Advertisement

அத்தியாயம் – 4

 

 

அலுவலகம் விட்டு வெளியில் வந்தவன் தொடர்ந்த கைபேசியின் அழைப்பினால் அதை எடுத்து காதில் வைத்தான். “எனிதிங் அர்ஜன்ட் என்றான்.

 

 

எதிர்முனை என்ன சொன்னதோ “எனக்கு கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு முடிச்சுட்டு ஈவினிங் கூப்பிடுறேன் என்று சொல்லி போனை வைத்தவன் மீண்டும் அலுவலகத்தை திரும்பி ஒரு பார்வை பார்த்துவிட்டு அவன் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

 

 

வெளியில் சென்ற பிரணவிற்கு அதிக வேலை இருந்ததால் காலையில் பார்த்தவளை பற்றிய எண்ணத்தை தற்சமயம் மறந்திருந்தான். அவன் திரட்டியிருந்த தகவல்களை எல்லாம் ஒன்றுபடுத்திக் கொண்டு மீண்டும் அலுவலகம் வந்த போது தான் அவளை பற்றிய ஞாபகம் வந்தது.

 

 

‘இவ இங்க எதுக்கு வந்திருப்பா!! நான் இங்க இருக்கறதை வீட்டுக்கு சொல்லிருவாளோ!! என்று எண்ணியவனுக்கு வீட்டை பற்றிய பயமெல்லாம் இல்லை வேறு எண்ணம் வந்து அவனை கவலைக்குள்ளாக்கியது.

 

 

ஒரு பெருமூச்சுடன் அவன் அலுவலகம் நுழைய ராகவ் அவன் அறையில் வெகு தீவிரமாக யாருடனோ பேசிக் கொண்டிருந்தான். ‘அப்பாடா இப்போமாச்சும் இவன் பிசியா இருக்கானே…

 

 

‘என்னைய மட்டும் பார்த்தா இந்நேரம் வந்து மொக்கையை தொடங்கியிருப்பான்… என்று அவன் நினைத்து முடிக்கவில்லை அவன் கண்ணெதிரே வந்து நின்றிருந்தான் ராகவ்.

 

 

“என்னடா இப்போ தான் ஆபீஸ் வர்றியா!!” என்ற ராகவை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்து வைத்தான் பிரணவ்.

 

 

“சரி சரி முறைக்காத, கேள்வி கேட்டது தப்பு தான். டேய் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்ல தான் அவசரமா ஓடி வந்தேன் என்றான்.

பிரணவ் அவன் என்ன பேச போகிறான் என்பதை முன்பே அறிந்தவன் போல் இருந்தாலும் ராகவை என்ன என்பது போல் பார்க்க தவறவில்லை.

 

 

“ஏன்டா வாயை திறந்து என்னன்னு கேட்டா முத்தா உதிர்ந்து போகும் என்று நொடித்த ராகவ் அடுத்து அவன் சொல்ல வந்ததை சொல்ல ஆரம்பித்தான்.

 

 

“டேய் இன்னைக்கு காலையில பார்த்தோமே அந்த பொண்ணு தானே நீ போட்ட அந்த முழுமதி பாட்டுக்கு சொந்தக்காரி என்றவனை இப்போது பிரணவ் நன்றாக முறைத்தான்.

 

 

“ஹை… ஹைய்… நீ சொல்லலைன்னா எனக்கு தெரியாதுன்னு நினைச்சியாடா!! அந்த பொண்ணுக்கிட்ட விசாரிச்சுட்டேன் அந்த பொண்ணு பேரு இந்துமதி

 

 

“இந்துமதி!! முழுமதி!! நெருங்கி வந்துட்டேன்ல!! என்றவன் பிரணவின் தோளில் குத்தினான்.

 

 

“எதை வைச்சு இந்த பொண்ணு தான் அந்த பொண்ணுன்னு நீ முடிவு பண்ணே!! என்றான் பல்லைக்கடித்தவாறே.

 

 

“அதுக்கெல்லாம் எட்டாவது அறிவு வேணும்டா மச்சி!!

