Kaathalum Katru Mara 26

Advertisement

Jeevapramee

Well-Known Member
மல்லியின் காதலும் கற்று மற..........
19வது நாவல் 19வது புத்தகமாக......... (coincidence)​

அக்க்ஷயா special நாவல் series-ல் 2-வதாக வந்து rerun போட்டு நிறைய முறை revision-ம் பண்ணிய நாவல்........
என்ன கருத்து இதில்? ஒரு மனதுக்கு இனிய நாவல் (மல்லி in நாவல் முன்னுரை........)

என் பார்வையில் KKM.......
கல்யாணம் ஆகாத காதலும் இங்கு உண்டு
காதலே இல்லாத கல்யாணமும் இங்கும் உண்டு
இது போல நேர்ந்தாலும் நேராமல் இருந்தாலும்
காதல் தொடர்கதையே இது விந்தையிலும் விந்தையடி........ (படம்: பாட்டுப் பாடவா)


ஏற்கெனவே ஒரு காதலில் விழுந்த ஆணுக்கும் அது தெரிந்தும் திருமணத்தை தடுக்கமுடியாமல் தவிக்கும் பெண்ணுக்கும் நடந்த திருமணம் தொடர்ந்து சேர்ந்த இருமனத்தின் கதை..........

பொன்னேரி நகராட்சியில் ஒரு அழகன் குரு பிரசாத்...... IT-யில் வேலை பார்க்கும் நல்லவன்........ ஆனால் இன்னொரு பெண்ணை காதலிப்பவன்......... வெளிநாட்டிற்கு அடிக்கடி சென்று வருபவன்....... பக்கத்துக்கு வீட்டு ராஜசேகரனை ஈர்த்தவன்......

அர்த்தநாரி ஊரில் பணக்காரர்........ பெரியமனிதர்........ மூத்த மருமகன் கொடுக்கும் certificate-ல் மாப்பிள்ளையின் முகம் பார்க்காமல் பேசாமல் சின்ன மகள் அரசிக்கு திருமணம் பேசுகிறார்........ பையன் பொண்ணு இருவரின் சம்மதம் இல்லாமல் அப்பாக்கள் மட்டுமே தீர்மானிக்கும் திருமணம்........

மாப்பிள்ளை குரு இன்னொரு பெண்ணை காதலிக்கும் & கல்யாணத்துக்கு மறுக்கும் செய்தி தோழியின் மூலமாக அரசிக்கு தெரிய வர வீட்டில் தன்னோட எதிர்ப்பை தெரிவிக்கிறாள்...... அடி தான் விழுந்ததே தவிர கல்யாணம் நிற்கவில்லை......... இன்னொரு பக்கம் குருவின் மறுப்பால் அப்பா நெஞ்சு வழியில் hospital-ல் அனுமதி........

மணமக்கள் எதிர்ப்பையும் மீறி திருமணம் நடக்கிறது........ எலியும் பூனையுமாய் மணமக்கள்..... பேசிக்கொள்வதில்லை........ மனைவியிடம் சொல்லாமல் கொள்ளாமல் US கூட சென்று வருகிறான்....... திரும்பி வந்ததும் அவனுக்கு தெரியாமல் அரசியை அவன் வீட்டில் கொண்டு சேர்க்கும் பெற்றோர்......

என்னடா கல்யாணம்......... எல்லா கொடுமையும் செய்கிறான் இந்த புது மாப்பிள்ளை........ தன்னோட ரூம்ல இடம் கிடையாது........ கிட்சனுக்குள் அனுமதி இல்லை....... பாத்ரூம்க்கு கூட அவனிடம் அனுமதி கேட்கும் நிலை..... இரவில் கூட தனியாக அறையை பூட்டி தூங்கும் அதிசய கணவன்..... தூங்காமல் நடு இரவில் கத்தி அவனை தூங்கவிடாமல் hall-லேயே தூங்கும் அரசி.......

பிரிஞ்சுடுவோம்........ சொல்லிட்டு பிரியனும்........ உங்க அப்பா வீட்டுக்கு தான் போகணும்...... இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும் என்றெல்லாம் கட்டளையிடும் குரு....... அடங்குவாளா குருவின் நாயகி........

இத்தனை கொடுமை செய்தாலும் காதலுக்கும் கல்யாணத்துக்கும் இடையில் சிக்கி சின்னாபின்னமாகி இருக்கும் அந்த நல்லவனின் முகம் பார்த்து அவனுக்கு பணிவிடை செய்யும் அரசி........ சமையல் மூலம் சண்டி குதிரை குருவை நொண்டி குதிரையாக்குகிறாள் அரசி......

இடையில் முன்னாள் காதலியோடு.......... டாலி I miss you so much (மூஞ்சில குத்தணும் இவனை)......... டின்னர்......... கடைசியில் திருமணமானதை சொன்னதும் விலகி போகும் காதலி.......

மனைவியின் சமையலிலும் கவனிப்பிலும் அடங்கிய குரு இப்போது இன்னொரு பொண்ணை காதலித்த நான் என்னோட மனைவிக்கு ஏற்றவனில்லைனு தனக்கு தானே சொல்லிக்கொண்டு கழிவிரக்கம் கொள்கிறான்........

