணி அவளிடம் இருந்து அப்படியே விலகி சென்றுவிட்டான்..

கண்கள் மூடி அவன் மீது சுகமாய் சாய்ந்து இருந்த மித்ராவோ, அவன் விலகி செல்லவும் ஒருநிமிடம் நிற்க முடியாமல் தள்ளாடி பின் ஒருவழியாய் நேராக நின்றாள்.. அவளுக்கு இன்னும் கூட புரியவில்லை என்ன நடந்தது என்று..

“ இப்படியா போவான் எருமை.. இவனுக்கு வேணும்னா ஒட்டிக்குவான் இல்லாட்டி போயிடுவான் “ என்று கருவி தீர்த்தாள்.. ஏனோ அவன் விலகி சென்றது அவளுக்கு ஒரு ஏமாற்றத்தை குடுத்தது.. அந்த ஏமாற்றமே அவன் மீது கோவமாய் திரும்பியது..

வேகமாக அவனை தொடர்ந்து சென்றவளுக்கு என்ன முயன்றும் அவனை பிடிக்க முடியவில்லை.. அத்தனை வேகமாக அவன் வெளியே சென்று விட்டான் தன் காரை எடுத்துக்கொண்டு..

“ இப்ப நான் என்ன பண்ணிடேன்னு இப்படி போறான்.. கருங்குரங்கு.. வரட்டும்.. லேட்டா மட்டும் வரட்டும் ராத்திரி முழுக்க வெளிய நிக்கட்டும்.. “ என்று தான் ஏன் இப்படி உணருகிறோம் என்பதே தெரியாமல் அவனை பிடித்து திட்டி தீர்த்தாள்.

அதன் பிறகே அவளுக்கு நினைவு வந்தது அவன் தன்னிடம் கேட்ட கேள்வி… “ ஓ !! இதுக்கு தான் இவன் இவ்வளோ முறைப்பா போறானா ?? ஹ்ம்ம் நான் எத்தனை நாள் கேள்வி கேட்டு இருப்பேன்.. எதுக்காவது இந்த ஒட்டகம் பதில் சொல்லி இருக்கா ?? இவன் கண்ணே மணியேன்னு கொஞ்சுனா நானும் உடனே அன்பே ஆருயிரேன்னு குழையனுமோ ??” என்று தன் பாட்டுக்கு அவனை ஒரு பாட்டு பாடி தீர்த்தாள்..

“ என்ன அண்ணி யாரை ஒட்டகம்னு சொல்லி இவ்வளோ பாராட்டிட்டு இருக்கீங்க ??” என்று கேட்டபடி வந்து அமர்ந்தான் கிருபா தானாக வந்து பொறியில் சிக்கும் எலியாக..

“ ஹ்ம்ம் வேற யாரை எல்லாம் உன் எருமை.. ச்சி ச்சி.. அருமை அண்ணன் தான் “ என்று நொடித்தாள் அவனின் அன்பு அண்ணி..

“ அண்ணனா!! அண்ணன் என்ன பண்ணாங்க ?? “ என்று கேட்டான் ஒன்றும் தெரியவன் போல.

“ ஏன் ?? உங்க யாருக்கும் தெரியாதா ?? அப்படியே ஒன்னும் தெரியாத பச்சை பிள்ளை போல முகத்தை வெச்சு கேட்கிற ?? இல்ல தெரியாம தான் கேட்கிறேன் உங்க அண்ணன் என்ன பண்ணாங்க ?? இப்போ என்ன பண்ணிட்டு இருக்காங்க அப்படி எதுவும் உனக்கு தெரியாது அப்படிதானே ??” என்று கண்களை அகல விரித்து கோபமாக கேட்பவளை அதிர்ந்து பார்த்தான் கிருபா..

மித்ரா இங்கு வந்த இத்தனை நாட்களில் மனோவை தவிர வேறு யாரிடமும் தங்களின் விசயம் பற்றி பேசியது இல்லை.. முதல் முறையாக கிருபாவிடம் பொங்கிவிட்டாள்.. “ அண்ணி “ என்று அதிர்ந்து விழித்தான் அன்பு கொழுந்தன்.

