Uyirin ularal - episode 8

Advertisement

vishwapoomi

Writers Team
Tamil Novel Writer
உயிரின் உளறல் - அத்தியாயம் 8


"என்ன நடக்கு இந்த வீட்டில், அவ என்னமோ கம்பெனி என்கிறா, ஓனர், புதுக்காரு என்று என்னென்னமோ சொல்றா, உங்களைதான் கேட்கிறேன் காது கேக்குதா இல்ல அதுக்கு ஏதாச்சும் வைத்தியம் பார்க்கணுமா ?" என்று ஆடி கொண்டிருந்தாள் பானு தன் கணவனிடம்.

" ஏன் இப்படி கத்துற, எல்லாம் கேக்குது, எனக்கு என்ன தெரியும் ? நானும் உன் போலத்தான் அவள் சொல்லித்தான் எனக்கே தெரியும், அதான் ஊரை சுற்றி ஸ்பை வைத்திருக்கிறியே, குறிப்பா உன் இரண்டு அக்காக்கள் அதான் என் அண்ணன்கள் மனைவிமார்கள் அவர்களிடம் கேட்க வேண்டியதுதானே " என்றான் அவன் கடுப்பில்.

" அதை நீங்க சொல்ல தேவையில்லை நானே கேட்டுப்பேன் " என்று முகத்தை திருப்பிக்கொண்டு போனாள் பானு.

அந்த ஷாப்பிங் மாலில் இருந்த டீ ஷாப்பில் ஒரு டேபிளில் கற்பகம்மாளின் குடும்ப மருமகள்கள் கூடி இருந்தனர்.

" எனக்கு எதுவுமே புரியல, அடங்கி வீட்டோடு இருப்பாள் என்று பார்த்தா இப்போ அவ்வளவு பெரிய காரை அசால்ட்டாக ஓட்டிக்கிட்டு சொந்த ஆபிஸ்க்கு போறா. அவளுக்கு கீழே 10 பேருக்கு மேல் வேலை வேறு செய்கிறார்கள்" என்று புலம்பினாள் பானு.

" சும்மா புலம்பாதே பானு, தும்பை விட்டுவிட்டு இப்போ வாலை பிடிக்க நினைத்தால் நடக்குமா ? எவ்வளவு பக்காவா பிளான் போட்டு உன்னை அந்த வீட்டிலே இருந்து காய் நகர்த்த சொன்னோம், ஆனால் நீ கோட்டை விட்டுவிட்டு வந்து நிற்கிறாய் " என்றாள் அம்பிகா.

"சும்மா என்னை குறை சொல்லாதீர்கள், அந்த ரிஷி பய வரும்வரை எல்லாம் சரியாகத்தான் போயிட்டிருந்தது. பாதி பைத்தியமாகவே மாறிட்டா, பேசி பேசியே நான் அவளை மாற்றினேன். என் புருஷன் வாயை திறக்காத அளவுக்கு அவரையும் மயக்கி வைத்திருந்தேன். அவன் வந்தான்.... முடிந்தாள் என்று நினைத்த அபியை தூக்கி நிறுத்திவிட்டான். சரி அவனை ஆப் பண்ணலாம் என்று என் சொந்த தங்கை என்றும் பாராமல் ப்ரியாவை அவனிடம் பழகிவிட்டேன் அதுக்கும் பயனில்லை " என்றாள் பானு.

" நான் நினைக்கிறேன் உன் தங்கைக்கு உன் சாமர்த்தியம் இல்லை போல, அதான் மயக்கும் வித்தை, நீ சொல்லி கொடுக்கவேண்டியதுதானே " என்றாள் வித்யா.

" அவள் என் தங்கை " என்றாள் பானு கோபத்தில்.