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்........ அதனால் தான் மெழுகு பொம்மை..... மைதா மாவு மேக்னாவிடம் இருந்து தப்புவித்து.......
வாழ்க்கையை அதிகாரத்தினால் தக்க வைக்க முயல்வது சரியல்ல....... யாசகமாய் கேட்பதும் சரியல்ல.......வரப்போகும் பிரச்சனைகளுக்கு இப்போதிருந்தே மனதை குழப்பாதே........ வரும் போது பார்த்துக்கொள்ளலாம்..... என்று தனக்கு தானே சொல்லிக்கொள்ளும் அரசியிடம் சேர்ப்பித்தார் போல........

கொஞ்சம் கொஞ்சமாக அரசியின் பக்கம் வரும் குரு........ என்ன குரு கொஞ்ச நாளாவே டல்லா இருந்தீங்க இப்போ பிரைட்டா இருக்கீங்க என்று ஆபீஸ் நண்பர்களே கேட்குமளவுக்கு பார்த்து பார்த்து கவனிக்கும் அரசி....... அப்பப்போ வேறு உலகத்தில் சஞ்சரிக்கும் அவனைக் கட்டி இழுத்து நனவுலகத்திற்கு கொண்டு வந்து அவன் வாயாலேயே நாம சேர்ந்து இருக்கலாமானு கேட்க வைக்கிறாள்..........

இடையில் குருவின் தங்கைக்கு வரன் பார்த்து முடிக்கும் மாமனார்........ தூங்காமல் எப்போதும் டென்ஷன்-ல் சுற்றி BP இழுத்து அதற்கொரு வைத்தியம் பார்த்து அதிலேயே அரசி பைத்தியமானான் குரு...... குருவின் mouthpiece ஆகும் அரசி.......

மனைவியின் மனதை குரு அறியும் போது என்ன நினைப்பானோ என்று விலகி போகும் அரசி......... துரத்தி போகும் குரு....... மனைவியோடு சேர்ந்தாலும் அவனின் ஆழ்ந்த மௌனத்திற்கு காரணம் கேட்டு அவனை பாடாய் படுத்தி கடைசியில் அரசியிடம் காதலை கற்று தன் முதல் காதலையே மறந்தான் குரு.........

மா நிஜமாத்தான் சொல்றேன்.......... அந்த பையனுக்கு என்னை பிடிக்கலையாம்.....
கல்யாணத்தை நிறுத்திடுங்க......... நானும் மாப்பிள்ளைக்கு இணையாக படித்திருக்கிறேன்........
. என்னோட வார்த்தைக்கு மதிப்பில்லையா என்று புலம்பு அரசி......
என்னைக்குமா கல்யாண விஷயத்தில் பொண்ணுங்க வார்த்தைக்கு மதிப்பிருக்கு????? அப்பா அம்மா உனக்கு மோசமானதா செய்வோம் என்று கேட்டு லாக் பண்ணிடுவாங்க......

குரு........ பிடிக்கவில்லை என்று சொல்லும் போதே இவ்வளவு அதிகாரமாக பேசுகின்றாள்........ பிடித்திருக்கிறது என்று சொன்னால் என்ன கூஜா தூக்க சொல்வாளோ????? கடைசியில் தூக்க வச்சுட்டாளே..........:p:p:p

இந்த பெண் அதிகம் பேசுகிறாள்..........:eek::eek::eek: இதையெல்லாம் பொறுத்துக்கொள்ளமுடியாது....... எனக்கு ஒரு அமைதியான வாழ்க்கை வேண்டும்............ இப்படி காலம் முழுவதும் சண்டையிடுவார்களா என்ன........
பேசுறது அரசி என்றாலும் கருத்து அவனோடதாம்....... கடைசியில் உன்னோட mouthpiece அவள் தான்......:D:D:D

எங்கப்பா கண்ணுக்கு தான் நீ handsome எனக்கு நீ பூச்சாண்டி தான்........:p:p:p
கடைசி வரை அப்படிதான்..........

இப்படி உன்னை பிடிக்கலைனு சொல்ற என்கிட்ட நீ வரவேண்டிய அவசியம் என்ன......
விதி தாண்டா வேறென்ன??????:mad::mad::mad:

எனக்கு hot water தான் boil பண்ண தெரியும்னு சொல்வாள்....... இவனே சமைச்சும் போடுவான்........ காலை அமுக்கியும் விடுவான்........:D:D:Dமேக்னா பற்றி அவளோட friend பவித்ராவின் கமெண்ட்ஸ்.......
அவள் நினைத்தை செய்தான்........ ஆனால் அரசிக்கு தான்......... எப்படித்தான் கண்டுபிடித்தாளோ பவித்ரா????

ஜக்கம்மாஉன்னை யாராவது மிஸ் பண்ணுவாங்களா?????:cool::cool::cool:
அம்மா முதலில்.......
குரு கடைசியில்........
ஹே ஜக்கம்மா ஜக்கு ஜக்கு ஜக்கு ஜக்கம்மா
வா பக்கமா பக்கு பக்கு பக்கு பக்கமா
வாடியம்மா ஜக்கம்மா.......