அவளுக்கோ மனோ அப்படி சென்றதே ஆற்றாமையாக இருந்தது.. அழுகை வேறு வந்தது.. லேசாக சிணுங்கியபடி

“ பின்ன என்ன கிருபா, நான் எதா இதை பத்தி பேசி இருப்பேனா ?? சொல்லு.. எப்ப பாரு முறைச்சுக்கிட்டே இருந்தா எப்படி கிருபா ?? பேசிக்கிட்டே இருந்தாங்க எனக்கு பதில் சொல்ல தெரியல அமைதியா இருந்தேன், அதுக்கு இப்படியா போறது ??” என்று மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டு பேசும் தன் அண்ணியை புரியாமல் பார்த்தான்..

“ அண்ணி நீங்க என்ன சொல்றிங்கன்னு எனக்கு சுத்தமா புரியல “ என்றான் பாவமாக..

“ம்ம்ச்.. உனக்கு எப்படி புரியும்.. நீயும் உங்க அண்ணனுக்கு தம்பி தானே.. உனக்கு எப்படி புரியும் ??? “ என்று தன் தலையில் அடித்து கொண்டு சென்றுவிட்டாள்..

“ என்னாச்சு இந்த அண்ணிக்கு ?? நல்லாதானே இருந்தாங்க ?? “ என்று தன் மண்டையை போட்டு உருட்ட தொடங்கியவன் “ ஹா !! இது என்ன டா நான் ஏன் இதை யோசிக்கிறேன்.. கடவுளே ஒருநிமிஷம் இந்த அண்ணி என்னைய கிறுக்கு பிடிக்க வைச்சுட்டாங்க “ என்று தலையை உலுக்கிக்கொண்டு நகர்ந்தான்.

இப்படிதான் யார் அவளிடம் தனியாக மாட்டினாலும் ஒன்று புலம்பி தீர்ப்பாள் இல்லையெனில் கிடைப்பவரை வறுத்து எடுத்து கொண்டு இருந்தாள்.. ஆனால் அவளுக்கு தாலி கட்டியவனோ அவளது கண்களில் கூட படாமல் போக்கு காட்டிக்கொண்டு இருந்தான்.. மித்ரா சிறிது சிறிதாக தன் பொறுமையை இழந்து கொண்டு இருந்தாள்.

அன்று ஞயாயிற்று கிழமை என்பதால் அனைவரும் வீட்டில் இருந்தானர்.. முதல் நாளே வேலை ஆட்கள் அனைவர்க்கும் விடுமுறை கூறி விட்டாள் மித்ரா.. ஒவ்வொரு  ஞயாயிற்று கிழமைகளிலும் அண்ணன் தம்பி நால்வரும் மித்ராவுமே அணைத்து வேலைகளையும் செய்தனர்.

தோட்ட வேலை, வீட்டு வேலை, சமையல் என அனைத்தையும் பங்கு போட்டு கொண்டு உற்சாகமாக செய்வர்.. அன்று மனோ வேறு வழியில்லாத காரணத்தினால் வீட்டில் இருந்தான்.. ஆனாலும் ஒரு வார்த்தை கூட மித்ராவிடம் பேசவில்லை.. ஏன் திரும்பி கூட பார்க்கவில்லை..

வீட்டிற்குள் தான் போகும் இடத்திற்கு எல்லாம் வால்பிடியாக வருபவளை காண அவனுக்கு சிரிப்பு வந்தாலும் இறுக்கமாகவே இருந்தான்.. திவா கூட கூறிவிட்டான் “ அண்ணா இது கொஞ்சம் கூட சரியே இல்ல.. அண்ணி பாவம் “ எனவும்

அவனை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு “ என்னடா நேத்து எல்லாம் சரி டோஸ் வாங்குன போல அவகிட்ட ??” என்று நக்கலாக கேட்டான்..

