மழை 6(1):

மாலினி, ஷங்கர், புழா மற்றும் ஸ்ரீராமன் ஐந்து நிமிடங்கள் வெளியே காத்திருந்தனர். மாலினியை முதலில் அழைத்தார் சேர்மன் வீரபத்ரன்.

உள்ளே ஏற்கனவே கிருஷ்ணன் முகத்தில் கலவரத்துடன் நின்று கொண்டிருந்தான். 

[ஆங்கில உரையாடலை தமிழில் தருகிறேன்]

சேர்மன், “உன் பெயரென்ன?எந்த இயர்?”

               

நேர்பார்வையுடன் தெளிவான குரலில், “மாலினி.. 1st CSE” என்றாள்.

வீரபத்ரன் கிருஷ்ணனை சுட்டிக் காட்டி, “இவனை உனக்கு தெரியுமா?”

 

“ஹ்ம்ம்.. என் சீனியர்”

 

“கேன்டீன் பக்கம் என்ன பிரச்சனை?”

 

“இவர் என்னிடம் பேசிட்டு இருந்தார்.. என் கிளாஸ் மேட் ஸ்ரீராமன் வந்தான்.. ரெண்டு பேருக்கும் சண்டை வந்தது.. அதை தடுக்க முடியாமல் என் கிளாஸ் மேட்ஸ் ஷங்கர் அண்ட் புழமுத்துகுமாரசுவாமியை கூப்பிட்டேன்.. அவங்க ரெண்டு பேரும் சண்டையை தடுத்தாங்க”

 

“எதுக்கு சண்டை வந்தது?”

 

“..” (கிருஷ்ணனின் நிலைமையை நினைத்து தயங்கினாள்)

“கிருஷ்ணன் உன்னிடம் என்ன பேசிட்டு இருந்தான்?”

 

மாலினி மெல்லிய குரலில், “அவர் என்னை காதலிப்பதாக சொன்னார்..” என்றாள். வீரபத்ரன் பேசவில்லை, மாலினியை தீர்கமாக பார்த்தார், அந்த பார்வை ‘முழுவதையும் சொல்லி முடி’ என்றது. மாலினி கிருஷ்ணன் என்ன சொன்னான் என்பது தெரியாமல் தான் என்ன சொல்வது என்று சிறிது யோசித்தாள்.

வீரபத்ரன், “நீ என்ன பதில் சொன்ன?”

 

“நான் ஒத்துக்கொள்ளவில்லை.. இவரை என் அண்ணனாக நினைக்கிறேன்”

 

வீரபத்ரன் ‘குட்’ என்று மனதினுள் பாராட்டினார். பிறகு, “எதற்காக சண்டை வந்தது?”

 

“ஸ்ரீராம் ‘எதுவும் பிரச்சனையா?’ னு கேட்டபடி வந்தான்.. நான் பதில் சொல்வதற்குள் ரெண்டு பேரும் வாக்குவாதம் செய்து சண்டை போட்டுக்கிட்டாங்க”

“ஸ்ரீராம் விஷயம் என்ன?’

 

“புரியலை சார்”

 

“அவன் உனக்கு யார்?”

 

மாலினியின் முகம் இறுகியது, தீவிரமான குரலில், “என் வகுப்பை சேர்ந்தவன்.. அவ்வளவு தான்” என்றாள்.

“ஹ்ம்ம்.. இப்படியே கடைசி வரை இரு.. இப்போ நீ போகலாம்.. உன் வகுப்பு மாணவர்களையும் கிளம்ப சொல்லு”

“தங் யூ சார்” என்று கூறி சென்றாள்.

சேர்மன் அறையை ஒட்டி இருந்த சிறிய அறைக்கு கிருஷ்ணன் அனுப்பப் பட்டான். ஸ்பை ஸ்குவார்டை சேர்ந்தவர்களால் பலமாக கவனிக்க பட்டான்.. முதல் முறை என்றால் வீரபத்ரன் எச்சரிக்கையுடன் அனுப்பியிருப்பார் ஆனால் இவனோ சென்ற ஆண்டே சக மாணவியுடன் சிரித்து பேசியதிற்காக  இரண்டு முறை விசாரணைக்கு வந்திருந்தான். அதனால் இந்த முறை வீரபத்ரன் வாயால் பேசாமல் பிரம்பால் பேசினார்.

வெளியே சென்ற மாலினி, “போகலாம் னு சொல்லிட்டார்.. உங்களையும் தான்” என்று கூறினாள்.

செல்லும் வழியில் மாலினி, “ஷங்கர், புழா.. சாரி.. என்னால் தான்………..”

 

“இட்ஸ் ஓகே” “நோ ப்ராப்ளம்” என்றார்கள்.