" ஏன் அவளிடம் கோபப்படுகிறாய், உன் தங்கையை தியாகம் செய்கிற மாதிரி பேசுகிறாய்? அந்த ரிஷி சாதாரணமாக இருந்தா நீயும், உன் தங்கையும் அவனை தீண்டுவீர்களா ? உண்மையை சொல்லணும் என்றால் அந்த வீட்டு நான்கு பிள்ளைகளிலும் அதிகம் சாமர்த்தியம், புத்தி, ஏன் அம்சமானவன் அவன்தான். அவன் சொந்தமாக ஆரம்பித்த கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி சக்கை போடு போடுது. அவனுக்கு பெண் கொடுக்க அவன் அவன் பறந்துகொண்டிருக்கிறான். நீ என்னவென்றால் என் தங்கை தங்கை என்று அவனுக்கு வாழ்க்கை கொடுப்பது போல பேசுகிறாய். அப்படி பட்டவனை மடக்க உன் தங்கை நெளிவு சுளிவுடன் நடந்தால் ஒன்றும் தப்பு இல்லை, நடக்க அவள் தயாராகத்தான் இருப்பாள் ஆனால் அவனிடம் அது பலிக்காது, சரி விடு, நாங்கள் அந்த வீட்டைவிட்டு வெளியே இருக்கோம் எங்களால் அந்த அபியை ஒன்றும் செய்யமுடியவில்லை, நீயாவது பார்த்துக்கொள்வாய் என்று பார்த்தோம், அதையும் விட்டுட்ட, இனி நானே பார்த்துக்கொள்கிறேன். ஒரு பெண்ணுக்கு ஆயிரம் வசதிகள் குவிந்து கிடந்தாலும் கல்யாணம், நல்ல வாழ்க்கை துணை ரொம்ப முக்கியம். அபிக்கு மற்றது எல்லாம் கிடைத்திருக்கலாம், அவள் படிப்பு அவளின் வாழ்க்கையை மாற்றலாம், ஆனால் நான் அவளுடைய தலையெழுத்தையே மாற்றி காட்டுகிறேன். நீ உன் தங்கைக்கும், அந்த ரிஷிக்கும் உடனே திருமணத்தை நடத்த பாரு. நாங்கள் அந்த வீட்டுக்கு வந்துபோனாலும் அங்கே வைத்து எதுவும் பேச முடியாது. இரண்டு நாள் கழித்து இதே இடத்தில் மீட் பண்ணுவோம், அதற்குள் அந்த அபியிடமே அவளுக்கு பணம் எங்கே இருந்து வந்தது என்று கேட்டுவை" என்று முடித்தாள் மூத்தவள் அம்பிகா.

அன்று மாலை ஆபிஸில் இருந்து திரும்பிவந்த அபியை ஹாலில் வைத்ததே நிறுத்தினாள் பானு.

" ம் அபி நீ இப்போ பெரிய ஆளா ஆயிட்ட, உன் அக்காவிடம் பேச கூட உனக்கு நேரம் இல்லை " என்றாள் சோகமாக.

" அப்படியெல்லாம் இல்லை அக்கா. கொஞ்சம் வேலை டயிட் " என்றாள் அபி.

" அபி எனக்கு ஒரே ஒரு குழப்பம்தான், இதுக்கெல்லாம் உனக்கு ஏது பணம். ரிஷியும் இப்போதுதான் கம்பெனி ஆரம்பித்தார், அடுத்தது உனக்கு உதவக்கூடிய ஒரே ஆள் நான்தான், ஆனால் நான் இப்போது இருக்கும் நிலையில் என்னால் எதுவும் செய்யமுடியாது, நான் செய்யவும் இல்லை, பின்னே உனக்கு இந்த பணம் ஏது ? அத்தை தந்தார்களா ? போன வாரம் என் கணவர் ஒரு இருபது லட்சம் கேட்டதற்கு இல்லை என்று கையை விரித்தார் அவர் " என்றாள் பானு.

அபிக்கு அவளை பார்க்க சிரிப்பா இருந்தது. நீங்க சொல்லுவது சரிதான், நான் நம் வீட்டில் யாரிடமும் பணம் வாங்கவில்லை, லோன் " என்று அவள் ஆரம்பிப்பதற்குள்

" லோனா, உனக்கா, உனக்கு யார் லோன் தருவார்கள் ?" என்றாள் நக்கலாக பானு.

" ஏன் தரமாட்டார்கள், நான் படித்த காலேஜின் செர்டிபிகேட்டை காட்டினாலே போதும் லோன் தாராளமாக தருவார்கள், கேரண்டி கையெழுத்து போடுவதற்கு சின்னத்தான் இருக்கிறார், ஆனால் நான் லோன் போடவில்லை, இதுக்கெல்லாம் பணம் என் நண்பர்கள் தந்தார்கள் " என்றாள் அபி. சற்று சத்தம் உயர்ந்தது.

" என்ன நண்பர்களா ? அது யாரம்மா உனக்கு லட்சகணக்கா கடன் தரும் நண்பர்கள்." என்றாள் பானு.

