Ramadan 2021- Day 8 prophet yahya

Advertisement

fathima.ar

Well-Known Member
அல்லாஹ் அவர்களை ஸிரியா சென்று மக்களை நேர்வழிப்படுத்துமாறும் ஏகதெய்வக் கொள்கையை விளக்கி அதன்படி இறைவணக்கத்தில் ஈடுபடச் செய்யுமாறும் ஏவினான்.அவ்வாறு அவர்கள் ஸிரியா சென்று மக்களுக்கு அறப் போதனை செய்தார்கள்.

அக்காலத்தில் ஹைருதூஸ் என்ற பெயருடன் ஒரு அரசன் இருந்து வந்தான். அவனது மனைவியின் பெயர் மலிகா. அவள் முதுமையடைந்திருந்தாலும் பனீ இஸ்ரவேலர்கள் அவளை மிகவும் கொண்டாடி வந்தனர். தனக்கு வயதாகி விட்டதால் தன்னை தனது புருஷன் ஒருவேளை புறக்கணித்து விட்டால் என்ன செய்வது என்று பயந்து,
அவளது மூத்த கணவனுக்குப் பிறந்த அழகான மகளை தம் புருஷனுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட்டால் தனது புருஷனோடு தானும் கடைசி வரை வாழ்ந்து வரலாம் என்று மனத்தில் எண்ணிக் கொண்டு, மெதுவாக தனது புருஷனுடன் ஆலோசனை செய்ததில் அவனும் சம்மதித்துவிட்டான். என்றாலும் மார்க்கத்தீர்ப்பு இந்த உறவு முறைக்கு சாதகமாக இருக்கிறதா? என்று கண்டறிய விரும்பினான்.

மார்க்கத்தீர்ப்பை யாரிடம் கேட்பது என்று ஆலோசனை கேட்டதில் அனைவரும் ஹழ்ரத் யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களைச் சொன்னார்கள். அவர்களை வரவழைத்து இதுபற்றி கேட்டான். அதற்கு அவர்கள் ‘இந்த உறவுமுறை அறவே கூடாத ஒன்று. இயற்கைக்கு முரணானது. இறை ஆணைக்கு மாறானது. வேறுபெண்ணை மணமுடித்துக் கொள்ளவும்’ என்று கூறினார்கள்.

இந்தச் செய்தி அரசனின் மனைவிக்க எட்டியது. அவளது ஆத்திரத்திற்கு எல்லையில்லாமல் போய்விட்டது. தனது திட்டத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களை எப்படியும் ஒழித்துக் கட்டுவது என்று முடிவு செய்து திட்டமிட்டாள்.

அந்தத் திட்டப்படி ஒருநாள் தனது புருஷனோடு, அவன் சந்தோஷமாக இருந்த நேரம் பார்த்து அரசனுக்கு மதுவை அளவுக்கதிகமாக கொடுத்தாள். அவன் நிலைதடுமாற ஆரம்பித்தான். திட்டமிட்டபடி அவள் மனைவி தனது மூத்ததாரத்து மகளை நன்றாக அலங்கரித்து முழு போதையிலிருந்த தனது கணவன் முன்னால் அவளை வரச் செய்தாள். அவளது பேரழகைக் கண்டதும் அரசனது மதி மயங்க ஆரம்பித்தது. அவளை அணைத்துக் கொள்ள அவள் அருகே நெருங்க ஆரம்பித்தான்.

ஏற்கனவே தாய்சொல்லி தந்தபடி அவள் அதற்கு நிபந்தனை போட்டாள். என்னை நெருங்க வேண்டுமென்றால் காணிக்கையாக யஹ்யா நபியின் துண்டித்த தலை என் முன்னால் கொண்டு வந்து வைக்க வேண்டும் என்றாள்.

மதுபோதையிலும்,பெண் ஆசையிலும் மயங்கிய அரசன் தனது சேவகர்களை அழைத்து யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களை எங்கிருந்தாலும் கண்டு அவரது தலையை துண்டித்து தன் முன்னால் கொண்டுவர ஆணையிட்டான்.

அச்சமயம் யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள் முன் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தோன்றி அவர்களுக்கு நேரவிருக்கும் ஆபத்தை எடுத்துக் கூறி ‘நீங்கள் விரும்பும்பட்சத்தில் இந்த நாட்டையே தலைகுப்புற புரட்டி அழித்து விடுகிறேன்’ என்று கூறினார்கள்.

