Ramadan 2021- Day 7 prophet Yahya

Advertisement

fathima.ar

Well-Known Member
இறைவனால் பெயர் சூட்டப்பட்ட நபி யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள். அவர் இறையச்சம் மிகுந்து காணப்பட்டார்கள்.

கம்பளி உடையையே அணிந்து வந்த யஹ்யா நபி அவர்கள், இந்தக் கம்பளி ஆடை எனது தகுதிக்கு ஏற்றதாக இல்லை. என்னுடைய அந்தஸ்து அதற்கும் கீழே உள்ளது என்று சொல்லி அதை தூர எறிந்து விட்டு சாக்கால் ஆன போர்வையை போர்த்த ஆரம்பித்துவிட்டார்கள். அதனால் அவர்களின் பொன்நிற மேனி புண் மயமாகி இரத்தம் கசிய ஆரம்பித்து விட்டது. இதனைக் கண்ட அவர்களது தாயார் பதறிப் போய் அவர்கள் அணிந்திருந்த அந்தச் சாக்குப் போர்வையை அகற்றிவிட்டு ஒரு மெல்லிய ஆடையைக் கொண்டு அவர்களது உடலை போர்த்தினார்கள். உடனே அல்லாஹ்விடமிருந்து வஹீ வந்தது. ‘ஓ யஹ்யாவே! நீர் ,என்னைவிட உலகத்தை அதிகமாக விரும்புகின்றீரா?’ என்று.

உடனே திடுக்கிட்ட ஹழ்ரத் யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அந்த மெல்லிய ஆடையைக் களைந்து விட்டு மீண்டும் சாக்குப் போர்வையைப் போர்த்திக் கொண்டார்கள்.

ஒருநாள் மஸ்ஜிதுல் அக்ஸாவில் ஹழ்ரத் யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வணக்கத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது மஸ்ஜிதிலிருந்த ஒருவர் ‘அல்லாஹ்வின் சன்னிதானம் முன் நிற்கப் போகும் நாளை அவர்கள் மறந்து விட்டார்களா?’ என்ற கருத்துக்கொண்ட வேதவசனத்தை ஓதிக் கொண்டிருந்தார். இதனைக்கேட்டதும் யஹ்யா நபி அவர்கள் பயங்கரமாக அலறிய வண்ணம் அப்படியே மூர்ச்சித்துப் போய் கீழே விழுந்து விட்டார்கள். இந்த அதிர்ச்சியின் காரணமாக 4மாதங்கள் வரை படுத்தப் படுக்கையில் நோய்வாய்ப்பட்டுக் கிடந்தார்கள்.

ஒருமுறை ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மக்களிடையே நற்போதனை செய்து கொண்டிருக்கையில் சுவர்க்கத்திற்கு எட்டு வாயில்களும் நரகத்திற்கு ஏழு வாயில்களும் இருக்கிறதென்று கூறி நரகத்திலுள்ள ஸக்ரான் என்ற மலையைப் பற்றியும் அதனருகே ஓடும் அஸியான் என்ற ஓடையைப் பற்றியும் குறிப்பிட்டு நரகத்தில் பாவிகள் படும் வேதனையைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார்கள். உடனே ஒரு மூலையிலிருந்து யாரோ அலறும் சப்தம் கேட்டது. எல்லோரும் அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தார்கள். ஹழ்ரத் யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அலறிக் கொண்டே தலைவிரி கோலமாக எழுந்து வெளியே ஓடிவிட்டார்கள். அதற்குப் பிறகு மூன்று நாட்கள் வரை அவர்களை வீட்டில் காணவில்லை. அவர்கள் தாயார் அவர்களை பல இடங்களிலும் தேடி பார்த்து இறுதியாக ஓர் ஓடையில் அவர்களை கண்டார்கள். அவர்களை சமாதனப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்தார்கள். வீட்டுக்கு வந்த யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கடும் நோய்வாய்ப்பட்டு போனார்கள். அந்நோயிலிருந்தும் மீள அவர்களுக்கு நான்கு மாதங்கள் ஆயிற்று.

