Advertisement

அத்தியாயம் –8

 

 

இருவர் மனமும் சந்தோசத்தில் இருந்தது. விடிந்த அந்த பொழுது குழந்தையின் பிறந்த நாள் என்பதால் மனோ நேரமாக எழுந்து குளித்தவள் குழந்தையையும் தயார்படுத்தினாள்.

 

 

பிரணவும் எழுந்து குளித்து வந்தவன் குழந்தையை கிளப்ப அவளுக்கு உதவி செய்தான். அழகாய் பட்டுவேட்டி சட்டையை அணிந்திருந்த அபராஜித் அவன் தந்தையை போலவே இருந்தான்.

 

 

பிரணவும் பட்டுவேட்டி சட்டை அணிந்திருந்தான். அப்பாவும் மகனும் ஒரே நிற சட்டையை அணிந்திருக்க மனோ மட்டும் இன்னும் வேறு உடைக்கு மாறாதிருந்தாள்.

 

 

“ரதி சீக்கிரம் ரெடி ஆகு நானும் அஜியும் சட்டுன்னு ரெடி ஆகிட்டோம் பாரு என்றான் மனைவியை பார்த்து.

 

 

“ஆஹா இவரு சட்டுன்னு ரெடி ஆகிட்டாராம்ல, நான் சீக்கிரம் எழுந்து குழந்தைக்கு வேண்டியது எல்லாம் பார்த்து கிளம்பிட்டு உங்களையும் எழுப்பி விட்டேன்

 

 

“என்னை பார்த்து சொல்ல மாட்டீங்க நீங்க. சரி சரி அப்பாவும் பிள்ளையும் வெளிய போய் கொஞ்ச நேரம் இருங்க நான் புடவை மாத்திட்டு வந்திடறேன் என்று விரட்ட பிரணவ் சட்டமாய் கட்டிலில் அமர்ந்து கொண்டான்.

 

 

“என்னால வெளிய போக முடியாது. நோ சான்ஸ் ரதி பேபி இப்போவே இங்கவே என் கண்ணு முன்னாடியே மாத்திக்கோ. நான் ரொம்ப நல்ல பிள்ளையா இருப்பேன் ஓகே வா என்று சொல்லி கண் சிமிட்டினான்.

 

 

“அச்சோ ரித்திக் என்ன விளையாட்டு இது குழந்தையை வைச்சுக்கிட்டு. ப்ளீஸ் ப்ளீஸ் என் கண்ணுல… செல்லம்ல… வெளிய போங்களேன் ப்ளீஸ்… என்று கெஞ்சி கொஞ்சினாள் மனோ.

 

 

“அஜி இப்போ குட்டிபாப்பா நான் விம் போட்டு விளக்கினாலும் அவனுக்கு எதுவும் புரியாது ரதி பேபி. நான் சொன்னதை நீ செய்என்று அவளிடம் மல்லுக்கு நின்றான்.

 

 

“ப்ளீஸ் ரித்திக் கோவிலுக்கு நேரமாகுது புரிஞ்சுக்கோங்க…

 

 

பிரணவ் நகர்வேனா என்று கட்டிலில் அமர்ந்திருந்தான். மனோ முகம் சுண்டி விட புடவையை தூக்கிக் கொண்டு குளியலறை விரைய “நான் வெளிய இருக்கேன் நீ மாத்திட்டு வா என்றுவிட்டு வெளியில் சென்று கதவை மூடினான்.

 

 

அப்பாடா என்ற நிம்மதி பெருமூச்சுடன் அவசரமாய் கிளம்பி கூந்தல் சீவி முகம் திருத்தி அடுத்த பத்து நிமிடத்தில் கதவை திறந்தவளை விழி மூடாமல் பார்த்திருந்தான் பிரணவ்.

 

 

“போகலாமா என்று அவள் அவன் கண் முன்னே கையை ஆட்டி கேட்கவும் தான் தன்னுணர்வுக்கு வந்தவன் “ரதி கதவை பூட்டிட்டியா!! எனவும் ஆம் என்பதாய் தலையசைத்தாள் அவள்.