 

 

“ஏன்டா மனுஷனுக்கு இருக்கறது ஆறு அறிவு தானே!!

 

 

“அதெல்லாம் எவனோ சொன்னது… எனக்கு அதுக்கும் மேல அறிவிருக்கே!! சூர்யா ஏற்கனவே ஏழாவது அறிவுன்னு சொல்லிட்டாரு அதான் எனக்கு இருக்கறது எட்டாவது அறிவுன்னு சொல்லிக்கறேன் மச்சி

 

 

“டேய் போதும்டா ரொம்ப கடிக்காதே!! நானே செம கடுப்புல வந்திருக்கேன்… சொல்ல வந்ததை சட்டுன்னு சொல்லு என்றான் பிரணவ்.

 

“ஆமா நாம என்ன பேசிட்டு இருந்தோம் என்ற ராகவ் என்ன செய்ய என்பது போல் பார்த்தான் அவன் நண்பன்.

 

 

“சரி சரி முறைக்காத ஞாபகம் வந்திருச்சு. எப்படி கண்டுபிடிச்சன்னு தானே கேட்ட!! அதெப்படி கண்டுபிடிச்சேன்னா… காலையில ஹீரோ கதைவை இந்த பக்கம் இழுக்கறார் ஹீரோயின் அந்த பக்கம் இழுக்கறாங்க…

 

 

“என்னை ஏன்டா முறைக்கிற சினிமாவுல எல்லாம் இப்படி தான்டா வரும். அதை வைச்சு தான் கண்டுபிடிச்சேன் என்று அவன் சொன்னதை கேட்டு கடுப்பாகிய பிரணவ் அங்கிருந்து நகர ஆரம்பித்தான்.

 

 

அப்போது எதிரில் இந்துமதி வந்தாள். “ஹலோ எப்படியிருக்க?? என்றாள்.

 

 

“மரியாதையா பேச தெரியாதா உனக்கு?? என்று முறைத்தான் அவன்.

 

 

“ஹ்ம்ம் பார்றா சார்க்கு மரியாதை வேற கொடுக்கணுமா!! நான் உன்கிட்ட எப்பவும் இப்படி தானே பேசுவேன்

 

 

“இது ஆபீஸ் ஒழுங்கா பேசிப் பழகு என்றான் பிரணவ். ராகவ் இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான்.

 

 

“சரிங்க சார் இனிமே ஒழுங்கா பேசறேன். அப்புறம் நீ… சாரி நீங்க இங்க இருப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கவேயில்லை. எங்க போய்ட்டா அவ!! வீட்டுல இருக்காளா!!

 

 

“அவ இவ-ன்னு பேசினா பல்லை பேத்துருவேன் இந்து

 

 

“ஓகே சார் அவங்க எங்க இருக்காங்க வீட்டில இருக்காங்களா!! இல்லை உங்களை விட்டுட்டு போயிட்டாங்களா!! என்று அவளும் விடாமல் அவனை சீண்டினாள்.

 

 

“உனக்கென்ன பிரச்சனை இப்போ!! வழி விடு எனக்கு நெறைய வேலையிருக்கு உன்கூட வெட்டியா எல்லாம் பேச எனக்கு நேரமில்லை என்று நகர்ந்தவனின் கையை பிடித்தாள்.

 

 

“எங்க போய்டுவ தினமும் நீ என்னை பார்த்து தான் ஆகணும். மத்ததுக்கு பதில் சொல்லலைன்னா பரவாயில்லை. நானே கண்டுபிடிச்சுக்கறேன். இதுக்கு மட்டும் பதில் சொல்லிட்டு போ. நீ எப்போ இங்க வந்து ஜாயின் பண்ணே

 

 

“நீ இங்க வேலை பார்க்கறது வீட்டுக்கு தெரியுமா!! அந்த வேலையை நீ ஏன் விட்டே??