மாலினி, “தங் யூ” என்று புன்னகைத்தாள்.

ஸ்ரீராமன் போலி வருத்தத்துடன், “எனக்கு சாரி கிடையாதா மாலினி?” என்று கேட்டான்.

மாலினி தீவிரமான குரலில், “ஸ்ரீராம் உன் போலித்தனத்தால் என்னை கவர முயற்சிக்காதே” என்றாள்.

ஸ்ரீராமன் அசடு வழிந்தான்.

கேன்டீனில் மாலினி மற்றும் பிருந்தாவுக்காக காத்திருந்த நந்தினி மற்றும் மோகனா பிருந்தா தனியாக வரவும், “மாலினி எங்க?” என்று கேட்டனர்.

பிருந்தா, “இன்னுமா வரலை” என்று கேட்டவள் வகுப்பறையில் நடந்ததை கூறினாள்.

நந்தினி, மோகனா மற்றும் பிருந்தா மாலினியை கவலையுடன் தேடிக் கொண்டிருக்க, பிஸ்ஸா கார்னர் வந்த செல்வராஜ் ராகேஷ் சொன்ன அனைத்தையும் அமைதியாக கேட்டுவிட்டு, “பிருந்தா ஏன் பொய் சொல்லிருக்க கூடாது?” என்று நிதானமாக கேட்டான்.

சிறு எரிச்சலுடன் ராஜசேகர் ஏதோ சொல்ல நினைக்கையில் ராகேஷ் கண்ணசைவில் அவனை தடுத்தான். அதை கவனித்த செல்வராஜ் நக்கலாக, “ஏன் தடுக்கிற ராகேஷ்.. சாருக்கு வேண்டியவங்களை நம்பலைனதும் அவருக்கு கோபம் வருது..” என்று கூறியதும் ராஜசேகர் அவனை முறைத்தான்.

ராகேஷ், “நீங்க ஏன்டா அடிச்சுகிறீங்க.. நாம ஒற்றுமையா இருக்கணும்…………….”

 

செல்வராஜ், “பொண்ணுங்க உள்ள நுழைஞ்சதுக்கு அப்பறம் ஒற்றுமையா!” என்று சிரித்தான்.

சிவகுரு, “மாலினி உண்மையை சொல்லியிருந்தால் இந்நேரம் உனக்கு பனிஷ்மென்ட் கிடைத்திருக்கும்”

செல்வராஜ் அலச்சியமாக தோளை குலுக்கினான்.

ராகேஷ், “பிருந்தா பொய் சொல்ல காரணம் என்ன?”

செல்வராஜ், “சிம்பிள்.. கோபத்துல அவ பிரெண்டை நான் எதுவும் செஞ்சிர கூடாது னு பொய் சொல்லிருக்கா.. அவ ஆரம்பித்ததே நான் மாலினியை எதுவும் செஞ்சுர கூடாதுன்னு தான் ஆரம்பித்திருக்கா”

சிவகுரு, “பிருந்தா பொய் சொல்லலை.. பிருந்தா பற்றி எனக்கு தெரியாது பட் மாலினி பற்றி தெரியும்.. அவ staffsஸ  கலாட்டா செய்ற எதுலையும் கலந்துக்க மாட்டா பட் கிளாஸ்மேட்ஸ் விட்டுக் கொடுக்க மாட்டா..”

செல்வராஜ், “நாம மூணுபேர்ல தான் யாரோ னு எப்படி தெரிஞ்சது?”

 

சிவகுரு, “செல்வா ஒன்றை நல்ல புரிஞ்சுக்கோ.. மாலினிக்கு உண்மை தெரியும் ஸோ ஒன்னு உன் பெயரை சொல்லிருக்கணும் ஆர் தெரியாது னு சொல்லிருக்கணும்.. அவ கிளாஸ்மேட்ஸ்ஸ விட்டுக்கொடுக்க மாட்டா ஸோ அவ தெரியாது னு தான் சொல்லிருப்பா.. இதை தான் பிருந்தா வரதுக்கு முன்னாடியே நான் சொல்ல ட்ரை பண்ணேன் பட் நீ சொல்ல விடலை”

செல்வராஜ் மீண்டும் அலச்சியமாக தோளை குலுக்கினான். 

ராகேஷ், “அமுதா இல்லை னு சக்திவேல்  சொல்றான். ஆஷா இல்லை னு ராஜசேகர் சொல்றான்.. அப்பறம் யார்……………”

செல்வராஜ், “ஆமா டா ப்ரீத்திக்கு நான் கரண்டீ னு ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வருத்தனா கரண்டீ குடுங்க.. அவளுங்க நம்மளை நல்ல ஏமாத்தட்டும்” என்று கடுப்புடன் கூறினான்.

