Slogam

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
If we follow this we can easily do meditation surely I am going to try
DP போட்டோவில் இருப்பவர் உங்கள் குழந்தையா?
அழகாக டிரஸ் பண்ணிட்டு திருஷ்டிப் பொட்டு வைக்காமல் விட்டுட்டீங்களே, கிருஷ்ணா டியர்
பார்ப்பவர்களின் கண் படும் including me also
குழந்தையின் கன்னத்துல ஒரு திருஷ்டிப் பொட்டு வைச்சிருந்திருக்கலாம்
இரண்டு கன்னங்களிலும் தாவாங்கட்டையிலும் திருஷ்டிப் பொட்டு வைப்பாங்க
பெண் குழந்தைகளுக்கு திருஷ்டிப் பரிகாரமா புருவத்துக்கும் மை வைக்க வேண்டும்
 

Pragathi Ganesh

Well-Known Member
DP போட்டோவில் இருப்பவர் உங்கள் குழந்தையா?
அழகாக டிரஸ் பண்ணிட்டு திருஷ்டிப் பொட்டு வைக்காமல் விட்டுட்டீங்களே, கிருஷ்ணா டியர்
பார்ப்பவர்களின் கண் படும் including me also
குழந்தையின் கன்னத்துல ஒரு திருஷ்டிப் பொட்டு வைச்சிருந்திருக்கலாம்
இரண்டு கன்னங்களிலும் தாவாங்கட்டையிலும் திருஷ்டிப் பொட்டு வைப்பாங்க
பெண் குழந்தைகளுக்கு திருஷ்டிப் பரிகாரமா புருவத்துக்கும் மை வைக்க வேண்டும்
No, Banu ma I was in pregnancy treatment
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
No, Banu ma I was in pregnancy treatment
நல்லது
சீக்கிரமே புத்திர பிராப்திரஸ்து
ட்ரீட்மெண்ட்டுடன் தினமும் இரண்டு அல்லது மூன்று முறை மாதுளைப் பழங்கள் சாப்பிட்டு வரலாமே
அத்துடன் வாரத்தில் இரண்டு முறை வாழைப்பூ சேர்த்து கொள்ளலாம்
பருப்பு அரைத்து வதக்கிப் போட்டு உசிலி அல்லது கூட்டு இப்படி ஏதாவது செய்து வாரத்தில் இரண்டு முறை எடுத்து கொள்ளுங்கள், கிருஷ்ணா டியர்
அதுவும் வாழைப்பூ நறுக்கியபின் கடைசியில் வெள்ளையா குட்டியா பூ வரும்
அதை அப்படியே சாப்பிடுங்கள்
ரொம்பவும் நல்லதுப்பா
 

Rukmani Sankar

Well-Known Member
எப்பவுமே நல்ல விஷயங்கள் என்று தோன்றுபவற்றை திரும்பத் திரும்ப பண்ணினாலும், படிச்சாலும் அதை விடாம தொடரணும்.

உதாரணமா ஒரு ஸ்லோகம் படிக்கணும்னு நினைச்சுண்டோம்னா அதுக்காக ஒரு டைம் ஒதுக்குவோம்.
இரண்டு மூன்று நாள் அது சரியா வரும்.
நாலாம் நாள் அந்த டைமில் வேற ஏதாவது வேலை வரலாம்.

ஆனா அந்த ஸ்லோகம் படிக்கணும் என்பது அன்றைக்குள் எப்ப வேணா படிக்கலாம்.
முழுசா முடியலையா
கொஞ்சமாவது படிக்கணும்
மனசார படிக்கணும்னு நினைப்போம்.
ஆனா சில நேரம் படிக்கணுமேன்னு கொஞ்சம் பாரமா சோம்பலா தோணினா கூட கொஞ்சமாவது படிக்கணும்.

சில பேர் சொல்லுவா
மனசில்லாம ஸ்லோகம் படிச்சா ஒட்டாது
அதுக்குப் பலனும் இல்லை
புத்தி எங்கேயோ போகும்
வாய் ஸ்லோகம் சொல்லும்.
எனக்கும் அப்படித்தான் இருக்கும்.
மனசாரத்தான் சொல்லணும்னா என்னிக்குமே சொல்ல முடியாது.

