Ramadan 2021- day 10 Prophet Eesa's birth and childhood

Advertisement

fathima.ar

Well-Known Member
மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சிற்றன்னையின் மகன் ஒருவர் யூசுஃபு நஜ்ஜார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் தச்சுச்தொழில் செய்து கொண்டு,மீதியுள்ள நேரத்தில் இறைவனை வணங்கி வந்தார். அவருக்கு இச்செய்தி கிடைத்ததும்,மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் அவர்கள் கர்ப்பமான விசயத்தை பற்றி கேட்டார்.

அதற்கு மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தான் சுத்தமானவள் என்றும்,இது அல்லாஹ்வின் நாட்டம் என்றும் கூறினாள்.
ஹழ்ரத் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு பிரவச காலம் நெருங்கியது. அனைவரும் ஆலோசனை செய்து,யூசுஃப் நஜ்ஜார் உடன் வெளியூருக்கு அனுப்பி வைத்தார்கள். பைத்துல் லஹ்ம் என்னும் இடத்தை அடைந்ததும் பிரவச வேதனை ஏற்பட்டு அங்கு ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஈன்றெடுத்தனர்.

கவலை மிகுதியால் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அழ,இறைவன் அசரீரி மூலமாக ஆறுதல் கூறி அங்கு நின்று கொண்டிருந்த ஒரு பட்டுப்போன பேரீத்தம் பழ மரத்தன் கிளைகளைப் பிடித்து உலுக்குமாறு கூற, அவர்களும் அவ்விதமே செய்ய,கனிகள் உதிர்ந்தன. அருகில் நீருற்றும் உருவாயிற்று. பேரீத்தங்கனிகளை உண்டும்,அங்கிருந்த நீரை அருந்தியும் வாழ்ந்து வந்தனர்.

மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அந்த குழந்தையை எடுத்துக் கொண்டு யூசுப் நஜ்ஜாருடன் தங்கள் வீடு வந்து சேர்ந்ததும் உறவினர்கள்,ஜனங்கள்,எல்லோரும் ஒன்று திரண்டு படையெடுத்து வந்தது அந்த குழந்தையைப் பற்றி கேள்விகள் கேட்க ஆரம்பித்தனர்.
இந்த குழந்தை எப்படிப் பிறந்தது? இதற்கு தந்தை யார்? நல்ல குடும்பத்தில் பிறந்த நீ இப்படி செய்வது உனக்கு வெட்கமில்லையா? போன்ற அடுக்கடுக்கான கேள்விகளைத் தொடுத்தனர்.

மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இந்தக் கேள்வவிகளுக்கெல்லாம் எவ்விதப் பதிலும் கொடுக்காமல் குழந்தையை ஜாடை காட்டி குழந்தையிடம் கேளுங்கள் என்று சைகை மூலம் அறிவித்தார்கள்.
அச்சமயம் ஹழ்ரத் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வின் உத்திரவுபடி நோன்பு நோற்றிருந்தார்;கள். அக்காலத்தில் நோன்பு நோற்பவர்கள் பிறருடன் பேசுவதையும் தடைபடுத்திக் கொண்டிருந்தனர்.
தங்களுடைய கேள்விகளுக்கு பதில் கூறாது குழந்தையிடம் கேட்கும்படி ஜாடை காட்டுகிறார்களே! என்று குழந்தை எப்படி பேசும்? நாங்கள் பைத்தியக்காரர்களா? என்று அகங்காரத்துடன் வந்திருந்தவர்கள் கடும்கோபம் கொண்டனர்.

