Naan ini nee Epilogue - Kavya

Advertisement

Chandhini

Well-Known Member
ஹாய் தோழர் தோழிகளே...:love::love::love: என் பெயர் காவ்யா. இதே மாதிரி ஒரு கதையோட முடிவுரை எழுதி எழுத்துலகில் முதல்முதலா அடிஎடுத்து வச்சேன் அதனால இதை பார்த்ததும் என்னால சும்மா இருக்கவே முடியல. இங்கே நான் புதுசு தான். என்ன எபிலாக் கொஞ்சம் பெருசா போச்சி. நம்ம கதை தான் குட்டி குட்டியா வரும் அடுத்தவங்க கதைனா பெருசா போகும் அட்ஜஸ்ட்ங்க ப்ளீஸ்ங்க...:p:p:p:p

நான் இனி நீ

தீபன் மற்றும் ராகா தேனிலவு முடிந்த கையோடு அவர்களின் அன்றாட வாழ்க்கையைத் தீபராகமாய் இன்னிசையுடன் வாழப் பழகிக்கொண்டனர். (சில நேரம் கூச்சல் ராகமும் உண்டுங்கோ)

இருமனதும் துணையுடன் தனிமையை வெகுவாக எதிர்பார்க்க, இருவருக்கும் தலைக்கு மேல் வேலை இருக்க எங்கிருந்து துணையைத் துணைக்கழைப்பது?
ஆனாலும் தீபன் முடிவெடுத்திருந்தான் மாலை முதல் இரவு வரை இனி என்னவானாலும் வீட்டில் இருப்பதென்று. தீபன் வீட்டிலிருக்க அவனின் டைட்டன் மட்டும் வெளியில் இருப்பாளா?


மனைவிக்காக, அவளை இனியும் தனிமையில் தவிக்க விடக்கூடாது என்றாலும் தாயையும் பார்க்க வேண்டியிருந்ததே. அதுவும் மிதுன் அவனின் அறையிலே கோமாவில் படுத்திருக்க தாயாய் அவரின் மனம்படும்பாடு தெரிந்து அவரையும் சகஜமாக்க முயன்றான். இப்போதெல்லாம் வீட்டிற்கு தாமதமாய் வரும் உறுப்பினர் சக்கரவர்த்தி மட்டுமே!

அன்று மிதுனின் பிறந்தநாள். ராகாவை தவிர மற்ற மூவரும் ஒரு வித இறுக்கத்தில் இருந்தனர். எப்பொதும் போல் தாய் தந்தை இருவரும் அவனுடன் பேசி கூடுதலாக அழுகையுடன் கூடிய வாழ்த்துடன் வெளிவர உள்ளே நுழைந்தான் தீபன் சக்ரவர்த்தி.
சிறுவயதில் இருந்து கொண்டாடும் பிறந்தநாள்கள் கண்முன் வலம்வர எந்த புள்ளியில் மிதுனை தவறவிட்டேன் என்ற வலியோடு அவனின் கையை இத்தனை நாள்களில் முதன்முதலாகப் பற்றினான்.


“இத்தனை பொறந்தநாள்லயும் எதாச்சும் வேணுமாடான்னு கேட்ப, அதெல்லாம் வேணாம்ன்னு போயிருவேன். இப்போ கேட்குறேன் எந்திச்சி வந்துடேன்” குரல் அடைத்ததோ செருமிக்கொண்டு, “ஹாப்பி பர்த்டேடா மிதுன்” என்றுவிட்டு வெளியேறினான்.

அவன் போனதும் அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த பாரமெல்லாம் வெளியேற்ற வேக வேக மூச்சுகளுடன் கண்ணீரோடு எழுந்து தலையைப் பற்றினான். அவனுக்கு நினைவு வந்து நான்கு நாள்கள் மேல் ஆகிருக்க அவனைப் பார்த்து கொண்ட நர்ஸைக் கைக்குள் போட சொல்லியாத் தரவேண்டும்? மெளனமாக அனைத்தையும் சுயநினைவோடு உள்வாங்கினான்.

தவறைச் செய்கையில் அது தவறென்று யாருக்கும் தெரிவதில்லை தானே? வாழ்க்கை இவ்வளவுதான் என்று மண்டையில் உரைப்பது போல் தலையில் அடித்தே புரியவைக்க அடுத்தநாள் மாயமாய் மறைந்தான் தன் உடமைகளுடன் உடன் பிறந்தவனை பார்க்க பிடிக்கவில்லை என்பது போய் முடியவில்லை என்று.

இரு வருடங்கள் கழித்து...

மும்பை

“ரியா...” மிதுன் ஆத்திரம் தாளாமல் கர்ஜிக்க

“எஸ் யா” என்றாள் ரியா அவனிற்கு எதிர்பதமாய் கூலாய்.

“டோன்ட் கிராஸ் யுவர் லிமிட்... உன் கிட்ட வேலை பார்த்தா என்ன வேணா சொல்லலாம்ன்னு அர்த்தம் இல்லை. மைன்ட் இட். வேற வேலை தேட வச்சிராத” அழுத்தமாய் ஆனால் அமைதியாய் எச்சரித்தான்.

