Ramadan 2021- day 12 prophet Eesa prophecy

Advertisement

fathima.ar

Well-Known Member
ஈஸா நபியவர்கள் அவர்களை நோக்கி ‘நான் எத்தகைய அற்புதத்தை செய்து காட்டினால் என்னை நபி என்று நம்புவீர்கள்’ என்று கேட்டனர். அதற்கு பனீ இஸ்ரவேலர்கள் ‘இறந்தவர்களை உயிர்ப்பிக்க முடியுமா? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் ‘சரி’ யென்று சொன்னார்கள்.
இதனால் ஆச்சரியத்தில் மூழ்கிய அம்மக்கள், அக்காலத்தில் மிகப் பெரிய அறிவாளியாகவும்,மருத்துவ நிபுணராகவும் இருந்த ஜாலினூஸ் என்பவரிடம் வந்து,இது பற்றி கேட்டனர். அவர் ஈஸா அவ்வாறு இறந்தவர்களை உயிர்ப்பிக்ச் செய்தால் அவர் அல்லாஹ்வின் தூதர் என்பதை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்’ என்றார்கள்.

உடனே அவர்கள் ஈஸா நபி அவர்களிடம் வந்து மூன்று நாட்களுக்கு முன்னர் ஆஸர் என்பவர் இறந்துவிட்டார். அவரது சடலத்தை உயிர்ப்பித்து காட்டுங்கள் என்றனர்.
அவர் அடக்கப்பட்ட இடத்திற்கு என்னை அழைத்துச் செல்லுங்கள் என்றனர் ஈஸா நபி அவர்கள். அங்கு அவர்கள் அந்த சமாதிக்கருகில் சென்று, ‘அல்லாஹ்வின் உத்திரவு கொண்டு எழுந்திரும்’ என்று சொன்னார்கள். என்ன ஆச்சரியம். அவர் தூங்கியெழுந்தவரைப் போன்று சோம்பலை முறித்துக் கொண்டே எழுந்து வெளியே வந்தார். பனீ இஸ்ரவேலர்களுக்கு அதை நம்பவே முடியவில்லை. இப்பவாது என்னை அல்லாஹ்வின் தூதர் என்று நம்புகிறீர்களா? என்று கேட்டார்கள் ஈஸா நபியவர்கள்.

அதற்கு என்ன பதில் சொல்வது? என்று புரியாமல் நழுவிவிட்டனர். புதிதாக இறந்தவரைத்தான் உயிர்ப்பித்து விட்டார். இறந்து நீண்ட காலமாகிவிட்டவர்களை இவரால் எழுப்ப முடியுமா? என்ற கேள்வியை எழுப்பிக்கொண்டு பனீ இஸ்ரவேலர்கள் மீண்டும் ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அணுகி,புதிதாக இறந்துவிட்டவரைத்தான் நீங்கள் உயிர்ப்பித்து விட்டீர்கள். இறந்;து நீண்ட காலமாகிவிட்டவரை உங்களால் உயிர்ப்பிக்க முடியுமா என்று கேட்டார்கள்.
அல்லாஹ் நாடினால் எதுதான் நடக்காது? என்று ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மறுமொழி பகர்ந்தனர்.
பனீ இஸ்ரவேலர்கள் மிகவும் சிதிலமடைந்து போயிருந்த ஒரு சமாதியைக் காட்டி,இங்கு அடக்கமானவர் நான்காயிரம் வருடங்களுக்கு முன் ஹழ்ரத் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலத்தில் வாழ்ந்தவர். இவர் பெயர் ஸாம் என்றனர்.
உடனே ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முன் கூறியது போலவே அல்லாஹ்வின் உத்திரவைக் கொண்டு எழுந்திரும்’ என்று சொன்னார்கள். அதிலிருந்து ஒரு மனிதர் எழுந்து ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஸலாம் சொன்னார்.

இம்மாதிரி இறந்து போன பலரை உயிர்ப்பித்து காட்டியும் பனீ இஸ்ரவேலர்களுக்கு அவர்கள் மீது நம்பிக்கை ஏற்படவில்லை. ஆனால் அவர்களில் 12பேர் மட்டும் அவர்கள் மீது விசுவாசம் கொண்டனர். இவர்களுக்கு ஹவாரிய்யூன்கள் என்று கூறப்படுகிறது. இதில் பெரும்பான்மையோர் சலவைத் தொழிலாளியாக இருந்தனர்.

இந்த ஹவாரிய்யூன்கள்தாம் ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரதம சீடர்களாகச் செயல்பட்டு வந்தனர். ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் கூடவே சென்று வருவார்கள். அவர்கள் காடு,மேடு,பள்ளம்,மலை,பாலைவனம் போன்ற இடங்களில் சுற்றித்திரிந்து மக்களுக்கு நற்போதனை புரிந்து கொண்டிருந்தார்கள். அப்போதெல்லாம் சீடர்கள் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு பணிவிடை செய்து வந்தார்கள்.