சோப்பு புதுசு இல்லையா?
நேத்து தான் இதை எடுத்தேன்.... புதுசு தான்.......
அது நீங்க யூஸ் பண்ணீட்டிங்க.... வேற ஆள் யூஸ் பண்ணினதை நான் எப்படி யூஸ் பண்ணுவேன் ......
அப்புறம் எப்படி என்னோட வீட்டுல மட்டும் தங்குற?????
தங்கினா மேல தேய்ச்சுகிட்டா இருக்கேன் சோப்பு மாதிரி.........
இவ எந்த பால் போட்டாலும் சிக்ஸர் அடிப்பாள் போல........ குரு தள்ளியே நில்லு........:p:p:p:D:D:D:D:D:D:D

இல்லைனா உன்னை சமாளிக்க முடியுமா???????

அம்மா கிட்ட........ இங்க இருக்கிறவர் பால் கொடுத்தார்.......:D:D:D

நம்ம ஊர்ல இருந்து எங்க இருந்துடா இவ்வளவு ஸ்டைல் காத்துக்கிட்டா...... நான் இருந்தவரை எல்லாம் இந்த பொண்ணு பட்டதே இல்லையே........o_Oo_Oo_O
oh பட்டிருந்தால் அவளையே லவ் பண்ணியிருப்பியோ?????

என்னால பேசாம இருக்க முடியாதுன்னு சொன்னேன்.......... நீங்க பேசணும்னு சொல்லல....... இது manufacturing defect.......:cool::cool::cool:
அது ஒன்னு தான் குருவை அரசியிடம் கொண்டு வந்து சேர்த்து........ துளசி மாதிரி இருந்திருந்தால் குரு????????

நம்ம தான் லவ் பண்ணல........லவ் பண்ணுறவங்களை பார்த்தாலும் அரை கிலோமீட்டர் தள்ளி நின்னுப்போம்....... அப்படி என்ன பேசுவாங்க....... இவன் போய் அரை மணி நேரமாச்சு.......:oops::oops::oops:
எல்லோருடைய கேள்வியும் அது தான்.......... sweet nothings........ அப்படினா????

அப்பப்பா பொண்ணுங்களே வேண்டாம் சந்நியாசம் வாங்குவோமா.......:p:p:p
என் தங்கைகளோட வந்திருக்கேன்....... இப்படி உன் உதடு என் காதுல படர மாதிரி ரகசியம் பேசக்கூடாது......... என்னை ஒட்டி நடக்கக்கூடாது.......... என்னையே விடாம பார்க்க கூடாது......... :eek::eek::eek:

போடா.......... இவன் எப்படி மைதா மாவை லவ் பண்ணினான்?????

ரெண்டாம் திருமணம் செய்வது எளிது........ ஆனால் முதல் திருமணத்தின் வடுக்கள் இல்லாமல் வாழ்வது எளிதல்ல........
விடாது கறுப்பு..........

நீங்க எப்போ பெத்துக்க போறீங்க????? அரசி காமெடி சூப்பர்.........:D:D:D குருவின் வெட்கம்.........:p:p:p

கடைசி epis எல்லாம் ஜக்கம்மா குருவை ரொம்ப டேமேஜ் பண்ணிட்டா.........

கால் புடிச்சு விடுறது ரெகுலர் duty போல........
அவ நினைக்கலைனா கூட இவன் சொல்லிக்கொடுக்கிறான் காலில் விழ வை-னு.......


இந்த மாதிரி பெற்றோர் பார்க்கும், ஆணோ பெண்ணோ தன்னோட காதலை விட்டு கொடுக்க முடியாமல் நடக்கும் திருமணத்தில் திருமணத்திற்கு பின் பழைய காதலை ஒதுக்கிவிட்டு இது மீள முடியாத ஒரு வழி பயணம் என்று உணர்ந்தால் மட்டுமே வாழ்க்கை.......... இல்லை என்றால் நரகம் தான்........

அரசி வந்ததை ஏற்றுக்கொண்டு அவனையும் ஏற்கவைத்தாள் தன் காதலால்..........
ஆனால் கடைசி வரை அவன் ஏற்கெனவே காதல் சொன்னான்னு நீ சொல்லாமல் இருந்திட்டியே அரசி........ very bad......

கலகலக்குது கலகலக்குது கொலுசு சத்தம் கலகலக்குது
எங்கள் வீட்டுக்குள் தேவதை வந்துவிட்டா பாத்துக்கோ
என் அண்ணன் தோள் மேலே பூமாலையாக ஆனாளே
அன்பாலே நம் வீட்டை ஆளும் ராணி ஆனாளே
அதிகாலையில் சுப்பிரபாதம் கேட்கும் இனிமேல் நம் வீட்டில் எப்போதும்...........:D:D:D:D:D

Thanks மல்லி..........

Ok No problem......... நீங்க வந்தாலே போதும்.........
இதனை epi எழுதுன மல்லி mam கூட இப்பிடி oru commendஎதிர்பாத்து இருக்க மாட்டாங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top