“ உங்களுக்கு சிரிப்பு வருதா அண்ணா?? ரெண்டு நாளா நானும் கிருபாவும் அண்ணிகிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறது எங்களுக்கு தானே தெரியும்.. இன்னைக்கு இந்த பஞ்சாயத்தை முடிச்சிட்டு தான் நாளைக்கு நீங்க வெளிய போகணும் “ என்று கண்டிப்பாக கூறிவிட்டான் திவா..

தன் தமையனை ஒரு பார்வை பார்த்தபடியே தன் அலுவல் அறைக்குள் நுழைந்து கொண்டான் மனோ.. “ தனியா மாட்டுனையா ??” என்று எண்ணிக்கொண்டே வேகமாக மித்ராவும் அங்கே நுழைந்தாள்..

அவள் வந்ததை அறிந்தவன், ஒன்றும் அறியாதவன் போல ஏதோ கோப்புகளை பார்த்து கொண்டு இருந்தான்.. அவனும் பார்ப்பான், என்னவென்று கேட்பான் என்று நின்று இருந்தவளுக்கு நேரம் போனது தான் மிச்சம்.. கோப்புகளை பார்த்து முடித்து வெளியே செல்ல கிளம்பியவனை பார்த்து

“ மனு நீ பண்ணுறது கொஞ்சம் கூட சரியே இல்ல” என்றாள்

“ நான் என்ன பண்ணேன் ??“ என்பது போல பார்த்துவைத்தான் அந்த அழுத்தக்காரன்..

“ என்ன பாக்குற ?? நீ என்ன பண்ணணு உனக்கு தெரியாதா ??”

மனதிற்குள் தன் மனைவி தன் பார்வையின் அர்த்தத்தை சரியாய் கூறவும் எழுந்த மகிழ்ச்சியை கட்டுப்படுத்தி கொண்டு “ என்ன பண்ணேன் ?? பைல் தானே பார்த்தானே.. அது ஒன்னும் தப்பான விஷயம் இல்லையே ??” என்றான் அழுத்தமாக..

“ அடேய் கடங்காரா !!” என்று கருவிக்கொண்டே “ என்ன நக்கலா?? நான் அத சொல்லல.. சும்மா நடிக்காத என்ன ??” என்றாள் கடுப்பாக..

“ ஏன் நீ பணம் எதுவும் குடுக்க போறியா நான் நடிக்கிறதுக்கு ??” என்றான் மீண்டும் அவளை சீண்டுவது போல..

“ம்ஹும் இப்படி எல்லாம் பேசுனா வேலைக்கு ஆகாது “ என்று எண்ணியவள் “ம்ம்ச் இப்ப எதுக்கு நீ ரெண்டு நாளா என்கிட்டே பேசாம இருக்க ?? “ என்று நேராக விசயத்திற்கு வந்தாள். அவள் கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல் அவளையே பார்த்தபடி சுவரில் சாய்ந்து நின்று இருந்தான் மனோ..

அவனது பார்வை அவள் இதயம் தொட்டது.. தன் கணவனின் முகத்தை நேராக காண முடியாமல் தலையை குனிந்து கொண்டாள் மித்ரா.. தலை குனிந்தபடி

“ பதில் சொல்லு மனு.. ஏன் பேசல ??” என்று மீண்டும் அதே கேள்வியை கேட்டாள்.. இம்முறையும் அவனிடம் பதில் இல்லை..

மனோகரன் இப்படி இடுத்தமாக நிற்பதை கண்டு அவளுக்கு கோவம் வரவில்லை.. மாறாக மனம் பாரமாய் உணர்ந்தாள்.. அது ஏன் என்று அவளுக்கும் தெரியவில்லை..