ராஜசேகர், “பாய்ஸ்.. இப்ப பிரச்சனை யாரு சொல்லிருப்பா என்பதை விட நாளைக்கு staffs எப்படி சமாளிப்பது என்பது தான்.. முதலில் இந்த பிரச்னையை staffs மறக்கட்டும் அப்பறம் யாரு சொல்லிருப்பா னு யோசிக்கலாம்”

செல்வராஜ், “பிரச்சனை முடிஞ்சதுக்கு அப்பறம் என்னத்தை யோசிப்ப?”

ராகேஷ், “செல்வா எடுத்ததுக்குலாம் கோபப்படாத.. சேகர் சொல்ற மாதிரி முதலில் staffs டீல் பண்ணுவோம்…”

செல்வராஜ், “யாரு னு கண்டுபிடிக்கலைனா அந்த ஆளை staff திருப்பி கேட்டா…………”

ராகேஷ், “உண்மை தெரிஞ்சது மாலினிக்கு மட்டும் தான்.. அவ சொல்லலை.. நம்ம மூணுபேரை சொன்னவங்களுக்கு உண்மை தெரியாது.. ஸோ நோ ப்ரோப்லம்”

செல்வராஜ், “நம்மளை போட்டு குடுத்தவங்களுக்கு உண்மை தெரியாது னு எப்படி சொல்ற?”

ராகேஷ், “உண்மை தெரிஞ்சிருந்தா உன் பெயரை மட்டும் தான் உளறியிருப்பாங்க”

                   

சிறிது யோசித்த செல்வராஜ், “வேற யாருக்கும் தெரியாது னு எப்படி சொல்ற?”

 

சிவகுரு, “நீ கேட்கிற கேள்விகளுக்கு பதில் அந்த வாத்தி கேள்விகளே பெட்டெர் டா”

செல்வராஜ், “உனக்கு அன்சர் தெரியலை னு சொல்லு”

 

சிவகுரு, “ஆமா சொல்லிட்டா மட்டும் ஒத்துகவா போற” என்று முணுமுணுத்தான்.

ஷங்கரும் புழாவும் கிளம்பிய நேரத்தில் மோகனா அழுது கொண்டிருப்பதையும் அவளை பிருந்தாவும் நந்தினியும் தேற்ற  முயற்சித்து தோல்வியை தழுவுவதையும் பார்த்தார்கள். 

மோகனாவின் அழுகையை பார்த்த பின் ஷங்கரின் கால்கள் தானாக அங்கே செல்ல புழா வேற வழியே இல்லாமல் மனமின்றி பெண்கள் இருந்த இடத்திற்கு சென்றான்.

ஷங்கர், “என்னாச்சு மோகனா?” என்று கேட்டது தான் தாமதம் குறைந்திருந்த மோகனாவின் அழுகை கூடியது.

பிருந்தா, “ஹே.. இப்ப என்ன கேட்டுட்டான் னு இப்படி அழுற?” என்று அதட்டவும் பயத்தில் கண்ணில் மிரட்சியுடன் அங்கும் இங்கும் சுத்தி பார்த்து, “மாலு.. மாலு..” என்று தேம்பினாள் மோகனா.

பிருந்தாவையோ நந்தினியையோ பொருட்படுத்தாமல் ஷங்கர், “மோகனா.. யாரும் ஒன்னும் சொல்லமாட்டாங்க.. என்ன ஆச்சு சொல்லு.. எதுக்கு அழுற?”

மோகனா, “மாலு.. மாலு”

ஷங்கர், “மாலினி உன்னை திட்டுனாளா? நீ…………….”

மோகனா இல்லை என்பது போல் தலையை ஆட்டினால் அனால் வேறெதுவும் சொல்லாமல் தேம்பினாள். எங்கே அழுதால் பிருந்தா மீண்டும் திட்டுவாளோ என்ற பயம்.

மோகனாவை தன் தோளோடு சேர்த்து அணைத்து ஆறுதல் கூற தூண்டிய தன் மனதை அடக்கிக் கொண்டு ஷங்கர் நிதானமாக, “மோகனா.. இங்க பாரு.. நீ எதுக்கு அழுறனு சொன்னா தானே பிரச்னையை சால்வ் பண்ண முடியும்.. சொல்லு”

 

“…”

 

“மோகனா நீ குட் கள் தானே?”

மோகனா ‘ஆம்’ என்பது போல் தலையை ஆட்டினாள்.

“ஓகே.. அப்போ அழாம என்ன பிரச்சனைன்னு சொல்லு”

மோகனாவின் தேம்பல் மெல்ல குறைந்தது.. 