சற்று குணமடைந்ததும் அல்லாஹ் அவர்களை ஸிரியா சென்று மக்களை நேர்வழிப்படுத்துமாறும் ஏகதெய்வக் கொள்கையை விளக்கி அதன்படி இறைவணக்கத்தில் ஈடுபடச் செய்யுமாறும் ஏவினான்.அவ்வாறு அவர்கள் ஸிரியா சென்று மக்களுக்கு அறப் போதனை செய்தார்கள்.
 

fathima.ar

Well-Known Member
இவ்ளோ இளகிய மனம் படைத்த நபியவர்கள் ஸிரியாவில் ஓர் இறைகொள்கையை பரப்புரை செய்யும் போது மக்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்வார்கள் நாளை பார்ப்போம்..
 

fathima.ar

Well-Known Member
முதலாவது சொர்க்கம் - ஜன்னத்துல் பிர்தௌஸ்

1) போதும் என்ற மனம் கொண்டவர்கள்.
2) தினமும் பாவமன்னிப்பு (தவ்பா) தேடுபவர்கள்.
3) நல்லவர்களுடன் சேர்ந்து இருப்பவர்கள்.
4) பொறாமையை விட்டு நீங்கிக் கொள்பவர்கள்.


இரண்டாவது சொர்க்கம் - தாருஸ் ஸலாம்

1) அனாதைகளை ஆதரிப்பவர்கள்.
2) விதவைகளுக்கு ஆதரவு அளிப்பவர்கள்.
3) ஸலாம் சொல்பவர்கள்.
4) முஸ்லிமின் தேவை அறிந்து உதவி செய்பவர்கள்.



மூன்றாவது சொர்க்கம் - ஜன்னத் அத்னு

1) பேச்சை குறைப்பவர்கள்.
2) தூக்கத்தை குறைத்து இறை வணக்கத்தில் ஈடுபடுபவர்கள்.
3) உணவை குறைவாக உண்பவர்கள்.
4) மக்களின் தொடர்புகளை குறைத்து(இறை வணக்கம் செய்பவர்கள்.


நான்காவது சொர்க்கம் - ஜன்னத்துல் நயிம்

1) தானம் தர்மம் செயபவர்கள்.
2) நன்றி செலுத்துபவர்க.
3) சந்தேகம் இல்லாமல் இருப்பவர்கள்.
4) நற்குணம் உடையவர்கள்.


ஐந்தாவது சொர்க்கம் - தாருல் குல்து

1) திட்டாமல் (ஏசாமல்) இருப்பவர்கள்.
2) அடுத்தவர்களை கேவலப்படுத்தாதவர்கள்.
3) யாருக்கும் அநீதி செய்யாதவர்கள்.
4) எப்பொழுதும் கலிமாவில் நிலைத்து இருப்பவர்கள்.


ஆறாவது சொர்க்கம் - தாருல் ரைய்யான்

1) பள்ளிவாசலை கட்டுபவர்கள்.
2) தொழுகையைக் கொண்டு பள்ளிவாசலை நிரப்புபவர்கள்.
3) துஆ மற்றும் இஸ்திஃபாரில் ஈடுபடுபவர்கள்.
4) மார்க்கக் கல்வியை வழங்குபவர்கள்.


ஏழாவது சொர்க்கம் - மக்ஆது சித்தீகீன்

1) நோயாளிகளை நலம் விசாரிப்பவர்கள்.
2) ஜனாஸாவை பின் தொடர்ந்து செல்பவர்கள்.
3) கபனுக்கு தேவையான துணி மற்றும் பொருட்கள் வாங்குபவர்கள்.
4) வாங்கிய கடனை உரிய காலத்தில் அழகியமுறையில் திருப்பி செலுத்துபவர்கள்.


எட்டாவது சொர்க்கம் - ஜன்னத்துல் மஃவா

1) விருந்தாளிகளை உபசரிப்பவர்கள்.
2) பெற்றோர்களை சங்கை படுத்துபவர்கள்.
3) அண்டை வீட்டாருடன் சங்கையாக இருப்பவர்கள்.
4) ஆலிம் மற்றும் அறிஞர்களை கண்ணியப்படுத்து பவர்கள்.
 

Manimegalai

Well-Known Member
1 முதல் 8 வது சொர்க்கம்
சொன்ன கருத்துக்கள்
ரொம்ப சூப்பரா இருக்கு...
இதை கடைப்பிடித்து வாழனும் :love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top