“ இங்க பாரு மனு, நா… நான் உன்கிட்ட இனிமே எதுவும் கேட்க மாட்டேன், ம்ம் சண்டை போட மாட்டேன், நம்ம கல்யாணம் ஏன் நடந்தது ?? என்ன பிரச்சனை?? அப்பா அம்மா ஏன் போனாங்க ?? இப்படி எது.. எதுவும் நான் உன்ன கேட்கல சரியா.. ஆனா இப்படி.. நீ.. நீ பேசாம மட்டும் இருக்காத மனு “ என்று கூறினாள் தன் விழிகளை தாழ்த்தி..

அவளது பாவங்களும், அவளது வார்த்தைகளும் மித்ராவின் மனதை அழகாக படம் பிடித்து காட்டின மனோவிற்கு.. ஆனால் அவனது வருத்தம் எல்லாம் அதை அவள் உணராமல் இருப்பது தான்.. மனதில் சந்தோஷ அலைகள் எழுந்தாலும் அனைத்தையும் அடக்கி கொண்டு

“ ஏன் ??” என்று ஒற்றை கேள்வியை எழுப்பினான்.. அவனது கேள்வியில் திடுக்கிட்டு நிமிர்ந்தவள்

“ஏன்னா…. ஹ்ம்ம் ஏன்னு எனக்கும் தெரியல.. இங்க பாரு மனு, நான்.. எனக்கு.. ம்ச் ஐம் நாட் இமோசனல் டைப்.. எனக்கு அப்படி இப்படினுலாம் பேச வராது.. வராதுன்னு இல்ல தெரியாது.. மனசுல பட்டதை சொல்வேன் அவ்வளோ தான். நீ பேசாம இருக்கிறது எனக்கு.. எப்.. எப்படியோ இருக்கு.. அது ஏன் எதுக்குன்னு எல்லாம் எனக்கு ஆராய தெரியாது.. பட் திஸ் இஸ் வாட் இன் மை மைன்ட் “ என்று கூறிவிட்டு பதிலுக்காக அவன் முகம் பார்த்தாள்..

முதல் முறையாக மித்ரா மனோவிடம் கோர்வையாக இத்தனை வார்த்தைகளை தொடுத்து பேசி இருக்கிறாள்.. அதுவும் தன்னை பற்றி.. தன் மனதில் இருக்கும் எண்ணங்களை பற்றி.. மனோவிற்கு ஆச்சரியமாக இருந்தது. வியந்து போய் அவளை பார்த்தபடி நின்று இருந்தான்..

அவனது வியந்த பார்வை மித்ராவிற்கு என்ன உணர்த்தியதோ.. “ என்ன மனு ??” என்றாள்

“ ஹ்ம்ம் ஒன்னும் இல்ல.. மேல சொல்லு.. “ எனவும் அவளுக்கு கோவம் வந்துவிட்டது..

“ என்ன ?? நான் என்ன உனக்கு கதையா சொல்லிட்டு இருக்கேன்.. மேல சொல்லு கீழ சொல்லுன்னு சொல்லிட்டு இருக்க ?? உன்கிட்ட போய் நான் பேச வந்தேன் பாரு.. என்னைய சொல்லணும் “ என்று கூறிவிட்டு வேகமாக அறையைவிட்டு வெளியே  கிளம்பினாள்..                                                                                                         

அவளை ஒரே எட்டில் எட்டி பிடித்தவன் மித்ராவை சுவற்றில் சாய்த்து நிறுத்தினான்.. அவன் இழுத்த வேகத்திற்கு மூச்சு வாங்க ஆரம்பித்தது மித்ராவிற்கு.. ஏன் இப்படி செய்தான் என்று அதிர்ந்து பார்த்தபடி மூச்சு வாங்க நின்று இருந்தாள்..

“ என்ன டி ஒரு இழு இழுத்ததுக்கே இப்படி மூச்சு வாங்குது உனக்கு ??” என்று கேட்டபடி அவளை நெருங்கி நின்றான்.. மனோகரனின் பார்வையும், குரலும், அருகாமையும் மித்ராவை ஏதோ செய்தது..