தமது சீடர்களுக்கு பசி ஏற்படின் அல்லாஹ்வின் திருநாமத்தைக் கொண்டு தரையில் தட்டுவார்கள். அதிலிருந்து ரொட்டி வரும். அதை பங்கிட்டுக் கொடுப்பார்கள். தண்ணீரையும் அவ்வாறே பெற்றுக் கொடுத்தனர்.
ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நெட்டையாகவும் இல்லாது,குட்டையாகவும்இல்லாது நடுத்தர உயரமுடையவர்களாக இருந்தார்கள். அதிக வெண்மையும்,அதிக கறுப்புமில்லாது பொதுநிறமாக இருந்தார்கள்.கம்பளியால் தயாரிக்கப்பட்ட உடையையும் தொப்பியையும்அணிந்து வந்தார்கள். அவர்களது உடையில் பல ஒட்டுகள் இருந்தன. கிழிபடும் உடைகளை அவ்வப்போது தைத்துக் கொண்டனர். அதற்காக ஊசியையும்,நூலையும் தம் சட்டையில் வைத்துக் கொண்டனர். அவர்களின் கரத்தில் எப்போதும் ஒரு கம்பு இருந்து கொண்டே இருக்கும். அவர்கள் சுற்றுப்பிராயணம் செய்யும் போது எவ்விடத்தில் இரவு வருகிறதோ அங்கேயே இரவை கழித்துக் கொள்வார்கள். படுக்கையில் மிருதுவான விரிப்புகளை விரிப்பதில்லை. அடிக்கடி நோன்பு நோற்பவர்களாக இருந்தனர்.

ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்களது சீடர்களில் இருவரை அந்தாக்கியா நகருக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு நல்லுபதேசம் செய்யுமாறு அனுப்பி வைத்தனர். அவ்விருவரும் அந்நகருக்கு அருகில் சென்றபோது,ஆடுகளை மேய்க்கும் வயோதிகன் எதிர்ப்பட்டான். அவர்கள் இருவரையும் விசாரித்தான்.
அதற்கு அவர்கள் நாங்கள் ஹழ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரதிநிதிகளாக வந்திருக்கிறோம் என்று கூறினர்.

நீங்கள் உண்மையாளர்கள் என்பதற்கு என்ன ஆதாரம்? என்று கேட்டார்.
அதற்கு நாங்கள் அல்லாஹ்வின் கிருபையால் கொடிய நோயையும் குணப்படுத்துவோம் என்று கூறினர். என் மகன் தீராத நோயால் அவதிப்படுகிறான். அவனை எல்லா மருத்துவர்களும் கைவிட்டு விட்டனர். முதலில் என் மகனின் நோயை குணப்படுத்துங்கள், நான் உங்களை ஏற்றுக் கொள்கிறேன்’ என்று கூறினார்.
அதன்பிறகு அவர்கள் அந்த முதியவரின் மகன் இருக்கும் இடத்திற்கு சென்று அவனை குணப்படுத்தினர். உடனே அவர் மகிழ்ச்சியடைந்தவராக முஸ்லிமாகி விட்டார். இச்செய்தி காட்டுத்தீ போல் ஊரெல்லாம் பரவி விட்டது. பல்வேறு நோயாளிகள் அவர்களைத் தேடிவந்து நலம் பெற்று சென்றனர்.

இச்செய்தி அந்நகர் அரசனுக்கு எட்டியது. அந்த அரசன் விக்கிரகத் தொழும்பனாக இருந்தான். அவ்விருவர்களையும் கைது செய்து சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டான். இது ஈஸாஅலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு மிகவும் வருத்தத்தை தந்தது. அவ்விருவரும் தொடர்ந்து தங்கள் பணியைச் செய்ய ஷம்ஊன் என்பவரை அந்தாகிய்யா அனுப்பி வைத்தார்கள். இதைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில்:

(நபியே! நம்) தூதர்கள் ஓர் ஊர்வாசிகளிடம் வந்த(போது நிகழ்ந்த)தை அவர்களுக்கு உதாரணமாகச் சொல்வீராக.
நாம் அவர்களிடம் தூதர்கள் இருவரை அனுப்பியபோது,அவ்விருவரையும் அவர்கள் பொய்யாக்கினார்கள்; ஆகவே (அவர்களை) மூன்றாவது தூதரைக் கொண்டு வலுப்படுத்தினோம்; ஆகவே,“நிச்சயமாக நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்ட தூதர்கள் ஆவோம்”என்று அவர்கள் கூறினார்கள்.
-அல்-குர்ஆன் 36:13,14