 

 

“வீட்டுக்கு நான் ஏன் சொல்லணும்?? நான் எங்க வேணா வேலை பார்ப்பேன் அதை பத்தி உங்களுக்கு சொல்லணும்ன்னு அவசியமில்லை. நான் வேணாம்ன்னு நினைக்கறவங்களுக்கு என்னை பத்தி எதுவும் தெரிய வேணாம் என்று அழுத்திச் சொன்னான்.

 

 

“ஒரு வேளை நான் சொல்லிட்டா… என்று இழுத்தாள் இந்துமதி.

 

 

“உனக்கு ஒரு விஷயம் மறந்திருந்தா ஞாபகப்படுத்தறேன் நினைவுல வைச்சுக்கோ. நாம பாரக்கற வேலை பத்தி நாம எதுவும் வெளிய காமிச்சுக்க கூடாது அது உனக்கும் பொருந்தும்ன்னு நினைக்கிறேன்

 

 

“அதுக்கும் மேல நீ சொல்லி தான் ஆவேன்னா சொல்லிக்கோ அதை பத்தி எனக்கு கவலையில்லைஎன்று தோளை குலுக்கிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் அவன்.

 

 

“பரவாயில்லை தேறிட்டடா!! என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டு அவள் நகரப் போக ராகவ் அவளை பிடித்துக் கொண்டான்.

 

 

“ஏங்க உங்களுக்கு ஏற்கனவே பிரணவை தெரியுமா!! எப்படிங்க பழக்கம்!! என்றான்.

 

 

“நீங்க ரம்பம் ராகவ் தானே!! என்று அவள் கேட்கவும் அவன் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே!!

 

 

“யாருங்க அப்படி உங்ககிட்ட சொன்னாங்க!! என்றவனின் முகம் சுருங்கியிருந்தது.

 

 

“இதோ இப்போ போனாரே அவர் தான் உங்களை பத்தி சொல்லியிருக்கார். ஆமா உங்களுக்கு இங்க எப்படி வேலை கொடுத்தாங்க!!

 

 

“வேலை எல்லாம் ஒழுங்கா செய்யறீங்களா!! எதாச்சும் டவுட் இருந்தா என்னை கேளுங்க!! என்று அவனை நக்கலடித்துவிட்டு நகர்ந்து சென்றுவிட்டாள் அவள்.

 

 

‘அடப்பாவிகளா எப்பவும் நான் தான் பேசி பேசி எல்லார் வாயும் அடைப்பேன். இப்போ இந்த பொண்ணு பேசி என் வாயை அடைச்சிட்டு போயிருச்சே என்று எண்ணியவன் நேராக சென்றது பிரணவிடம்.

 

 

பிரணவ் நிமிர்ந்து பார்க்காமலே அவனுக்கு தெரிந்தது ராகவ் வந்திருக்கிறான் என்று. “என்னடா!! என்றவனின் பார்வை இப்போது மடிகணினியின் மீது தான் இருந்தது.

 

 

“என்னை கொஞ்சம் பாரு!! என்ற ராகவின் குரல் சீரியசாக இருந்ததை உணர்ந்தவன் நிமிர்ந்து பார்த்தான்.

 

 

நண்பனின் கேள்வி உணர்ந்தவனாய் அவனை பார்த்தவன் “யார் அந்த பொண்ணுன்னு உனக்கு தெரியணும் அவ்வளவு தானே!! அவள் தான் மதி!! என்றான் நிதானமாய்.

 

 

“உங்க… மாமாவோட பொண்ணு உனக்கு கூட பேசியிருந்தாங்களே!!

 

 

“ஹ்ம்ம் அவளே தான்!!

 

 

“அவ எப்படிடா இங்க??

“எனக்கும் தெரியலை ராகவ். இப்போ அவகிட்ட போய் எதுவும் கேட்க முடியாது.என்ன கேட்டாலும் ஏடாகூடமா பேசுவா!! அவளே வருவா அப்போ கேட்டுக்கறேன் அவகிட்ட!! என்றான்.

