Naan Ini Nee - Precap 10

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
உஷாவும் ஒரு முடிவில் இருந்தார். இன்று இவன் எடுக்கும் வரைக்கும் விடாது அழைப்பது என்று.. தீபன் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவனோ, பின் என்றிருந்தாலும் பேசித்தானே ஆகவேண்டும் என்று.

“மாம்..” என்றழைக்க,

“என்னடா.. என்ன??!! இப்போதான் போன் எடுக்க முடிஞ்சதா??!! மிதுனுக்கு பேசுற.. உங்கப்பா பிஏக்கு பேசுற.. ஆனா நான் போன் பண்ணா எடுக்க முடியாதா??!! என்னடா நினைச்சிட்டு இருக்க நீ..” என

“ம்மா... உன்னோட திட்டு கேட்டுகூட நாளாச்சு..” என்றுசொல்ல,

“டேய்..” என்று பல்லைக் கடித்தார் உஷா..

“ஹா ஹா.. சொல்லும்மா..” என்றவனோ மிக மிக இயல்பாய் பேசுவது போல் பேச,

“என்ன சொல்லும்மா.. எப்போ வர நீ?? அந்த பொண்ணு அனு எங்க??” என்று கேட்க,

“வந்திடுவேன் சீக்கிரமே..” என்றுமட்டும் முடித்துக்கொண்டான் தீபன்..

-------------------------------------

இவன் தான் என்று தெரிந்ததுமே தீபன் சக்ரவர்த்தியின் பார்வை நொடியில் அவனை அளவிட ‘டேய் டேய் நீ எல்லாம் என்கிட்டே கூட வர முடியாது..!!’ அப்படியான எண்ணம் தான் அவனுக்குத் தோன்றியது.. இதற்கும் பிரஷாந்த அழகனே.. அவன் பார்க்கும் வேலையும் வாங்கும் சம்பளமும் கொடுத்த ஒரு நிமிர்வு மட்டுமே அவனிடம்.. அதைவிட்டு தனிப்பட்டு தீபனின் கண்களுக்கு சிறப்பாய் எதுவும் தோன்றவில்லை.

புகைப்படத்தில் பார்த்ததற்கும் நேரில் பார்ப்பதற்கும் நிறைய நிறைய வித்தியாசங்கள் தெரிய, ‘நீ ராகாக்கு மேட்சா??!!! வாட்ட ஜோக்..’ என்று தீபன் தானாகாவே சிரித்துக்கொள்ள,

“சார் நீங்க கேட்ட டீடெய்ல்ஸ்...” என்று ஒரு சிறு காகிதம் கொண்டு வந்து, சற்று முன் நகர்ந்து சென்றவன் திரும்ப வந்து கொடுக்க, அதை வாங்கிப் பார்தவனுக்கோ கொஞ்சம் நிம்மதி மூச்சு..

“சோ... இன்னிக்கு நைட் இவன் வெக்கேட் பண்ணிடுவான்...” என்று முனுமுனுத்தவன் இதழில் சின்னதாய் ஓர் வெற்றிப் புன்னகை.

-----------------------------------
பழங்கள் வெட்டும் கத்தி மட்டுமே அவளிடம்.. அதனை வைத்து மட்டுமே சரடு இணைப்புகளை அறுத்தெறிய முடியும்.. அதனை செய்யவும் செய்தாள்தான். ஆனால் அவளின் உயரத்திற்கு எட்டுமளவு தானே அவளால் எதையும் செய்ய முடியும்... தலை எளிதாய் வெளியே வந்துவிட்டது. ஆனால் உடல்??!!!


இரண்டுப் பக்க கையிலும் காலிலும் சிராய்ப்புகளும், பின் சில ஆழமான வெட்டுக்களும். அனு அதெல்லாம் பொருட்படுத்தவே இல்லை.. மேலே மேலே முன்னேறிக்கொண்டு இருக்க, ‘எங்க போனா??!!’ என்று தேடியவனின் பார்வையில் கீழே சிந்தியிருந்த அவளின் ரத்தத் துளிகளே சாட்சியாய் அமைந்தன..
பார்த்ததுமே துடித்துப்போனான்..


“ராகா..!!!” என்று உள்ளிருந்து கத்தியவன், அவள் போன வழியில் எட்டிப்பார்க்க, அவனால் எதையும் கணிக்க முடியவில்லை..

வேகமாய் குடில்விட்டு வெளியே வந்தவன், பின்னே போய் பார்க்க, அனுராகாவோ அந்த குடிலின் நடுப்பகுதியில் இருந்து மெது மெதுவாய் அமர்ந்து இறங்கிக்கொண்டு இருந்தாள். அவள் கையிலும் காலிலும் வழிந்தோடும் குருதி மட்டுமே கண்ணுக்குத் தெரிய,

“ராகா..!!! டோன்ட் மூவ்...” என்று கத்த, அவனின் குரல் கேட்டு கொஞ்சம் திடுக்கிட்டுத்தான் போனாள் அனுராகா..

-------------------------------------------------------

“ஓ!! மை காட்...!!” என்றுதான் உள்ளம் பதறியது தீபனுக்கு..

அவளோ அவனை ‘நான் உன்னை வென்று விட்டேன்..’ என்பதுபோல் தான் பார்க்க, அதெல்லாம் அவனுக்கு ஒன்றும் பாதிக்கவில்லை. மாறாக அவளின் காயங்கள் மட்டுமே பெரிதாய் இருந்தது.

“ராட்சசி... ரத்தக் காட்டேறி... எப்படி இருக்கா இவ??!!!” என்று அவளுக்கு கேட்கும் படியே அவன் சொல்ல,

“ஹா ஹா ஹா!!!” என்று அனுராகா சத்தமாய் சிரித்தேவிட்டாள்.

“ஏய்... ஒழுங்கா கிளம்பி ஹாஸ்பிட்டல் வா..” என்று அதட்ட,

“ம்ம்ச் பிரசாந்த் வரட்டும்.. பேசிட்டு போலாம்.. இனி என்ன கிளம்புறது தானே..” என,
‘பாவி பாவி..’ என்றுதான் தீபன் பார்த்தான்.
 

Joher

Well-Known Member
Tks சரயு........
அம்மாக்கு அடங்குற பையனா இவன்????????

பிரஷாந்த் வந்தாச்சு........ அவனே வேணாம்னு சொல்லிடுவானா??????

இங்க ஒருத்தன் கொதிக்கிற தண்ணீர் மாதிரி ஜம்ப் பண்ணுறானே........
பாருடா உன்கிட்ட இருந்து தப்பிக்க எந்த எல்லைக்கும் போறா........

நீ ராகாக்கு மேட்சா....... what a joke........:eek:
ரொம்ப ஓவர்டா உனக்கு........

நான் உன்னை வென்று விட்டேன்........ இனி கிளம்புறது தானே......
யாரோட:unsure::unsure::unsure::unsure::unsure:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top