ஷம்ஊன் அந்தாகியா சென்றார். அங்கு தான் எந்த நோக்கத்திற்காக வந்திருக்கிறேன் என்பதை தெரியப்படுத்தவே இல்லை.
அவர் அரண்மனைச் சேவகர்களை தொடர்பு கொண்டு அவர்களையும்,பின்பு மந்திரிகளையும்,அடுத்து அரசனையும் தொடர்பு கொண்டு நல்லவிதமாக நட்பு கொண்டு அனைவரின் அன்பையும் பெற்றுக் கொண்டார். அவரது நுண்ணறிவையும்,தீட்சண்யத்தையும் பார்த்து அரசன் அவரை தம்முடைய அந்தரங்க ஆலோசகராக நியமித்துக் கொண்டான். அவரைக் கேட்காமல் எந்த காரியத்தையும் அரசன் செய்ய மறுத்து வந்தான்.

ஒருசமயம் சிறைக் கைதிகளை அரசன் பார்வையிட்டுக் கொண்டே வரும்போது அவனுடன் ஷம்ஊனும் சென்றார். ஈஸா நபியின் சீடர்கள் இருக்கும் இடம் வந்ததும், ‘இவர்கள் கொலைகாரர்களாகவோ,திருடர்களாகவோ எனக்குத் தெரியவில்லையே! ஏன் இவர்கள் சிறையில் இருக்கிறார்கள் என்று அரசரிடம் கேட்டார்.
அதற்கு அரசர் அவர்கள் அவ்வாறு செய்திருந்தால் பரவாயில்லை. இவர்கள் எங்கள் கடவுள்களை தூஷிப்பவர்களாக இருப்பது மட்டுமில்லாமல் புதுவிதமான மார்க்கத்தை கொண்டு மக்களிடம் புகுத்த பார்த்தார்கள்.
இதுபற்றி அவர்களிடம் விசாரிக்க வேண்டும் என்று ஷம்ஊன் சொன்னார்.

அவ்விருவரையும் சிறைக்கதவை திறந்து வெளியே கொண்டு வருமாறு அரசன் உத்தரவிட்டான். அவ்விருவர்களும் சிறையை விட்டு வெளியே வந்தார்கள். ஷம்ஊன் அவர்களிடம் கண்சாடை காட்டிக் கொண்டு கேள்விகளை கேட்க ஆரம்பித்தார். அவர்கள் மிகத் தெளிவாக அல்லாஹ்வின் சக்தியைப் பற்றியும், ஈஸா நபியின் தூதுத்துவம் பற்றியும் சொன்னார்கள். நோயாளிகளை குணமாக்குவது பற்றியும்சொன்னார்கள்.
பிறவிக் குருடன் ஒருவரை வரவைத்து அவனை குணமாக்கும்படி சொன்னார் ஷம்ஊன். அவர்களும் அல்லாஹ்விடம் கையேந்தி துஆ செய்தார்கள். அந்தக் குருடன் பார்வை பெற்றான்.

உடனே ஷம்ஊன் அரசனிடம் சென்று அவன் காதருகில்,இவர்கள் அல்லாஹ்விடம் வேண்டி பிறவிக் குருடனை பார்வை பெறச் செய்து விட்டனர். நாமும் நம் கடவுள்களிடம் சொல்லி ஏதாவது அற்புதத்தை நிகழ்த்திக் காட்ட வேண்டும் என்று சொன்னார். நமது கடவுள்கள் கல்லால் ஆனவர்கள்.அவர்களால் எவ்வித பிரயோசனமும் இல்லை என்பதை உணர்ந்து வெட்கத்தால் அரசன் முகம் சிவந்தான்.
அதேபோல் இளவயதில் இறந்து போன அரசனின் மகளை உயிர்ப்பித்துக் காட்டினார்கள். உடனே அரசன் மிக்க மகிழ்ச்சி கொண்டு, உடனே முஸ்லிமானார். அந்தாகியா மக்களையும் முஸ்லிம் மார்க்கத்தை தழுவும்படி சொன்னார். அந்நாட்டு மக்கள் அனைவரும் முஸ்லிமாயினர்..
 

fathima.ar

Well-Known Member
ஒரு மன்னர் தன் மக்களோடு முஸ்லிம் ஆகிட்டாங்க..
பனீ இஸ்ரவேலர்கள் இதை எப்படி எடுத்துப் பாங்க??
நாளை பார்ப்போம்..
 

fathima.ar

Well-Known Member
Nice sis, Bible la லாசர் Quran la ஆஸர். துஆ enpathu prayer panratha solringala or vera meaninga? sis

துவா- பிரார்த்தனை நமக்கு வேணும்கிறதை இறைவனிடம் வேண்டி கேட்கிறது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top