" இருக்கிறார்கள் அக்கா, என் நண்பர்கள் அனைவரும் மல்டிமில்லினியர்களின் வாரிசுகள். வட்டியில்லாத கடனாக தந்தார்கள், சின்னத்தான் மற்ற ஏற்பாட்டை செய்தார், இனி கடனை அடைக்கவேண்டும், வரட்டா எனக்கு ரொம்ப டயட்டா இருக்கு " என்று கூறிவிட்டு நில்லாமல் சென்றாள் அபிநேஹா.

**********

குளியல் அறையில் இருந்தாள் அபி. அப்போது விடாமல் அடிக்கும் அந்த போனை எரிச்சலுடன் வந்து எடுத்தாள்.

" அப்பப்பா ஒரு முறை அடித்து எடுக்கவில்லை என்றாள் பொறுமையில்லையா, யாரது " என்றாள் கோபமாக.

" ஹலோ " என்று சிரித்தது ஆணின் குரல்.

" ஓஒ நீங்கதானா, உங்களுக்கு இந்த நேரத்தில் எனக்கு போன் செய்வது தேவையா ? அப்புறம் வருங்கால மனைவியிடம் மாட்டிகிட்டு முழிக்கப்போறிங்க, நம்பர் புதுசா இருக்கு, யாரு நம்பர் ? எங்கே இருக்கிறீர்கள் சின்னத்தான் " என்று கேட்டாள் அபி.

" என் நம்பர்தான், எனக்கு ஒரு பெர்சனல் நம்பர் தேவைப்பட்டது, அதான் வாங்கினேன். உன்னிடம் மட்டும் பேச, நீ என் பேரில் சேவ் பண்ணாம வேற பெயரில் சேவ் பண்ணு சரியா " என்றான் ரிஷி.

" திருட்டு பயலே, என்று பண்ணவா ? ஏன் சின்னத்தான் உன் புத்தி இப்படி போகுது. சும்மாவே உன்னையும் என்னையும் கண்காணிக்க ஒரு கூட்டம் அலையுது, இதிலே எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று நீ வேற, முதலில் போனை வைத்துவிட்டு போய் உன் பிரியாவுடன் போய் டூயட் பாடு." என்றாள் கிண்டலாக.

" நீ ஏன் எப்பவும் அவளை பற்றியே பேசுற, நான் எவ்வளவு கஷ்டப்பட்டு நம்மை கண்காணிக்கும் குரூப்ஸ் கண்ணில் மண்ணை துவ, நம்ம மனோஜ் பெயரில் ஒரு சிம் கார்ட் வாங்கி யாருக்கும் தெரியாமல் பேசுகிறேன், என்ன ? என்று கேட்காமல் ப்ரியா ப்ரியா என்று அவள் பெயரையே சொல்லுறியே " என்றான் அவன் கடுப்பில்.

"கஷ்டம் தான், ஏன் சின்னத்தான் நீ என்னிடம் நடிக்கிறியா ?"

" ஆமா நீ பெரிய சினிமா டைரக்டர் உன்னிடம் நடிக்கிறேன் "

" இல்ல, நீ அவளை பற்றி பேசினாலே பிடி கொடுக்காமல் பேசுற, ஆனா அவள் உன்னை பற்றி பேசினா காதல் அப்படியே சொட்டுது, ரிஷி அப்படி பேசினார், இங்கே அழைத்தார் என்று ஒரே காதல் புலம்பல் அதான் கேட்டேன் நீ என்னிடம் நடிக்கிறாயோ என்று, சரி விடு அது உன் பெர்சனல். எதுக்கு இப்போ போன் பண்ணின அதை சொல்லு " என்றாள் அபி.

" சொல்றேன் அதுக்கு முன் ப்ரியா உன்னிடம் எப்போ பேசினாள் ஐ மீன் புலம்பினாள் " என்று கேட்டான்.

" விட மாட்டியே சரி கேளு, நான் மும்பையில் இருக்கும் போது உன் போன் வருதோ இல்லையோ, ஆனால் எவ்ரி சண்டே அவள் போன் வரும், எதாவது பேசுவாள், அதில் எங்கும் இருப்பது நீயாகத்தான் இருக்கும். யு க்நொவ் எனக்கு காதல் என்றாலே என்னமோ ஒரு அலர்ஜி, ப்ரியாவோ விடாமல் அதை பற்றியே பேசுவாள், பலநாள் போனை ஜானுவிடம் கொடுத்துவிடுவேன், அந்த அளவுக்கு இருக்கும் அவள் காதல் உளறல். அந்த அளவுக்கு காதலித்துவிட்டு நீ அவளை இப்போது ஏன் கண்டுக்காமல் இருக்கிறாய் ? " என்றாள் அபி.