இந்த அரசனால் கொல்லப்பட வேண்டும் என்று எனது விதியில் எழுதப்பட்டுள்ளதா? என்றுகேட்டார்கள் யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.

ஆம். என்றார்கள் ஹழ்ரத் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.

அப்படியாயின் நான் அதற்கு எதிர்த்து என்ன பயன்? விதிப்படியே நடக்கட்டும் என்று கூறினார்கள். அச்சமயத்தில் அரசனின் சேவகர்கள் வந்து யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சிரசை துண்டித்து தம்மோடு எடுத்துச் சென்று விட்டார்கள்.

அரசன் முன் அந்த சிரசு வைக்கப்பட்டதும் அரசன் அதைக் கூர்ந்து நோக்கினான். அந்த துண்டிக்கப்பட்ட சிரசிலிருந்து அந்தப் பெண்ணை நீ மணப்பதோ, அவளருகில் நெருங்குவதோ கூடாது. கூடாது!! என்று முணுமுணுக்கும் சப்தம் அவனது செவிகளில் மெதுவாக ஒலித்தது.

அந்த அரசனின் மனைவி அந்தப் பெண்ணை அந்த அரசனோடு திருமணம் செய்து வைத்து விட்டாள். உடனே எழுந்த ஒரு சூறாவளிக் காற்று அந்த அரசனை அலக்காக தூக்கி பாலைவனத்தில் வீசி எறிந்தது. அங்கு தயாராக நின்று கொண்டிருந்த ஒரு சிங்கம் அவனைக் கொன்று தின்றுவிட்டது.

யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு நேர்ந்த கதி மக்களுக்குத் தெரிய வந்ததும் அவர்கள் கொதித்தெழுந்தனர். இது அடுத்த நாட்டு அரசனின் காதுக்கும் எட்டியது. இதுதான் சமயம் என்று பார்த்த அவன் உடனே படையெடுத்து அரசியையும் அவள் மகளையும் கொன்று அரசிற்கு ஆதரவாக இருந்த 70000பனீ இஸ்ரவேலர்களையும் சிரச் சேதம் செய்து விட்டான்.

ஹழ்ரத் யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஷஹீதாக்கப்படும் போது அவர்களுக்கு வயது 75. அவர்களது புனித உடல் டமஸ்கஸில்(திமிஷ்க்) அடக்கம் செய்யப்பட்டது.
 

fathima.ar

Well-Known Member
மது மாது காம்போ எப்பவுமே அபாயகரமானது தான் போல..

மார்க்க அறிஞர்கிட்ட கேட்கனும்னு இருந்த அறிவு.. மது போதைல அவர் தலையையே வெட்ட சொல்லுது..
அரசி கணவன் மேலயும் நம்பிக்கை இல்லை..
மகளுக்கு என்ன அநீதி இழைக்கிறோம்னே தெரியாம பல பேரு இறந்தது தான் மிச்சம்..
 

Hema27

Well-Known Member
மது மாது காம்போ எப்பவுமே அபாயகரமானது தான் போல..

மார்க்க அறிஞர்கிட்ட கேட்கனும்னு இருந்த அறிவு.. மது போதைல அவர் தலையையே வெட்ட சொல்லுது..
அரசி கணவன் மேலயும் நம்பிக்கை இல்லை..
மகளுக்கு என்ன அநீதி இழைக்கிறோம்னே தெரியாம பல பேரு இறந்தது தான் மிச்சம்..
உண்மை
 

Manimegalai

Well-Known Member
மது மாது காம்போ எப்பவுமே அபாயகரமானது தான் போல..

மார்க்க அறிஞர்கிட்ட கேட்கனும்னு இருந்த அறிவு.. மது போதைல அவர் தலையையே வெட்ட சொல்லுது..
அரசி கணவன் மேலயும் நம்பிக்கை இல்லை..
மகளுக்கு என்ன அநீதி இழைக்கிறோம்னே தெரியாம பல பேரு இறந்தது தான் மிச்சம்..
ஆமா
:cry:
ரொம்ப சரி.
 

I R Caroline

Well-Known Member
மது மாது காம்போ எப்பவுமே அபாயகரமானது தான் போல..

மார்க்க அறிஞர்கிட்ட கேட்கனும்னு இருந்த அறிவு.. மது போதைல அவர் தலையையே வெட்ட சொல்லுது..
அரசி கணவன் மேலயும் நம்பிக்கை இல்லை..
மகளுக்கு என்ன அநீதி இழைக்கிறோம்னே தெரியாம பல பேரு இறந்தது தான் மிச்சம்..

Nice sis, true
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top