Pain of love

Advertisement

PremaA

Active Member
முதன்முறையாக வலிக்க வலிக்க உணர்ச்சிகளின் குவியலில் சிக்கி நான் வாசித்த காதல்கதை என்றால் அது சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே..

இன்னும் வேண்டும் வேண்டும் என்று மனது கூப்பாடு போட்ட கதையும் கூட. எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாம் அப்புவின் விமர்சனத்தை பார்த்து (படிக்கவில்லை) மட்டுமே வாசித்த கதை. கதையின் போக்கிலேயே அடித்து செல்லப்பட்டேன் இல்லை இல்லை துவைக்கப்பட்டேன்..

ஆமாம் ! குளிர்ந்த நீரில் மூழ்கி எழுந்தால் உடலும் மனமும் எப்படி ஆனந்தமாக இருக்குமோ ்அப்படி இருந்தது துவக்கம் லட்டுவின் கோலிகுண்டு கண்ணும், பனைமரத்தின் மயக்கும் சிரிப்பும், மல்லிகை பந்தலும், செண்பகத்தின் வாசனையும் என்னை நீரீல் ஊரிய துணி போல குளிர்ச்சியாக உணரவைத்தது.

காணவந்தவனை கண்டும்
காணமுடியவில்லையே என்று
கண்டவன்பால் ஈர்க்கப்பட்டு
காணவந்தவனை பின்னுக்கு தள்ளி
பெயரை அறியாமல், ஊரை அறியாமல், அவனின் உயரமரியாமல் கவரப்பட்டபோது சோப்பு நுரையை போல அத்தனை மிருதுவாக, மென்மையாக கண்ணாடி போன்று உணர்ந்தேன்.

காதலை உணர்ந்து
காதலை சுவாசித்து
காதலை தீண்டி
காதலை புகட்டி
கடைசியில் வேண்டாம் இது சரிவராது என்று பிரிந்த போது அடித்து துவைத்த துணி போல் துவண்டு போய் உணர்ந்தேன்.

காதலாகி கசிந்து உருகி, மருகி, கரைந்து போன இரு உள்ளங்கள் விதியின் பிடியில் சிக்கி சின்னா பின்னா வேன்று சிதறிய அந்த கோர சம்பவமும், லட்டு என்னைவிட்டு போகாதே என்று உயிரை உருக்கி வார்தைகளில் கொட்டி சொன்னவன் இன்று அவளையே யாரேன்றே தெரியாத நிலை இதை பார்த்து நான்
ஈரமான துணியைபோல பாரமானேன்
கசக்கிய துணியைபோல கசங்கி போனேன்
பிழிந்து துணியைபோல முறிக்கி போனேன்
கிழிந்த துணியைபோல கந்தலாய் போனேன்

“அண்ணா நீயாவது என்னோட இருப்பிய” இந்த வரியை எத்தனை முறை வாசித்தேனோ யான் அறியேன்.. அலசிய துணியிலிருந்து வழியும் நீர் போல என் கண்ணில் கண்ணீர் வழிந்ததே.. லட்டு உனக்க இவ்வளவு பெரிய தண்டனை என்னால தாங்க முடியலையே என்று என் மனம் ஓலமிட்டதே.. கதை என்று தெரிந்தும் நான் எப்படி அந்த வலியை உணர்ந்தேன்.. கனவு கூட இல்லையே நிஜத்தில் நான் உணர்ந்தேனே அந்த வலியை, உயிரை கொல்லும் அந்த வேதனையை.. எப்படி சாத்தியம்.. காதல் காதல் வலிக்க வலிக்க காதல்..

இந்த கதையை வாசிக்கும் போது ஒருயிடத்தில் கூட டிவிஸ்டு என்று உணரவில்லை எல்லாமே விதி வலியது என்கிற வாக்கியத்தின் முழு செயல்முறை விளகத்தை கண்ணன் மட்டும் லட்டுவின் மூலம் விதி நமக்கு பாடம் நடத்தி செல்கிறது. கண்ணனும், லட்டுவும் அதில் மாட்டிக்கொண்ட பலி ஆடுகளாகவே உணரபட்டேன்.