" அது என்ன? யாரு என்ன சொன்னாலும் நம்பிவிடுகிறாய். அப்படி இருக்க கூடாது. சரி இப்போ நம்ம மேட்டருக்கு வருவோம். ஒரே வீட்டில் இருக்கிறோம் ஆனால் உன்னை பார்த்து இரண்டு நாள் ஆகிவிட்டது, நான் இப்போ உன்னை பார்க்கவேண்டும் மொட்டைமாடிக்கு வா " என்றான் ரிஷி.

அபி ஒரு நிமிடம் குழம்பிபோனாள். என்ன ஆயிட்டு இவனுக்கு, ஆள் மாறி பேசிக்கொண்டிருக்கிறானா ? என்று போனை பார்த்துக்கொண்டு நின்றாள்.

" ஹலோ, ஹலோ, அம்மு..... அம்மு... லைனில் இருக்கிறாயா ? "என்று கேட்டான் ரிஷி.

' அம்மு என்றுதானே சொல்கிறான், அப்படின்னா என்னிடம் தான் பேசுகிறான், ஆனால் இன் நேரத்திற்கு மொட்டைமாடிக்கு போனால் அந்த பானு அக்காவிடம் யாரு வாங்கிக்கட்டுவது ' என்று எண்ணியவள்

" அத்தான் சத்தம் போடாதே, நான் லைனில் தான் இருக்கிறேன், நீதான் வேறு எங்கேயோ இருக்கிறாய், இப்போது என்னை பார்க்காமல் உனக்கு இருக்கமுடியவில்லையா, ஐந்து வருடம் இருந்தாய்தானே அப்புறமென்ன, பேசாமல் போனை வைத்துவிட்டு தூங்கு, நாளை காலை பார்க்கலாம், சீக்கிரமாக போக மாட்டேன் " என்றாள் அபி.

" முடியாது அம்மு, ஒழுங்கா மாடிக்கு வா, இல்லை நான் உன் ரூமுக்கு வந்துவிடுவேன்" என்றான் மிரட்டலாக.

" அத்தான் உனக்கு இன்றைக்கு என்ன வந்தது, ஒழுங்கா தூங்க போ, இல்ல உன் ப்ரியாவிடம் போன் போட்டு பேசு, என் உயிரை வாங்காதே " என்றாள் கோபத்தில்.

எதிர்புறம் எந்த பதிலும் இல்லை, போனை வைக்கவும் இல்லை, அமைதியாக இருந்தது.

" ஓகே உனக்கு நேரம் சரியில்லை போல, நான் மாடிக்கு எல்லாம் வரமாட்டேன், உன் அண்ணி யாருக்கும் ஒழுங்கா பேச தெரியாது, நீ அத்தை ரூமுக்கு வா, நான் அங்கே வருகிறேன்" என்றவள் போனை வைத்துவிட்டாள்.

இவள் போவதற்கு முன் ரிஷி அங்கே இருந்தான். " அத்தை உங்க மகன் தொல்லையை தாங்க முடியல" என்று குற்றப்பத்திரிக்கை வாசித்தாள் தன் அத்தையிடம்.

" என்னம்மா உன் சின்னத்தான் இன்று என் மகனாகி போனான் " என்றார் அவர்.

" என் சின்னத்தானுக்கு தலை முழுவதும் மூளைதான், ஆனால் உங்கள் மகனுக்கு அது சுத்தமாக இல்லை, இருந்திருந்தால் என்னை இந்நேரத்திற்கு மொட்டைமாடிக்கு கூப்பிடுவாரா ? அதுவும் பானு அக்காவின் தங்கையை மணக்க இருப்பவர் " என்றாள் கண்ணை உருட்டிக்கொண்டு.

மகனை பார்த்தவர் " இதில் என்ன தப்பு, உன்னிடம் ஏதாவது பேச நினைத்திருப்பான் அதனால் கூப்பிட்டிருப்பான் " என்றார் அவர்.

" நல்ல அம்மா, சும்மா என்றால் பரவாயில்லை, நம் வீட்டின் சூழ்நிலை அப்படியா இருக்கு, எங்கள் இருவரையும் மொட்டைமாடியில் பார்த்தால் விடிய விடிய தீபாவளிதான் " என்றாள் அபி கோபத்தில்.

" சரி விடு விடு, ரிஷி உனக்கு என்னடா பேசணும், பேசி அவளை அனுப்பு, அவள் பயந்து நடுங்குகிறாள் பார் " என்று சீண்டினார் கற்பகம்மாள்.