 

 

“கொஞ்சம் கதவை திறம்மா, நான் என்னோட போன் எடுக்கலை என்றான். மனோவும் கதவை திறந்தவள் “குழந்தையை குடுங்க நான் வைச்சுக்கறேன் என்று கையை நீட்ட அவளின் நீட்டிய கையை பிடித்து தன் புறம் இழுத்தவன் கதவை அடைத்தான்.

 

 

“எ… என்ன பண்றீங்க என்று திணறினாள்.

 

 

“அஜிம்மா நீங்க ரொம்ப கியூட்ல பேபி என்றவன் குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டு “உங்க அம்மாவும் இப்போ ரொம்ப கியூட்டா இருக்காங்க

 

 

“ரோஸ் ரோஸ் ரோஸ் ரோஜா பூவேன்னு அழகா இருக்காங்கடா கண்ணா!! அப்பா உங்கம்மாவுக்கு ஒரு உம்மா கொடுத்திட்டு வந்திர்றேன். அப்புறம் நாம கிளம்புவோம் என்றவன் குழந்தையை கீழே இறக்கி நிற்க வைத்துவிட்டு கதவில் சாய்ந்து நின்றிருந்தவளின் இதழ் நோக்கி குனிந்தான்.

 

 

“ஏன் இப்படி பண்ணுறீங்க கோவிலுக்கு கிளம்பும் போது தான் உங்களுக்கு இப்படி எல்லாம் தோணுமா என்றாள்.

 

 

“ஆமா அப்படி தான் தோணும். நாம கோவிலுக்கு கிளம்பிட்டு இருக்கறதுனால இதோட விட்டேன், இல்லன்னா என்று முடிக்காமல் அவன் விடவும் அவள் முகம் சூடேறி சிவந்தது.

 

 

குனிந்து குழந்தையை தூக்கிக் கொண்டு “இப்போவாச்சும் போகலாமா என்று அவனை பார்க்க “ஹ்ம்ம் போகலாம் என்றான்.

 

 

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பார்கள். அந்த மலை மீது குமரன் குறிஞ்சி ஆண்டவனாய் வீற்றிருந்தான். கோவிலுக்கு சென்று குழந்தையின் பெயரில் அர்ச்சனை செய்து மனமார பிரார்த்தனை செய்தார்கள் இருவரும்.

 

 

மனோவின் பிரார்த்தனை விரைவில் பிரணவின் குடும்பத்தினருடன் ஒன்று சேர வேண்டுமென்பதாய் இருந்தது. பாவம் அவளின் அந்த வேண்டுதல் பலிக்கும் என்றோ இருவருக்கும் இடையில் பிளவை ஏற்படுத்தும் என்றோ அவள் அப்போது அறியவில்லை.

 

 

அறிந்திருந்தால் வேண்டாமல் இருந்திருப்பாளோ!! என்னவோ!! நடக்க வேண்டும் என்பதை யாராலும் தடுத்தாட்கொள்ள முடியாதே!! காரணமின்றி எந்த காரியமுமில்லை.

 

 

மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன் இருந்தாள் மனோபாரதி. எல்லா சந்தோசமும் ஒரே நாளில் கிடைத்தது போல் இருந்தது அவளுக்கு. ஏன் என்றே அவளுக்கும் புரியவில்லை.

 

 

ஒரு வேளை இதற்கு பின் உனக்கு இவ்வளவு மகிழ்ச்சி இல்லை என்பதை அது உணர்த்துவதாய் இருந்திருக்குமோ!!

 

 

“என்னங்க இங்க ஒரு போட்டோ எடுங்களேன் என்று கணவனின் அருகில் நெருங்கி நின்றாள் அவள். மூவருமாக சேர்ந்தார் போன்று நிற்க வழியில் சென்ற ஒருவரை நிறுத்தி புகைப்படம் எடுத்தனர்.

