திரும்ப அவனின் அலைபேசி அலறியதில் தான் தன்னை மீட்டவன் யாரென்று பார்க்க, கண்மணி என்பது நன்கு தெரிந்தது. ஆனாலும் இப்போது இந்த நொடி எடுத்துப் பேச மனமில்லை..
அவளது அழைப்பு என்றதுமே அவனின் உள்ளம் எத்தனை ஆர்ப்பரித்ததுவோ, இப்போதும் அதே ஆர்ப்பரிப்பு தான். ஆனால் உணர்வு தான் வேறாய் போனது.. கண்மணியின் இரண்டாவது அழைப்பை ஏற்காமல் அப்படியே இருக்க, அதிரூபன் மனதிலோ என்னென்னவோ எண்ணங்கள்..
‘எடுத்து பேசினா தானே தெரியும்...’ என்றும் தோன்ற, அவன் எடுப்பதற்குள் அழைப்பு நின்றுவிட, சிறிதும் யோசிக்காது திரும்ப அழைத்தான். ஆனால் இம்முறை கண்மணி எடுத்தாள் இல்லை.
“ச்சே...” என்று எரிச்சலாய் வர, திரும்ப அழைத்தான்.. அப்போதும் அவள் எடுக்காமல் போக,
---------------------------------------
கண்ணனுக்கு பாதி கிணறு தாண்டிய நிலைதான் இன்னும்.. வீட்டில் சம்மதம் சொல்லிவிட்டனர் தான். அதுவும்கூட முழு மனதாய் இல்லை என்பது நன்கு புரிந்தது. புதன் கிழமைக்கு இன்னும் இரண்டு தினங்களே இருக்க, அவனுக்கு முழி பிதுங்கி தான் போனது. தீபா வீட்டில் அதற்குமேல்..
கண்ணனும், சடகோபனும் தான் சென்று முதலில் பேசினார். அப்போதெல்லாம் என்னவோ நல்லதாய் பேசியதுபோல தான் இருந்தது.
ஆனால் அதன் பின்னே தீபாவோடு பேசுகையில் “நீங்க போகவும் ஒரே திட்டு வீட்ல.. இத்தனை நாள் என்ன பண்ண?? அப்படின்னு..” என்று தீபா சொல்லவும்,
“ம்ம் நீ சொல்ற நான் சொல்லிக்கல.. அவ்வளோதான்..” என்றவனுக்கு மனதில் திடீரென்று ஒரு எண்ணம்,
சரியாய் அதே நேரம் சியாமளாவும் அங்கே வந்தமர, “ம்மா பேசு..” என்று அவனின் அலைபேசியை நீட்டிவிட்டான்.
----------------------------
“நான் உன்னை பார்க்கணும் கண்மணி....” என்ற அதிரூபன் குரலில், கொஞ்சம் ஆடித்தான் போனாள் கண்மணி..
“எ.. எதுக்கு??”
“ம்ம்ச் வர முடியுமா முடியாதா?? நான் வர ஒரு செக்கன்ட் ஆகாது.. ஆனா அது தேவையில்லாத பிரச்சனைகளை உண்டுபண்ணும்...”
“இல்ல.. அது...”
“முடியுமா?? முடியாதா??”
“ஆ....” என்றவளுக்கு சத்தமே வரவில்லை..
“கண்மணி.. சத்தமா பேசு.. நான் உன் முன்னாடி இல்ல.. நீ என்ன பேசினாலும் உன் லிப் மூவ்மென்ட் வச்சு கண்டுபிடிக்க...”
-------------------------------------------
“நிவின்... அவன் என்னதான் டா செய்யனும்னு இருக்கான்??” என்று மஞ்சுளா திரும்ப முருங்கை மரம் ஏறிவிட்டு இருந்தார்.
நிவின் பாவமாய் அண்ணனையும் அம்மாவையும் பார்க்க, அதிரூபனோ இருவரையும் விட பாவமாய் முகத்தை வைத்து இருந்தான். பின்னே வருணுக்கும், கண்மணிக்கும் நிச்சயத்திற்கு நாளே குறித்துவிட்டார்கள் என்றால் அவன் பாவமாய் தானே இருப்பான்..
“ம்மா கொஞ்சம் ப்ரீயா விடேன்...” என்று நிவின் சொல்ல,
“எது வரைக்கும்?? வீட்டுக்கு வந்தான்.. ரூமுக்குள்ள போய் ரெண்டு மணி நேரம் வெளியவே வரலை.. தூங்குறானோன்னு பார்த்தா கீழ அப்படியே படுத்து கிடக்கான்.. பாக்குறப்போ எனக்கு எப்படி இருக்கும்டா...” என்ற மஞ்சுளாவின் பேச்சிலும் நியாயம் இருக்கத்தான் செய்தது..
காதல் யாரையும் கிறுக்கு பிடிக்க வைத்துவிடும்.. செய்வோரையும் சரி.. உடன் இருப்போரையும் சரி.