Sevvanthi Pooveduthaen Final

Advertisement

arunavijayan

Well-Known Member
கரடு முரடான மணல்மேடாக
தான் காட்சியளித்தாள்
அவனுக்கு..

பூக்களின் மீது நேசம்
கொண்டவன்..
பூவையின் நேசம் காண
தவமிருந்தான்..

அன்பை பதியமிட்டு
காதலை உரமிட்டு
பொறுப்பாய் கவனித்தே
அவளுள் அவனை
பதிய செய்தான்...

எண்ணங்கள் எல்லாம் அவளாகிட
வண்ணங்கள் பல அவன் தோட்டத்தில்
செவ்வந்தி மலர் தோட்டத்தில்..

images (9).jpg
 
Sasideera

Well-Known Member
வீராப்பாய் இருந்த வீரனை மணம் புரிய வராமல் வந்த மங்கை இவளோ!!!

பூப்பறிக்க குதித்தவள் அன்பால் எந்தன் இதயத்தை குறிவைத்தது ஏனோ!!!

அன்பால் என் குடும்பத்தை அரவணைக்க வந்த அரண் இவளோ!!!

தாயின் அன்பை தாரமாய் உணர்த்திய என் தாயுமானவள் இவளோ!!!

காதலையும் கோபத்தில் சொல்பவள்!!!

அன்பையும் அடிதடியாய் தருபவள்!!!

சஞ்சலங்கள் இருந்தாலும் யாரிடமும் என்னை விட்டுத்தராதவள்!!!

எனது பல நாள் மனப்போராட்டத்தை அவளின் காதலினால் தளர்த்தியவள்!!!

காதலெனும் ஆயுள் சிறையில் காலம் முழுவதும் நாங்கள் கைதாகத் தான் அன்று அவளை தப்ப விடாமல் சிறை எடுத்தேனோ!!!

காதலை மனதில் செம்மையாக செப்பனிட்டு வளர்த்த என் செவ்வந்தி பூந்தோட்டம் அவள்!!!

இன்றல்ல அன்றைய பணியாரமாய் இருந்த போதும்!!!
 
Manimegalai

Super சசி..
ரொம்ப அழகா சொல்லிட்ட ...பா.
 
Manimegalai

Well-Known Member
ஹாய் சவி...
கிராமத்து கதை மேல் அதீத அன்பு....எனக்கு:)
முதல் முன்னோட்டம் பார்த்ததும் படிக்கனும் என்று தோன்ற வைத்தது...
முடிவு வரை அது குறையாமல் தொய்வு இல்லாமல் அழகாக கொண்டு வந்தீங்க கதையை..
வீரா ரொம்ப நல்லவன்...கொஞ்சம் கெட்டவனா மாற்ற சொல்லி கடவுளிடம் மனு போடும் அளவுக்கு;)அவன் அன்பு அலாதியானது...மிகவும் பிடித்தது..
செவ்வந்தியின் குணம்...பக்குவம் ..தாமரையிடம் நடந்து கொண்ட முறை பிரமிக்க வைத்தது..
டோலக்கு ரியாஸ், மயில், இருவரும் நைஸ்..செவ்வந்தி பூவும் பிடிக்குது இந்த கதைக்குப் பிறகு..
வாழ்த்துக்கள் சவி.
நன்றி.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top