“ எ… என்ன ?? “ திக்கி திணறினாள்.. அவளது ஒவ்வொரு செய்கையும் மனோவை உன்மத்தம் கொள்ள செய்தது..

“ம்ம் என்ன ??” என்றான் அவனும் பதிலுக்கு..

“ம்ம்ச் இப்ப என்னைய பிடிச்சு இழுத்த ??” என்று கேட்டாள்..

“ என் பொண்டாட்டி நான் இழுப்பேன் உனக்கு என்ன ??” என்றான் அவளை மேலும் கீழும் பார்த்தபடி.. அவனது பார்வையில் இன்னும் திணறினாள் மித்ரா.. ஆனாலும் தன் நடுக்கத்தை வெளியில் காட்டாமல்

“ இங்.. இங்க பாரு மனு…” என்று அவள் கூறி முடிக்கும் முன்னே “ பார்த்துக்கிட்டு தானே மித்து இருக்கேன் “ என்றான் உல்லாசமாக..

“ம்ம்ச்.. அதான் ஏன் இப்படி பாத்து தொலைக்கிற?? சகிக்கல “ என்று தன் முகத்தை திருப்பினாள்..

“ சரி உனக்கு சகிக்காட்டி கண்ணை மூடிக்கோ.. ஆனா எனக்கு பாக்க பாக்க தெவிட்டல “ என்றான் இன்னும் நெருங்கி.. விட்டால் மித்ரா பல்லியாக மாறி சுவரில் ஒட்டிவிடுவாள் போல..

“மித்து…” என்று அழைத்தான்.. அவளிடம் பதில் இல்லை.. அவளது முகத்தை தன் பக்கம் திருப்பி “ என்ன கோவம் ?” என்று வினவினான்..

“ எனக்கு என்ன கோவம்.. நீதான் ரெண்டு நாளா முகத்தை திருப்பிக்கிட்டு இருந்த “ என்றாள் அவள்..

“ ஏன் மித்து நான் பேசாம இருந்தது உனக்கு கஷ்டமா இருந்ததா ??”

“ ம்ம்.. அதான் சொல்ல தெரியல சொன்னேன்ல… அப்புறம் என்ன ??” என்று கடுப்புற்றாள்..

“ ஹ்ம்ம் அப்போ நீ பேசாம இருக்கிறது உன் அப்பா அம்மாக்கு எவ்வளோ கஷ்டமா இருக்கும்  மித்து ??” என்று கேட்கவும் விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள் மித்ரா தன் கணவனை..

“ என்ன மித்து அப்படி பாக்குற.. உன்னைய பெத்து வளர்த்தவங்களுக்கு எப்படி இருக்கும் சொல்லு.. அது உனக்கு புரியலையா ?? நீ தண்டனை குடுக்கனும்னா எனக்கு தான் குடுக்கணும் மித்து.. நான் பொண்ணு கேட்காமையா உங்க வீட்டுல எனக்கு கல்யாணம் செஞ்சு குடுத்து இருப்பாங்க உன்னைய ?? “ என்று அவளது விழிகளையே ஆழ்ந்து நோக்கி கேள்வி கேட்டான்..

ஏற்கனவே அவனது அருகாமை அவளை எதோ செய்தது.. இப்படி அவளை ஒட்டி நின்றுகொண்டு தன் கண்களையே நோக்கி பேசுபவனிடம் மித்ராவால் எதிர்த்து பேசமுடியவில்லை..

அவனையே பார்த்தபடி நின்று இருந்தாள்.. “ என்ன அமைதியா இருக்க ?? பதில் சொல்லு.. எல்லாத்துக்கும் காரணமானவன் நான்.. ஆனா என்கிட்டே நீ நல்ல பேசுற.. ஆனா உன்னோட நல்லதை மட்டுமே நினைச்ச,  நினைச்சுக்கிட்டு இருக்கிற உன் பேரன்ட்ஸ்கிட்ட ஏன் இப்படி நடந்துக்கிற ??” என்று தொடர்ந்து பேசியபடி இருந்தான்..