 

 

சட்டென நனைந்தது நெஞ்சம்
சர்க்கரையானது கண்ணீர்
இன்பம் இன்பம் ஒரு துன்பம்
துன்பம் எத்தனை பேரின்பம்

உடலுக்குள் மல்லிகை தூரல்
என் உயிருக்குள் மெல்லிய கீறல் சுகமாய்……
சுகமாய் சுகமாய் கொள்ளையிடு
என் உயிரை மட்டும் விட்டுவிடு

 

 

பிரணவின் கைபேசி சட்டென நனைந்தது நெஞ்சம் என்று ரிங்காரம் செய்ய கணவனை ஒரு வியப்புடன் ஏறிட்டாள் மனோ. “ஹலோ என்றவாறே அழைப்பை ஏற்று காதுக்கு கொடுத்தான் பிரணவ்.

 

 

எதிர்முனையில் மீராவின் நாயகன் முகுந்தன் பேசினான். “டேய் எங்க இருக்க??

“ஏன்டா அதை கேட்க தான் இப்போ வேலையை விட்டு எனக்கு நீ போன் பண்ணியா!! ஏன்டா நான் கொடைக்கானல் போறேன்னு சொல்லிட்டு தானேடா வந்தேன்

 

 

“அறிவுதான்டா உனக்கு அது தெரியாம தான் நான் கால் பண்ணுறேன்னு நினைச்சியாடா மச்சி!! கொடைக்கானல்ல இப்போ எங்க இருக்கன்னு சொல்லுடா!! நாங்க அங்க தான் வந்திட்டு இருக்கோம்

 

 

“என்ன!! இங்கயா!! என்னடா என்ன விஷயம்

 

 

“டேய் சாமி பதில் சொல்லுடா முதல்ல என்னைய விசாரிக்கிறது எல்லாம் அப்புறம்

 

 

“சரி சரி நீ பேசுறது பார்த்தா ஏதோ ஒண்ணுக்கும் ஆகாத விஷயத்துக்கு வர்ற மாதிரி தான் தெரியுது. என்ன விஷயம்ன்னு நீ வந்த பிறகே தெரிஞ்சுக்கறேன் என்றவன் “நீ நேரா குறிஞ்சி ஆண்டவர் கோவிலுக்கு வந்திடு அங்க தான் இருக்கோம் நாங்க

 

 

“ஹேய் சூப்பர்டா!! நான் பக்கத்துல தான் இருக்கேன் ஒரு அஞ்சே நிமிஷத்துல அங்க இருப்பேன் என்றுவிட்டு போனை வைத்த முகுந்தன் கூடுதலாய் பத்து நிமிடங்கள் எடுத்துக்கொண்டு அங்கு வந்து சேர்ந்தான்.

 

 

மீராவும் அவனுமாக வந்ததை பார்த்ததும் சற்றே ஆச்சரியம் தான் மனோவுக்கும் பிரணவுக்கும்.

 

 

முதல் நாள் அவளை பார்த்து கடுகடுத்தது என்ன இப்போது ஜோடி போட்டுக் கொண்டு வருவது என்ன என்று நினைத்து உள்ளூர சிரித்துக்கொண்டான் பிரணவ்.

 

 

“என்னடா என்னை பார்த்து நக்கலா சிரிக்கிற மாதிரி இருக்கு. நீ என்ன நினைச்சிருப்பன்னு எனக்கு தெரியும். அது நேத்து இது இன்னைக்கு ஓகே வா என்று நண்பனின் மனதை படித்தவனாய் முகுந்தன் கூறினான்.

 

 

“உன்னை பார்க்க நாங்க வரலை, என் மருமகனுக்கு விஷ் பண்ணிட்டு இதை கொடுத்திட்டு போகலாம்ன்னு தான் வந்தோம் என்றவன் மீராவுக்கு கண்ஜாடை காட்ட அவள் அபராஜித்க்கு எடுத்த உடையயைமனோவிடம் கொடுத்தவள் பிரேஸ்லெட்டை குழந்தையின் கையில் மாட்டிவிட்டாள்.

 

 

“மாமா அழகா இருக்குல அஜிகுட்டிக்கு என்று சொல்லி அவனுக்கு முத்தம் வைக்க முகுந்தனுக்கு காதில் புகை வந்தது.