 

 

“அப்புறம் ராகவ் அவ செம கேடிடா!! என்னை பத்தி உன்கிட்ட விசாரிப்பா!! நான் லவ் பண்ணுற பொண்ணு யாரு!! எங்க இருக்கா என்ன விவரம் ஏது விவரம்ன்னு உன்னை தொலைச்சு எடுப்பா!!

 

 

“அவ என்ன கேட்டாலும் எனக்கு தெரியாது. பிரணவ் கிட்ட கேட்டுக்கோன்னு சொல்லிரு சரியா என்றவன் “ஓகேடா பை நான் கிளம்புறேன் என்று விட்டு பையை தூக்கிக்கொண்டு கிளம்பி சென்றே விட்டான்.

 

 

‘அடப்பாவி நிஜமாவே இவன் லவ் பண்ணுற பொண்ணை பத்தி எனக்கு இப்போ வரைக்கும் தெரியவே தெரியாதே. இதுல அடிச்சு கேட்டாலும் சொல்லாதங்கற ரேஞ்சுக்கு பேசிட்டு போறான். இவனை என்ன செய்ய

 

 

‘நம்ம இன்ப்ளுயன்ஸ் யூஸ் பண்ணி கண்டுப்பிடிக்க அஞ்சு நிமிஷம் ஆகாது. வேணாம்ன்னு விட்டு வைச்சா ஓவரா பண்ணுறானே!! வீட்டுக்கு போய் கிரண்கிட்ட பேசுவோம் என்று எண்ணிக்கொண்டு ராகவும் வீட்டிற்கு கிளம்பினான்.

 

 

‘நாளைக்கு இவன் என்ன பாட்டு வைப்பான் என்று யோசனையும் அவனுக்கு வராமலில்லை நமக்கும் தான்.

 

____________________

 

 

வெளியில் எல்லாருக்கும் தைரியமாக பதில் கொடுத்திருந்தாலும் உள்ளுக்குள் சற்றே நொறுங்கித்தான் போயிருந்தாள் மனோ. தன்னை பற்றி தெரியாத மூன்றாம் நபர் பேசும் பேச்செல்லாம் குப்பையாய் நினைத்து ஒதுக்கி தள்ளுப்பவள் தான் அவள்.

 

 

அதனாலேயே அப்பெண்மணிக்கு தக்க பதிலடியும் கொடுத்து வந்தாள். ஆனால் இந்த பேச்செல்லாம் எதனால் வந்தது. அவன் என்னுடன் இல்லாததினால் தானே என்று ஆயாசமும் அவளுக்கு எழுந்தது.

மனித மனம் விசித்திரமானது. அதை பலமாக்குவதும் பலவீனமாக்குவதும் எண்ணங்களும் அதனை ஒட்டிய சிந்தனைகளுமே. வெளியில் தன்னை தைரியமாய் காட்டிக் கொண்டு தெளிவாய் இருப்பவள் உள்ளுக்குள் சற்றே உடைந்து தான் போனாள்.

 

 

அவள் உடைந்தது அவர்களின் பேச்சால் அல்ல. தனக்கென்று யாருமில்லையே என்ற சுயபச்சாதாபத்தினால். அதுவே அவளின் பலத்தை சற்று பலவீனப்படுத்தியது.

 

 

பெற்றோரும் இல்லை உற்றார் உறவினர்களுக்கு தன்னை பற்றிய கவலையில்லை. என்னை பற்றி கவலைப்படுபவனுக்கு என்னருகில் இருக்க முடியாத சூழல் எனக்கு மட்டும் ஏனிப்படி என்று உள்ளுக்குள் எழுந்த கேள்வியை மீறி கேவல் எழுந்தது.

 

 

அருகில் அபராஜித் “ம்மா… வா… ம்மா… வா… என்று குரல் கொடுக்க தன்னுணர்வுக்கு மீண்டாள் மனோ.

 

 

தனக்கென்று யாருமில்லை என்று எண்ணி எண்ணி ஏன் இப்படி ஆகிப் போகிறோம் என்று அவளுக்கு அவள் மேலேயே கோபம் எழுந்தது. அவளுக்கென்று இங்கு ஒரு ஜீவன் தன்னுடனே இருக்கிறது என்பதை ஏன் மறக்கிறோம் என்று எண்ணியவளாக குழந்தை தூக்கி அணைத்துக் கொண்டாள்.