“இவன் எதுக்கு இதை எல்லாம் பேசுறான் ?? நான் இவன் பேசலைன்னு கேட்க வந்தா, எங்க அப்பா அம்மாகிட்ட பேசலன்னு இவன் என்னையவே திருப்பி கேள்வி கேட்கிறான்.. ஆபிஸ்ல எல்லாரையும் நிக்க வச்சு கேள்வி கேட்டு கேட்டு பொண்டாடியையும் இப்படி ட்ரீட் பண்ணுறான் “ என்று மனதில் நினைத்தவள்

“ இப்ப எதுக்கு இதை எல்லாம் நீ சொல்லுற ?? “ என்றாள் சற்றே கோவமாக..

“ ஏன்னா எனக்கு கில்டியா இருக்கு டி… என்னால தான் நீ அவங்களை விளக்கி வைக்கிறேன்னு நினைக்கும்போது ஒவ்வொரு நிமிசமும் மனசுக்கு கஷ்டமா இருக்கு டி.. அது ஏன் உனக்கு புரியல..?? அப்போ உனக்கு பிடிக்காத வாழ்கைய அமைச்சு குடுதுட்டனால தான அவங்ககிட்ட நீ பேசல ??” என்று கேட்டான் வலியோடு..

“ அப்படி எல்லாம் இல்ல “ என்று சட்டென்று பதில் வந்தது அவளிடம்.. இதை கேட்டு மனோவின் கண்ணில் ஒரு சிறு பிரகாசம் எட்டி பார்த்தது..

“ பின்ன வேற எப்படி ??” என்றான் தன் ஒற்றை புருவத்தை உயர்த்தி..

“ அது.. அது… அது வந்து “ என்று அவள் இழுக்கவும்

“ இதுக்கும் மேல கிட்ட வரணுமா மித்து ??” என்றான் கிறக்கமாக.. அவனை ஒரு முறை முறைதவள் ஏனோ தள்ளி நிற்க மட்டும் கூறவில்லை..

“ இல்ல.. அன்னிக்கே பேசணும்னு தான் தோனுச்சு.. ஆனா இத்தனை நாள் பேசாம பெரிய இவளாட்டம் இருந்திட்டு உடனே பேச ஒரு மாதிரி இருக்கு அதான் “ என்று அவள் தயக்கமாக கூறவும் “ அட லூசு “ என்று அவள் தலையில் முட்டினான்..

“ நான் லூசா ?? நீ ஏன் சொல்லமாட்ட உன்கிட்ட போய் இதெல்லாம் பேசுறேன் பாரு “ என்றவளுக்கு அவன் அத்தனை நெருக்கமாக நிற்பதும் அவளது தலையில் முட்டியதும் பெரியதாக படவில்லை.. ஆனால் இதை அனைத்தையும் மனோகரன் கவனித்தபடி தான் இருந்தான்..

அவனுக்கும் மித்ரவிற்குமான திருமண உறவு ஒருபடி முன்னேறி இருப்பது போல இருந்தது அவனுக்கு.. அவனது அருகாமை அவளை வெறுப்படைய செய்யவில்லை என்பதே அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது..

“ ஹ்ம்ம் பின்ன அப்பா அம்மாகிட்ட போய் யாராவது ஈகோ பாப்பாங்களா மித்து ??”

“ ஈகோ இல்ல.. ஆனா ஏதோ ஒன்னு தடுக்குது.. “ என்று மனைவி கூறவும், “ ஹ்ம்ம் நான் ஒரு ஐடியா சொல்லவா ??” என்றான் கணவன்.. அவளுக் என்ன என்பது போல பார்த்தாள்..

