Naan Ini Nee - Precap 41

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
“அப்படியா??!!” என்ற மிதுன், அவனை ஆழம் பார்க்க, “ஆமா சார்.. அப்படியெல்லாம் இல்ல.. நீ.. நீங்க சும்மா என்னை டென்சன் பண்ணவேண்டாம்..” என,

“ஓ..!! சரி அப்போ இன்னொரு கதை சொல்லவா??!!” என்றான் மிதுன்.

“கதையா??!!”

“எஸ்.. கதை தான்... எல்லாமே கதை தான்.. முடிவு மட்டுமே இனி மிச்சம் இருக்கிற ஒரு கதை. ஆனா அந்த முடிவு யாரோடதுன்னு முடிவு பண்றது இப்போ உன் கைல..” என,

“யா.. யாரோட முடிவு...” என்று திக்கினான்.

“நான்.. அப்புறம் தீபன்.. அப்புறம்...” என்று மிதுன் இழுக்க,

“அ.. அப்புறம்...??!!!” என்று கேட்டவனுக்கு நா வரண்டது..

“நீ....”

“நானா??!!”

“எஸ்.. நீயே தான்.. நான் சொல்றதை செய்யலைன்னா உன்னோட முடிவுங்கிறது உறுதி...” என்ற மிதுனின் கண்கள் சாத்தானின் சிரிப்பைத்தான் சிந்தியது.

“சார்..??!!!” என்று அவன் பயந்து எழுந்துவிட,

------------------------------------------

“Oh.!! Yuva...” அனைவரின் வெள்ளை நிற டீஷர்ட்டிலும் நீல நிற எழுத்துக்களாய் இவ்வர்தைகள் இடம் பெற்றிருக்க, முதல் வரிசையில் தீபன் சக்கரவர்த்தி அவனருகே சற்று தள்ளி அனுராகா, இருவருக்கும் இரு பக்கமும் நாகாவும் தர்மாவும்.

கிட்டத்தட்ட லட்சம் பேர். அனைவரும் இளைஞர் இளைஞிகிகள்.. சென்னை மாநகரின் பிராதான சாலையின் ஒரு பக்கம் முழுவதும் நின்றிருந்தனர். அனைவரிடமும் சைக்கிள்.

அந்தச் சைக்கிள் இனி அவர்களின் சொந்தம்..!!

இன்கம்டாக்ஸ் விசயத்தில் அனுராகா ஏற்பாடு செய்தது, மேற்கொண்டு பல கோடி கொடுத்து தீபன் லட்சம் சைக்கிள் வாங்கி இருந்தான். அனைத்தும் புது மாடல்.

முதல் வரிசையில் இவர்களுடன், இளைஞர் சாதனையாளர் விருது வாங்கியவர்கள் எந்தெந்த துறையில் இருக்கிறார்களோ அவர்களை எல்லாம் அழைத்திருந்தான்.

அதன்பின்னே திரைத்துறை பிரபலங்கள்.. நாற்பது வயது தாண்டி யாரும் அங்கில்லை..

பின் அவர்களின் கல்லூரி மாணவ மாணவியர், பின் பொதுவில் யார் யார் எல்லாம் விருப்பம் இருக்கிறது என்று தெரிவித்திருந்தார்களோ அவர்கள் எல்லாம். அனைவருக்கும் அவரவர் பெயர் பொறிக்கப்பட்ட சைக்கிள் கொடுக்கப்பட்டிருக்க, கூடியிருந்த அனைவரின் முகத்திலும் ஒரு புது மலர்வு. புத்துணர்ச்சி..

ஆங்காங்கே காவல் துறையினர் பந்தோபஸ்த்திற்கு நிற்க, ஒவ்வொரு நூறடி தூரத்திலும், மருத்துவ வாகனம் நிறுத்தப்பட்டு இருந்தது.

-----------------------------------------

அனுராகா திகைப்பில் இருக்க, தீபனுக்கும் கூட வார்த்தைகள் இல்லை அந்நேரம். கண் முன்னே ரத்த வெள்ளம்..

சத்தம் கேட்டுப் பார்க்கையில் அனைத்துமே கை மீறியிருக்க, அந்த நொடி என்ன செய்வது என்றுகூட யாருக்கும் ஒன்றும் தோன்றவில்லை.

எப்படி இப்படி?!!

ஏன் இப்படி??!!

 

Joher

Well-Known Member
:love::love::love:

எப்போ பாரு கத்தியும் ரத்தமுமா.......
அந்த மிதுனை போட்டு தள்ளுங்கயா....... பூச்சாண்டிகாட்டிகிட்டே இருக்கான்........

அடப்பாவிங்களா :D:D:D ITக்கு கணக்கு காட்டுறேன்னு சொல்லி ஆளுக்கொரு புது சைக்கிள் குடுத்தா ஊரே வருமே......
அதுல 40 க்கு மேல யாரும் கிடையாதாம் :mad::mad::mad:

ரெண்டும் கேடிங்க........ ஆனால் உங்கண்ணன் ஒரு தாதா இருக்கிறானே......
என்ன பண்ணுனானோ???
ரத்த வெள்ளத்தில்???
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அச்சோ இப்போ யாருக்கு என்ன
ஆச்சு, சரயு டியர்?
அந்த அல்லக்கையை மிதுன்
போட்டுத் தள்ளிட்டானா?

இன்னும் இரண்டு மூன்று
அப்டேட்ஸ்தான் வரும்ன்னு
வேற நீங்க சொல்லிட்டீங்க
அதுக்குள்ளே எத்தனை டுவிஸ்ட்ஸ்
வைக்க முடியுமோ தாராளமா
வைங்க
ம்ம்ம்......நடத்துங்க நடத்துங்க,
சரயு டியர்

"ஆனந்த தோரண"த்தை விட செம
விறுவிறுப்பா போகுதே, சரயு டியர்
அந்த நாவலை இந்த நாவல் பீட்
பண்ணிரும் போலவே

என்னமோ தெரியலே வர வர
சூப்பர் டூப்பரா எழுதறீங்கப்பா

என்னப்பன் விநாயகர் பெருமானின் திருவருளால் நீங்கள் தொட்டது துலங்கட்டும் நினைத்தது நிறைவேறட்டும்
எல்லாமே இனிமையானதாக நடக்கட்டும், சரயு டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top