உடனே பால்குடித்துக் கொண்டிருந்த அக்குழந்தைத பால் குடிப்பதை நிறுத்திவிட்டு அக்கூட்டத்தினரைப் பார்த்து, ‘நிச்சயமாக நான் அல்லாஹ்வின் அடியானாக இருக்கிறேன். அல்லாஹ் எனக்கு இன்ஜீல் என்ற வேதத்தை அருளி,என்னைத் தனது நபியாகவும் ஆக்குவான். நான் எங்கிருந்த போதிலும்,என் மீது பேரருள் புரிந்து கொண்டே இருப்பான். நான் இவ்வுலககில் இருந்து வரும்வரை,தொழுது கொண்டும்,ஏழை வரியைக் கொடுத்துக் கொண்டும் வருமாறு என்னை ஏவியுள்ளான். எனது தாய்க்கு நன்றி செலுத்தி வருமாறும் கூறியுள்ளான். என்னை அவன், என் வாழ்நாள் முழுவதும் வழி தவறச் செய்ய மாட்டான். என்மீது என்றென்றும் அவனது சாந்தியும்,சமாதானமும் நிலைத்து நிற்கும்’ என்று பேசினார்கள். அப்போது அவர்களது வயது நாற்பது நாட்கள்தான்.

பிறந்து நாற்பதே நாள் ஆன குழந்தை பேசியதும் வந்தவர்களிடையே ஒரே குழப்பம் ஏற்பட்டது. ஜகரிய்யாவையும்,யூசுஃபுந் நஜ்ஜார் ஆகியோர்தான் இதற்கு காரணம். அவர்களை கொன்று விட வேண்டும். அதுதான் சிறந்த பரிகாரம் என்று தமக்குள் பேசிக் கொண்டனர்.
இதற்கிடையே வானஇயல் நிபுணர்கள் வானத்தில் புதிதாக தோன்றிய ஒரு நட்சத்திரத்தைக் கண்டு, ‘இது உலகில் ஒரு நபி தோன்றியிருப்பதற்கான அடையாளமாக இருக்கிறது’ என்றார்கள். பனீஇஸ்ரவேலர்களின் மதகுருமார்கள் வேதங்களைப் புரட்டிப் பார்த்து,இச்சமயத்தில் எங்களுக்கு வழிகாட்டக்கூடிய ஒரு தேவத் தூதர் பெத்லஹேமில் பிறந்து விட்டார்’ என்று மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அந்நாட்டு மன்னனான ஐரதூஸ் இச்செய்தி கேட்டு ஆத்திரப்பட்டான். அந்த குழந்தையால் தனது ஆட்சிக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என்று எண்ணி அக்குழந்தையை கொன்றுவிட அவன் தீர்மானித்தான்.

அரசனின் இந்த எண்ணத்தை வஹீ மூலம் அல்லாஹ் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு தெரிவத்து, உடனே அந்நாட்டை விட்டு வெளியேறி எகிப்துக்குச் சென்றுவிட கட்டளையிட்டான். யூசுஃப் நஜ்ஜாரின் துணையைக் கொண்டு அவர்கள் அந்த நாட்டை விட்டு வெளியேறி எகிப்து சென்று அங்கு நூல் நூற்று அதிலிருந்து கிடைக்கும் சொற்ப வருவாயைக் கொண்டும்,வயல்களில் உதிர்ந்து கிடக்கும் தானியங்களைப் பொறுக்கி உணவு சமைத்தும் மிகவும் கஷ்ட வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு யூசுஃப் நஜ்ஜாரும் காடுகளுக்கு சென்று விறகு வெட்டி விற்று,அதில் கிடைக்கும் சொற்ப வருவாயை ஹழ்ரத் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் கொடுத்து உதவி செய்து வந்தார்.

ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு மூன்று அல்லது நான்கு வயது ஆனதும் அவர்களை அன்னை மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கல்வி கற்க ஒரு ஆசிரியரிடம் சேர்த்தார்கள். ஆசிரியர் கல்வியைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்ததும் , ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அதனை முழுமையாக சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அதனைக் கண்ட ஆசிரியர் அவர்கள்,இந்த குழந்தை அறிவில் என்னைவிட பன்மடங்கு சிறந்ததாக இருக்கிறது. எனவே அதற்கு நான் கற்றுக் கொடுக்க வேண்டியது ஒன்றுமில்லை என்று சொன்னார்கள். அதற்கு மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள், ‘நீங்கள் கற்றுக் கொடுக்காவிட்டாலும் இவனை உங்கள் அருகிலேயே சிறிது காலம் இருக்கவிடுங்ககள்’ என்று கூறி பாலகரான ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அந்த ஆசிரியரிடமே விட்டுச் சென்றார்கள். இப்படியே சில காலம் சென்றது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top