 

 

“ஏன்டி நீ பிரேஸ்லெட் அழகா இருக்குன்னு காமிக்க கூப்பிட்டியா!! இல்லை நீ என் மருமவனுக்கு முத்தம் கொடுக்கறதை பார்க்க கூப்பிட்டியா!!

 

 

“இங்க பாரு எனக்கு ரொம்ப எல்லாம் பொறுமை கிடையாது. இப்படி என் கண்ணு முன்னாடி செஞ்சு வெறுப்பேத்தின கஷ்டம் உனக்கு தான். பக்கத்துல யாரு இருக்கா என்னன்னு எல்லாம் பார்க்க மாட்டேன் பட்டுன்னு முத்தம் கொடுத்திருவேன் என்று மிரட்டினான் முகுந்தன்.

 

 

‘யோவ் மாமா சைலென்ட்டா பார்த்திட்டு விட்டிருக்க வேண்டியது தானேய்யா!! இப்படி எல்லார் முன்னாடி சொல்லி என் மானத்தை வாங்கிட்டியே உன்னை அப்புறம் வைச்சுக்கறேன்!! என்று அவனை முறைத்தவாறே அவனுக்கு கவுண்ட்டர் கொடுத்துக் கொண்டாள் மனதில்.

 

 

“அப்புறம் எதுக்கு வைச்சுக்கற இப்பவே வைச்சுக்கோன்னு தானே சொல்றேன் என்று அவள் மனதில் நினைத்ததிற்கு பதில் சொன்னான் முகுந்தன்.

 

 

“அடேய் நீ எங்களை பார்க்க வந்தியா இல்லை மீராவை கூட்டிட்டு ஊர்சுத்தலாம்ன்னு ப்ளான் பண்ணியா!! வந்ததுல இருந்து அந்த பிள்ளைய எதாச்சும் சொல்லிட்டே இருக்க என்று இடைமறித்தான் பிரணவ்.

 

 

“சொல்றாங்க சுரைக்காய்க்கு உப்பில்லைன்னு நான் சொல்றது எல்லாம் இவளுக்கு புரிஞ்சிட்டாலும் என்று அதற்கும் இடித்தான் அவன்.

 

 

“மீரா நீ எப்படிம்மா இவனோட வந்தே!! இப்படி பேசி பேசியே உன் காதுல ரத்தம் வரவைச்சிருப்பானே என்று மீராவுக்காய் வருத்தப்பட்டான் பிரணவ்.

 

 

“அதையேன் அங்க கேட்குற என்னை கேளு!! நீங்க எல்லாம் இங்க இருக்க போய் அம்மிணி இப்போ வாயை திறக்காம நல்ல பிள்ளையாட்டமா இருக்கா…

 

 

“வரும் போது இவ மட்டும் தான் பேசிட்டு வந்தா, இங்க பாரு காதுல இருந்து எனக்கு ரத்தம் வருது என்று இல்லாத ரத்தத்தை துடைத்து காண்பித்து மீராவிடம் இரண்டு அடி வாங்கிக்கொண்டான் முகுந்தன்.

 

 

“சரிடா உங்க சண்டை எல்லாம் அப்புறம். சொல்லு நீ குழந்தையை விஷ் பண்றதுக்கா இவ்வளவு தூரம் வந்தே. நேத்தே குழந்தைக்கு டிரஸ் அது இதுன்னு நீங்க நெறைய செலவு பண்ணிட்டீங்க. மறுபடியும் வேற இதெல்லாம் எதுக்குடா

 

 

“உனக்கு யாரு செஞ்சா இதெல்லாம். எல்லாம் என் மருமகனுக்கு இப்போவே காக்கா பிடிச்சு வைச்சுக்கறேன் அப்போ தானே என் பொண்ணை கட்டிக்குவான் என்று மீண்டும் கலாட்டாவில் இறங்கிய நண்பனின் முதுகில் ஒன்று வைத்தான் பிரணவ்.