வலிகளை புதைத்து புதைக்க முடியாமல் அதனுள் புதைந்து வாழும் ஜீவன்கள். வலியும் அந்த வலியின் நிவாரணியும் அவர்களே என்று வழி தெரிந்தும் விதி அவர்களிடம் ஆடிய கண்ணாமூச்சி ஆட்டதில் சிக்கியவர்க்ளுக்கு விதி நியாயம் செய்யுமா?

இந்த கதை சொல்லப்பட்ட விதம் இரவை கிழித்துக்கொண்டு வரும் அதிகாலை சூரியனை போல வலியும், இனிமையுமாக மாறி மாறி சொல்லப்பட்டது. சபாஷ் @SHOBA KUMARAN

எந்த கதையை படித்தாலும் ஏதாவது ஒரு கதாபாத்திரம் என் மனதை கொள்ளை கொல்லும் ஆனால் இந்த கதையில் கண்ணனும் லட்டுவும் மாறி மாறி என்னை ஆக்கிரமித்து கொண்டார்கள் .. யார் சிறந்தவர் என்றால் நான் யாரை சொல்லுவேன் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சலைக்காமல் ்அல்லவா இருக்கிறார்கள்.

முடிந்த கதையென்று தான் படிக்க ஆரம்பித்தேன் வலிக்க வலிக்க படித்தேன் நீண்ட நெடிய மூன்று நாட்களாக முடியும் தருவாயில் தான் தெரிந்தது இது இன்னும் முடியவில்லையென்று.

கடும் வெயிலுக்கு பின் வரும் நிழலின் குளுமை போல
வரண்ட தொண்டைக்குள் இறங்கும் முதல் துளி நீர் போல
நெல்லிக்காய் சாப்பிட்ட பின் நீர் அருந்தி அதன் சுவையை நீட்டிப்பது போல அடுத்த பதிவிற்காக மிக மிக ஆவலாக.. அந்தில் பறவைகளின் சங்கமத்தை காண பேராவள் கொண்டு ... அந்த தருணத்தை படம்பிடிக்க காத்து இருக்கிறேன்.

பிரியமுடன்
பிரேமா ❤️
 
Ananya

100% mam. Not only story mam . Your comments also mam.
 
banumathi jayaraman

Well-Known Member
பானுமா நான் பிரேமலதா அரவிந்தன் .. என்னைய மறந்துட்டீங்களா ?
ஹா ஹா ஹா
உங்களை மறப்பேனோ, லண்டன் லட்டு?
பிரேமாA-ன்னு இருந்ததால் நீங்கன்னு
நான் நினைக்கலை, பிரேமலதா டியர்
பிரேம்ஸ்-ன்னு போட்டிருந்தால் நீங்கதான்னு நான் ஈஸியா கண்டுபிடிச்சிருப்பேன்ப்பா
நீங்களா இவ்வளவு அழகான விமர்சனம் எழுதியது?
சூப்பர் சூப்பர் பிரேமலதா டியர்
வாழ்க வளமுடன் நலமுடன்
 
Janavi

Well-Known Member
Sis....நீங்கள் சொல்வது போல வலிக்க வலிக்க ,கண்ணீரை சிந்தி ,அதையும் ரசித்து ரசித்து ,உணர்வில் ஊ றிய சொந்தங்கள் சுதா கண்ணன்..... முதல் கதையிலே இவ்வளவு உச்சம் அடைய....Hats off ஷோபா சிஸ் ...
 
PremaA

Active Member
ஹா ஹா ஹா
உங்களை மறப்பேனோ, லண்டன் லட்டு?
பிரேமாA-ன்னு இருந்ததால் நீங்கன்னு
நான் நினைக்கலை, பிரேமலதா டியர்
பிரேம்ஸ்-ன்னு போட்டிருந்தால் நீங்கதான்னு நான் ஈஸியா கண்டுபிடிச்சிருப்பேன்ப்பா
நீங்களா இவ்வளவு அழகான விமர்சனம் எழுதியது?
சூப்பர் சூப்பர் பிரேமலதா டியர்
வாழ்க வளமுடன் நலமுடன்

பானுமா நானே தான் பானுமா .. என் முழு பெயரை தான் போட்டேன் அந்த பெயர் ஏற்கனவே இருக்கு என்று சொல்லிவிட்டதால் சுருக்கி போட்டேன் ..

எப்படி இருக்கீங்க .. ரொம்ப நாள் ஆச்சு உங்கிட்டயெல்லாம் பேசி
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top