 

 

தோள்பையில் இருந்து அவள் கைபேசியின் அழைப்பு மணி காதில் விழ அவசரமாய் பையை திறந்து போனை எடுத்தவளின் முகம் சற்றே மலர்ந்தது.

 

 

அவன் எப்போதும் அப்படி தான் அவள் மனம் லேசாக சுணக்கம் கண்டாலும் கண்டுவிடுவான். இப்போதும் அவள் மன சுணக்கம் நேரில் கண்டவன் போல் இதோ அழைத்துவிட்டான்.

 

 

பொத்தானை அழுத்தி போனை காதில் வைத்தாள். “ஹலோ!! எப்படி இருக்கீங்க!! காலையில உங்களுக்கு தொடர்ந்து போட்டேன் போன் எடுக்கவேயில்லை!!

 

 

“ஓ!! சாரி!! தெரியும் நீங்க வேலையா இருப்பீங்கன்னு… தொல்லை பண்ணிட்டனா!! என்று அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே அவள் தோளில் இருந்த அபராஜித் மனோவை எட்டி பார்த்தான்.

 

 

‘என்ன கண்ணா!! என்பதாய் குழந்தைக்கு கண் சிமிட்டி வாயசைத்தவள் “உங்க பிள்ளைக்கு நீங்க தான் பேசறீங்கன்னு தெரிஞ்சுட்டு போல என்னோட முகத்தையே பார்த்திட்டு இருக்கான்

 

 

“போதும் போதும்… இருங்க குழந்தை காதுல போன் வைக்குறேன் பேசுங்க… என்ன ஸ்கைப்ல வரவா!! சரி ஆன் பண்ணுறேன் என்றவள் போனை வைத்துவிட்டு மடிகணினியை எடுத்து வந்தவள் அதை பூட் செய்து ஸ்கைப் ஆன் செய்தாள்.

 

 

எதிரில் இருந்த நிழல் காட்டும் திரையில் அவளை பார்த்து கண் சிமிட்டியவனை பார்த்து அவள் அகமும் முகமும் மலர்ந்தது.

 

 

“என்ன டியர் உன் கன்னத்துல என்ன?? என்றான்.

 

 

“என்ன?? என்ன?? என்று கன்னத்தை தடவி பார்த்தாள் மனோ.

 

 

“சிவப்பா இருக்கு என்றான்.

 

 

“என்ன சிவப்பா இருக்கு?? இருங்க கண்ணாடில பார்த்திட்டு வர்றேன் என்று எழுந்தவளை “ஹேய் பொண்டாட்டி இருடி. என்னை பார்த்ததும் வெட்கப்பட்டியா உன் கன்னம் சிவந்து போச்சு

 

 

“அதை சொல்ல வந்தா மக்கு பொண்டாட்டி எழுந்து கண்ணாடி பார்க்க போறா பாரு என்று சிரித்தான்.

 

 

“இதுக்கொன்னும் குறைச்சல் இல்லை

 

 

“வேற என்ன குறையா இருக்கு டார்லிங் உனக்கு??

 

 

“போதும் சும்மா சும்மா டியர் டார்லிங்ன்னு கொஞ்ச வேண்டாம் என்று லேசாய் முகம் திருப்பினாள் மனோ.

 

 

“என் பொண்டாட்டி நான் எப்படி வேணா கூப்பிடுவேன். நீ சொல்றதெல்லாம் கேட்க முடியாது

 

 

“நான் சொல்றதை நீங்க கேட்டுட்டாலும்… என்று நொடித்தாள் அவன் மனைவி.

 

 

“குழந்தை எங்க போய்ட்டான்!! தூக்கிட்டு வாயேன் என்றான்.