சிறு குழந்தையை கையாளும் பொறுமையுடன் ஷங்கர் மோகனாவுடன் பேசுவதையும் அவனது சொல்பேச்சின்படி மோகனா நடப்பதையும் ஆச்சரியத்துடன் மற்ற மூவரும் பார்த்துக் கொண்டு நின்றனர்.

மோகனா, “செல்வராஜ் தான் பிரியா மேம்-மை திட்டினான் னு (ஷங்கரும் புழாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, பிருந்தாவும் நந்தினியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்) மாலினி சார் கிட்ட சொல்லிட்டா னு தப்பா நினைச்சுட்டு செல்வராஜ் மாலினியை ஏதோ செஞ்சுட்டான்……….”

ஷங்கர், “செல்வராஜ் தான் சொன்னான் னு உனக்கு யார் சொன்னது?”

மோகனா, “பிருந்தா தான் சொன்னா”

பிருந்தாவிற்கு தன் தவறு இப்போது புரிந்தது – மாலினி வராத கவலையில் மோகனா இருப்பதை மறந்து வகுப்பறையில் நடந்தவற்றை முழுவதுமாக சொன்னது எவளோ பெரிய தவறு என்று இப்பொழுது புரிந்தது.

பிருந்தாவின் பயம் கலந்த அதிர்ச்சியடைந்த முகத்தை பார்த்த ஷங்கர், “செல்வராஜ் சொல்லலை மோகனா.. பிருந்தா ஏதோ தெரியாம சொல்லிருப்பா.. கேட்டு பார்” என்றான்.

மோகனா பிருந்தாவை பார்க்க அவள் அவசரமாக, “நான் செல்வராஜ் சொன்னான் னு சொல்லலையே மோனி.. அவன் மாலினியிடம் கோபபட்டான்னு தானே சொன்னேன்”

மோகனா, “இல்லையே நீ…………” என்று யோசிக்கவும் பிருந்தா, “நான் அப்படி தான் சொன்னேன்.. நீ வேணும்னா நந்தினியை கேள்”

இப்போது நந்தினி தட்டுதடுமாறி, “ஆ..மா.. பிருந்தா அப்படி தான் சொன்னா” என்றாள்.

மோகனா, “ஓ.. நான் தான் தப்பா நினைச்சுகிட்டேனா!!!” என்று இழுக்கவும் தான் பிருந்தாவிற்கு மூச்சு சீரானது.

(பிருந்தாவிற்கு பயம், “எங்கே மோகனா செல்வராஜ் பெயரை எல்லோரிடமும் சொல்லி.. ஆசிரியர்களுக்கு தெரிந்துவிடுமோ! செல்வராஜ் கோபம் மோகனா மீதோ தன் மீதோ திரும்புமோ!” என்ற பயம் தான்)

ஷங்கருக்கும் அதே பயம் இருந்துருக்கும் போல் அவனும் இப்போது தான் நிம்மதி அடைந்தான்.

மோகனா, “ஷங்கர்.. செல்வராஜ் கோபமா இருந்தது உண்மை தானே.. அவன் தான் மாலினியை என்னமோ செஞ்சுட்டான்..” என்று பதட்டத்துடன் கூறவும்

                                             

பிருந்தா, “மோனி.. மாலினியை செல்வராஜ் ஒன்னும் செய்யலை… நீ………….”

                

மோகனா, “இல்லை மாலினிக்கு என்னவோ ஆகிருச்சு.. மாலு…” மோகனாவின் கண்ணில் மீண்டும் கண்ணீர் தேங்கியது.

ஷங்கர், “மோகனா.. செல்வராஜ் மாலினியை ஒன்னும் செய்யலை.. நீ கவலை படாத..”

                      

“உனக்கு எப்படி தெரியும்?”

 

“மாலினிக்கு ஏதும் ஆகிருச்சுன்னு உனக்கு மட்டும் எப்படி தெரியும்?”

 

“மாலினி இன்னும் இங்க வரலையே.. என்ன வெயிட் பண்ண சொல்லிட்டு அவ வேற எங்கயும் போக மாட்டா…”

“இங்க வரலைனா அவளுக்கு ஏதோ ஆகிருச்சு னு தப்பா நினைக்க கூடாது மோகனா.. மாலினி இப்ப தான் கிளம்பி போனா.. நான் பார்த்தேன்.. அவ வீட்டுக்கு தான் போய்…………”

 

“இல்லை நீ சும்மா சொல்ற.. மாலு என்ன விட்டுட்டு போயிருக்க மாட்டா”

 

“நான் பொய் சொல்லலைடா..  அவளை சேர்மன் சார் கூப்பிட்டிருந்தாங்க.. நாங்களும் போனோம்.. பேசிட்டு இப்ப தான் வெளியே போனா.. ஏதோ யோசனையில் போய்டா போல..”