Kaathal Sindhum Thooral - Precap 4

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
hii frnds..

“ஜூஸ் குடிச்சிட்டு போலாமா??!!” என்றவளை வித்தியாசமாய் பார்த்தான் கண்ணன்..
பொதுவாய் கண்மணி இப்படியெல்லாம் வாய் விட்டு கேட்கும் ரகமேயில்லை.


இவன்தான் அதுவேண்டுமா இது வேண்டுமா என்று கேட்டுக்கொண்டே இருப்பான். அதற்குமே கண்மணி வேண்டாம் என்றுதான் சொல்வாளே தவிர அவளாய் தனக்கு ஒன்று வேண்டும் என்று கேட்பது மிக மிக அரிது.

“அண்ணா...!!!!” என்று கொஞ்சமே கொஞ்சம் சத்தமாய் அவனை அழைக்க, “ஆ..!!! கண்ஸ்...” என்றான் தன்னையே உலுக்கி..

------------------------------------------------------

“மூர்த்தியோட சொந்த அண்ணன் பையன்.. டெல்லில சென்ட்ரல் கவர்ன்மென்ட் வேலை.. போட்டோ பார்த்தே எனக்கு ரொம்ப பிடிச்சது.. ஜாதகமும் நம்ம கண்மணிக்கு பொருத்தமா இருக்கு...” என்று சடகோபன் சொல்ல,

புகைப்படத்தை வாங்கிப் பார்த்த சியாமளாவின் முகத்தினிலும் ஒரு திருப்தி தெரிய, “பையன் தங்கமான பையன்ம்மா.. தாராளமா நம்பி பொண்ணு குடுக்கலாம்..” என்று மூர்த்தியும் சொல்ல, சியாமளா அந்த மாப்பிள்ளையின் புகைப்படத்தை கண்ணனிடம் காட்ட, அவனுக்கும் மாப்பிள்ளையின் தோற்றம் திருப்தியாகவே இருந்தது..

-----------------------------------------------------

“சரி சரி சிரிச்சது போதும்... போட்டோ பார்த்துட்டு ஓகேவான்னு சொல்லு..” என்றவனுக்கு ‘என்ன சொல்ல போகிறாளோ??’ என்று இருக்க,
அவளோ திரும்பவும் ஒருமுறை போட்டோ பார்த்துவிட்டு “ம்ம் ஓகே...” என்றுமட்டும் சொல்லி திரும்பிக் கொடுக்க,


“கண்ஸ்.. என்ன நக்கலா???!!” என்றான் கண்ணன்..

“நா...” என்று அவள் ஆரம்பிக்கும் போதே, சியாமளா அங்கே வந்தவர் “கண்மணி.. உனக்கு பிடிச்சிருக்காடா...” என்று சந்தோசமாகவே கேட்க, அவரை ஒரு பார்வை பார்த்தாள்.

அதன் பொருள் என்ன என்று இருவருக்குமே புரியவில்லை.. இத்தனை நேரம் கண்ணனிடம் வாயடியவள், அம்மாவை இப்படி பார்க்கவும்,

--------------------------------------------------

“சொல்லு ரூபன்...” என்று மஞ்சுளா சொல்ல, அவரின் மற்றொரு கரத்தினை பிடித்தவன் “உனக்கு அந்த ரெண்டு பொண்ணுல எந்த பொண்ணு பிடிச்சிருக்கோ அவங்க வீட்ல பேசு..” என,

நிவினிக்கு ‘என்னடா இது சண்டை சீன் வரும்னு பார்த்தா சென்டிமெண்ட் சீன் போகுது...’ என்றுதான் தோன்றியது..

“எனக்கு அந்த ரெண்டு பேருமே...” என்று மஞ்சுளா சொல்ல வரும் முன்னமே,

“ம்மா ப்ளீஸ்.. எனக்கு நிஜமா இதுல முடிவு பண்ண தெரியலை.. நீ எனக்கு நல்லது மட்டும் தான் செய்வ.. சோ இதுல உன்னோட முடிவுதான்.. நீ பார்த்து இந்த பொண்ணுதான்னு சொல்லு.. நான் சரின்னு சொல்றேன்.. அதைவிட்டு என்கிட்டே முடிவு கேட்டா சத்தியமா எனக்கு சொல்ல தெரியலை..” என்று அதிரூபன் உறுதியாய் சொல்லவும்,
 

Joher

Well-Known Member
TY Sarayu.........

அய்யோ......... என்னடா இது.........
பார்வையாலே பேசிக்கிட்டது சும்மாவா?????? இல்லை எங்களுக்கு தான் eye reading (like face reading) தப்பா புரிஞ்சுதா?????????

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இதுபோல இல்லையே
எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன் இரவும் பகலும் சிந்தித்தேன்....
இவளே, இவளே, என்று இதயம் தெளிந்தேன் இளமை இளமை பாதித்தேன்....
கொள்ளை கொண்ட அந்த நிலா என்னைக் கொன்று கொன்று தின்றதே
இன்பமான அந்த வலி இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே...........
இப்படி பாடுவானு பார்த்தால் அம்மா முடிவுக்கு விட்டுட்டியே.............

engagement ஆனபிறகு தான் பிச்சிக்குமோ?????

விதியினும் காதல் வலியது இதில் வேறு வாதம் ஒன்று உண்டோ
காதலின் திசை ஆயிரம் அது கண்டு சொன்னவர்கள் உண்டோ
கனவுக்கு வேலியுண்டோ
காலம் சொல்லுவதை காதல் கேட்பதுவும் இல்லை...........

ரெண்டு பெரும் ok சொன்னதை உடைப்பது தான் கதையோ????????
 
Last edited:

Pramo

Well-Known Member
Enna ivanga veetla panthavangaluku OK sollitanga...
Kanmani Ethukku Ava ammaavai apdi paatha...
Interesting precap... :) eppo ud poduveenga niteaa.. Waiting for the epi....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top