 

 

மனோ அப்போது தான் சுற்றுமுற்றும் திரும்பி பார்த்தாள். அவள் மடிமீதிருந்த குழந்தையை வாக்கரில் போட்டுவிட்டு மடிக்கணினியை எடுக்கச் சென்றது ஞாபகம் வர சமையலறையில் உருட்டிக் கொண்டிருந்தவனை தூக்கி வந்தாள்.

 

 

“அஜி அப்பா பாருங்க!! செல்லக்குட்டி அப்பாடா!! என்று சொல்லிக்கொண்டே அவன் மடி மீது அமர்த்திக்கொண்டு அவனை பார்க்க அவள் கணவனின் முகம் ஒரு கணம் மலர்ந்து பின் வாடியது.

 

 

“என்னாச்சுங்க!! குழந்தையை பார்க்கணும்ன்னு சொல்லிட்டு இப்படி ஒண்ணும் சொல்லாம உம்முன்னு இருக்கீங்க

 

 

“ஒண்ணுமில்லைடா உங்களை ரொம்ப மிஸ் பண்ணுறேன். அஜி கூட இருக்க முடியலைன்னு இருக்கு என்றான் வருத்தமாய்.

 

 

“அப்போ என்னை நீங்க மிஸ் பண்ணலை என்றாள்

 

 

“உன்னை மிஸ் பண்ணுறதும் அவனை மிஸ் பண்ணுறதும் ஒண்ணா டியர்… குழந்தையை தூக்கி கொஞ்ச முடியலை கிஸ் பண்ண முடியலை… அவனை கூட்டிகிட்டு ஊரே சுத்தி வர முடியலை!! என்று சொல்லிக்கொண்டே போனான்.

 

 

“அப்போ என்னை கொ… என்று ஆரம்பித்தவள் நிறுத்திக்கொண்டாள்.

“சொல்லு டியர் ஏதோ சொல்ல வந்த… என்று நமுட்டு சிரிப்பு சிரித்தான் திரையில் சிரித்தவன்.

 

 

“ஹ்ம்ம் ஒண்ணுமில்லை உங்களுக்கு சேட்டை கூடி போச்சு என்றாள்.

 

 

அவனும் திரையில் தெரிந்த தன் மகனை கொஞ்சிக் கொண்டவன் தன் கைபேசியை எடுத்து போட்டோவும் எடுத்துக்கொண்டான் திரையில் தெரிந்தவர்களை.

 

 

பேசி முடிக்கும் தருவாயில் நினைவு வந்தவளாக மனோ குழந்தையின் பிறந்த நாள் பற்றி அவனிடம் கூறினாள்.

 

 

“என்னால வர முடியுமான்னு தெரியலைடா நீ வேணா பிரகாஷ் அண்ணாவையும் மோனா அண்ணியும் கூட்டிட்டு போய் மொட்டை எடுத்திரு என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே மனோவிற்கு கோபம் வந்துவிட கணினியைமூடி வைத்தாள்.

 

 

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவள் கைபேசி அழைத்தது. பார்த்துக் கொண்டே இருந்தாளே தவிர அதை எடுக்கவேயில்லை. மனோவிற்கு பொறுமை எந்த அளவிற்கு இருக்கிறதோ அதைவிட அதிக கோப குணமும் அவளுக்கு உண்டு.

 

 

தான் அதிகமாய் நேசிக்கும் சிலரிடம் மட்டுமே அவள் குணம் வெளிப்படும். தன் உணர்வுகளை அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாதவள் தான் மிக நேசிக்கும் தன் கணவனிடம் மொத்த உணர்வுகளையும் கொட்டுவாள்.

 

 

அவள் கணவனுக்கு அவளைப் பற்றி தெரியும் என்பதால் தான் அவளை சமாதானப்படுத்த அழைப்பு மேல் அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தான். மனோவின் கோபம் இன்னும் சற்று நேரத்தில் சென்று விடும் என்பதை அறிந்திருந்தாலும் அவனும் அவள் அழைப்பை எடுக்கும் வரை விடாது முயற்சி செய்தான்.

 

 

மனோவிற்கே தான் செய்தது அதிகப்படி என்ற எண்ணம் தோன்றி அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.