" அத்தை நீங்களுமா ? சரி சொல்லி தொலை என்ன பேசணும் என்னிடம் "என்றாள் கடுப்பில் ரிஷியை பார்த்து.

" அம்மு அவன் உன்னை விட ஆறு வயது பெரியவன்,கொஞ்சமாவது மரியாதை கொடு" என்றார் அவர் சிரித்துக்கொண்டு

" பார்ப்பது சின்னபிள்ளை வேலை இதில் மரியாதை வேறு, போதும் போதும் இவ்வளவு மரியாதை " என்றவளை

" இங்கே வா" என்று கையை பிடித்து அழைத்து போனான் ரிஷி அந்த அறையில் இருந்த பால்கனிக்கு.

" ஐயோ அத்தான் உன் அலப்பறை தாங்கல, என்ன விஷயம் சொல்லு " என்றாள் சலிப்பாக.

" இன்னைக்கு பவுர்ணமி, இங்கே வா, இந்த இடத்தில் நில்லு, உன்னை அந்த நிலவோடு ஒரு போட்டோ எடுக்கத்தான் கூப்பிட்டேன்" என்றான் அவளை சரியான இடத்தில் நிற்கவைத்தபடி.

" ஆனால் அம்மாவாசை அன்றுதானே பைத்தியம் முத்தும் என்று சொல்லுவாங்க, உனக்கு பவுர்ணமி அன்றும் முத்திவிடுமா " என்றவளை முறைத்தான் ரிஷி.

" கொஞ்ச நேரம் வாயை மூடு, பேசாமல் கண்ணை மூடினாய் என்றால் ஐந்து நிமிடத்தில் இங்கேயிருந்து போய்விடலாம்" என்றான் அவன்.

" இது வேறையா " என்றவள் கண்ணை மூடி நிலவுக்கு கீழே நின்றாள்.

" ஹப்பி பர்த்டே " என்று அவள் நெற்றியில் முத்தமிட்டான் ரிஷி.

சட்டென்று கண்ணை திறந்தவளுக்கு நினைவு வந்தது, சில வருடங்களுக்கு முன் கொண்டாடிய பிறந்தநாள். மறந்தே போய்விட்ட பிறந்தநாள், அம்பிகாவின் கொடுக்கு வாயால் கேட்டகூடாதையெல்லாம் கேட்ட நாள், அபியின் கண்ணில் கண்ணீர் வந்தது.

" அம்மு ஷ்ஷு அழக்கூடாது. இங்கே பார் நான் உனக்காக என் சம்பாத்தியத்தில் வாங்கியது, இதை எனக்காக போட்டுக்கொள்வாயா ? " என்றவன் ஒரு அழகான வேலைப்பாடு கொண்ட தொங்கும் வைர கம்மலை கொடுத்தான்.

"தேங்க்ஸ் அத்தான், இதை கண்டிப்பாக உனக்கு போட்டுகாட்டுவேன் ஆனால் பிறகு" என்றாள் அபி.

ஒரு நிமிடம் அமைதியாக நின்றவள் "அத்தான் என்னை இப்போது எங்கேயாவது வெளியே கூட்டிட்டுபோவியா ப்ளீஸ் " என்றாள் கெஞ்சலாக.

" நான் எப்போதும் தயார்தான், நீ தான் தயங்குற " என்றான் அவன்.

பின்பு இருவரும் கற்பகம்மாளிடம் வந்தனர். அவரும் அவளை வாழ்த்தி ஒரு பரிசை வழங்கினார். காலில் விழுந்த மருமகளை தூக்கி உச்சிமுகர்த்தவர் அடுத்த வருடம் உன் துணையோடு என்னிடம் ஆசி வாங்க வேண்டும் " என்றார்.

" அம்மா நான் இவளை வெளியே அழைத்து போகவா " என்று கேட்டான் ரிஷி.

" தாராளமா போ, ஆனால் உன் அண்ணி பார்த்தால் " என்று இழுத்தார் கற்பகம்மாள்.

" அம்மா அவங்க அப்பவே தூங்கிட்டாங்க " என்றார் அன்னம்மா.

" அம்மா காரில் போனால்தானே தெரியும், நான் பைக்கில் போகிறேன் " என்ற மகனை பார்த்தவர் சிரித்துக்கொண்டு போயிட்டுவா என்றார்.

" வேண்டாம் அத்தான், இப்போ வேண்டாம், நாளைக்கு போவோம், தேங்க்ஸ் பார் ஏவிரித்திங் " என்று அபி சென்றுவிட்டாள்.