 

 

“சரி சரி சொல்றேன்டா… குழந்தையை பார்த்து வாழ்த்து சொல்லணும்ன்னு தோணினது முதல் காரணம். ரெண்டாவது இவ கூட எங்காச்சும் போகணும்ன்னு ஒரு ஆசை அது இரண்டாவது காரணம்

 

 

“அண்ணா முதல் காரணமே மீரா கூட ஊர் சுத்துறது தானே. உண்மையை சொல்லுங்க என்றாள் மனோ.

 

 

“அப்படி தான் இருக்கும் ரதி சார் நம்மகிட்ட சும்மா கதை விடுறார் என்றான் அவள் கணவனும் ஒத்து ஊதுவது போல்.

 

 

“அது சரி உங்க ரெண்டு பேரு வீட்டில ஒண்ணா வெளிய போக எப்படி ஒத்துக்கிட்டாங்க. ஒண்ணும் சொல்லலையா!! இல்லை பொய் சொல்லிட்டு வெளிய வந்துட்டீங்களா!!

 

 

“பொய் சொல்லிட்டு வர்றதாவது அதுக்கெல்லாம் இவரு சரியா வரமாட்டாருண்ணா!!

 

 

“இவரு என்னைய வெளிய கூட்டிட்டு போக அத்தைகிட்ட கேட்டிருப்பாரு போல, அத்தை எனக்கொண்ணும் இல்லைப்பா உங்க மாமன்கிட்டவே கேட்டுக்கோன்னு சொல்லி அனுப்பிட்டாங்க

 

 

“இவரும் நேரா எங்க வீட்டுக்கு கிளம்பி வந்து எங்கப்பாகிட்ட கேட்டாரு அவரு மருமகன் மேல இருக்கற நம்பிக்கையில என்னைய அனுப்பி வைச்சிட்டார் இவ்வளோ தான் நடந்துச்சுண்ணா என்றாள் மீரா.

“அவ சொல்றதை முழுசா நம்பாத அவளுக்கு சாதகமானதை மட்டும் சொல்லுறா!! இவங்கப்பனை சரி சரி முறைக்காத, எங்க மாமாக்கிட்ட ஒரு வார்த்தை கேட்கலாம்ன்னு வீட்டுக்கு போனேன்

 

 

“மாமா மாமா உன் பொண்ணை கூட்டிட்டு நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வரேன். என்னோட பிரண்டு குழந்தைக்கு பிறந்தநாள் அவங்களை பார்த்திட்டு நானே கூட்டிட்டு வந்து விடறேன்னு சொன்னேன்

 

 

“அவர் ஒரு நிமிஷம் என்னை பார்த்தார் அவர் பொண்ணை பார்த்தார். அப்புறம் என்ன நினைச்சாரோ தெரியலை பார்த்து பத்திரமா போங்கன்னு சொன்னார்

 

 

“அதெல்லாம் நான் பத்திரமா கூட்டிட்டு போய் கூட்டிட்டு வந்திடுறேன் மாமா நீங்க பயப்படாதீங்க. உங்க பொண்ணை உங்க பொண்ணாவே கூட்டிட்டு வந்து விடறேன்னு சொன்னேன். அதுக்கு அவர் ஒண்ணு சொன்னாரு

 

 

மனோவும், பிரணவும் இருவரையும் என்ன என்பது போல் மாறி மாறி பார்த்தனர். “என்னன்னு கேட்காம முகத்தை பார்த்தா தெரியுமா. சரி விடு நானே சொல்றேன்

 

 

“என் மாமா என்கிட்ட சொன்னாரு மருமகனே நான் பத்திரமா இருக்க சொன்னது என் பொண்ணை இல்லை என் பொண்ணுகிட்ட இருந்து உங்களை தான்னு சொன்னாரே பார்க்கணும். எனக்கு சிரிப்பு தாங்கலை என்றவன் நிஜமாகவே சிரிக்க ஆரம்பித்தான்.

 

 

மீராவிற்கு முகம் சுண்டி விட்டது. தன்னை கவனிப்பார்கள் என்ற எண்ணம் வந்ததும் சட்டென்று முகத்தை சீராக்கிக் கொண்டு அமைதியானாள் அவள்.