“ நைட்டு மாமா போன் செய்யும் போது நீ அட்டென் பண்ணி பேசு சரியா.. என்னைய கேட்டா போனை வச்சிட்டு வெளிய போயிருக்கார் வேற வழியில்லாம தான் நான் அட்டென் பண்ணேன்னு சொல்லி  அப்படியே பேசு.. ஓக்கேவா??” என்று கூறவும்

அவன் கூறியதையே கேட்டு இமைக்காமல் ஒருநொடி அவனையே பார்த்தாள்.. பின் “ பயங்கரமான ஆளு தான் மனு நீ..” என்று தன் சம்மதத்தை கூறாமல் கூறினாள் மித்ரா..

மனோகரனுக்கு இப்பொழுது தான் மனம் சற்று நிம்மதியாக இருந்தது.. எங்கே மித்ரா கடைசி வரை அவளது பெற்றோருடன் பேசாமல் இருந்துவிடுவாளோ என்று எண்ணினான்.. ஆனாலும் வெளியே கட்டிகொல்லாமல்  மித்ரா அவனை பாராட்டவும்,

“ பின்ன அய்யா யாரு.. மனோன்னா சும்மாவா ??” என்று இல்லாத தன் டி சார்டின் காலரை உயர்த்திவிட்டான்..

அவனது செயலில் மயங்கியவள், “ சரி சரி நிறைய வேலை இருக்கு.. எல்லாம் நம்ம தான் பண்ணனும்” என்று கூறி அவனையும் வெளியே இழுத்து சென்றாள்..

தன் அண்ணன் மற்றும் அண்ணியின் முகத்தில் இருக்கும் புன்னகையும் தெளிவுமே தம்பிகளுக்கு உணர்த்தியது இருவரும் சமாதனம் ஆகிவிட்டனர் என்று..

“ நானும் பிரபாவும் கிட்சென்ல இருக்கோம் நீங்க மூணு பேரும் போய் தோட்டத்துல கலை எடுங்க “ என்று மித்ரா மனோ, கிருபா, திவாவை பார்த்து கூறவும் மூவரும் “ முடியவே முடியாது “ என்று தலையை ஆட்டினார்..

“ ஏன் முடியாது ???” என்று அவளும் அதிகாரமாய் தான் கேள்வி கேட்டாள்..

“ பின்ன என்ன அண்ணி நீங்க தானே சொன்னிங்க சண்டே எந்த வேலையா இருந்தாலும் நம்ம அஞ்சு பேரும் சேந்து தான் பண்ணனும்னு.. இப்ப இப்படி சொன்னா எப்படி ??” என்று திவா கூறவும்

“ அட சமையலை முடிச்சிட்டு நாங்களும் அங்க வரோம் “ என்று மித்ரா கூறியதற்கு கிருபா “ நோ வே அண்ணி, சமையலோ, தோட்டமோ எல்லாம் ஒண்ணா தான் பண்ணனும் “ என்று கூறவும் மித்ரா மனோவின் முகம் பார்த்தாள்..

மனோகரனோ “ நீ தானே இந்த ரூல்ஸ் எல்லாம் போட்ட, வா, வந்து எங்க கூட சேர்ந்து கலை பிடுங்கு அப்புறம் எல்லாம் சேர்ந்து சமைக்கலாம் இல்லை ஹோட்டல்ல ஆர்டர் பண்ணிக்கலாம் “ என்று கூறி அவளை இழுத்து சென்றான்..

தோட்டத்தில் கலை எடுக்கிறேன், தண்ணீர் பாய்ச்சுகிறேன் என்று ஐவரும் போட்ட ஆட்டத்திற்கு அளவே இல்லை..

தன் தம்பிகள் அறியாமல் மனோ அவ்வபொழுது மித்ராவை சீண்டிக்கொண்டு இருந்தான்.. அவளோ மற்ற மூவரும் பார்த்துவிட்டால் என்ன செய்வது என்று அவனை முறைத்தபடி இருந்தாள்.. இப்படியே பொழுது கழிய, தோட்ட வேலையை முடித்துவிட்டு அனைவரும் வீட்டிற்குள் சென்றனர்..