வேறு ஒன்னும் இல்லைங்க நம்ம ரியா பொண்ணு ப்ரொபோஸ் பண்ணிட்டாங்ளாம் அதான் மிதுன் மிதக்காம குதிக்குறான்.

“ஹேய் மிது. ஒரு எம்டி கிட்ட பேசுற மாதிரியா பேசுற? என்னமோ நீதான் பேர் வச்ச மாதிரி ரியா ரியான்னு கத்திட்டு வைப் கிட்ட சண்ட போடுற மாதிரிதானே பண்ற? போயேன் யாரு வேண்டாம்ன்னு சொன்னா” கிண்டல் அடித்தாள்.

மிதுன் பதிலின்றி நின்றான். எங்கு செல்வதென்று அறியாமல் கொல்கத்தா ரயில் ஏறி அங்கு சென்றவன் வழியில் கண்ணில் பட்ட மேனேஜர் தேவை கம்பெனிக்குள் சென்று கலந்துக்கொள்ள வேலை கிடைத்து இந்த இரு வருடங்களில் மும்பை மாற்றல் ஆகிருந்தான். வெளியே செல்லலாம்தான் ஆனால் ஏனோ தன்னை தனி மனிதனாய் ஏற்றுக்கொண்ட கம்பெனியை விட்டுச் செல்ல மனமில்லை. அதைத் தெரிந்து தான் ரியா சீண்டியது.

மிதுனைப் பற்றி அனைத்தும் அனைத்துமே ரியாவிற்குத் தெரியும். உபயம் தீபன். மூத்தது மோழை இளையது காளைன்னு சும்மா சொல்லவில்லையே! மிதுன் வெளியேறிய அடுத்த நொடி தீபனுக்கு தெரிந்திருந்தது.
எப்போதும் செய்யும் வேலையை அதான் பின்னால் நிற்கும் வேலையை எடுத்துக்கொண்டான். மற்றபடி வேலைவாய்ப்பு என்ன கொட்டியா கிடக்கிறது நம் இந்தியநாட்டில்?


மிதுன் ஏதோ சொல்ல வர, அப்போது கதவைத் திறந்துக்கொண்டே “டேய் போதும்டா... காலாகாலத்துல கல்யாணம் பண்ணி வந்து சேருற வழியைப்பாரு. அப்பாவால தனியா எல்லாத்தையும் சமாளிக்க முடியல. என்னாலையும் பெரிய ராகா, குட்டி ராகாவ விட்டு நகர முடியல” என்று வந்து நின்றது சாட்சாத் தீபனேதான்.

திடுக்கிட்டு மிதுன் தம்பியை வெறித்திருக்க, “இவ்ளோ நாள் உனக்கு போதும்ன்னு நினைக்குறேன். அப்போவும் சரி இப்போவும் சரி உங்களுக்கு பின்னாடி நீங்களே விரும்பாட்டாலும் நான் நிற்பேன்” என்ற தம்பியை கண்கலங்க இழுத்து அணைத்துக்கொண்டான் மிதுன் “சாரிடா... சோ சாரிடா” என்ற முனகலுடன்.

“கெட்டிமேளம் கெட்டிமேளம்” ஐயர் குரல் கொடுக்க, தீபனின் குட்டி ராகா தீபராகினி நடுவில் அமர்ந்திருக்க ரியாவின் கழுத்தில் தாலிகட்டி தன் சரிபாதி ஆக்கிக்கொண்டான் மிதுன் சக்ரவர்த்தி.

“ராகினி கெட்அப்” என்ற தாயின் வார்த்தைகளை அவள் சட்டை செய்யவே இல்லை. புதிதாக கிடைத்த பெரியப்பாவிடம் ஒட்டிகொண்டாள்.

“விடு ராகா அவ இருக்கட்டும்” என்ற தீபன் அவளின் காதருகே குனிந்து, “டைட்டன் நாமளும் ஒன்ஸ் அகைன் ஹனிமூன் போலாமா, இந்த புடவைல அப்படியே நம்ம கல்யாணத்துல இருந்த மாதிரியே இருக்க” என

அவளோ முறைக்க முயன்று பளீர் சிரிப்புடன் நகர்ந்துவிட சக்ரவர்த்தி உஷா தம்பதி மனதில் எழுந்த நிறைவுடன் தன் இரு புதல்வர்களையும் பார்த்திருந்தனர்.

அவன் – நீதான் நீதான் நீதாண்டி எனக்குள்ள...

அவள் – நான்தான் நான்தான் தான்தானே உனக்குள்ள...

காதல் – ஷப்பா... நம்மள வச்சி செய்யாத அடுத்த ஜோடிய தேடிப்போவோம் ஊப்ப்ப்ஸ்
super
 

naveensri

Well-Known Member
Hai kavya... How are you? Pakka mudiyale unna... Semma epilogue super.. naan பாதியில் vitrukken. இனி சீக்கிரம் finish panniduven..
 

Kavyajaya

Well-Known Member
Hai kavya... How are you? Pakka mudiyale unna... Semma epilogue super.. naan பாதியில் vitrukken. இனி சீக்கிரம் finish panniduven..
Nallaruken kaa.. valakam pol exam busy la maattikiten :cry:

Thank you sri kaa.. :love::love: miss you all soo much seekiram job kidaichi varen kaa
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top