P2-Thuli Maiyal Konden

Advertisement


NishaLakshmi

Super Moderator
Tamil Novel Writer
ஹாய் பிரண்ட்ஸ்..precap இதோ...எல்லாரோட கமேன்ட்சும் படிச்சிட்டேன்..நாளைக்கு reply போடறேன்..உங்க சப்போர்ட்க்கு ரொம்ப ரொம்ப நன்றி..


------
நேற்றெல்லாம் திருமணத்திற்கு வரமாட்டேன் என்று அடம்பிடித்தவளை அதட்டி உருட்டி சம்மதிக்க வைக்கவே வசந்திக்கு பெரும்பாடாய் போயிற்று.

“நீ வீட்டுல தனியா இருக்கேன்னு தெரிஞ்சா,அந்த குரங்குப்பைய வந்துருவான்..உன்னை நம்பி தனியா விட்டுட்டுப்போய்,என்னால அங்க நிம்மதியா இருக்கவே முடியாது”என்றதும்..

“வரவே மாட்டேன்”என்று அடம்பிடித்தாள்.

--------------------------------------

தன்னுடைய கெட்ட பழக்கவழக்கங்களை நண்பர்கள் எவரேனும்சுட்டிக்காட்டினால்”மயூ எனக்கு சொந்தமாகற அன்னைக்கு எல்லாத்தையும் விட்டுடுவேன்டா..ஒரே ஒருநாள்..ஒரே ஒருநாள் அவளோட வாழ்ந்தா சொர்க்கத்தில வாழ்ந்த சந்தோஷத்தில,அப்படியே செத்துப் போயிடுவேண்டா”-கள்ளுண்டவனைப்போல கண்கள் கிறங்கிப்போய் சொல்வான்..

“அவ அழகென்ன...!என்னைப் பார்க்கற பார்வையென்ன..!!அப்படியே அள்ளி தூக்கிட்டுப்போயிடணும் போல இருக்கும்டா...!!!என்னை கட்டி இழுக்கற அந்த கண்ணுலயும்..உதட்டுலையும் முத்தம் வைச்சா இந்த கள்ளே தேவையில்ல...”என்பவனின் மனக்கண்ணில் என்னவென்னவோ காட்சிகள் ஊர்வலம் போகும்..
-------------------------------
அவர்களை பார்த்துவிட்டு,அவர்களின் அருகில் தன் நண்பனுடன் வினோதன், இன்று அதீத தைரியத்தில்..”யார் சம்மதிச்சாலும், சம்மதிக்கலைன்னாலும் என் கல்யாணம்,நா ஆசைப்பட்டவளோடையே நடக்கும்டா..எவனாலயும் என்னை ஒண்ணும் பண்ண முடியாது”சத்தமாக தன் நண்பனிடம் சொல்லிக் கொண்டிருந்தான்..

இதுவரை யார்யாரின் மூலமோ காதுக்கு கிட்டிய விஷயம்...இன்று இவர்களது வாயாலும் பேசப்பட...’இந்த அவச்சொல்லுக்கு பயந்தே..எம்பொண்ண இவபுள்ளைக்கு கட்டிக்கொடுத்திடுவேனோ’ கலங்கித்தான் போனார்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top