Kaathal Sindhum Thooral - Precap 6

Advertisement


Sarayu

Super Moderator
Tamil Novel Writer
hii frnds...

“ம்மா...” என்று சலுகையாய் அதிரூபன் மஞ்சுளாவின் தோளில் சாய்ந்துகொள்ள,
“என்னடா என்னாச்சு?? கடைல எதுவும் பிரச்சனையா ?? எப்பவும் நீ இருக்க மாட்டியே??” என்றார் அவரும் கரிசனையாய்.


“அதெல்லாம் இல்லம்மா...” என்று அதிரூபன் சொல்லும்போதே, “ண்ணா... கண்ஸ் அண்ணனுக்கு வாட்ச் டிசைன் பண்ணியாச்சா??” என்று அப்போது தான் நினைவு வந்தவனாய் நிவின் கேட்க,

அதிரூபனுள் ‘கண்ஸ்..’ என்ற பெயரை கேட்டதும் ஒரு அதிர்வு ஓடியது மஞ்சுளாவிற்கே உணர முடிந்தது.. ஆனால் அவனோ முகத்தினில் ஒன்றும் காட்டாது “ஹ்ம்ம் கொடுத்தாச்சு...” என்றுமட்டும் சொல்ல,

“ஓ... டிசைன் பாக்கலாம் நினைச்சேன்...” என்று நிவினும் சொல்ல,
-------------------------------------------------------------------


அதிரூபனுக்குமே அது தான்.. ‘என்னாச்சு எனக்கு??’ என்ற கேள்விதான்.. இயல்பாய் அவனின் இயல்பில் இருக்க முடியவில்லை.. என்னவோ ஒன்று வந்து தாக்குவது போலொரு இம்சை உணர்வு..

ஒருவேளை காதலோ???!!!

அப்படி நாம் சொன்னால் தான் உண்டு.. இன்னும் அவன் உணரவில்லை.. காதல் வந்ததுமே உணர்ந்துகொண்டால் அதில் என்ன சுவாரஸ்யம் இருக்கப் போகிறது?? அது போட்டு ஒரு யுத்தம் செய்து, இதயக் கதவுகளை தாக்கி நான் இங்கே இருக்கிறேன் என்று சொல்லும் தருணம் வரவேண்டும் தானே..

அப்படியான தருணம் எப்போ வருமோ??
------------------------------------------------------------------------------
“ஷ்...!!!! ப்ளீஸ் கண்மணி.. நீயும் ஏதாவது சொல்லாத...” என்றவன் “நாளைக்கு இந்த அலயன்ஸ் உனக்கு ஓகே ஆகிட்டா அடுத்து நான் வீட்ல சொல்லிடுறேன் போதுமா??” என்றான் ஒரு முடிவோடு..


“ஓ..!! செட் ஆகலைன்னா??” என்றாள் கொஞ்சம் சீற்றலாய்.

“கண்ஸ்....”

“என்னவோ பண்ணு..” என்பதுபோல் பார்த்தவள், முகத்தினை திருப்பிக்கொள்ள

“கண்டிப்பா நல்லதே கண்ஸ்....” என்றுவிட்டு போனான் கண்ணன்..
‘நல்லது நடக்கவேண்டுமே...’ என்ற எண்ணம் அவனுள்ளும்..
-------------------------------------------
அந்த பக்கம் அதிரூபனுக்கு அருகே இருந்த நிவினோ, “ண்ணா பொண்ண பார்த்துக்கோ...” என்று சொல்ல அவனுக்கு அது மனதில் கூட பதியவில்லை..


“ண்ணா...” என்று நிவின் லேசாய் அவனின் தோளை இடிக்க, “என்னடா...” என்றான் சலிப்பாய்..

“பொண்ணு பிடிச்சிருக்கான்னு அம்மா கேட்குது...”

“ம்ம்ச்...” என்றவன் அப்போது தான் நிமிர்ந்து பார்க்க, சரியாய் அவன் நிமிர்ந்து பார்த்த நேரம் கண்மணியும் வருணும் இந்த பக்கம் வர, அதிரூபனின் பார்வை அப்படியே அவர்களிலேயே நிலைத்துவிட்டது.
 

Joher

Well-Known Member
TY சரயு........

பொண்ணு பார்த்தாச்சு இன்னொரு பையனோடு...........

tube light ஹீரோ கேள்விப்பட்டிருக்கிறேன்......... இவன் சோடியம் vapour lamp-ஆ இருப்பான் போல........ இன்னுமேவா spark வரல.........
அம்மா தோளில் சாய்ந்து jerk ஆகுறானே கண்ஸ் பேரை கேட்டு........

ஒரு வேளை காதலா????
அப்படியான தருணம் எப்போ வருமோ??????
வரும்பா வரும்........ வருண் கையில் தாலியோடு நிற்கும் போது.........
 

MythiliManivannan

Well-Known Member
ரூபனின் இதயக்கதவுகளைத் தாக்கி நானிருக்கிறேன்னு, காதல் சொல்லிருச்சு போல....;):cool:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top