“ஏன்டி இப்படி புரிஞ்சுக்காம பண்ற!! நான் இங்க ஒரு முக்கியமான வேலையில இருக்கேன் அதெல்லாம் பாதியிலேயே இருக்கும்மா. புரிஞ்சுக்கோயேன் ப்ளீஸ்

 

 

“நான் வராம இருக்கணும்ன்னு நினைப்பேனா, எனக்கு மட்டும் கஷ்டமா இருக்காதா!! உனக்காச்சும் நம்ம குழந்தை துணையா இருக்கான்!! எனக்கு இங்க யாரு இருக்கா!!

 

 

“உங்க ரெண்டு பேரையும் நினைச்சுட்டு இருக்கறது தவிர்த்து எனக்கு வேற என்ன சந்தோசம் இருக்கும் சொல்லு. இதுல நீ கோவிச்சுக்கிட்டா நான் என்னம்மா பண்ணுவேன் என்றான் மிகப் பொறுமையாய்.

 

 

அவன் அதிகபட்ச பொறுமை காட்டுவது அவளிடத்தில் மட்டுமே. அவள் அதிகபட்ச கோபத்தை வெளிப்படுத்துவது அவனிடம் மட்டுமே.

 

 

ஒருவரை ஒருவர் புரிந்ததால் அவள் கோபத்தின் போது அவன் பொறுமையும் அவன் பொறுமை பார்த்து அவள் நிதானத்தையும் கடைப்பிடிப்பர்.

 

 

“மன்னிச்சிருங்க நான்… நீங்க வரமுடியலைங்கற ஆதங்கத்துல கோபப்பட்டுடேன். குழந்தை உங்களை மிஸ் பண்ணுவானோ இல்லையோ நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன் என்று சொல்லும் போது அவள் குரல் உள்ளே சென்றுவிட்டது.

 

 

“பீல் பண்ணுறியா!! ப்ளீஸ் அழுதிட மட்டும் செஞ்சிடாதே!! அப்புறம் எனக்கு வேலையும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்ன்னு நான் பாட்டுக்கு கிளம்பி வந்திடுவேன்

 

 

“ஹ்ம்ம் ஆசை தோசை அப்பள வடை… சார்க்கு ரொம்ப தான் நினைப்பு அழுவாங்களாம்ல… உங்களுக்காக நான் அழுவோமாக்கும் என்று பேச்சை மாற்றி அவனை வம்பிகிழுத்தாள்.

 

 

“இப்போ உருகினது யாரு ஐ மிஸ் யூன்னு சொன்னது யாராம்

 

 

“யார் அது எனக்கு தெரியாதே!!

 

 

“அம்மணிக்கு எல்லாம் மறந்திருச்சு போல!! நான் பழைய மாதிரி இருந்திருக்கணும் அப்போ வைச்சிருப்பேன் உனக்கு கச்சேரி

 

 

“எனக்கும் அப்போ தான் உங்களை ரொம்ப பிடிச்சுது. இப்போ ரொம்ப கூஜா தூங்குறீங்க மிஸ்டர் நீங்க… இருந்தாலும் உங்க பொண்டாட்டிக்கு நீங்க இவ்வளவு செல்லம் கொடுக்கக் கூடாது

 

 

“அதை தான் நினைச்சு நானும் பீல் பண்ணுறேன். தப்பு பண்ணிட்டமோ!! அப்போவே அவன் சொன்னான் வேணாம்டா இவ உனக்கு வேணாம்டான்னு நான் எங்க கேட்டேன் என்று அவன் வடிவேல் டயலாக் எடுத்துவிட்டான்.

 

 

“போதும் போதும் விளையாட்டு எல்லாம். அஜிக்கு சாப்பாடு கொடுக்கற நேரமாச்சு. நீங்களும் போய் சாப்பிடுங்க அப்புறம் பேசுவோம். குட்நைட் மிஸ் யூ ய லாட் என்றுவிட்டு போனை வைத்தாள் மனோ…

Advertisement