இவ்வளவு போதும்னு மனசு சொல்றதோ அவ்வளவு கூட போதும்.
ஒரு பக்கமா சரி
அல்லது ஒரு பாரா தான் தோணித்தா
அதுவும் சரி
ஆனா விடக் கூடாது.

பரவாயில்லைன்னு விட்டுட்டோம்னா நல்லது பரவாயில்லைன்னு நம்மை விட்டு போயிடும்.

நம்மையறியாமலே ஆழ்மனதில் அந்த விஷயம் போய் உட்கார்ந்துக்கும்.
ஸ்ரீ நிகமாந்த தேசிகர் ஸ்லோகங்கள், லலிதா சஹஸ்ரநாமம், தயாசதகம் கத்துண்டோம்.
மனப்பாடம் ஆகலை.
ஆனா தினம் படிப்போம்.
ஒவ்வொரு நாளா படிக்கப் படிக்க இப்ப கட கடன்னு தப்பில்லாம படிக்க வருது.
சில சமயம் நம்மையறியாமலேயே அடுத்த லைன் தானா வாயில் வரும்.

என்னிக்கு நமக்கு வரணும்னு இருக்கோ அன்னிக்கு வரட்டும்.
வர்லையா அட்லீஸ்ட் சொல்லும்போது அந்த நாழி நல்ல நாழியா போறது.

நம்ம வீடு, ஹால் ரூம், ஆத்தில் இருக்கறவான்னு இரண்டு பேருக்காவது அந்த சப்தம் கேட்குமே.
அப்ப மனசுக்குள்ள இருக்கிற பகவானுக்கு கேட்காதா?

எதையாவது பார்த்து பயந்தா சில நேரம் கனவுல வருதில்ல.
அது போல் நல்லதையே சொல்லிண்டிருந்தா நமக்கு ராத்திரி எழுந்தா கூட மனசுக்குள்ள பகவான் நாமா ஓடிண்டிருப்பதை உணரலாம்.

மனசு ஒட்டாம சொன்னாக்கூட பரவாயில்லை.
மத்த எல்லா விஷயங்களும் இஷ்டப்படிதான் பண்றமா?
மனசு ஒட்டித்தான் பண்றமா?
இல்லையே.
எவ்வளவு விஷயங்கள் கடமையேன்னு செய்யறோம்.
அப்படி இதுவும் இருந்துட்டுப் போகட்டுமே.
பலன்னு யோசிக்க வேண்டாம்.
இது நல்ல விஷயம்.
அவ்வளவுதான்.

தெரிஞ்சோ தெரியாமயோ பகவான் நாமாவை சொல்லணும்னுதான் குழந்தைகளுக்கு பெருமாள் பேரை வச்சா.

நல்ல விஷயங்களை பண்றதை திரும்ப திரும்ப நியாபகத்தில் கொணர்ந்து பண்ணினால் பழக்கமாயிடும்.
அப்புறம் அது நம் அன்றாட வாழ்க்கையில் அதுவும் அனிச்சையாய் ஒன்றாகிவிடும்

கெட்ட பழக்கங்களும் நம்மை விட்டு போய்விடும் படிப்படியா.

ஸ்லோகம் என்பது ஒரு உதாரணத்துக்குத்தான்.
இது போல் எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கு.

ஜஸ்ட் ஸ்லோகம் முடியலையா
பகவான் நாமாவை சமைச்சிண்டே இருக்கும் போது "அவ அன்னிக்கு நம்மைப் பத்தி சொன்னாளே.. லூசு மாதிரி கேட்டிண்டிருந்தோமே..
இன்னிக்கு எப்படியாவது பதில் கொடுத்துடனும்" அப்படிங்கற சிந்தனை வரும் போது ராம ராமன்னு மாத்திண்டுடுங்கோ.
அதுவும் ராமர் காதில் போயிடும்.
அவாகிட்ட சொல்றத்துக்குப் பதிலா ராமர்கிட்ட சொல்லிட்டேள்.
அதை விட இதானே நல்லது.
ராமர் பார்த்துப்பார்.

ஒண்ணுமே இல்லையா
வாழ்க வளமுடன் இருக்கவே இருக்கு.

Thx banu ma. Romba santhoshama irrukku, inthamathri periyava share pandrathu nalla irrukku.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top