அன்புத் தோழமைகளே...
எனது ஐந்தவாது நாவலான ‘சூரியோதயம்’ அன்பு இல்லம் பதிப்பகம் மூலம் புத்தமாக வெளியாகி இருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்...
இக்கதை உங்கள் மனதை மகிழ்விக்கும் வகையான கதைக் களமல்ல என்றாலும், இக்கதை மூலம் ஓர் ஊனமுற்ற பெண்ணின் வாழ்க்கைப் போராட்டத்தையும், அவளுக்காய் தாயுமானவனாய் மாறிய அவள் தந்தையின் அன்பையும், என்னதான் காதல் காதல், என்று சொல்லிக் கொண்டாலும், புரிதலும், விட்டுகொடுத்தலும் இல்லையென்றால் வாழ்க்கையின் முடிவு நரகம்தான் என்பதையும், அன்பு ஒரு சார்பிலிருந்து மட்டுமே கொடுக்கப்படும்போது அது அர்த்தமற்றதாகி விடும் என்பதையும், இதையெல்லாம் தாண்டி எத்தனை எத்தனைத் துன்பங்கள் வந்தாலும் எதிர்நீச்சல் அடித்து முன்னேறி ஜெயிக்க வேண்டும் என்பதையும் ஓர் பெண் உதயத்தின் மூலம் நீங்கள் அறியலாம்.
வாசகர்கள் உங்களுக்கே தெரியும், இது நாவலின் முதல் பகுதிதான் என்று. முதல் பகுதி முழுவதும் அழுகையிலும், கோபத்திலும் ஆழ்த்திய உங்களை, இப்போது இரண்டாவது பகுதியில் என்னால் இயன்றவரை உங்கள் சூர்யாவிற்கு நியாயம் செய்கிறேன் என்று நினைக்கிறேன். சொ இந்தக் கதையைப் படித்துவிட்டு தன்னொளியைப் படிங்க. அப்பதான் உங்களுக்கு முழுமையாக நாவலின் மேல் பிடிப்பு ஏற்படும்.
கனமான கதைக்களம் என்றாலும் அதைத் தொடர்ந்து படித்து எனக்கு ஆதரவு அளித்த அனைத்து வாசக தோழமைகளுக்கும், சகோதர சகோதரிகளுக்கும், தொடர்ந்து எனது புத்தகத்தை வெளியிட்டு வரும் அன்பு இல்லப் பதிப்பகத்தாருக்கும், என் அன்புத் தந்தைக்கும், என்னை நல்வழியில் நடத்தும் இறைவனுக்கும் என் பணிவும் அன்பும் கலந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி நன்றி நன்றி....