 

“டேய் போதும் சிரிச்சது நிறுத்தறியா என்று அதட்டிய பிரணவ் மீராவை பார்க்குமாறு கண் ஜாடை காட்டினான்.

 

 

முகுந்தனுக்கு தான் கொஞ்சம் ஓவராக தான் சிரித்துவிட்டோமோ என்று தோன்றியதுமே “என்ன மீரா நாம கோவிலுக்கு போக வேண்டாமா!! அவங்க இங்க இருக்கட்டும் வா நாம போயிட்டு வந்து அவங்களோட லன்ச் முடிச்சுட்டு கிளம்புவோம் என்று இயல்பாய் அவள் கவனத்தை திசை திருப்பி நண்பனுக்கு ஜாடை காட்டி நகர்ந்து சென்றான் முகுந்தன்.

 

 

“பெரிய ஆளு தான் நீங்க… எல்லாரையும் நல்லா கவனிக்கறீங்க… மீரா முகம் மாறினதுமே உங்க பிரண்டுக்கு ஜாடை எல்லாம் காட்டி பேச்சை அப்படியே ஸ்டாப் பண்ண வைச்சுட்டீங்க!! நல்லா சமாளிக்க கத்து வைச்சு இருக்கீங்க!! என்றாள் ரதி.

 

 

அன்று மாலையே அவர்கள் ஊருக்கு கிளம்புவதாய் இருக்க பிரணவ் குடும்பம் முகுந்தனிடமும் மீராவிடமும் சொல்லிக்கொண்டு அவர்களை அறைக்கு சென்றனர்.

 

 

மனோவிற்கு அன்றைய மனநிலை எந்த அளவிற்கு சந்தோசம் கொடுத்ததோ அதே அளவு அவளுக்கு வருத்தமும் கொடுத்தது எதற்கு முன்பும் ஒரு முறை இதே போன்று நடந்தது போல் அவளுக்கு தோன்றியது.

 

 

ஆனால் அது எப்போது என்று அவளால் சரியாக நினைவுப்படுத்தி பார்க்க முடியவில்லை. அறைக்கு வந்ததும் பிரணவ் கிளம்ப ஆயத்தமாக அவளோ தேமே என்று அமர்ந்திருந்தாள்.

 

 

“என்னம்மா என்னாச்சு குழந்தையை படுக்க போட்டுட்டு என்ன யோசனை கிளம்ப வேணாமா என்றான்.

 

 

“ஹ்ம்ம் கிளம்பணும் என்றாள் விட்டேத்தியாய்.

“என்னாச்சுடா என்றவாறே அவளருகில் வந்து அமர்ந்தவனை இறுக கட்டிக்கொண்டாள். அப்போது தான் அவளுக்கு சற்று முன் தோன்றிய உணர்வுக்கு காரணம் விளங்கியது.

 

 

“எனக்கு என்னமோ கொஞ்சம் பயமாயிருக்குங்க!!

 

 

“எதுக்கு?? என்றான் அவன் கேள்வியாய்.

 

 

“எங்க அம்மா அப்பா இறக்கரதுக்கு கொஞ்ச நாள் முன்னாடி நான் எப்படி உணர்ந்தேனோ அதே போல இப்போ உணர்றேன்

 

 

“நீ என்ன சொல்றேன்னு நிஜமாவே எனக்கு புரியலை ரதிம்மா. எதுவா இருந்தாலும் நேராவே சொல்லு என்றான்.

 

 

“நமக்குள்ள ஏதோ பிரிவு வர்ற மாதிரி… என்று முடிக்கவில்லை அவன் அவளின் வாயை பொத்தினான்.

 

 

“என்ன தேவையில்லாத சிந்தனை உனக்கு என்று கடிந்தான்.

