Kaathal Sinthum Thooral - Precap 5

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
ஹாய் பிரண்ட்ஸ்..

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்..:):)

‘கடவுளே, இவன்களுக்காகவாது எனக்கு சீக்கிரம் அமையணுமே...’ என்று வேண்டிக்கொள்வாள் கண்மணி.

ஒருபக்கம் அண்ணனை எண்ணி அவளுக்கு பெருமையாய் இருந்தாலும், இன்னொரு புறம், ஒரு பெண்ணாய் அவளுக்கு தீபாவின் உணர்வுகள் நன்கு புரியவும், அண்ணனின் மீது கோபமும் வந்தது. அரிதில் கோபமே வராத கண்மணிக்கு கூட கோபம் வருகிறது என்றால், அது இந்த விசயத்தில் தான்.

அவளுக்குமே கண்ணன் இப்படி அமைதியாய் இருப்பதில் அர்த்தமில்லை என்பதாகத் தான் பட்டது. அவ்வப்போது கண்ணனோடு தனியே பேசும் வாய்ப்புகள் கிடைத்தாள் கண்டிப்பாய் கேட்கவும் செய்வாள்.

அப்போதெல்லாம் அவனும், “ப்ளீஸ் கண்ஸ்... என் நிலை எனக்குதான் புரியும்.. வீட்ல சொல்ல ஒரு நிமிஷம் ஆகாது.. ஆனா அடுத்து தேவையில்லாத பேச்சு எல்லாம் வரும்.. ஒருத்தரை ஒருத்தர் வார்த்தையால காயப்டுத்துற நிலை வரும்.. அது வேண்டாம்னு நினைக்கிறேன்..” என்பான்..
-------------------------------------------------------------------

கண்ணாடி கதவுகளை தள்ளும்போதே அதிரூபன் கண்மணியைப் பார்த்துவிட, அடுத்தநொடி ஏனென்று தெரியாது அவனின் இதயம் கொஞ்சம் சப்தமாய் வேகமாய் துடித்தது நிஜம். உள்ளே வருவாளோ என்று அதிரூபன் பார்க்க,

அவளோ தீபா இல்லை என்றதுமே, நொடிப்பொழுது தயங்கியவள், இவனையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, திருப்பிப் போகப் பார்க்க, ‘போகிறாளோ...’ என்று தொன்றவுமே அதிரூபன் “உள்ள வாங்க...” என்று அழைத்துவிட்டான்..

அழைக்கவேண்டும் என்று அவன் அந்த நொடிக்கு முதல் வரைக்கும் கூட நினைக்கவில்லை. ஆனால் அழைத்திருந்தான். தீபா வந்தது அவனுக்கும் தெரியும். கண்மணி வர நேரமாகும் என்பதால், கீழ் தளத்தில் இருப்பதாக கூறிவிட்டு சென்றிருந்தாள். அது தெரியாது கண்மணி நேராய் மேலே வந்திட, அவள் வந்து திரும்புகிறாளே என்றுதான் ஆனது அவனுக்கு..
----------------------------------------------------

‘என்னடி....’ என்று தீபா பார்க்க, கண்மணியோ “அதெல்லாம் நல்லா பண்ணிருப்பாங்க..” என்றாள் முணுமுணுப்பாய்.

அவள் என்ன நினைத்து அப்படி சொன்னாளோ, ஆனால் கண்மணி அப்படிச் சொன்னது அதிரூபனுக்கு அப்படியொரு மகிழ்வை கொடுத்தது என்பது அவன் மட்டுமே உணர முடிந்த ஒன்று.. ஒருசில விஷயங்கள் காரணமே இல்லாது நமக்குள் தாக்கம் ஏற்படுத்தும்..

அப்படித்தான் கண்மணி ஆனாளோ அதிரூபனுக்கு?? அவனுக்கே இது தெரியுமோ என்னவோ..

ஆனாலும் சொன்னது அவள்தான் இதன் சாயலில் வேண்டும் என்று.. இப்போது அவளே அதனை பார்க்காது நன்றாய் தான் இருக்கும் என்று சொல்கையில் என்னவோ அது அவனின் உழைப்பின் மீது அவள் காட்டும் நம்பிக்கை தெரிய அதைவிட பெரும் சந்தோசம் அவனுக்கு என்ன இருக்கப் போகிறது..
-------------------------------------------------------------------------------

அவளும் “யா பண்ணிடுங்க...” என்றுவிட்டு திரும்ப கண்மணியோடு பேச்சினை தொடங்க, அடுத்து அதிரூபன் கண்மணி பக்கம் திரும்பவே இல்லை..

ஆனால் கண்மணியோ நொடிக்கு ஒருமுறை அவனின் முகத்தினை தான் பார்த்துகொண்டு இருந்தாள்.. இத்தனை நேரமும் தீபாவோடு தான் பேசினாள், இல்லை தீபா பேசுவதை கேட்டுக்கொண்டு ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்லிக்கொண்டு இருக்க, இப்போது என்னவோ அதிரூபன் அவளைப் பார்க்காது வேலை செய்தது அவளுக்கு ஒரு புது உணர்வை கொடுத்தது..

என்னவோ பல நாட்களாய் இருவரும் பேசி பழகியது போலவும், இப்போது அவன் பாராமுகம் காட்டுவது போலவும் இருக்க ‘என்னாச்சு இவருக்கு...’ என்றுதான் அவனைப் பார்த்தாள்.

ஆனால் அவனோ எனக்கு என் வேலைதான் முக்கியம் என்பதுபோல் இருக்க, அவளையும் அறியாது கண்மணிக்கு முகம் கூம்பிப் போனது.
 
fathima.ar

Well-Known Member

Ahaan
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top