Hi mam
காதல் என்பது கல்யாணம் வரை இருக்கக்கூடாது ,அது அதன்பின்னும் தொடரணும்,உங்களுடைய எல்லாநாவல்களுமே இதைதான் உணர்த்துகின்றது,காதலிக்கும்போது தெரியாத ஒருவருடைய மறுபக்கம் திருமணத்தின் பின் சேர்ந்திருக்கும்போது தெரியவரும்,அப்போது சிலது பிடிக்கலாம் பலது பிடிக்காமல் போகலாம்,இவற்றையெல்லாம் புறந்தள்ளுவதற்கு அத்தம்பதியருக்கு காதலோடு பொறுமை விட்டுக்கொடுத்தல் சிறுசிறுசண்டை மனம்விட்டுப்பேசல் அமைதி இவையெல்லாம் இருந்தால்தான் திருமணவாழ்க்கை வாழ்க்கை மாதிரி இருக்கும்,குடும்பம் என்று வந்துவிட்டால் காதலாக இருந்தாலும்சரி வேறு எதுவாக இருந்தாலும் துணையிடம் பகிர்வது நல்லது,மூடிமறைத்தால் என்னவாகும் என்பதற்கு பிரணவ் உதாரணம்,மனம் விட்டுப்பேசாமல் தானாகவே சிலதை கற்பனை பண்ணி சந்தேகப்பட்டால் குடும்பத்தில் என்ன நடக்கும் என்பதற்கு உதாரணம் ரதி,ஒருதலையாக ஒருபெண்ணின்மேல் ஆசைப்பட்டு வன்மம் கொண்டதால் தன்வாழ்க்கையையே அழித்த கணேஷ்,தான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தன்குழந்தை நன்றாக ஆபத்தில்லாமல் வாழவேண்டுமென நினைத்து பிரணவை ரதியை திருமணம்செய்யுமாறு கேட்கும் ரதியின் அப்பாவின் பாசம்,பிரணவுக்கு கிடைத்த அருமையான நண்பர்கள் என்று கதை வெகு சுவாரசியமாகவும் புதிர்முடிச்சுடனும் நன்றாக இருந்தது mam,எங்களுக்கு நல்லநவல் தந்தமைக்கு நன்றிகள் பல.
நன்றி
தட்சாயணி