 

 

“இல்லை அம்மா அப்பா என்னைவிட்டு போக முன்னாடி இதே போல மனசு நிறைஞ்ச சந்தோசத்தோட இருந்தேன். அவங்களும் அப்படி தான் இருந்தாங்க

 

 

“அந்த வாரம் முழுக்க எங்களுக்கு அப்படி தான் இருந்துச்சுங்க. எந்தளவுக்கு நான் சந்தோஷமா பீல் பண்ணேனோ அதே அளவுக்கு மனசு முழுக்க ஏதோ ஒரு பயம் இருந்துட்டே இருந்துச்சு

 

 

“நான் மட்டும் தனியா இருக்கற மாதிரி ஒரு உணர்வு உள்ளுக்குள்ள தோணிட்டே இருந்துச்சு. இப்போ அதே மாதிரி எனக்கு தோணுது

“ரித்திக் எக்காரணம் கொண்டும் என்னை விட்டு நீங்க பிரியக் கூடாது ப்ளீஸ். எனக்கு தெரியும் நான் இப்போலாம் நெறைய கோபப்படுறேன்

 

 

“அது உங்களை பாதிக்குதுன்னு தெரியுது எனக்கு. ஆனா அந்த கோபத்தை நான் உங்க மேல தான் காட்டுறேன் நீங்க அதை புரிஞ்சுக்கணும்

 

 

“உங்களை என்னால எக்காரணம் கொண்டும் இழக்க முடியாது. நானே கோபப்பட்டாலும் என்னைவிட்டு நீங்க பிரியக்கூடாது என்றவளின் கண்ணில் இருந்து தாரை தாரையை கண்ணீர் பெருகியது.

 

 

“இங்க பாரு நீ இவ்வளவு நேரம் பேசினதை நான் பொறுமையா கேட்டதுக்கு காரணம் உன் மனசை அடைச்சுட்டு இருக்கற விஷயம் என்னன்னு தெரிஞ்சுக்க தான்

 

 

“உன்னோட இந்த பயம் அர்த்தமில்லாதது. நான் உன்னை எப்பவும் பிரிய மாட்டேன், விட்டுக்கொடுக்கவும் மாட்டேன். இப்போ ஒண்ணு சொல்றேன் அதை நீ எப்பவும் ஞாபகம் வைச்சுக்கோ

 

 

“என் மேல நீ கோபப்படலாம் அதுக்கு உனக்கு முழு உரிமை இருக்கு. ஆனா எதுவா இருந்தாலும் என்ன பேசணும்ன்னாலும் யோசி. யோசிச்சு பேசு ஒரு வாரம் ஆனா கூட பரவாயில்லை

 

 

“உன்னோட எண்ணம் சரின்னு அப்பாவும் உனக்கு தோணிச்சின்னா நீ முடிவெடு. அவசரப்பட்டு எப்பவும் கோபப்படாதே எந்த முடிவும் எடுக்காதே என்று சொன்னவன் முகத்தில் வெகு சீரிய சிந்தனை ஓடியதை உணர முடிந்தது.

 

 

ஆனால் இவர் ஏன் இப்படி சொல்கிறார் என்று மனோவிற்கு தோன்றினாலும் எதுவாக இருந்தாலும் நம் நல்லதிற்கு தான் என்பதை அந்த கணம் மட்டுமே அவள் உணர்ந்தாள். கணவனவன் சொன்னதை முழுதாய் மூளைக்கு செலுத்தியிருக்கலாம்!!

 

 

“ரதிம்மா கிளம்பலாமா ரொம்ப நேரம் பேசிட்டோம் என்றான் அவன். மனோபாரதியோ அவன் மீது இன்னமும் சாய்ந்திருந்தவள் எழவேயில்லை.

 

 

“என்னாச்சுடா மறுபடியுமா!!

 

 

“இல்லைங்க அம்மா அப்பா ஞாபகம்

 

 

“அதான் நான் உன் கூட இருக்கேன்ல. அப்புறம் உங்கப்பா இங்க தானே இருக்கார் அப்புறம் என்ன கவலை உனக்கு என்று அவன் சொல்லவும் படக்கென்று நிமிர்ந்து அவனை பார்த்தாள்.