" ஏய் அம்மு நில்லு, பாருங்கம்மா இவளை, என்னை பைத்தியமாக்காம விடமாட்டாள் இவள் " என்றான் தாயிடம்.

" நீயே அவளை புரிஞ்சிக்கலன்னா எப்படிப்பா, உன் அண்ணியின் பேச்சிலேயே சகலத்தையும் தொலைத்தவள் என் குழந்தை " என்றார் அவர்.

" அவளை நான் புரிந்துகொண்டேன், உங்கள் குழந்தையை நீங்களும் புரிந்துகொண்டீர்கள் ஆனால் என்னை புரிந்துகொள்ளத்தான் இந்த வீட்டில் யாரும் இல்லை. இவள் இழந்த அனைத்தையும் நானும் தான் இழந்திருக்கிறேன், பாட்டி, அப்பா, அண்ணன்களின் அன்பு இதோ போறாளே இவளின் " என்றவன் முழுவதும் முடிக்காமல் " எல்லாவற்றையும் நானும் தான் இழந்திருக்கிறேன், அத்தோடு இவளை இவளிமிருந்து மீட்க இவளிடமே போராடி என் வயசின் அனைத்து சந்தோஷத்தையும் தொலைத்துவிட்டு நிற்கிறேன்." என்றான் ரிஷி ஆதங்கத்துடன்

கற்பகம்மாள் மகனின் பேச்சில் இருந்த ஆதங்கத்தை பார்த்து வாய் அடைத்து நிற்க அவர் கொடுத்த பரிசை அவசரத்தில் மறந்து போன அபி அதை எடுக்க வந்து ரிஷி பேசிய அனைத்தையும் கேட்டுவிட்டு அமைதியாக உள்ளே வந்தாள். ரிஷி அவள் மேல் கோபத்தோடு அவளையே முறைத்துக்கொண்டு நின்றான்.

" அத்தை இதை மறந்து விட்டுட்டு போயிட்டேன்" என்றவள் அதை எடுத்துக்கொண்டு ரிஷியின் கையைபிடித்து அவனை இழுத்துக்கொண்டு போனாள் மொட்டைமாடிக்கு.

அவனுக்கு தெரியும் அபி யாருக்கும் பயந்தவள் கிடையாது, இந்த வீட்டின் நான்கு ஆண் பிள்ளைகளும் அவர்களின் அப்பாவின் பார்வையிலேயே அடங்கிப்போவார்கள், ஆனால் அபியோ அவரிடமே பதிலுக்கு பதில் பேசி நினைத்ததை சாதிப்பவள், ஆனால் சில வருடங்களாக அவள் பயப்படாத விசயமே இல்லை. சிறு பூச்சிக்கு கூட பயப்படுவாள் போல, இன்று அவளுக்கு துணிவு வந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டவன் அவளின் இழுப்புக்கு சென்றான்.

மாடிக்கு இழுந்துபோனவள் அங்கு சென்று அவன் எதிர்பாராத நேரம் அவனை அணைத்துக்கொண்டு அவன் மார்பில் புதைந்து ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்தாள். ரிஷி ஒரு நிமிடம் அதிர்ச்சியாகி பின்பு சந்தோஷப்பட்டான்.
 

banumathi jayaraman

Well-Known Member
Sis
Ore updattai irandu murai pottuvitten. Eppadi adai nikkuvadu
Repeated அப்டேட்டுன்னு நானே சொல்லணும்ன்னு நினைத்தேன்
நீங்களே சொல்லிட்டீங்க, விஷ்வா டியர்
இன்னொரு எக்ஸ்ட்ரா போஸ்ட்டை எப்படி டெலீட் பண்ணுவதுன்னு இவங்களுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க, மல்லிகா டியர் and அஷ்ரப் ஹமீதா டியர்
@mallika
@smartiepie
 

vishwapoomi

Writers Team
Tamil Novel Writer
Repeated அப்டேட்டுன்னு நானே சொல்லணும்ன்னு நினைத்தேன்
நீங்களே சொல்லிட்டீங்க, விஷ்வா டியர்
இன்னொரு எக்ஸ்ட்ரா போஸ்ட்டை எப்படி டெலீட் பண்ணுவதுன்னு இவங்களுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க, மல்லிகா டியர் and அஷ்ரப் ஹமீதா டியர்
@mallika
@smartiepie


Thank you sis,
Mallika sis remove pannittaanka
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top