“ சரி எல்லாம் குளிச்சிட்டு வாங்க அப்புறம் சமைக்கலாம் “ என்று மனோ கூறவும் அனைவரும் தங்கள் அறையை நோக்கி சென்றனர்..

மித்ரா தான் முதலில் குளியல் அறைக்குள் நுழைந்தாள்..  அடுத்த நொடி கதவு தட்டப்பட்டது.. திறந்தால் மனோவும் கையில் துண்டுடன் நின்று இருந்தான்.. அவனை பார்த்த மித்ரா “ ஜஸ்ட் பைவ் மினிட்ஸ் மனோ.. ரொம்ப கச கசன்னு இருக்கு..” என்று கூறவும் 

“ என்ன மித்து நீ போட்ட ரூல்ஸ நீயே மாத்தலாமா ??” என்று அப்பாவியாய் கேட்டான் மனோ..

குழப்பத்துடன் “ என்ன ??” என்று கேட்டவள்..

“ பின்ன நீதானே மித்து சொன்ன சண்டே எந்த வேலை செஞ்சாலும் நம்ம எல்லாம் ஒண்ணா தான் செய்யனும்னு.. இங்க ரூம்ல ஒண்ணா இருக்கிறது நீயும் நானும் தான்.. இப்போ குளிக்கிறதை மட்டும் நீ தனியா பண்ணுற ?? இது நியாயமா ??” என்று மனோகரன் கேட்கவும் அதிர்ந்துவிட்டாள் மித்ரா..

“அடப்பாவி இதுக்கு தானா நான் அன்னிக்கு சொல்லும் போது வேகமா மண்டைய ஆட்டுன.. ஐயோ மித்ரா நீயே உனக்கு சூனியம் வச்சுக்கிட்டையே” என்று தன்னையே நொந்தவள்,

“ என்ன விளயாடுறையா ??” என்றாள் கோவமாக

“ நான் என்னமா பண்ணேன்.. இந்த கேள்விய நான் கேட்கணும்.. சொல்லுறதை எல்லாம் சொல்லி மனுசனை உசுப்பேத்துறது.. அப்புறம் ஒன்னும் தெரியாதா மாதிரி பாக்குறது..” என்று கூறியபடி அவனும் குளியல் அறைக்குள் நுழைந்தான்..

“ ஹேய் !! ஹேய் மனு என்ன பண்ணுற ?? முதல்ல வெளிய போ… “ என்று மிரட்டினாள்.. ஆனால் அவனோ அவளையும் சேர்த்து இழுத்துக்கொண்டு சென்று ஷவரின் கீழே நிற்கவைத்து, மித்ரா நகராதபடி இறுக அவளது கைகளை பிடித்து கண் மூடி நின்றான்..

மித்ரா அவனையே செய்வது ஆறியது பார்த்தபடி நின்று இருந்தாள்.. முதலில் “ மனு “ என்று அழைத்து பார்த்தாள் அவனிடம் பதிலே இல்லை. தன் கைகளை விலக்க முயற்சித்தும் எந்த பயனும் இல்லை..

தண்ணீர் பூ மழை போல கொட்டினாலும் மித்ராவின் உடலும் மனமும் ஒரு இதமான வெப்பத்தை உணர்ந்தன.. மனோவும் அதையே உணர்ந்து இருக்கவேண்டும் போல கண்களை மெல்ல திறந்து

“ மித்து “ என்றழைத்து அவளை தன் மார்போடு அணைத்துகொண்டான்.. அவளும் வாகாக ஒண்டிக்கொண்டாள்..

 

உன் மனதை – நான் படிக்க

என் மனதை – நீ பறிக்க

நமக்குள்ளும் காதல்

பூ மலர்ந்ததோ ???

 

என் மனவுணர்வுகள் எனக்கே

புரியாமல் இருக்க அதற்கு

காதல் என்று எப்படி

பெயர் சூட்டுவேன் நான் ???

 

                     மாயம் – தொடரும்                                  

                           

                     

Advertisement