 

 

“இதோ தூங்குறார் பாரு உங்கப்பா. நமக்கு உங்கப்பா தான் வந்து பிறந்திருக்கார்டா ரதி. உங்கம்மாவும் இன்னும் கொஞ்ச நாள்ல வந்து பிறந்திடுவாங்க

 

 

“ஆனா அதுக்கு நீ தான் சரியா ஒத்துழைப்பு கொடுக்கணும் எனக்கு என்றவன் கண்சிமிட்ட “உங்களை… எப்போ பார்த்தாலும் இதே நினைப்பு தான் உங்களுக்கு என்று சொல்லி அவன் தோளில் இடித்தாள்.

 

 

“அடிப்பாவி என் பொண்டாட்டி அம்மா அப்பா ஞாபகமா இருக்காளே அவளுக்கு உதவி பண்ணுவோமேன்னு நான் நினைச்சது ஒரு குத்தமா உனக்கு

 

 

“ரதி… ரதிம்மா… நாம நாளைக்கு ஊருக்கு கிளம்புவோமா!! இன்னைக்கு இங்க இருக்கலாம் என்றவனை ஆச்சரியமாய் பார்த்தாள். “எதுக்குடி இப்படி கண்ணை விரிச்சு பார்க்குற!! பதறுதுல எனக்கு!! என்றான்.

 

 

“நான் நினைச்சேன் நீங்க சொல்லிட்டீங்க அதான் ஒரு ஆர்வத்துல உங்களை பார்த்திட்டேன். ஆமா நீங்க ஊருக்கு கிளம்பணும் சொன்னீங்க, பரவாயில்லையா!! எங்களோட இன்னும் ஒரு பத்து நாள் இருப்பீங்களா!! என்றாள் ஆசையாகவும் ஏக்கமாகவும்.

 

 

“பார்த்தியா!! பார்த்தியா!! இதானே வேணாங்கறது.  இன்னைக்கு ஒரு நாள் மட்டும் தான் அதுவும் நீ அம்மா வேணும்ன்னு கேட்டதால தான் என்று சொல்லி அவளிடம் தலையணை அடிகள் வாங்கிக் கொண்டான்.

 

 

“ஏங்க நான் அப்போவே கேட்கணும்ன்னு நினைச்சேன். உங்க போன்ல ஒரு பாட்டு வந்திச்சே அது என்ன பாட்டு. ரொம்ப நல்லா இருந்துச்சு

 

 

“ஹ்ம்ம் அந்த பாட்டா அது சட்டென நனைந்தது நெஞ்சம் பாட்டு கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில வருமே

 

 

“என்னை ஏமாத்துறீங்க தெரியலைன்னா தெரியலைன்னு சொல்லுங்க நான் அந்த படம் எத்தனை முறை பார்த்திருக்கேன் இந்த பாட்டு கேட்டதே இல்லையே

 

 

“அப்போ நீ படமே ஒழுங்கா பார்க்கலை. அதுல மாதவன் சிம்ரன்கிட்ட நாம கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்பார்ல அப்போ அவரும் சிம்ரனும் கட்டி பிடிச்சுக்குவாங்கல அப்போ வர்ற பாட்டு அது

 

 

“உன்னோட ஞாபகம் வரும் நைட்ல, பகல்லயும் வரும் எதுக்கு மறுபடியும் ஐஸ் ஓபன் பண்ணுற, சொல்றதை முழுசா கேளு. நான் நெறைய ரொமாண்டிக் சாங் எல்லாம் போன்ல ஏத்தி வைச்சிருக்கேன்

 

 

“அதெல்லாம் தான் தினமும் ஒரு ரிங்டோனா மாறி ஒரு ஒரு அழைப்புக்கும் உன்னை ஞாபகப்படுத்தும். உனக்குன்னு தனியாவும் ஒரு டோன் வைச்சிருக்கேன்

 

 

“பார்றா அவ்வளோ ரொமாண்டிக் ஆசாமியா நீங்க பார்த்தா தெரியலையே!!

 

 

“பார்த்தா எல்லாம் தெரியாதுடி என் செல்ல ரதி. எல்லாத்தையும் செயல்ல காட்டுறேன் அப்போ தான் தெரியும் என்றவன் அவள் இதழணைத்து அவன் அவளுக்கு புரிய வைத்துக் கொண்டிருந்தான்….

 

 

Advertisement